Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

அத்தியாயம்-19

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் பேசி களைத்து, மணிமேகலை வீட்டை விட்டு போங்க, என்று அனுப்பாத குறையாக வாசலை கைகாட்டியப்பின் சாந்தகுமாரோ, “இது எங்க வீட்டு அட்ரஸ். இது என்னோட பிசினஸ் கார்ட். நாங்க இருக்கறது சொந்த வீடு. எனக்கு தாம்பரத்துல இரண்டு வீடு, ஈசிஆர் பக்கம் ஒரு ரெஸ்டாரண்ட், வச்சியிருக்கோம்.
  என் மகளுக்கு இப்பவே தனியா நகை வீடு எல்லாம் இருக்கு.
   எங்களுக்கு பிறகு ரஞ்சித் தான் அத்தனைக்கும் வாரிசு.
  ரஞ்சித் செய்த தப்பால அவனை உங்களுக்கு பிடிக்காம போகலாம். ஆனா ஊர் உலகத்துல நடக்காதது இல்லை. முன்ன கிராமத்துல எல்லாம் கெடுத்தவனுக்கு கட்டி வச்சி அவங்க நல்லபடியா வாழ்ந்து இருப்பதை பார்த்திருப்பிங்க. இங்க ரஞ்சித் தான் தப்பு செய்தான்னு இனியும் போலீஸிடம் போக முடியாது. ரஞ்சித் இப்பவே சட்டத்துக்கு முன்ன தப்பிச்சிட்டான்.

எங்களுக்கு மனசாட்சி இருக்கு சார். ஒரு பொண்ணை வச்சியிருக்கோம். உங்க குடும்பத்து சாபத்தை வாங்கிடுவோமோனு பயமாயிருக்கு.
   பாரதியை நேர்ல பார்த்தோம். அவளை ரஞ்சித்துக்கே கட்டி வைக்க தான் குடும்பமா முடிவு செய்தோம். அவளுக்கு கல்யாணம் ஆன அடுத்த நிமிஷமே தாம்பரத்துல இருக்கற ஒரு வீட்டை அவபெயர்ல எழுதி தர்றோம்.
  அவளை நல்லபடியா பார்த்துப்போம். அவளுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காம நாங்க பார்த்துப்போம்.
  உங்க தரப்புல ரஞ்சித்தை மன்னிச்சு, கல்யாணத்துக்கு சம்மதிச்சா போதும்.
  எதுவும் உடனடியா சொல்ல வேண்டாம். ஒரு வாரம் கூட யோசிங்க. நீங்க சம்மதிச்சா அடுத்த சில நாளிலேயே கல்யாணத்தை வைக்க நாங்க ரெடி.” என்று மன்றாத குறையாக நின்றனர்.

   மணிமேகலை அவர் கொடுத்த கார்டை தட்டி விட்டார்.‌

   “பொண்ணை பெத்தவங்க புத்திசாலியா யோசித்து சொல்லுங்க. வர்றோம் சார். வர்றோம்மா” என்று திவ்யாவை செல்ல கூறினார். மகள் சுவஸ்திகாவை அழைத்து சென்றனர்.
  ரஞ்சித் மட்டும் இருக்க, “அங்கிள்… எனக்கு பாரதியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அங்கிள். அவ எனக்கு கிடைக்கமாட்டானு நினைச்சு தான் தப்பு செய்தேன். அந்த நேரம் நான் நானா இல்லை அங்கிள். ஏதோ பொண்ணெல்லாம் பார்த்துட்டு போனாங்கன்னு பழிவாங்கறதா நினைச்சி தப்பு பண்ணிட்டேன். பெரிய தப்பு அங்கிள். அதுக்காக இப்ப வருத்தப்படறேன்” என்று மணிமேகலை காலையும் சௌந்திரராஜன் காலையும் பிடித்தான்.
 
   மணிமேகலை காலை உதறி “வெளிய போடா நாயே” என்று கோபமாக கூற, சௌந்திரராஜனை கண்டு வெளியேறினான்.‌

  சௌந்திரராஜனோ மழை விட்டு ஓய்ந்தது போல ரஞ்சித் வெளியேறியதும் கதவை பட்டென்று முகத்திலடித்தது போல சாற்றினார்.

  ரஞ்சித் காரில் ஏறி கதவை பார்க்க,திரைச்சீலையை மூடியிருந்தார் சௌந்திரராஜன்.
 
  கருப்பு நிறக்கார் கவனத்தை பதியும் படியாக இருந்தது. நிச்சயம் காரும் விலை அதிகமென்று சொல்லாமல் சொன்னது.

  ரஞ்சித் சென்றப்பின், மணிமேகலை சௌந்திரராஜன் இருவரும் தனிதனியாக ஜடம் போல வீற்றிருந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சென்று வந்ததும், ரஞ்சித் பேசியதற்கும், ஏற்கனவே இருந்த சோர்வும் என்று களைத்திருந்தனர்.


  இங்கே பாரதி இருக்குமிடத்தில் தாய் தந்தை வந்து சென்ற நாளிலிருந்து, விமலா அடிக்கடி பாரதியை கண்டு எழுந்து நிற்பார். அவள் வரவும் சிரிக்க, வித்தியாசமாய் தெரிந்தார்.

  கடைசியாக அரையும் குறையுமாக ஒட்டு கேட்டு காதில் விழுந்ததில், ‘தயவு செய்து வெளியே போங்க. நான் தனியா இருக்க விரும்பறேன். என் மனசை புரிந்துக்காம கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணாதிங்க. ஏதாவது டார்ச்சர் தந்தா நான் பிறகு தற்கொலை பண்ணிப்பேன். அப்பறம் ஒரேடியா கருமாந்திரம் தான் பண்ணணும்.” என்று பாரதி கத்தியதே நினைவு வந்தது.

  விமலாவுக்கு தன் மகன் சரவணனை காதலித்து இருக்கின்றாள். அதனால் வீட்டில் வரன் பார்க்கவும் பிடிக்காமல் சரவணனிடம் இக்கட்டு கூட்டியிருக்கின்றாள்.
அவனோ தங்கையை கல்லூரியில் சேர்த்துவிட்டோ அல்லது கொஞ்சம் நிலைமையை சீர்செய்தப்பின் மணக்க வாக்கு தந்திருப்பானோ?  தற்காலிகமாக தனியாக சரவணன் பக்கத்தில் வைத்து பார்க்கின்றான்.’ என்று அவராக ஒரு கதையை புனைந்து கொண்டார்.

  அவரை பொறுத்தவரை வட்டிகடை ஆனந்தராஜ் கூறியது, ‘அந்த பொம்பள அதுயாரு கலாவா? அது கூட உன் பையன் வந்து தான் வீடு வாடகைக்கு கேட்டான்.
  அந்த பொண்ணு உன் வூட்ல தங்க காரணமே உன் புள்ள தான். மறுக்கா கூட வாடகை கொடுக்க உன்‌ பிள்ளை தான் துடுப்பு போல வந்தான். எதுக்கோ காதுல போட்டு வைக்கறேன். அவங்க இரண்டு பேரும் ஜோடி போட்டு பார்க்க வந்ததை’ என்று கூறியிருக்க, விமலாவும் இரண்டும் ஒன்று மூன்று என்று கூட்டி கணக்கிட்டு கொண்டார்.

  ஆனால் பாரதி வாழ்வில் இரண்டும் ஒன்றும் இரண்டு தான் என்று பெருக்கி, யாரையும் காதலிக்காமல் தனித்து இருப்பதை அவர்கள் அறியவில்லை.

  ஏதோ மகன் நல்ல பொண்ணா தான் பிடிச்சிருக்கான் என்று அன்றைய நாளிலிருந்து விமலா பாரதியை மருமகளாக நினைத்து கொண்டார்.

  அடிக்கடி ஏதாவது செய்து ஒரு குட்டி பாக்ஸில் அல்லது தட்டில் வைத்து “ஏம்மா.. வீட்ல தேங்கா சாதம் செய்தேன். இந்த.. தக்காளி சாதம் செய்தேன். லெமன் சாதம் செய்தேன். இந்தா இரண்டு பஜ்ஜி எடுத்துக்கோ’ என்று உரிமையாக நீட்டினார்.

   பெரும்பாலும் எதை தந்தாலும் வாங்கி கொள்ளும் நிலையில் பாரதி, தாயின் உணவிற்காக ஏங்கி தவிக்க, விமலா தந்ததை தவறாக கருதவில்லை.

சரவணனுக்கு மட்டும் அன்னையின் செய்கைக்கு அர்த்தம் விளங்கிவிட்டது. ஆனால் தடுத்து நிறுத்தவும் மனமில்லை. ‘இப்ப இன்னா… ஏதாவது செய்தா தர்றாங்கோ. அதானே… தந்துட்டு போட்டும். அது கூடதான் கேசரி தந்துச்சு. அப்படி எடுத்துப்போம். ஏதாவது சொல்லி, எசகுபிசகா அம்மா சண்டை போடும். அதுக்கு இது மேலு.’ என்று தான் நினைத்தான்.

   அனிதாவுமே ‘அக்கா அக்கா‌.. இந்த மேத்ஸ் புரியவேயில்லை. உங்களுக்கு தெரிந்தா சொல்லி தாங்களேன்.” என்று வந்து நிற்பாள்.
  பாரதிக்கு கணிதமெல்லாம் கரைத்து குடித்திருக்க அனிதாவுக்கு புரியும் விதமாக சொல்லி தருவாள்.

அய்யோ.. அக்கா… ஈஸியா சொல்லி தர்றிங்க” என்று கட்டிபிடித்து ஓடுவாள்.

  அழகாக தான் சென்றது. அதுவும் அந்த இறைவனுக்கு பொறுக்கவில்லையோ என்னவோ,  அன்றைய நாள் சனிகிழமை என்றதும், ஐடி கம்பெனி விடுமுறை இருந்தது. சுவாதினமாக பன்னிரெண்டு மணிக்கு தலைக்கு குளிக்க ஆயத்தமானாள்.
 
    குளிக்க எல்லாவற்றையும் எடுத்து சென்றவளுக்கு, யாரோ வீட்டுக்குள் இருப்பதாக தோன்றியது.
   அப்படியென்றும் பெரிய அரண்மனையில்லையே. அதனால் வீட்டை துழாவவும் அங்கே ஆனந்தராஜ் குளியலறைக்கு பின் பக்கம் சிறு சந்தில் ஒளிந்திருந்தான்.

பாரதி பார்த்து விட்டால் என்றதும், முன்னே வந்தான்.

“நீ…நீ… எங்க இங்க? அனிதா குளிப்பதை பார்ப்பது போல இங்கயும் வந்துட்டியா? வெளிய போடா” என்றாள்.

”ஓ.. அந்த சின்ன சிறுக்கி அவ அம்மாவிடம் கூட சொல்லாம உன்னான்ட சொன்னாளா?” என்று அங்கே எச்சியை உமிழ்ந்துவிட்டு, “இங்க பாரு… என்னை அட்ஜஸ்மெண்ட் பண்ணிட்டா இந்த வீட்டுக்கு வாடகை கூட நீ கொடுக்க வேணாம். இது உன் வீடு” என்று நெருங்கினான்.
   இந்த ஏரியாவில் இந்த வசனம் சொல்லி வட்டி பணத்தையும் வாடகையையும் தவிர்த்து பெண்களை புணர்ந்து கொள்ளும் ஜாலக்காரனுக்கு பாரதி அரைலட்சத்திற்கு மேலாக சம்பளம் வாங்குவாளென்று அறியாது பேசினான்.

  “அடச்சீ… உன் வாடகை ஐம்பதாயிரம் என் ஒரு நாள் ப்யூட்டிபார்லருக்கான செலவு டா. உன்னை நான் ஏன் அட்ஜஸ்மெண்ட் பண்ணணும்” என்று திமிராக மொழிந்தாள்.
அதன் பின்னரே பாரதியின் நிலை மண்டைக்குள் உதித்தது.
  இன்று விட்டால் மீண்டும் பாரதியை நெருங்குவது கடினமென எண்ணிய ஆனந்தராஜோ அவளை அனுபவித்தப்பின் அடக்கிட முடிவு செய்தபடி நெருங்க, பாரதி கத்த துவங்கினாள்.

பாரதி வீட்டிலிருந்தால் மூச்சு விட்டாலே சரவணனுக்கு தெரியும். அந்தளவு செவியை கூர்த்தீட்டியவனுக்கு பாரதி கத்தவும், வேகமாய் அவன் வீட்டின் பின்வாசலிருந்து அங்கிருந்த டிரம்மில் ஏறி பார்த்தான்.

வட்டிக்கடை ஆனந்தராஜ் என்றதும், ஆங்காங்கே பாரதி குளிக்க எடுத்து வைத்த துணி சிதறியிருக்க நிலவரத்தை யூகித்தான்.

அடுத்துவீட்டில் சுவரேறி குதித்தான்.
விமலாவும் அனிதாவும் ரேஷன் கடைக்கு சென்றியிருக்க, சரவணன் இவ்வீட்டில் குதித்து ஆனந்தராஜை அடிக்க சட்டையை பிடித்தான்.

அடுத்த நிமிடம் அவன் பொருளாதாரம், தன்னிலை, பயம், என்று வரிசைக்கட்டி வந்தது.

  சட்டென சட்டை காலரை தளர்த்தி கையை இழுத்துக்கொண்டவன்.

“அண்ணாஅண்ணா.. இன்னா அண்ணா பண்ணற. இது நமக்கு தெரிந்த பொண்ணு. இத்தாண்ட இப்படி பண்ணறியே. அக்காவுக்கு தெரிந்தது உன்னை உதைக்கும்.” என்று தள்ளும் விதமாக நடுவில் வந்தான்.

  “ஏன்டா.. இவளென்ன பெரிய பத்தினியா? அந்த கலா பொம்பள கூட வந்தவ தானே? இன்னாத்துக்கு பத்தினி வேஷம். ஏதோ ஆசைப்பட்டேன்..‌‌. தொட்டுட்டு போறேன் நீ உன் வேலையை பாரு.” என்றான்.‌

“வாட்?” என்று பாரதி அதிர, “என்ன சரவணா இது? அனிதாவிடம் மிஸ் பிஹேவ் பண்ணி மிரட்டியிருக்கான். இப்ப என்னிடம் அத்துமீற ட்ரை பண்ணறான். இதெல்லாம் பார்த்தும் கெஞ்சிட்டு இருக்கிங்க?” என்று கோபமானாள்.

  சரவணனோ பல்லை கடித்து பொறுமை காத்திட முயன்றான்.

  “என்ன சரவணா… அனிதா பாப்பா ஏதாவது சொல்லுச்சா என்ன?” என்று கேட்டான். அதே அமைதி சரவணனிடத்தில்.

  ‘பாரதியோ “சே.. இதை உங்களிடம் எதிர்பார்க்கலை சரவணன்.” என்றவள் ‘யோவ் வெளியே போயா?” என்று ஆனந்தராஜை பார்த்து கத்தினாள்

அவனோ  “என்னடி… ரொம்ப துள்ளற. அந்த பொம்பள கலா எப்படி பட்டதுன்னு ஊருக்கே தெரியும். அப்படிப்பட்டவ கூட வந்து தனியா வாடகைக்கு வேற தங்கியிருக்க. அப்படின்னா என்ன அர்த்தம்?” என்று கையை பிடிக்க முயன்றான்.

  சரவணனோ பாரதிக்கு நடுவே நின்று, “ஆனந்தராஜ் அண்ண… நீ செய்யறது தப்பு. என் தங்கச்சிக்கிட்ட தப்பா நடந்துக்க முயன்ற. சரி வேலி சரியில்லைன்னா ஓனான் உள்ள வரும்னு தான் கதவை சரிப்பண்ணினேன். ஆனா நீ இப்ப இவங்களிடமும் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணற. கலா அக்கா கூட வந்தா இந்த பொண்ணை எப்படி தப்பா நினைப்ப. அன்னிக்கு நானும் தான்  கூட வந்தேன்.
இந்த பொண்ணு எங்க வீட்ல ஒருத்தங்க மாதிரி.” என்றான்

   “என்னது… உங்க வூட்ல ஒருத்தியா? டேய்… ரோட்ல குப்பை அள்ளுற, இவ ஐடில வேலை பார்க்கறா. உங்க வூட்ல ஒருத்தியா” என்று நகைத்தார்.

சரவணனுக்கோ எரிச்சல் படர்ந்தது. “இதொப்பாரு அண்ண… வீட்ல அக்காகிட்ட சொன்னேன். உன்னை விளக்கமாத்தால அடிக்கும்.” என்று மனைவிக்கு பயந்தவன் என்று ஆனந்தராஜை மனைவியை வைத்து பயமுறுத்த முயன்றான்.

“எவன்டா.. நீ.. அதெல்லாம் சொன்னா கலா கூட வந்த பொண்ணு அது சொல்றதை நம்பறியானு கேட்பேன். என்‌ பொண்டாட்டி என் பேச்சை கேட்பாடா. நீ விலகு. எப்படி எகிறி குதிச்சியோ அப்படியே உன் வூட்டுக்கு கிளம்பு. இல்லை… இங்க தான் இருப்பன்னா… நான் வந்த வேலையை முடிச்சிட்டு நடையை கட்டறேன். நீ அடுத்து உன் காரியத்தை சாதிச்சிக்கோ” என்று கண்சிமிட்டினான்.‌

  சரவணனுக்கு கோபம் கொப்பளித்தது. பாரதியை நெருங்கும் நேரம், சரவணனுக்கு உதறல் எடுத்தது.
   இன்று பாரதி, நாளை தங்கை அனிதா என்று ஆனந்தராஜ் பாய எத்தனை நாள் ஆகும்.
  தங்க வீடு கடன் என்ற இக்கட்டை முன் வைத்து பதுங்குவதா? அப்படி என்ன வாழ்ந்துவிட்டோம். நினைவு தெரிந்த நாள் முதல் இந்த வீட்டில் வாழ்ந்துவிட்டான். ஒரு முன்னேற்றமும் இல்லை. பாரதிக்கு நடந்த நிகழ்வை போல அனிதாவுக்கும் நிகழலாம். பாரதி வேறு ஏற்கனவே பலாத்காரம் அடைந்து மீண்டு வந்தவள். அப்படியிருக்க…. இதுவரை அமைதியாக நிற்பதே அபத்தமாக தோன்றியது சரவணனுக்கு.
  அதனால்… ஆனந்தராஜின் தோளில் கைவைத்து பாரதிக்கு எதிர்புறம் தள்ளி விட்டான்.

  அங்கே அரை சுவராக இடிந்த நிலையில் இருந்ததில் ஆனந்தராஜ் முட்டி மோதி கீழே சரிந்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 19)

    அச்சோ…! இந்த ஆனந்தராஜ் மாதிரி ஆளுங்கத்தான் எங்கேயும் நிறைஞ்சிருப்பாங்களோ…?
    இவங்களையெல்லாம் அடக்கவே முடியாதோ…?
    இப்ப இந்த சரவணா ஏதாவது பண்ணப்போய் நாளைக்கு அவனோட குடும்பமே நடுத்தெருவில நிக்க வேண்டியதாயிடுமோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!