Skip to content
Home » நீயென் காதலாயிரு-14

நீயென் காதலாயிரு-14

அத்தியாயம்-14

     ப்ரியதர்ஷினி வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் ஆக, அவளுக்கு ஒரளவு வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்தது எனலாம்.

    புது நட்பு மதுவதி, தன் பணியை செம்மைப்படுத்த வெல்விஷராக மோகன் சார் தனக்கு மேலிருக்கும் அதிகாரி என்று பலரிடம் நல்ல பெயரை பெற்றிருந்தாள்.

    அன்வர் பாயுக்கு காலையும் மாலையும் காலை வணக்கம் மாலை வணக்கம் என்று நபிகள் நாயகத்தின் வாசகமாக தேடி கண்டு பிடித்து அனுப்புவாள்.
  
   மருமகள் தன்னோடு தான் வேலை செய்வது கட்டிய மனைவியிடமும், மகனிடமும் கூட கூறாமல், இருந்தார் மோகன்.
 
    சித்ரா டிபன் பாக்ஸில் உணவை அடைத்து “ஏன்டா உங்கப்பா அவ்ளோ சொல்லியும் அந்த டிபன் பாக்ஸை வாங்கலையா? உன் மேல இருக்கற கோபத்துல அந்த பிள்ளை டிபன் பாக்ஸை தலையை சுத்தி தூரப் போடப்போகுதுடா” என்று டிபன் கட்டி முடித்தார்.

   இந்தரோ “அவ பத்திரமா வச்சியிருப்பா அம்மா. உங்களுக்கு தெரியாது அவ என்னை லவ் பண்ணறா” என்று சட்டை பட்டனை போட்டு வந்தான்.

மோகன் மனைவி மகன் இருவரின் பேச்சை கேட்டு இந்தரிடம், “என்னடா மருமகளை பார்த்தியா?” என்று அவரது பையை எடுத்தார்.

   “அதெல்லாம் நாள் தவறாம தரிசனம் கிடைக்கும் அப்பா. என்ன பார்க்காத மாதிரி போவா. பிடிக்காத மாதிரி சீன் போடுவா. எனக்கு தான் சந்தோஷ் ப்ரியா ப்ரியானு பேசி பேசி யார்டா அவனு ஆவலை தூண்டி என் மனசுல பதிந்தா. மத்தபடி அவளுக்கு நான் லவ் அட் பஸ்ட் சைட்டா இருக்கணும். இல்லைனா திருட்டு பார்வையோட பார்க்க மாட்டா.
  பச் திருட்டு பார்வைனு சொல்லவும் பயமாயிருக்கு.” என்றவனின் தலைகேசத்தை களைத்து விட்டார் மோகன்.
  
  “சந்தோஷமா ஆரம்பிச்ச ஏன்டா சோகம். இதே பீலிங்கை அவளிடம் கொட்டு. நீ போற ரூட் கரெக்டா இருக்கு” என்று தந்தை காதலுக்கு ஆதரவு தந்து பேசவும் சித்ராவோ “போதும் அப்பாவும் மகனும் பேசற லட்சணம். அவன் காதலிக்கறான். நீங்க ஐடியா கொடுங்க.” என்றவர் மைந்தனிடம், “டேய் இதுல கோதுமை மைதா கலந்த பூரி. சூடாறிடும்னு ஹாட்பாக்ஸில தந்திருக்கேன். குட்டி ஹாட்பாக்ஸ் டா. திருப்பி தரணும்னு சொல்லிடு. எனக்கு இந்த குட்டி குட்டி பாத்திரம் பண்டம் தொலைய கூடாது. அவ்ளோ தான்” என்றதும் மோகனோ என்னை சொல்லிட்டு உன் அம்மா பண்ணற வேலையை பார்த்தியா?’ என்ற பார்வை பார்த்து கிளம்பினார்.

   “சோ ஸ்வீட் மம்மி” என்று கன்னம் பற்றி முத்தம் வைத்து இந்தரும் சென்றான்.

   அப்பாவும் மகனும் ஆளுக்கொரு பைக் என்றதால் கிளம்பினார்கள்.

   இந்தரோ விசிலடித்தபடி வுமன் ஹாஸ்டல் இருக்கும் இடத்திற்கு அடுத்த சந்தில் ஸ்டாண்ட் போட்டு அதில் ஏறி அமர்ந்திருந்தான்.

   ப்ரியாவோ தூரத்திலேயை இந்தரை கண்டு மெதுவாக நடந்தாள்.
   அவள் வரவும் குறுக்கே வந்து, “என் சில்வர் டிபன் பாக்ஸ் எங்க?” என்றான்.

   “பச் மறந்துட்டேன்” என்று பொய்யாக சலித்தாள்.

    “இந்த போங்கு ஆட்டம் செல்லாது.  வுமன்ஹாஸ்டலுக்கு போய் எடுத்துட்டு வா” என்று வுமன்ஹாஸ்டல் பக்கம் கையை காட்டினான்.

   “நான் நாளைக்கு தர்றேன்” என்று நடக்க, “எனக்கு இப்ப வேண்டும்” என்று பிடிவாதமாய் நின்றான்.
   
   “ப்ளீஸ் ஆபிஸுக்கு டைம் ஆகுது. இம்சை கூட்டாத” என்று நகர, “ஏய் எங்களுக்கு ஆபிஸ் இல்லையா? நான் ஐடீல வேலை பார்க்கறேன். உன்னைவிட எனக்கு தான் டைம் ஆகும். நானே பரவாயில்லைனு நிற்கறேன். டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வா” என்று அழிச்சாட்டியம் செய்தான்.
   கூடவே ”லவ்வும் பண்ண மாட்டாளாம். என் டிபன் பாக்ஸும் தரமாட்டாளாம். எதுக்கு என்னை அலைய விடணும். கொடுத்துட்டா வரமாட்டேன்ல” என்று கடுகடுத்தான்.
  
   ஏனோ இந்தர் அப்படி பேசவும், ப்ரியாவுக்கு முனுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது. 

  “டிபன் பாக்ஸ் கொடுத்துட்டா பின்னாடி வரமாட்ட தானே?” என்று கேட்டாள்.

   “வரமாட்டேன்” என்றான் கறாராக.

   கண்ணீரை துடைத்தபடி தன் ஹாண்ட்பேக்கை திறந்து, இந்தரின் டிபன் பாக்ஸை எடுத்தாள்.

    இதுல தக்காளி சாதம் இருக்கு. கீழ கொட்டிட்டு எடுத்துக்கோ” என்றாள். அதை உதிர்க்கும் முன் கண்ணீர் மடமடவென கன்னத்தை தாண்டி வடிந்தது.

   “நான் கீழ கொட்டணுமா? புட் வேஸ்ட் பண்ண மாட்டேன். நீயா காலி பண்ணு” என்று அவளை தீவிரமாக அழவைக்கும் முடிவில் இருந்தான்.

   ப்ரியதர்ஷினியோ “அங்கும் இங்கும் பார்த்தாள். ஒரு பலச்சரக்குகடை மட்டும் தென்பட, கண்ணீரை துடைத்தபடி, “அண்ணா ஒரு பாலிதீன் கவர் இருக்கா? கொடுங்களேன்” என்று கேட்க அவரும் கொடுத்தார்.

   இந்தர் பைக்கில் டிபன் பாக்ஸை வைத்து பாலிதீன் கவரை பிரித்து சாதம் கொட்ட போகவும், தடுத்தான்.

   “ஒரு நிமிஷம் உன் கண்ணுல ஏன் இந்த தண்ணீர் கொட்டுதுனும், உன் கன்னம் தாண்டி ஏன் வழியுதுனும் யோசி. நீ என் மேல வச்சிருக்கற உறவு புரிஞ்சிடும்.
  
   ஒரு டிபன் பாக்ஸும் தரவேண்டாம். அதை வச்சிக்கோ. அதோட கூடுதலா இதையும் அம்மா கொடுத்து விட்டாங்க. பூரி சூடா சாப்பிடணும்னு மினி ஹாட் பாக்ஸில தந்திருக்காங்க.” என்று நீட்டினான்.

   ப்ரியதர்ஷினியோ உறைந்தவளாக நின்றவள் வாங்க மறுத்தாள்.

   “பச் டிபன் பாக்ஸ் வாங்கிட்டா பார்க்க வரமாட்டேன்னு நினைச்சியா? திரும்ப திரும்ப வருவேன். ‘லவ் யூ இந்தர்’னு நீயா சொல்லற வரை வருவேன்.” என்று பேசியபடி கன்னம் பிடித்து கட்டைவிரலால் ஈரத்தை துடைத்தான்.

