❤️மனமெனும் ஊஞ்சல்❤️
அத்தியாயம்-1
தன் நண்பர்களுடன் இருபது நாள் கோவா சுற்றுலா செல்லும் நோக்கத்தோடு நம் நாயகன் நிரஞ்சன் துள்ளலாய் கிளம்பிக் கொண்டிருந்தான்.
அவன் அலுவலக நண்பர்களோடு செல்கின்றான். அதில் பெண் தோழிகளும் அடக்கம். அதிலும் அவனுடன் அலுவலகத்தில் இன்னொரு பெண் நிஷா இவனோடு கிசுகிசுக்கப்படுவாள். அவளும் கோவா வருகின்றாள். அது அவனுக்கு இன்னமும் குதுகலாமான விஷயம்.
அதற்கு தான் கூடுதலாக ஆனந்தத்தோடு, வாசனை திரவியத்தை உடலில் அடித்து முடித்து, புது மாப்பிள்ளை போல் சவரம் செய்த முகத்துடன், டார்க் ப்ளூ ஜீன் வொயிட்-டீ-ஷர்ட் என்று அணிந்தான்.
விலையுயர்ந்த லெதர் வாட்ச் எப்பொழுதும் அணிந்திருக்கும் வெள்ளி காப்பு, சிகைக்கு ஜெல் தடவி விசிலடித்தான். அந்நேரம் அவனது போனில் ரிங்டோன் இடைவெட்டுவது போல இசைத்தது.
‘பச்.. ப்யூ மினிட்ஸ்ல கிளம்பிடுவேன். அதுக்குள்ள இவனுங்க ‘எங்க இருக்க மச்சி’, ‘ஹெய் டூட் ஐ அம் ஆன்திவே, மச்சி நிஷா வர்றாடான்னு’ வாட்சப்ல போட்டோ அனுப்பியது போதாதுன்னு போன்ல வேற பீட்டர் விடுவாங்க’ என்று முனங்கி அலைப்பேசியினை எடுத்தான்.
தன் போனில் பதிவாகாத எண் என்றதும், ‘யாரா இருக்கும்’ என்று அலைப்பேசியை உயிர்பித்தான்.
தன் ஆண்மை ததும்பும் குரலில் “ஹலோ நிரஞ்சன் ஹியர்” என்றதும் மறுபக்கம் மடமடவென யாரோ பதட்டத்துடன் பேசியதை நிதானமாக கேட்டான்.
“இப்ப நான் என்ன செய்யணும்னு நினைக்கறிங்க” என்றான் நிரஞ்சன்.
“என்ன தம்பி நல்லா படிச்சி நல்ல உத்தியோகத்துல இருக்கிங்க. நீங்க என்ன செய்யணும்னு தெரியாதா?
நான் நைட்டே உங்களிடம் இந்த விஷயத்தை சொல்லியிருக்கணும். இரண்டு மணிக்கு போன் போட்டு உங்களை பதட்டப்படுத்த கூடாதேனு வெயிட் பண்ணி இப்ப கூப்பிடுறேன்.” என்றார்.
“நான்.. நான்.” என்று திணறியவன் அலுவலக நண்பர்களோடு கோவா சுற்றுலா செல்ல தயாராக இருப்பதை கூறமுடியாது தவிர்த்தான். இந்த நேரம் அப்படி சொன்னால் அது சரியாக இருக்காது.
“நீங்க… நீங்க வந்தாகணும் தம்பி. அப்பறம் உங்க இஷ்டம். வேற யாருக்கும் நான் தகவல் சொல்லலை” என்று துண்டித்து கொண்டார்.
நிரஞ்சன் துள்ளலாய் கிளம்பியவன், தற்போது கண்ணாடியில் தன் முகத்தை கண்டு சோர்வானான்.
தன் வலது பக்கம் கட்டிய வாட்சில் நேரத்தை பார்த்தவன், படியில் தடதடவென கீழிறங்கினான்.
“ஹலோ மை சன். மாப்பிள்ளை மாதிரி இருக்க. உட்காரு” என்றார் தந்தை வீரராகவன். அவரை புதிதாக பார்வையிடுவது போல பார்த்தான்.
“ஷோபனா நிரஞ்சன் வந்துட்டான்மா. பிரேக் பஸ்ட் ரெடியா?” என்று மனைவியிடம் கேட்டார்.
நவீன வசதிபடைத்த கிச்சனில் ஷோபனாவோ “பிரெட் ஆம்லேட், அண்ட் ப்ரஷ் ஜூஸ் ரெடிங்க.” என்று கொண்டு வந்து உணவு மேஜையில் நிறைத்தார்.
நிரஞ்சனோ தன் தட்டில் தனக்கான உணவை எடுத்து போட்டு, தந்தையிடம் போன் கால் வந்ததை கூறலாமா? வேண்டாமா? என்று சிந்தித்தான். போன் பேசியவர் வேற யாருக்கும் தகவல் சொல்லலை என்றாரே. இதில் தந்தை முகம் மகிழ்ச்சியாக உள்ளதே?!
வீரராகவன் அவசரமாய் பிரெட் ஆம்லேட் சாப்பிட, சூடான சீஸ் அவரை சுட்டது.
“என்னங்க நீங்க? இன்னும் குழந்தையா?” என்று ப்ரஷ் ஜூஸை அவர் முன் நகர்த்தி குடிக்க ஊட்டி விடாத குறையாக கூறினார் ஷோபனா. இருவரையும் ஒருமித்தமாக பார்த்தவன் சொல்ல வந்ததை தன் தொண்டைக்குழியில் புதைத்து விட்டான்.
மகன் தங்கள் நெருக்கத்தை பார்த்து சங்கடமாய் நெளிவதாக வீரராகவன் தவறாய் புரிந்துக் கொண்டு, ”அட தெரியாம சிந்திடுச்சு.” என்று ஷோபனா துடைப்பதை தடுத்து கொண்டார்.
“ஆஹ்.. நிரஞ்சன் திரும்பி வர இருபது நாளாகுமா?” என்று கேட்டார் அன்னை ஷோபனா.
“அட இருபது நாள் என்ன? கூடுதலா பத்து நாள் கூட ஆகலாம். ஏன்னா நிஷா கூட வர்றாளாமே. அவன் ரிட்டர்ன் வர்ற வரை, உன் சமையலுக்கு லீவு” என்றார் வீரராகவன்.
“மேபீ எதுக்கும் நிரஞ்சனிடம் கேட்டுக்கறேங்க” என்று ஷோபனா கூறவும், “நோ மாம். குயிக்கா வந்துட்டாலும் வர நேரலாம்” என்று பிரட் ஆம்லேட்டை விழுங்கி, ப்ரஷ் ஜூஸை பருகி எழுந்தான்.
நிரஞ்சன் தன் நிக் ஷூவை அணிந்திட, “நான் சொன்னேன்ல ஆபிஸ்ல லவ் செட்டாகியிருக்குன்னு, மேபீ பிரப்போஸ் பண்ணற ஐடியால நிரஞ்சன் இருக்கான். லவ் செட்டானா நம்மிடம் நிஷாவை கூட்டிட்டு வர துடிப்பான்.
சப்போஸ் நீங்க நினைப்பது போல அப்படியில்லைன்னா, யூ டோண்ட்வொர்ரி, உங்க ரிலேட்டிவ்ல ஒரு பொண்ணை நிரஞ்சனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்.” என்றார் ஷோபனா.
வீரராகவன் பையனை அனுப்பும் நோக்கத்துடன் வாசலுக்கு வந்தார்.
எப்பொழுதும் பைக்கில் செல்வது வழக்கம். சில நேரம் காரை எடுத்து செல்வான்.
