நீயின்றி வாழ்வேது-8
விஷாகன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திடவும், பாதி தலைகள் அவனை தான் திரும்பி பார்த்தனர்.
“என்னயா வேண்டும்” என்று செந்தூரன் தாத்தா அருகே வந்து கேட்டார்.
“தண்ணி தாத்தா.” என்றான். மனதிற்குள் ‘ஒரு மனுஷன் எந்திரிக்க கூடாதா?’ என்று மற்றவரை பார்க்க, அந்த பார்வையில் ‘அவங்க அவங்க வேலையை கவனிங்களேன் என்னையேன் பார்க்கறிங்க’ என்று பளிங்காய் காட்டியது.
அவனும் எத்தனை முறைதான் தன்னவளை காணும் ஆவலை, மனதில் அழுத்தி அடக்கி கொண்டு அமர்ந்திருப்பது.
சுகிர்தன் தண்ணீரை எடுத்து நீட்டவும், “எனக்கு சுடத்தண்ணி வேணும்” என்றவன் சுகிர்தன் நீட்டியதை தவிர்த்து, அத்தை வீடு தானே என்று உரிமையாய் வீட்டுக்குள் நுழைந்தான்.
இரண்டெட்டு வேகமாய் நடக்கவும், ‘விஷாகா கெத்த விடாதடா’ என்று “அத்த சுடதண்ணி வேணும்.” என்று வெகுயியல்பாய் அன்னத்திடம் கேட்டான்.
“நேத்து முழுக்க மாடில போய் தூங்கினான் குளிர் ஒத்துக்கலை. இப்ப சுடத்தண்ணி குடிக்கறது நல்லது.” என்று செல்லம்மா அம்மாச்சியும் பேரனுக்கு நேர்ந்த கதியை விளக்கினார்.
வீட்டுக்கு வெளியே தான் அத்தனை கூட்டம். உள்ளே விருஷாலியும் அவள் அன்னை அன்னமும், கூடவே நேற்று பார்த்த நண்டுகொடுக்கும் இருந்தாள்.
“நேத்து பார்த்தவரே தான் விருஷாலி. பஸ் விட்டு இறங்கி நடந்தப்ப எதிர்தாப்ல வந்தார். அவரே தான்” என்று வனஜா விருஷாலியிடம் கிசுகிசுக்க அது விஷாகன் காதிலும் துள்ளியமாய் விழுந்தது.
“வாங்கயா” என்று அன்னம் வீட்டுக்குள் அழைத்து மகிழ்ச்சியில் துள்ளினார்.
விஷாகன் உள்ளே வரவும் அன்னம் தண்ணீரை சுட வைத்து “வனஜா கொதிச்சிட போகுது பார்த்துக்கோ இதோ வர்றேன்” என்று வெளியேற, வனஜா என்ற தோழியும் விருஷாலியும் இருந்தார்கள்.
விஷாகன் அந்த சிறு அறையை நோட்டமிட்டபடி, வனஜாவை ஒரு பார்வை பார்த்து முடித்தான்.
அவளோ ‘பால் பொங்கும் பச்ச தண்ணி பொங்குமா?’ ஆனால் பொங்கிடும் என்பது போல கண்ணும் கருத்துமாய் அடுப்பில் இருந்த பாத்திரத்தையே கவனித்தாள். அவள் கவனம் அங்கிருக்க விருஷாலியை காதலோடு நோக்கினான்.
தொண்டையை செருமி விருஷாலி அருகே, இரண்டெட்டு முன் வரவும் அவள் நாலெட்டு பின்னால் நகர்ந்தாள்.
ஏனோ மீண்டும் முன்னே வர அவள் பின்னே செல்ல, அவ்விளையாட்டை ரசித்தவனாய் அவன் முன்னெடுத்து வந்தான்.
கடைசியாகச் சுவரோடு ஐக்கியமானாள் விருஷாலி.
“இங்க வழியிருக்கா?” என்று கேட்டதும், தன்னிடம் பேசுகின்றாறென்ற அதிர்ச்சியில் ஏறிட்டு இல்லையென்று தலையசைத்தாள்.
“அப்பறம் எதுக்கு பின்னாடியே போற? பயப்படாதே… என்னை இதுக்கு முன்ன பார்த்திருக்கியா?” என்றதும் விருஷாலி வாசல் பக்கம் விழியை செலுத்தி அப்படியே அவனை நோக்கினாள்.
“ம்” என்று தலையை பூம்பூம் மாடு போல ஆட்டினாள்.
“எப்… எப்ப?” என்றான் அவள் வாயிலிருந்து தமையனை பார்த்து கூறுகின்றாளோ என்று பரிதவிப்பை மறைத்து கேட்டுவிட்டான். கொஞ்சம் யோசித்தாலும் தான் அப்பாவை போல, சுகிர்தன் அம்மாவை போல முக அமைப்பை பெற்றதை வைத்து தெளிந்திருக்கலாம்.
மீண்டும் மீண்டும் வாசலை பார்த்தவளிடம், “விருஷாலி” என்று கூப்பிட, விருஷாலி ‘ஙே’ என்று ஏறிட்டாள்.
“விருஷாலி… நான் தண்ணி குடிக்க வரலை. இதை கேட்க தான் வந்தேன். பயப்படாம சொல்லு” என்று ஊக்கினான்.
வனஜாவோ சுடதண்ணியை அணைத்து விட்டு, வாசல் பக்கம் சென்றாள்.
“வனஜா.” என்று அழைத்து போகாதே என்று கண்ணால் மன்றாடினாள்.
“ஏய்.. நான் இங்க கேட்கறேன் பதில் சொல்லு” என்று கேட்க அவன் கேட்ட தோரணை மிரட்டலாகவே தோற்றுவித்தது.
“ஊர்திருவிழாவுக்கு சுகிர்தன் மாமா, போன வருஷம் வந்தப்ப போன்ல உங்களை பார்த்திருக்கேன். லாஸ்ட் டைம் பொங்கல் திருவிழானு ஆபிஸ்ல போட்டோ எடுத்ததா (அன்னபூரணியிடம்)பெரிய அம்மாச்சியிடம் காட்டிட்டு இருந்தாங்க. அப்ப அப்படியே பார்த்துட்டு போனை சார்ஜர்ல போட சொல்லிட்டு போனாங்க. அம்மாச்சி போட்டோ பார்க்கறப்ப… அப்ப… நானும் பார்த்தேன். உங்களை உங்களோட வீட்ல வேஷ்டி சட்டையில போட்டோவுல பார்த்தேன்.” என்று கையை பிசைந்தாள்.
பொங்கலன்று நண்பர்களின் தொல்லையால் வேஷ்டியை வேண்டாவெறுப்பாக கட்டினான். ஆனால் அன்று முழுவதும் ‘மாப்பிள்ளை என்னயா அம்சமா இருக்க?’ என்று பலரும் கூறியதை வைத்து அந்த புகைப்படம் நன்றாக தான் இருக்குமென நம்பினான்.
“ஓ… போட்டோ பார்த்த ஓகே. உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றவன் அடுத்த வினா தொடுக்க, கமுக்கமாய் முகம் வைத்து நின்றவளை “கேட்கறேன்ல சொல்லு” என உரைக்க அக்குரலே அவளை பயமுறுத்த ‘ம்’ கொட்டினாள்.
“சுடதண்ணி எடுத்து தா. உன்னிடம் ஒரு வார்த்தை கேட்க, என் தொண்டை தண்ணி வத்திப் போச்சு” என்று நேற்றிலிருந்து பட்ட அவஸ்தையை கூறினான். அவளோ கரித்துணி கொண்டு சுடத்தண்ணி இறக்கி டம்ளரில் ஆற்றினாள்.
பாவம் ஆல்பத்திலிருந்து போட்டோவை எடுத்து, நேற்று வேறு தன்னை பார்க்க இங்குவரை வந்திருக்கின்றாரே என்று அவனுக்காக பாவம் பார்த்தாள்.
அவனிடம் நீட்டும் நேரம் கைகட்டி அவளையே இமைக்காமல் ரசித்தான். அவளும் தன்னை அறியாது அவனின் கம்பீரத்தில் மொத்தமாய் விழந்தாள். ஏற்கனவே ஜன்னலில் எட்டி எட்டி பார்த்து ரசித்தாலும் இந்தளவு நெருக்கத்தில் பார்க்க இடத்தை மறந்து நின்றாள்.
“அச்சோ உங்க அம்மா வர்றாங்க” என்று வனஜா பயந்து கூற, டம்ளர் பிடி நழுவ விட்டாள் விருஷாலி. அதனை சரியாக பிடித்து டீயை போல சூடாக பருகினான் விஷாகன்.
“இத்தனை நாளா கற்பூரவள்ளி செடி கேட்பாரற்று இருந்துச்சு. ஒரு வாரம் முன்ன தான் ஆட்டுக்குட்டி இங்கிருந்த செடியை ஒட்ட மேய்ந்துடுச்சு.” என்று கஷாயம் போட வெல்லத்தை தட்டினார்.
அதற்குள் “மாப்பிள்ளை சாப்பிட வாங்க” என்று சங்கரன் அழைக்க, விருஷாலியை கண்டு கண்சிமிட்டி நடந்தான்.
நீ வரலை என்று விழியால் கேட்டுமுடிக்க, முட்டை கண்கள் போல விழிவிரித்து தலையால் மறுத்து வரலையென பதில் தந்தாள்.
சூடான தண்ணீரை பருகியபடி வெளியே வந்தான்.
பந்தி பரிமாறும் இடத்தில் விருஷாலி அண்ணன் விவேக் ”இங்க உட்காருங்க மச்சான்” என்று தலைவாழையை போட்டு பரிமாறவும் ஏற்கனவே சம்பந்தி என்ற முறையில் பெரியவர்களும் உதயகுமாரனும் எல்லாரும் சாப்பிட்டதால் அந்த வீட்டுக்குள் அடிக்கடி பார்வையை பதித்தான்.
சங்கரனோ விஷாகனின் மனதை புரிந்தவராக “அன்னம்… குட்டிம்மாவை சாப்பிட வரச்சொல்லு” என்று ஏவினார்.
அன்னம் தன் அன்னை செம்பருத்தியை பார்க்க, அவரோ அவரின் அக்கா அன்னபூரணியை பார்த்து வைத்தார்.
“நேரத்துக்கு அவளையும் சாப்பிட வரச்சொல்லு. குச்சிக்கணக்கா இருக்கா கல்யாணத்துக்குள்ள ஊத வேண்டாம்.” என்று அழைக்கவும் சேலையை முன்னே கையில் சிறிதளவு உயர்த்தி மெதுவாய் நடந்து வந்தாள்.
விஷாகன் அருகே சுகிர்தன் வரவும், “ஏன்டா இங்க வந்து தான் உட்காரணுமா? அங்க காலியா இருக்குல தள்ளி உட்காரு” என்று அதட்ட, ‘அது சரி’ என்று வருங்கால அண்ணிக்கு இருக்கையை விட்டு இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்தான்.
விருஷாலி கூடவே வனஜாவும் தோழி கையை விடாமல் அழைத்து வந்து சேர, விவேக் தங்கைக்கும் உணவை பரிமாறினான்.
சங்கரனுக்கோ மகள் மாப்பிள்ளை என்று சேர்ந்து உண்ணவும் கண்கள் கலங்கியது. இன்றே ஜோடியாக பார்த்த திருப்தியாக இருந்ததே.
அங்கே கிசுகிசுவென சத்தம் வந்தவண்ணம் இருந்தாலும் விஷாகன் எதையும் கவனிக்கவேயில்லை. அவன் கவனம் முழுவதும் அருகில் இருந்தவளின் செய்கையை மற்றவர் பார்க்காத அளவிற்கு நோட்டமிடுவதிலே குறியானான்.
“விருஷா இது நம்ம கருப்பியா?” என்று கேட்க, “இல்லை வெள்ளையம்மா” என்று கூறிடவும், விஷாகன் “என்னது வெள்ளையம்மா?” என்று அவளை ஒருகணம்… ஒரேகணம் விழியில் என்னவென்று கேட்டு முடிக்க விருஷாலி சாப்பிடாமல் அவனையே பார்த்து தவித்து, பதில் கூற இரண்டு நொடி யோசிக்க, “என்னது வெள்ளையம்மா?” என்று மீண்டும் அழுத்தி கேட்டதும் சுதாரித்து கையிலிருந்த வறுவலை அவன் முன் நீட்டி, “கோ… கோழி… வீட்ல வளர்த்தது… இன்னிக்கு சமைக்க வேண்டும்னு அறுத்துட்டாங்க” என்று கூறியதும் வறுவலை பார்த்து, அவளையும் வறுவலையும் மாறி மாறி கவனித்து “சாப்பிடலாமா வேண்டாமா?” என்று கேட்டான். அதில் வளர்த்த கோழி உன் மனசு தவிக்குமா? என்று அதே மென்குரலில் பேச்சு வார்த்தை நடத்தினான்..
“சாப்பிட தான் அறுத்தாங்க” என்று கூறினாள். விருஷாலியின் ஒவ்வொரு வார்த்தையிலும் லேசாய் தயக்கம் இருந்தாலும் பதில்கள் வராமலில்லை.
மடமடவெ சாதத்தினை விழுங்கினாள். செம்பருத்தி அம்மாச்சி பேத்தியை யாரும் தவறாக கூறிடுவாரென்று ஏற்கனவே அடக்கம் ஒடுக்கமாக இருக்க கூறி, ஆயிரம் அறிவுரையை மூட்டைகணக்கில் சிறு பெண்ணவள் மீது ஏற்றி விட்டார்.
அதனால் இந்த செம்பருத்தி அம்மாச்சியின் செருமல், மற்றும் கண்டிக்கும் பார்வை என்று நொடிக்கொருமுறை விருஷாலியை வட்டமிட அவளும் அம்மாச்சியின் அறிவுரைப்படி இருந்தாள்.
விஷாகனே வந்து அறைக்குள் பேசுவானென அவள் கனவா கண்டாள். ‘கேட்கும் தோரணைக்கு பதில் பேச மாட்டியா’ என்றவனின் ‘மிடுக்கான பார்வை’ வேறு அவளை மிரட்ட, பேசிவிடும் நிர்பந்ததிற்கு ஆளானாள்.
அருகே இருந்து சாப்பிடுபவன் வினா தொடுக்க, பதில் அளிக்க இப்பொழுதும் பேசினாள். என்ன அம்மாச்சி முறைப்பு துரத்த வேகமாய் சாப்பிட்டு எழுந்தாள்.
அவள் நேரம் விஷாகனும் எழுந்து கூடவே வர விவேக் ஓடிவந்து மச்சானுக்கு கை அலம்ப நீரை தந்தான். விஷாகன் அவன் உபயோகித்து அவளிடம் நீட்ட நிமிராமல் வாங்கினாள்.
மீண்டும் வீட்டுக்குள் சென்று அடைந்திடவும், ‘என்ன ஊருடா? கொஞ்ச நேரம் வெளியே நிற்க வச்சா என்னவாம். பொத்தி பொத்தி பூட்டி வச்சிக்கறாங்க’ என்று சலித்து முடிக்க திருமணத்தின் பேச்சு தொடர்ந்தது.
சென்னையில் திருமணமா? இதே ஊரிலா? என்று பெரியவர்கள் பேச, இதே ஊரில் என்றால் சங்கரனுக்கு வசதியாக இருக்கும். சென்னை என்றால் தனியாக தங்க ஹோட்டலில் ரூம் புக் செய்து, ஊர் மக்களை அழைத்து வர டிராவல் புக் செய்ய வேண்டும் என்று செலவுகள் இழுக்கும் என்று யோசித்தார். அதையே செம்பருத்தி அம்மாச்சி அன்னபூரணியிடம் அக்கா என்ற முறையில் அறிவிக்க, உதயகுமாரோ “தங்கைக்கு எதுக்கு செலவு. இங்கயே திருமணத்தை வச்சிக்கலாம். நாங்க சென்னையில இருந்து இங்க வந்துக்கறோம்” என்று விஷாகன் கூறியதை அச்சு பிசகாமல் தெரிவித்தார்.
விஷாகனோ சற்று முன் அன்னம் கொடுத்த கற்பூரவள்ளி கஷாயத்தை தோரணையாக குடித்து வேடிக்கையில் ஆழ்ந்திருந்தான்.
அன்னம் சங்கரன் இருவரும் உதயகுமாருக்கு நன்றி உரைத்தனர்.
விஷாகன் சத்தமில்லாமல் எழுந்து வனஜாவிடம் வந்தான்.
“ஹலோ.” என்றதும் திடுக்கிட்டு திரும்ப, “அண்ணா தண்ணி வேண்டுமா?” என்று விளித்து கேட்டாள்.
“இல்லைம்மா நம்பர் வேண்டும். உன் பிரெண்ட் நம்பர்.” என்று கேட்டதும் திருதிருவென விழித்தாள்.
“அவளிடம் போன் கிடையாதே.” என்று பதில் தந்ததும் விஷாகனோ நெஞ்சை தேய்ததபடி “ஓ.” என்று சிந்திக்க, “அண்ணா… நான் போகட்டா” என்று கேட்டு விடைப்பெற துடிக்க, விஷாகன் தலையாட்ட அவ்விடம் விட்டு அகன்றாள்.
சில நேரம் பொழுது கழிய, அனைவரும் கிளம்பும் நேரமும் வந்தது.
விருஷாலி நடுவில் நிற்க அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப, இதயத்தை ஈர்க்கும் ஒரு காந்தப்பார்வையை அவளிடம் வீசிவிட்டு சென்றான்.
வனஜாவோ, “நேத்து சாந்தமானவருனு சொன்ன இப்ப ஏன்டி அதட்டி மிரட்டி, பயமுறுத்தறாருனு சொல்லற. பார்த்தா அந்த மாதிரி தெரியலை விருஷாலி. நல்லா சிரிச்ச முகமா தெரியறார் என்று நற்சான்றிதழ் வழங்கினாள்.
விருஷாலியோ ‘இல்லை… என்னை குறுகுறுனு பார்த்தார். பேசலைனா அதட்டினார். இவர் சாப்டான ஆளு இல்லை’ என்று முடிவெடுத்தாள்.
காரில் ஏறியதிலிருந்து அவள் திகைத்து, மற்றவர் பார்த்திடுவாரோ என்று பயந்து தலை தாழ்த்திய கவிதை நொடியை ரசித்து ரசித்து இதயத்தில் மீண்டும் ஓடவிட்டு வேறொரு உலகத்தில் உலாவியபடி வந்தான்.
அடுத்த நாள் காலை விடிந்ததும் பத்து மணியளவில் சுகிர்தனின் வேலை காரணமாக செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக மாலை கிளம்புவதாக உரைத்தான்.
அதனால் வேண்டா வெறுப்பாய் உடமைகளை எடுத்து வைத்தான் விஷாகன்.
எப்பவும் இங்கிருந்து புறப்படும் சமயம் எந்த உணர்வும் அவனை ஆட்கொள்ளாது. இன்றோ சொல்லயியலாத உணர்வு உள்ளத்தில் போட்டு தாக்கியது.
காதல் என்று எந்த பெண்ணையும் ஆசையாய் பார்த்ததில்லை. ஏன் வயசு கோளாறில் கூட பெரிதாய் ஈர்ப்பு தோன்றியதில்லை. இத்தனைக்கும் காலேஜ் போய் படித்தவன் அவனுக்கு வந்த பிரப்போஸலை கூட நாகரிகமாய் நாசூக்காய் தவிர்த்தவன்.
