பூர்ணாவின் வாய்ஸ் மெசேஜை முழுமையாக கேட்ட பின்பு தான் கண்ணுக்கு அவன் செய்த தவறே நினைவு வந்தது.
“ஐயோ…. நேத்து பூஜாவோட கல்யாணத்த நேர்ல பார்த்த வெறுப்பையும் கோபத்தையும் முழுசா பூர்ண மேல காட்டிட்டனே…” என்று தன் தலையில் அடித்து கொண்டவன் “நடந்த எல்லாத்துக்கும் பூர்ணாவும் ஒரு காரணம் அப்படின்னாலும், ஒரு பொண்ணு கிட்ட என்னால எப்படி இப்படி எல்லாம் நடந்துக்க முடிஞ்சது? பூர்ணா ஏற்கனவே அவங்க பண்ண தப்புக்கு நிறைய தண்டனை அனுபவிச்சிட்டாங்க. ஒரு பொண்ணு அனுபவிக்க கூடாத எல்லா கஷ்டத்தையும் பாத்துட்டாங்க. அவங்களோட வாழ்க்கையையே தொலைச்சிட்டு வெறுமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க பொண்ணையா நான் இப்படி கஷ்டப்படுத்துனேன்? நான் பேசுனதும், சொன்ன விஷயமும் அவங்களுக்கு எந்த அளவுக்கு கஷ்டமா இருந்தா இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பாங்க? அச்சச்சோ என்ன பண்ண போறாங்கன்னு தெரியலையே…. இப்போ பூர்ணாவை எங்கன்னு போய் தேடுறது? ஐயோ கடவுளை பூர்ணா எந்த தப்பான முடிவும் எடுத்திற கூடாது. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திட்டா அந்த குற்ற உணர்ச்சி காலத்துக்கும் என்னை சும்மா விடாது” என்று தன் மனதில் நினைத்தவன் வேகமாக தன்னுடைய வண்டி சாவியை எடுத்துக்கொண்டு பூர்ணாவை தேட கிளம்பினார்.
கண்ணனின் இந்த தேடல் பயணத்தின் முடிவில், அவன் ஏற்கனவே தொலைத்த காதலை இப்பொழுது வேறொரு வடிவில் கண்டறிய போகிறான் என்பதை அப்போது அவன் அறிந்திரிக்கவில்லை.
பூஜா- தருண் இவர்களின் காதல் பயணம் ஆரம்பித்த அதே நாளில், இங்கே பூர்ணா கண்ணன் இவர்களின் வாழ்க்கை பயணமும் ஆரம்பிக்கிறது.
செழியன் அப்பொழுது தான் அலுவலகத்தில் அவனுடைய இருக்கையில் வந்து அமர்ந்திருந்தான்.
அப்போது சரியாக அவனுடைய போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசினான் செழியன்.
“ஹலோ யாருங்க?” என்று செழியன் கேட்டதும், அதற்கு மறு முனையில் இருந்தவரோ “என்னோட நம்பரை நீங்க சேவ் பண்ணவே இல்லையா? நேத்து நான் சேவ் பண்ண சொல்லி தானே உங்களுக்கு மிஸ்டு கால் குடுத்துட்டு போனேன்” என்று ஜமுனாவோ பொய் கோபத்துடன் கேட்டாள்.
அப்பொழுதுதான் அவனுக்கு நேற்று ஜமுனவிடம் தன்னுடைய எண்ணை கொடுத்தது நினைவு வர “ஹோ…நீங்களா? சொல்லுங்க… நான் இந்த நம்பர் சேவ் பண்ண மறந்துட்டேன். சொல்லுங்க என்ன விஷயம்?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“இல்ல ஏதாவது வேக்கன்சி இருந்தா என்கிட்ட சொல்றேன்னு சொன்னீங்கல்ல… அதனால தான் போன் பண்ணேன். உங்க கம்பெனியில் ஏதாவது வேக்கன்சி இருக்கா?” என்று ஜமுனா கேட்டாள்.
“ஏங்க நேத்து தானங்க வேக்கன்சி இருந்தா சொல்றேன்னு சொன்னேன். அதுக்குள்ள எப்படிங்க வேலை கிடைக்கும்? ஒரு நாள் கூட முழுசா ஆகல, அதுக்குள்ள போன் பண்ணி இப்படி டார்ச்சர் பண்ணா எப்படி? என்று செழியனும் அலுத்துக் கொள்ள
“நீங்க ரொம்ப அலுத்துக்கிறீங்க… அதனால உங்க கம்பெனி அட்ரஸ் குடுங்க. நானே நேர்ல வந்து விசாரிச்சிக்கிறேன்” என்று அவளோ நக்கலாய் பேச
“நீங்க பேசறதை எல்லாம் பார்த்தா நீங்க ஜாபுக்காக பேசுற மாதிரி தெரியல . ஏற்கனவே ஒரு பொண்ணால நான் அழுதது போதும். இதுக்கு அப்புறம் தயவு செய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று சொன்னவன் கோபத்தில் போனை வைத்து விட்டான்.
“அச்சச்சோ…. நம்மாளுக்கு கோபம் வேற வந்துருச்சு… உங்க கிட்ட எப்படி பேசணும்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…. அதுக்கு அப்புறம் இந்த ஜமுனா யாருன்னு உங்களுக்கே தெரியும்” என்று தன் மனதிற்குள் நினைத்தவளோ ஒரு சபதம் எடுத்துக் கொண்டாள்.
ஜமுனாவின் இத்தகைய முடிவினால் இவர்களின் வாழ்க்கை எனும் புத்தகத்தில் காதல் பக்கம் திறக்கத்தான் போகிறது.
ஒருவள் செய்த தவறினால் இங்கே இவர்கள் ஆறு பேரின் வாழ்க்கையும் பாதை மாறி போகிறது. ஒருவேளை இதுதான் விதியின் முடிவா? இல்லை விதியின் சதியா?
இவர்கள் ஆறு பேரும் வெவ்வேறு பாதையில் பயணத்தை ஆரம்பித்து விட, இந்த பயணத்தின் முடிவாய் பாதை ஒன்று சேர்ந்திடுமா? ஒன்று சேர்ந்த பாதையில் இவர்கள் காதலர்களாக பயணத்தை ஆரம்பித்தார்களா? இல்லை இறுதிவரை இந்த பாதையில் தனியாகத்தான் பயணம் செய்வார்களா?
தருணும் பூஜாவும் காரில் நீண்ட நேரம் பயணத்திட, பூஜா எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.
ஆனால் தருணுக்கும் அவளிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தது. அதனால் அவனே பேச ஆரம்பித்தான்.
“இங்க பாருங்க பூஜா… நாளையிலிருந்து நீங்க நம்ம ஆபீஸ் போக போறீங்களான்ன்னு கேட்க மாட்டேன். அதே சமயம் நீங்க தாராளமா ஆபீஸ் போலாம்… உங்களோட வேலையை நீங்களே செஞ்சுக்கலாம் அப்படின்னு சொல்ல மாட்டேன். இல்ல அது என்னோட கம்பெனி. நான் எம்.டியா இருக்க கம்பெனி, அந்த கம்பெனியில் என்னோட வைஃப் ஒரு சாதாரண பொசிஷன்ல ஒர்க் பண்றது எனக்கு பிடிக்கல. அதனால நீங்க வேலைக்கு வரக்கூடாது, அப்படின்னும் நான் சொல்ல மாட்டேன். இன் பேக்ட் உங்களோட முடிவை நீங்களே எடுத்துக்கலாம். நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு நான் உங்ககிட்ட கேக்க மாட்டேன். நீங்க இதுதான் செய்யணும்னு உங்ககிட்ட நான் சொல்ல மாட்டேன். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு தான் பண்ணனும்னும் சொல்ல மாட்டேன். உங்களுக்கு தோணுறதை செய்யுங்க. இல்ல உங்களுக்கு பிடிச்சதை செய்ங்கன்னும் சொல்ல மாட்டேன். என்னா இதெல்லாம் நான் சொல்லனும்ன்னா நான் உங்களுக்கு ஹஸ்பண்டா இருக்கணும். ஆனா உங்கள பொறுத்த வரைக்கும் உங்க மனசுல நான் அந்த இடத்தில் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லனுமன்னோ இல்ல என்கிட்ட கேட்கணும்ன்னோ எந்த அவசியமும் கிடையாது. ஒரு வேலை பியூச்சர்ல நீங்க என்னை உங்களோட ஹஸ்பண்டா ஏத்துக்கிட்டீங்க அப்படின்னா அதுக்கு அப்புறம் நான் இதுவரைக்கும் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை நான் உங்களுக்காக சொல்லுவேன். சின்ன சின்ன கட்டுப்பாடு உங்களுக்கு நான் விதிப்பேன். அதற்கான உரிமை இப்போ எனக்கு இல்லைன்னு நான் நினைக்கிறேன். சோ உங்களுக்கு என்ன வேணுமோ நீங்க அதை பண்ணிக்கலாம். அதே சமயம் எங்க வீட்ல நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்கணும்ன்னும் நான் சொல்ல மாட்டேன். அதுக்கு அவசியம் இருக்காது. அதனால வீட்டுக்கு போனதுக்கு அப்புறமா நீங்களாவே இருக்கலாம். நான் நானாகவே இருப்பேன். அதே மாதிரி நானும் உங்களை எந்த விதத்திலும் கேள்வி கேட்க மாட்டேன், அப்படிங்கிறதுக்காக நீங்களும் என்னை எந்த கேள்வியும் கேட்க கூடாது, நானும் என்னோட இஷ்டத்துக்கு தான் இருப்பேன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்கு எப்போ என்கிட்ட எந்த விஷயம் கேட்கணும் அப்படின்னாலும் நீங்க தாராளமா என்கிட்ட கேட்கலாம்” என்று தான் சொல்ல வேண்டியது எல்லாம் தெளிவாக சொல்லி முடித்தான் தருண்.
இங்கே பூஜாவுக்கு தருண் பேசின விஷயங்களை விட அவன் பேசியதே ஆச்சரியமாக இருந்தது.
காரணம், அவன் அலுவலகத்தில் யார் எந்த கேள்வி கேட்டாலும் அவர்கள் முகத்தை கூட பார்க்காமல் ஒற்றை வார்த்தையில் மட்டும் பதில் அளித்துவிட்டு தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பான். சில அலுவலக மீட்டங்கை தவிர மற்ற இடங்களில் அவன் இரண்டு வார்த்தை சேர்ந்தது போல் பேசி யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள். அப்படி இருப்பவன் இன்று இவ்வளவு தெளிவாக அவளிடம் பேசுவதை கேட்டவளுக்கு ஆச்சரியமாக தானே இருக்கும்.
அவர்களின் அலுவலகத்திலேயே எத்தனையோ பெண்கள் தருண் அவர்களிடம் இரண்டு வார்த்தையை சேர்ந்தது போல் பேசி விட மாட்டானா, என்று எங்கி இருக்கிறார்கள். அவன் பேசுவது கூட இரண்டாம் பட்சம் தான். முதலில் அவர்களை தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்.
எத்தனையோ நாட்களில் அவளே தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து அவனை சிடுமூஞ்சி என்று கிண்டல் செய்திருக்கிறாள்.
பூஜா தருணை பற்றிய சில விஷயங்களை மனதில் அசை போட்டுக் கொண்டு வந்ததில் தருணின் வீட்டை அடைந்து விட்டார்கள்.
காரில் இருந்து இறங்கியவள் அந்த வீட்டை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து தான் போனாள். ஏனென்றால் அந்த வீடு பூஜாவின் வீட்டை போலவே எளிமையாக இருந்தது. ஒரு புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டை போல அந்த வீடு காட்சியளிக்கவில்லை. இருந்தாலும் அதை அவனிடம் அவளுக்கு கேட்கவும் தோன்றவில்லை. இருவரும் காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவளோ அவர்களுடைய வீட்டில் காலடி எடுத்து வைக்கும் பொழுது, ஆரத்தி எடுக்க கூட யாரும் வரவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த வீட்டில் யாரும் இல்லை. தருண் தான் அந்த வீட்டின் கதவையே திறந்தான்.
பூஜாவோ எதுவும் புரியாமல் வாசல் படியிலேயே நிற்க, அவளின் குழப்பத்தை புரிந்து கொண்டவனும் “இங்க நமக்கு ஆரத்தி எடுக்க எல்லாம் யாரும் வர மாட்டாங்க. நீங்களே வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க” என்று அவன் சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து விட்டான். பூஜா குழப்பதோடு, அவன் சொன்ன படியே தன்னுடைய வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள். இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவனிடம் கேட்டே விட்டாள்.
“வீட்ல யாரும் இல்லையா? உங்க அப்பா அம்மா எல்லாம் எங்க?” என்று பூஜாவோ அவனிடம் கேட்டிட
‘எனக்கு அப்பா அம்மா இருந்தா தானே?” என்று சொன்னான் அவன்.
Interesting
Nice epi