Skip to content
Home » நீயே என் ஜீவனடி – ஜீவன் 3

நீயே என் ஜீவனடி – ஜீவன் 3

விருந்தாளியின் அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆனால் அதை ரசிக்கும் மனநிலை தான் ஆனந்திக்கு இல்லை.

மயிலம்மா அங்கு இருந்த கட்டிலில் அவளை உட்கார வைத்தாள்.

” நீ ரொம்ப களைப்பா இருப்ப தாயி. கொஞ்சம் நேரம் படுத்துகத்தா. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்.”

” இல்ல எனக்கு ஒன்னும் வேணாம். “

“இப்படி சொல்லாத தாயி.”

“ப்ளீஸ். நீங்களும் ஒரு பொண்ணு தானே. நீங்களாவது என்னை புரிஞ்சுக்கோங்க. அந்த ரவுடி எனக்கே தெரியாம என் கழுத்துல தாலி கட்டிட்டான்.

என்னால இங்க இருக்க முடியாது. நான் இங்க இருந்து போக நீங்களாவது உதவி பண்ணுங்களேன்.”

“நீ நினைக்கிற மாதிரி இல்லமா அரவிந்த் தம்பி” என அவள் தலையை வருட, அதை தட்டிவிட்டாள்.

” அந்த ரவுடிக்கு தான் நீங்களும் சப்போர்ட்னா தயவு செஞ்சு இங்க இருந்து போயிடுங்க. அப்புறம் அவன் மேல இருக்குற கோவத்தை தேவையில்லாம உங்க மேல காட்ட வேண்டியது இருக்கும்.”

“அப்படி இல்ல தாயி.”

” தயவு செஞ்சு என்னை தனியா விட்டீர்களா” என அவள் கைகூப்ப மயிலம்மா அங்கிருந்து நகர்ந்தாள்.

யாரும் இல்லாத அறையில் தனிமை வாட்ட, அறையை வெறித்தாள்.

கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை. மனதில் எந்த சலனமும் இல்லை. ஆனால் பாரமாக இருந்தது.

நேற்று வரை அவள் இருந்த உலகம் வேறு. இன்று ஒரே நாளில் வாழ்க்கை தலைகீழாகிவிட்டது, அவளுக்கு.

” அண்ணே, என்ன யோசிக்கிறீங்க?”

” ஒன்னும் இல்ல மணி. அந்த சிதம்பரம் இப்போ என்ன பண்ணுவான்னு தெரியல.”

” நீங்க ஏன்ணே கவலைப் படுறீங்க. அதான் உங்களுக்கு அண்ணிக்கும் கல்யாணம் ஆயிருச்சுல. இனிமே அவனால எதுவும் பண்ண முடியாது.”

“இல்ல. இனிமே தான் அவனோட ஆட்டத்தை ஆரம்பிப்பான். இதுவரைக்கும் நான் யாருன்னு அவனுக்கு தெரியாது.

இனிமே என்னை பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுருவான். நான் யாருன்னு தெரிஞ்சா அவனோட கோபம் இன்னும் அதிகமாகும்.

நாம கவனமாக இருக்கிறது தான் நமக்கு நல்லது.” என்றவன் மாடியிலிருந்து இறங்கி வந்த மயில் அம்மாவை பார்த்தான்.

“மயிலம்மா, அவ எப்படி இருக்கா? என்ன பண்றா?”

” எல்லாமே திடீர்னு நடந்ததால குழப்பத்தில இருக்கா தம்பி. எல்லாத்தையும் சீக்கிரம் புரிஞ்சுப்பா.

நீங்க கவலை படாதீங்க. எல்லாம் சரியாயிடும்.” மயிலம்மா ஆறுதலாய் கூற,

“ஆனந்தி காலையில இருந்து எதுவும் சாப்பிடல. அவளை எப்படியாவது சாப்பிட வச்சுடுங்க மயிலம்மா.”

” நானும் அதை தான் தம்பி சொல்ல வந்தேன். ஆனந்தி அம்மா எதுவும் கேட்கிற மனநிலைல இல்ல. நான் பேச போனாலும் என்னை தடுத்துருறாங்க. மூணு நாலு தடவை சாப்பாட்டையும் கொண்டு போய் கெஞ்சிப் பார்த்துட்டேன்.

ஆனால் சாப்பிடற மாதிரி இல்ல தம்பி.” ஒரே நிமிடம் யோசித்தவன்,

” இப்ப போயி நீங்க குடுங்க. நான் வரேன்.”

அன்பான அம்மா, ஆதரவான தந்தை, அக்கறையாய் அண்ணன் என பூங்காவனம் இருந்த அவள் வாழ்வில் புயலாக வந்த அரவிந்தை நினைத்து மனதில் வருத்தப்பட்டு கொண்டு இருந்தாள்.

” தாயி ராவு ஆயிருச்சுத்தா. இன்னும் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்ப. கொஞ்சமாவது கோபத்தை விட்டுட்டு சாப்பிடுத்தா.”

” இங்க….” என ஆரம்பித்தவள் அறையின் வாயில் அருகே யாரோ வருவதுபோல் இருக்க அந்த நிழல் அருகே வருவதை பார்த்துக் கொண்டே தொடர்ந்தாள்.

” இங்க பாருங்க . நீங்க எத்தனை தடவை சொன்னாலும் இது தான் என் பதில். எனக்கு வேணாம்னா வேணாம்.” என கூற வாசலிற்கு வந்தவன் அறையினுள் நுழைந்தான்.

” என்ன மயிலம்மா நீங்க. இன்னைக்கு தான் கல்யாணம் ஆய்ருக்கு. அதுக்குள்ள தனியா சாப்பிட சொன்னா எப்படி சாப்பிடுவா.

புருஷன் கூட சேர்ந்து சாப்பிடணும்னு அவ நினைக்கலாம்ல. இல்ல புருஷங்குற உரிமையில நான் ஊட்டி விடணும்னு கூட ஆசைப்படலாம்.” என ‘புருஷங்கிற உரிமை’ என புருவம் உயர்த்தி அழுத்தி கூறவும்,

அவள் கண்கள் இரண்டும் அகல விரித்தன.அதை ரசிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

” ஆனந்தி என் கிட்ட என்ன வெக்கம். ஊட்டிவிடுங்கன்னு சொன்னா ஊட்டி விட போறேன்.” என அருகில் வர,

” இல்ல நானே சாப்பிட்டுக்குவேன்.” என மயில் அம்மாவின் கைகளில் இருந்த தட்டு வாங்கினாள்.( இல்லை பிடுங்கினாள்.)

தட்டை கையில் ஏந்தியவள் வேக வேகமா சாப்பிடுவதை ரசித்தான்.

” என்ன டா பாக்குற. உனக்கு பயந்து சாப்பிடுறேன்னு நினைக்கிறாயா. போடா லூசு. நேத்து நைட் சாப்பிட்டது. அந்த பிரகாஷால காலையில டீ கூட குடிக்கல.

நான் தான் கோவத்துல சாப்பாடு வேணாம்னு சொன்னா அப்படியே விட்டுருவியா?

நானும் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும். நீயும் வந்து கெஞ்சுவன்னு பார்த்தா அதுக்கும் வரலை.

உனக்கு கல் நெஞ்சுன்னு எனக்கு தெரியும். ஆனால் என் வயித்துக்கு தெரியாதே.

எப்படா இங்க வந்து சாப்பிட சொல்லுவீங்கன்னு நானும் ஒரு மணி நேரமா வாசலையே பாத்துட்டு இருக்கேன். யாரும் வர மாதிரி இல்ல.

இதுக்கு மேல தாங்க முடியாதுன்னு நானே வரலாம்னு நினைச்சப்ப தான் மயிலம்மா கரெக்ட் டயம்க்கு வந்தாங்க.

நல்ல வேளை நம்ம இமேஜ் டேமேஜ் ஆகல.’ என அவனைப் பார்த்துக் கொண்டே சாப்பிட,

” எனக்கு தெரியும் ஆனந்தி. நீ எனக்கு பயந்து சாப்பிடலைன்னு. எனக்கு தெரியாதா உனக்கு எப்போ பசிக்கும்னு.

நீ சாப்பிடுறதுலயே தெரியுது உனக்கு எவ்ளோ பசின்னு . அப்புறம் எதுக்குடி இவ்வளவு வீம்பு. என்கிட்ட சொல்ல வேண்டியது தானே. மாமா எனக்கு பசிக்குதுன்னு.

நீ எப்பதான் என்கிட்ட உரிமையோட பேசுவயோ’ என நினைத்தவன் அவள் சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பினான்.

சாப்பிட்டு முடித்ததும் நன்றியுடன் பார்க்க மயிலம்மா அவள் தலையை வருடினாள்.

” இந்த மொத்த உலகத்துல தேடினாலும் அரவிந்த் தம்பி மாதிரி ஒருத்தன் உனக்கு எப்பவும் கிடைக்கமாட்டான் தாயி.”

” போதும் மயிலம்மா. அவன பத்தி உங்களுக்கு தெரியாது. அவன் எப்படிப்பட்டவன்னு எனக்குதான் தெரியும். என் அப்பா அந்த ஆளு கால்ல கூட விழுந்தாங்க. ஆனால்….” என்றவள் கோபத்தை கட்டுப்படுத்தி,

” ப்ளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடுங்க.’ என்றவளின் கண்களில் அவள் அரவிந்தை பார்த்த முதல் நாள் வந்து நின்றது.

1 thought on “நீயே என் ஜீவனடி – ஜீவன் 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *