Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-10

57 / 100 SEO Score

அத்தியாயம்-10

 

வீட்டில் வழக்கமான சத்தங்கள் இருந்தாலும்… சாராவின் மனசு மட்டும் குழப்பத்தில் இருந்தது.  இதில் சார்லஸ் குளித்து வந்து சாப்பாடு மேசையருகே அமர்ந்தான்.

 

சாரா அவனுக்கு இட்லி வைத்து, குருமா ஊற்றினாள். நிர்மலா மோஸஸ் மெர்ஸியை காண மேத்யூ வீட்டிற்கு சென்றியிருக்க, சார்லஸ் சாரா தனித்து இருந்தனர்

 

“நேத்து அந்த ஜோசப்… பேஷண்ட் சரியாகி?” என்று அவள் தானாகவே பேச்சை தொடங்கினாள்.

 

சாரா கை நடுக்கம் இல்லாமல் இருந்தாலும்… மனமோ சார்லஸ் சொல்லப்போவதை கேட்பதற்காக விழித்துக் கொண்டது.

 

“அவனோட கேஸ் கொஞ்சம் காம்பிளிகேட் சாரா” என்று சுவாசம் இழுத்தான்.

“என்னாச்சு?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.

 

சார்லஸ் ஒரு நிமிடம் சிந்தித்தான்.

பிறகு டாக்டர் போல இல்லாமல், ஒரு மனிதன் போல உணர்வுக்கு ஆட்பட்டு பேச ஆரம்பித்தான்.

 

”அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணிருந்தான். அவளும் அவனை ரொம்ப லவ் பண்ணியிருக்கா… சாரா

ஆனா..” என்று சிறிது பேச்சை நிறுத்தினான்.

“அந்த பொண்ணு லவ் சொன்னப்ப அவன் அதை விளையாட்டுக்கு எடுத்துக்கிட்டு அவளிடம் நான் உன்னை விரும்பலைனு பொய் சொல்லிட்டான். அந்த பொண்ணு உடனே அந்தயிடத்துல இருந்து  வேகமா ஓடிடுச்சு.

அடுத்த கொஞ்ச நேரம் அந்த பொண்ணோட ரியாக்ஷனை ஒளிந்து நின்று ரசிச்சிட்டு, அடுத்து அப்பா அம்மாவிடம் இவன் காதலை சொல்லி, இவ லவ்வை அக்சப்ட் பண்ண நினைச்சிருக்கான். அப்பா அம்மாவோட வந்து அந்த பொண்ணு போற சர்ச்ல, அவங்க பேரண்ட்ஸிடம் விவாகம் செய்ய பர்மிஸன் கேட்கலாம்னு பிளான் எல்லாம் போட்டிருக்கான். ” என்று கூறிவிட்டு இட்லியை விழுங்கினான்.

 

சாரா உள்ளுக்குள் ஏதோ சுருண்டது. “பின்னே?” அவள் குரல் கிட்டத்தட்ட கேட்காத அளவுக்கு மெலிதாயிருந்தது.

 

“என்னத்த சொல்ல.. அந்த பொண்ணு அவசரப்பட்டு காலேஜ் மாடிலயிருந்து இவன் கண்முன்ன குதிச்சிடுச்சு. அதை பார்த்து மனசளவில ஆடிப்போயிட்டான். ‘அய்யோ நானும் இவளை லவ் பண்ணறேன்னு அப்பா அம்மாவிடம் சொல்லி சர்ச்ல விவாகம் செய்ய நினைச்சேனே.. இன்னிக்கு மட்டும் ஒரே ஒரு நாள் அவளை அழவிடலாம்னு நினைச்சிருக்கான்.” என்றவன் தட்டில் கையலம்பி, “ஒரு நாள்… இன்னிக்கு ஒரு நாள்.. காதலிச்ச பொண்ணை அழவிடணும்னு நினைச்சான். அவ.. மொத்தமா அழவச்சிட்டு போயிட்டா.” என்றதும்

சாராவின் விரல்கள் தட்டில் சற்று இறுகப் பிடித்தது.

 

‘ஒரு நாள்.. இன்னிக்கு ஒரு நாள்…’  இந்த வரி சாராவின் மார்புக்குள் நேராக விழுந்தது. சார்லஸ் தொடர்ந்து பேசினான்.

“இப்போ அவன் என்ன பேசுறான்னா… ‘நான் தான் காரணம்… நான் தான் காரணம்…’ன்னு

அவளோட அவசர முடிவுல அந்த இறப்பை முழுக்க தன்னாலன்னு கில்டியா இருக்கான்.” சாரா கண்கள் மெதுவாக கீழே சரிந்தது.

 

சில நொடிகள் அவள் பேசவே இல்லை.

தானும் கிரேஸிடம் இதை தானே சொன்னோம். ‘ஒரு நாள்.. இன்னிக்கு ஒரு நாள்’ என்று கட்டாயப்படுத்தினோமே. இன்று அவளும் உலகத்தில் இல்லையே.

 

பிறகு மெதுவாக, “டாக்டர் சாரே” என்று சார்லஸ் முகத்தை பார்த்தாள்.

“அந்த சேச்சி இறப்புக்கு ஜோசப்பினே காரணமா? ஜோசப் பத்தி நிங்கள் அபிப்ராயம்” என்று கேட்டாள்.

 

அந்த கேள்வி என்னவோ  சின்னதுதான். சார்லஸை பொறுத்தவரை சாராவுக்கு ஏதோ கதை கேட்ட உணர்வு. உண்மையில் சாராவுக்கு சார்லஸ் தரும் பதிலில் முழு உயிரும் இருந்தது.

 

சார்லஸ் சிரித்தான். ஆனால் அது கசப்பான சிரிப்பு.

“முட்டாள்.” என்றான் நேராக.

சாரா கண்கள் சற்று விரிந்தது.

 

“ஒருத்தி இவ்வளவு லவ் பண்ணியிருக்கா… அவனும் காதலிச்சியிருக்கான்.  அப்ப அவ கேட்டதும் எஸ் சொல்லலாம்ல?”

அவன் குரல் இப்போ கடினமாயிருந்தது.

 

“அதுக்குப் பதிலா நோ சொல்லி பின்னாடி ‘ஓகே’னு சொல்லிடலாம்னு என்ன விளையாட்டு? அவன் தான் அவளோட லைப்னு புரியாதா?” என்றதும் சாராவின் மூச்சு மெதுவாக வேகமாயிற்று.

 

“அல்லா.. நான் ஜோடிக்காயினு ஒரு ஜீவன் மரிச்சுபோயி. அதுக்கு காரணம் ஜோசப். நிங்கள் அவனை எங்கனும் மனசில் காணும்.?

ஆ பெண்குட்டி வளர திடுக்கென பேருமாயி. மறிச்சும் போயி… அதுக்கு ஜோசப் காரணமின்னு நினைக்கிறில்லோ” என்று கேட்டாள்.

 

அதாவது..‌ ஒரு உயிர் அதுவாக தான் அவசரப்பட்டு இறந்துவிட்டது. ஆனால் இறப்புக்கு காரணம் ஜோசப் என்று நம்புகின்றனரா? மேலும் ஜோசப்பை பற்றி தங்கள் எண்ணம் என்னவோ?’ என்று சார்லஸ் கூறுவதை கேட்க ஆவலாக இருந்தாள்.

 

சார்லஸ் தட்டில் கை வைத்தபடி சொன்னான்.

“டேரக்டா பார்த்தா… அந்த இறப்புக்கு அந்த பொண்ணோட அவசரம் தான் காரணம். காதலிச்ச உடனே ஓகே சொல்லனும்னு எதிர்பார்த்திருக்க கூடாது. வெயிட் பண்ணிருக்கணும். பட் இன்டேரக்டா பார்த்தா…

அவளோட இறப்புக்கு ஜோசப் காரணம் தான். என்னயிருந்தாலும் ஒரு உயிர் போயிடுச்சே..” என்றான்.

 

சாராவுக்கு உலகமே நின்றது போலானது.

அவள் காதில் அந்த வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

 

“அவனால தான் அந்த பொண்ணு இறந்தா.. அவனால தான்… அதனால தான் ஒவ்வொரு நாளும் அப்பா அம்மாவிடம் முகம் திருப்பிட்டு சரியா பேசமாட்டேங்கறான். வீட்ல கோபப்படறான். வீட்டையே அலங்கோலமா மாத்திடறான். இரண்டு முறை சூசைட் அட்டன் செய்தான். கவுன்சீலிங் வந்துட்டு இருக்கான். கொஞ்சம் சரியாகற மாதிரி இருக்கு. ஆனா என்ன கிறுக்குத்தனமா செய்யறான்னு தெரியலை‌. அகைன் நேத்து எல்லாரையும் பார்த்து கத்தி கூச்சலிட்டு சாகறேன்னு கதவை தாழிட்டு அக்கப்போர் பண்ணிருக்கான்.” என்று

சார்லஸ் சாப்பிடத் தொடங்கிவிட்டான்.

அவனுக்கு இது ஒரு பேஷண்ட் கேஸ் மட்டுமே. ஆனால்

சாராவுக்கு இது ஒரு தீர்ப்பு போல மாறியது.

கிரேஸ் இறப்புக்கு தான் காரணம் என்ற எண்ணம் மேலும் தூண்டிவிடப்பட்டு விட்டது. கிரேஸ் விபத்தால் இறந்தாள் என்ற எண்ணத்தை விட, தன்னால் மட்டுமே இறந்துவிட்டாளென நெஞ்சம் அழுத்த சாரா மெதுவாக எழுந்தாள்.

“எனிக்கு தலை பாரமாயி” என்று சொல்லி அறைக்குள் சென்றாள். சார்லஸ் சாராவின் உள்ளுணர்வு வெளிப்பாட்டை அறியாதவனாக “ஓகே சாரா.. டேக் கேர்” என்று டிவியை போட்டு கேளிக்கையில் மனதை செலுத்தினான்.

 

கதவை மூடியவுடன், சாரா மூச்சு உடைந்து போனது, வாயை அடைத்துக் கொண்டாள். கண்ணீர் தன்னாலேயே வழிந்தது.

“கிரேஸ்” என்று அவள் உதடு துடித்தது.

‘நான்… நான் தான் காரணமா?’

சார்லஸ் சொன்ன வார்த்தை

அவள் மனசுல தீர்ப்பாக மாறிவிட்டது. ‘நானும்… அதே மாதிரி தானே’ என்று

அவளையே குழப்பிக் கொண்டாள்.

 

சாரா சுவரை பிடித்து நின்றாள்.

கண்ணீர் கட்டுப்படவில்லை.

‘நான் தான்…

நான் தான் அவளை கட்டாயப்படுத்தியது. கிரேஸ் மரிச்சு போனதுக்கு நான்‌ மட்டுமே காரணமாயி.’ என்று புலம்பி மெதுவாக தரையில் அமர்ந்தாள்.

 

நேரங்கள் செல்ல செல்ல, மேத்யூவிடமிருந்து அழைப்பு வந்தது. விமானத்தில் செல்லப்போவதாக கூறி, தங்கைக்கு அழைத்தான்.

 

சார்லஸ் தான் கதவை திறந்தான்.  ‘ஏய்.. சாரா தரையில அப்படியே..’ என்றவன் சாரா முட்டிக்கட்டி அமர்ந்திருப்பதை பார்த்து, “உங்கண்ணா மேத்யூ ஏர்போர்ட்ல இருக்கானாம். உன்னிடம் சொல்ல போன் பண்ணினான். இந்தா” என்று கொடுக்க, சாரா அழுகையை துடைத்து “ஆ.. சேட்டா.. குலுமனாலியோ.. ஆங்..‌ நல்லது” என்றாள். அவ்வூருக்கு சென்றதும் மெர்ஸி அன்னியோடு நிறைய போட்டோஸ் எடுத்து என்ட போனுக்கு அனுப்பு. நான் நோக்கா” என்றாள்.‌

 

மேத்யூவிடம் பேசி கத்தரித்ததும், போனை சார்லஸிடம் நீட்டினாள். அவனோ சாராவையே பார்க்க, “என்ட நோக்கிட்டு இருக்கே.. நிங்கள் போன்” என்றாள்.

 

சார்லஸ் போனை வாங்கிக்கொண்டு , “தரையில உட்கார்ந்து அழுவற? என்னாச்சு.. ஏய்.. சாரா.. என் மனசுல சத்தியமா துகிரா இல்லை.

நான் ஆண்டவர் முன்ன சர்ச் சபையில உன்னை மனசார தான் சரிபாதியா ஏற்றுக்கிட்டேன்.

ஹனிமூன் போறது உனக்கு கஷ்டமாயிருக்கும்னு நினைச்சேன். நீயும் நானும் பேசி அன்டஸ்டாண்ட் ஆகணும்னு ஆசைப்படறேன்.

நான் இரண்டு வாரத்துல எங்கயாவது போகலாம்னு கூட யோசித்துட்டேன்.

உனக்கு பிடிச்ச பிளேஸ் எதுனு ஏதாவது பேசறப்ப நைஸா கேட்டு தெரிந்து அழைச்சிட்டு போகலாம்னு நேத்து நைட் தான் நினைச்சேன்.” என்றான்.‌

 

“அய்யடா.. இது அதுக்கில்லா. நிங்கள் என்னை மனசார விவாகம் செய்தது நான் அறியும்” என்றாள்.

 

“பின்ன.. புரியலை. ஏன் இந்த அழுகை. அன்னிக்கும் இப்படி தான் அழுத. என்னனு சொல்லு. சொன்னா தானே தெரியும்.” என்றான்.‌

 

“ஒன்னுமில்லா.. நான் ஒரு பிராந்து. ஏதாவது நினைச்சி கிறுக்குத்தனமா யோசிச்சு.” என்று நழுவ முற்பட்டாள்.

 

அதற்கேற்ற விதமாக யாரோ விவாக பத்திரிக்கை வைக்க வந்து சேர்ந்தனர்.

 

“மிஸ்டர் மோஸஸ்.” “நிர்மலா சேச்சி” என்ற குரலில், சார்லஸ் நான் என்னனு பார்க்கறேன். நீ பேஷ் வாஷ் பண்ணிக்கோ” என்று ஹாலுக்கு விரைந்தான்.

 

சாரா உடனடியாக தலையாட்டி முகம் அலம்பி லேசான ஒப்பனையுடன் வெளிவந்தாள்.

 

அதற்குள் சார்லஸ் குடிக்க தண்ணீரும், ஜூஸும் ஊற்றி வந்தவருக்கு தந்திருக்க, “புதுமண தம்பதிகளை டிஸ்டர்ப் செய்து. வேற வழியில்லா… நாங்கள் நிர்மலா மோஸஸ் இருந்தால் விவாக பத்திரிக்கை வச்சிட்டு போக வந்தோம். எப்படியிருக்கம்மா?” என்று கேட்க, “ஆண்டவர் புண்ணியத்தில் ஆசிர்வதிக்கப்பட்ட இடத்தில் வந்து.” என்று கூறி சார்லஸை ஏறிட்டாள்.

 

சார்லஸோ கண்கள் சுருக்கி சாராவை கவனிக்க வந்தவன் மற்றவர்கள் காண்பதால் சுதாரித்து விட்டான்.‌

 

அதற்கு பிறகு வந்தவர்கள் பேசி செல்லவே அரை மணி தாண்டியது. சார்லஸ் திருமணத்தை தான் புகழ்ந்து பேசினார்கள். இரண்டு திருமணத்தை எப்படி தான் நிர்மலா ஒரே நேர்ததில் நடத்தி காட்டினார்களோ? விவாக பத்திரிக்கை வைத்துவிட்டு அலைவதற்கே இங்கே இடுப்பு ஓடிவதாக பேசினார்கள்.

 

எல்லாம் தந்தை தாயின் சாமர்த்தியம் என்பதா? இல்லை.. தான் திருமணம் செய்யாமலேயே காலம் கடத்துவேனென சாராவை பிடித்து இக்கட்டை கூட்டி விவாகம் நட்ததினார்களா? இரண்டும் தானே.

 

சார்லஸ் அதை இங்கே வந்திருப்பவருக்கு கூறமுடியுமா? அசட்டையாக சிரித்து நின்றான். சாராவும் மென்முறுவலிட்டு வந்தவர்கள் சொல்லும் வரை நடித்தாள்.

 

இதில் அவர்கள் செல்லவும், மீண்டும் வில்லியம்ஸ் கால் செய்ய, சாராவிடம் பேச வேண்டியதை கூட மறந்து, ஜோசபை காண போவதாக ஓடினான்.

 

செல்லும் பொழுது இந்தமுறை “என்ன கிறுக்குத்தனமோ? ஆண்டவா.. நல்ல திடமான மனதை எல்லாருக்கும் ஒன்னா தரலாம்ல” என்று கூறி விரைந்தான்.

 

சாராவுமே சார்லஸ் சென்

றதும் தனித்து இருந்தவள் கிரேஸை பற்றி நினைத்து நினைத்து, பழைய நினைவுகளுடன் சிக்கி கொண்டாள்.

 

-தொடரும்.

 

 

 

 

 

 

3 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-10”

  1. Unala tha grace eranghutanu ninaikira alavuku enannadanthuchi sara nee yen unakullayr potu confuse agura ena irunthalum charles unaku husband so avan unaku aatharava tha panuvan nalla sollution kodupan nee charles kitta first pesu athu tha crt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!