Skip to content
Home » புதுக்காவியம் அரங்கேறுது-1

புதுக்காவியம் அரங்கேறுது-1

ஹாய் பிரண்ட்ஸ் புதுக் காவியம் அரங்கேறுது.. எனது இரண்டாவது கதை. சில காரணத்தினால் எனது போட்டிக் கதையான தொடுவானமாய் உனை பார்க்கிறேன் கதை தொடர இயலவில்லை மன்னிக்கவும். இந்த கதைக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி 🙏💕

Thank you for reading this post, don't forget to subscribe!

புதுக் காவியம் அரங்கேறுது 1

 "  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்”..

அந்த பூஜை அறையில் சத்தமாக ஒலித்த குரல் கேட்டு கண்விழித்தாள் காயத்ரி…..

கண் முழித்ததும் காலை கடன்களை முடித்து குளித்து விட்டு வர முதல் நாள் பாசுரம் சொல்லி முடித்து இருந்தாள் நம் கதையின் நாயகி சஞ்சனா…..

” நீ இன்னிக்கு பாசுரம் சொன்னதும் தான் மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது தெரிந்தது சஞ்சு “…..என்று தங்கையை கேலி செய்தாள் காயத்ரி…..

” உனக்கு என்ன ??? டெய்லி சீக்கிரம் எழுந்து அப்பா கிட்ட நல்ல பேர் வாங்கிட்டு போய்டுவ …. நான் அப்படியா!!!! இந்த ஒரு மாதத்தில் நல்ல பேர் வாங்கினால் உண்டு” …என்று தமக்கையிடம் கூறி விட்டு ஹால் ஷோபாவில் அமர்ந்தாள்….

” நீ எவ்வளவு தான் பாடு பட்டாலும் உங்க அப்பா கிட்ட உனக்கு நல்ல பெயர் கிடைக்கவே கிடைக்காது “…என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார் நம் நாயகியின் தாய் மீனாட்சி……

” நீ எல்லாம் ஒரு அம்மாவா புருஷன் தப்பு செய்தால் கண்டிக்கனும் … இப்படி சப்போர்ட் பண்ண கூடாது ” என்று சஞ்சனா கூறியதும்……

” என்னோட புருஷன் என்னடி தப்பு செஞ்சாரு . நான் கண்டிக்க என்று மீனா கேட்க……

“இப்படி ஒரு பச்ச புள்ளையை பாரபட்சம் பார்க்காமல் திட்டிட்டே இருக்காரே மீனாட்சி உன்னோட புருஷன் இது எல்லாம் கேக்க மாட்டியா”????

” அடி செருப்பால என்னோட பேர் சொல்லியா கூப்படுற ..பேர் சொல்லி கூப்பிட கூடாது எத்தனை தடவை சொன்னாலும் கேக்கறது இல்ல .. அப்பறம் அவர் உன்னை திட்டாம என்ன செய்வாரு ” ..
“முதல்ல சொல் பேச்சு கேட்டு பழகு.. அப்பறம் அவர் திட்டாம பாத்துக்கிறேன்”..

“உங்க வீட்டுகாரர விட்டு குடுக்க மாட்டியே.. எப்படியோ போ!. ஒரு பச்ச புள்ள சொல்றேன் கேட்டுக்கோ ..இல்லன்னா அப்புறம் நீதான் வருத்தபடணும்”..

” நீ வாய அடக்கிட்டு இருந்தாலே போதும்.. எந்த பிரச்சனையும் வராது.. அத நான் சொல்லிட்டே இருக்கேன் நீ கேக்கறியா இல்ல தான”..

“அய்யோ அம்மா அதுவும், இதுவும் வேற வேற”…..

” எதுவும் வேற இல்ல நீ வாய மூடிட்டு போய் காலேஜ் கிளம்பு”…

” அம்மா அவளுக்கு எப்படி சொன்னாலும் புத்தி வராது.. அப்பா கிட்ட வாங்கி கட்டிகிட்டா தான் அடங்குவா நீ விடு ” .. என்று சஞ்ஜனாவின் அக்கா காயத்ரி கூறினாள்…

“இல்லடி காயத்ரி எப்ப பாரு அப்பா இவள திட்டும் போது கஷ்டமா இருக்கு.. ஆனா இவ செய்யறது எல்லாம் பாக்கும் போது கோவம் வருது “.. என்ன செய்ய? அவளே சரியான தான் உண்டு”.

” ஏன்மா சரியாக நீன் என்ன பைத்தியமா”??

சஞ்ஜனாவிற்கு பதில் சொல்வதற்குள் “மீனாட்சி ” என்று கூப்பிட்டு கொண்டே உள்ளே நுழைந்தார் சஞ்ஜனாவின் தந்தை நீலகண்டன்…

நீலகண்டன் மீனாட்சி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் காயத்ரி, சஞ்ஜனா இவர்கள் சென்னையில் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்..காயத்ரி பொறுப்பானவள்.. ஆனால் சஞ்ஜனா கொஞ்சம் விளையாட்டு பிள்ளை.. அதுவே அவள் தந்தையிடம் திட்டு வாங்க காரணமாக அமையும்.. இவள் விளையாட்டின் விளைவு என்னவோ??? விளையாட்டு விபரீதம் ஆகுமோ???

காவியம் தொடரும்….

1 thought on “புதுக்காவியம் அரங்கேறுது-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *