புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-30

நீயின்றி வாழ்வேது-30

வழக்கமாய் துவங்கும் பணிகள் ஆரம்பித்து இருந்தது. இந்த ஒரு வாரம் விஷாகன் தான் அபர்ணாவை பள்ளிக்கு கொண்டு வந்து விடுவதும், கூப்பிட்டு கொண்டு செல்வதும்.

சுகன்யா சமைத்து வைக்க, விருஷாலி டிபன் பாக்ஸ் கட்டி, தண்ணீர் பாட்டிலில் நீரை நிரப்பி, அபர்ணாவை கணவன் விஷாகனின் பைக்கில் ஏற்றியும் விட்டாள்.

சுகிர்தனும் வேடிக்கை பார்த்தானே தவிர முன்பு போல எரிச்சல் அடையவில்லை. நாளாக நாளாக தன் வேலையை கவனிக்க வேண்டும் என்று மாற்றி கொண்டான்.

அன்னபூரணியோ மகனின் குழந்தை என்று லேசாய் பேச ஆரம்பித்தார். “ஏன்டி உங்கம்மைக்கு சொந்தம் பந்தம் யாருமில்லை.” என்று கேட்டதும் இல்லையென்று கூறினாள் அபர்ணா.

“அம்மாவுக்கு ஆச்சி மட்டும் இருந்தாங்க. அவங்களும் நான் பிறக்கறதுக்கு இரண்டு வருஷம் முன்ன செத்துடுச்சுனு அம்மா சொல்லும்.” என்று கூறிவிட்டு பாடம் எழத ஆரமபித்தாள்.

“அதான்… யாருமில்லாதவளா இருக்கவும், என் பையன் வாட்டசாட்டமா இருந்ததால மயக்கிட்டா. இதோ இவளுக்கும் புருஷனை முந்தானையில முடிய தெரியலை” என்று சுகன்யாவையும் சங்கீதாவையும் நொடித்தார்.

சுகன்யாவும் விருஷாலியும் கிச்சனில் மாறி மாறி பார்த்து கொண்டார்கள்.

சுகன்யாவோ “ஆமா அப்படியே மயக்கிட்டாளும். இந்த ஆம்பளைங்க புத்தி எப்ப எதுல மேயுமோ. பொண்ணுங்களை குறை சொல்வாங்க.” என்று வெங்காயம் வதக்க முனங்க ஆரம்பித்தார்.

விருஷாலிக்கு மனம் கேளாது அப்பத்தா அருகே வந்து, “ஏன் அம்மாச்சி இறந்து போனவங்களை பத்தி தப்பா பேசக்கூடாது தான். ஆனா நீங்க பேசறது சரியா?

மாமா தப்பு பண்ணிருக்கார் ஆனா அவரே திட்டலை… இறந்து போன சங்கீதாவையும், எங்க அத்தையும் திட்டறிங்க. ஏன் அம்மாச்சி மாமா செய்த இதே தப்பை அத்தை செய்திருந்தா என்ன பேசியிருப்பிங்க. இதே மாதிரி குழந்தையை கூட்டிட்டு வந்து மாமா சோறுவூட்டியிருப்பாரா? அத்துவிட்டு போயிருப்பார். அப்படியிருக்க, அத்தையை பேசறிங்க.
பையனை பெத்தவங்கனா என்னவேன்னா பேசலாமா? ஏதோ அத்தை இரண்டு பசங்க இருக்காங்களேனு பல்லை கடிச்சிட்டு சகிச்சிகிட்டு இருக்காங்க. அதுவும் அந்த சங்கீதா அவங்க இறந்துட்டாங்க என்பதால.

நியாயமா பார்த்தா சுகன்யா அத்தை உங்களையும் மாமாவையும் திட்டணும்.” என்று பேச பேச வீடே அமைதியானது.

விஷாகன் விருஷாலியை ‘நியாயமான பேச்சு’ என்று தட்டிக் கொடுத்தான். சுகிர்தனுக்கு அண்ணி மீது மதிப்பு தோன்றியது.

அதன் பின் அபர்ணா பற்றி பேச்சு துளியும் இல்லை.

செந்தூரன் தாத்தாவோ வாட்டர் சப்ளை கடைக்கு வந்து பேரனின் அறையை வேடிக்கை பார்த்தார். அவனின் குடோனில் தண்ணீர் கேன் அடுக்கி வைத்திருக்க, “என்னயா இது இத்தனை தண்ணி கேன் இருக்கு. ரொம்ப நாளா அடைச்சி வைச்சா தண்ணி ருசிக்குமா?” என்று கேட்டார்.

“தாத்தா.. இதெல்லாம் இரண்டு நாள்ல வித்திடும். ராஜன் போய் தண்ணி கேன் கேட்கற வீட்ல போட்டுட்டு வந்த இரண்டாவது நாளே ரிட்டன் கேன் தருவாங்க. அப்படின்னா… மொத்தமே ஒரு வாரம் தான் நாம தண்ணிக்கேன்ல தண்ணியை அடைச்சி வைப்போம். மத்தவங்க கடையில எப்படியோ நம்மளோடது தேவைக்கு ஏற்ப தண்ணியை பில் பண்ணி பேக் பண்ணறதால எப்பவும் புதுதண்ணி மட்டும் தான் பேக்கேஜ்ல இருக்கும். ” என்றான்.

“என்ன சொல்லு… நம்ம வீட்ல ஓடையில இறங்கி செல்லம்மா பிடிச்சிட்டு வருவா. அந்த ருசி இந்த தண்ணில இருக்காது.” என்று பழமைவாதியாக வாதிட்டார்.

விஷாகன் பதில் வாதம் புரியவில்லை. அவனுக்கும் இந்த கருத்தில் சம்மதம் உண்டு.

மற்றொரு நாள்….

அகஸ்டியன் நன்றாக உடல்தேறி வேலைக்கு வரவும் “என்ன அகஸ்டியன் இனி லீவு எடுக்க மாட்டியே. போன இரண்டு மாசத்துல நீ பத்து பதினைந்து நாள் லீவு எடுத்துட்ட” என்று கேலி செய்து பணியில் அமர்த்தினான்.

“எடுக்க மாட்டேன் அண்ணா” என்று சிரித்தபடி கடந்தான்.

ராஜன் அகஸ்டியன் சென்றதும், “அண்ண… போன மாசம் அகஸ்டியன் வேலையும் நான் தானே பார்த்தேன். எனக்கு அதே சம்பளம் தந்திருக்கிங்க. அவனுக்கும் அதே சம்பளம்” என்று கேட்டான்.

“என்னடா பண்ணறது வேலைக்கு வரலைனு சம்பளத்தை கட் பண்ண முடியுமா? அவனுக்கே உடம்பு சரியில்லை. வீட்டுக்கு ரொட்டேஷனுக்கு பணம் வேண்டாம். உனக்கு இந்த முறை நீ கேட்காமலே இரண்டாயிரம் ஏத்தி தான் போட்டேன்.” என்று விஷாகன் நீதிதவறாமல் கொடுத்து இருக்கேன் என்று சுட்டி காட்டினான்.

“என்னதுனா… அவனுக்கும் எனக்கும் எட்டாயிரம் சம்பளம். அவனுக்கு லீவு போட்டதால, ஐந்தாயிரம் சம்பளம் கொடுத்திங்க. எனக்கு..” என்று கூறும் முன்னே “டேய்… உனக்கு இந்த முறை பத்தாயிரம் போட்டிருக்கேன். ஏன் திருமணத்துக்கு டிரஸ் எடுத்து கொடுத்திருக்கேன்.” என்று எடுத்துரைத்தான்.

“அவனுக்கு ஐந்தாயிரம் என்றால் எனக்கு இரண்டாயிரம் சேர்த்து போட்டிங்க. அப்படி பார்த்தாலும் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் லாபம்.

இந்த மாசம் அவன் தண்ணி கேன் போடுற இடத்துலயும் நானா தானே தண்ணி கேன் போட்டேன். அந்த ஆயிரமும் எனக்கு தானே கொடுக்கணும்.” என்று சற்று வாய் நீண்டது.

“என்னடா வாய் நீளுது. கணக்கு பார்க்கறியா. எங்கவீட்ல எல்லாருக்கும் துணி மணி எடுத்தப்ப உங்க வீட்லயும் எடுத்து தந்தேன். நம்ம குடும்பம் என்ற அர்த்தத்துல தானேடா” என்றான் விஷாகன்.

“அது நீங்க எனக்கு கொடுத்த லஞ்சம். அபர்ணாவை பத்தி யாரிடமும் மூச்சு விடக்கூடாதுனு நீங்க என் வாயை அடைக்க டிரஸா எடுத்து தந்திங்க” என்றான் ராஜன்.

“என்னடா ஒரு மாதிரி தினுசா பேசற. நான் எந்த அர்த்தத்துலயும் பணமும் உடையும் தரலை வீணா கண்டதை யோசிக்காத” என்று கடிந்தான்.

“எனக்கு இப்ப பணம் தரலை. அபர்ணா பத்தி எல்லாரிடமும் சொல்லிடுவேன்” என்று விஷாகனையே மிரட்டினான்.

ஏற்கனவே விஷாகன் மற்றவரிடம் கூறிய உண்மை அறியாது பேசினான்.

“இது சரியில்லை டா. சின்ன பிள்ளைதனமா இருக்கு. ஏற்கனவே எல்லாரிடமும் அபர்ணா யாரு என்னனு சொல்லிட்டேன். இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் வேற எவனிடமாவது வச்சிக்கோ. என்னிடம் காட்டின.” என்று விரல் நீட்டி எச்சரித்து சென்றான் விஷாகன்.

ராஜனோ ஏமாற்றம் கொண்டவனாய் நின்றான். அதே நேரம் வெளியே வேலையை விட்டு செல்லாமல், ஒரு நேரம் வரும் என காத்திருந்தான். விஷாகனும் சின்ன பையன் என்று கடையிலிருந்து சட்டென அவனை வேலையிலிருந்து நீக்கவில்லை.

விஷாகன் வாட்டர் சப்ளை கடையிலிருந்து கிளம்பி, நேராக தந்தை கவனித்த தொழிலான கொரியர் அலுவலகத்திற்கு வந்தான்.

அங்கே மகேஸ்வரி என்ற பெண் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினாள்.

“அட உட்காரும்மா.” என்று கூறிவிட்டு “வளவன்…” என்று குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன் அண்ணா.” என்று வந்தான்.

வளவனுக்கும் ராஜனை விட ஒரு வயதே பெரியவன். வயது இருபது என்றாலும் அவனிடம் பண்பு இருந்தது.

“எப்படிடா வேலை போகுது” என்று கேட்டான்.

“உதயகுமார் அப்பா இல்லாதது தான் குறை அண்ணா. மத்தபடி எப்பவும் போல கொரியர் அமோகம்.

அண்ணா… அந்தக்கா சொல்லி தந்ததும் கரெக்டா கத்துக்கிட்டாங்க. கொரியருக்கு வர்ற பொருளை எப்படி வெயிட் போட்டு எந்தவூருக்கு எவ்ளோனு சொல்லி, ரசீது பூர்த்தி செய்து சரியா பண்ணறாங்க. போதாதுக்கு பென்டிரைவ்ல யாராவது பிரிண்ட் அவுட் ஜெராக்ஸ் கேட்டாலும் சரியா பார்த்து செய்யறாங்க. கம்பியூட்டர் அறிவும் இருக்குண்ணா.” என்று மகேஸ்வரியை புகழ்ந்தான்.

மகேஸ்வரி இந்த ஆறு நாளாக தான் வேலைக்கு வருகின்றார். இதற்கு முன் மகேஸ்வரி மெஸ் என்று நடத்தியவள். அமோகமாய் தான் வியாபாரம் நடந்தது. உதயகுமாரின் இறப்புக்கு கூட இந்த பெண்ணிடம் தான் உணவை கொடுத்து விட ஆர்டர் தந்தான் ராஜன்.
ருசியும் அபாரமாக இருந்தது. ஆனால் வாடிக்கையாளரில் ஒருவன் மகேஸ்வரியை கையை பிடித்து இழுத்து விட, பயத்தில் அந்த மெஸ்ஸை மூடிவிட்டாள்.

உதயகுமார் இறப்பு நடந்து நான்காம் நாள் அபர்ணாவை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்ய சுகன்யா அன்று பார்த்து உணவு தயாரிக்க நேரமாகவும், “வெளியே வாங்கி தந்துடறேன். நாளையிலருந்து நீங்க சமைச்சி தாங்க, ஷாலி டிபன் கட்டி இவளை டிரஸ் மாத்தி கிளப்பி விடுவா.” என்று மொழிந்தான்.
அபர்ணாவுக்கு டிபன் பாக்ஸில் உணவு வாங்க கடை தேடும் போது தான் மகேஸ்வரி மெஸ் கண்ணில் தென்பட்டது.

சுவையான காய்கறி கலவை சாதம் செய்து மணம் வீச, பேக்கெட் போடவும் விஷாகன் தயக்கமாய் சென்று வாங்கினான்.

ஆனால் அடுத்த நாளே கடை மூடியிருந்தது. ராஜனிடம் கேட்க அங்க ஒருத்தன் அந்தக்காவை ஒரு மார்க்கமா பாத்திருக்கான்.

இந்தக்கா சண்டை போடவும், அவன் பதிலுக்கு கையை பிடிக்கிறேன்னு சேலையை லேசாய் பிடித்து இழுத்திருக்கான். அந்தக்கா கடையை மூடிடுச்சு.’ என்று தகவல் தந்தான்.

அதற்கு மறுநாளே சண்முகம் அண்ணாச்சி மூலமாக மகேஸ்வரி வேலை கேட்டு விஷாகன் முன் வந்தாள்.

விஷாகனுக்கு சண்முகம் அண்ணாச்சி மூலமாக மகேஸ்வரி வந்தாலும் ஏற்கனவே ராஜன் கூறி அறிந்ததால், கண்ணை மூடி வேலை கொடுத்துவிட்டான்.

அவனாலும் கொரியர் அலுவலகத்தில் பொறுப்பான ஒருவர் வேண்டும் என்று மனசுக்குப்பட்டது.

ஒரு பெண் அதுவும் பொறுப்பாய் வழிநடத்துவாளென வேலைக்கு வைத்தான்.
வளவன் ராஜனை போல எதுவும் வாய் பேசவில்லை. விஷாகனின் முடிவில் ஆதரவு தந்திருந்தான்.

உதயகுமாரின் இறப்பு முடிந்து முப்பதாம் நாளும் வந்தது. அவரின் நினைவாக படையலிட்டு வழிப்பட்டு, கும்பிட்டார்கள். கோழி கறி குழம்பு வைத்திருக்க காகத்திற்கு சாப்பாடு வைத்தபின், ஊரிலிருந்து வந்தவர்களை முதலில் சாப்பிட கூறினான்.

ஊரிலிருந்து அனைவரும் வந்து சேர்ந்தார்கள். அன்னம் சங்கரனும் மாப்பிள்ளைக்கு மீண்டும் மரியாதை பலமாக தான் தந்தார்கள்.
செல்வகுமாரோ-தாமரை இருவரும் ஒதுக்கம் காட்டி நின்று கொண்டார்கள்.
மாடியில் சாமினார் பந்தல் போட்டிருந்ததால், மேல பந்தி நடந்து கொண்டிருந்தது.

ராஜன், அகஸ்டியன், வளவன் என்று அவர்கள் குடும்பத்தையும் அழைத்து வந்திருக்க, வளவன் சட்டென எழுந்து, “வாங்கக்கா” என்று மகேஸ்வரியை வரவேற்றான்.

ராஜனோ ‘இவங்க அந்த மெஸ் பொம்பளை ஆச்சே’ என்று நோட்டமிட்டான்.

அதன் பிறகே கொரியர் அலுவலகத்தில் வேலைக்கு நியமித்ததை வளவன் மூலம் அறிந்தான்.

விஷாகன் மற்றவர்களை வரவேற்று சாப்பிட வைத்து விருஷாலியோடு சாப்பிட நடந்தவன், அட எப்ப வந்தம்மா. சாரி கவனிக்கலை. வளவா” என்று அழைக்க, “நான் அப்பவே வளவனை சந்திச்சிட்டேன். நீங்க போங்க” என்று மரியாதை தந்தாள்.

“ஷாலி… இவங்க கொரியர் ஆபிஸ்ல புதுசா வேலைக்கு வச்சிருக்கேன். அப்பா இல்லையா.. நானும் என் வியாபாரத்தை விட்டுட்டு போக முடியாது. அதான்… மகேஸ்வரி இவ என் மனைவி விருஷாலி” என்று மனைவியை அறிமுகப்படுத்தினான்.

இருவரும் சிநேகிதமாய் ஒரு புன்னகை உதிர்த்தார்கள்.
விருஷாலியோ “நீங்க சாப்பிட்டிங்களா.. இல்லைனா வாங்க. நாங்களும் சாப்பிட போறோம்.” என்று கூப்பிட்டாள்.

தனக்கு இங்கு வளவனை தவிர யாரையும் தெரியாது என்பதால் விருஷாலி கூப்பிடவும், கூடவே வந்தாள்.

வளவன் அமர, அடுத்து மகேஸ்வரி அமர்ந்திடவும் விருஷாலி அமருவாளென பார்க்க, அபர்ணாவோ சுகன்யாவோடு அமர்ந்தவள் மிளகாய் கடித்திட, “ஸ்ஆ.. தண்ணி.. தண்ணி..” என்று அணத்தவும், சுகன்யா தனது டம்ளரிலும் தண்ணி இல்லாது போகவும், “விருஷாலி தண்ணி கொண்டா” என்று அழைக்கவும் அவள் ஜக்கிலிருந்து நீரை எடுத்து ஊற்றவும், விஷாகன் மகேஸ்வரி அருகே அமர அடுத்து விருஷாலி அமர நேர்ந்தது.

மற்றவர் கண்ணுக்கு ‘யாரிது புது பெண்’ என்று மட்டும் கேட்க, ‘கடைப்பொண்ணு’ என்றவரை பதிவானது. ராஜனுக்கோ கோக்குமாக்கான எண்ணங்கள் உதிக்க சிரித்தான்.

இவனுக்கு அபர்ணாவை வைத்து அதிகமாக சம்பளம் கேட்டு மிரட்ட, விஷாகன் அதற்கு கட்டுப்பட்டு பணத்தை தருவதாகவும், அதனால் தனது வசதி வாய்ப்பை பெருக பல கனவை கண்டிருக்க, ‘நான் எதுக்கு டா பொய்யோட வாழணும். அதெல்லாம் உண்மையை சொல்லிட்டேன். மடத்தனமா பேசியதை மறந்துட்டு வேலையை பாரு’ என்று விஷாகன் தலையில் அடிக்க, அகஸ்டியன் கேலியாக சிரித்தது வயிறு காந்தியது.

விருஷாலி விஷாகன் அன்னியோன்யம் கண்டு வியந்தவனாக, அதனை உடைக்கவே பேராவல் கொண்டான்.

இவன் ஒருபக்கம் துரோகமும், குழி தோண்டவும் தயாரானான்.

மறுபக்கம் சொந்தமென்றும் வீட்டுக்கு பெரியவர் என்றும் மதிப்பாய் நடக்க வேண்டிய செல்வகுமாரோ “எங்கண்ணாவுக்கு கொரியர் ஆபிஸ்ல தான் அந்த சங்கீதா பழக்கம். பார்த்து உங்க வீட்டு மாப்பிள்ளையும் கொரியர் கடையில அழகான பொண்ணை வேலைக்கு வச்சியிருக்கார்.” என்று அன்னத்திடம் உரைத்துவிட்டு நகர்ந்தார்.

அன்னமோ மகள் மாப்பிள்ளை அந்த பெண் மகேஸ்வரி அமர்ந்து உணவை சாப்பிடவும் இதை முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று மகளிடம் பேச எண்ணினார்.

தாமரையோ, “என்னங்க இது வந்த இடத்துல விஷாகனே இரண்டு மூன்று பிசினஸ் பார்க்க திணறி தானே வேலைக்கு ஆள் வச்சி பார்க்கறான். இப்படி ஏத்திவிட்டா தப்பா நினைக்க போறாங்க.” என்றார்.

“அடப்போடி… என் மகன் காதலிச்சு திருமணம் செய்தான்னு சொந்தக்காரங்க என்னென்ன பேசினாங்க. அவங்க பேசியதை விட, உதயகுமாரை பாரு.. இரண்டு பிள்ளை வளர்த்தும் ஒழுக்கமா வளர்த்திருக்கான்னு குறைச்சொன்னவங்க தான் அதிகம்.

இப்ப எங்கண்ணா இல்லை. இருந்தா சொந்தக்காரங்க அவன் மூஞ்சில காறி உமிழுவாங்க. இப்ப செத்துட்டதாலையும், அந்த பொண்ணு அபர்ணாவை கூடவே வளர்க்கவும் விஷாகனை உயர்த்தி பேசறாங்க. பேசட்டும்… ஏதாவது ‘இக்கு’ வச்சிட்டு போனா தான் அன்னம் அவ மகளிடம் சாம்பிராணி அடிப்பா. அப்ப தான் என் மனசு நிறையும்.” என்று சொந்த அண்ணன் மகன் மீது அவதூறை பரப்பவும் மகிழ்ச்சியை அழிக்கவும் பிள்ளையார்சுழி போட்டு சென்றார்.

விருஷாலி விஷாகன் இருவரும் இந்த குறுகிய காலக்கட்டத்தில் ஆத்மார்த்த தம்பதியாக ஆகிடயியலுமா என்று விதியும் ஆட்டத்தை துவக்கிவிட்டு வேடிக்கையை காண காத்திருந்தது.

-தொடரும்.
Praveena Thangaraj 






18 thoughts on “நீயின்றி வாழ்வேது-30”

    1. Semma…👌👌👌
      ஒருத்தன் அவன் குடும்பத்தோட நல்லா இருந்தா பிடிக்காதே….
      அதை கெடுக்கவே ஒரு கூட்டம் இருக்கும்.
      அதுவும் சொந்தங்களை சொல்லவே வேண்டாம்….🙅‍♀️🤷‍♀️

  1. Super sis nice epi 👍 👌😍 endha sondhangal en dhan eppdi eruko😏 mathavanga nalla vazdha porukadhe😤 enna prechanai varapogudho🙄😢

  2. Super super super super super super super super super ulagathula nadakuratha aptite solringa sister oruthan pondatti kudumbam nu thaan undu than velai undu nu iruntha atha kedukka sathiyoda sermthy vithium varum pola😔😔😔😔epti itha kadanthu vara porangalo visagan shali🤔🤔🤔

  3. ena tha nallathu pannalum oru kudumbam ninachalum kudave irunthu oruthar luli parika aarambichiduranga ivan tha etho pana poran pola ithula chithappave paiyana eppadi pesitu poraru par

  4. Orinthan nimmathiya iruntha santhosapadaratha vida vairu eriurutha athigam😏Spr going waiting for nxt epi👌👌

  5. நீயின்றி வாழ்வேது…!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 29)

    அட.. இது வேறய்யா…? வீடு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஆகிடுமாம். அது மாதிரி, விஷாகன் வீட்டு பிரச்சினையை வைச்சு இந்த ராஜன் கேப்ல கையை நுழைக்கப் பார்க்குறான் பார்த்திங்களா…? இதுக்குத்தான்
    வீட்டு கதை முச்சந்திக்கு வந்தா நாறடிச்சிடுவாங்க ஆளாளுக்கு.
    எதை வைச்சு வியாபாரமாக்கப்
    பார்க்குறான் பாருங்க. அன்னைக்கே அவன் தலையில தட்டி வைச்சிருக்கணும். போனாப்போகட்டும்ன்னு விட்டதுனால விஷாகன் கழுத்துக்கே கத்தியை கொண்டு வரான். இதுல விஷாலி தெளிவா இருந்தாத்தான்
    யாராலேயும் உள்ளே மூக்கை நுழைக்க முடியாது. ம்… நம்பிக்கையை காப்பாத்துவாளா…? இல்லை கை விட்டுடுவாளா?ன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
    😪😪😪
    CRVS (or) CRVS 2797

  6. Ithuku per tha unda veetuku thurogam pantrathunu solluvaga rajan nee ivlo worst ah think pannuvagnu expect panala aaga motham visaganoda motha kovatha pakka poranga selva kumar um rajan um…..

  7. அச்சோ எப்படி சகி நன்றாக தானே சென்று கொண்டு இருந்தது story அதை களைக்க சில கள்மிஷ விஷமிகள்

  8. அடபாவிகளா இப்படியா‌… அச்சோ விருஷாலி & விஷாகன்‌ இருண்டு பேரையும் பிரிக்காதிங்க

  9. கடவுளே இந்த ராஜன் மனசுல இவ்வளவு வன்மத்தை வச்சிக்கிட்டு உறவாடுறானே, இது எங்க போய் முடிய போகுதோ தெரியல.

  10. என்னங்க இது.நல்லாத்தான போய்க்கொண்டு இருந்தது.எதுக்குங்க நடுவில் இப்படி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!