   ஆள்காட்டி விரலால் “காதல் வந்தே தீரணும், பதில் சொல்லாம தப்பிக்க முடியாது” என்றான்.

  “வேண்டாம் இரண்டு டிபன் பாக்ஸும் எடுத்துட்டு போங்க” என்று கூற, “உன்னை வேண்டும்னா தூக்கிட்டு போறேன். டிபன் பாக்ஸை நமக்கு கல்யாணம் முடிஞ்சதும் கையோட கொண்டு வருவியாம்.” என்று கண்சிமிட்டு சென்றான்.
 
   ரோட்டில் தனியாக நின்று அவன் சென்ற திசையை வெறித்தாள்.
நீண்ட நெடு மூச்சு இழுத்துவிட்டு, “எஸ் ஐ லவ் இந்தர்’ இந்தர் எந்த பிரச்சனை வந்தாலும் நீ வேண்டுமின்னு என்னை சொல்ல வச்சிட்டா நான் என்னை பழிபோட்டு துரத்தினவங்களையும் எதிர்க்க ஆரம்பிக்கணும்.

   உன் காதலை நான் எனக்குள் உணர உணர மத்தவங்களை எதிர்க்க ஆரம்பிச்சிடுவேனா? என் மேல பழிப்போட்டப்ப கூட விலகி வந்த நான் உனக்காக எந்த பழி வந்தாலும் ஓகேனு திருச்சிக்கு ரிடட்டர்ன் போவேனா? என்ற வினாவோடு பஸ்ஸில் பயணத்தை தொடர்ந்தாள்.

   அதில் தவறில்லை இந்தருக்காக எதுவும் ஒரு கை பார்க்கலாம். உனக்காக உன் மீது பழி விழுந்த கணமும் கூடவே நின்றவன். வாழ்நாளில் கூடவே நிற்பான். அப்படியிருக்க காதலித்தால் என்ன? மிஞ்சி மிஞ்சி சந்தோஷ் தோழனை வளைத்து பிடித்துவிட்டாளென்ற பெயர் கிடைக்கும் அவ்வளவு தானே?! என்று மனம் நினைக்க வறட்டு முறுவலே மிஞ்சியது.

  அலுவலகம் வந்தப்போது மோகன் வரவேற்றார்.
  கையில் மகன் கொண்டு சென்ற ஹாட்பாக்ஸ் இருக்க, ப்ரியாவை கண்டு இன்று ‘யாரையாவது விரும்பறியாம்மா?’ என கேட்டு விடவேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தார்.

     ப்ரியாவோ அதெல்லாம் கேட்கவே தேவையில்லை என் மனதில் இந்தர் இருக்கின்றான் என்று ஹாட் பாக்ஸ் திறந்து கண்ணீர் மல்க பூரியை சுவைத்தாள்.
  
   ஒவ்வொரு விள்ளலை விழுங்கும் போதும் ஆனந்த கண்ணீர் திரள, துடைத்தபடி சுவைத்நிருந்தாள்.

   மோகன் வந்து பேசவும், அதே நேரம் மற்ற ஆட்கள் வரிசையாக வரவும் மேலயிருக்கின்ற பூரி காலியானதால் மூடிவைத்து எழுந்தாள்.

    கீழே ஒரு பாக்ஸ் இருக்கும் மருமக பார்க்கலை போலயே’ என்று மோகன்  கூற யோசித்தார். அதற்குள் சரி பிரேக் டைம் பேசுவோம் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

—-
  
   மறுபக்கம் விலாசினி சந்தோஷ் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தனர். சந்தோஷ் எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டும் மனம் மாறாது மன்னிக்காது இருந்த விலாசினி தற்போது அவனிடம் பேச வந்தாள்.

  “கோபம் போச்சா?” என்று பைனாப்பிள் ஜூஸ் ஆர்டர் தந்துவிட்டு அமர்ந்தான்.

