அத்தியாயம்-16
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இன்று பிறந்த நாள் என்பதால் அலுவலக தோழிகள் கேக் எல்லாம் கொண்டு வந்து பாரதியை வெட்டக்கூறினார்கள்.
அவளும் கேக்கை கத்தரித்து மற்றவருக்கு ஊட்டிவிட்டாள். சிலர் அன்புக்கு அடையாளமாக பரிசை தர பெற்றுக் கொண்டாள்.
அதன்பின் கொண்டாட்டம் முடிந்து பணியை பார்வையிட்டாள்.
அவளது அலுவலகம் முடிய வீட்டிற்கு செல்ல வெளியே வந்தாள்.
மணிமேகலையும் சௌந்தர்ராஜன் மகளுக்காக கார் கேபில் புக் செய்துவிட்டு காத்திருந்தனர்.
எங்கே தங்கிமிருக்கின்றாள் ன்று கேடடதற்கு பதில் சொல்லாததால், இன்று மறைந்திருந்து எப்படியாவது அவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்து வர மடிவெடுத்தார்.
பாரதியும் தனது பரிசு பொருட்களை கையில் ஏந்தி, பேருந்தை தவிர்த்து, கேப்பில் புக் செய்தாள்.
தற்போது தங்கியிருக்கும் அந்த இடத்திற்கு காரில் செல்வது அதீத பகட்டை காட்டுமென ஆட்டோவை தான் புக செய்திருந்தாள்.
ஆட்டோ பின்னால் அந்த காரிலிருந்து பாலோவ் பண்ண கூற செவ்வனே அப்பணி நடந்தது.
தன் பிறந்த நாளுக்கு தன் தாய் தந்தையுடன் கொண்டாடும் பழைய நினைவுகளை எண்ணி சாய்ந்து வந்த பாரதி பின்னால் தந்தை காரில் வருவதை கவனிக்க தவறினாள்.
பணம் தந்துவிட்டு இறங்கி நடக்கவும், அவர்களும் அவளறியாது நடந்து வந்து பின் தொடர்ந்தனர்.
“என்னங்க இது வழியெல்லாம் இப்படி இருக்கு.” என்று மணிமேகலை புலம்ப, “கொஞ்சம் சும்மா இருக்கியா? உன் பொண்ணு அவளை கெடுத்தவனோடவே வாழறா போல. அதான் இந்த மாதினி பொறுக்கிங்க இருக்கற ஏரியாவுல நுழைந்து நடக்கறா.” என்று தப்பர்த்தம் புரிந்து கொண்டனர்.
மகள் என்ன தான் மனநிலையில் இங்கிருக்கின்றாளென்ற கோபம் ஒரு பக்கம். அவளை கெடுத்தவனோடு வாழ்கின்றாள் என்று முடிவுக் கட்டியிருந்தனர்.
கெடுப்பவன் இது போன்று இடத்தில் இருப்பவன் என்றே முடிவு கட்டிவிட்டார்.
பாரதி வீட்டு கதவை திறந்து நீழைந்து கதவை சாற்ற போக, மணிமேகலையை கண்டு திடுக்கிட்டாள்.
இன்று இல்லாவிட்டாலும் என்றாவது அலுவலகத்தில் விசாரித்து என்றாவது இப்படி வருவார்களோ என்று எண்ணியதால் பாரதி கதவை தாழிடாமல் அமைதியாக வழிவிட, மணிமேகலை வீட்டுக்குள் வந்து “என்னடி உன் மனசுல இருக்கு. இது யார் வீடு. இங்க என்ன பண்ணற? இந்த ஏரியாவுல எதுக்குடி வந்த? உன்னை கெடுத்தவன் இங்க தான் இருக்கானா?” என்று வந்ததும் வராததும் வாயிலும் வயிற்றுலும் அடித்து கேட்டார்.
“அய்யோ அம்மா.. உள்ள வா” என்று உள்ளே வரவழைத்து கதவை அடைத்தாள்.
தந்தை வீட்டை பார்வையிட்டவாறு “இதெல்லாம் என்ன பாரதி. உனக்கு பாரதின்னு பெயர் வச்சது நீ தெளிவா தைரியமா இருப்பனென்ற காரணத்துக்காக தான். அதுக்காக இப்படியா?” என்று பொறுமினார்.
“இங்க பாருங்க… நம்ம வீட்ல இருந்தப்ப நீங்க போலீஸில் புகார் தரலை என்ற காரணமும், அம்மா அப்பாவான நீங்களே என்னை பாவமா கஷ்டமா, ஒரு மாதிரி சோகமா பார்த்தாலே எனக்கு நான் எவனாலையோ கெடுக்கப்பட்டேன் நினைவுப்படுத்திட்டே இருந்தது. அதனால தான் உங்களை தவிர்த்து தனியா வந்தேன். மேபீ… போலீஸுக்கு போக நீங்க உதவலை என்ற கோபமும் இருந்தது.
எனக்கு அப்ப தனிமை தேவைப்பட்டது. உங்களை விட்டு தனியா வந்தேன், போக போக வன்புணர்வுக்கு இளான பொண்ணு நீதி நியாயம்னு போனாலும் நியாயம் கிடைக்குமானு சந்தேகம் வந்துடுச்சு. அதனால் உங்க மேல இருந்த கோபம் குறைந்துடுச்சு.” என்றாள்.
“சரிடி இங்க ஏன் வந்த? உன்னை கெடுத்தவன் இங்க இருக்கானா?” என்றார் மணிமேகலை.
பாரதி கோபமாக “என்னை கெடுத்தவன் இங்க இல்லை. நம்ம வீட்லயிருந்து கோபமா வந்தேன்ல அப்ப, என்னை குப்பைத்தொட்டிலயிருந்து ஹாஸ்பிடல்ல சேர்த்தவங்க இங்க தான் இருக்காங்க. அவங்களிடம் உதவி கேட்டு ரஞ்சித்தை போலீஸிடம் புகார் தர நினைச்சேன். அதோட இங்கயே தங்கினேன். ஆனா ஆதாரம் அழிஞ்ச பிறகு என்னனு புகார் தருவன்னு அந்த போலீஸ் கிண்டல் செய்து அனுப்பிட்டாங்க.” என்றாள் அதே சோகத்துடன். ரஞ்சித்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த முடியாத ஆற்றாமையுடன்.
“அதான் எதுக்கும் வழியில்லைன்னு தெரியுமே. நேரா நம்ம வீட்டை பார்த்து வரலாம்ல” என்று கேட்க, பாரதியோ அமைதியானாள்.
“நானே எனக்கான தனிமை தேவைப்பட்டு இயல்பானதும் வரலாம்னு இருந்தேன்” என்றாள்.
“சரி.. கிளம்பு. பிறந்த நாள் அதுவுமா… எல்லாத்தையும் தலைமுழ்கி நம்ம வீட்டுக்கு வா. அங்க பிரஷாந்த் உன்னை தேடி வீட்டுக்கு வந்தார். உன்னை பார்த்து பேசணும்னு. அவர் உன்னை கல்யாணம் பண்ணிக்கறாராம்.” என்றார்.
பாரதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி பிரஷாந்த் தன்னை மணக்க தற்போது ஒப்புக்கொண்டார் என்று.
“அவர் வீட்ல எப்படி என்னை ஏத்துக்கிட்டாங்க? அவர் அவங்க பேரண்ட்ஸை கன்வகன்ஸ் பண்ணிட்டாரா?” என்று கேட்டாள்.
சௌந்தரராஜனோ “பிரஷாந்த் அவர் வீட்ல பொண்ணு வேற பாருங்க என்று மட்டும் சொன்னாராம். அவங்க வீட்டு ஆளுங்களுக்கு உன்னை பார்த்து ரொம்ப பிடிச்சதால அவர் மறுத்ததுக்கு, ஏன் எதுக்குனு குடைச்சல் தந்திருக்காங்க. பிரஷாந்த் உன்னை பத்தி மூச்சு விடலை. இப்ப அவரே உனக்கு நடந்ததை மறந்துட்டு கல்யாணம் பண்ண சம்மதிச்சிட்டார்.” என்று விவரித்தார்.
பாரதியால் நம்ப முடியவில்லை அமைதியாக தாய் தந்தையருக்கு காபி போட்டு நீட்டினாள்.
சின்னதாக இருந்த வீட்டில் தேவலக்கு சில பொருளை வாங்கி வீட்டை நிறைத்து வாழும் மகளை கண்டு அதிசயித்தார்.
ஓரே பெண் டேடி லிட்டில் பிரின்ஸ்சஸ் என்று வாழ்ந்தவளது வாழ்வில் இப்படி தனியொருத்தியாக வீட்டை சமாளிப்பாளா என்று எண்ணியதற்கு மாறாக, பெண்கள் விடுதியில், தோழிகளில் ஒருத்தி வீட்டில் என்று தங்காமல் தனியாக வாழ்கின்றாளே.
“நம்ப வீட்டுக்கு கிளம்பு?” என்று எடுத்துரைக்க மறுப்பாய் பாரதி தலையாட்டினாள்.
“உனக்கு என்ன பைத்தியமா பாரதி” என்றார் சௌந்திராஜன்.
“என்னடி வேணும் உனக்கு?” என்று மணிமேகலை மகளருகே வந்து கேட்டார்.
“தெரியலைம்மா… நான் பெத்த அம்மா அப்பாவுக்கு நல்ல பொண்ணா இருந்தேன். நீங்க கைகாட்டற பையன் வீட்டு ஆளுங்க பொண்ணு பார்க்க வர்றப்ப தலைகுணிந்து காபி கொடுத்தேன். நீங்க கட்டிக்க பார்த்து வச்சவனை தான் உங்க அனுமதியோட பார்க்க போனேன்.
என்னை காதலிப்பதா சொன்னவனை மறுத்தேன். நின் நல்ல பொண்ணா இருந்தும், என்னை ஏன்மா இந்த கடவுள் சோதிச்சார்.
என்னால என் நினைவுகளை அழிக்க முடியலைம்மா. நீயும் அப்பாவும் என்னை ரூம்ல போட்டு வச்சி கோழி குஞ்சு மாதிரி பார்த்துக்கறப்ப, ஏதோ வலிச்சுதும்மா. என் உடல்ல கீறல்ல, தழும்பை பல்தடத்தை நீங்க பார்த்து பார்த்து அழுதப்ப, அம்மா அப்பாவுக்கு கஷ்டமாயிருக்கேன்னு வலிச்சும்மா. என்னை பெத்தவங்களை நிம்மதியா இருக்க விடாம நானே நிம்மதியிழக்க காரணமாகிட்டேனேனு குற்றவுணர்வு கூடுது.
நான் பைத்தியமா இருக்கேனு எனக்கே தெரியுது. எனக்கு..எனக்கு.எனக்கு தனியா இருக்க தான் தோனுது. ஆனா தனியாவே இருக்க மாட்டேன். நானா நம்ம வீட்டுக்கு திரும்ப, எல்லாத்தையும் மறந்து வருவேன்.” என்றாள்.
சௌந்திராஜனோ “பிரஷாந்தோட பேசு. இந்த இடப் எல்லாம் வேண்டாம். வீட்டுக்கு வர்ற வழியை பாரு.” என்றார்.
“நான் இங்க அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். எனக்கு மினிமம் த்ரி மந்த்ஸ் ஆவது கொஞ்சம் ஸ்பேஸ் தேவைப்படுது. சோ… இப்போதைக்கு வரலை. பிரஷாந்த்கிட்ட பேசறேன்” என்றாள்.
“தனியா இருக்கணும்னு முடிவெடுத்தா எத்தனையோ விதமான லேடிஸ் ஹாஸ்டல் இருக்கு. அதுவும் தரமான இடமா. அங்கயிரு” என்றவர் வரிசையாக உயரக ஆட்கள் இருக்கும் பகுதி பெயர்களாக கூறினார். ரஞ்சித் இருக்கும் ஏரியாவும் அதில் அடக்கமாக, பாரதியோ “உயர் தரமான ஆட்கள் இருக்குற இடம்னா என்னனு நினைக்கறிங்கப்பா? நீங்க சொன்ன ஏரியவுல இருந்து வந்த பணக்காரன் ஒருத்தன் தான் என் கற்பை சூறையாடினான்.
இங்க நான் பாதுகாப்பா உணருறேன்ப்பா. அதுக்காக இங்க தான் இருப்பேன்னு சொல்ல மாட்டேன். வருவேன்… நம்ம வீட்டுக்கு நானா தானா வருவேன்.” என்றாள்.
சௌந்திரராஜன் மணிமேகலை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகளை கண்டனர்.
அதன்பின் வீட்டிலிருந்த ரவையால் உப்புமா செய்து தேங்காய் சட்னி வைத்து தந்து அன்னை தந்தையை சாப்பிட வைத்தாள்.
சௌந்திராஜனுக்கு கண்ணெல்லாம் கலங்கியது. மகள் கையால் சாப்பிட வேண்டுமென்பது எல்லாம் கனவு. அந்த கனவு அவள் மணமாகி வேறு குடும்பத்தில் சென்றதும் நிறைவேறும் ஆசையில் இருந்தவரால் இந்த கோலத்தை தாங்கமுடியாமல் துடித்தார்.
நீங்க கிளம்புங்க” என்று அனுப்ப முயன்றவளை பிரியவே மனமின்றி சென்றனர் இருவரும்.
அவர்கள் சென்ற அடுத்த நொடியே அனிதா வேகமாக வந்து பாரதியை கட்டிக் கொண்டாள்.
“அக்கா… அக்கா.. எங்கண்ணா பின் வாசலுக்கு தாழ்பால் போட்டு வச்சிட்டார். நீங்க அண்ணாவிடம் சொன்னிங்களா” என்று கேட்டாள். அனிதா முகத்தில் அத்தனை சந்தோஷம்.
“அனிதா… உங்கண்ணாவிடம் நீ எதையும் மறைக்க வேண்டாம். முடிஞ்சா ப்ரியா பேசு. அதோட இது போல யாராவது பிஹேவ் பண்ணினா வீட்ல சொல்லிடு.” என்றாள்.
“கண்டிப்பா அக்கா… அக்கா… உங்க வீட்டுக்கு இரண்டு பேர் வந்தாங்களே… யார் அவங்க?” என்று கேட்டாள்.
பாரதியோ “எங்க அப்பா அம்மா” என்றாள்.
வீட்டின் மெலே காற்றோட்டத்திற்காக வைத்திருக்கும் சிறு ஜன்னல் வழியாக அனிதா பாரதி பேசுவதை கேட்டான் சரவணன். அப்ப வந்துட்டு போனது அப்பா அம்மா தான். சே… அம்மா இருந்ததால சரியா கேட்க கூட முடியலை. டிவி சவுண்டு வேற.’ என்று எண்ணியவனுக்குள் அவங்க அம்மா அப்பா வந்துட்டு போனது எதுக்கா இருக்கும்?
“சரிக்கா… நான் வந்ததும் சொல்ல நினைச்சி ஓடிவந்தேன். உங்க வீட்ல ஆளுங்கனு பார்த்ததும் வரலை. இப்ப தான் போனதும் வந்துட்டேன். ரொம்ப நேரம் பேசினிங்க.” என்று கேட்டதும், பாரதிக்கோ “உங்க வீட்ல இங்க பேசியது கேட்டுச்சா?” என்று நெஞ்சில் கைவைத்து கேட்டாள்.
“இல்லைக்கா.. பொதுவா பேசினா உன்னிப்பா டிவி ஓடாம இருந்தா கேட்கும். ஆனா எங்கம்மா தான் சீரியல் பார்த்துச்சே. அதனால எதுவும் கேட்கலை.” என்று கூறினாள்.
பாரதி கண்கள் வீட்டின் மேல் ஜன்னல் பக்கம் பார்த்து, “இப்ப டிவி சத்தமில்லையே. கேட்குமா?” என்று விசாரிக்க, அனிதா தோளைக்குலுக்கி “அம்மா தேவிக்கா வூடீ வரை போயிருக்கு” என்றாள்.
“அப்ப உங்க வீட்டு சுவருக்கு மறுபுறம் உங்கண்ணா ஒட்டு கேட்கறாரோ?” என்று சத்தமாய் பேச, சரவணனோ, சுவற்றிலிருந்து சாய்ந்திருந்தவன் நேராக நின்றான்.
“எங்கப்பா அம்மா வீட்டுக்கு கூப்பிட்டாங்க. இப்ப வரமுடியாது. கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது தனியா இருக்கேன்னு சொன்னேன். யாருக்காவது ஏதாவது என்னிடம் கேட்கணும்னா கேளுங்க. ஒட்டு கேட்காதிங்க” என்று கேலியாக சிரிக்க சரவணனோ “அனிதா… புக்கை திறந்து வச்சகட்டு எங்க போன? அம்மா வருது” என்று ஜன்னலை நோக்கி குரல் கொடுத்தான்.
“ஓடு.. ஓடு. உங்கம்மா வந்துட போறாங்க” என்று விரட்ட அனிதா பூஞ்சிட்டாய் பறந்தாள்.
“பாரதி பின்வாசலுக்கு தாழ்பால் போட்டுட்டேன்.” என்று வாட்சப்பில் அனுப்பினான்.
பாரதியும் ஆள்காட்டி விரலால் வெற்றியை குறிக்கும் எமோஜியை ஓகே என்பது போல அனுப்பினாள்.
அனிதாவோ பூப்போட்ட பாவாடை துள்ளி குதித்து வந்து புத்தகத்தை புரட்டினாள்.
பாரதிக்கு இவன் வீட்டு பின்வாசல் பக்கம் தாழ்பால் போட்டுயிருப்பதை தெரிவித்தவனுக்கு இதயத்தில் அவள் வருகைக்கு தாழ்பாலிடாமல் கதவை திறந்து அவனறியாமல் காத்திருந்தான்.
அவனை அறியாது சலனங்கள் அவன் உள்ளத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தியது.
அவன் மனதில் புகுந்திடும் இந்த ஆசைகள் அவன் அறிய நேர்ந்தால்…. அதையே பாரதிக்கும் அறிய நேர்ந்தால்…..
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Wow super super bharathi. Excellent sis. Intresting
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 16)
அட.. இப்ப எதுக்கு பழைய மாப்பிள்ளை வந்து புலம்பிட்டு போறாருன்னு தெரியலையே.
அதுசரி, எப்படி நீங்க இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து வைக்கப் போறிங்கன்னு தெரியலை.
பாரதி, படிச்சப் பொண்ணு, நடுத்தர வர்க்கம், நல்ல ஜாப்..
சரவணன் ரொம்ப ரொம்ப லோ க்ளாஸ், படிப்பும் அவ்வளவா இல்லை, கவர்மெண்ட் வேலைன்னாலும் குப்பை அள்ளுற வேலை தானே..?
அப்புறம் எப்படி…? மண்டை வெடிக்குது எனக்கு.
ஏன்னா, சுத்தி முத்தி ஹை டெக் ஜாப் மாப்பிள்ளைங்க, அதுவும் ஐ.டி. கம்பெனி ஜாப் தான் எங்க பார்த்தாலும். பொண்ணுங்களும் பையன்ங்களும் அப்படிப்பட்ட மாப்பிள்ளையைத்தான் எதிர் பார்க்கிறாங்க. இதுல நீங்க மட்டும் எப்படித்தான் இப்படி வித்தியாசமா யோசிக்கிறிங்களோ போங்க.
😀😀😀
CRVS (or) CRVS2797
Intha relationship konjam complicated ah than erukkum