அத்தியாயம்-4
மதியம் சாரா வீட்டில் உணவென்றதால் அங்கே செல்ல ஒவ்வொருத்தரும் புறப்பட்டார்கள்.
அப்படியே மெர்ஸியை மேத்யூ வீட்டில் விட்டுவிட்டு வரவும், முடிவெடுத்தனர்.
மெர்ஸி தான் தன் அண்ணனிடம் வந்து, “சார்லஸ்… சாராவை உனக்கு பிடிச்சிருக்கா? இந்த கல்யாணத்துல உனக்கு கஷ்டமில்லையே? இனி அப்பா அம்மா பீல் பண்ணற மாதிரி இருக்க மாட்ட தானே? சாராவோட வாழ்வியா?” என்று கேட்டாள்.
அவள் கேட்டது அவளாக கேட்க நினைத்த கேள்விகளே. ஆனால் மேத்யூ எட்டியெட்டி பார்க்கவும், அவரும் இதற்கான பதிலை அறிய ஆவலாக நிற்பதை யூகித்துவிட்டான் சார்லஸ்.
“பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கலாம்னு ஒரு இக்கட்டை வச்சி என் மேரேஜ் நடக்குதேனு கஷ்டப்பட்டேன். ஆனா… நாட் பேட். சாரா… நல்ல பொண்ணு. எனக்கு பிடிக்கும்னு தான் நினைக்கறேன். நீ கவலைப்பட வேண்டாம். மேத்யூவையும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லு. நான் சாராவை பத்திரமா பார்த்துப்பேன்.” என்று புன்னகைத்தான்.
தங்கையிடம் நிறைவான பதிலை தந்து தனது அறைக்குள் வந்தபின் சார்லஸ் கதவை சற்று மூடி நின்றான்.
சாரா ஜன்னலருகே நின்றபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். காற்று அவள் முடியை கலைத்து விளையாடியது. அவள் அதை சரி செய்யவே இல்லை. சாரா மனசு வேற எங்கோ இருந்தது.
“சாரா” என்று மெதுவாக அழைத்தான் சார்லஸ்.
அவள் திரும்பினாள். சாரா முகம் அமைதியாக இருந்தாலும், கண்கள் மட்டும் சோர்வாக தெரிந்தது.
‘ம்ம்” என்று குரல் தந்தாள்.
“நீ பிரேக் பஸ்ட் சரியா சாப்பிடலையா” என்று கேட்டேன்.
“நான் நன்னாயி கழிச்சு” என்று கூறிவிட்டு சார்லஸை தவிர்த்தாள்.
சார்லஸ் சிரிக்கவில்லை. அவளையே பார்த்தபடி நின்றான்.
“கிரேஸ்… அவளை பத்தி பேசியதும் நீ சோகமா மாறிட்டது போல தோனுச்சு” என்றான் திடீரென.
அவள் விரல்கள் இறுகின.
அவள் மூச்சே சிக்கியது போல,
“நான் ஏதாவது தெரியாம கேட்டுட்டேனா சாரா?” என்றான் உடனே.
அவள் மறுப்பாய் தலை அசைத்தாள்.
“மெர்ஸி ஆனி வீட்டை சேர்க்கணுமல்லோ, நான் ரெடியாயி” என்று கூற சார்லஸோ சரியென்று மற்ற வேலையை கவனித்தான்.
இங்கிருந்து அரை மணி நேரப் பயணம், மேத்யூ வீட்டில் தங்கையை முறைப்படி அழைத்து சென்று, விட வேண்டும்.
சார்லஸ் பொறுப்பான அண்ணனாக அதெல்லாம் செய்வதற்கு ஆயத்தமானான்.
காரில் செல்லும் பொழுது மேத்யூ மெர்ஸி நெருக்கமாய் அமர்ந்து வர சாரா மெர்ஸி அருகே இருந்தாள்.
சார்லஸ் முன்னிருக்கையில் டிரைவரோடு அமர்ந்தவன் திரும்பி பார்க்கும் பொழுது, சாரா ஜன்னல் வழியாக பார்வையை திருப்பி, அமைதியாக வருவதை கண்டான்.
மெர்ஸி மேத்யூவுடன் சின்ன சின்ன சிரிப்பு வெட்கம் பேச்சு கிசுகிசுப்பு என்று வந்ததையும் கவனித்தான்.
சார்லஸிற்கே சாராவின் ஆசைகள் புதுமணப்பெண்ணுக்குரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் கஷ்டப்படுவதை நினைத்து வருந்தினான்.
அவளிடம் நன்றாக பேசி பழக வேண்டுமென ஆயிரெத்தி எட்டாவது முறையாக மனதில் எண்ணிக் கொண்டான்.
மற்றொரு காரில் இருவீட்டு பெற்றவர்களும் முன்கூட்டியே சென்றனர்.
புதுமணதம்பதியர்கள் வருவதற்குள் வரவேற்க ஏற்பாடுடன் இருந்தனர்.
இதற்கு முன் கர்த்தரின் புகழ்பாட, ஊழியம் செய்யும் போது இந்த வீட்டிற்கு வந்திருந்தான். ஆனால் அப்பொழுது எல்லாம் சாரா இங்கே இருந்ததில்லை. அதோடு மேத்யூவை அப்பொழுது தான் சந்தித்தான். அதற்காக இந்த வீடு அறிமுகமானது என்று கூறயியலாது. புதுயிடமாக தான் சார்லஸிற்கு தோன்றியது.
சார்லஸை தவிர்த்து மோஸஸ், நிர்மலா மெர்ஸி மூவருக்கும் அப்படியொரு எண்ணமில்லை. மிக இயல்பாக உறவாடினார்கள்.
எப்பொழுது எங்கும் மாப்பிள்ளைக்கு மரியாதை உண்டல்லவா?! இங்கே மேத்யூவை விட, சார்லஸிற்கு முன்னுரிமை தந்தார் மரியம்.
சார்லஸிற்கு மரியாதை தரும் விதமாக அமர வைத்து சிற்றுண்டி கொடுத்து கவனிக்கவும், நெளிந்தான். ஒருவேளை சாராவோடு நெருக்கமான பேச்சுவார்த்தை இருந்தால் இந்த அன்னியதன்மை இருந்திருக்காது.
சாரா சற்று நேரம் ஹாலில் இருந்தவள், அறைக்குள் செல்ல, அந்தோனியும் ‘நீங்க வேண்டுமின்னு ப்யூ ஹவர்ஸ் சாரா ரூம்ல ரெஸ்ட் எடுக்கோ.. லஞ்ச் ரெடியானதும் இவ்விட அழைக்கா.” என்று கூறியதும் தலையாட்டி அறைக்குள் முடங்கினான்.
இங்கு வந்தப்பிறகும் மேத்யூ அங்கும் இங்கும் பரபரப்பாய் மதிய உணவிற்கு தேவையான வேலையில் மூழ்கினான்.
மெர்ஸி நிர்மலா மோஸஸ் கூட வீட்டை சுற்றி பார்த்தபடி பேசினார்கள்.
உணவெல்லாம் ஒரு பக்கம் கேட்டரிங் ஆட்களிடம் ஒப்படைக்க பட்டதால் சம்பந்தி இருவரும் பேச நேரம் நகர்ந்தது.
மேத்யூ தான் மெர்ஸியிடம் ”எங்கப்பா அம்மா எல்லாத்தையும் மூடி மறைச்சி தான் இப்பவரை நடந்துக்கறாங்க மெர்ஸி. சாராவும் நேத்து உங்கண்ணாவிடம் கிரேஸ் பத்தி எதுவும் சொன்ன மாதிரி தெரியலை. எனக்கென்னவோ சாரா சொல்வதற்குள்ள நாமளா உங்கண்ணாவிடம் பேசறது பெட்டர்” என்றான்.
மெர்ஸியோ கணவன் மேத்யூவிடம், “எங்கம்மா அப்பா என்ன பரிசுத்தமான ஆத்மானு நினைக்கறிங்களா மேத்யூ. ஏதாவது சொன்னா முதல் ஆளா மூஞ்சில அடிக்கற மாதிரி பேசுவாங்க.
என் பிரெண்ட் துகிரா விஷயத்தை எடுத்துக்கோங்க. அவ குழந்தை அமுல்யாவையே குட்டி சாத்தான்னு சொன்னாங்க.
என் பேரண்ட்ஸ் சில விஷயத்தை ஜீரணிக்க மாட்டாங்க. பட் சார்லஸ் அப்படியில்லை. அவனுக்கு எல்லாம் தெரிந்தா சரியான முறையில் ஹாண்டில் பண்ணுவார்.
நாமளா சொல்லறதை விட சாராவோட அவரா பேசட்டும்.” என்று தடுத்திருக்க மேத்யூவிற்கும் சரியென்று தோன்றியது. ஒருவேளை சாராவின் திருமண வாழ்வு சீராக இருந்தால் அவளுக்குண்டான பிரச்சனை கானல் நீராக கூட போகும். அப்படியிருக்க தானாக ஒன்றை பற்றி பேசி விவரித்து பிரச்சனை ஏற்படுத்த வேண்டாமே என்று அமைதியானான்.
அதனால் மாப்பிள்ளை சார்லஸை கவனிக்கும் விதமாக அவனுக்கு தேவையான உணவு ரெடியாக உள்ளதா என்று அறிய சென்றான் மேத்யூ.
சார்லஸாக பேசுவதற்கு எவ்வித விஷயமும் இல்லாததால், சாராவிடம் பேசுவதற்கு வந்தான்.
அறையில் சாரா ஜன்னலில் வேடிக்கை பார்த்திருக்க, தொண்டையை கணைத்து, ”காலையில உன்னோட சிஸ்டர் கிரேஸை நினைவுப்படுத்தி, உன்னை கஷ்டப்படுத்திட்டேன். சாரி… நீயா கிரேஸ் என்ற பெயரை சொன்னதால அப்படி. எனக்கு சத்தியமா மேத்யூ பத்தி மட்டும் தான் தெரியும். மெர்ஸி என்னிடம் வேற எதுவும் ஷேர் பண்ணலை. சொல்லப்போனா உன்னை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. சாரா பத்தி மனசுல ஒரு வெள்ளைத்தாள் இருக்கு. உன் விருப்பு வெறுப்பு தெரியாது. உன் குணம் தெரியாது. பேசலாம்னு பார்த்தா சைலண்டா இருக்க” என்றான்.
“பரவாயில்லை விங்களுக்கு என்னை பத்தி ஒன்னும் அறியல்லோனு எனிக்கு தெரியும்” என்றாள். அந்த பேச்சில் வலி நிறைந்திருந்தது.
“சாரா” என்று சார்லஸ் மீண்டும் தொடங்கினான்.
“ம்ம்” என்று கேட்க, “நீங்க ரொம்ப க்ளோஸா இருந்தீங்களா? ஐ மீன் இறந்து போன கிரேஸ் கூட.” என்றதும் சாரா சிரிக்க முயன்றாள்.
“ம்ம்ம். க்ளோஸ்.. ரொம்ப ரொம்பனா… ரொம்ப.” என்றவளின் சிரிப்பு உடைந்து போனது.
“நங்கள் எவ்விட போனாலும், ஒருமிச்ச போகும். ஒரே வஸ்தரம், ஒரே பக்ஷனம் பிடிக்கும். ஆரேனும் யாரு கிரேஸ் யாரு சாரானு கன்வியூஸ்டு ஆயி. பட்சே என்னை போல சுருட்டை முடில்லா, கிரேஸுக்கு நீளமான முடி, கிரேஸ் என்னி விட குறைச்ச உசரம், கிரேஸ் சைலண்டா பறையும்.” என்று பேசவும் சார்லஸ் அமைதியா கேட்டான்.
“அப்புறம்” என்று அவன் ஆர்வமாக கேட்டான்.
சாரா கண்களை மூடினாள்.
“அப்புறம் ஒன்னுமில்லா… கிரேஸ் பத்து வயசில் இறந்து போயி. நான் தனியாயி.” என்று தொண்டை அடைக்க, கூறியவள் தன் வெட்டிங் மோதிரத்தை உருட்டி பார்வையிட்டு சார்லஸை ஏறிட்டாள்.
சார்லஸ் அவளையே பார்க்க, சாரா சட்டென தன்முகபாவணைகளை மறைத்திட முயன்றாள்.
சாரா எதையோ மறைத்தது போல சார்லஸின் மனோதத்துவ டாக்டர் உள்ளுக்குள்ளிருந்து எடுத்துரைத்தான்.
எல்லா நேரமும் மனோதத்துவ டாக்டர் முன்னே வர முடியுமா? சார்லஸ் அவனுக்கான சாதாரண வாழ்க்கை வாழ வேண்டுமே அதனால் தன் எண்ணத்தை மூடிவிட்டான்.
சார்லஸ் அவளை கவனித்தான்.
“நீ நேத்து நடந்த நம்ம மேரேஜ் டேஸ்லயும் அவளை மிஸ் பண்ணிருக்க இல்லையா?” என்றதும் சாரா கண்களை திறந்தாள்.
சார்லஸ் கண்ணை நேராக பார்த்து ஊடுருவினாள்.
“கிரேஸை ஒருக்காத ஒரு திவசவுமில்லா, அங்கனே.. எஸ்டட்டே நினைக்காத இருப்பேன்” என்று சாரா மெதுவாக நடந்து வந்து கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.
“ஓ… ஐ அம் சாரி. அவங்களோட போட்டோ பார்க்க முடியுமா? ஜஸ்ட் நான் பார்க்க” என்றான்.
சாரா மறுப்பாய் தலையசைத்து, “எனிக்கு விஷமம் தோனியதால் என்டே அம்மே கிரேஸ் போட்டோவை மறைச்சு வச்ச” என்றாள் சாரா.
“ஓ.. ஓகே.” என்றவன், சாரா அமைதியாக இருக்கவும், “இங்க பாரு… நேத்து முழுக்க சர்ச்ல அத்தனை பேர் பார்க்கறப்ப என்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்த. என்னோட நேருக்கு நேரா பேசின. சொல்லப்போனா வால்தனம் பண்ணற சேட்டக்காரினு நினைச்சேன். ஆனா நீ நேத்துலயிருந்து பயங்கர சைலண்டா இருக்க. விட்டா அழுதுடுவியோனு பயந்துட்டேன்.
இன்னிக்கு காலையில உன் சிஸ்டர் நினைப்புல பீல் பண்ணற. ஓகே.. நாம நமக்குள்ள நெருக்கமா எதுவும் பேசியதில்லை. சோ… அதை பத்தி பேசினா என்னோட நீ கொஞ்சம் மனசை திறப்பனு பார்த்தோன். நீ அப்பவும் ஏதோ கூட்டுக்குள்ள ஓடற.
எனக்கு இந்த காதல் எல்லாம் பண்ண தெரியாது. ஒழுங்கா காதலிக்க தெரிந்தா நான் இந்நேரம் லவ் மேரேஜ் பண்ணிருப்பேன். நான் லவ் சாப்டர்ல முட்டை மார்க் வாங்கற ஆளு. சோ… எதுனாலும் நீ பேசு. நான் பேசறேன்.” என்று கூறினான்.
“ஓ… நிங்களுக்கு சிநேகம் அறியல்லோ? எனிக்கு உங்க பேச்சில் ஹோப் இல்ல சாரே” என்று அவளது சுருட்டை முடியில் ஆள்காட்டி விரலால் சுருட்டிக்கொண்டே சிரித்தாள்.
அதென்னவோ மனைவியாக வருபவளுக்கு கணவனின் முன்னால் காதலி பற்றி தெரிந்தால் அதை பற்றி கணவன் பேசக்கூடாதென்று ஒரு பொறாமை உருவாகும். ஆனால் சாராவை பொறுத்தவரை சார்லஸின் முன்னால் காதல் கதை பற்றி வெவ்வேறு விதமாக காதல் பற்றி பேச்சு வந்தாலும் இயல்பாக, மனமொன்றி பேசும் குணத்திற்கு மாறுவதை சார்லஸ் கருத்துக்கு பதிந்தது.
கையை கட்டி சாராவை பார்க்க, சார்லஸுக்கு சாராவின் சிரிப்பும், துறுதுறு குணமும் பிடித்திருந்தது.
மனதிற்குள் துகிரா ஒரு அமைதியான பொறுப்பான பெண் என்று காதலில் விழும் எண்ணத்தை விதைத்தது என்றால், துகிரா இடம் காலியான பின்னர், இங்கே சாராவின் சிரிப்பும் துறுதுறுவென்ற குணமும் சார்லஸிற்கு ஈர்த்தது.
“ஹே கர்லி ஹேர்… போதும்.. நீ உன் கையை வச்சி சுருட்டி சுருட்டி தான் முடியை கர்லியா வச்சிக்கிட்டியா? பார்லர் செலவை மிச்சப்படுத்திட்ட” என்றான்.
“ஓ டாக்டர் சாரே… தாமாஷாலே” என்றாள்.
“தாமாஷும் இல்லை டாக்டர் சாரும் இல்லை. நான் உன் ஹஸ்பெண்ட். நாம நம்ம லைப்பை பத்தி, நம்மளை பத்தி பேச முடியாம சுத்தி வளைக்கறேன்.” என்றான்.
“டாக்டர் சார்… இந்த சாராவை நேசிக்குமோ?” என்று கேட்க, “அதுக்கு தான் ட்ரை பண்ணறேன். முப்பதே நாளில் மலையாளம் மொழி கத்துக்கலாம்னு. புக் ஏதாவது இருக்கா?” என்று அங்கிருந்த அலமாரியில் விளையாட்டு தனமாக பார்வையிட்டான்.
அப்பொழுது அங்கே இருந்த புத்தகத்தின் பெயர்களை வாசித்ததும் சார்லஸ் புருவம் சுருங்கியது. “இந்த புக்ஸ் எல்லாம் யார் வாசிக்கறா?” என்று ஒரு மனநலம் சார்ந்த புத்தகத்தினை எடுத்து கேட்டான்.
சாராவோ புத்தகத்தையும் சார்லஸையும் பார்த்து, திகைத்து, நின்றாள்.
-தொடரும்.

Wow super Charles. But sara has some twist. Very intresting sis.
பிரியமானவரே என் தேதூதனே…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 4)
இந்த மேத்யூ சொல்றதைப் பார்த்தால் குடும்பம் மொத்தமே சாராவைப் பத்தி ஏதோ பூசி மறைக்குற மாதிரி தெரியுதே…? அது க்ரேஸ் பத்தியா, இல்ல சாராவைப் பத்தியா..? அப்படின்னா மெர்ஸிக்கு மட்டும் அதைப்பத்தி தெரிஞ்சிருக்குன்னுத் தோணுது.
அது சரி, சாரா கிட்ட எப்படி மனநலம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் ? அப்படின்னா சாரா சைக்காலஜி ஸ்டூடண்டா என்ன ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 sara family appdi enna maraikiranga🤔🧐 yetho prechanai eruku parpom😕