இன்று கோவா செல்வதற்கு, காரை எடுத்து செல்வதாக தந்தை நினைக்க, கேட்டை தாண்டி பயணித்தான் நிரஞ்சன்.
நிரஞ்சன் கோவாவிற்கு செல்லாமல் வேறு பாதைக்கு வண்டியை செலுத்தினான்.
ஒரு மகனா என்ன செய்யணும்? என்றவன் மனதிற்குள் சில பல காட்சிகள் தோன்ற, போகும் இடத்தில், முதலில் பெரிய மாலையை வாங்கினான்.
அதனை பின்னிருக்கையில் வைத்து விட்டு, மீண்டும் காரை இயக்கினான்.
மணப்பாறை பக்கத்தில் பொய்கைப்பட்டி என்ற இடத்திற்கு விரைந்தான்.
காலையில் அலைப்பேசியில் பேசியவர் மாலை வரை தன் வருகையை எதிர்ப்பார்ப்பதாக கூறினாரே?
வீட்டிலிருந்து காலை ஏழு மணிக்கு கிளம்பினான். அங்கு செல்ல ஏழு மணி நேரம் ஆகுமென்று கூகுள் சொன்னது.
இவனது காரோட்டும் லாவகம் பொறுத்து சேருமிடம் விரைவாக மாறலாம்.
ஒரு நாள் சென்று விட்டு வருவதால் நிரஞ்சன் குறைந்திட போவதில்லை. நிரஞ்சனுக்கு யாரையும் காயப்படுத்தும் எண்ணமில்லை. செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்ததும் தந்தையிடம் இதை மட்டும் கூறிட வேண்டும். மத்தபடி அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ? ஷோபனா அம்மா எப்படி எடுத்துக்கொள்வாரோ? என்ற யோசனைகள் அவன் மண்டைக்குள் உலாத்தியது.
மணப்பாறை வந்து சேரும் வரை அந்த எண்ணங்களே சுற்றி ஆக்கிரமித்து நிற்கவும், சேருமிடம் வந்துவிட்டதாக கூகுள் காட்டியது. நடுவில் வந்த அலுவலக நண்பர்களின் அழைப்பை எல்லாம் எடுக்காமல் நிராகரித்தான்.
பொய்கைப்பட்டி வந்ததும் அவனுக்கு காலையில் அழைத்த நபருக்கு அழைத்து, “சார் நான் பொய்கைப்பட்டி வந்துட்டேன். வீட்டுக்கு எப்படி வரணும்” என்றான். அவர் விலாசம் கூற கூற “ஓகேஓகே… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்துட்டேன் இனி கேட்டு வந்துடறேன்.” என்றான்.
ஒரு வீட்டுக்கு முன் பந்தலிட்டு இருக்க, அங்கே லேசான கூட்டம். அங்கே யாரும் அழுதுக்கொண்டு இல்லை. ‘அப்பாடி’ என்றானது அவனுக்கு இந்த அழுகை எல்லாம் பிடிக்காது. செண்டிமெண்ட் பேசி தன்னை இம்சிப்பார்களோ என்று எண்ணி வருவதற்கே பிடித்தமின்றி இருந்தான்.
அவன் வரவும், அறைக்குள் அழைத்து சென்றார். அங்கே தான் ‘இலக்கியா’ என்ற நாற்பத்தி ஐந்தை தாண்டிய பெண்மணி சடலமாய் இருந்தார்.
அங்கே ஒருத்தி “ஏன் அத்தை என்னை தனியா விட்டுட்டு போன?” என்று அழுதாள்.
மாலையை கொண்டு வந்து கண்ணாடி பெட்டியின் மேல் வைத்தான் நிரஞ்சன். அந்த அறையே அவன் வந்ததும் நறுமணம் கமழ்ந்தது.
அலுவலக நண்பர்களோடு கோவா சுற்றுலாவிற்கு செல்ல தயாரானவன் ஆயிற்றே.
இறப்பு வீட்டுக்கு வந்தால் எப்படியிருப்பான்?
அங்கிருந்தவர்கள் அவனையே வைத்த கண் பாராமல் பார்த்து வைத்தனர்.
ஆனால் அவனோ அங்கு வந்திருந்த மனிதர்களை போல அவனும் ஓரமாய் நின்றான்.
லேசான கிசுகிசுப்பு ஆரம்பிக்கும் போது, “இனி யாரும் வரணும்னு அவசியமில்லை. சடலத்தை எடுக்கலாம்” என்று அலைப்பேசியில் பேசிய ராஜப்பன் கூறியதால் மற்றவர்கள் பிணத்தை எடுக்க ஆயத்தமானர்கள்.
“அய்யோ… அத்தை… என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டியே. அப்பா அம்மாவை விட நீ தானே எனக்கு உலகத்தை பார்க்க வச்ச. இப்ப என் உலகமே நீதான்னு வாழறப்ப மொத்தமா என்னை நரகத்துல தள்ளிட்டு போயிட்டிங்க” என்று அந்த குரல் அவ்வறையை மட்டுமல்ல, அவ்வீட்டையே உலுக்கியது.
அழுகையும் வேதனையும் அந்த ஒருத்தியையே ஆக்கிரமித்து இருந்தது.
நிரஞ்சன் யாரிவள் என்று நெற்றி சுருக்கி ஏறிடும் நேரம், கடமைகள் தொடர, அடுத்தடுத்து காரியம் நடக்க, அவளை காணாது ராஜப்பனோடு கலந்தான்.
”இந்தம்மாவுக்கு வாரிசு யாரு?” என்று கூப்பிட்டனர்.
புகுந்த வீட்டு புடவை பொறந்த வீட்டு புடவை என்று போட்டு விட கூறினார்கள்.
ராஜப்பனோ ”நீங்க வாங்க மறந்திருக்கலாம்னு அம்மாவுக்காக பட்டுப்புடவை வாங்கினேன்” என்று கொடுக்க, அதனை பிரித்து அங்கு கேட்டவரிடம் கொடுத்தான். புகுந்த வீட்டு துணியாக.
பிறந்த வீட்டு துணியை கொடுக்க அங்கே அழுது ஓய்ந்த பெண் ஓடி வந்தாள்.
“ஏய் பொண்ணு மாதிரி வளர்த்தா சொந்த பொண்ணா மாறிடுவியா? நீ எதுவும் செய்ய கூடாது.” என்று தடுத்தனர்.
பிறந்த வீட்டு சேலையை மட்டும் வாங்கி கொண்டனர்.
அவளோ நானும் அத்தைக்கு செய்யறேன்.’ என்று தவிப்பாய் நின்றாள்.
ராஜப்பனோ “இந்த தம்பி தான் ஒரே பையன்.” என்று கூறிவிட்டு “தம்பி நீங்க அவர் சொல்வதை மட்டும் செய்துடுங்க” என்றதும் நிரஞ்சன் தலையாட்டினான்.
சட்டை மட்டும் கழட்ட கூற, சங்கடமாய் கழட்டினான்.
பனியன் ஜீன் என்று அணிந்து தாயுக்கு தலைமகனாக மற்ற பணியை செய்தான்.
”நா…நானும் அத்தைக்கு செய்யறேன். என்னை அவங்க தானே பொண்ணு மாதிரி வளர்த்தாங்க.” என்று கேட்க தயங்கியவள் வார்த்தையால் கேட்டு, கெஞ்சி யார்யார் காலிலோ விழுந்தாள்.
அவளை காண பாவமாக இருந்தது. “சார்.. அந்த பொண்ணும் என்ன செய்ய விரும்புதோ செய்யட்டும். இதுல தவிர்க்க என்னயிருக்கு” என்றான்.
நிரஞ்சனுக்கு சாஸ்திரம் சம்பிரதாயம் துளியும் தெரியாது. அதனால் மெத்தனமாய் கூறிவிட்டான்.
ராஜப்பனோ இரண்டு நிமிடம் சிந்தித்தவர், “நைனிகா நீயும் செய் தப்பில்லை” என்று கூறினார்.
அங்கிருந்த நடுத்தர பெண்மணியோ, “அதெப்படி இந்த பொண்ணு செய்ய முடியும்” என்று சேலையை இழுத்து சண்டைக்கு தோதாக கூறி வந்தார்.
ராஜப்பனோ, “வந்திருக்கிறது இலக்கியாவோட ஒரே பையன். அவர் நைனிகாவை கல்யாணம் செய்தா, நைனிகா இலக்கியாவுக்கு மருமகள்.
இந்த சம்பிரதாயம் மகன் மகள் மட்டும் செய்யணும்னு இல்லை. மருமக பேரனும் செய்யலாம். அப்படி பார்த்தா இலக்கியாவுக்கு நைனிகா மருமகளாக போகப்போவதால அந்த தம்பி தான் வாய்கரிசி போட அதுக்கு நிகரான உரிமையை தந்துச்சு” என்று சத்தமின்றி கூறினார்.
அவர் அப்படி கூறியதும் நிரஞ்சனை மீண்டும் ஒரு கணம் பார்த்து, சொந்தங்களை தள்ளி விட்டு யாரையோ தேடி ஓடினார் அப்பெண்மணி.
அதற்குள் நைனிகா செய்ய சொன்னதை செய்தாள்.
தன் அத்தைக்கு தண்ணீர் ஊற்றி மூன்று முறை தலையில் பட்டம் கட்டி வருவதாக கூறி சீயக்காய் எண்ணெய் என்று தலையில் தடவி முடித்து வாய்க்கரசி போட்டாள்.
“தம்பி நீங்க வாங்க” என்று கூப்பிட மரியாதைக்கு தான் கூடவே வந்தான்.
“இதை எடுத்துட்டு வாங்க” என்றதும் அவனும் மறுக்காமல் வாங்கி கொண்டான்.
ஆளாளுக்கு கிசுகிசுக்க, இது கிராமம் அப்படி தான் இருக்கும் என்று கடந்து விட்டான்.
அக்கணம் இங்கிருந்து சென்ற பெண்மணி அவர் கணவன் பையன், மற்றொரு பெண்மணி என்று அழைத்து வர, அதற்குள் நைனிகா செய்ய வேண்டியதை செய்து முடித்திருந்தாள்.
“என்ன அநியாயம் இது யாருக்கு யாரை கல்யாணம் பண்ணப் பேசறிங்க” என்று கேட்க ராஜப்பனோ, “இந்த நேரம் என்ன பேச்சு. இடுகாடு போயிட்டு வந்து பதில் தர்றேன்” என்று சென்றார்.
ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாய் தள்ளி இடுகாடு இருக்க அங்கே கொள்ளி வைக்க கூறவும், ”சார் நானா?” என்று மறுக்க பார்த்தான் நிரஞ்சன்.
“தம்பி இலக்கியாவுக்கும் வீரராகவனுக்கும் சட்டபடி விவாகரத்து நடந்து முடிஞ்சது. ஆனா நீங்க தானே இலக்கியாவோட ஒரே பையன். இதெல்லாம் செய்யறது தான் முறை. அதுக்காக தானே உங்களை ஊர்லயிருந்து அழைச்சது. நீங்க வரலைன்னா அனாதை பிணமா எரியூட்டி இருப்போம்.
குத்து கல்லு மாதிரி நீங்க மகனா இருக்கும் போது நீங்க தான் தம்பி கொள்ளி போடணும்” என்று வற்புறுத்த ஆரம்பித்தார்.
மாலை மட்டும் அல்ல, கொள்ளி போடுவதையும் சினிமா படத்தில் நிரஞ்சன் பார்த்திருக்க, பெற்றவளுக்காக கொள்ளி போட முடிவெடுத்தான்.
தந்தை வீரராகவன் ஷோபனா அம்மாவிடம் இங்கு வந்ததை கூறினால் இதையும் கூறுவதில் தப்பில்லை என்று தோன்ற சம்மதமாய் முழுமனதுடன் கொள்ளி போட்டான்.
-தொடரும்.
காதலர் தினத்தன்று கதை பதிவிடுகின்றேன். தினபதிவு வரும். வாசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பூபூக்கும் ஓசை கதை ஆடியோ நாவலாக போடறேன். சப்ஸ்கிரைப் செய்து கேளுங்க.
சைட்ல கதை வாசிக்கும் அன்பு உள்ளங்கள் ரிஜிஸ்டர் செய்து வாசிக்கவும். மேலும் கமெண்ட்ஸ் செய்து கருத்தை கூறினால் நன்றாக இருக்கும்.
Good started . jolly ah kelambitu irukum pothu intha maari ou situation vantha anga poium happya ah feel pana mudiyathu avanala atha inga vanthutan .
na padichiten intha story but ipo thirumbavum padikiren son inga apadiye padikiren sisy ethaium sollama
Super start. Intresting sis
Nice starting… Keep rocking…..
Super sis amazing start 👌👍 amma yerandhutanga nu feel Ella ennava erukum 🧐 story padika aarvama eruken sis 🥰
Goa tour ku jolly ah kelambuna niranjan inga vandhu avan petha amma ku iruthi sadangu seiya vandhu irukan athuvum avan appa ku sollama pathathuku ivanuku phone panni inform pannavaru anga azhuthutu irundha nainika ah va niru kalyanam pannika pora ponnu nu solluraru ithula enna fight vara pogutho nu theriyala
Good start. Ammanu therinju than seiyarana
நிரஞ்சன் அம்மா என்று எதிர்பார்க்கல
சூப்பர் சிஸ் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் 😊
Nice starting sis, superrrr 👍
மனமெனும் ஊஞ்சல்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 1)
அட..! சந்தோஷமா புறப்பட்ட பையனை ஒரேயொரு போன்கால் டைவர்ட் பண்ணிடுச்சோ…? அப்படின்னா, ஷோபனா நிரஞ்சனோட சொந்த அம்மா இல்லையோ ?
அதானே பார்த்தேன், ஏன்னா அவங்க வீரராகவன் கிட்ட ஓவரா பொழியுறதைப் பார்த்தா பாசமாத் தெரியலை, வெறும் வேஷமாத்தான் தெரியுது.
அது சரி, நிரஞ்சன் ஏன் உண்மையை சொல்லாம வந்துட்டான்,..? அவனோட அப்பா இருக்கிறச்ச தாலி கட்டினவர் தானே கடைசி நேரத்து கடமையையும் செய்யணும், அது அவருக்கு பிடிக்காத மனைவியென்றாலும் ? போகட்டும், இவன் ஏன் கொஞ்சம் கூட பாசமேயில்லாம
கடமைக்குன்னு எல்லாத்தையும் செய்யுறான்… ஒருவேளை, இலக்கியா அம்மாவை இவனுக்கும் பி்டிக்காதோ..?
பிடிக்காத அளவுக்கு அப்படி என்ன செய்தாங்களோ தெரியலையே..?
😯😯😯
CRVS (or) CRVS 2797
Very entrastink arampam super nineka hero kku jotiya
Very nice sister arapama saspansa aramikkithu
Super starting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Good start👍 Nice epi
Nice starting 🌷
Nice starting sis
Romba aarvama goa ku kilambittu irunthaan niranjan, aana ipdi aagiduche
Niranjanoda Amma va iruppanga nu ethirpaakkave illa sis
“AS USUAL, GOOD START”…………………