அத்தியாயம்-22
சிங்கப்பூரில் தங்கிருந்த அறையில் பால்கனியில் விகர்தனன் மடியில் சம்ருதி வீற்றுக் கொண்டு இரவை ரசித்தாள்.
ஒரு மாதம் கழிந்ததே தெரியவில்லை.
”நாளைக்கு இந்தியா போகணுமா விகர்?” என்று அலுப்பாய் கேட்டவளிடம் சிரித்துக்கொண்டே “அங்க போன பிறகு, நீ உங்க அம்மா வீட்லயும் நான் நம்ம வீட்லயும் இருக்கப்போறதா பேசற. நீயும் என் கூடவே தானே இருப்ப” என்று அவளது ஸ்லீவ் டாப்பில் கையில் தன் விரலால் ஊர்வலம் நடத்தி கேட்டான்.
“என்னயிருந்தாலும் ஹனிமூன் ஓவர்ல. இது ஸ்பெஷல், முன்ன போன இடத்துல எல்லாம் கைகோர்த்து அழைச்சிட்டு போனது எல்லாம் தனி உலகத்துல இருந்த பீல்.
சென்னை போனா நீ ஆபிஸ் நான் வீடு கொஞ்சம் நமக்குள்ள பிரிவு ஏற்படும்” என்று கூறியதும், விகர்த்தனனோ “அதுக்காக இங்கயே இருக்க முடியாதே. அடிமட்டத்திலருந்து மேல வந்தவங்க நாங்க. உழைப்பையும் விடாம ஒருபக்கம் நடத்தியாகணும். எந்நேரமும் உன் கூடவே இருக்க முடியாது.” என்று பதில் தந்தான்.
“இது தான் விகர். உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. பொய்யா நான் அங்க போனாலும் உன் கூடவே இருப்பேன். நீ தான் முக்கியம்னு வசனம் பேசாம, எந்நேரமும் கூட இருக்க முடியாதுனு பிராக்டிக்கலா பேசற. ஐ லவ் யூ” என்று கன்னத்தை கிள்ளினாள்.
”அதுக்கெல்லாம் சேர்த்து நைட் ஷிப்ட் இருக்குல்ல.” என்று கூறினான்.
அதே நேரம் கிருஷ்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது.
விகர்தனன் அதை கண்டு, “ஒன் மினிட்” என்று போன் பேச, சம்ருதி தங்கள் உடமைகளை பேக் செய்ய சென்றாள்.
“என்னடா சொல்லற?” என்று குரல் கணீரென்று கேட்டது.
சம்ருதி திரும்பி பார்க்கவும் சிரித்துவிட்டு, “சரி சரி நான் வந்துடுவேன்.” என்று கூறி போனை அணைத்தான்.
விகர்தனன் தலை பாரமானது, இத்தனை நாள் சந்திரசேகர் விஷயம் கூறாமல் அம்பலவாணன் தவிர்த்திருக்க, இன்று கூறப்பட்டது.
அது கூட விகர்தனன் வருவதாக அம்பலவாணன் அவனிடம் கூறவும், இங்கு வந்ததும் நண்பன் தன்னிடம் பாய்ந்தாலும் பாய்வான் என்று கூறியிருந்தான்.
விகர்தனன் சிந்தனைவயப்பட்டவனாக அதன்பின் மாறினான்.
வசந்தை தண்டிப்பதா கண்டிப்பதா? என்று. சந்திரசேகர் மாமாவை பார்த்தப்பின் முடிவெடுக்க வேண்டியதென்று ஓரளவு முன்னேற்பாடு செய்துக்கொண்டான்.
விமானத்தில் ஏறியமர்ந்தப்பின், சம்ருதி ‘என்னாச்சு அடிக்கடி இவர் கவனம் இங்கில்லையே.’ என்று அறிந்தாலும் கேட்கவில்லை. கிருஷ்ணா அழைத்து பேசியப்பின் ஏற்பட்ட மாற்றம் என்பதால் ஏதேனும் பிரச்சனை என்றவரை யூகித்தாள்.
விமானம் லேண்ட் ஆகும் போது, சம்ருதி கைகளை பிடித்து, “இப்ப எல்லாம் பிளைட் டேக்காஃப் ஆனாலும் லேண்ட் ஆனாலும் பயமில்லையா” என்று கேட்க, “ம்ம்ம் எனக்கே ஆச்சரியமா இருக்கு. உங்க கூட வந்தா பயமே வரலை” என்றவளிடம் நெற்றியில் இதழ் பதித்தான்.
சென்னை வந்து இறங்கியதும், கார் தயாராய் காத்திருக்க, அதில் லக்கேஜை திணித்து காரில் பின்னிருக்கையில் பயணித்தனர்.
நேராக விகர்தனன் வீட்டுக்குள் கார் நுழையவும், ஹாலில் அன்னை ஜானகியும், தந்தை சந்திரசேகரும் மாமா அம்பலவாணனுடன் உரையாடுவதை காண நேர்ந்தது.
“அம்மா… அப்பா.. நாங்க இங்க இப்ப வருவோம் எங்களை பார்க்க வந்துட்டிங்களா?” என்று அன்னை அருகே அமர்ந்தாள்.
“பிரயாணம் சௌகரியமா இருந்ததா?” என்று சுரத்தையின்றி கேட்க, வெட்கப்பட்டு தலையாட்டினாள்.
விகர்தனனோ “என்ன முடிவு மாமா எடுத்திருக்கிங்க?” என்று வந்ததும் கேட்டுவிட்டான். அவனுக்கு தான் நிலவரம் தெரிந்து விட்டதே.
“தெரியலை மாப்பிள்ளை. அக்கா பையன் என்று விட்டது என்னை தலைகுனிய வைக்கும்னு நினைக்கலை.” என்று வருந்தினார். சம்ருதியோ தாய் தந்தை முகத்தை அதன் பின்னே கவனித்தாள். தேன்நிலவு சென்று வந்ததால் தாய் தந்தை முகத்தை நிமிர்ந்து சரியாக பார்க்க தயங்கியதால், தந்தை இப்பொழுது பேசியப்பின்னே இருவரை சரியாக ஆராய்ந்தாள். கவலை ரேகை தந்தை முகத்தில் அப்பியிருக்க, “என்னாச்சு” என்றாள்
“நீங்க ஏன் மாப்பிள்ளை முன்னாடியே வசந்த் பத்தி என்னிடம் சொல்லலை?” என்றார்.
தந்தை முழுவதும் மாமனாரிடம் கூறியதை அவர் பேசியதில் புரிந்து கொண்ட விகர்தனனோ, “முன்னவே சொல்லியிருந்தா உங்களோட உறவை நான் புதுசா வந்து கெடுத்ததா என் பெயரை பரப்பி விட்டிருப்பான் மாமா.
சத்யமூர்த்தி அந்தளவு கேடி. வசந்த் இன்னோசெண்ட் என்று நினைச்சேன். ஆனா அவனால கிருஷ்ணாவிடம் மோத முடிந்த தைரியம் என்னிடம் மோத முடியாம போனதால், உங்களை வச்சி செஞ்சுட்டான்.” என்று வருந்தினான்.
சந்திரசேகரும், “உண்மை தான் அவன் என்னை பழிவாங்கியதும் சரிதான். மாமன் பொண்ணும் நகைகடையும் தனக்குன்னு நினைச்சிருப்பான். அது இல்லையென்றதும் செஞ்சிட்டான். இப்ப மானம் மரியாதை இழந்துட்டேன்” என்று குழந்தை போல துவண்டார்.
அம்பலவாணனோ ”இப்படி தான் எந்நேரமும் பீல் பண்ணிட்டு இருக்கார். அதனால் தான் இவரையும் சம்பந்தி அம்மாவையும் நம்ம கண் முன்ன இருக்கட்டும்னு கொஞ்ச நாள் கூடயிருங்கன்னு சொல்லிட்டேன். அட்லீஸ்ட் நீ வரும் வரையாவது இருக்க சொன்னேன்.” என்று விளக்கினார்.
“நல்லதுப்பா…. சரியான முடிவு. கிருஷ்ணா மூலமா செய்தி சேனல்ல நியூஸ் பெருசா லீக் ஆகாம பார்த்துக்கிட்டதும் குட் ஐடியா. என்ன தப்பான நேம் நகை கடைக்கு வந்துடுச்சு. திரும்ப சரிப்படுத்தணும் நகை கடைக்கு பெயர் முக்கியம்.
ஒன்னுமில்லை… கடையில் நம்பகமான ஒருத்தரின் மேற்பார்வையில் இத்தனை நாள் கடையை விடப்பட்டுயிருந்து தற்போது அவர் கடைக்கு அவப்பெயரை உண்டாக்கியதா மென்ஷன் பண்ணி ஏற்கனவே செய்தி போட்டாச்சு இல்லையா. அதுவே போதும். கொஞ்ச நாள் மறந்துடுவாங்க. மறதி தேசிய வியாதி. மாமா கடையிலேயே நகை வாங்கி பழகியவங்க திரும்ப அந்த கடைக்கு வருவாங்க” என்று அபத்தமாய் கூறினான்.
விகர்தனனுக்கு நன்றாகவே தெரியும். இதென்ன கொத்தமல்லி வியாபாரமா? தங்கம் விற்கும் விலைக்கு, நம்பிக்கை முக்கியம்.
தங்க நகைக்கடையில் நகை போலி என்றால் இனி யார் வாங்க முன்வருவார்கள்.
“இல்லைங்க மாப்பிள்ளை அந்த கிளையை நான் மொத்தமா மூடிட்டேன். அங்க வேலை செய்தவங்களை மத்த இரண்டு கிளையில் வேலைக்கு அமர்த்திட்டேன்.
இங்கிருந்து நகையெல்லாம் சரிபார்த்து மத்த கிளையில் வச்சாச்சு. இனி வசந்த் மேற்பார்வையில் இருந்த கிளையை திறக்க மாட்டேன்.” என்று ஆணித்தரமாக கூறினார்.
விகர்தனன் முடிவு எடுத்தவரிடம் மறுபரிசீலனை செய்ய பேசமாட்டான்.
அதோடு இந்த யோசனையும் சரியென்று தோன்ற, “அப்ப அப்படியே செய்துடலாம் மாமா.” என்று கூறினான்.
“அவனையும் இவரோட அக்கா புருஷனையும் போலீஸ்ல கம்பிளைன் பண்ண சொன்னா மறுக்கறார் மாப்பிள்ளை” என்று ஜானகி அவருக்கு உதித்த யோசனையை தெரிவித்தார்.
விகர்த்தனன் ”நானும் முதல்ல அப்படி செய்திருக்கலாம்னு நினைச்சேன் அத்தை. மாமாவுக்கா யோசித்து அப்பா வேண்டாம்னு முடிவெடுத்தா சொன்னார்.
என்னயிருந்தாலும் அக்கா அக்கா புருஷன்.
வசந்தை சம்ருதி கல்யாணம் செய்துப்பான்னு பல வருஷமா திட்டம் போட்டிருப்பாங்க. ஏன் கிருஷ்ணாவை ஓடோட விரட்டியிருக்காங்க.
அப்பவும் நான் குறுக்க வந்ததும் பெரிய டிஸ்அபாயின்மெண்ட் இல்லையா?! அந்த கோபமும் தனக்கு இனிமேலாவது ஒரு இடம் வேண்டும்னு நினைச்சிருக்கலாம். கடவுள் தண்டிப்பார் அத்தை” என்று ஆருடம் உரைத்தான் நாயகன்.
"உன் வார்த்தை பலிச்சிடுச்சு விகர்தனன்" என்று கிருஷ்ணா மூச்சு வாங்க ஓடிவந்தான்.
கிருஷ்ணாவை சம்ருதி எதிர்பார்க்கவில்லை.
அவனோ விகர்தனன் அருகே வந்து, “கடவுள் இருக்கான் டா மச்சி.” என்று வந்தவன், “அந்த பொண்ணு ஜனனி யாரையோ காதலிச்சு ஓடிடுச்சு. வீட்ல லெட்டர் எழுதி வச்சிட்டு கொஞ்சம் நகை பணத்தையும் எடுத்துட்டு போயிருக்கா.
அதை கேள்விப்பட்டு அந்த சத்யமூர்த்திக்கு பக்கவாதம் வந்துடுச்சு. அவரை அந்தம்மா சியாமளா ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. நானும் நவ்யாவும் நார்மல் செக்கபுக்கு மல்டி ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்பிடல்ல போனோம். செகண்ட் ப்ளோர்ல குழந்தைப்பேறுக்கான டாக்டர் இருந்தார். மாடில தான் பக்கவாதத்திற்கான பிரிவு. சியாமளா அவங்க புருஷனை அங்க சேர்த்திருக்காங்க.
இதுல ஹைலைட் என்னனா, வசந்த் சம்ருதியோட அப்பா கடையில் திருடியிருந்த நகையை வித்து பணமா மாத்த போயிருக்கான். அங்க போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டான்.
ஏது இவ்வளோ நகை என்று கேட்டதுக்கு பதில் சரியா சொல்லலை. அதனால் இப்ப ஸ்டேஷன்ல இருக்கான்.
அந்தம்மா சியாமளா போன்ல பேசிட்டு அழுதுட்டு இருந்தது. நவ்யா கேட்டுட்டு என்னிடம் சொன்னா.
நான் சத்யமூர்ந்தியை பார்த்ததுட்டு அங்கிருந்த நர்ஸிடம் பேசிட்டு, விஷயம் தெரிந்துகிட்டு, நவ்யாவை வீட்டுக்கு ஆட்டோல ஏற்றிவிட்டு நேரா இங்க வர்றேன். நீ எப்படியும் ஹனிமூன் முடிச்சி இன்னிக்கு வந்திருப்ப. அங்கிளிடமும் உன்னிடமும் நேர்ல சொல்லிட்டு போக வந்தேன்.” என்று ரயில் வண்டி போல நடந்தவையை அள்ளி வீசினான் கிருஷ்ணா.
சம்ருதி வாட்டர் பாட்டிலை நீட்டவும், தயக்கத்தோடு பெற்றுக்கொண்டு பருகினான்.
அதன்பின் மௌனமே ஆட்சி செய்ய, சம்ருதியோ, “சாரி கிருஷ்ணா உன்னை தப்பா நினைச்சி திட்டி அடிச்சதுக்கு.” என்று மன்னிப்பு வேண்டினாள்.
“நீ என்ன செய்வ விடு. அங்கிள்.. சாரி.. என்னயிருந்தாலும் உங்க அக்கா குடும்பம். நான் சந்தோஷமா பகிர்ந்து பேசியிருக்க கூடாது. என்னை மிரட்டி காயப்படுத்தினவங்க இப்ப கஷ்டப்படும் போது நான் சந்தோஷப்படறேன். ஏன்னா நான் சாதாரண மனுஷன்.” என்று சம்ருதி தந்தையிடம் பேசினான்.
ஜானகியோ, “அட நீங்க வேற தம்பி. நல்லவங்க என்றால் பாவம்னு அனுதாபப்படலாம். நமக்கு கெடுதல் செய்தவங்க என்ற போது நம்ம அதுல சந்தோஷப்படுவது எதார்த்தம். உங்க மேல தப்பில்லை.” என்றார்.
எத்தனை நாள் கோபமோ நாத்தனார் குடும்பம் இன்று நிர்கதியாக நிற்க ஜானகியிடம் இந்த பதில் தான் உதிர்த்தது.
“மாமா?” என்று விகர்தனன் மாமனாரை தீண்டவும், “என் மகளை என்னைக்கு புட்பாய்ஸன் கொடுத்து ஆஸ்பிடல்ல சேர்த்திட வச்சது தெரிந்ததோ அப்பவே அக்கா, அக்கா புருஷன், அக்கா மகன், அக்கா மக எல்லா பாசமும் அத்து போச்சு மாப்பிள்ளை.
என்ன எனக்கும் தண்டனை வேண்டும் இல்லையா? என்னயிருந்தாலும் அவங்க மனசுல சம்ருதி மருமகளா நினைக்கும் விதமா நடந்திருக்கேன்.
வசந்தை இவளோட பாதுகாப்புக்கு அனுப்பி, அவனுக்கு இவளை கல்யாணம் செய்ய ஆசை காட்டியதும் நான் தானே. அதான் எனக்கு நகைக்கடையில் ஆண்டவன் நம்பிக்கை இல்லாத விதமா பெயரை ரிப்பேர் பண்ணிட்டார்.
எல்லாம் கணக்கும் சரியாகிடுச்சு மாப்பிள்ளை. முதல்லயே ஜானகி பேச்சையும் கேட்டிருக்கணும். சம்ருதி யாரையோ விரும்பறா, நீங்களே நேர்ல போய் விசாரிங்க. வசந்த் எல்லாம் வேண்டாம்னு தலைபாடா அடிச்சிக்கிட்டா. நான் தான் அக்கா, மச்சான், அக்கா பையன் என்று நம்பினேன். இப்ப எனக்கும் தண்டனை தந்து உட்கார வச்சிட்டார் கடவுள்.
அதோட சில புண்ணியமும் செய்திருக்கேன். நல்ல மனுஷங்களை என் மகளுக்கு அமைச்சக கொடுத்துட்டார் அந்த கடவுள்.” என்று விகர்தனன் கையை பற்றினார்.
“இப்ப நான் எது பேசினாலும் உங்களுக்கு நான் ரொம்ப நல்லவனா தெரிவேன். விடுங்க.. முடிந்ததை பேச வேண்டாம். செம பசி குளிச்சிட்டு வந்து சாப்பிடணும்.” என்றான்.
“மச்சி… நீயும் உட்காரு சாப்பிட்டு தான் போகணும்” என்று கிருஷ்ணாவை பார்த்து சொல்ல, “அய்யோ… இல்லைடா இன்னொரு நாள் வர்றேன். நவ்யா எனக்காக காத்திருப்பாடா. அங்கிள் கிளம்பறேன்” என்று அம்பலவாணனிடம் உரைத்து எழுந்தான்.
“நான் கிளம்பறேன் அங்கிள். ஆன்ட்டி அங்கிளை பார்த்துக்கோங்க” என்று ஜானகியிடம் சந்திரசேகரை பார்த்துக்க கூறி புறப்பட தயாரானான். என்னயிருந்தாலும் துவள நேரலாம்.
சம்ருதி நிற்கவும், ‘வர்றேன் சம்ருதி உங்கப்பாவை பார்த்துக்கோ. கொஞ்ச நாளைக்கு உன் கூடவே வச்சிக்கோ. உனக்கு அப்பான்னா பிடிக்கும். அதுக்காக சொன்னேன்” என்று கூற அவள் தலையாட்டவும் புறப்பட்டான்.
அம்பலவாணனோ “நீயும் விகர்தனனோட போம்மா. பயணம் செய்த களைப்பு தீர குளிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள சாப்பாடு தயாராகிடும்.” என்று கூற சம்ருதி ‘சரிங்க மாமா” என்று படியில் விகர்தனன் கரம் பற்றி நடந்தாள்.
-தொடரும்.

சூப்பர். .. சரியான தண்டனை. .. துரோகிகள் இன்னும் அனுபவிக்கனும்
Super epi kandipa seitha thappuku thanadanai kedaikum athu tha kedaichi iruku 4 perukum.
Super sis nice epi 👍👌😍 endha vasanth family ku nalla thevai dhan nalla padattum 😬
சூப்பர் சூப்பர் சூப்பர்
விகர்தனன் 👌👌👌👌👌👌
👌👌👌👌💕💕💕💕💕
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 22)
சும்மாவா சொன்னாங்க…? அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று சொல்லும்ன்னு…! இன்னொருத்தரோட கஷ்டம் நமக்கு சந்தோஷத்தை கொடுக்குதுன்னா… அது சரியான மென்டாலிட்டி கிடையாதுன்னுத்தான் அர்த்தம்.
ஆனா, நாம கஷ்டப்படறச்ச அவங்க சந்தோஷப்பட்டாங்க தானே..? தவிர, அந்த கஷ்டத்தை கொடுத்ததே அவங்க தானேங்கறச்ச ஒண்ணும் சொல்றதுக்கில்ல. இனிமே, துரோகிகளை நாலடி தள்ளியே நிப்பாட்டி வைக்கணும் அவ்வளவு தான்.
😄😄😄
CRVS (or) CRVS 2797
துரோகத்திற்கு சரியான தண்டனை 👍👍
Super super😍😍
Nalla thandanai andha throgi group ku chandrasekar avar evolo nambunaru
Super. Excellent. Intresting
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🫰🫰🫰🫰
nice episode sis.waiting for next.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜💜💜💜
கடவுள் இருக்கிறார் என்று நினைக்கின்றேன் தேவைதான்