Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 17

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 17

மகா மகிழ் இருவரது திருமணமும் நல்ல முறையில் நடைபெற்றது பிறகு இருவரையும் மண்டபத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார்கள் அங்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் காவேரி தான் அனைத்தையும் எடுத்துக்கட்டி செய்தார் பிறகு இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் அப்போது காவேரி தான் மகாவிடம் விளக்கேற்று மகா என்று சொன்னவுடன் மகாவும் வீட்டில் உள்ள பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றினால் இருவரையும் இனிதான் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்தால் மகிழ்  இனி கேட்காமலே தனது பரிசிலிருந்து பணத்தை எடுத்து இனி கையில் கொடுத்தான் இனி தனது அண்ணனை முறைத்துப் பார்த்துவிட்டு ஆரத்தியை கீழே ஊற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தால் அப்போதுதான் காவேரி மகாவை விளக்கேற்ற சொன்னார் இனியும் மகாவை  அழைத்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்றாள் மகா விளக்கேற்றி விட்டு சாமியை வணங்கினால் என் மாமா என்னை உடனடியாக மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நான் என்ன போவதில்லைநான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று கூட சொல்ல முடியாது பாவம் என்று தான் சொல்ல வேண்டும் இந்த குடும்பத்திற்காக எனது மாமாவின் காதலை நான் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது நான் செய்தது பாவம் என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இந்த குடும்பத்திற்கு முன்பு எனது காதல் எனக்கு பெரிதாக தோன்றவில்லை ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்னுடைய மாமா என்னை புரிந்து கொள்வார் என்று எண்ணினேன் அவருக்கு வலிக்கும் என்று எனக்கும் தெரியும் ஆனால் வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை எனது மாமா கொஞ்சம் கொஞ்சமாக என்னை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை வீட்டில் உள்ளவர்களை புரிந்து கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் எப்போதும் போல் பேச வேண்டும் சகஜமாக இருக்க வேண்டும் வீட்டில் உள்ள அனைவரையுமே வருத்தப்படுகிறார்கள் இந்த குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும் வீட்டில் உள்ளவர்கள் ஒருவரின் முகம் வாடினால் கூட மொத்த குடும்பமும் நொறுங்கிவிடும் இப்போது என் மாமாவின் முகத்தை வைத்து வீட்டில் உள்ள அனைவருமே வருத்தப்படுகிறார்கள் எனக்கு எனது மாமாவின் சந்தோஷம் தான் முக்கியம் என்று எண்ணினால் பிறகு அனைவரும் சாமியை தரிசனம் செய்து கொண்டு வந்தார்கள் காவேரி தான் இருவருக்கும் பாலும் பழமும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் மகிழ் வேண்ட வெறுப்பாக பால் குடித்துவிட்டு தனது அத்தையின் கையிலே கொடுத்தான் காவேரியும் எதுவும் பேசாமல் தனது மருமகனை பார்த்து சிரித்திவிட்டு மகாவின் கையில் கொடுத்தார்  பால் கிளாஸை மகா அண்ணாந்து குடித்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் தனது பெரியம்மாவின் கையில் கொடுத்து விட்டால் அதேபோல் பழமும் கொடுத்த பிறகு இருவரையும் உங்களது அறைக்கு வேண்டுமானால் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறீர்களா என்று கேட்டார்கள் இருவரும் ஒரே போல் இல்லை வேண்டாம் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்றார்கள் எங்கே உள்ளே சென்றாள் தனியாக இருந்தால் இருவருமே அழுது விடுவோமோ என்று எண்ணினார்கள் அதனாலே வேண்டாம் என்று எண்ணி இங்கே இருக்கிறேன் என்றார்கள் இருவரும் ஒரே போல் சொன்னவுடன் விட்டுள்ள அனைவரும் சிரித்தார்கள் இருவரும் தங்கள் அறைக்கு செல்கிறோம் என்று சொல்வார்களோ என்று எண்ணி தான் காவேரி அவ்வாறு சொன்னார் ஆனால் இருவரும் ஒரே போல் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்றவுடன் காவேரிக்கு தான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது இவ்வளவு ஒற்றுமையுடன் இருப்பவர்களை நானே பிரிக்க இருந்திருப்பேனே இவர்கள் இருவரும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் பிரியக்கூடாது இவர்கள் இப்பொழுது போல் எப்பொழுதுமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று மனதில் என்னை விட்டு இறைவனையும் கும்பிட்டார் இப்படி எண்ணுபவரே என்றாவது ஒருநாள் இவர்கள் இருவரும் பிரிய வேண்டும் என்று எண்ணுவாரோ என்ன யார் கண்டா அதன்பிறகு வீட்டில் உள்ளவர்களும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் இப்படியே மதிய வேளையும் வந்தது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்மகிழ் மகா இருவரையும் இதை செய் என்று யாரும் எதுவும் கட்டாயப்படுத்தவில்லை ஏன் இருவரும் ஊட்டிக் கொள்ள வேண்டும் என்று கூட நிலாவே சொல்ல விரும்பவில்லை நேற்று தனது மாமா தனது அக்காவின் கை கடித்துவிட்டார் என்பதை அவளும் உணர்ந்தால் அந்த இடத்தில் இருந்தால் எங்கு அழுது விடுவோமோ என்று எண்ணி தான் முகிலனுடன் சென்றால் அதன் பிறகு அதை பற்றி பேசவில்லை ஏன் மகிழனிடம்  கூட நிலா முகம் கொடுத்து பேசவில்லை என்று தான் சொல்ல வேண்டும் மகிழனும் அதை உணர்ந்தான் ஆனால் நிலாவிடம் கேட்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று எண்ணி அமைதியாகி விட்டான் நிலா தான் இப்பொழுது மகிழ்ச்சியில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தால் அப்போது மகிழ் தான் நிலாவிற்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் மற்றும் ஸ்வீட்கள் இருப்பதால் நிலாவின் இலையில் தன் இலையில் இருந்து எடுத்து அவளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் நிலாவும் அதை பார்த்தால் ஆனால் எதுவும் சொல்லவில்லை பிறகு தனது  மகிழ் மாமா வைத்த அனைத்து உணவுகளையும் தனியாக ஒதுங்க வைத்து விட்டு தன் இலையில் இருப்பவற்றை மட்டும் அதுவும் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு எனக்கு போதும் என்று எழுந்து விட்டால் வீட்டில் உள்ள அனைவரும் இவள் நன்றாக சாப்பிடுவாளே இவளுக்கு பிடிக்கும் உணவுகளை சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டு எழுந்து இருந்திருக்கிறாளே என்று எண்ணினார்கள் ஆனால் வேறு எதுவும் கேட்கவில்லை அவள் எழுந்த உடன் மகிழனுக்கு தான் வருத்தமாக இருந்தது தான் செய்த ஒரு செயல் நிலா குட்டியை இந்த அளவுக்கு பாதித்து இருக்கிறதா என்று எண்ணினான்  முதலில் இவளிடம் பேசி புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தான் அப்போது உதிரன் தான் மகிழனின் தோளில் கை போட்டு ஒன்றுமில்லை நீ சாப்பிடு என்றான் மகிழனுக்கு உணவே இறங்கவில்லை ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்காக சாப்பிட்டான் எங்கு தானும் சாப்பிடாமல் எழுந்துவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் வருந்துவார்களோ ஏற்கனவே நிலா இப்படி சாப்பிடாமல் பாதியிலே எழுந்து விட்டால் நாமும் எழுந்தால் வருந்துவார்கள் என்று எண்ணி அமைதியாக சாப்பிட்டான் மகிழ் தனக்கு இரண்டு பேர் தள்ளியிருக்கும் மகாவை பார்த்தான் அவனது கண்கள் தானாகவே அவள் இருக்கும் இடத்தை நோக்கி சென்றது மகா சாப்பிடாமல் சாதத்தை பிசைந்து கொண்டே இருந்தால் அருகில் இருக்கும் இனி ஏன் சாப்பிடாமல் இருக்க என்று கேட்டதற்கு எனக்கு பசிக்கவில்லை ஒரு மாதிரியாக இருக்கிறது என்று அமைதியாக உட்க்கார்ந்திருந்தால் கடைசி வரை அவள் வருவாய் கூட சாப்பிடவில்லை என்று தான் சொல்ல வேண்டும் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவதை அமைதியாக பார்த்துவிட்டு சாதத்தை பிசைந்து கொண்டு மட்டும் தான் இருந்தாள் பிறகு அனைவரும் சாப்பிட்டு எழுந்தவுடன் தனது இலையில் இருக்கும் சாப்பாட்டை அப்படியே மூடி வைத்துவிட்டு எழுந்து விட்டால் வீட்டில் உள்ள அனைவருமே இதை பார்த்தார்கள் ஆனால் ஏன் அவள் அவ்வாறு செய்தால் என்று கேட்கவில்லையே அவள் என்ன கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுவாள் என்று எண்ணினார்கள் மகா எந்த ஒரு விஷயத்தையும் கடந்து வருவாள் என்று நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது ஏனென்றால் இதுவரையும் அவள் அப்படித்தான் சிறுவயதில் இருந்தே அவளுக்கு பக்குவம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும் அதனால்யே அவள் இந்த விஷயத்தில் இருந்தும் கடந்து வருவாள். தங்களையும் இந்த விஷயத்தில் இருந்து கடக்க வைப்பாள் என்று எண்ணினார்கள் அதனாலே அவளிடம் ஏன் சாப்பிடவில்லை என்று கேட்கவில்லை காவேரி தான் கோதையின் கண்ணை துடைத்தார் ஏனென்றால் தனது மகள் சாப்பிடவில்லை என்றவுடன் கோதை அழுதார். கோதையின் கண்ணை துடைத்துவிட்டு நான் அவர்களை சாப்பிட வைக்கிறேன் என்று விட்டு அமைதியாகிவிட்டார் பிறகு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு காவேரிதான் ஒரு தட்டு சாதத்தை எடுத்துக்கொண்டு மகாவின் அறைக்கு சென்றார் நான் சாப்பிட்டேன் பெரியம்மா எனக்கு போதும் என்றால் நீ என்ன சாப்பிட்டாய் உனக்கு போதும் என்றார்இல்ல பெரியம்மா எனக்கு பசிக்கவில்லை என்றால் என்ன பசிக்கல என்ன நெனச்சுக்கிட்டு  இருக்க காலையிலேயே ஒழுங்காக சாப்பிடவில்லை என்று கூறிக்கொண்டே மகாவின் வாய் அருகே ஒரு உருண்டை சாதத்தை எடுத்துக் கொண்டு சென்றார் மகா எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டால் தனது பெரியம்மாவின் சந்தோஷத்திற்காக என்று எண்ணினால்அப்போது கோதையும் அங்கு வந்து நின்றார் தனது மகளை கட்டிக்கொண்டு உனக்கு விருப்பம் இல்லாமல் தான் நான் கல்யாணம் பண்ணி வைத்து விட்டேனா என்று கேட்டவுடன் காவேரி கண்களில் இருந்தும் நீர் வடிந்தது மகா தனது அம்மாவின் கண்ணை துடைத்துவிட்டு அம்மா நான் எப்போ எனக்கு விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து கொண்டேன் என்று சொன்னேன்எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு மட்டும் தான் சொன்னேன் மற்றபடி ஒன்னும் இல்ல என்று இருவரது கண்ணையும் துடைத்தால் பொய் சொல்லாத டி நீ எங்களுக்காக தான எப்போது மகிழனை திருமணம் செய்து கொண்டாய் என்று காவேரி கேட்டார் அப்போது உதிரனும் மகிழனும் மகாவின் அறைக்கு தான் வந்தார்கள் மகா சாப்பிடவில்லை என்றவுடன் மகிழ் தான் உதிரனை அழைத்துக் கொண்டு மகா வின் அறைக்கு வந்தான் அப்போதுதான் தனது இரு அத்தையும் மகாவிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டான் ஆனால் வெளியே அமைதியாக நின்றான் என்ன பெரியம்மா இந்த மாதிரி பேசுறீங்க இந்த குடும்பத்துக்காக மட்டும் தான் என்று  சொல்ல முடியாது ஆனால் எனக்கு இந்த குடும்பமும் முக்கியம் இந்த குடும்பத்தை விட எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை இந்த குடும்ப சந்தோஷத்துக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றால் மகிழ் வெளியே புலம்பினான் இந்த மொத்த குடும்பத்துக்காக தானடி என் காதல் அழிச்ச என்று சிறிதாக முனகி விட்டு வேகமாகவே சொன்னான் உதிரன் தான் மகிழனின் கையை பிடித்தான் மச்சான் என்னடா பேசுற என்று ஏன் நான் எத்தனை முறை சொல்லும் போது உனக்கு வலிகிறதா அப்பொழுது உன் தங்கை என்னை தூக்கி எறிவது எனக்கு எந்த அளவுக்கு வலித்து இருக்கும் என்று உனக்கும் உன் தங்கைக்கும் தெரியவில்லையா என்று விட்டு உதிரனின் கையை உதரி விட்டு அவனது அரைக்கு  வேகமாக சென்றான் உதிரனுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று புரியவில்லை நான் இப்பொழுது மகாவை தேற்றுவதா இல்லை மகிழனை தேற்றுவதா?  என்று தெரியாமல் அமைதியாக நின்று விட்டு நாம் இப்பொழுது மகாவை தேற்ற வேண்டும் என்று எண்ணினான் மகாவை எப்படி தேற்றுவது என்று எண்ணி அமைதியாக நின்று கொண்டிருந்தான் பிறகு தனது அம்மாவும் சித்தியும் மகாவிற்கு ஊட்டி விட்டு வெளியே வருவதை பார்த்தான் இங்கையே ஏண்டா நின்று கொண்டிருக்கிறாய் மகாவை பார்க்க வந்தாயா என்று இருவரும் ஒரே போல் கேட்டார்கள் ஆமாம் என்று உதிரன் தலையாட்டிய உடன் அவர்கள் இருவரும் சரி என்று விட்டு அமைதியாக போய்விட்டார்கள் உதிரன் மகா அருகில் வந்து உட்கார்ந்தான். மகா நிமிர்ந்து தனது அண்ணனை பார்த்தால் அதன் பிறகு வேறு எதுவும் பேசாமல் தனது அண்ணனின் மடியில் படுத்துக்கொண்டாள் உதிரன் தனது தங்கையின் தலையை கோதினான் உதிரனின் தொடை நனைந்தது மகா அழிகிறாள் என்பதை உணர்ந்தான் ஆனால் அவளை இப்போது எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை பிறகு தனது அண்ணனின் மடியில் படுத்துக்கொண்டு தனது  தாடையில் அடித்துக் கொண்டு அழுதால் நான் இப்படி குடும்பத்திற்காக மகி மாமாவுக்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்து விட்டேனே என்று அழுதால் உதிரனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அவளது கையை பிடிக்க வந்தான் விடு அண்ணா எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டால்தான் உண்டு மாமா எனக்கு தண்டனை தராது என்று சொல்லிக் கொண்டே அவளது தாடையில் வேகமாக அடித்துக் கொண்டே அழுதால் நான் துரோகம் பண்ணிட்டேன் நான் என்னுடைய மகிழ் மாமாவிற்கு துரோகம் பண்ணிட்டேன் என்று பைத்தியம் போல்  ஒரே வார்த்தையையே சொல்லிக் கொண்டிருந்தால் அப்பொழுது அவளது கையை ஒரு கரம் வந்து தடுத்தது நீ அப்படி என்ன பண்ண என்று வேகமாக கேட்டது ..மகா வின் கையைப் பிடித்த கரம் யார் உடையது…அவளிடம் கேள்வி கேட்டது யார் …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அது யார் என்று நீங்கள் யோசித்தால் கமெண்டில் சொல்லுங்கள் அன்புடன் ❣️தனிமையின் காதலி ❣️கதையின் நகர்வு எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *