புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நெஞ்சை கொய்த வதுகை-20

அத்தியாயம்-20

விகர்த்தனன் முத்தமிட்டால் பனிக்கூழாய் உருகும் சம்ருதியை எதிர்பார்த்தான்.‌

ஆனால் சம்ருதி முகத்தை அங்கும் இங்கும் திருப்பி அவனிதழிலிருந்து விடுதலை பெற்று, தன்னிதழை துடைத்து விட்டு தாமதிக்காமல் அவன் கன்னத்தில் ‘பளீரென்ற’ பரிசு வழங்கினாள்.

“நம்மளை பார்த்து வழிஞ்சுட்டு பால்கனி ஏறி குதிச்சு நம்ம ரூம்ல தங்கினவ தானேனு ஈஸியா நினைச்சிட்டியா.
நீ கிஸ் பண்ணியதும், மெழுகு போல கரைந்து நீ பேசியதை மறந்திட.
நான் ஈஸி டார்க்கெட்டா மாறிட்டேன்ல உனக்கு?” என்று உடைந்து அழுதாள்.

கன்னத்தை தடவி, புருவம் சுருக்கி விகர்த்தனன் சம்ருதியை கவனித்தான்.‌

இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்து தவித்தது போல அழுகையை மடை திறந்து வெளியிட்டாள்.

“என் வாழ்க்கையில் நான் எதுக்காகவும் அடிபணிந்து போனதில்லை. கிருஷ்ணா என்னை விட்டு போனப்ப கூட, போடானு தூக்கிப்போட்டவள். என்ன… அவன் ஏன் என்னை அவாய்ட்‌ பண்ணினான்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்.‌ பணம் பெருசுன்னு போயிட்டானா? இந்த சம்ருதியும் நகைக்கடைக்கார பொண்ணுன்னு கெத்தா காட்டிக்க நினைச்சேன்.
ஆனா……‌ வசந்த் தான் கிருஷ்ணாவோட பிரிவுக்கு காரணம்னு தெரியவும், கிருஷ்ணாவை அந்த நொடியே மன்னிச்சிட்டேன்‌.

என்னை பத்தி எல்லாம் தெரிந்தும், உன் பின்னாடி சுத்த விட்டு, நீயில்லாம என்னால இருக்க முடியாதுன்னே என் பலமும் பலவீனமும் நீயா மாறி என்னை காயப்படுத்திட்டப்பாரு. அங்க தான்டா எனக்கு உன்னை இப்ப பிடிக்கலை. 

பால்கனி ஏறி குதிச்சது உனக்கு கர்வமா இருக்கு. எனக்கு இப்ப அசிங்கமா இருக்கு. உன் பெருமையை பரப்ப வசந்திடம் சொன்னியா?

கிருஷ்ணா… கிருஷ்ணா உன் பிரெண்ட்ல அவனிடம் சொல்லிருப்ப.
அந்த கிருஷ்ணாவோட ஓய்ப் நவ்யா அவளுக்கும் தெரியுமா?

அம்பலவாணன் மாமா அவரிடம் நீ மகன் என்ற உறவை தாண்டி, பிரெண்ட்லியா பேசுவ தானே? அப்ப என்னை பத்தி சொல்லிருப்ப.

எல்லாரும் என்னை பார்க்கற விதம் மாறும்.

கல்யாணம் காதல் என்று சொல்லாமலே ஒரு ஆம்பளையை தேடி போனானு” என்றதும் “வாயை மூடு டி” என்றான் விகர்த்தனன்.

அடுத்த வார்த்தையை சம்ருதி வாயிலிருந்து பேச விடவில்லை.

அவன் மயக்கும் சிரிப்பும், கொஞ்சல் பேச்சும், கொஞ்சும் பார்வையும், இதெல்லாம் பார்த்து பழகியவளுக்கு இந்த கோபம் புதிதானது.

அவளருகே வந்து “என்ன பேசற நீ? உனக்கும் எனக்குமான நிகழ்வுகள் மத்தவங்களிடம் பகிர்வதுக்கு இல்லை. அப்படியிருக்க வசந்த் உன் வாழ்க்கையை கூர்போட்டவன். அவனிடம் நான் ஏன் சொல்லணும்?

கிருஷ்ணா என் பிரெண்ட். அவ்ளோ தான்.
அவனிடம் அன்னைக்கு நடந்ததை பத்தி நான் இப்ப வரை பேசலை. ஸ்டேடஸ் பார்த்து சம்ருதி எப்படிடா அங்க? உன் கூடயிருக்காளாடான்னு முதல்ல கேட்டான்.

ஆமா வசந்த் வசந்தோட தங்கச்சி கூட மைண்ட் ரிலாக்ஸுக்காக சம்ருதி வந்திருக்கா, இங்க எதார்த்தமா சந்திச்சேன்.

ஒரு ஆர்வம் அவளோட ஜஸ்ட் பேசி பழகறேன்‌. முடிஞ்சா வசந்த் சத்யமூர்த்தி பத்தி போட்டு கொடுப்பேன்னு சொன்னேன்.

பட் நமக்குள்ள நாம காதலை சொல்லி பேசிக்கறதுக்கு முன்ன என் கண்கள் உன்னிடம் ரசனையா பேசிக்கிட்டதில் அவன் கண்டுபிடிச்சிட்டான்.

உன் பார்வை சரியில்லை விகர் என்னடானு அவன் கேட்க, நான் ‘ I love Sam’ அப்படின்னு முதல்லயே சொல்லிட்டேன்‌.

அதுக்கு பிறகு அவன் உன்னை பத்தி என்னிடம் எதுவும் கேட்கலை. நானும் ஷேர் பண்ணலை. பிகாஸ் பேசினா இது சிக்கலான உறவுகளை கூடுதலா சிக்க வைக்கும். நான் இப்ப உன்னை விரும்பறேன். இதான் ஃபைனல் என்பதை கிருஷ்ணா புரிஞ்சுக்கிட்டான்‌.

நான் ஒரு விஷயத்துல எந்தளவு ஆழமா முடிவெடுப்பேன்னு கிருஷ்ணாவுக்கு தெரியும். அவன் உன்னை பத்தி கேட்டதில்லை. நானும் உன்னை பத்தி பேசியதில்லை. அவனிடமே அப்படின்னா… நவ்யாவிடம் எப்படி சொல்வேன்.

எங்கப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை‌ நல்ல பிரெண்டும். அதுக்காக நாளைக்கு சாந்தி முகூர்த்தம் பத்தி அவர் கேட்பாரா? இல்லை நான் தான் சொல்வேனா?

அறிவில்லை…. எனக்கு எதை சொல்லணும் எதை சொல்லக்கூடாதுன்ற தெளிவு எப்பவும் இருக்கு.

அதனால் தான் வசந்த் பத்தியோ, உங்க மாமா சத்யமூர்த்தி பத்தியோ மாமாவிடம் மூச்சுவிடாம உங்க வீட்டு உறவுகளை சிதைக்காம இருக்கேன்.

அன்னைக்கு நான் உன்னிடம் பேசியது உனக்கு உறுத்துது? உன்னை அசிங்கப்படுத்தினேனா?

இப்பவும் சொல்வேன். நீ என்னை நம்பி பால்கனி ஏறி என் ரூம்ல தூங்கின. நிம்மதியா தூங்கின. பிகாஸ் நீ என் மேல வச்ச காதல் அதுல இருக்கு. நீ என் மேல வச்ச அன்பு, எனக்காக என் தாலியை சுமக்கும் முன்ன, நீ என் மேல வச்ச நம்பிக்கை.

இதை தான் நான் கர்வமா நினைச்சேன்.

அதை தவிர்த்து என்னை நம்பி ஒருத்தி, என் அழகுல மயங்கி விழுந்துட்டானு, தலைகால் புரியாம ஆடலை.

இரண்டும் வேற வேற பீலிங்.” என்றவன் மனதை கொட்டிவிட்டு, தலை கோதினான்.

முதலிரவு அறையே நிசப்தமானது. லேசாக பூக்களால் அலங்கரித்த மெத்தை சம்ருதியால் களையப்பட்டிருந்தது. மற்றபடி இன்னமும் பூமணம் அவ்வறை முழுதும் கமழ்ந்தது.

அதன் சுகந்தம் ரசித்த விகர்த்தனன் முடிவெடுத்தவனாக “இட்ஸ் ஓகே…. உனக்கு நான் பேசியது காயப்படுத்தியிருக்கு‌. ஐ அன்டர்ஸ்டாண்ட்.

புருஷன் பொண்டாட்டி நடுவுல முதல்ல ஈகோ தேவையில்லாதது. எனக்கு எந்த ஈகோவும் இல்லை. உன்னிடம் மன்னிப்பு கேட்டுடறேன். ஏன்னா இந்த ஈகோ வச்சி என்னால் ஆறு மாசம் ஒரு வருஷம்னு முகம் திருப்பிட்டு போக முடியாது. உன் முகத்திலும் போலி புன்னகையை பார்க்க விரும்பலை.

உங்க வீட்ல இருந்தப்ப நீ நடிச்சது உங்கப்பாவுக்காக. இங்க நீ நடிக்க கூடாது. உன் உதட்டில் எப்பவும் 916 அளவுல கொஞ்சமும் குறையாத உண்மையான சிரிப்பு தான் இருக்கணும்.

முகம் தூக்கி வச்சி நடமாடாத. இது நம்ம வீடு. நம்ம ரூம். நீ என்னோட சம்ருதி.

உன்னிடம் இதுக்கு முன்ன என் வார்த்தை காயப்படுத்தினா ஐ ரியலி சாரி.
அதோட இப்ப உன் அனுமதி இல்லாம கிஸ் பண்ணியதுக்கும் சாரி.

உன் மனசுல கோபம் குறைந்து காயம் ஆறவும் சொல்லு. அதுவரை காதலர்களாகவே இருப்போம்.‌” என்றான்.

விகர்த்தனனுக்கு ஆண் என்ற செருக்கு துளியும் இல்லை. விரும்பி மணந்தவளிடம் என்ன வீராப்பு. அதோடு இதென்ன பிடிக்காத இருவரின் திருமணமா?

இருமனமும் ஒருமனமாய் மாறிய பின் முன்னால் காதலை கூட தங்கள் காதலில் பிரச்சனை வராமல் கையாண்டவனின் தெளிவான திருமணம்.

மனைவியிடம் மண்டியிட்டு பேசி மன்னிப்பு கேட்பதில் அவனுக்கு சந்தோஷமே. அதுவும் அவள் தவறாய் புரிந்திருக்க தெளிவுப்படுத்தும் கடமையும் அவனுக்குரியதே.

சம்ருதிக்கு அவன் மன்னிப்பு கேட்டு பேசியது எல்லாம் அவளை சிலையாக நிற்க வைத்தது. அவளிடம் எப்படியெல்லாம் வீராப்பாய் கல்யாணத்திற்கு முன் பேசினான். அதை எண்ணி கூட அழுதிருக்கின்றாளே? இந்த திருமணம் நிம்மதி தராதென்று.

அவனது அறையிலிருந்த ப்ரிட்ஜில் ஐஸ் வாட்டர் குடித்து அவளிடமும் நீட்டினான். 

“தண்ணி குடி. பூவெல்லாம் பெட்ல இருக்கட்டும். அதான் பாதி களைச்சிட்டியே. இயற்கை பூ அறை முழுக்க வாசனனையா இருக்கு அதனால் நிம்மதியா தூங்கு. வீம்பு பிடிச்ச என் சம்ரு, கொஞ்சம் யோசித்தாளே தெளிவா முடிவெடுப்பா.” என்று வலது கையில் அழுத்தம் கொடுத்து கூறிவிட்டு படுத்துக் கொண்டான்.

சம்ருதியும் படுத்து கொண்டு விகர்த்தனன் பேசியதை அசைப்போட்டாள்.

அன்றும் இன்றும் அவன் பேசிய தோணியில் இளக்காரம், நக்கல், அகம்பாவம் இது எதுவுமில்லை. கர்வம் இருந்ததாக அவனே கூறினான்.

கர்வம் என்ற சொல்லில் தான் புத்தி தவறாய் சிந்தித்து விட்டது.

கர்வம் நல்ல விஷயத்திற்கும் வரும் அல்லவா?! ‘இவள் என் காதலி என்ற கர்வம்’ அந்த அர்த்தத்தில் அவன் உரைத்தது‌ இப்பொழுது புரிய துவங்கியது.

