நிலா முகில் வேணி இருவருக்கும் ரிசப்ஷன் வைக்க வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது வேணி முகில் இருவரும் ஒரே போல் எங்களுக்கு ரிசப்ஷன் வேண்டாம் என்று சொன்னார்கள் நிலா இருவரையும் முறைத்துவிட்டு தனது பெரியம்மா காவிரியை பார்த்தால்…
அவர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு சரி நிலா நீ சொல்வது போல் வைத்துக் கொள்ளலாம் என்றார் அம்மா நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கு இப்பொழுது ரிசப்ஷன் வேண்டாம் என்றான் முகில் கொஞ்ச நேரம் அமைதியாக இருடா அவள் சொல்வதில் ஒன்றும் தவறில்லை அவள் சொல்வது போல் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிவிட்டதே என்றார் ….
அத்தை எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது தான் நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை நான் இந்த வீட்டு மருமகள் தான் என்று ஊரில் அனைவருக்குமே தெரியும் அப்படி இருக்கும் பொழுது இப்பொழுது எங்கள் இருவருக்கும் எதற்கு ரிசிப்ஷன் என்று கேட்டால் …
ரிஷிப்ஷன் வைக்க வேண்டும் வேணி நீ இந்த வீட்டு பெண் தான் என்று இந்த ஊரில் உள்ளவர்களுக்கு தெரியும் என்பது என்னவோ உண்மைதான் ஆனால் நாங்கள் உனக்கு செய்ய வேண்டியதை செய்து ஆக வேண்டும் அல்லவா என்றார் அத்தை நான் ஒன்று சொன்னால் என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நான் இந்த வீட்டுக்கு வருவதற்கு முக்கிய காரணமே மகா அண்ணி தான் இப்பொழுது அவர்கள் இல்லாமல் என்னால் இந்த ரிசப்ஷனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் …..
காவிரியை பார்த்து நேராக தான் சொன்னால் அவர் சிரித்துக் கொண்டே நீ இப்பொழுது கேட்பது என்னால் செய்து தர முடியாது என்று மட்டும் சொன்னார் அப்பொழுது எனக்கு ரிசிப்ஸன் வேண்டாம் என்றால் அப்போது தான் எழில் கீழே இறங்கி வந்து வேணி நிலா சொன்னது போல் உனக்கும் முகிலுக்கும் இன்னும் இரண்டு நாட்களில் ரிசப்ஷன் வைப்பது உறுதி என்றான் ….
வீட்டில் உள்ள அனைவரும் என்ன இரண்டு நாட்களிலா என்று கேட்டார்கள் ஆமாம் அதற்கான ஏற்பாடு முக்கால்வாசி முடித்து விட்டோம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் போதும் நம் வீட்டில் தான் ரிசப்ஷன் வைக்கப் போகிறோம் மண்டபத்தில் இல்லை ரிசப்ஷனுக்கு தேவையான வேலைகளை முக்கால்வாசி முடித்து விட்டோம் என்றவுடன் காவேரி எழிலை பார்த்து முறைத்தார் ….
அத்தை இதை நானும் நிலாவும் தான் செய்தோம் வேறு யாரும் செய்யவில்லை என்றான் அவர் எழிலை முறைத்துவிட்டு எதுவோ செய்யுங்கள் உங்கள் இஷ்டப்படிதான் நடந்து கொள்கிறீர்கள் அல்லவா என்று கேட்டுவிட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார் வேணி அப்பொழுதும் எனக்கு ரிசப்ஷன் வேண்டாம் என்று கத்திக்கொண்டு இருந்தால்…
அப்பொழுது நிலா தான் வேணியின் அருகில் வந்து அக்காவின் இடத்திலிருந்து நானும் எழில் மாமாவும் ரிசப்ஷனை நடத்தி முடிப்போம் என்றார்கள் வேணி ஒருதலையாக சம்மதம் தெரிவித்தால் முகிலும் சரி என்ற பின் அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செயல்பட்டது இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் இருவருக்கும் முகில் வேணி இருவருக்கும் ரிசப்ஷன் செய்வதாக வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்தார்கள்…
ரிசப்ஷனுக்கு யார் யாரை அழைக்கலாம் என்றும் யோசித்தார்கள் அப்பொழுது வேணி தனது நண்பர்களையும் அழைக்க வேண்டும் என்று சொன்னால் சரி என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்கள் அப்பொழுது வேணி எழிலின் அருகில் வந்து அண்ணா உங்களுக்கு சம்மதமாய் என்று கேட்டால் வேணி நீ உன்னுடைய நண்பர்களை அழைப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றான் ….
அண்ணா எதுக்காக சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா என்று கேட்டால் அது கூட புரியாமலா இருக்கும் வேணி எனக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை நீ உன்னுடைய நண்பர்கள் அனைவரையும் அழைக்கலாம் என்றான் ஞாயிற்றுக்கிழமை ரிசப்ஷன் வைக்கப்பட்டிருக்கிறது பிறகு வீட்டில் உள்ளவர்களும் ரிசெப்சன் ஞாயிற்று கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள் ….
சரி என்று விட்டுப் பெரியவர்கள் அனைவரும் அவர்களது அறைக்குச் சென்று விட்டார்கள் இப்படியே இரவு பொழுதும் ஆனது வேணி எழில் அருகில் வந்து நின்றால் என்ன வேணி என்று கேட்டான் ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்துவிட்டு உங்களுக்கு இந்த ரிசப்ஷனில் முழு சம்மதமா என்று கேட்டால் இது உங்களது ரிசப்ஷன் வேணி இதில் என்ன ஒரு நியாயம் இருக்கிறது….
என்னிடம் வந்து கேட்கிறாய் என்று கேட்டான் வேணி அவனை உற்று பார்த்துக் கொண்டே அண்ணா மகா அண்ணி மகிழ் அண்ணன் இல்லாமல் உங்களுக்கு முழு சந்தோஷமா என்று கேட்டால் வேணி இப்பொழுதும் அவர்தான் இங்கு அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதை மறந்து விடாதே அவள் வந்து நிற்கவில்லை என்பதற்காக இது அவள் வீட்டு விசேஷம் இல்லை என்று ஆகிவிடாது….
அவள் எடுத்துக்கட்டி செய்யவில்லை என்று ஆகிவிடாது அவளிடத்தில் இருந்து நிலாவும் மகிழ் இடத்தில் இருந்து நானும் உனக்கு அனைத்தையும் செய்து முடிப்போம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து முடிப்போம் சரியா என்றான் அவள் முகம் அப்பொழுதும் தெளிவில்லாமல் இருந்தவுடன் அவளது தலையில் கை வைத்து இந்த ரிசப்ஷனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்…
என்றான் உனக்காக தான் அனைத்தையும் இப்போபொழுது செய்ய வேண்டும் என்று எண்ணி இருக்கிறார்கள் இதை நீ முழுமனதாக சந்தோஷமாக ஏற்றுக் கொள் என்றான் சரி என்று ஆனால் நான் எப்படி என்னுடைய நண்பர்களை அழைப்பது என்றாள் வேணி இதுவரை இந்த வீட்டில் நடந்த விசேஷத்திற்கு நிலா கூப்பிடாததற்கு நான் காரணம் என்று கூட இருந்திருக்கலாம் ஆனால் அதில் எதுவுமே நிலா உடைய விசேஷம் என்று எதுவும் தனிப்பட்ட முறையில் இல்லை…
இந்த வீட்டில் உள்ள நல்லது கெட்டது ஆனால் இப்பொழுது நடக்கப்போவது உன்னுடைய ரிசப்ஷன் இதில் உன் நண்பர்களை அழைக்க வேண்டாம் என்றெல்லாம் யாரும் சொல்ல மாட்டோம் அது மட்டும் இல்லாமல் அவர்கள் வந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அதை எப்படி சமாளித்துக் கொள்ள வேண்டுமோ நான் அதை சமாளித்துக் கொள்வேன் சரியா நீ உன் நண்பர்கள் அனைவரையும் அழை எனக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அவளது தாடையில் தட்டி விட்டு மொட்டை மாடிக்கு சென்றான் …..
வேணியும் சிறிது தெளிவடைந்த உடன் இரவு உணவு சமைப்பதற்கு சென்று விட்டால் எழில் மேலே செல்லும் பொழுது மகா மகிழ் இருவரும் வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள் இருவருக்கும் இடையில் இரண்டு பேர் நிற்கும் அளவிற்கு இடமும் இருந்தது அவர்கள் இருவரும் இப்படி இருப்பதை எழிலால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருவருக்கும் இடையில் போய் நின்றான்….
அவன் வந்து நின்றவுடன் இருவரும் எழிலை பார்த்தார்கள் என்னடா சாப்பிட்டு விட்டாயா என்று கேட்டார்கள் இருவரும் ஒரே போல் இல்லை உங்களுடன் சாப்பிடலாம் என்று வந்திருக்கிறேன் என்றான் சரி என்று விட்டு இருவரும் அமைதியாக இருந்தார்கள் இருவரையும் பார்த்துவிட்டு இருவர் கையையும் எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான் இருவரும் எழிலையே பார்த்து கொண்டு இருந்தார்கள் …
உட்காருங்கள் என்று சொல்லி இருவரையும் திரும்பி உட்கார வைத்தான் இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டான் இப்பொழுது வந்திருக்கும் இந்த குழந்தையை நீங்கள் உங்கள் மனதளவில் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இது உங்களது குழந்தைதான் அன்று வேணி சொன்னது வேறு நீங்கள் இருவரும் எப்பொழுது நினைத்து கொண்டிருப்பது வேறு அதை முதலில் நீங்கள் இருவரும் புரிந்து கொள்ளுங்கள் ….
இந்த குழந்தைக்கு அப்பா அம்மா நீங்கள் இருவரும் தான் நீங்கள் ஒன்றும் இந்த குடும்பத்திற்காகவோ இல்லை என்று விட்டு தனது மகா அண்ணனின் முகத்தையும் ஒரு நிமிடம் ஒற்றுப் பார்த்துவிட்டு உங்கள் காம இச்சைக்காகவோ இந்த குழந்தை உருவாகவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றான் மகிழ் தனது தம்பியை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்…
மகாவின் கண்ணில் இருந்து நீர் வடிந்தது நான் சொல்வது உண்மைதானே இது அப்பேர்பட்ட எந்த சூழ்நிலையிலும் நடைபெறவில்லை இந்த சூழ்நிலை நிறைய கணவன் மனைவிக்குள் நடைபெறக்கூடியது தான் என்ன இதில் ஒரு வித்தியாசம் என்றால் உங்களுக்கு முதல் முறை நீங்கள் இருவரும் இணைந்தது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைகள் அவ்வளவுதான் வித்தியாசம் மற்றபடி நீங்கள் இருவருமே இதில் எந்த தவறும் செய்யவில்லை …
மகா நீ ஒன்றை மனதில் வைத்துக்கொள் அண்ணன் உன்னிடம் நெருங்கியது எந்த அளவிற்கு உண்மையோ அதேபோல் அவன் மனதளவில் அதற்கு தயாராகி தான் உன்னிடம் நெருங்கி இருக்கிறான் என்பதையும் மறந்து விடாதே அதேபோல் இன்னொன்று அந்த சூழ்நிலையிலும் நீ அண்ணனை தடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் உன்னால் தடுத்திருக்க முடியும் நீ சிறு அசைவு அவனுக்கு கொடுத்திருந்தால் கூட அவன் உன்னிடம் இருந்து விலகி இருப்பான்…..
அது உனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும் நீ அதை அமைதியாக ஏற்றுக் கொண்டதால் தான் அவன் மேற்கொண்டு முன்னேறி இருக்கிறான் என்பதை நீ மறந்து விடாதே என்று மகாவை பார்த்து சொல்லிவிட்டு டேய் அண்ணா நீ ஒன்னும் பெரிய கொலை குத்தம் செய்யவில்லை இவள் உன்னுடைய மனைவி நீ விருப்பப்பட்டு தான் அவளிடம் நெருங்கி இருக்கிறாய் அதே போல் அவளது விருப்பமில்லை என்று தெரிந்திருந்தால் நீ அவளுடன் நெருங்கி இருந்திருக்க மாட்டாய் என்பதையும் நீயும் மனதில் வைத்துக் கொள்….
அவள் வேண்டாம் என்று சிறு அசைவு கூட கொடுக்காததால் தான் நீ முன்னேறி இருக்கிறாய் அதையும் மறந்து விடாதே இருவர் மனதிலும் எந்த சஞ்சலங்களும் இல்லாமல் இனிமேல் உங்களது வாழ்க்கையை நன்றாக வாழுங்கள் அது மட்டுமில்லாமல் உங்களுக்கு கூடுதல் பொறுப்பாக ஒரு குழந்தையும் வரப்போகிறது அதை எப்படி பெற்று எடுப்பது இனிமேல் எப்படி வளர்ப்பது என்று மட்டும் யோசிங்கள் உங்களது சிந்தனை அதைப் பற்றி தான் இருக்க வேண்டுமே தவிர இந்த குழந்தை நம் தவறால் வந்ததோ என்று எண்ணக்கூடாது….
அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த குழந்தை வரவில்லை என்பதையும் இருவரும் முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அன்று வேணி சொன்னதுக்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் இருவரும் பொறுமையாக யோசித்தாலே போதும் என்று இருவரது கையிலும் அழுத்தம் கொடுத்தான் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அவனது தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்தார்கள் ….
இவ்வளவு நேரம் எழில் பேசிக் கொண்டிருந்ததை மாடிப்படி ஏறி வந்த நிலாவும் கேட்டுக் கொண்டுதான் இருந்தால் இருவரும் எழிலின் தோலில் சாய்ந்த உடன் நிலா ஓடி வந்து எழில் மடியில் படுத்தாள் அவள் படுத்தவுடன் மகிழ் மகா இருவரது கண்ணீர் துளிகளும் நிலாவின் தடையில் பட்டது நிலா இருவரையும் பார்த்தால் இருவரும் பார்த்தவுடன் தனது கண்ணீரை துடைத்துவிட்டு அப்படியே எழுந்தாள் ….
பிறகு ஒரு இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இருவரும் நிமிர்ந்தார்கள் நிலாவும் எழில் மாமா சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை இருவரும் லூசுத்தனமாக எதையாவது யோசித்து கொண்டு இருக்காதீங்க நான் அன்னைக்கு பேசினதும் இன்னைக்கு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று விட்டு அமைதியா இது என்னோட அச்சு மா இதை எப்படி ஒழுங்கா பெற்று தருவது மட்டும் யோசிங்க என்று இருவரையும் பார்த்து சிரித்து விட்டு டேய் மாமா வா சாப்பிடலாம் என்று கூப்பிட்டால்…
நான் இங்கே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றான் ஆனால் எனக்கு தெரியாது கோதை உனக்கு கீழே சமைச்சு வச்சுட்டு கத்திட்டு இருக்கு இன்னைக்கும் பழசு தான் போடும் மறந்துடாத என்று எழிலை கையோடு அழைத்துக் கொண்டு சென்றாள் எழில் நிலாவின் தலையில் கையை வைத்து ஒரு நிமிடம் கழித்துவிட்டு அவளது தோளில் கைப்போட்டு அவளுடன் நடந்து வந்தான் அவனுமே அறிவான் …..
இப்பொழுது மகா மகிழ் இருவருக்கும் தனிமை தர வேண்டியது தான் நிலா தன்னை அழைத்து வருகிறாள் என்று கீழே இறங்கியவுடன் கோதை அப்பொழுதுதான் என்னடா ரெண்டு பேரும் சீக்கிரமாவே கீழ இறங்கிட்டீங்க போல என்று கேட்டார் இருவரது கண்களும் லேசாக கலந்திருப்பதை பார்த்தார் அங்கு எதுவோ உணர்வு பூர்வமாக நடந்து இருக்கிறது என்று உணர்ந்ததால் தான் அவ்வாறு கேட்டார்…
அவர்கள் இருவரையும் திசை திருப்ப என்று எண்ணி அதை அவனும் உணர்ந்து தனது வீட்டில் உள்ளவர்கள் தங்களால் வருந்தக் கூடாது என்று எண்ணி நிலாவின் மனதை மாற்ற அவனும் சொன்னான் அத்தை இப்ப சாப்பிட வரலைன்னா பழசு தான் போடுவேன் என்று சொல்லியிருந்தீங்களாமே உங்க மகள் தான் சொல்லி கூப்பிட்டு வந்தா என்று சிரித்துக் கொண்டே சொன்னான்…
நிலா தனது எழில் மாமாவை முறைத்துவிட்டு ஓர் இடத்தில் போய் உட்கார்ந்தால் அப்பொழுது சுந்தரி கையில் ரசகுல்லா செய்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் அத்தை இது என்ன என்று கேட்டால் உனக்கு தெரியாத என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அத்தை அது என்ன என்று தெரிகிறது இப்பொழுது எதற்காக செய்திருக்கிறீர்கள் என்று தான் கேட்டேன் என்றால்…
அவர் நிலாவை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு உனக்கு பிடிக்கும் என்று செஞ்சேன் வேணும்னா சாப்பிடு இல்லை என்றால் வச்சிடு என்று விட்டு திரும்பினார் அப்பொழுது நிலா அவரது கையை பிடித்து அவரை தன்னருகில் உட்கார வைத்துவிட்டு அவரது கண்ணை அவள் உற்றுப் பார்த்துவிட்டு இது இப்போ உன் மகனும் மருமகளும் அம்மா அப்பா ஆகப் போறாங்கன்றதுக்காக அப்படின்றது உங்க வாயை திறந்து சொன்னா உங்க வாயில் இருக்கும் முத்து விழுந்திடும் அல்லவா என்று சொல்லிக் கொண்டே ரசகுல்லாவை அவரது வாயில் திணித்தாள்….
அப்பொழுதுதான் சமையலறையில் இருந்து வெளியில் வந்த காவேரி இதை பார்த்தார் வீட்டில் உள்ள அனைவருமே வரவேற்பரையில் இருந்ததால் அனைவரும் நிலாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் காவேரி நிலா சொன்னதை காதில் வாங்கி இருந்தால் ஏதாவது வீட்டில் உள்ள அனைவரையும் திட்டுவாரா கோபித்துக் கொள்வாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
கதையின் நகர்வு எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ..
மிக்க நன்றி 🙏
Nice