Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-13

58 / 100 SEO Score

அத்தியாயம்-13

 

சார்லஸ் எழுந்த போது சாரா மெத்தையின் ஓரத்தில் தலையணையை கட்டிப்பிடித்து ஜன்னலை வெறித்தபடி இருந்தாள். அவளிருந்த கோலமே அவள் உறங்கவில்லை என்றதை பறைச்சாற்றியது.

 

“குட் மார்னிங் சாரா” என்று குரல் தர, சாரா சார்லஸ் குரலில் திரும்பினாள்.

 

“நைட் தூங்கலையா?” என்றதும் “உறக்கம் வரில்லா” என்றாள்.

 

“ம்ம்ம்ம… எனக்கு சாயா கிடைக்குமா?” என்றதும், நான் எப்படி போய் கிச்சனில் சாயா போடுவது அங்கே நிர்மலா அத்தை இருப்பாரே என்று முழித்தாள்.

 

அவள் எண்ணத்தை அனுமானித்தவனோ “ப்ரஷ் பண்ணு.. நான் சாயா கொண்டு வர்றேன்” என்று பேஸ்டில் பிரஷை வைத்தபடி ஹாலுக்கு வந்தான். அங்கே மோஸஸ் பேப்பர் வாசிக்க, நிர்மலா டீயை பருகி கோபமாய் மகனை கவனிக்காதது போல இருந்தார்.

 

சார்லஸ் தனக்காகவும் சாராவுக்காகவும் டீயை போட்டு கொதிக்க வைத்து பல்லை விளக்கி கிச்சனில் இருந்த, சிங்கில் பாத்திரம் ஏதும் இல்லாததால் அதில் வாயை கொப்பளித்தான்.

 

இரண்டு டீ கோப்பையில் டீயை வடிகட்டி ஊற்றி எடுத்து செல்ல, “பைத்தியக்காரிக்கு சேவகம் செய்யணும்னு உனக்கு என்னடா தலையெழுத்து. நீ ஒரு டாக்டர். அவளை ஹெல்த் இஸ்ஸூனு சொல்லி  டிவோர்ஸ் செய்துடு வேற பொண்ணை பார்க்கறேன்” என்று சலனமேயில்லாமல் தெரிவித்தார்.

 

சார்லஸுக்கு கோபம் பன்மடங்காகியது‌. ஆனால் துகிரா விஷயத்திலேயே அமுல்யா குழந்தையை சாத்தான் என்று கூறியது இதே நிர்மலா தான். அதுவுமில்லாமல் அவனுக்கு அவன் அன்னையை பற்றி தெரியாதா? இதுவும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள் என்று அந்த மனோதத்துவ மருத்துவன் அறிந்ததே!

 

“அம்மா… நேத்தே வார்ன் பண்ணிட்டேன். அவளை அந்த வார்த்தை சொல்லி பேசாதிங்கன்னு. எனக்கு டிவோர்ஸ் வேண்டுமின்னா நான் பார்த்துக்கறேன். உங்களிடம் எதுவும் உதவி கேட்கலை. அப்பறம் தேவையில்லாம என் மனைவியை பேசாதிங்க. அது நல்லாயிருக்காது. இதை திரும்ப சொல்ல வைக்காதிங்க. அப்பறம் என்னை இழப்பிங்க” என்று கூறிவிட்டு சத்தமின்றி அறைக்கு சென்றான்.

 

சார்லஸ் குணமே ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமானவன். இல்லையென்றால் முன்பு மறுமணம் செய்ய துகிராவுக்காக அன்னையிடம் சம்மதம் வாங்கும் அளவிற்கு செல்வானா. இன்று அதே குணம் தான் சாராவுக்காக நிற்கின்றான்.‌

 

“சாரா டீ… உன் பாஷையில சாயா” என்றதும் கண்ணீரை கட்டுப்படுத்தி வாங்கி பருகினாள்.