அதை உணர இரண்டு மணி நேரமானது. 

இதில் சம்ருதி விகர்த்தனனை அறைந்து விட்டாள்.
மன்னிப்பு கேட்டவன் துளியும் தான் அடித்ததற்கு பதில் கோபம் கொள்ளாமல் உறங்குகின்றான்.‌

அவனை அடித்து கையை முகத்திற்கு நேராக‌ வைத்து, ‘செல்ப் கன்ட்ரோல் இல்லாத சம்’ என்று திட்டிக்கொண்டாள்.

இன்று திருமண நாள் மேடையில் எல்லாம் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்த தருணங்கள் மனதில் வந்து போக, அவனோடு பேசி சிரித்து மற்ற நாட்களும் மனதோடு உறவாடியது.

 இந்த இனிய இரவை தானே கெடுத்துவிட்டோம் என்று புரிய, தன்னையே நொந்துக் கொண்டாள்.

விகர்த்தனன் அளித்த முதல் முத்தம் மெதுவாக உணர்ந்து அவள் இதழை தொட்டும் பார்க்க, வெட்க மலர்கள் பூத்தது.

உறக்கம் முற்றிலும் வராமல் சதி செய்ய, விகர்த்தனனை தீண்டினாள். 

முதல் தீண்டலிலேயே “நான் தூங்கலை, முழிச்சிட்டு தான் இருக்கேன். என்னனு சொல்லு?” என்று இமை மூடியபடி கேட்டான்.‌

சம்ருதிக்கு மெல்லிய புன்னகை அரும்பியது. “எனக்கு தூக்கம் வரலை” என்று கூறினாள்.

“அதுக்கு?” என்றவன் இமை திறக்காமல் பேசினான்.‌

”நானும் உங்களிடம் சாரி கேட்டுக்கறேன்.‌ மேபீ சாரி கேட்டா தூக்கம் வருதான்னு பார்க்கறேன்” என்று சிரிப்போடு பதில் தந்தாள்.

“ம்ம்” என்றான்.‌

“என்ன ம்ம்?” என்றாள். மன்னிப்பு கேட்டும் ‘ம்’ என்றால்…?

“சாரி அக்சப்டட்” என்று கூறி தலையணையை அரவணைத்து உறங்க, ‘பச் நல்ல மூடை ஸ்பாயில் பண்ணிட்டு தூக்கம் வருதான்னு பார்க்க போறாளாம்’ என்று முனங்கினான்.‌

‘சாரி கேட்டாச்சு என்னை பார்த்து திரும்பி படுத்தா என்னவாம்?’ என்று அவனையே பார்த்து உதடு பிதுங்கி முனங்கினாள்‌.

புரண்டு புரண்டு படுத்தவளுக்கு உறக்கம் எட்டாக் கனியாக மாற,  "விகர்" என்று அவனை உலுக்கினாள். "என்ன Sam" என்று எழுந்தான். 

“நம்ம லைஃப்ல எப்பவும் என் பாஸ்ட் வச்சி பேச மாட்ட தானே?” என்று கேட்டாள்.

“ஏய் இவ்வளோ நேரம் என்ன பேசினேன். புரியலையா…

கண்டிப்பா பால்கனி மேட்டர் பேசுவேன் ஆனா அது நமக்குள்ள மட்டும். நீ பால்கனில எனக்காக ஏறி வந்தது எவ்ளோ பெரிய விஷயம்‌.” என்று பூரிப்பாய் பேசினான்.

அவன் பேச்சிலேயே கிருஷ்ணா பற்றி வராதென்று அப்பொழுதே புரிய துவங்கியது. பேச்சுக்கு கூட சுட்டி காட்டி சொல்லவில்லையே.

அவன் நெஞ்சில் பொசுக்கென்று முகம் வைத்து படுத்துக்கொண்டவள், மெதுவாக விகர்த்தனனின் நெஞ்சில் இதழால் ஊர்வலம் நடத்தினாள்.

“சம்ருதி?” என்றவன் இதழில் கையை வைத்து, அவனிதழில் தன்னிதழ் பொறுத்தினாள்.

“சாந்தி முகூர்த்தம் வேஸ்ட்னு நினைச்சேன். என் சம்ரு உடனே மனசு மாறிட்டா.” என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்து சத்தமாய் பேசினான்.

பெண்ணவளும் நாணி சிரிக்க, “ஓய்… விடிஞ்சதும் குய்யோ மொய்யோனு கத்தின? அவ்ளோ தான்” என்ற எச்சரிக்கையை கொடுத்து, அவள் தொடங்கி வைத்த முத்த ஊர்வலத்தை தனதாக்கி பயணித்தான்‌.

காதலென்ற முத்த விமானத்தில் ஏறி விட்டான். இனி அவர்கள் பயணத்தில் நாம் அதிகப்படி என்று காற்றும் இருளும் அவர்கள் கலவியை தொடர் கண்மூடிக்கொண்டது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

யாரெல்லாம் பிடிக்காத கல்யாணம் அடிதடி ஆர்ப்பாட்டம் டாம் அண்ட் ஜெர்ரி ஃபைட் எக்ஸ்பெக்ட் பண்ணினிங்க.

. சாரியா…. எப்ப பாரு அது போல கதைகள் வருது. அதான் ஸ்கிப் பண்ணிட்டேன்

தன் காதலை கூட தோல்வி என்றதும் மனதை தயார்படுத்தும் நாயகி.

தன் நண்பன் காதலியாக இருந்த பெண், தோல்வியில் இருந்த சமயம் தனக்கு பிடித்தவுடன் காதலாக மாறியதும் நண்பனுக்கும் அவளுக்கும் ஹண்டில் பண்ண தெரிந்த ஹீரோ. இந்த ஒரீ விஷயத்துக்காக நிச்சயம் சண்டையை இழுக்க மாட்டாங்க என்பது என் கருத்து.

ஒவ்வொரு கேரக்டர் இப்படி தான்னு எழுதறப்ப இந்த கதைக்கு இப்படி கொடுக்க என்‌மூளை அறிவுறுத்தியது.

நாளைய எபிசோட்ல சந்திப்போம்‌

வசந்த் பத்தி அவங்க தெரியவருமா? வசந்த் ஏதாவது செய்ய ஞ்ரை பண்ணுவானா. என்னனு பார்ப்போம்.

16 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை-20”

    1. நெஞ்சை கொய்த வதுகை …!
      பிரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 20)

      அடப்பாவி… விகர்..! இப்படி பொசுக்குன்னு சாரி கேட்டு ஒரேயடியா சரண்டர் ஆகிட்டியேடா..! இதுக்கா டா..
      அன்னைக்கு ராவணன் மாதிரி தூக்கிட்டுப் போவேன், ராமன் மாதிரி காதலை கொண்டாடுவேன்…. ராவணனும் நானே, ராமனும் நானேன்னு டயலாக் விட்டே..?

      போடா… போடா ஊசிப்போன ஊத்தப்பம்…! உன்னை நம்பி
      சம்முவுக்கு சப்போட்டா வித்த
      என்னை சொல்லணும் டா..!

      அடியேய் சம்மு… ! பூவெல்லாம் வீணாப் போகக்கூடாதுன்னு
      தொபக்கடீர்ன்னு அவன் கால்ல விழுந்துட்டியா..? நீ ஏதோ அவனை வைச்சு செய்யப் போறேன்னு, நான் வேற உனக்கு ஓவரா சப்போட்டா வித்தேன் பாரு… என்னைச் சொல்லணும். இனி, என் லைஃப்ல நான் யாருக்கும் சப்போட்டா விக்கவும் மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன்…
      போடா…. போடி…!
      😄😄😄
      CRVS (or) CRVS 2797

  1. Superb epi sisy. Intha mari sanda vanthu athu puriyama thodarumonu nichathuku pathila ippadi vikar Sam purinji porumaiya pesi puriyabvachi atha Sam yosichi purinjikittu sorry ketu avanga life la love ah thodarnthathu superb ah iruku . Normala ella story la vara mari ilama ithu different ah iruku intha mari situation oru silar life la irukum kandipa aana ethana purinjipanga no chance than.

  2. Super sis nice epi 👍👌😍 romba correct ah soneenga sis love erundha kandipa onnu serndhiduvaanga endha fight ellam thodarumo nu naanum nenachen pa but super solve ayiduchu😍😍😍😘❤️💕🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!