இதையெல்லாம் எண்ணி பார்த்து வெட்கப்பட்டு திண்ணையில் காலாட்டி அமர்ந்து, மலைத்தேன் எடுத்து வர சென்ற மணி மற்றும் செந்தூரன் தாத்தா இருவரின் வருகைக்கு எட்டி பார்த்திருந்த குடும்பத்தை கவனித்தான். இப்பொழுதே மாலை நான்காகிவிட்டது.
அறைக்குள் உதயகுமார் “அப்பா வெளியே இருக்கேன் டா, முன்ன மாதிரி உடனடியா வரமுடியாத சூழ்நிலை. நீ டான்ஸ் ஆடியதை வீடியோல பார்த்தேன் ரொம்ப அழகாயிருந்தது” என்று மகன் கவனிக்காத நேரத்தை எதிர்பார்த்துட்டு இருந்தவர் தன் மகள் அபர்ணாவிடம் பேசினார். விஷாகன் அதை கேட்க நேர்ந்தது.
அதன் காரணமாக உச்சப்பட்ச கோபத்தோடு வந்தவன் ஓங்கி குத்துவிட்டான். கை முழுக்க இரத்தம் வழிய உதறினான்.
உதயகுமாரின் போன் கீழே விழுந்து இரண்டாய் சிதறியது. சத்தம் கேட்டு வெளியேயிருந்தவர்கள் ஓடிவர, சுவரிலிருந்த கண்ணாடி உடைந்து கீழே சிதறலாய் கிடந்தது.
பேரனின் கையில் இரத்தம் வழிய அப்பத்தா, அம்மாச்சி பதறினார்கள்.
சுகன்யாவோ என்னப்பா ஆச்சி?” என்று கேட்டபடி மகனின் கையை பிடிக்க, “ஒன்னுமில்லை மா. தலைவாறிட்டு சீப்பை கண்ணாடில சொருகினேன். சரியா வைக்கலை கீழே விழ பார்த்ததும் பிடிச்சேன் கை சுவரில் வேகமா மோதிடுச்சு. கண்ணாடி உடைந்திடுச்சு” என்று வெளியே வந்து வாசலில் தொட்டியிலிருந்த சொம்பால் தண்ணீர் கொண்டு அலசினான்.
“அய்யோ அடங்காம ரத்தம் வழியுதே. வா ராசா ஆஸ்பத்திரிக்கு போலாம்” என்று அம்மாச்சி கூற, அன்னபூரணி அப்பத்தாவும் ஆமோதித்தார்.
“அய்யோ அப்பத்தா… பஸ் வர நேரமாகுது. இப்ப போய் ஹாஸ்பிடலா? துணியை கொடு, கட்டுப்போட்டா நிற்கும். பஸ் மாறுவேன்ல அங்க இருக்கற ஆஸ்பத்திரில காட்டிக்கறேன். ” என்று கூறி காட்டன் புடவையில் நன்றாக இரத்தத்தை துடைத்து அதிலே கட்டுப்போட்டான்.
“இங்கயிருந்து ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு நாளைக்கு போயா.” என்று கூற, “இல்லை அப்பத்தா.. அங்க சுகிர்தனுக்கு வேலைக்கு வரச்சொல்லிட்டாங்க. நானும் போகலைனா பிசினஸ் படுத்துக்கும், ஏற்கனவே நிலைமை மோசமாகுது. இங்க இருந்தா சூழ்நிலை என் வசம் இருக்காது.” என்று இருக்க முடியாதென்று ஆணித்தரமாக கூறி முடித்தான்.
அம்மாச்சி அழது “நேத்தே ஒன்னா பந்தில உட்கார்ந்தது கண்ணு பட்டுயிருக்கும்யா.” என்று கூற, எங்கே விருஷாலி வைத்து ஏதேனும் வார்த்தை விட்டுவிடுவாரோ என்று அஞ்சினான்.
“அம்மாச்சி ஏதாவது வார்த்தை விடாதிங்க. இதோ தேன் எடுத்தாந்தாச்சு. நாங்க கிளம்பறோம்” என்று மணியும் செந்தூரன் தாத்தாவும் வந்ததை காட்டி இடது கையில் பையை தூக்கினான்.
“என்ன ராசா கையில கட்டு” என்று செந்தூரன் ஓடிவர, “ஒன்னுமில்லை தாத்தா சின்ன அடி” என்று உரைத்தான்.
தேன் பாட்டிலை அன்னையின் பையில் எடுத்து வைக்க கூறி சுகிர்தனை “என்னடா பார்த்துட்டு இருக்க, பையை தூக்கு” என்று எரிந்து விழுந்தான்.
விஷாகனோ பஸ் மாறும் நேரம் பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரியில் கையை காட்டி கட்டு போட்டான்.
பேருந்தில் ஏறி ஸ்லீபிங் பெர்த்தில் படுத்து கொண்டவன் முகம் கொஞ்சமும் ரௌவுத்திரத்தை கைவிடவில்லை.
இத்தனை அடிவாங்கியும் மீண்டும் தந்தை அந்த பெண்ணிடம் போனில் கொஞ்சி குலாவியதை அவனால் ஏற்க முடியவில்லை. சிறுமியை காரணம் காட்டி பேசி வளைகின்றனரோ என்று காந்தியது.
இதற்கு தான் தப்பு செய்தவனின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டி தண்டோரோ போடுகின்றனரோ?
சொல்லாமல் மறைக்க மறைக்க தப்பு செய்தவனுக்கு குளிர் விட்டு போகின்றதோ என்று மனதில் இதற்கொரு முடிவெடுத்தான்.
சுகன்யாவோ மகனுக்கு ஒருவழியாக சம்பந்தம் பேசி முடித்த ஆனந்தத்தோடு இருந்தாலும், இதென்ன கையில் இரத்த காயம் என்ற வருத்தம் கலந்து அசதியில் பயணித்தார்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super sis nice epi 👌👍😍 Evan over ah love pandran andha ponnu evana parthu bayapadra enna nadakumo parpom 🤔
Super. Vishankan romance cute. Interesting
interesting……………
Udhayakumaran avar panna thappala rendu kudumbam pathika paduthu visha sugi la ivlo age la accept panna mudila antha kutty papa pavam ennatha nadaka poguthunu therila…. Visha romba love mood ku poitan ipdi merati pesa vacha epdi ava normal ah pesuva…. 😂oo sir ku pakathula utkanthu saptathu pathatha ithula innum konjam neram veliya nikkanuma aasai tha…..
Super super ka❤️…. Waiting for next ud….
Super😍😍😍😍
Spr going waiting for nxt epi😍😍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 8
அப்பாடா…! நம்ம விஷாகனுக்கு ரொமான்ஸ் பண்ண நல்லாவே வருதுப்பா.. ஆனா, என்ன மூக்குக்கு மேல கோபமும் அதிகமாவே வருது. எல்லாம் இந்த வீணாப்போன அப்பனால வரது. இந்தாளை என்ன செஞ்சா தகும்..? திருந்தவே மாட்டான் போல…? இதற்கப்புறம் திருந்தி என்ன செய்ய..? அந்த பொம்பிளை புள்ளை அபர்ணா தான் தவிச்சிடும் போல. அப்பன் செய்த பாவம், பழி எல்லாமே புள்ளைங்க தலையில விழுந்துடும் போல. இந்த ஆளு இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பண்ணி
வைக்கப்போறாரோ…?
😄😄😄
CRVS (or) CRVS 2797
Kandipa thappa maraika patha mela athu tha nadakum vera thodarpu mattum iruntha ok ponnum iruke eppadi vida mudium nee ippadi kamikira kovam waste vishaka first unga amma kitta sollu aduthu ethavathu vali panu
Sema sema interesting epi
Vishagan oda ivolo neram santhosham ore nimishathula thodachi eduthathu pola aagiduthu
தவறு செய்பவனுக்கு தண்டனை கடுமையாக இருந்தால் தான் சரிப்படும்
எடுத்ததும் கை நீட்டியிருக்க வேண்டாம் என்று தோணுது