 

அவள் பருகி முடித்து வைத்ததும், “ஏதாவது இன்னமும் டேபிளட் எடுக்கறியா?” என்று கேட்க, “இல்லை” என்று தலையாட்டினாள்.

 

“டாக்டர் ரிச்சர்ட்கிட்ட கவுன்சிலிங் போறியா?” என்று கேட்க “கிரேஸ் இறந்த இரண்டு வருஷம் போனேன். பின்னே… டேபிளட் மட்டும் மூன்று வருஷம் எடுத்தது. ரீசண்டா எந்த மாத்திரையும் எடுத்தில்லா. பட்சே… மேரேஜின்னு வந்ததும் திரும்ப மங்களூரில் ஒரு கவுன்சிலின் போயி.” என்றாள்.

 

“ம்ம்ம்.. உன் கேஸ் சம்மரி இருக்கா?” என்றான்.

 

“அம்மையிடம் இருக்கலாம்.” என்றாள்.

 

“ம்ம்ம்… ஐ அம் சாரி… என்னால உன்னை உட்கார வச்சி உன் பிராப்ளம் என்னனு கேட்க முடியலை. ஜோசப் சாக ட்ரை பண்ணி, இப்ப மோசமான கண்டிஷன்ல இருக்கான். அதுவே ஸ்ட்ரஸ் ஆகுது. என்னையே முதல்ல நான் மீட்டெடுக்கணும். எனக்கு என் வேலையில, என் பெர்சனலில, அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி.

அம்மாவுக்கு தெரியறதுக்கு முன்ன நீயா என்னிடம் உன்னை பத்தி ஷேர் பண்ண நினைச்சிருப்ப தானே?” என்றதும் சாரா அதிர்ச்சியுற்றவளாக மௌனியாக, தலையாட்ட, “அப்ப என்னிடம் எப்ப சொல்லலாம்னு  நினைச்சியோ அப்பவே சொல்லு. இன்னிக்கு நான் தூங்கணும். மச் பெட்டர்… நீயும் தூங்கலாம்” என்று படுத்துக் கொள்ள, கூறினான்.‌

 

ஜோஸப் கண்டிஸன் என்னானதோ என்று சாரா அதிர்ச்சியடைய, மெதுவாக படுத்துக் கொண்டாள். சார்லஸ் அந்த பையனுக்காக நள்ளிரவை கூட பொருட்படுத்தாமல் சென்றானே. அத்துடன் தன்னிலை தெரிந்ததும் பேரதிர்ச்சி.

 

இதில் வெளியே செல்லவே அஞ்சியவளாக சாரா கட்டாயத்தில் படுத்தவள் நிஜமாகவே உறங்கிவிட்டாள்.

மணி ஒன்பது முப்பதாக, நிர்மலா கோபத்தில் அறையிலிருக்க, அவனாக பிரட் ஆம்லேட் செய்தவன், தட்டில் எடுத்து வைத்து, போனில் மெர்ஸியிடம், “அம்மா உடனே சொல்லிட்டாங்களா? மேத்யூ பயப்பட போறார். ஏய்.. மெர்ஸி… சாராவை என் கூட அழைச்சிட்டு வந்துட்டேன்.

அவரை கவலைப்பட வேண்டாம்னு சொல்லு.

உனக்கு காரணம் தெரிந்தும் என்னிடம் சொல்லாம என்னை சாராவை மணக்க சரியான பெண் என்று நீ முடிவு செய்தப்ப, நான் ஏன் அவளை பத்தி தப்பா யோசிக்கணும்.” என்றான்.‌

 

“அண்ணா..‌ மேத்யூ பேசணுமாம்.” என்றாள். “கொடு” என்றான் சார்லஸ்.

 

“பயப்பட வேண்டாம் மேத்யூ. உங்க தங்கை தூங்கறா. அவளை பார்த்துக்கறது என் கடமை.

 

பட் எனக்கொரு டீட்டெயில் மட்டும் சொல்லுங்க. கிரேஸ் இறந்ததை இவ எப்படி பாதிப்படைந்தா? Prolonged Grief Disorderல பாதிக்கப்பட்டிருக்கா பார்த்தேன்.. இருந்தாலும்… நீங்க அன்னிக்கு நடந்ததை விளக்க முடியுமா?” என்று கேட்டான்.

 

எதையும் தெளிவுப்படுத்திக் கொண்டு சாராவை அணுகலாமென்ற எண்ணம் சார்லஸுக்கு.

 

மேத்யூவோ “சாராவும் கிரேஸும் ட்வின் சிஸ்டர் என்பதால ஒன்னா தான் வளர்ந்தாங்க சார்லஸ். எப்பவும் ஒரே உடை, ஒரேவிதமான உணவு, இப்படி தான். சில நேரம் கிரேஸ் அவளோட உணவு உடை கொஞ்சம் வேண்டுமின்னே ட்ரை பண்ணி வேற மாற்றிப்பா.

அன்னிக்கு ஒன்னா ராட்டினத்துல ஏறினாங்க. அங்கிருந்து தவறுதலா கீழே விழுந்து கிரேஸ் இறந்துட்டா சார்லஸ்.

அதுவொரு விபத்து தான். அந்த விபத்துல அன்னிக்கு ராட்டினத்துல இருந்தவங்களில் சிலருக்கு அடிப்பட்டு கால் கூட போயிருக்கு.

எங்க சைட் கிரேஸ் இறந்துட்டா. அது பெரிய இழப்பு. அதுலயிருந்து சாரா ‘கிரேஸ் விருப்பமில்லாம ராட்டினத்தில ஏறினா நான் தான் கம்பல் பண்ணி வரச்சொன்னேன். இப்ப அவ இறந்தது என்னால தான்‌’னு ஸ்டெபிள் இல்லாம விடாம புலம்பினா.

 

அப்ப தான் டாக்டர் ரிச்சர்ட்கிட்ட கவுன்சிலிங் போனது. அப்பறம்… இரண்டு வருஷத்துல டேபிளட் கவுன்சீலிங் பிராசசஸ்ல மாறிட்டா. டாக்டர் கூட க்ளியராகிட்டானு ஸ்டேட்மெண்ட் தந்தாங்க.  என்னயிருந்தாலும் இங்க இருக்க வேண்டாம்னு தான் வேற ஸ்கூல் வேற ஏரியானு மங்களூர் போர்டிங் ஸ்கூலா சேர்த்துட்டாங்க.

இங்கயிருந்தா கிரேஸ் பத்தி ஏதாவது நினைவலைகள் பேசி அம்மாவை கதிகலங்க வச்சி அவளும் பழைய நினைவுகளுக்கு போறான்னு தான்‌, சாரா மங்களுர்ல சேர்த்தோம். புது பிரெண்ட் புது ஊர், டேப்ளட் கொஞ்சமா, இதெல்லாம் சாப்பிட்டு ரொம்ப பெட்டரா மாறினா. ஆனாலும் வளரந்தப்பிறகு அவ இரண்டு இரண்டு பொருளா வாங்கவும் தான் அகைன் டவுட் ஆச்சு. அப்ப கேட்டப்ப தான் சாரா கிரேஸ் கூட இருப்பதா நினைச்சி அவ அவளையே ஏமாத்திட்டு வாழறது தெரிந்தது.

 

அகைன் மெடிஸன் எடுத்துக்கிட்டா.  இங்க எனக்கு கல்யாண பேச்சு ஆரம்பிக்கவும், அம்மாவுக்கு அவ கல்யாணம் நடக்காதேனு ஒர்ரி பண்ணினாங்க. அப்ப தான் சடனா ஆன்ட்டி உங்களுக்கு சாராவை கேட்டதும், தடுமாறி தயக்கத்தோட கல்யாணம் பண்ணிட நினைச்சாங்க. வீட்ல பிராங்கா சொல்லணும்னா அப்பா அம்மா இரண்டு பேரும், உங்களிடம் கிரேஸ் பத்தி மூச்சு விட கூடாதுன்னு அதட்டி சொன்னாங்க. அத்தோட அவளோட ட்ரீட்மென்ட் போனதும் உலராதேனு சொல்லி விட்டாங்க.

 

எனக்கு மெர்ஸியிடம் பேசினப்ப அவ உங்க காதல் கதை எல்லாம் சொல்லி பிராங்கா பேசவும், என்னால எதையும் மறைக்க முடியலை. அதான் அவளிடம் சாரா பத்தி ஷேர் பண்ணினேன். மெர்ஸி அதுக்கு பிறகு தான் சாராவிடமும் தினமும் நல்லா பேசினா. சாராவுக்கு எந்தவிதமான நோயும் இல்லைன்னு அவளுக்கு புரிந்துடுச்சு. என்னிடம் உங்க அப்பா அம்மாவிடம் ஏதும் சொல்ல வேண்டாம்னு சொல்லியிருந்தா.

 

சாராவிடம் ஒரு பிரெண்டா மாறி பேசி உங்களை பத்தி சொல்வா. நீங்க பேசாட்டியும் சாராவுக்கு உங்களை பத்தின நல்லபிப்ராயம் மெர்ஸி மூலமாக தெரியப்படுத்தினா.

அப்படி தான் துகிரா லவ் மேட்டர் சொன்னது. சாராவுக்கு நீங்க மேட்ச்னு மெர்ஸி தான் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சது‌

மெர்ஸி நம்பிக்கை வீண் போகலை. இப்ப நம்பிக்கையானவரா நீங்க தான்‌ ஆண்டவருக்கு நிகரா இருக்கிங்க.” என்று பேசவும், சார்லஸ் “சரி மேத்யூ… டென்ஷன் இல்லாம வாங்க.” என்று கூறினார்.

 

அத்துடன் போதுமென விட்டுவிட்டான். மரியமும் சாராவுக்கு முதலிலிருந்து பார்த்த ட்ரீட்மென்ட் முதல் கடைசியாக பார்த்தவரை எல்லாவற்றையும் வாட்சப்பில் அனுப்பியிருக்க, அதையெல்லாம் பார்த்தான்.‌

சாரா புரண்டு படுக்கும் போது சார்லஸ் போனை தீவிரமாக பார்ப்பதை கண்டு எழுந்தாள்.

 

போனிலிருந்து கண் எடுக்காமல், “சாரா பிரேக்பஸ்ட் சாப்பிடு” என்று அறிவுறுத்தினான்.

 

சாரா நேற்று பிரட் பால், இன்று  பிரட்ஆம்லேட் என்றதுமே சார்லஸாக தனக்கு உணவை தயாரித்து கொண்டு வந்ததை யூகித்துக் கொண்டாள்.

 

அவனையே பார்த்து தட்டிலிருந்து எடுத்து விழுங்கினாள்‌.

 

எல்லாவற்றையும் பார்த்து முடித்து சார்லஸ் போனை ஓரம் கட்டினான்.‌

 

“சாரா.. உன்னோட கேஸ் சம்மரி பார்த்தேன். பயப்படற மாதிரி எதுவுமேயில்லை. நீ ஆல்ரெடி சரியா தான் இருக்க. பட்… உன்‌ மனசுல ஏதோ ஓடுது பாரு.. அதை மட்டும் என்னனு தெரிந்தா நான் க்ளியர் பண்ணி அதுக்கு ட்ரீட்மென்ட் பார்த்துடலாம். அதர்வைஸ்… எங்கம்மா சொல்லற வார்த்தைக்கு நீ பயந்து சோகமா இருக்க வேண்டியதில்லை.” என்றான்.

 

சாராவோ பிரட்ஆம்லேட்டை விழுங்கியவளாக, ”டாக்டர் சாருக்கு நான் பிராந்தில் எந்த ஸ்டேஜ்னு தான் ரிப்போர்டில் பார்த்திங்களா?” என்று கேட்க, “நோநோ அப்படியில்லை. நான் ஏதாவது மெடிசன் தந்தா அது எந்த டோஸேஜ் லெவல் தரணும்னு தெரிந்துக்க பார்த்தேன்.

முதல்ல நீ பிராந்து இல்லை. அதை முதல்ல புரிந்துக்கோ.

மனோதத்துவ டாக்டரிடம் போனவங்க எல்லாம் பைத்தியம்னு  நீங்களாவே முடிவுக் கட்டிடறதா?

கைக்கு காலுக்கு இதயத்துக்கு, ஸ்கின்னுக்கு இப்படி தனிதனியா ட்ரீட்மென்ட் பார்க்கற மாதிரி தான் உள்ளயிருக்கற மனதிற்கும் எண்ணத்திற்கும்.” என்றவன் பேச சாராவோ “அதில்லா… நான் பிராந்து. நிர்மலா அத்தை… பறைஞ்சது போல நான் பிராந்து. நான் மேரேஜிக்கு அன்பிட்.” என்று வருந்தினாள்.

 

சார்லஸ் அவள் தாடை பற்றி அவனை காண வைத்து, “ஏய் சாரா… மனோதத்துவ டாக்டர்கிட்ட வர்றவங்க ‘பைத்தியம்’ன்னு எங்க அம்மா மாதிரி சொல்லற ஒரு கேட்டகிரி மட்டும் இல்ல. ரொம்ப வைட்ரேஜ்ல சாதாரணமா நம்ம வாழ்க்கையில யாருக்கும் வரக்கூடிய மனநிலை பிரச்சனைகள் தான் அதிகம்.

 

பயம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கு… Anxiety Disorder

எப்போதும் டென்ஷன்ல இதயம் வேகமா அடித்துக்கொள்ளும்.

காரணமே இல்லாமல் பயம் வரும்.

இதோ… இப்ப நீ பயப்படற டென்ஷன் ஆகறியே‌ இதுப்போல.

 

அடுத்து நிறைய பேருக்கு இருக்கற மனச்சோர்வு. டிப்ரஷன்… எதிலும் இன்ட்ரஸ்ட் இல்ல.

அழுகை அதிகமா இருக்கும். எப்ப பாரு… நான் வேஸ்ட் எதுக்கும் லாயிக்கு இல்லைனு புலம்புவாங்க. இந்த உலகத்துல நீ இது போல பாதி பேரை பார்த்திருக்கலாம். அவங்களுக்கு எல்லாம் மோட்டிவேஷனா பேசி தன்னம்பிக்கை தந்து மனதளவுல பிட்டா பேச்சால் மாற்றத்தை தருவது ஒரு கேட்டகிரி.

 

அடுத்தது துக்கம், இழப்பு பாதிப்பு இது போல. ஒருவர் இறந்ததை அக்சப்ட் பண்ண முடியாம

அந்த நினைவிலேயே வாழ்றது

ஜோசப் நீ இதுல சேருவிங்க. அதுலயும் ட்வின் லாஸ் இருந்தா இது ஹெவியா இருக்கும். நீ பத்து வயசுல அனுபவித்த ஸ்டேஜ் அது தான்.

அடுத்து ஒன்னு இருக்கு, டருமா ஷாக் பாதிப்பு Post-Traumatic Stress Disorder இது ஆக்சிடென்ட் டெத் சீன் எல்லா நினைவு திரும்ப திரும்ப வரும். சடனா பேனிக் ஆவாங்க. சில விஷயங்களை அவாய்ட்  பண்ணுவாங்க.

 

ஐ திங்க..‌ நம்ம பஸ்ட் நைட்ல நீ ஏதோ இந்த சடன் பேனிக்ல மூழ்கிட்ட. அதான்.‌‌.. சட்டுனு அழுது தூங்க முயன்ற ரைட்?” என்றான்.

 

சாரா ஆமென்றோ இல்லையென்றோ கூறாமல் அவனை ஏறிட, ஆமென்றே சார்லஸிற்கு புரிந்தது.

 

“கோபம் பிளஸ் அக்ரிசைவ் இருக்கற கேஸ் ஒரு ரகம். இந்த ஜோசப் மாதிரி. வீட்ல கத்துறது

அடிக்குறது கண்ட்ரோல் இல்லாம ரியாக்ட் பண்ணி அவன் காம்பிளிகேட் ஆகறது இது ஆங்கர் மேனேஜ்மெண்ட் இஸ்ஸு.” என்றவன் மௌனமானான்.

 

பெரும்பாலும் ஆங்கர் மேனேஜ்மென்ட் இஸ்ஸுக்கு ரிலேஸன்ஷிப் லவ் மேரேஜ் பீப்பிள் இதுல மிஸ்அண்டஸ்டான்டிங் டிரஸ்ட் இல்லாத இஸ்ஸுவா இருக்கும்.

Personality issues Personality Disorder

ஒரே மாதிரி ரியாக்ஷன் ரிப்பீட்டா ஆகும்.

 

Severe mental illness ரேர் பட் டேஞ்சரஸ் schizophrenia இல்லாததை பார்க்குறது

குரல் கேட்கும். ரியாலிட்டியை கன்பியூஸ் பண்ணுறது. இதை தான் பொதுவா மக்கள் ‘பைத்தியம்’ன்னு தவறா நினைப்பது. எங்கம்மா நினைக்கறதும் இதான்.

 

எங்கம்மா மாதிரி ஆட்கள்

எல்லா மெண்டல் இஸ்ஸுவையும் = ‘பைத்தியம்’ன்னு முத்திரை குத்திடுவாங்க.

ஆனா என்னை மாதிரி ஒரு டாக்டரோட பார்வை எந்த பேஷண்ட் எந்த விதத்தில் கண்டிஷன்ல இருக்கார்னீ பார்த்து ட்ரீட் பண்ண முடியும்.

 

சாரா க்ரிப் சர்வைவர் கில்ட் பிளஸ் மைல்ட் அன்சியட்இருக்க. இப்ப புரிதா… நீ பிராந்து இல்லை. மனசளவில் காயமடைந்திருக்க. அதுக்கு நாம பேசி தீர்வுக் கண்டுடலாம்.

 

நீயா ஏதாவது பேசி உன்னை பிராந்தா ட்ரீட் பண்ணிக்காத. சரியா? உனக்கு இருப்பது Prolonged Grief Disorder, நெருக்கமா இருந்த கிரேஸை நீ இழந்ததும் வர்ற பீலிங். ஆல்ரெடி மேரஜிக்கு முன்ன கவுன்சிலிங் போய் ஓகேவா பிட்டானு கேட்டு புரிஞ்சுக்கிட்டியே. அதுவே கண்டினியூ பண்ணிக்கலாம்.” என்றதும், சாரா.

 

“டாக்டர் சாருக்கு நானும் ஒரு பேஷண்ட் மட்டும். பட்சே… ஜோசப் மாதிரி… டாக்டர் சாரு பாவம். நிங்களுக்கு வல்லிய சுந்தரி மனைவியா

வந்திருக்கும். நான் வந்து சேர்ந்து லைப்பை கெடுத்தேன்” என்றாள் சாரா.

 

சார்லஸோ இடிப்பில் கை வைத்து நின்றான்.

 

-தொடரும்.

 

4 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-13”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 ennadhan sara kita pesinaalum ava mother-in-law pesinadhu dhan ava manasula odudhu paavam 🙄🧐

  2. Un nilamaila iruntha apadi tha pesuvanga sara crt than but charles ivlo solrane apo purinjiko kandipa kuda porantha anga illana vali athigama athula twin loss na romba periya vali atha nee innum atheye ninachi feel panitu iruka so co operate panu charles unaku onum illa sara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!