Skip to content
Home » நீயென் காதலாயிரு-22

நீயென் காதலாயிரு-22

அத்தியாயம்-22

   கவிதா தோசையை வார்த்தபடி, “மூஞ்சியை இப்படி தூக்கி வச்சிக்கிட்டா சம்மதிச்சு தலையாட்டுவேன்னு நினைக்காத. இத்தனை நாளாக இந்த திருச்சியில சந்தோஷோட ஊர்சுத்தியிருக்க. இப்ப இந்த தம்பிக்கூட போறேன்னு குதிக்கற? காலை உடைச்சி அடுப்புல வச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று தர்ஷினி தட்டில் தோசையை வைத்து, “சூடா சாப்பிடுடி” என்று திட்டிவிட்டு திரும்ப, அங்கே துரைசிங்கமும், பானுமதியும் நின்றிருந்தார்கள்.

   “சந்தோஷ் என்னோட பிரெண்ட். இந்தர் அப்படியில்லை. அதோட சித்ரா அத்தை வேற என்னை கூப்பிட்டிருக்காங்க. மோகன் மாமா வருவார்.
நான் ஒன்னும் இந்தர் கூட தனியா போகலை.” என்று வாதிட்டவள் வாசல் பக்கம் பார்வை பதித்து வாயை மூடினாள்.

   “வாங்க அண்ணா வாங்க அண்ணி” என்று கவிதா வரவேற்க, இருவரும் ப்ரியா முன் வந்து நின்றார்கள்.

‌‌ ப்ரியாவோ சின்சியராய் தோசையை திண்பதில் இருந்தாள்.

   ”ஒரு வார்த்தை சந்தியா தான் பழிப்போட்டானு சொல்லிருக்கலாமே கண்ணு” என்று பானுமதி தாடை பிடித்து கேட்க, “எங்க மேல கோபமா ப்ரியா?” என்று துரைசிங்கம் தலையில் ஆதுரமாய் கைவைத்து கேட்டார்.

    கவிதாவுக்கு தானாக ஏதேனும் சொல்வதில் வார்த்தை எழும்பவில்லை. தேவையற்று பழியை சுமந்தவளே பதில் தரட்டும் என்று நின்றார்.‌‌ குடிக்க தண்ணீரும் முறுக்கும் எடுத்து வந்து அண்ணன் அண்ணியை உபசரிப்பில் குறை வைக்காமல் நின்றார்.

   அன்னை சுட்ட தோசையோடு போதுமென முடித்துக் கொண்டவள் சாப்பிட்ட தட்டிலேயே கையை அலம்பிவிட்டு ஓரமாய் அதை எடுத்து வைத்து தன் சட்டையில் கையை துடைத்தாள்.

”பேசமாட்டியா டி” என்று கண்ணீர் ததும்ப கேட்டதும், “உங்ககிட்ட பேசாம நான் எங்க போவேன் அத்தை. அப்பா இறந்ததும் நாங்க மூன்று பேரும் என்ன செய்யறதுனு தெரியாம இருக்க, மாமா தானே இந்த வீட்டுக்கு முன்ன நின்று, அப்பா உடலை எடுக்கவும், காரியம் செய்யவும், முப்பது நாள் எல்லாரும் முடிச்சி, அம்மா அழுதுட்டு இருந்தப்ப, நாங்க சொந்தமா உங்க கூடவே இருக்கோம்னு நீங்க எல்லாம் தான் தூணாக நின்றிங்க.
  
   சந்திரா கல்யாணதுல நடந்தது கண் திருஷ்டினு நினைச்சிக்கோங்க அத்தை. மத்தபடி நான்‌ அந்த நேரம் அதிர்ச்சியானேன். அப்பறம் யாருனு பொறுமையா இருந்து யோசிக்க, அடையாளம் கண்டு பிடிச்சிட்டேன்.

   என்ன அவளை உங்களோட கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க விருப்பமில்லை.

   இன்னொரு காரணம்‌ அந்த நேரம் நீங்க பேசியதுக்கு சந்தியா காரணமில்லை.‌ உங்களுக்கும் நான் எடுத்திருப்பேன்னு டவுட் வந்துடுச்சே.‌ அப்படியிருக்க சந்தியா செய்தது தப்பாயிருந்தாலும், சில சூழ்நிலையில் மனிதர்கள் மனசு எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம்னு புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.

பானுமதியோ சேலை முந்தானையால் வாய் பொத்தி அழுதார்.‌

   “சந்தோஷுக்கு விலாசினியையும், சந்தியாவுக்கு கண்ணன் அண்ணவையும் பேசி முடிச்சதா கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் மாமா‌.

   சந்தோஷ் ரொம்ப நாளா விலாசினியை விரும்பினான். அவனா காதலிக்கறதை சொல்லாம ஏகப்பட்ட சொதப்பல்.‌ அவளை பார்க்க வந்ததை எல்லாம் என்னை பார்க்க வர்றதா எத்தனை வதந்தி. அதுக்கெல்லாம் முடிவுரை வந்துடுச்சு.

     நிச்சயத்துக்கு அம்மாவை மட்டும் கூப்பிட்டிருக்கலாம் மாமா. மொத்தமா ஒதுக்கிட்டிங்க, அப்ப தான் அப்பாயில்லாத வலி உண்டாச்சு.” என்றதும் துரைசிங்கம் ப்ரியாவின் கையை பிடித்தார்.

   அவர் வாய் திறக்கும் முன் “யமுனா வீட்ல ஐந்து சவரன் நகை கொடுத்துட்டேன் மாமா. இந்த வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி பணம் வாங்கி கொடுத்துட்டேன்.‌
‌‌
    அவங்க வீட்ல யமுனா அத்தை மாமாவுக்கு, என்னைக்காவது இந்த இரண்டு நிச்சயம் தெரிந்தா என்ன சொல்வாங்க? சந்திரா கல்யாணத்துக்கு துணி எடுத்து கொடுத்து உரிமையா வரச்சொன்னாங்க, இதுக்கு இடையில இரண்டு பேருக்கு நிச்சயம் நடந்திருக்கு சொல்லவேயில்லைனு பேசுவாங்களா இல்லையா?” என்றதும் பேச்சடைத்து நின்றனர்.‌

      ப்ரியா கண்ணீரை துடைத்து, “கவலைப்படாதீங்க மாமா. நான்‌ சந்தோஷை கட்டிக்காததால கோபத்துல இருப்பாங்கன்னு  யமுனாவிடம் சொல்ல சொல்லிடலாம். அவங்க நிச்சயம் என்னை‌ தான்‌ திட்டுவாங்க.

    இந்த பொண்ணுக்கு‌‌ என்ன தைரியம் காதலிச்சு கல்யாணம் பண்ணறா? அதான் அத்தை மாமா இப்படி நடந்துக்கிட்டாங்கன்னு என்னை தப்பா நினைச்சிப்பாங்க” என்றதும் பானுமதியோ, “நாங்க செய்தது தப்பு தான்டி ராசாத்தி.‌ உன்னிடம் மன்னிப்பு கேட்கவும் எங்களுக்கு அருகதையில்லை. எங்களை எட்டி நிறுத்திடாதே.” என்று அழுதார்.

   “அதெப்படி அத்தை எட்டி நிறுத்த முடியும். நீயும் மாமாவும் தானே என் கல்யாணத்துல தாய்மாமா இடத்துல நிற்கணும்.” என்று பேசிக்கொண்டே போனாள்.‌

   துரைசிங்கமும் “அம்மாடி நீ எங்களை மாதிரி கூறுயில்லாதவயில்லைடா. கற்பகம்  ப்யூட்டிஷன் பொண்ணோட பழிசுமத்த இருந்தப்ப, எவ்ளோ நிதானமா அவசரப்படாதிங்க சித்தின்னு தடுத்த.‌ எங்களுக்கு அந்த அறிவுயில்லையேடா?” என்று குலுங்கி அழுதார்.

    விலாசினி அவள் வீட்டில் எல்லாம் கலந்து பேசி இருப்பது புரிந்தது.‌ சந்தியாவை என்ன திட்டியிருப்பார்களோ? என்று பயந்தாள் ப்ரியா.

    “மாமா சந்தியாவை ரொம்ப திட்டிட்டிங்களா?” என்று கவலையாக கேட்டாள்.‌

   ”அவளை திட்டி என்ன பிரோஜனம் டா. அப்பவும் எங்களை தான் குற்றம் சுமத்திட்டு திமிரா இருக்கா. என்னவோ உன்னை தூக்கி வச்சி அவளை அதளபாதாளத்தில தள்ளின மாதிரி குதிச்சா. எங்க மேலயும் தப்பியிருக்கே. உன்னை சட்டுனு திருட்டுபழி சுமத்திட்டோம். அதுக்கு இப்படியொருத்தி எங்களுக்கு வாச்சியிருக்கா.

   எம்புட்டு கெட்ட எண்ணம், நல்ல வேளை சந்தோஷோட உன் கல்யாணம் நடந்து, அவளும் தன்னை தானே கெட்டயெண்ணத்தை மனசுல வளர்த்து, கூடவேயிருந்து சைக்கோவா சுத்திட்டு கெடுதல் செய்துட்டு இருந்திருப்பா.

உன்‌ நல்லதுக்கு நீ இந்திரஜித் தம்பியை கட்டிக்கிட்டு இனி நிம்மதியா இருக்கலாம்.” என்றதும் கவிதாவோ இவர்களுக்கும் அந்த தம்பி இவளை விரும்புவது தெரிந்துவிட்டதா என நினைத்தார்.

‌”அம்மா அழுது வடிஞ்சது போதும். அவளை ரெடியாக சொல்லுங்க. இந்தர் வந்துட்டுயிருக்கான்.‌ அவனுக்கு ஊர்சுத்தி காட்ட சொல்லுங்க” என்றான் சந்தோஷ்.

   ப்ரியாவோ “தள்ளுங்க அத்தை” என்றவள் சந்தோஷிடம் சண்டைக்கு வந்து, “அவன் என்ன விரும்பறதா உன்னிடம் சொல்லிருக்கான். நீ என்னடா பண்ணிருக்கணும்? ஆங் சொல்லு என்ன பண்ணிருக்கணும்? அவ என் அத்தை பொண்ணு அவளை காதலிக்கறியானு சண்டை போட்டிருக்கணுமா இல்லையா?

   நீ பாட்டுக்கு அவனை சந்திரா  கல்யாணத்துக்கு வரவச்சி என்னை அவனோட கோர்த்துவிட்டிருக்க, அவனும் என்னை ஏழரை நாட்டு சனி மாதிரி பின்னாடியே வந்துட்டான்.‌

   கற்பகம் சித்தி என்னையும் அவனையும் பஸ்பம் ஆக்காம விட்டாங்க.
   இதுல சென்னையில நான் இருக்கற இடம் தெரிந்ததும், டெய்லி வந்து இம்சைப்படுத்திட்டான்.

   இப்ப இங்க அம்மாவிடம் அவனால் எவ்ளோ திட்டு தெரியுமா?” என்றதும் சந்தோஷோ நிதானமாக, “அவன் பின்னாடி சுத்தினான் ஓகே. நீ என்‌ பிரெண்ட் சுந்தர் ஸ்கூல் படிக்கறப்ப உன் பின்னாடி சுத்தினானே, அப்ப அவனை அடிச்சி அசிங்கமா திட்டி அனுப்பின மாதிரி, இந்தரையும் அனுப்பியிருக்கலாம்ல, நீ ஏன் அவன் பூரி கொடுக்கவும் டிபன் பாக்ஸை வாங்கிக்கிட்ட?” என்றதும் ப்ரியா சமாளிக்கும் விதமாக, “எனக்கு பூரின்னா உசுரு. அதனால வாங்கினேன்” என்று பூசி மொழுகினாள்.

   “பச்சை பச்சையா பொய் பேசாத. நீயும் அவனை விரும்பின. எனக்கு தெரியும் உனக்கு அவனை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுடும்னு அதனால தான் கோர்த்துவிட்டேன். என் பிரெண்ட் நீ.

   உன் டேஸ்ட் எப்படின்னு எனக்கு தெரியாது” என்று அத்தனை பேர் எதிரிலும் கூறினான்.

   இத்தனை காலம் இவர்களுக்கா மணமுடித்து பார்க்க ஆசைப்பட்டோமென்று கவிதா, பானுமதி, துரைசிங்கதிற்கு தோன்றாமல் இல்லை.

‌‌ வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்க, சந்தோஷோ ”இந்தர் வந்துட்டான்.” என்று கூற, சந்தோஷை இடித்து வாசல் பக்கம் தலையை எட்டி பார்த்தாள்.‌

   கவிதாவோ கண்டிக்கும் பார்வையை வீசிட முகம் தொங்கப்போட்டு அடக்கவொடுக்கத்தை அணிந்தாள்.

   இந்தர் வந்ததும் ”அட எல்லாரும் இங்க தான் இருக்கிங்களா? எல்லாரும் எப்படியிருக்கிங்க? பானுஆன்ட்டி, துரைஅங்கிள் இவங்க தான் என் அப்பா அம்மா” என்று தாய் தந்தையரை அறிமுகப்படுத்தினான்.‌

    சித்ரா மோகனும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகி நலம் விசாரித்து, கொண்டார்கள்.

    சந்திரா திருமணத்தில் நடந்த நகைதிருட்டு பழியையோ, சந்தியாவை பற்றியோ பேச்செடுக்காமல் மிகவும் கவனமாய் தவிர்த்து, சந்தோஷ்-விலாசினி, சந்தியா-கண்ணன் திருமணம் எப்பொழுது என்று அதனை குறித்து பேச்சு எழுந்தது.

   இரண்டு திருமணம் ஒன்றாக வைத்திடும் முடிவில் இருப்பதை தெரிவித்தனர். பொண்ணு எடுத்து பொண்ணு கொடுப்பதால் இரு செலவு எதற்கு? ஒரே நேரத்தில் முடித்துவிடலாமென்று கற்பகத்தின் கணவர் ஆறுமுகம் தெரிவித்ததை கூறினார்கள்.
 
    நல்லதென்று வாழ்த்து கூறினார்கள் இந்தர் பெற்றோர்.

  முன்பு கவிதா வாயே திறக்காமல் இந்தர் பெற்றோரிடம் பேசி அனுப்பியவரோ, இன்று ‘யமுனா வளைகாப்பு, குழந்தை பேறுகாலம், குழந்தை பிறந்ததும் பெயர் வைக்கும் விழா என்று முடியும் வரை ப்ரியா திருமணம் தள்ளி வைக்கப்படுமென்று மனம் திறந்து கூற, இந்தரோ முகம் வாடிவிட்டான்.

‌ எப்படியும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ற வருத்தம்.

   அதற்கேற்றது போல ப்ரியாவும் ‘அதுக்குள்ள எங்க கடனையும் நான் சம்பாரிச்சு அடைச்சிடுவேன்.’ என்றாள்.
  
    சித்ரா மோகன் இருவருமே சம்பந்தி கவிதாவிடம் கட்டாயப்படுத்தவில்லை.
  
  “உங்க விருப்பத்தோடு உங்க பொண்ணை என் பையனுக்கு கட்டிக் கொடுங்க. உங்க சைட்ல உங்க கடமையை முடிச்சிட்டு இந்த கல்யாணத்தை பார்ப்போம்.

   ஆனா அதுவரை சென்னையில மருமக வேலை பார்க்கட்டும். நாங்க அங்க இருப்பதால நல்லபடியா கவனிச்சிப்போம்.” என்றதும் இந்தர் சித்ரா, கவிதா இருஅன்னையர்கள் அருகே வந்தான்.

   “அத்தை ஓகே சொல்லுங்க அத்தை.” என்று இறைஞ்சவும், மகளை பார்த்து சம்மதமாய் தலையாட்டினார்‌ கவிதா.

    இத்தனை நேரம் தன் திருமணம் குறித்து எந்த பேச்சிற்கும் முடிவு தெரியாமல் திகைத்த ப்ரியாவுக்கு, அன்னையின் இந்த வாக்கும், பேச்சும் மகிழ்ச்சியை தந்தது.

    குடும்பமாய் ஊர்சுற்ற வந்தவர்கள்ஓ அப்படியே மாறி மாறி பேசவும், கவிதா ஒருபக்கம் சமையலை கவனிக்க, பானுமதி உதவுவதற்கு வந்தவர், கவிதாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதார்.
   கவிதாவோ ‘விடுங்க அண்ணி. உங்களை ப்ரியாவே மன்னிக்கறப்ப நான் மன்னிக்க மாட்டேனா?’ என்று பதில் தந்தார்.
   சித்ரா வரவும் ”நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு நாங்க சமைக்கறோம்” என்று பானுமதி உரைக்க, “அட சம்பந்தி அம்மா, ரொம்ப அமைதியா இருக்காங்க. சபையில வாயை திறக்க மாட்டேங்கறாங்க. சமையல்கட்டுனா பேச வசதி. நாம இங்கேயே மனசு விட்டு பேசிப்போம்” என்று கூறினார்.‌

    அதன் பின் கவிதா, சித்ரா, பானுமதி என்று குடும்பத்தோடு கதை அளந்தனர்.‌

   துரைசிங்கம், மோகன் இருவரும் ஹாலில் ப்ரியா இந்தரை பற்றி பேசினார்கள்.

   அதற்குள் சந்தோஷ் விலாசினியை ப்ரியா வீட்டுக்கு அழைத்திருக்க, அவளும் வந்து ஆஜரானாள்.

    மாடியில் இந்திரஜித்-ப்ரியதர்ஷினி, சந்தோஷ்-விலாசினி என்று ஜோடி பறவையாக கதைத்தனர்.

   இந்தரோ வெளியே போகலாமென்று அழைக்க, ப்ரியா மறுக்க, வலுக்கட்டாயமாக சந்தோஷ் பைக்கில் இந்திரஜித்-ப்ரியா கிளம்ப, விலாசினி ஸ்கூட்டியில் சந்தோஷ்-விலாசினி புறப்பட்டார்கள்.
 
    குடும்பத்தோடு ப்ரியாவை அனுப்ப யோசித்த கவிதா தற்போது ப்ரியாவை இந்தரோடு அனுப்ப மறுக்க முடியாது தலையாட்டினார்.

   அன்னையின் அனுமதியோடு இந்தரோடு தோள் வளைவில் முகம் புதைத்து சுகமாய் பயணம் செய்தாள்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
   

8 thoughts on “நீயென் காதலாயிரு-22”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 happa atlast ellarum nallabadiya onnu serndhutanga🥰😍 Priya Amma enna solluvaangalo nu bayandhen nalla Vela k sollitanga☺️😘😘😘

  2. M. Sarathi Rio

    நீயென் காதலாயிரு…!
    (அத்தியாயம் – 22)

    பரவாயில்லை… உண்மை தெரிஞ்சதும் பெரியவங்க மனம் விட்டு பேசறதோட மன்னிப்பும் கேட்டுட்டாங்க.
    ப்ரியாவும், ப்ரியா அம்மா கவிதாவும் கூட, நீர் அடிச்சு நீர் விலகாதுங்கிற மாதிரி எத்தனை அருமையா சொந்தம் செய்தா உதாசீனத்தைக் கூட பெரிய மனசு பண்ணி மன்னிச்சு உறரவு விட்டுடக்கூடாதுன்னு எத்தனை அழகா பெருந்தன்மையோட மன்னிச்சு ஏத்துக்கிட்டாங்க. என்ன… இந்த சந்தியாத்தான் இன்னும் சலங்கையை கட்டிக்கிட்டு ஆடிட்டிருக்கா ப்ரியா மேல காண்டா. ஆனா, அவளுக்குப் புரியலை, ப்ரியாவுக்கு அருமையான மாப்பிள்ளையும், மாமனார் மாமியாரும் ஆல்ரெடி கிடைச்சுட்டாங்க, அவங்க அவளை அவங்க வீட்டு ராசாத்தி மாதிரியே பார்த்துப்பாங்கன்னு.

    ஆனாலும் பாருங்க.. இந்த இந்தரும் சந்தோஷூம் ஆர்ய கூத்தாடினாலும் காரியத்துலயே கண்ணா இருக்கிற மாதிரி
    அவங்கவங்க ஆளோட ஊர் சுத்த கிளம்பிட்டாங்க பாருங்க.

    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  3. Kalidevi

    Therium priya unga amma kandipa sammathipanga nu ithula unga athaium mama vum vanthu mannipu ketutanga vishayam therichi atha nalla vishayam . inthar unna pidikama poguma yarukathu ellarkum ithula entha varutham illathapo priya oru nallathu panama iruka matanga. superb epi

  4. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *