அத்தியாயம்-18
ப்ரியதர்ஷினியின் கையை பிடித்து, இந்தர் அமர வைக்க, அவன் கையை உதறிவிட்டு சித்ரா இருக்கும் பக்கம் ஓடினாள்.
“ப்ரியா கண்ணுக்கு எங்க வீடு, வீட்லயிருக்கறவங்களை பிடிச்சிருக்கா?” என்று சித்ரா கேட்டதும், “ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை. மாமா மாஸ்டர் பீஸ்.” என்றவள் ஹாலில் இந்தரும் மோகனும் எதற்கோ வாதம் செய்வதை கண்டு சிரித்தாள்.
சித்ராவும் ப்ரியதர்ஷினியும் கிச்சனில் பூரியும் உருளைக்கிழங்கும் செய்து கொண்டே பேசினார்கள். ப்ரியா நீண்ட நாட்களுக்கு பின் இயல்பாய் பேசினாள்.
முன்பு அத்தை பானுமதி, அம்மா கவிதா, யமுனா அக்கா, சந்தோஷ் விலாசினி, சந்தியா என்று யாரிடமாவது பேசிக்கொண்டே இருந்தவளுக்கு இங்கே வேலை முடித்து ஹாஸ்டலில் இயந்திரமாய் உம்மென்று இருப்பாள். என்ன தான் க்விலிங் இயரிங் கிராப்ட் செய்தாலும், ஆடின காலும் பேசிய வாயும் சும்மாயிருக்குமா?
அந்த அமைதியை இன்று உடைத்து வருங்கால அத்தையிடம் அளாவினாள்.
இரவு உணவை இங்கே முடித்து செல்ல சித்ரா கட்டளைமாக கூறியதும், சூடான பூரி உருளைகிழங்கு மசாலா என கொண்டு வந்து நால்வரும் ஒன்றாக இணைந்து சாப்பிட்டார்கள்.
இந்தர் அடிக்கடி அவளுக்கு பரிமாறவும் அவள் தோளை தீண்டவும் இடையை பிடிப்பதும் அவன் ராஜ்ஜியமாக நடத்தினான்.
ப்ரியதர்ஷினி நெளிந்தபடி, “இந்தர் ப்ளிஸ்” என்று அவன் கையை விலகியும் மெதுவாக தள்ளி நிறுத்தினாள். ஒருமுறையென்றால் பரவாயில்லை அவனோ அடிக்கடி செய்ய, அப்பொழுதே அவர்களுக்கு பிரச்சனை உருவானது. கையை தட்டி விட்டு கோபமுகத்தை காட்டினாள்.
நேரம் கழியவும் வுமன்ஸ் ஹாஸ்டல் செல்ல புறப்பட்டாள்.
“ஹேய் இரு நான் கொண்டு போய் விடறேன்.” என்று சாவியை தூக்கி வந்தான்.
“இந்தர் நானே கிளம்பிப்பேன்” என்று மறுத்தாள். பெற்றோர் எதிரில் ரொம்ப நெருங்க விட வேண்டாமென்ற எண்ணம்.
ஆனால் வளர்ந்தவனுக்கு அது புரிந்தும் மண்டையில் ஏற்றிக்காமல், “இதப்பார் ஈவினிங் எங்கப்பா கூட பைக்கில வந்த. அதனால இப்ப என் கூட கண்டிப்பா வர்ற.” என்று கூறி “அம்மா என் கூட வரச் சொல்லுங்கம்மா” என்று புகார் அளித்து அன்னையை வேறு தனக்கு சாதகமாக பேச வைத்தான்.
சித்ராவோ “நீ அவர் கூட வந்ததுல இவன் ஹர்ட் ஆகியிருப்பான். எப்படியாவது அவன் வண்டில நீ ரிட்டர்ன் போனா தான் அவனுக்கு நைட்டு நிம்மதியா தூக்கமே வரும். இல்லை உங்க மாமா சீண்டிட்டே இருப்பார். அவன் முகத்தை தூக்கி வச்சிப்பான்” என்று மைந்தனின் வண்டியில் ஏற்றிவிட்டார்.
மோகனும் மருமகளை வழியனுப்பி வைத்து சித்ராவிடம், “ரொம்ப நல்ல பொண்ணு. இந்தர் போல எனக்குமே ப்ரியா பழியை சுமந்துட்டு இருக்கறதுல விருப்பமில்லை. அதே சமயம் சந்தியா பத்தி சந்தோஷிடம் போட்டுதரவும் முடியலை.
கல்யாணத்தை மட்டும் சீக்கிரம் வைக்கணும்மா. பையனோட வேகத்தை பார்த்தியா? காத்திருக்க வச்சா அந்த பிள்ளையை டார்ச்சர் பண்ணிடுவான்” என்று மோகன் உள்ளே செல்ல, “இவன் இப்பவே முத்தமிடறதும் தொட்டு பேசறதும்னு உரிமையா சேட்டை செய்யறான். பாவம் அந்த பொண்ணு ப்ரியா. நான் பார்க்காத நேரம் அவன் கையை எடுத்து விட்டு முறைச்சிட்டு தள்ளி தள்ளி நிற்கறா. அவன் வேண்டுமின்னா இடிச்சிட்டு நிற்கறான். ஆப்டர் மேரீட் என்ன அழுச்சாட்டியம் பண்ணுவானோ” என்று வீட்டிற்குள் செல்ல, வெளியே தன் பைக்கை வைத்து பறந்த இந்தரோ, தர்ஷினியின் வலது கையை எடுத்து அவனை அணைக்க வைத்தான்.
“கையை கால வச்சிட்டு சும்மாயிருக்கிங்களா. இப்படியா பேரண்ட்ஸ் முன்ன கிஸ் பண்ணுவாங்க. அத்தை மாமா என்னை என்ன நினைச்சிருப்பாங்க?
பையன் இழுத்த இழுப்புக்கு வர்றாளேனு சீப்பா என்னை நினைக்க மாட்டாங்க?” என்றதும் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.
“இதப்பார் எங்கப்பா அம்மா இரண்டு பேருமே உன்னை தப்பா நினைக்கமாட்டாங்க. மேபீ வீட்டுக்கு போனா என்னை தான் திட்டுவாங்க.
நான் சமாளிச்சிப்பேன். கொஞ்சம் யோசிப்பாரு காலையில கண்ணீரோட போன. அப்பவே சமாதானம் செய்ய முயன்றேன். உனக்கு ஆபிஸ் இருக்கும்னு போக விட்டேன்.
ஈவினிங் அப்பா கூட வந்த. ஆல்ரெடி நீ என்னை விருப்பற என்று எனக்கு கன்பார்மா தெரியும்.
என்கிட்ட வந்து கல்யாணம் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்.
உனக்கு புரியாறாப்ள செய்தேன். நீ உள்ள வர்றப்பவே காபி பக், பஸ்ட் நைட் இன்சிடெண்ட் நினைச்சியா இல்லையா?
முதல் தடவை கிஸ் பண்ணினப்ப அடிச்சே தள்ளிவிட்ட, அப்பா அம்மா வந்ததும் பேசியதும் அழுத. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியலை. சில நேரம் வலியும் மருந்தும் ஒன்னா தான் இருக்கும். அதான் நான் வேண்டாம்னு சொன்னா அதே இதழுக்கு முத்தமிட்டு நான் இல்லைனா நீ இல்லைனு புரிய வச்சி ஆறுதல்படுத்தினது.
இரண்டாவதா கிஸ் பண்ணினப்ப அம்மா அப்பாவே அமைதியா கிளம்பிட்டாங்க. பிகாஸ் இது காதலர்களோடட முடிவுன்னு அவங்க க்ளியர் ஆகிட்டாங்க.
நாமளும் வெளியே வந்தப்ப நீ கல்யாணத்துக்கு ஓகே என்ற எண்ணத்துல வந்துட்ட. உங்கம்மா என்ன சொல்வாங்கன்னு பயம் மட்டும் இருக்கு. அது கூட என்னோட பேரண்ட்ஸ் பார்த்துப்பாங்க.
வீட்டு பத்திரம் வச்சி எங்க பணம் வாங்கின.? முதல்ல அதை அடைச்சிடணும். அதர்வைஸ் நம்ம கல்யாணம் குழந்தை எல்லாமே என் செலவு தான்.’ என்று இறங்குமிடம் வந்து நிறுத்தினான்.
”தேங்க்ஸ். ஆனா எங்கக்கா குழந்தை பிறக்கறவரை என்னால கடனை அடைக்க முடியாது. கடனை வச்சிட்டு நான் உங்களை கல்யாணம் பண்ண மாட்டேன். என் வீட்டு பிரச்சனை நான் முடிச்சிட்டு வந்தப் பிறகு தான் நம்ம கல்யாணம். அதுக்குள்ள உங்களுக்கு அவசரம்னா வேற பொண்ணை பார்த்துக்கோங்க.
நான் யாரோட உதவியும் இனி எதிர்பார்க்கறதா இல்லை” என்று கூறி அவள் தங்கிருக்கும் இடத்தின் கேட்டை தாண்டி போக , இந்தரோ “நான் இன்னும் முடிக்கலை” என்றான்.
போன்ல பேசலாம் என்று கையாட்டினாள். அந்த நேரம் சார்ஜ் லோ பேட்டரி காட்டியது.
வீட்டுக்கு வந்தப்பிறகு போனை எடுத்து அழைக்க, ஸ்விட்ச் ஆப் என்று வரவும், அவள் கையை காட்டும் நேரம் லோ பேட்டரி காட்டியதால் ‘சே நைட் முழுக்க பேசலாம்னா ஆசையில மண் அள்ளி போட்டுட்டா.” என்று வீட்டுக்குள் நுழைந்தான்.
“மருமகளை பத்திரமா விட்டியா? இல்லை போற வழில இங்க நடந்துக்கிட்ட மாதிரி திரிஞ்சியா?” என்று தண்ணீர் பாட்டிலை நிரப்பியவாறு கேட்டார் சித்ரா.
“அடப்போங்கம்மா இங்க திட்ட முடியலைனு ரோட்ல திட்டிட்டே வந்தா.” என்றவன் “அவ போன் வேற லோ பேட்டரி காட்டுச்சு. எப்ப சார்ஜர் போட்டு பேசுவாளோ” என்று போனையே வெறித்தான்.
மோகனோ ”டேய் போய் தூங்குடா. மருமக நிம்மதியா தூங்கட்டும்.” என்று கூறி படுக்க செல்ல, அவனும் தனதறைக்கு சென்று தாழிட்டான்.
வெகு நேரம் அவள் எண்ணிற்கு தொடர்பு போகவில்லை என்றதும் ஒருவேளை தூங்கியிருப்பா” என்றவன் தலையணையை அணைத்து தனது முதல் முத்தமிட்ட தருணத்தை நினைத்து நினைத்து தனியாக சிரித்தான்.
“அன் எக்ஸ்பெக்ட் கிஸ்” என்றவன் தனியாக பேசி, உதடு புன்முறுவலை ஏந்தி நித்திரைக்கு சென்றான்.
அடுத்த நாள் விழிக்கும் நேரம் கை அனிச்சையாக, போனை எடுத்து தர்ஷினிக்கு அழைக்க, போன் எடுத்தாள்.
”குட் மார்னிங் டியர்” என்றதற்கு, “விசும்பல் மட்டும் வந்தது.
“ஏய்… அழுவறியா?” என்றான்.
“இல்லை” என்றவள் மூக்குறிவது தெளிவாக கேட்டது.
“இப்ப என்ன பிரச்சனை?” என்றான்.
“உன் பிரெண்டுக்கு நிச்சயமாயிடுச்சா” என்று கேட்டாள்.
இந்தரோ நெற்றி கீறியபடி “நேத்து நிச்சயமாச்சு” என்றான்.
தற்போது குரல் மெதுவாக வந்தது.
“ஏன் என்கிட்ட யாருமே சொல்லலை.” என்று அழுவது கேட்டது.
“ஏய் சொன்னா என்னப் பண்ணுவ? கங்கிராட்ஸ் சந்தோஷ்னு சொல்வ அவ்ளோ தானே?” என்று நக்கல் அடித்தான்.
உண்மை தானே இந்த சூழலுக்கு அவள் நிச்சயத்துக்கு முதல் ஆளாக நிற்க முடியுமா?
“உனக்கு யாரு சொன்னா?” என்றதற்கு ‘அம்மா சொன்னாங்க” என்றதும் இந்தரோ பல் விளக்கி காபி பருகி “நல்லது. கண்ணை துடைச்சிட்டு வேலைக்கு கிளம்பு.
நீ விரும்பறது என்னை. அவனையில்லை சும்மா அழுதுட்டு.” என்றதும் கத்தரித்தாள்.
“என்னடா காலையிலயே ரொமான்ஸா?” என்று மோகன் வந்தார்.
“ப்பா.. நேத்து முழுக்க போன் சுவிட்ச்ஆப். இப்ப போன் போட்டா சந்தோஷிற்கு நிச்சயமாயிடுச்சுனு அழுவறா. என்னை தானே விரும்பறா. அவனுக்கு நிச்சயம் ஆனா என்ன? யாரும் சொல்லலை..னு ஒப்பாரி” என்று தலையை உலுக்கினான்.
சித்ரா அருகே வந்து, “சந்திரிகா கல்யாணத்துல இழுத்து போட்டு வேலை செய்தவளை பார்த்திருப்ப, இப்ப அடியோட ஒதுக்கினா அவளுக்கு கவலையிருக்காதா? முதல்ல காதலை மட்டும் பார்க்காதடா. அவ உறவு நட்பு எல்லாம் போச்சுனு யோசி” என்று பேசியதும் இந்தரோ, “ஷிட் இதெல்லாம் வேற நினைச்சி அழுவாளா? இவளை…” என்று கடிந்தபடி வேலைக்கு கிளம்பினான்.
நேரில் தரிசித்து இரண்டு வார்த்தை பேச நினைத்தான். ஆனால் கோபத்தில் ப்ரியா அலுவலகம் செல்லும் பஸ்ஸில் ஏறி விட்டு, ”நான் ஆபிஸ் கிளம்பிட்டேன். எனக்காக வெயிட் பண்ணாத’ என்று அனுப்பிவிட்டு இருக்க, “என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்லற நீ.” என்று அனுப்பிவிட்டு அவனும் அலுவலகம் சென்றான்.
மோகன் மருமகளுக்கு உணவு கொண்டு வந்து அலுவலகத்திற்கு கொடுக்க, முகம் வாடியபடி, “மாமா நான் சந்தோஷிற்கு நிச்சயம் என்று வருந்தலை. அம்மாவை, என்னை, அக்காவை மொத்தமா ஒதுக்கிட்டாங்க. அதை தான் தாங்க முடியலை.” என்று கேவினாள்.
மோகனோ ”அதுக்கு தான்டா சொல்லறது தப்பு செய்யாம பழியை சுமக்க கூடாது. நீ யார் பழியை தூக்கி போட்டதுனு சொன்னா அட்லீஸ்ட் இந்த ஒதுக்கம் குறையும். சொல்லப்போனா நாம ஒதுங்கியதா காட்டிக்கணும்.
அவங்க தான் வருந்தணும்.
இங்க பாரு கண்ணாடி உடைஞ்சிடுச்சு. இனி ஒட்ட வைக்க முடியாது. சிலதை நாமளா ஜீரணிச்சு பழகி வெளியே வரணும்.” என்றதும் ப்ரியதர்ஷினி நிசப்தமாய் மாறினாள்.
வேலை செய்யும் நேரம் நெருங்க மோகனும் ப்ரியாவும் வேலையில் முழ்கினார்கள்.
ப்ரியாவிற்கு சந்தியாவை காட்டி கொடுத்து தன் பழியை களைவதா? என்று சிந்தித்தாள்.
அங்கு இவளை நேசிக்கும் இந்தரோ, தந்தை போனிலிருந்து தனக்கு அனுப்பிய, ‘ப்ரியா இந்தரை விரும்பியதையும் அதன் பின் சந்தியா பழியை போட்டதும் ஆடியோ பதிவிருக்க, அதனை தன் நண்பன் சந்தோஷிற்கு தட்டி விட்டான்.
இந்தரை பொறுத்தவரை தன்னவளின் கண்ணீரை துடைத்திட வேண்டும் அவ்வளவே.
ப்ரியா போல சந்தியாவிற்கு பாவம் பார்க்கவில்லை அவன்.
சந்தோஷ் ஆடியோ கேட்கும் நேரம் விலாசினி அருகேயிருக்க, அவளும் ஆடியோவை கேட்க நேர்ந்தது.
சந்தோஷ் விலாசினி இருவரும் கேட்டதும் விலாசினியோ, “சந்தியாவா?” என்று ஆச்சரியம் அடைந்தாள். சந்தோஷோ ‘சந்தியாவா? தன் தங்கையா? என் பல்லை கடித்தான்.
-தொடரும்.
– பிரவீணா தங்கராஜ்
அருமையான பதிவு
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை