நீயின்றி வாழ்வேது-34
விருஷாலியை கண்டால் அபர்ணாவுக்கு இளக்காரமாகத் தோன்றியது. அக்கா தங்கையாக இருந்தால் நடக்கும் அக்கப்போர்கள் அனைத்தும் விருஷாலிக்கும் அபர்ணாவுக்கும் நடந்தேறியது.
சுகன்யாவிற்கோ இந்த இடைப்பட்ட மாதங்களில் நிறையக் கவலைகள்.
கணவருக்கு இன்னொரு பெண் மீது மயக்கம் கொண்டு தனியாகக் குடும்பம் நடத்தினார் என்பது அதிர்ச்சி. அதில் சட்டென மகன் நிச்சயம் நடந்தது ஒரு ஆறுதலாக அமைந்தது. அந்த ஆறுதல் பொறுக்க மாட்டாமல் கணவர் சின்னவீடாக வைத்த பெண் இறந்ததும், கணவரின் மகள் என்று அபர்ணாவை விஷாகன் அழைத்து வந்ததும் அதை அவர் ஏற்றதும் இரண்டாம் அதிர்ச்சி. இந்த வயதில் பெண்ணா…? என்ற மலைப்பு இருக்காதா?
அதற்குப் பின் கூடச் சக்களத்தி உயிரோடு இல்லையென்று கல்யாணத்தைக் கலகலப்பாக நடத்தி முடித்தவருக்குப் பேரதிர்ச்சியாகக் கணவர் மரணம் நிகழ்ந்தது.
இதில் பெரிதும் உடைந்துவிட்டார் சுகன்யா. அதிலும் ஆளாளுக்கு இப்படிப் பண்ணிட்டாரே என்று சங்கடமாய்க் கேட்டு, சங்கடப்படுத்தி முதுகுக்குப் பின் நகைத்துப் பேசுவதில் கூனிகுறுகிவிட்டார்.
இதில் சின்னப் பெண் அபர்ணாவை இந்த வயதில் வளர்க்க முயல்வது சிரமமாக இருந்தாலும், மகனின் ஆதரவில் வளர்த்திடலாமென்ற தைரியம் வரும் நேரம், சின்ன மகன் சுகிர்தன் யாரும் எதிர்பாராத வகையில் கிறிஸ்டியன் பெண்ணைக் காதலிக்கின்றேன் என்றான். அடுத்து பேசி திருமணத்தை ஆரம்பிக்கப் பேச்சு எடுத்த அடுத்த நாளே திடீர் திருமணமாய்ப் பதிவு திருமணம் செய்து முன்னால் வந்தான்.
சரி இரு மகனுக்கும் திருமணம் முடிந்தது என்றால் சுகிர்தன் தனிக் குடுத்தனம் என்று விலகிவிட்டான்.
மூத்த மருமகளோ அபர்ணாவோடு வாய்சண்டை போட்டு நிம்மதியை குலைக்கின்றாள்.
பெரும்பாலும் அபர்ணா தான் வம்பிழைப்பது என்றாலும் உரிமையாய் அதட்டுவது விருஷாலியை தானே.
தனக்குப் பிறகு அபர்ணாவை யார் பார்த்துக் கொள்வார்களோ என்ற கவலை வாட்டியது. பெத்தவர்கள் நிம்மதியாய் சேர்ந்து விட்டார்கள். இங்கே தான் அல்லாட கடவுள் தன் தலையில் எழுதிவிட்டார். அதிலும் அபர்ணாவுக்குப் பரிந்து பேசி விருஷாலியின் முகதூக்கலுக்கு வேறு ஆளாகி அக்மார்க் மாமியாராகி விட்டார்.
அபர்ணா பள்ளி பாடம் சம்மந்தமாகப் பிரிண்ட் அவுட் எடுத்து வர போகலாமென்ற் அன்னையிடம் கேட்டாள். “விருஷாலியை அழைத்துச் செல்” என்று சுகன்யா கூறவும், “நான் யாரையும் அழைச்சிட்டுப் போகமாட்டேன்” என்று விருஷாலி தெளிவாய் கூறவும் அபர்ணாவோ “எங்கண்ணாவுக்குப் போன்லயே அனுப்பிப்பேன்” என்று வேகமாய்ச் சுகன்யா போனை எடுத்தாள்.
சுகன்யாவின் போனில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நாளை கடந்திருக்க, அனுப்ப இயலாமல் விருஷாலியை ஏறிட்டாள் அபர்ணா.
விருஷாலியோ “உங்கண்ணா மதிய சாப்பாட்டைக் காலையிலயே எடுத்துட்டு போயிட்டார். வர நைட்டாகும்.” என்று கைவிரலால் கன்னத்தில் தாளமிட்டபடி கடிகாரத்தை நோக்கினாள்.
இப்ப ஸ்கூல்ல அனுப்பிய பிரிண்அவுட் எடுத்தால் தான் மாலை அதிலேயே வீட்டுபாடம் செய்ய வேண்டும். அண்ணா வராது என்றால் அண்ணியைத் தான் ஐஸ் வைக்க வேண்டுமென்று குழந்தை மனம் முடிவெடுத்து “அண்ணி அண்ணி… சாரி.. எப்படியாவது எடுத்துட்டு வா. ப்ளிஸ்..” என்று கன்னம் பிடித்துக் கெஞ்சி இறைஞ்சினாள்.
சுகன்யா இவர்கள் பேச்சில் தடைவிதிக்கவில்லை.
விருஷாலியோ, அணிந்திருந்த நைட்டியை மாற்றிவிட்டு சுடிதாரணிந்து கொரியர் அலுவலகம் விரைந்திட செருப்பை மாற்றினாள்.
“நானும் கூட வர்றேன்” என்று அபர்ணா கூற, “வேண்டாம்… மத்த சப்ஜெக் படி. நான் போறது நீ கெஞ்சியதுக்கு இல்லை. படிப்பு விஷயத்துல என்னால யாரும் பாதிக்கக் கூடாதுனு” என்று அபர்ணாவிடம் ‘கெஞ்சினால் செல்வதாக அவள் எண்ணிவிடக் கூடாதென்று’ பதிலுரைத்து அபர்ணாவை தவிர்த்து சென்றாள் விருஷாலி.
விருஷாலி கடையை அடையும் முன், வழியில் ராஜன் ஒரு அட்டைப்பெட்டியை தலையில் சுமந்து சென்றான்.
“ராஜன்.” என்று கூப்பிட, ஒரமாய் நின்றவன் அட்டைப்பெட்டியை கீழே வைத்தான்.
“உங்கண்ணா எங்கயிருக்கார்.” என்று தண்ணிகேன் கடையா, கொரியர் கடையா இரண்டு கடையில் எங்கு இருக்கின்றார் என்ற அர்த்தத்தில் கேட்டாள்.
“எனக்கு என்ன தெரியும்? அவர் என்னை வேலை விட்டு எடுத்துட்டார்” என்றான் கோபமாக. வெயிலில் நெற்றியிலும் உடலிலும் வேர்வைத்துளிகள் அதிகமாய்ச் சுரந்திருந்தா? அல்லது பணியின் காரணமாக இப்படி உடையில் வேர்வை நீர் ஈரம் கசிய இருந்ததா என்று புரியாமல் அவன் பேச்சின் அர்த்தம் தெரியாது விழித்தாள்.
“என்னடா சொல்லற? வேலையை விட்டு எடுத்துட்டாரா? ஏன்?” என்று காரணம் கேட்டாள். கட்டிய மனைவியிடம் கூட ராஜனை வேலை விஷயத்திலில் தூக்கியதை பகிராதது விஷாகனுக்குப் பாதகமாக அமைந்தது.
ராஜனோ இந்தச் சூழ்நிலையை அவனுக்குச் சாதகமாக மாற்றி, “பின்ன என்ன அக்கா. நானும் அந்த வளவனும் கடை ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயிருந்து வேலை செய்யறோம். ஆனா நேத்து வந்த அந்தப் பொம்பளையைக் கல்லாப்பெட்டில உட்கார வச்சி, கூடுதல் சம்பளம் கொடுத்து அண்ணா அழகு பார்க்கறார். வயிறு எரியாதா? அதான் கேட்டேன். அண்ணா என்னடானா ‘அவயெல்லாம் ஒரு அட்ஜஸ்மெண்டுக்குடா’னு கண்ணடிக்கறார்.
நீயே சொல்லு… கோபம் வருமா வராதா. நான் அதை மீறிக் கேள்விக்கேட்டேன். அண்ணியிடம் சொல்வேன்னு சொல்லவும், நீ கடையில வேலை செய்ய வேண்டாம்னு அனுப்பிட்டார்.
அக்கா அந்தப் பொண்ணு சரியில்லைக்கா. முன்ன இங்க தான் மெஸ் கடை வச்சிருந்தது. அப்ப எவனிடமோ தொட்டுத் தடவி பேசவும் அவன் கத்தி சண்டைப் போட்டுட்டான்.
அதோட மெஸ் கடையை அடைச்சிடுச்சு. இப்ப நம்ம அண்ணாவோட அப்பா ஸ்டெப்னி வச்சியிருந்தது ஊர்ல தெரியவும் அண்ணாவோட இழைச்சிட்டு வந்துடுச்சு.
நீ ஜாக்கிரதையா இருக்கா. சுகன்யா அம்மா மாதிரி இருந்துடாதே.” என்று பெட்டியை மீண்டும் தலையில் வைத்து, டிபார்ட்மெண்ட கடையில் வேலைப்பார்ப்பதாகக் கூறி, “முதலாளி சீக்கிரம் வரலைனா திட்டுவான்.
டோர்டெலிவெரி பண்ணிட்டு கிளம்பணும்” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தான். ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாக பேசுவதைக் கண்டு கொஞ்சமும் நாக்குக் கூசாமல் பேசி நகர்ந்தான்.
தன் தாயின் ‘புது வெர்ஷன்’ போலப் பேசிவிட்டு சென்றவனைக் கண்டு நகைப்பு தோன்றினாலும், கொஞ்ச காலமாக, அவளை அறியாது உள்ளே சென்ற சாத்தான் குணங்கள் விழிப்படைந்தது.
விஷத்தை கக்க மற்றொரு காட்சிக்குக் காத்திருந்தது விதி.
விருஷாலி ராஜன் பேசியதை உருப்போட்டு வந்தவள் கொரியர் கடை முன் கணவனின் இருசக்கர வாகனம் இருக்கவும், எதிர்புறமிருந்த சாலையைக் கடந்து வந்தாள்.
வெளியே இருந்து பார்த்தாலே கண்ணாடி கதவு இருக்கும்.
அங்கே ஒரே ஒரு கணினியும், ஒரு கேபின் போல இருக்கும். அதற்குத் தடுப்பு போட்டு வருவோர் நிற்கவும், கொரியரின் மேற்கவரில் முகவரி எழுத தோதாக இருபக்கமும் டேபிள் போல இருக்கும்.
கணினி இருக்கும் கேபின் அருகே சிறு தடுப்பு போன்றதொரு கதவு இருக்கும். அதன் வழியாக உள்ளே வந்தால் எடைமிஷினும், பிரிண்டரும் உள்ளே வைத்திருப்பார்கள்.
அனுப்பப்படும் பொருட்கள் பேக்கேஜ் மறுபக்கம் அலமாரியில் வரிசையாக இருக்கும்.
அங்கே மகேஸ்வரி மீது படர்ந்தவனாய் விஷாகன் இருந்தான். கூடுதலாக மகேஸ்வரி இடையை வளைத்தவனாய் விஷாகன் கைகள் இருக்கவும் விருஷாலி நெஞ்சமெல்லாம் பாரம் ஏறியது.
தன்னிடம் நெருக்கமாக இருக்கும் நேரமும் இப்படித் தான் விஷாகன் பிடியும் இருக்கும். போதாதற்கு அவன் கன்னம் அவளது தோளில் வேறு அழுத்தம் பெற்று எழுந்திட போராடினான். லேசாய் கணுக்கால் வரை ஏறிய புடவையில் மகேஸ்வரி இருக்க, விருஷாலி மனம் தறிக்கெட்டு அழுகை உடைப்பெடுத்தது.
கையிலிருந்த பர்ஸ் விழவும், விஷாகன் திரும்ப, விருஷாலி பார்வை சென்ற இடத்தைக் கவனித்தவன், சங்கடமாய் எழுந்தான்.
அவன் எழுந்ததும் கூடவே மகேஸ்வரிக்கு கை கொடுத்து எழ உதவினான்.
அதில் கூடுதல் கோபம் அடைந்தவள் தன் போனை மட்டும் கையில் இறுக பிடித்து நடையைக் கட்டினாள்.
இதுவரை தவறாகத் தோன்றிருக்கும் என்று யோசிக்காத விஷாகன், விருஷாலி வேகநடையோடு செல்வதால் அவள் தவறாய் எண்ணியதை எண்ணி தலையிலடித்து அவளை அழைத்தபடி வெளியே வந்தான்.
“ஷாலி… ஷாலி… ஷாலி நில்லு.” என்று கத்த, செவிமடுக்காமல் நடந்தாள்.
அவள் பர்ஸ் கீழேயிருக்க எடுத்தான். அவள் செல்லும் போது போன் கையிலிருக்க அவளுக்கு அழைத்தான்.
அவன் அழைக்கின்றான் என்றதும் கத்தரித்துவிட்டாள்.
தொடர்ந்து போனில் விடாமல் அழைக்க, அவள் எடுக்கவில்லை கோபத்தோடு சட்டெனத் துண்டித்தாள்.
“என்னாச்சு? என்று சேலையை ஒழுங்குப்படுத்தி மகேஸ்வரி வந்தாள்.
“என் ஓய்ப்…” என்றவன் அதற்கு மேல்… கூற தயங்கினான்.
என்னைச் சந்தேகப்பட்டு விட்டாளென எப்படி உரைப்பான். என் விருஷாலி புத்திசாலி. ஏற்கனவே நடந்த களோபரத்தை கூட ஆழ்ந்து யோசித்து முடிவெடுத்துத் தன்னைப் புரிந்து கொண்டவள் என்று பெருமையாக மார்த்தட்டியவன். இன்று ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று வருந்தினான்.
“நான் வீட்டுக்கு போறேன்.” என்று மகேஸ்வரியிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.
வழிநெடுக அழுதுக்கொண்டு கண்ணீர் விட்டு வந்தவளை யாரும் நிறுத்தி கேட்கவில்லை. நல்ல வேளை இது சென்னை.
ஆனாலும் வசிக்கும் தெருவில் வந்ததும் பலரும் கேட்க, வேகமாய்க் காதில் வாங்காமல் வீட்டுக்கு வந்தாள்.
அவள் வந்த அடுத்த நொடி “அண்ணி பிரிண்ட் அவுட்?” என்று விருஷாலியின் வெறும் கையைப் பார்த்து அபர்ணா கேட்டாள்.
அவளுக்குப் பதில் தராமல் அறைக்குச் செல்ல, ‘அண்ணி அழுதுட்டே போகுது’ என்று புரியாமல் விழித்தாள். விஷாகன் அவள் கதவை தாழிடும் முன் கைவைத்துத் தடுத்தான்.
அவள் கோபமாய்த் திரும்பி மெத்தையில் அமர்ந்து முகம் பொத்தி அழ துவங்கினாள்.
மெதுவாகக் கதவை சாற்றியவன், “ஷாலிம்மா… அங்க பார்த்ததைத் தப்பா புரிஞ்சுக்காதே. ஏதோ பெரிய புக் பைண்டிங் கொரியர்ல அனுப்ப வச்சது. அவ அது தெரியாம தூக்கவும் பளு தாங்காம கீழே போட்டுட்டா. அந்தப் புக் வெயிட் போடறப்பவே என்னாலயே தூக்க முடியாம கஷ்டப்பட்டேன் . மொத்தமா ஐம்பது புக் பிரஸ்ல இருந்து அனுப்பியது. வெயிட்டான அட்டைப்பெட்டி” என்று கூறவர பாதிப் பேசும் போதே காதை இரு கையால் இறுக அடைத்து கொண்டாள்.
“உங்க விளக்கம் மண்ணாங்கட்டி எதுவும் எனக்கு வேணடாம். என்னைத் தனியா விடுங்க.
உங்களைக் கல்யாணம் பண்ணிக்க என்னிடம் கேட்டப்ப ஆசைஆசையா தலையாட்டினேன் பாருங்க. எனக்கு இதுவும் தேவை. இதுக்கு மேலயும் தேவை.
பட்டிக்காடுனு தலையில மிளகா அரைச்சிட்டிங்க தானே.
உங்களுக்காக அபர்ணா உங்க பொண்ணு இல்லைனு சரியான நேரத்துல உறுதுணையா நின்ற எனக்கு, கடைசில நீங்களும் மாமா மாதிரி ஒருத்தியே தேடி போயிட்டிங்கல…
கல்யாணமாகி அதுக்குள்ள நான் உங்களுக்குச் சலிப்படைந்துட்டேனா? அதெப்படி என்னைக் கட்டிபிடிச்ச அதே போஸ்ல அவளை ட்ரீட் பண்ணறிங்க. சீ… இல்லை… யாரா வேண்டுமென்றாலும் பரவாயில்லைனு அவபின்னாடி போயிட்டிங்களா” என்று ஆவேசமாய் நெஞ்சில் தோன்றியதை கேட்டாள் விருஷாலி.
விஷாகன் அவளை அடிக்கக் கையை ஓங்கிவிட்டான். ஆனால் அடிக்கவில்லை நிதானித்துக் கையைக் கீழே இறக்கினான்.
“சொல்லறதை காது கொடுத்து கேளுடி. இப்படிக் காதை இறுக பொத்திக்கிட்டா நான் எப்படி என் தரப்பை சொல்வேன். அன்னைக்கு நான் சொல்லாம என்னைப் புரிஞ்சுக்கிட்டவ, இன்னிக்கு நான் என் தரப்பை சொல்ல வர்றேன் கேளுடி” என்று கையை இழுத்தான்.
அவளோ உடும்பு போலக் காதை பொத்தி அவன் கையைத் தட்டி விட்டாள்.
“ஷாலிம்மா.” என்று கத்த, கதவும் தட்டப்பட்டது. அபர்ணா மூலமாகச் சண்டையென அறிந்து, சுகன்யா வந்து கதவை தட்டினார்.
“விஷாகா… விஷாகா… என்னடா ஆச்சு.? விருஷாலி… கதவை திற” என்று சுகன்யா கதவை தட்டவும், கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து கதவை திறந்தான்.
“அம்மா… புருஷன் பொண்டாட்டி சண்டை. நீ நடுவுல வராதே. நானே பார்த்துப்பேன்.” என்று கூறிவிட்டு கதவை தாழிட்டான்.
விஷாகன் கதவை திறக்கும் நேரம் விருஷாலி என்று காதிலிருந்து கையை விடுவித்து அமர்ந்தாள்.
“எனக்கு எங்கப்பா மாதிரி வாழணும்னு எந்த ஆசையும் இல்லை. எனக்கு நீ மட்டும் தான் பொண்டாட்டி. நான் முருகனா வாழ விரும்பலை. உன்னோட ஒருத்திக்கு ஒருத்தனா வாழணும்னு நினைக்கிறவன்.
அங்க பார்த்தது எதுவும் நீ நினைக்கிற மாதிரி இல்லை. அவ மேல” என்றதும் காதிற்குக் கையைக் கொண்டு போக முயன்றாள் விருஷாலி.
அவள் கையை இருபக்கமும் பிடித்து, “பெரிய பேக்கேஜ் அவ மேல விழறதை பார்த்துத் தடுக்கப் போனேன். என் கெட்ட நேரம் நானும் அவ என்னைப் பிடிமானமா இழுக்கவும் சேர்ந்தே அவ மேல விழுந்துட்டேன்” என்றான்.
ஷாலியின் நெஞ்சு விம்மி விம்மி மூச்சு வாங்கியது. அவனோ, “நடந்ததைச் சொல்லிட்டேன். நம்பு இல்லை நம்பாதே.
நம்பினா சந்தோஷப்படுவேன். நம்பலைனா… நான் சாகறதுக்குச் சமம்.” என்று கதவை திறந்து வெளியேறினான்.
விருஷாலி உதடு தந்தியடிக்க, அழுகை முற்றுப்பெறாது, மெத்தையில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதாள். அவள் கண்முன் விஷாகன் அவளைத் தீண்டியதும் மேலே படர்ந்ததும் காட்சியாய்ப் பதிந்திருக்க அதனை அழிக்க முயன்றாள். ஒவ்வொரு முறையும் காட்சி கண்முன் வர தன் இதயத்தை யாரோ அறுப்பது போல உணர்ந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Interesting👍
Super super super super super super super super super super super super
Idhu vidhi lan ila virushali enga veena akka panna sathi apadiyae avangala gundukatta thookitu poi yen ipadi panninga nu kelu ma😂😂😂….
Vishagan ku neram sari ellai pa endha Rajan vera avanoda vanmatha theerthukuran vrushali enna Panna poralo🙄 kadavuley 😢
அச்சோ. .. என்ன பிரவீணா அக்கா இப்படி பண்ணிட்டிங்க…
intha mariyana situation vantha kandipa sandhega pada than thonum athuvum varum pothe antha rajan vera ethi vitu anupitan athula shali inum kovama aeita but vishakan ippadi panra aal illa shali purinjiko
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீயின்றி வாழ்வேது…!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 34)
என்னடா இது..? சாண் ஏறினா முழம் சறுக்குதுங்கற கதையாவே இருக்குது. இன்னும் கல்யாணமாகியே முழுசா ஒரு மாசம் ஆகலை, மஞ்சத்தாலி ஈரம் கூட இன்னும் காய்ஞ்சு இருக்காது, மூணாவது மாசம் தாலி பிரிச்சு கட்டுற சாங்கியம் கூட பண்ணியிருக்க மாட்டாங்க. அதுக்குள்ள இவளுக்கு புருசன் மேல சந்தேகம் அப்படி கொட்டுது.
இல்லைத் தெரியாமத்தான் கேட்கிறேன்… இந்த ஷாலி விஷாகனை பத்தி என்ன நினைச்சிட்டிருக்கா…? பொம்பளை சுகத்துக்கு அலையுறவனா..? இது அவளுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை. அப்படியே அவனுக்கு அந்த மகேஸ்வரித்தான் வேணுமின்னா… அதுக்கேன் இவளை கட்டிக்கணும்…?
அந்த மகேஸ்வரியை வைச்சுக்கணும்…?
ஏன், அந்த மகேஸ்வரியை கட்டிக்கிட்டு, ஷாலியை வைச்சுக்கலாம் தானே…?
ஏன், விஷாகன் வேற எந்த பொண்ணை காதலிச்சு இருந்தாலும், விஷாகன் அம்மா தடையா விதிச்சிருக்கப் போறாங்க…? இல்லை தானே..?
இந்த விஷாலி என்னவோ புதுசு புதுசா நடந்துக்குறா..? விஷாகன் அவங்கப்பாவை பத்தி எல்லா உண்மையும் சொல்லிட்டான் தானே…?
அப்புறம் எதுக்கு இம்புட்டு டிராமா போடுறா..? அவளோட அம்மா பேச்சையும், அந்த வீணாப்போனவன் ராஜன் பேச்சையும் கேட்டுட்டுத்தானே
இம்புட்டு அலும்பு பண்றா..?
அதுக்கு பேசாம விஷாகன் கிட்டயே என்ன ? ஏது ?ன்னு மனசுல போட்டு புழுங்காம வெளிப்படையா, சட்டையைப் புடிச்சிட்டு நிக்க வைச்சு கேள்வி கேட்க வேண்டியதுதானே….?
அதுக்கு அவளுக்கு ரைட்ஸ் இருக்குது தானே..? படிச்ச பொண்ணு தானே…? சந்தேகம் வந்துட்டா, சந்தோஷம் சுத்தமா போயிடும்ன்னு தெரியும் தானே..? அப்புறமும் எதுக்கு இத்தனை அழும்பு…? அதுவும் சொல்ல வர்றதை கூட காதுல வாங்கிக்காத அளவுக்கு எதுக்கு அத்தனை பிடிவாதம்…?
விஷாகன் அவ மேல அத்தனை நம்பிக்கை வைச்சிருக்கான் தானே..? இப்ப இவ பண்ற கூத்தைப் பார்த்தா, அவன் இவ மேல வைச்ச நம்பிக்கையும் வீணாப் போகுது தானே…? ஒருத்தடவை உடைஞ்சுட்ட, உறவுகளை ஒட்ட முடியாது தானே…? ஏன் கண்ணுக்கு முன்னாடி குதிரைக்கு லாடம் கட்டி வைச்ச மாதிரி மத்த விஷயத்தை எல்லாம் பார்க்கவே மாட்டேங்குறா…? காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம்
மஞ்சளாத் தெரியுற மாதிரியில்ல இருக்குது…?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாத் தெரியுமாம்… அது போல இல்ல இருக்குது இவ பண்ற கூத்து.
ஒருவேளை, விஷாகன் அவளுக்கு ரொம்ப சுலபமா புருசனா வாய்ச்சுப்பூட்டதால அருமை தெரியலையோ என்னவோ…??? அடேய் விஷாகா..! இவளையாடா நீ தேவதையா கொண்டாடுனா…?
அட போடா, போடா… போக்கத்தவனே…! இப்ப பாரு சாயம் வெளுத்துப்போச்சு இல்ல…!
😃😃😃
CRVS (or) CRVS 2797
Thappu pannathu oruthar aana thandanai Vishagan ku na ra mathiri aagiduthu ellar oda visha varthai innaiku Shali moolamaa Vishagan ah patham parthuduchi
Waiting for nxt epi💕💕💕
Sema twist. Vishakan pavam. Shali try to understand him. Interesting
Sema sema interesting epi
Suththam bt konjam nerathula shali purinchupa
Vishaganukku 7 1/2 start agiduthu
அந்த ராஜன் நல்லவே இருக்க மாட்டான்
Neenga visagan ah mattum illa engalayum azha vaikiringa 😕