புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-20

15 / 100 SEO Score

அத்தியாயம்-20

“கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாயிரு.” -சங்கீதம்

“ஜெபத்தின் வல்லமை மிகுந்தது.” -யாக்கோபு

மெர்ஸி வந்துவிட்டு சென்றப்பின், சாராவை நிர்மலா பெரிதாக அதிர்ந்து கூட பேசவில்லை.

மெர்ஸி மட்டும் அன்னையோடு சேர்ந்து சாராவை காயப்படுத்தினால் நிர்மலா கூடுதலாக தனக்கு ஆள் சேர்ந்து விட்டதென்று சாராவை கடித்து குதறவும் திட்டவும் ஆர்வம் காட்டுவார். ஆனால் பெற்ற மகளே வீட்டுக்கு வந்த மருமகளை திட்டுவது தவறென சுட்டிக்காட்டினாள் நிர்மலா போன்ற அன்னைமார்கள் வாயை மூடி தவறை செய்யாமல் தவிர்க்க முனைவார்கள். இது உளவியல் உண்மை.
அதனாலோ என்னவோ சாராவை திட்டவில்லை. பைத்தியம் என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. நிர்மலாவுக்கு மகனை முழுதாக இழந்திட மனமில்லை. ஏற்கனவே தனி வீடு செல்வதாக அழுத்தமாய் முடிவெடுத்து விட்டான்.

  அதுவுமே வேண்டாமென நிர்மலா கோரிக்கை வைத்து பேசினார்.
ஆனால் இதே மற்ற மாமியார் மருமகளென்றால் பிரச்சனை வரும் போகும், அட்ஜஸ்ட் செய்ய சொல்லி பார்த்திருப்பான். சாரா மனதளவில் முன்பு வாடியதால், கூடுமானளவு மனதை பாதிக்க விடக்கூடாதென்று முடிவெடுத்துவிட்டான். மேலும், தனிமையை நாடினான்.

சில நாளிலேயே க்ளினிக் மெயினான இடத்தில் பார்த்து வைத்து, கூடவே வீட்டை பார்த்து முடித்தான்.

அந்த இடத்திற்கு தான் கார் மெதுவாக நின்றது.

“நம்ம இனி வாழப்போற இடத்துக்கு வந்துட்டோம்” என்றான் சார்லஸ்.

சாரா ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். தனி வீடு என்றாலும், வீட்டை சுற்றி இங்கும் மரம் செடி கொடிகள் இருந்தது. கீழே க்ளினிக் மேலே வீடு என்ற அமைப்பில் உருவாக்கி வைத்திருக்க, சார்லஸ் அதற்கான முயற்சியில் ஆர்வத்துடன் செயல்பட்டதை வெளிப்பாடையாக தெரிந்தது.

“வீடு பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்டான். சாரா பதில் சொல்லவில்லை. அவள் மெதுவாக உள்ளே நடந்தாள்.
வீட்டுக்குள் ஏற்கனவே நிர்மலா மோஸஸ் இருவரும் கர்த்தரை வைத்து ஜெபித்து சிலுவையிட்டு எழுந்தனர். மெர்ஸி மேத்யூ , மரியம் அந்தோனி கூட அவ்விடத்தில் வந்து, பிரார்த்தனை செய்து முடித்தனர். சாராவும் ஆண்டவரிடம் வேண்டுதல் வைத்து சார்லஸை கவனித்தாள்.

கரம் பற்றிய ஒரு பெண்ணை மனதார நேசித்து, அவளை நன்றாக வாழ வைக்கும் நோக்கத்துடன் இருந்தவன் தோற்றம், வெள்ளை ஷர்ட், டார்க் ஆலிவ் க்ரீன் பேண்ட் என்று அணிந்து நின்றவன் தேற்றத்தில், சிறகை வைத்து கற்பனை செய்து பார்த்தாள்.

   சாராவை தோளில் தட்டி, “என்ன… வீட்டை பாரு. இது நம்ம பெட்ரூம், அது கிச்சன், இது அம்மா அப்பா இல்லை மெர்ஸி மேத்யூ உங்கப்பா அம்மா யாராவது வந்தா தங்க கெக்ஸ்ட்ரா ரூம்.. அப்பறம்… பால்கனி” என்று.
சார்லஸ் குரலில் ஒரு சிறிய உற்சாகம். அவன் மெதுவாக சாராவின் தாடையை உயர்த்தினான்.

“இங்க யாரும் உன்னை காயப்படுத்த மாட்டாங்க. உன்னை விட்டு தனியாவும் இருக்க மாட்டேன். உன் கண் எதிர்ல க்ளினிக்ல இருப்பேன். டைம் கிடைச்சா ஹனிமூன் வேலையை இங்கயே பார்த்துப்பேன்” என்றதும் அவனை செல்லமாய் அடித்தாள்.

“டாக்டர் சாரே.” என்று செல்லமாய் சிணுங்க, நிர்மலா கண்ணில் மகனின் பூரித்த முகம் மனதில் மோதியது. அத்துடன் சாரா மகனது இதயத்தில் வாசம் இருப்பதை தெளிவுப்படுத்திவிட்டது.

  அன்றைய நாளில் மனம் சுணங்காமல் அவரவர் இல்லத்திற்கு திரும்பிவிட்டார்.

நிர்மலா என் மகன் என்னை விட்டு தூரமாகி என்று புலம்பிட, மோஸஸோ அதெல்லாம் இப்படி பேசினா போகத்தான் செய்வாங்க’ என்றதை வெளிப்படுத்தாமல், ‘அவன் எங்க போயிட்டான். இங்க தானே.. அவனும் தனிச்சையா வளரணுமே. சின்னஞ்சிறுசுகள் தனியா போய் இருப்பதில் தப்பென்ன‌ விடு.” என்று ஆறுதல் செய்தார்.

  ஏதோ அந்த சமயம் நிர்மலா மனமும் ஆறுதலானது.

மெர்ஸி மேத்யூ இருவரும் ஹனிமூன் போற ஏற்பாடு இருந்தா சொல்லு. மேத்யூ குலுமனாலி போக சொல்லி டிக்கெட் எடுக்கறேன்னு சொன்னார். என்று அண்ணனிடம் கேட்க, “இல்லை மெர்ஸி தினமும் சில பேஷண்ட் ரெகுலர் சிட்டிங் வர்றாங்க. அவங்க ரெக்கவர் ஆனதும் ஹனிமூன் பத்தி யோசிக்கறேன். அதுவரை ஹனிமூன் பிளான் நோ தான்” என்று உண்மையை உரைத்தான்.

“சரி உன்னிஷ்டம்” என்று மெர்ஸி செல்ல, மேத்யூவோ சார்லஸிடம் வந்து, ”மெர்ஸியோட விவாகம் முடிவானப்ப, நிறைய பேசினேன். சாரா உங்களோட பேசவே முற்படலை. நீங்களும் பேச ஆசைப்படலை.
அந்த நேரம் எல்லாம் மெர்ஸி, அண்ணா சாராவை பத்திரமா பார்த்துப்பார். அவன் கேர் பண்ணுவான். சாராவுக்கு இருந்தது குற்றவுணர்வு. அதை நீக்கிட்டா அவ்வளோ தான். அண்ணாவுக்கு பாஸ்ட் லவ் வச்சி பிரசண்டை ஸ்பாயில் பண்ண மாட்டான்னு சொன்னப்ப எல்லாம கடுகளவு தான் நம்பினேன்.

  ஆப்டர் மேரேஜ் கூட உங்க மேல நம்பிக்கை வரலை. என் தங்கைக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சுனு ஒரு சின்ன சந்தோஷம் மட்டுமே இருந்தது.

இப்ப சாராவுக்காக அவ மனசுக்காக தனியா வீடு எடுத்து, அவளுக்காக யோசித்து, அவளை, உங்க அம்மாவாவே இருந்தாலும் காயப்படுத்தினா தனித்து வந்து பார்த்துக்கறது எல்லாம் கிரேட். நிச்சயம் நான் உங்களை மாதிரி தனியா மெர்ஸிக்காக வருவேனானு சந்தேகம். ஆனா சாராவுக்காக யோசித்திங்க பாருங்க. மலையளவு நம்பிக்கையை விதைச்சிட்டிங்க. சாராவை பத்தி நான் கவலைப்பட மாட்டேன்.” என்று சார்லஸை கட்டிப்பிடித்தான்.

சார்லஸோ புன்னகை முகமாக வழியனுப்பினான்.‌

மரியம் அந்தோனிக்கு சொல்லவே தேவையில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றியுரைத்தனர்.

  சார்லஸ் கீழே ஏதேதோ போர்ட் டேபிள் என்று க்ளினிக்கா மாற்றம் பெற்றதில் ஏதேனும் குறை உண்டா என ஆராய, சாரா இரவெல்லாம் மூலை முடுக்கெல்லாம் ஆனந்தமாய் உலாத்தினாள்.

   தன்னை நேசிக்க, தன்னை மட்டும் நேசிக்க, தன் குற்றவுணர்வை ஏற்று, தன்னை பைத்தியம் என்று தெரிந்தவர் தெரியாதவர் கூறினாலும், அதெல்லாம் மனதளவில் காயப்பட்டிருக்கா மத்தபடி இது பைத்தியம் என்ற வட்டத்துக்குள் சேராது என்று ஆணித்தரமாக கூறி, தன் மனழுத்தம் மனவுளைச்சலை களைந்து, தன்னை நேசிக்கின்றான். அதையே கிலுகிலுப்பாக கூறவேண்டுமென்றால் காதலிக்கின்றான்.

  சாரா ஆனந்தமாய் நடமாட, அவளது வீட்டில் கத்தல்கள் இல்ல, குற்றம் சாட்டும் பார்வைகள் இல்ல, யாரோ தன்னை இப்படி தான் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதும் இல்ல. சார்லஸ் வாசலில் நின்றபடி உள்ளே பார்த்தான்.

  “ஹே… சாரா.. சாப்பிடலாமா?” என்று கூப்பிட, அவள் உற்சாகமாய் ஒவ்வொரு அடியாக அடியெடுத்து முன் வந்தாள்.

சாரா மனம் ஏதோ புதிதாக பிறந்தது போல சார்லஸிற்கு உணவை பரிமாறினாள்.

“அன்னிக்கு நிஜமாவே நெய் அதிகம். ஆனா பஸ்ட் டைம் சமைச்சதால என்னால மறக்க முடியாது.” என்றான்.

சாரா சுவற்றை மெதுவாக தொட்டாள். “ஆன்ட்டி என்னை முகம் தூக்கி திட்டி பறைஞ்சதும், நான் என்ன பால்ட் என்று யூகிச்சு.” என்றாள்.

  “உண்மையிலயே.. டேஸ்ட் நல்லாயிருந்தது ஆனா அம்மா ஓவரா ரியாக்ட் பண்ணிட்டாங்க.” என்றான்.

“இங்க இனி நாம மட்டும் தான். ஆன்ட்டி திட்டமாட்டேங்கில்‌.‌ ஒரு பக்கம் சந்தோஷமாயி. பட்சே.. அவங்க கூட இல்லா. அது எனிக்கு வருத்தமாயி” என்றவள் வருத்தமாய் மென்மையாக உரைத்தாள்..

சார்லஸ் “இங்க யாரும் இல்லை… உன்னை காயப்படுத்த மாட்டாங்க.. நான் மட்டும் தான்.” என்றவன் நெருங்கி வந்து, “நான் வேண்டுமின்னா வேற விதமா காயப்படுத்தவா?” என்று மார்க்கமாய் கேட்க சாராவின் கண்களில் மிரட்சி தெரிந்தது. ஆனால் சார்லஸ் முகம் விளையாட்டுத்தனமாக  மாறியது.
அவள் திரும்பி அவனை கூர்ந்து பார்த்தாள்.
“டாக்டர் சாரே.. நிங்கிள் நினைச்சாலும் எனே காயப்படுத்த இயலாது.” என்றாள். அவன் மீதுள்ள நம்பிக்கை வளர்ந்துள்ளதே.
சார்லஸ் அவளருகே நெருக்கமாய் .
அவளது கன்னத்தை தொட்டான்.
“நான் காயப்படுத்தியது எங்கயெங்கனு உன் ஸ்கின்னை கேட்டுப்பாரு.” என்று ரகசியமாய் கல்மிஷம் பேச, “டாக்டர் சாரே.. சேட்டை பிடிச்ச ஆளாயி.” என்று நழுவ பார்க்க, சார்லஸ் சிரித்தான்.

அவளது நெற்றியில் தன் நெற்றியை சாய்த்தான். தினமும் செய்யும் கூட்டு பிரார்த்தனை செய்துமுடித்தான்.

அதன் பிறகே சார்லஸ் கண்ணில் காதல் தீ பற்றி எரிய, மெதுவாக அவளை பார்த்து கைகளில் ஏந்தினான்.
புதிய வீடு, புதிய படுக்கையறை, புதிய அணுகுமுறையில் உண்டான காதல் . சாராவ படுக்கையில் கிடத்தி, கைகளை கட்டி ஆர்வத்துடன் மேனியை தழுவினான்.

சாரா முழுவதுமாக இலகுவாக இல்லை. சார்லஸின் தறிக்கெட்ட பார்வையால், மனசு படபடவென மாறிக்கொண்டிருந்தது.

“என்ன பார்த்தா பயமிருக்கா சொல்லு” என்று கேட்டு அவளருகே ஒட்டி படுத்தான்.

   “இல்ல… டாக்டர் சாரே. நான்… உங்களை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுச்சு… நான் பாக்கியசாலி..” என்றாள். அந்த வார்த்தையும் சாரா சார்லஸ் மார்பில் தலை சாய்க்க, சார்லஸிற்கே இந்த விவாகம் கட்டாயத்தில் நிகழ்ந்ததா என்று புதுமையாக எண்ணி சார்லஸ் சிரித்தான்.
அவளது கையை தன் மார்பில் வைத்தான். ”நானும் பாக்கியசாலி‌ தான்.” என்று மூக்கை பிடித்து ஆட்டினான்

சார்லஸின் அருகாமை அவளுக்கு பயம் இல்லாத நெருக்கமா மாறியது. சார்லஸ் மெதுவாக அவளது முகத்தை உயர்த்தினான்.
சாரா” என்றதும் அவள் கண்களை திறந்தாள்.
“இப்ப எந்த குழப்பமும் இல்லையே. அப்படியே உனக்கு மனசு ஏதாவது பீலிங் பேடா இருந்தா, நீ என்னை நம்பி ஷேர் பண்ணலாம்.” என்று சாரா ஒரு நொடி பார்த்தாள்.
அவளது கண்களில் இருந்த சிறு குழப்பமும் மாயமானது.

இத்தனை பேசி புரிய வைத்தப்பின் சார்லஸ் மீது நம்பிக்கை இல்லாமல், தன்னை தாழ்த்தி குற்றவுணர்வில் துடிக்க முடியுமா?

  சார்லஸ் கண் மூக்கு என்று முத்தங்களை மூச்சு முட்ட கொடுக்க, சாரா நெஞ்சுக்குழி ஏறியிறங்க பரிதவிப்போடு சார்லஸின் விருப்பத்தை ஏற்றாள். சாரா முழுக்க உருகி அவன் மார்பில் சாய்ந்தாள். அவளது மூச்சு அவன் கழுத்தில் மோத, அவனது விரல்கள் அவளது முதுகில் மெதுவாக ஓடின. ஒவ்வொரு வீணையாக மீட்டுவது போல அவளை மென்மையாக மீட்டினான்.

இத்தனை நாள் கொஞ்சம் போல நெருஞ்சி முள் போல சில எண்ணங்கள் ஊர்வலம் செல்லும். இன்று இனிக்கும் தாம்பத்தியத்தில் சார்லஸை தவிர்த்து எந்த எண்ணமும் சாரா நினைவில் வந்து செல்லவில்லை‌.

  சார்லஸும் தன் பேஷண்ட், அம்மா, பழைய காதல் என்று எதையும் எண்ணவில்லை. அவன் நினைவிலும் சுருட்டை முடி தேவதையாக சாரா மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தாள்.

-தொடரும்.

6 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-20”

  1. Super sis nice epi 👌😍❤️ wow really great pa wife kaga evlo parthu parthu pandran😍 sara romba lucky 🥰

  2. பிரியமானவரே என் தேதூதனே…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 20)

    பரவாயில்லை, முடிவெடுத்ததோட மட்டுமில்லாமல் அதை செயல்முறைப் படுத்தியும் விட்டான். உண்மையிலயே சார்லஸ் செயல் வீரனும் கூட.
    இனி சார்லஸ் அம்மாவால எந்த தொல்லையும் இருக்காது.

    ஆனால், அந்த டாக்டர் ரிச்சர்ட் மனைவி ஸ்டெல்லாவுக்கு புத்தி வர மாதிரி ஏதாவது செய்யணும். ஏன்னா, தன் வீட்டுக்காரர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வரவங்களையெல்லாம் இந்தம்மா பைத்தியம் பைத்தியம்ன்னு முத்திரை குத்திட்டிருந்தால், பாதிக்கப்படப் போறது பேஷண்ட்ஸ் தானே..?
    ஏன்னா சார்லஸ் டாக்டர் என்கிறதோட, அவனை மாதிரி எல்லாருமே நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது தானே..? முதல்ல அந்த ஸ்டெல்லாவுக்கு கொஞ்சம் மந்திரிச்சு விடுங்களேன் ப்ளீஸ்

    😌😌😌
    CRVS (or) CRVS 2797

  3. Ipo sara relief aeita avalukaga intha alavu panuvanu charles nu ethirpakala but periyavanga ippadi pana vera ena pana mudium sara kaga fulla yosichi pannathu good . Rendu intha time manasalavulaum. Inanjitanga intha love ennaikum orukanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!