    விலாசினியோ “என் மேல உங்களுக்கு எப்படி சந்தேகம் போச்சுனு தெரியலை. மேபீ ப்ரியா சொன்னதா இருக்கலாம்.
  எனக்கு எங்கம்மா மேல டவுட் இருந்துச்சு. ஏன்னா சில போட்டோவுல ப்ரியாவை முறைச்சிட்டு இருந்தாங்க. அதனால அவங்களிடம் சண்டைப்போட்டு நீ நகையை எடுத்து ப்ரியா சூட்கேஸ்ல வச்சியாம்மானு கேட்டேன்.” என்றதும் சந்தோஷ் விலாசினியை தான் கண் இமைக்காமல் கதை கேட்டான்.

  “பட் அவங்க சொன்னதே சொல்லறாங்க. ‘அந்த பையன் இந்தர் ப்ரியாவை விழுங்கற மாதிரி பார்த்தான். அவளும் அதை கண்டுக்காம இருக்கற மாதிரி தோணுச்சு. அதனால ப்ரியாவை முறைச்சேன் டி. சாமி சத்தியமா நான் பழிப்போடலை. அப்பனை சின்ன வயசுல பறிக்கொடுத்த பொண்ணு அவளுக்கு நல்லது நடந்தா நானும் சந்தோஷப்படுவேன்டி.

   எனக்கு சந்தோஷுக்கு உன்னை  கட்டிக்கொடுக்க ஆசையிருக்கு. கல்யாணத்துக்கு பிறகும் இங்கனயிருக்கற இடத்துல பொண்ணு இருக்கானு நிம்மதி. ஆனா பழிபோட்டு தான் உன்னை சந்தோஷுக்கு கட்டிக்கொடுக்க நான் நினைக்கலை.’னு சொன்னாங்க.

   அதோட எங்கப்பா துரைமாமாவிடம் பொண்ணுக்கு வயசு ஏறுது. படிப்பும் முடியப்போகுது வரன் பார்க்கலாம்னு இருக்கேன். சொந்தத்துல சந்தோஷ் இருக்கராப்ல. எதுக்கும் கேட்கறேன் ஆசையிருந்தா சொல்லுங்கன்னு கேட்க துரைமாமா பானுமதி அத்தையிடம் பேசிட்டு சொல்லறதா சொல்லிருக்காங்க.

   மேபீ உங்களுக்கு என் மேல, என் வீட்டு ஆட்கள் மேல, சந்தேகம் இருந்தா சொல்லிடுங்க. கட்டிக்க வேண்டாம்.” என்று எதிரே தண்ணீர் வைத்த குவளையை பார்த்து பேசி முடித்தாள்.

  “எனக்கு உன் மேல சந்தேகம் இல்லை. எனக்கு உன்னை கட்டிக்க தான் ஆசையாயிருக்கு. விட்டா இப்பவே கட்டிப்பேன் அந்தளவு ஆசையிருக்கு. ஏதோ வார்த்தை விட்டுட்டேன் மன்னிச்சிடு. அத்தை இவ்ளோ பேசியிருக்காங்க அவங்களை தப்பா நினைக்காத. நானும் தப்பா நினைக்கலை.” என்று விலாசினி கையை பிடித்தான். அவளோ உருவிக்கொண்டு முகம் திருப்பினாள்.
 
  “அப்பா என்னிடம் வந்தார். ப்ரியாவை மனசுல வச்சிட்டு சுத்தியது போதும். விலாசினியை கட்டிக்கோ மாமாவா வந்து உன்னை விலாசினிக்கு கேட்கறார்னு சொன்னாங்க.

  நான் ப்ரியாவை விரும்பலை. எங்களுக்குள் இருக்கறது பிரெண்ட்ஷிப் அது விலாசினிக்கு தெரியும். விலாசினியை கட்டிக்கறதுல எனக்கு எந்த தடையும் இல்லைனு சொல்லிட்டேன்.

  என்ன நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கால்கட்டை விரலால் அவள் கட்டைவிரலை அழுத்தினான்.

   நொடியில் அவன் பேசியதை கேட்டு சாந்தமான இதயம் அவன் செய்கையில் விதிர்த்து அவனை ஏறிட்டாள்.

   சில்மிஷமான புன்னகையோடு சந்தோஷ் மயக்கும் புன்னகை செலுத்த, மெதுமெதுவாக விலாசினி முகமும் மெல்ல மெல்ல தாமரையாக மலர்ந்தது.

-தொடரும்.
-Praveena Thangaraj
  

2 thoughts on “நீயென் காதலாயிரு-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *