Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-7

58 / 100 SEO Score

அத்தியாயம்-7

 

சாராவோ “போட் ஷேக் ஆகுது” என்று கூற, சார்லஸ் நிதானமாக அமர்ந்து கெட்டியாக பிடித்தான்.

 

“இஷ்டம்னா… அப்ப அந்த காதல் பெயிலியரா?” என்றான்.‌

 

“அய்யடா… சேட்டன் என்னை சிஸ்டர் என்று விளித்தே.. பின்னே எங்கில் லவ் டெவலப் ஆகும்? இஷ்டமாய் இருந்ததை மனசில்லே புதைச்சி.” என்றதும் சார்லஸ் சிரித்தான்.‌

 

“ஓவரா சிரிக்க வேண்டா கேட்டில்லோ?” என்று மிரட்டினாள்.

 

அப்பொழுது தான் மின்னலாய் சார்லஸிற்கு எண்ணம் உருவானது. தனது க்ளினிக் இருக்கும் இடம், இன்னும் சற்று நேரத்தில் வரும். சாரா விருப்பப்பட்டால் அழைத்து செல்ல நினைத்தான்.

 

அதை அவளிடம் கூறினான்.

 

“க்ளினிக்? அவ்விட வந்தால் ஒர் மார்க்கமாய் இருக்கும்.” என்று சோகமாய் உரைத்தாள்.

 

“இல்லை… போரடிக்க மாட்டேன். ஜஸ்ட் எட்டி பார்த்துட்டு போகணும்னா போகலாம். நாலு நாள் போகலை. க்ளினிக்ல அந்த இடத்தை பெருக்கி க்ளீன் பண்ணுவாங்க. பட்… அங்க என்னோட பெட் இருக்கு அதுக்கு புட் போடாம இருக்கலாம்.” என்றான்.

 

“பெட்?” என்று ஆர்வமாக கேட்க “ம்ம்ம். பிஷ். ஐ லவ் பிஷ்.” என்றான்.

 

“எனிக்கும் பிஷ் பிடிக்கும். பட்சே… பெட்டாக நோ. ஒன்லி பிளேட்டில் ப்ரை பண்ணி கழிச்சி” என்றாள்.

 

“திஸ் இஸ் டூ மச் யா” என்றான் சார்லஸ்.

 

போட் நிறுத்தவும் இறங்கி கை தந்து இறங்க உதவினான்.

 

ஓரளவு சார்லஸ் பேசி சிரித்து நடத்தி அழைத்து வந்தான்.

 

“இன்னும் எவ்வட தூரம் நடக்கணுமாயி. என்ட பாதம் பெயினாகி” என்றாள்.

 

“ஓ.. சாரி. கொஞ்ச தூரம் தான்” என்று நடந்து அழைத்து வந்தான்.

 

அந்த தெருவிற்குள் நுழையும் பொழுதே சார்லஸை கண்டு பலரும் குட் மோர்னிங் என்று சிரித்து சென்றனர்.

 

“டாக்டர் சாருக்கு இவ்விட இருக்க மனிஷாள் மதிப்பு வச்சே” என்றதும், “ம்ம்ம்.” என்றான்.

 

“இதான் என் க்ளினிக்.” என்றதும் அங்கே மூடியிருந்த கதவை திறந்தான்.

 

“ஆக்சுவலி ஒரு வாரம் விடுமுறைனு போர்டுல போட்டு வச்சிட்டேன். இங்க வேலை செய்யற ஒர்க்கர்ஸுக்கும் லீவு தந்துட்டேன். இங்க இருந்து ரொம்ப போரடிக்கு. வேற ஏதாவது புது இடத்தை பார்க்கணும்.

க்ளினிக்கை மாத்தலாம்னு இடம் பார்த்தப்ப தான் அம்மா அப்பா இரண்டு பேருமே உனக்கு கல்யாணம் பேசறோம் க்ளினிக் மாத்தாதனு சொல்லியிருந்தாங்க.

அடுத்து மாத்தலாமா வேண்டாமா இதுவும் மனசுல ஓடிட்டே இருக்கு.” என்றான்.

 

சாரா அதற்கெல்லாம் எதுவும் கூறவில்லை. சின்ன சிரிப்பை சன்னமாக உதிர்த்தாள்.

 

மீனுக்கு உணவளித்து மோட்டாரை கவனித்து கொஞ்ச நேரம் அவனது அறையில் வந்தமர்ந்தான்.

“உட்காரு” என்றதும், “இ…இங்கயா? இது பேஷண்ட் இருக்கையல்லோ” என்றாள்.

 

“சும்மா உட்காரு சாரு. நீ வேற” என்று  கூறியதும் சாரு இருக்கையில் அமர்ந்து சுற்றிமுற்றி பார்த்தாள்.

 

அடிக்கடி கண்ணை இறுக மூடி நிதானிக்க முயன்று தோற்றாள். கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சு முட்டவும் ஆரம்பித்தது.

 

“வெல்லம்” என்று கையால் நீரை கேட்க, ‘த… தண்ணியா?’ என்று அங்கிருந்த ஆரோவில் நீரை எடுத்து கொடுத்தான்.‌

 

“நான்… நான் வெளியே இருக்கேன்” என்று ஓடினாள். ‘இங்க மூடியே இருந்ததால மூச்சு முட்டுதா என்ன?’ என்று யோசித்தவனின், அவன் இங்கே வந்தால் பார்க்க நினைத்த ஒரு பேஷண்டின் பைலை மட்டும் எடுத்து பார்த்து விவரம் அறிந்தான்.

 

வெளியே கொஞ்ச நேரம் சுற்றி வந்தவன், “இங்க நல்ல ஹோட்டல் இருக்கு. சாப்பிட போகலாமா?” என்றான்.‌

 

சாராவும் வயிற்றை தொட்டு “எனிக்கும் லைட்டா பசி” என்று சிரிக்க, நடந்தனர்.

 

சில நேரம் இந்த ஹோட்டலில் தான் மதியம் சாப்பிடுவேன். அப்பலாம் இங்க ஜோடியா வந்து நிறைய பேர் சாப்பிடுவாங்க. அந்த நேரம் நானும் கல்யாணம் செய்தப்பிறகு ஜோடியா வர்றேன்டானு மனசுக்குள்ளயே சொல்லிப்பேன்.” என்று சார்லஸ் நகைத்தான்.

 

‘அப்பின்னில்… இங்கன துகிரா சேச்சி வரவேண்டியது. பட்சே… அவங்க இஷான் சேட்டனை விவாகம் செய்யவும், நான் இங்க வந்உ” என்று அவளுமே சிரித்தாள்.

 

சார்லஸோ நான் என்னோட ஜோடின்னு தான் சொன்னேன். அப்படி பார்த்தா நீ தான். நீ மட்டும் தான். ஆர்டர் பண்ணு” என்று கடிந்தான். துகிராவை இழுக்காதே என்று சொல்லியும் அவளையே பிடித்து பேசுவது சார்லஸிற்கு பிடிக்கவில்லை என்று சாராவும் புரிந்தும் வார்த்தை வந்துவிடுவதில் அமைதியாக ஆர்டர் தந்து விட்டு, சார்லஸ் முகத்தை கண்டாள்.

 

“ரொம்ப பார்க்காத ஷையா இருக்கு.” என்றான்.

 

ஆர்டர் தந்த உணவுகள் வந்ததும் இருவரும் மனதில் இரண்டு வினாடி ப்ரேயர் செய்துவிட்டு உணவில் கைவைத்தனர்.

 

“என் க்ளினிக் எப்படி இருக்கு.” என்று கேட்க, வாயில் உணவை அதக்கிக்கொண்டு கைகளால் சூப்பர் என்றாள்.

 

‘இனடீரியர் டிசைன் பண்ணணும். எனக்கு கொஞ்சம் நாளா அந்த தாட்ஸ் போகுது‌. நீ ஏதாவது ஜாப் போக ஆசைப்படறியா?” என்று கேட்டான்.

 

“எனிக்கு அச்சனின் பிசினஸ் காணும். பட்சே அச்சனுக்கு அதுல இஷ்டமில்லா. சரினு விட்டது.” என்று அமைதியானாள்.

 

“ஓ.” என்று பேசியவனிடம் அவள் பள்ளி கல்லூரி, கல்லூரியில் வந்த காதல் அனைத்தையுமே பகிர்ந்தாள். அவள் மனதில் அழுத்தியதை மட்டும் கூறுவதற்கு தயங்கி கவனமாய் தவிர்த்தாள்.

 

சார்லஸிற்கு இந்தளவு தனக்கான பெண்ணிடம் பேசுவதே அபூர்வமாக பாவித்து கொண்டான். உண்மையில் திருமணமான தம்பதிகளின் பேச்சுவார்த்தை துவக்கத்தில் இருந்தார்கள்.

 

சாராவுக்கு மட்டும் சார்லஸிடம் பேசுவது மனதுக்கு கூடுதலாக மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும். அது அவளது முகத்தில் தெளிவாக தெரிந்தது.

 

சாப்பிட்ட பின்னரும் ஒருமணி நேரம் போட் பயணத்தில் இருந்தனர். போட்காரன் வீட்டிற்கு செல்வதாக உரைத்ததும் தான் தங்களை வீட்டில் விட கூறினான்.‌

 

சாராவுக்கு அன்றைய நாளில் பெரிய போட் முதல் சின்ன போட் வரை அவளது பயணத்தில் சார்லஸ் கரம் பற்றி கதை பேசியதில் பயணம் நீளாதா என்று தான் தவித்தாள்.

 

வீட்டிற்கு இறங்கும் இடம் வந்ததும் பேசிக்கொண்டே வந்து சேர்ந்தனர்.

 

“டாக்டர் சாருக்கு எனியோட பேசி கழிச்ச நிமிடம் பிடிச்சில்லோ?” என்றாள்.

 

“பிடிச்சிருக்கு.” என்றவன் முகம் வெட்கம் கொண்டது.

சாராவுக்கு சொல்லவா வேண்டும் வீட்டுக்குள் சிறகு முளைத்த பறவையாக நடந்தாள்.

 

நிர்மலாவை கண்டதும் இரு கையை விரித்து வந்தவள் அடக்கவொடுக்கமாக மாறி செல்ல, ‘சாப்பிட்டிங்களா… எங்க போனிங்க’ என்ற கேள்வியை தவிர்த்து சாராவை தினுசாக பார்த்து விட்டு, சார்லஸிடம் நேரம் போனதை கேட்டனர்.

 

”க்ளினிக் போட் பார்க்னு கூட்டிட்டு போனேன் மா.” என்றான்.

 

‘க்ளிக்கா?’ என்றது நிர்மலா மனம். என்னவோ போங்க’ என்று அமைதியானார்.

 

சார்லஸ் மனதால் இந்த திருமணத்தை ஏற்றாலும் நிர்மலாவுக்கு ஏதோவொரு உறுத்தல். சார்லஸாக சந்தோஷமாக இருப்பதை காணும் வரை அப்படி தான் மனம் அடித்துக் கொள்ளுமென்று மோஸஸ் கூறியிருக்க அதை நினைத்து கொண்டார்.‌

 

சார்லஸ் அறைக்கு வரும் நேரம், இலகு உடையில் சாரா இருக்க, சார்லஸும் உடை மாற்ற சென்றான்.

 

“டாக்டர் சாரே… நான் உங்களை சேட்டன் எட்டன் விளிக்கில்லா… எனிக்கு டாக்டர் சாரே பிடிச்சி. நிங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டாள்.

 

“சார்லஸ்னு கூப்பிட்டா கூட ஐ டோண்ட் மைண்ட் சாரா.” என்றான்.

 

பனியன் மாற்றியவாறு, ‘சாரா சார்லஸ் பெயர் எல்லாம் வல்லிய பொருத்தமாயி’ என்று கூற வந்தவன் ‘இவளிடம் பேசினா தமிழுக்கு பதிலா நான் மலையாளம் பேசிட்டு திரிவேன் போலயே.’ என்று மகிழ்ந்தான்.

 

இரவு மோஸஸ் நிர்மலா எதிரே சாப்பிடும் பொழுது அதிக வார்த்தை பேசாமல் தீவைக்கு மட்டும் வாய் திறந்தாள் சாரா.    இரவு கூட்டு பிரார்த்தனை செய்யும் பொழுது நால்வரும் மண்டியிட்டு அமர்ந்தனர்.

 

நிர்மலா தான் பிரார்த்தனை ஆரம்பித்தார்.

“எங்கள் பரலோக பிதாவே…

இன்றைய இந்த அமைதியான நேரத்தில், நாங்கள் நால்வரும் உமது சந்நிதியில் தாழ்மையுடன் வருகிறோம் ஆண்டவரே.

எங்கள் குடும்பத்தை இவ்வளவு நாளும் காத்து நடத்தினதற்கு நன்றி சொல்லுகிறோம் கர்த்தரே.

இன்று இந்த வீட்டில் புதிதாக இணைந்திருக்கும் சாராவையும் சார்லஸையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறோம்.

ஆண்டவரே…

நீர் இணைத்த இந்தத் திருமணத்தை யாராலும் பிரிக்க முடியாதபடி, உமது அன்பினால் கட்டிப் பாதுகாத்தருளும்.

அவர்களின் வாழ்வில் புரிதல், பொறுமை, சமாதானம் நிறைந்திருக்க கிருபை செய்யும்.

ஒருவரை ஒருவர் நேசிக்கும் இதயத்தையும்,

கஷ்ட நேரங்களில் ஒருவருக்கொருவர் துணை நிற்கும் பலத்தையும் தாரும் ஆண்டவரே.

சாராவுக்கும் சார்லஸுக்கும்

உமது நேரத்திலும் சித்தத்திலும்,

ஒரு நல்ல சந்ததியையும், பிள்ளை வரத்தையும் அருளிச் செய்யும்.

அந்த பிள்ளை உம்மை பயந்து நடக்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்க கிருபை புரியும்.

இந்த வீடு எப்போதும் உமது சமாதானம் நிறைந்த இடமாக இருக்கட்டும்.

எங்கள் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் நீர் மகிமைப்படுவீராக.

எல்லாவற்றையும் உமது திருவுளத்திற்கே ஒப்படைத்து,

எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம்.” என்றார்.

 

மோஸஸும், “என் மகள்  மெர்ஸிக்கும் கர்த்தரின் அருளை தாருமைய்யா” என்றார்.

 

“ஆமேன்.” என்று சாரா சார்லஸ் கூறினார்கள்.

 

மோஸஸ் நிர்மலா அவரவர் அறைக்கு சென்றதும், “அதுக்குள்ள குழந்தை குட்டியை கேட்டு கர்த்தரிடம் வேண்டுதல் வைக்கறாங்க. இவங்களை…” என்று சார்லஸ் தலையை உலுக்க, “பட்சே… இந்த பிரார்த்தனை எனிக்கு இஷ்டமாயி” என்று சிரித்தவள் உதடு கடித்து அறைக்கு ஓடினாள்.

 

சற்று நேரம் சார்லஸ் பிரம்மை பிடித்தவனாக சிலை போல நின்றான்.

“டாக்டர் சாரே… அவ்விட யாருமில்லா” என்றதும், சுற்றிமுற்றி பார்த்து அறைக்கு வந்தான்.

 

போர்வையை போர்த்தி மெதுவாக சார்லஸை எட்டி பார்த்தாள் சாரா.

 

சார்லஸ் கதவை தாழிட்டவனாக, அறையெங்கும் ஒளியை உழிந்ததை அணைத்தவன், சிறு விளக்கை மட்டும் உயிர்பித்தான்.

சார்லஸ் மனதிலும் சிறு உயிர்ப்பு சாரா மீது தோன்ற, நெருங்கி வந்தவனாய் முன்னேற முயன்றான்.

 

ஆனால் சாராவை அள்ளிக்கொள்ள, கைகள் செல்லவில்லை. அவளது கையை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்து, “சாரா… உன் மேல எனக்கு அன்பும் நேசமும் இப்பொழுது தான் மொட்டவிட ஆரம்பிச்சிருக்கு, அதை தாண்டி காதல், காமம் இன்னமும் மனசுல விதைக்கவேயில்லை. அப்படியிருக்க.. எல்லை மீற முடியலை‌. எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கறியா? ப்ளீஸ்” என்று கேட்டான்.

 

அதை அவளிடம் தெரிவித்ததும் சாராவுமே “டாக்டர் சாரே.. நிங்கள் இதை தான் பறையும்னு நான் அறியேன். பிராங்கா சம்சாரிக்கணும்மெனில், எனிக்கு நிங்கள்  மீது நேசம் உண்டு… பிரேமமும் உண்டு. ஆன்ட்டி பறைச்சது போல ஆசையும் உண்டு. பட்சே… அதெல்லாம் இப்பவே நடக்க நான் ப்ரிப்பேரில்லா. சோ… டாக்டர் சாரு வருத்தபடில்லா.” என்று கூற, “மத்ததை அப்பறம் பார்த்துக்கறேன். இப்ப இந்த எண்ணத்தை சொன்னதுக்கும், என்னை புரிந்துக்கொண்டதுக்கும் அப்ரிசேட் பண்ணற விதமா, இந்த ‘காம்பிளிமெட்ரி’ மட்டும் வாங்கிக்கோ” என்று கன்னத்தில் முத்தமிட்டான் கள்வன்.

 

சாராவுக்கு ஆனந்த அதிர்ச்சியாக வாயை பிளந்தவள், ”டாக்டர் சாரே…  தூக்கத்தில் காலை போட்டால் என்னை மாப்பு பறையு.” என்றாள்.

 

 

சார்லஸோ ‘டீல்’ என்று கையை தம்ஸ்அப் செய்தான்.

 

இன்றைய பொழுதை கர்த்தர் மெய்யாகவே சாராவுக்கு மகிழ்ச்சியை தருவித்தார்.

 

-தொடரும்.

*படிக்க வந்த புது ரீடர்ஸ் ரெஜிஸ்டர் செய்து வாசிக்கவும். அத்துடன் கமெண்ட்ஸ் செய்தால் அது எனக்கு உற்சாகம் தரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

5 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-7”

  1. Wow fantastic narration sis. Kerala slang super narration. Sara good soul. But she has some secrets. Charles good husband. Very intresting sis.

  2. பிரியமானவரே என் தேதூதனே…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 7)

    இந்த சாரா ஒரு லூசுத்தான் போல. சார்லஸ் சாதாரணமாத் தானே நானும் இந்த ஓட்டலுக்கு ஜோடியா வரேன்னு சொன்னான்… அதுக்கேன் இவ துகிரா பேரை இழுக்கணும்..?
    ஒருவேளை, அது தான் இவ மனசை ஹர்ட் பண்ணிடுச்சோ ?
    அய்யோ பாவம் சார்லஸ்..
    ஒரு சைக்ரியாடிஸ்ட்டா இருந்தும் அவன் பொண்டாட்டி மனசுக்குள்ள என்ன இருக்குன்னு அவனாலயே கண்டுபிடிக்க முடியலை பாருங்களேன்… என்ன கொடுமையடா இது ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 sara nalla dhan pazhagura ellam k but yetho maraikiraley🧐🤔🙄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!