Skip to content
Home » நீயென் காதலாயிரு-20

நீயென் காதலாயிரு-20

அத்தியாயம்-20

இந்திரஜித், ப்ரியதர்ஷினி அருகே இடுக்கி கொண்டு அமர்ந்தான்.

“இந்தர் கையையும் காலையும் சும்மா வச்சிட்டு வா ப்ளிஸ்” என்று கடித்து துப்பாத வார்த்தையை வீசினாள்.

இந்திரஜித் காதில் வாங்காமல் ஜன்னலில் கை வைக்கும் சாக்கில் ப்ரியாவின் தோளில் கையை போடவும், அவள் எடுத்துவிடவும், திரும்ப போடவும் என்று இம்சித்தான்.

‌‌ ப்ரியாவுக்கு அவள் அம்மா கவிதா ‘சந்தோஷிற்கும் விலாசினிக்கும் நிச்சயம் நடந்திருக்கு. அதோட சந்தியா கண்ணனுக்கும் பேசியிருக்காங்க. பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்க நினைச்சிருக்காங்க‌. நீ தடையா இருக்கவும் உன் மேல திருட்டு பழி சுமத்தி அனுப்பியிருக்காங்க. காரணத்தோட தான் காய் நகர்த்தியிருக்காங்க.

நாம தான் கண்டதும் நினைச்சி மனக்கோட்டை கட்டிட்டோம்’ என்றார்.

கவிதாவிற்கு தன் மகளிடம் வாய் நிறைய மருமகளே என்று பானுமதி அண்ணி, துரைசிங்கம் அண்ணா அழைத்துவிட்டு ஏமாற்றிவிட்டாரே என்ற வருத்தம்.
ஆனால் ப்ரியாவுக்கு இந்த சந்தோஷ் ஏன் என்னிடம் இதை சொல்லலை. ஹாப்பி நியூஸ் தானே. அப்ப அத்தை மாமாவுக்காக என்னிடம் அவன் நிச்சயத்தை சொல்லலையே’ என்ற வருத்தம்.

ப்ரியா அழுதுக்கொண்டே போனை துண்டிக்க, இந்தரை விரும்பியதையும், சந்தியா பழிப்போட்டதாக ப்ரியா பேசிய ஆடியோவை சந்தோஷிற்கு அனுப்பிவிட்டான்.

ப்ரியா அலுவலகம் வந்தவள் முகம் வாடியபடியிருக்க, மோகனோ வீட்டில் பையனிடம் ‘ப்ரியா இன்னிக்கு முழுக்க அப்செட். அந்த பிள்ளை சிரிச்சி கலகலனு இருந்தா, இப்ப எதுக்கு சந்தோஷ் நிச்சயத்தை அவங்க அம்மா சொன்னாங்க. சந்தோஷே சொல்லிருந்தா இந்தளவு ப்ரியா பீல் பண்ணியிருக்கமாட்டா’ என்று மைந்தனிடம் பேசி நகர்ந்தார்.

அதன் தொடர்ச்சி ஒரு வாரமும் தன்னை காணும் போது காட்டும் முகமலர்ச்சி தர்ஷினியிடமில்லை என்றதும், இரண்டு நாட்கள் அரசாங்க அலுவலக விடுப்பு வேறு வரவும் இந்திரஜித் அவளை ஊருக்கு அழைத்து செல்லும் முடிவோடு இதோ பேருந்தில் குடும்பத்தோடு ஏறி விட்டார்கள்.

ப்ரியதர்ஷினி எவ்வளவோ தடுத்தும் கவிதாவை பார்த்து பேசிடும் முடிவோடு வருகிறார்கள்.

அன்னை என்ன சொல்வார்களோ? இதுநாள் வரை சந்தோஷோடு சுற்றும் போது ஒவ்வொருத்தர் பார்வை ஒவ்வொரு தினுசாக இருக்கும். அன்னை, அத்தை, மாமாவை பொறுத்தவரை மணக்க போகும் தம்பதியாக தான் பார்த்து தொலைத்தார்கள்.‌ ப்ரியாவும் சந்தோஷமும்‌ அந்த பார்வைக்கு விளக்கமோ, மறுப்போ தெரிவித்ததில்லை. காரணம் நாங்கள் காதலிக்கவில்லை என்று எங்களை அந்த கண்ணோட்டத்தோடு காணாதீர்கள் என்றால், கவிதா எல்லாம் சந்தோஷ் கூட ஊர் சுற்ற அனுப்பியிருக்க மாட்டார்.

அதனால் நண்பர்கள் ‘காதலர்களே’ என்ற பிம்பத்தோடு வலம் வந்து கொண்டார்கள். யாரிடமும் விளக்கம் கொடுத்ததில்லை.‌

இனி கவிதாவிடம் சந்தோஷ் பற்றி பேசுவதை தவிர்த்து, இந்தரை பற்றி விதைக்க வேண்டுமென்ற முடிவோடு கிளம்பினார்கள் எனலாம்‌.

ப்ரியாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷமென்றால், மறுபக்கம் பயம் உருவானது. அம்மா ஏதேனும் இந்தரை அவர்கள் பெற்றோரை சொல்லி விட்டால்?

அந்த டென்ஷன் அவளுக்கு இருக்க இந்தரின் அணைப்பு, அருகாமை எல்லாம் அவள் உணரவேயில்லை.

சிடுசிடுவென இருந்தவளிடம் கூல்ட்ரிங்க்ஸ் நீட்டினான்.

“ப்ளீஸ் இந்தர் எதுவும் வேண்டாம். சும்மாயிருக்கியா? அம்மா என்ன சொல்வாங்கன்னு மனசு படபடனு இருக்கு‌. நீ வேற?” என்று எரிந்து விழுந்தாள்.

கூல்ட்ரிங்க்ஸ் அவனே குடித்து முடித்து ”முதல் முறை ஒன்னா உட்கார்ந்து டிராவல் பண்ணறோம். நம்ம கல்யாணத்தை பத்தி பிள்ளையார் சுழிப்போட கிளம்பியிருக்கோம். எனக்கும் உன்னை மாதிரி டென்ஷன் இருக்கு. அதுக்காக இந்த அழகான தருணத்தை கெடுத்துக்க மாட்டேன்.

நம்மை மீறி நம்ம வாழ்க்கை எங்கயும் சறுக்காது. சறுக்கவும் விடமாட்டேன். உன்னை விட உன்னை கல்யாணம் பண்ண எனக்கு தான் ஆசை அதிகமா இருக்கு. நான் வெல்-பிளானோட வர்றேன்‌. நீ தேவையில்லாம டென்ஷன் ஆகி என்னை திட்டற. ஐ அன்டர்ஸ்டான்ட் இனி எரிச்சல் மூட்ட மாட்டேன்” என்று கனிவாக பேசியவன் ஐ மாஸ்க் அணிந்து சீட்டில் சாய்ந்து கொண்டான்.

ப்ரியதர்ஷினிக்கு இந்தரை அதிகம் திட்டி விட்டோமோயென்ற எண்ணம் உதிர்க்க, இத்தனை அருகாமையில் மனம் கவர்ந்தவன் இருக்க, அவனை ரசிக்காமல் தேவையில்லாமல் இப்பொழுதே அன்னை என்ன சொல்வாரென்று கவலையாகி அவரையும் காயப்படுத்திவிட்டோமென புரிந்துக்கொண்டாள்‌.

மெதுவாக இந்தரின் தோளில் தலை சாய்த்து கன்னம் கை புஜத்தில் அழுத்தம் கொடுத்து அவன் கையை தன் கையோடு பிணைத்து கொண்டாள்.‌

‌‌”சாரி இந்தர்” என்றதும் ஐ மாஸ்கை மேலேற்றி அவளை பார்த்து, “முன்ன உன் கூட யாருமில்லை. இப்ப நான் இருக்கேன். என் பேரண்ட்ஸ் இருக்காங்க.‌ நிம்மதியா இருடி” என்றவன் உறக்கத்தை தொடர ஆரம்பித்தான்.

ப்ரியதர்ஷினியோ தன் ஆள்காட்டி விரலால் இந்தரின் கன்னத்தில் கோலமிட, “இப்ப மட்டும் அம்மா அப்பா பார்க்க மாட்டாங்களா?” என்று குறும்பாய் கேட்டவனிடம், செல்லமாய் கடித்தாள்.

அவளது பற்தடம் பதிய துளியும் கத்தாமல் ஆனந்தமாய் ஏற்று, “நீ தூங்கு” என்றவன் அசராமல் ரசித்தான்.

ஒரு வாரம் சரியாக உறங்காதவள் காதலன் தோள் தரவும் துயிலில் ஆழ்ந்தாள்.

விழிக்கும் நேரம் திருச்சிக்குள் பேருந்து நுழைந்தது.

பதட்டமாய் எழுந்து முகம் துடைத்து தெரிந்தவர் தெரியாதவர் இங்கு இறங்கும் நபர் யாரென நோக்கினாள்‌ .
அவளுக்கு தெரிந்த முகம் யாருமில்லை என்றதும், நிம்மதியானாள்.

இந்திரஜித்தோ முதுகுப்பையை மாட்டி அவளிறங்க கை கொடுக்கவும், சற்றுமுன் சித்ரா இறங்க, மோகன் கை கொடுத்து உதவியதை எண்ணி பார்த்தாள்‌‌.

நிச்சயம் ‘இவங்களை போல வாழணும்’ என்ற வேண்டுதலோடு ஆட்டோ பேசி ஏறினார்கள்.

மோகன், சித்ரா, ப்ரியா என்று வரிசையாக பின் பக்கம் அமர, ஆட்டோக்காரரோடு முன்னிருக்கையை பகிர்ந்தபடி இந்தர் இருந்தான்.‌

”இந்தர் கம்பியை பிடிச்சிக்கோ” என்று சித்ரா கூற, அவனோ, “அம்மா சென்னையில் ஷேர் ஆட்டோல ஏறி பழகியிருக்கேன் அம்மா. தர்ஷீ முன்ன என்ன குழந்தையா ட்ரீட் பண்ணாதீங்க” என்று கூறினான். திரும்பும் நேரம் ப்ரியாவை பார்த்து கண் சிமிட்டினான்.

“ப்ரியா தான் டா. அத்தை அவரை ஒழுங்கா உட்கார சொல்லுங்கன்னு சொன்னது” என்றார்‌.

தற்போது சித்ரா அத்தை மோகன் மாமா இப்படி தான் அழைப்பது.

“எம்புட்டு இருக்குது பாசம் என் மேல்” என்று வார்த்தை மாற்றி போட்டு ராகமாய் பாட்டு பாட, “தம்பி இறங்கறிங்களா?” என்று ஆட்டோக்காரர் வண்டியை நிறுத்தினார்.

“இல்லைங்கண்ணா நான் பாடலை. வண்டியை எடுக்க” என்று இந்தர் கூற, “அய்யோ தம்பி நீங்க இறங்க இடம் வந்துடுச்சு” என்று கூறவும் வீடுவந்த பயம் கூட ஓடிச்சென்று சிரித்துவிட்டாள் ப்ரியதர்ஷினி.

பணத்தை கொடுத்து வீட்டு வாசலில் இறங்கினார்கள். சின்ன கேட் அதனை திறந்து “வாங்கத்தை” என்று வீட்டுக்குள் கூட்டி சென்றாள். அங்கே ஒரு குட்டி நாய் ஓடிவந்து அவள் காலை சுற்றியது. அதனை தூக்கி முக்காடு மூக்கு உரசி கீழே வைத்தாள்.

‌‌ “அம்மா எப்பவும் கேட் சவுண்ட் கேட்டாளே வாசல் பக்கம் வந்திடுவாங்க. இன்னிக்கு என்னனு தெரியலை. உள்ளவங்க மாமா, அத்தை உட்காருங்க” என்றாள்.

மின்விசிறியை போட்டுவிட்டு “அம்மா அம்மா” என்றழைக்க, கிணற்றில் நீரை இறைத்து குடத்தில் எடுத்து வந்த கவிதா மகளை கண்டதும் குடத்தை கீழே வைத்துவிட்டு, ஓடிவந்து கட்டி பிடித்தார்‌.

“என்னடி இது சொல்லாம கொள்ளாம வந்திருக்க? எப்ப வந்த? என்ன மெலிஞ்சு போயிருக்க?” என்று மகளை இத்தனை நாள் காணாமல் கண்டதும் நலம் விசாரித்தார். உண்மையில் ப்ரியா மெலியவில்லை.

“இப்ப தான் அம்மா வந்தேன். நீ நல்லாயிருக்கியா?” என்று ப்ரியா கேட்க, “எனக்கென்ன எல்லாம் கேட்டும் உசுரோட இருக்கேன்” என்றவர் பார்வை வந்திருந்த மற்ற மூவரையும் அலசியது.

‌ இந்தரை கண்டவர் சட்டென சந்திரிகா திருமணத்தில் சந்தோஷ் பிரெண்ட் என்று அறிமுகப்படுத்திய பையனை போல தெரிய, கண்களாலே யாரு இவங்க?’ என்று மகளிடம் கேட்டார்.
சந்தோஷ் ப்ரியா பற்றியே சிந்திப்பதால் அவ்வாறு தனக்கு தோன்றுகின்றதென்று எண்ணினார் கவிதா.

“அம்மா இது இந்திரஜித். இவங்க அவரோட அப்பா மோகன் அம்மா சித்ரா‌.” என்றதும் அனிச்சையாய் கும்பிட்டு உட்கார கூறினார் கவிதா.

யார் இவர்கள்? எதற்கு வந்திருக்கின்றார்கள்? மகள் அறிமுகம் செய்யும் முறையும் லேசாக அடிவயிற்றை கலக்கியது. பெற்றவளுக்கு நெஞ்சுப்பகுதியில் ஒரு அதிர்வு. இந்திரஜித் வேறு முகப்பொலிவோடு மகளை வருடும் பார்வை வீசுகின்றான். மகளும் சந்தோஷ் நிச்சயம் கூட கேள்விப்பட்டு வந்து இடிந்திடாமல் தூண் போல் நிற்கின்றாள்.

வீட்டுக்குள் வந்ததும் ப்ரியா, பார்க்க மெலிந்தது போல தோன்றினாள். ஆனால் முகம் முன்பை விட பிரகாசம் பெற்று இருப்பதாக நிதானமாக கண்ணுக்கு புலப்பட்டது கவிதாவிற்கு.

“அம்மா இது சந்தோஷோடு பிரெண்ட் இந்திரஜித்” என்று தயங்கி தயங்கி அறிமுகப்படுத்தினாள்.

”தப்பு தர்ஷு, அத்தை இவளுக்கு அறிமுகப்படுத்தவே தெரியலை. நான் சந்தோஷ் பிரெண்டா இங்க வரலை. ப்ரியதர்ஷினியோட லவ்வர் அத்தை. நானும் அவளும் விரும்பறோம். இவங்க என்னோட பேரண்ட்ஸ். அப்பா மோகன் அம்மா சித்ரா.

தர்ஷுவை பத்தி சந்தோஷ் அடிக்கடி பேசுவான் அத்தை. என்னடா நீ காதலிக்கறது விலாசினி என்ற பொண்ணு தானே‌. எப்பபாரு ப்ரியா ப்ரியா ப்ரியானு சொல்லறனு ஒரு நாள் கேட்டேன்.

‌ விலாசினி‌ நான் விரும்பற அத்தை பொண்ணுடா. ப்ரியதர்ஷினி‌ என் கிளோஸ் பிரெண்டுடா, என்‌ இன்னொரு அத்தையோட பொண்ணுன்னு சொன்னான்.

ஒருதடவையாவது தர்ஷுவை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். சந்தோஷ் போன்ல தர்ஷு போட்டோவை காட்டினான்.

அப்பா வேற கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா எனக்கு எப்படியொருத்தி இருக்கணும்னு இமேஜின் செய்து வைத்த மாதிரி தர்ஷு இருக்கவும், சந்திரா கல்யாணத்தோட வந்து தர்ஷுவை காதலிக்க ஆரம்பிச்சேன்.

அங்க கல்யாண மண்டபத்தில நடந்த எல்லா விஷயமும் தெரியும். நான் கூடயிருந்தேன்‌. அப்ப நீங்க என்னை பாரத்திருக்கலாம்.

சந்தோஷ் புயல் ஓய்ந்ததும் ப்ரியாவை சமாதானம் செய்ய நினைச்சான். ஆனா நிறைய அசம்பாவிதம்‌. அப்பவும் அதிர்ஷ்டவசமா ப்ரியதர்ஷினி மாம்பலம் வந்துட்டா. நான் கோடம்பாக்கம்.

ஒரு மாசம் ப்ரியதர்ஷினியை தேடினேன். எதச்சயமா, ஒர்க் பண்ற இடத்துல பார்த்தேன்‌. திருச்சில விட்ட காதலை மாம்பலத்துல பிடிச்சிட்டேன். ப்ரியாவும் என்னை விரும்பறா அத்தை.” என்று ரயில் பெட்டி போல வரிசையாக பேசினான்.

இடையே கவிதா முகம் ஆத்திரம் அதிர்ச்சி, கோபம் என்று பலதர முகபாவணையை பிரதிபலித்தது.

இந்திரஜித் அதனை காணாமல் இல்லை. சற்று கவிதா அத்தை தன் காதலை ஏற்றுக்க நேரம் கொடுத்தான்.‌

‌ கவிதாவோ, ”இதுக்கு தான் சென்னைக்கு போறேன்னு ஒத்த கால்ல குதிச்சியா ப்ரியா” என்று இகழ்ந்து பேசி “சீ என்னோட பொண்ணா நீ. சந்தோஷை தானே விரும்பின. என்ன நடக்குது டி இங்க?” என்று கோபமாய் அடியெடுத்து அடிக்க முன்வர, “அடிக்காத அம்மா. நான் தேடி போய் எல்லாம் காதலிக்கலை. இவர் எந்த ஏரியானு கூட தெரியாது.” என்று சித்ரா பின்னால் நகர்ந்தாள்.

“அண்ணி மருமக மேல எந்த தப்பும் இல்லை” என்று தான் சித்ரா ஆரம்பித்தார்.

”மருமகளா? யாருக்கு யாருங்க மருமக? இப்படி பேசி தான் ஒரு குடும்பம் இவளை பழிசுமத்தி முடக்கிடுச்சு திரும்பவுமா?

தயவு செய்து காதல் கத்திரிக்கா, மருமகள் என்று யாரும் வரவேண்டாம் . தயவு செய்து வெளியே போங்க‌. வெளியே போறிங்களா? நாயை வச்சி மிரட்டவா?” என்றதும் சித்ரா மோகன் இருவரை கண்டு வாசல் பக்கம் கையை நீட்டினார் கவிதா.

“அம்மா இந்திரஜித்தை நானும் விரும்பறேன். மரியாதையோடு பேசுங்க” என்று ப்ரியா பேச,”காலை உடைச்சி‌ அடுப்புல வைப்பேன். வாயை மூடிட்டு உள்ளப்போ” என்று கூற இந்திரஜித்தை கையாளாகாத தனத்தோடு பார்த்தாள் ப்ரியா‌.

-தொடரும்.

  • பிரவீணா தங்கராஜ்

8 thoughts on “நீயென் காதலாயிரு-20”

  1. Super super super super super super super super super super super super eptiyum indhar kavitha amma va convince panni marriage ku ok vangiruvan😍😍😍😍👍👍👍👍

  2. Kalidevi

    Sonnqthum oru ammavala othuka mudiyathu thane . Inum mulusa solli mudikala ma kelunga avanga virumbala friends tha pali potavanga yarunu theriyama irukinga inum konjam purinjika parunga ma

  3. Super sis nice epi 👌👍😍 edhu dhan pa reality eppdi dhideer nu vandhu love pandrom nu ponnu keta Amma eppdi dhan react pannuvaanga👏 semma sis seekirama pesi convince panni marriage panni vechidunga pa🥺

  4. M. Sarathi Rio

    நீயென் காதலாயிரு…!
    (அத்தியாயம் – 20)

    அச்சோ..! இந்த ப்ரியா அம்மாவுக்கு என்ன இம்புட்டு கோபம் வருது. அதுவும் கோபத்துல குட்டி நாயை வேற வைச்சு துரத்தி விடவான்னு…
    எக்குத்தப்பா மிரட்ட வேற செய்யுறாங்க… காமெடியா இருக்கு.

    உலகமே இப்படித்தான் போலயிருக்கு. இத்தனை நாளா மரியாதை கொடுத்த துரைசிங்கம் ஃபேமிலி திருட்டுப் பட்டம் கட்டி தூக்கி போட்டுட்டாங்க. இன்னைக்கு இந்தர் ஃபேமிலி உண்மையை சொல்லி மரியாதையோட பொண்ணு கேட்குறாங்க…
    ஆனா, இவங்க என்னடான்னா
    எகிறி குதிச்சிட்டு சண்டைக்குப் போறாங்க. சந்தோஷ் ஃபேமிலி கிட்ட இந்த பாச்சாவெல்லாம் பலிக்காம அழுதுட்டே வந்தவங்க, ஒட்டுமொத்த கோபத்தையும் இவங்க கிட்ட காட்டுறாங்க.. என்னா
    உலகம டா…?
    😴😴😴
    CRVS (or) CRVS 2797

  5. Yes…கண்டிப்பா இந்த மாதிரி தான் நடக்கும் .இந்த மாதிரி நேரத்துல..
    எங்க பாரு பொண்ண தான் தப்பு சொல்றது….🤦🏻‍♀️
    ஆனா…ஒரு அம்மாவா..இந்த இதுல முடிவு எடுக்க time எடுக்கும்.என்ன வீட்ல ஒரு ஆண் மகன் இல்லாத தருணம்…
    பாப்போம்….பிரியா அம்மா என்ன முடிவு எடுக்க போறாங்கன்னு….🙎🏻‍♀️🙎🏻‍♀️🙎🏻‍♀️
    Nice moving sis….

  6. Thank you sagi letters normal font la இருந்தது
    அருமை அருமை அருமை அருமை கவிதா இப்படி பேசுவார்கள் என்று நினைக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *