மகிழ் தனது கண்ணில் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீரையும் உள்ளே இழுத்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி சென்றான் அப்பொழுது அவனது கையை ஒரு கரம் பிடித்து மேடைக்கு அழைத்து வந்தது அது வேறு யாரும் இல்லை மகா தான் தனது மகிழ் மாமா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று உணர்ந்து வேகமாக அவரை இனி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள் என்ன மகா என்றால் இனி மகா சிரித்துக்கொண்டே யார் சொன்னா உனக்கு எதுவும் உங்க அண்ணன் வாங்கவில்லை என்று கேட்டுக் கொண்டே மகிழ் சட்டை பாக்கெட்டில் இருக்கும் இரண்டு தங்க வளையல்களை கையில் எடுத்தால் மகிழ் மகாவை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான் மகா தான் இனியின் இரண்டு கையிலும் போட்டு விட்டால் பிறகு திரும்பவும் மகிழ் சட்டை பாக்கெட்டில் கை விட்டாள் அனைவரும் என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் பிறகு ஒரு ஜால்ரா கொலுசை வெளியே எடுத்தாள் இனி அந்த கொலுசை பார்த்துவிட்டு அண்ணா என்னென்ன கொலுசு எல்லாம் என்றால் ஆனந்த அதிர்ச்சியாக மகிழ் சிரித்துக் கொண்டே உனக்கு ஜால்ரா கொலுசு என்றால் ரொம்ப பிடிக்கும் இல்லநீ வேலைக்கு போறதால தாண்ட ஜால்ரா கொலுசு போடாம இருந்த இப்ப குழந்தை பொறக்குற வரைக்கும் போட்டுக்கோ டா குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் போட முடியாது இல்ல என்று சொன்னான் பிறகு மகா இனி உடைய காலுக்கு கீழே உட்கார்ந்து அவளுடைய காலை தனது மடியில் எடுத்து வைத்து இரண்டு காலுக்கும் ஜால்ரா கொலுசை அவளுக்கு அணிவித்தாள் பிறகு அவளும் நழுங்க வைத்துவிட்டு மகிழுடன் கீழே இறங்கினாள் பிறகு எழில் வந்தான் என்னடா எழில் என்று இனி சிரித்துக் கொண்டே கேட்டாள் ஏன் உனக்கு அண்ணன் மட்டும்தான் ஏதாச்சும் செய்யணுமா இந்த தம்பி எல்லாம் எதுவும் செய்ய வேண்டும் என்று ஆசை இல்லையா என்று கேட்டான் ஆசை இல்லைன்னு சொல்லல இருந்தாலும் என்றாள் இந்த தம்பி கிட்டயே கொஞ்சமா தான் காசு இருக்கும் என்றா என்று கேட்டான்டேய் நான் எப்படா காச பத்தி பேசினேன் என்றால் சும்மா என்று விட்டு என்னாளும் என் தகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது செய்யவும் முடியும் என்றான் நீ நிறைய கூட செய் யார் வேண்டாம் என்றா என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் எழிலும் சிரித்தான்எழில் தனது கையில் செயினை வைத்துக்கொண்டு அமைதியாக நின்றான் அனைவரும் எழிலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது மகா வேகமாக எழில் இடம் வந்து நின்றால் எழில் மகா கையில் ஒரு தங்க செயினை வைத்தான் அதை வாங்கி இனி கழுத்தில் போட்டு விட்டால் மூன்று பவுனில் டாலர் வைத்த செயின் ஒன்று வாங்கி இருந்தான் இனிக்கு அது ரொம்ப பிடித்திருந்தது பிறகு முகில் வந்து நின்றான் என்ன முகில் மாமா என்றால் என்னது மாமாவா என்றான் முகில் சும்மா என்றால் இனி சிரித்துக் கொண்டே இனி அமைதியா இருடி அப்புறம் நாளைக்கு வீட்ல இருக்க எல்லாரும் உன்ன என்ன அண்ணி என்று கூப்பிட்டு என்று சொல்லிடுவாங்க என்றான் இப்பொழுது சிறியவர்கள் அனைவரும் சிரித்தார்கள் முகில் இனி உதிரன் கையில் ஒரு கிப்ட் கொடுத்தான் இனி என்ன என்று ஆர்வமாக பார்த்தால் அதற்கு முன்பு நிலா தான் இதுல என்ன அண்ணா இருக்கு என்று கேட்டுக் கொண்டே வேகமாக அந்த கிப்டை பிடித்தால் அப்பொழுது எழில் தான் குட்டி சாத்தான் அது உனக்கு கொடுத்ததில்லை இனிக்கு கொடுத்தது அதை அவளை பார்க்க விடு என்று சொன்னான்எனக்கு கொடுத்தா என்ன எங்க அண்ணிக்கு கொடுத்தா என்ன என்று சொல்லிவிட்டு அதை பிரித்தால் அதை பிரித்துப் பார்த்தவுடன் உதிரன் இனி இருவருக்கும் அவ்வளவு ஆனந்தமாக இருந்தது அவன் தன் கையால் வரையப்பட்ட ஒரு வரைபடத்தை தான் இருவருக்கும் பரிசாக கொடுத்திருந்தான் அந்த வரைபடத்தில் இருந்தது உதிரனும் இனியும் தங்கள் கையில் ஒரு சிறிய மொட்டு வை குழந்தையை வைத்திருப்பது போல் ஒரு புகைப்படம் அவ்வளவு தத்ரூபமாக நேச்சுரலாக இருப்பது போல் இருந்தது இருவரும் முகிலை பார்த்து டேக்ஸ் சென்றார்கள் என்ன எனக்கு தேங்க்ஸ் என்றான் பிறகு நிலா வந்து நின்றால் என்ன நிலா குட்டி நீ என்ன வைத்திருக்கிறாய் எனக்கு என்று கேட்டால் என்னிடம் கிப்ட் எல்லாம் இல்ல பா..என்னிடம் காசு இல்லப்பா நான் உங்களை மாதிரி என்ன வேலைக்கு போறேன் என்னிடம் கிப்ட் எல்லாம் எதிர்பாக்காத நீ என்றால் அப்பொழுது உதிரன் சிரித்துக் கொண்டே நிலா குட்டி உன்னிடம் இருந்து நாங்க பெருசா எதையும் எதிர்பார்க்க மட்டும் டா நீ எங்க கூடவே இருக்கறதே எனக்கு பெரிய கிப்ட் தான் என்றான் இருந்தாலும் நானும் எங்க அண்ணிக்கு ஏதாச்சும் செய்யணும் இல்ல என்று சொல்லிக் கொண்டே ஒரு கவரை இனி முன்பு காண்பித்தாள் இதுல என்னடி இருக்கு என்று கேட்டால் இரு அண்ணி பொறுமையா இரு என்று சொல்லிக் கொண்டே அந்த கவரில் இருந்து இரு கையால் செய்யப்பட்ட வளையல்களை எடுத்தால் இனிக்கு அந்த வளையல் என்றால் ரொம்பவே பிடிக்கும் அது கையால் செய்திருந்த திரட்டிங் வளையல் அவள் மாசமாக இருந்ததிலிருந்து வீட்டில் இருப்பவர்கள் அந்த வளையலை அணிய வேண்டாம் இப்போது மண் வளையல்கள் தான் போட வேண்டும் அதனால் அந்த வளையலையே போடு என்று சொல்லி இருந்ததால் சிறிது வருத்தத்தில் இருந்தால் இப்பொழுது அந்த வளையலை நிலா காண்பித்தவுடன் இனிக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது நிலா கொடுக்கும்போது அண்ணி இந்த வலையில் இப்போது போடக்கூடாது பாப்பா பொறந்ததுக்கப்புறம் போட்டுக்கோ என்று சொல்லியே கொடுத்தாள் சரி என்று இனி வாங்கி வைத்துக் கொண்டால் அனைவரும் கொடுத்தவுடன் மகா மகிழ் கையை விட்டுவிட்டு உதிரன் இனி அருகில் வந்து நின்றாள் நீ ஏதாவது தரப் போறியா அது தான் என் அண்ணன் கொடுத்துடாரே என்றால்மகா சிரித்து கொண்டே உனக்கு யாரு தரேன் என்று சொன்னாங்க நான் என் அண்ணனுக்கு தர போறேன் என்றாள் இன்று எனக்கு தாண்டி வளைகாப்பு உன் அண்ணனுக்கா என்றால் மகா சிரித்துக் கொண்டே என் அண்ணன் இல்லாமலா இன்று உனக்கு வளைகாப்பு நடைபெறுகிறது என்று சிரித்துக் கொண்டே இனி காதில் மெதுவாக சொல்லிவிட்டு தனது அண்ணனின் அருகில் போய் நின்றால் அவள் கையில் எதுவும் வைத்து இல்லை வீட்டில் அனைவரும் அப்படி என்ன அவள் தரப் போகிறாள் என்று எண்ணி மகாவை பார்த்தார்கள் இனி கூட ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால் மகா தனது முந்தானையிலிருந்து ஒன்றை வெளியே எடுத்து உதிரன் முன்பு காண்பித்தால் உதிரன் கண்ணில் இருந்து நீர் வழிந்தது அது பெரிதாக ஒன்றும் இல்லை வெள்ளி காப்பு உதிரனுக்கு காப்பு அணிய வேண்டும் வெள்ளி காப்பு என்று ரொம்ப நாட்களாகவே ஆசை ஆனால் அதை அவன் செயல்படுத்தவில்லை ஏனென்று கூட தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் வேலு போட்டிருக்கிறார் அதைப் பார்த்து தான் அவனுக்கு ஆசையை வந்தது யாரும் அவனை போட வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை ஆனால் அவன் போடாமல் இருந்தான் எந்த காரணத்துக்காக என்று தெரியவில்லை அதை பார்த்தவுடன் உதிரனுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது மகாவே அதை தனது அண்ணன் உதிரன் கையில் போட்டு விட்டால் பிறகு பெரியவர்கள் சரி நேரமாயிடுச்சு ஆரத்தி சுற்றி வளைகாப்பு முடித்து விடலாம் என்றார்கள் பிறகு சரி என்று விட்டு பெரியவர்கள் மூவர் ஆரத்தி எடுத்தார்கள் அப்போது அவர்களில் ஒருவர் மகா நீயும் வா நீ வந்து சுத்து என்றார்கள் சரி என்று அவளும் ஒரு கைப்பிடித்தால் பிறகு சுந்தரியோட சேர்ந்து ஐவர் ஆரத்தி சுற்றினார்கள் பிறகு வீட்டிற்குள் சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்தார்கள் அப்பொழுது இனிக்கு சாதத்தை மகா தான் முதலில் ஊட்டி விட்டாள் இனிக்கு என்னென்ன சாத பிடிக்கும் என்று சொல்லி இருந்ததால் அந்த வகையான சாதங்களை தான் மகா செய்திருந்தால் மொத்தம் ஒன்பது வகையான சாதங்கள் செய்யப்பட்டிருந்தது முதலில் சக்கரை பொங்கல் எடுத்து ஊட்டி விட்டு பிறகு ஒவ்வொரு சாதமாக ஒட்டி விட்டாள் பிறகு நல்ல முறையில் வளைகாப்பு நிறைவடைந்தது சொந்த பந்தங்களுக்கும் ஊரில் உள்ளவர்களுக்கும் பந்தி பரிமாறப்பட்டது அனைவரும் இனியையும் குழந்தையும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் இனிக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என்றும் வாழ்த்தி விடை பெற்றார்கள் ஒவ்வொருவராக சென்றவுடன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொருவரையும் உபசரித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது சுந்தரியிடம் சுந்தரி உறவில் ஒரு பெண் வந்து பேசினார் சொல்லுங்கக்கா என்று கேட்டால் என்ன அக்கா சொல்லுங்க என்றவுடன் அந்த பெண் யார் என்று ஓர் இடத்தை கை காண்பித்து கேட்டார்கள் சுந்தரி மகாவை தான் கேட்கிறார்கள் என்று எண்ணி எனது மருமகள் மகிழோட பொண்டாட்டி மகாலட்சுமி என்றார் சுந்தரி அது இல்ல சுந்தரி அந்த பொண்ணுக்கு பக்கத்துல இருக்க பொண்ணு என்றவுடன் அது அவளோட தங்கச்சி என்னோட சின்ன நாத்தனா பொண்ணு பேரு அகல் நிலா ஏன் அக்கா என்று கேட்டார் சுந்தரி நம்ம மதன் அந்த பெண்ணை பார்த்துட்டு எனக்கு அந்த பொண்ண புடிச்சி இருக்குன்னு சொல்றான் என்றார்அக்கா தப்பா எடுத்துக்காதீங்க நாங்க இப்ப கல்யாணம் பண்ற மாதிரி இல்ல படிக்கிற பொண்ணு என்றார் அப்பொழுது தனது தாயிடம் ஏதோ கேட்பதற்காக எழில் அங்கு வந்தவுடன் என்னம்மா என்று கேட்டான் சுந்தரி விஷயத்தை சொல்வதற்கு முன்பாகவே அந்த பெண்மணியே எழில் மதனுக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கு அதான் அந்த பெண்ணை பொண்ணு கேட்கலாம் என்று என்றார்எழில் தனது தாயைப் பார்த்தான் அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவுடன் பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது நான் பேசுறேன் என்று தப்பா நினைச்சுக்காதீங்க பெரியம்மா அவ படிச்சிட்டு இருக்க பொண்ணு இப்போ நாங்க அவளை கல்யாணம் பண்ணி தரதா இல்லை என்றான் இல்லப்பா நம்ப மதனுக்கு அந்த பெண்ணை ரொம்ப புடிச்சிருக்கு நாங்க படிக்க வைத்து இருக்கிறோமே ஏன் கல்யாணம் பண்ணிட்டு நாங்க படிக்க வைக்க மாட்டோமா என்றார் பெரியம்மா நீங்க படிக்க வைப்பீங்க நான் இல்லைன்னு சொல்லல ஆனா அவனுக்கு மட்டும் விருப்பமா இருந்தா போதுமா அவளுக்கும் இதில் விருப்பம் இருக்க வேண்டுமா அது மட்டும் இல்லாமல் பெரியம்மா அவங்க அப்பா அம்மாவுக்கு சம்பந்தமா என்று கேட்க வேண்டாமா என்றான்சரி கூப்பிடுங்க நான் கேட்கிறேன் என்றார் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவருமே அங்கு கூடி கூடிட்டார்கள் காவேரி தான் என்ன சுந்தரி என்று கேட்டார் இல்ல அண்ணி என்று விட்டு தனது உறவினர் முறையில் உள்ள அக்கா தன்னிடம் கேட்ட அனைத்தையும் சொன்னார் சுந்தரி அனைவரும் அமைதியாக இருந்தார்கள் நிலா தன் வீட்டில் உள்ளவர்கள் தன்னை இப்போதே திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று நம்பிக்கையில் அமைதியாக இருந்தால்அப்போது எழில் தான் திரும்ப நான் சொல்கிறேன் என்று தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் இப்பொழுது நாங்கள் நிலாவை திருமணம் செய்து வைப்பதாக இல்லை அவள் சிறிய பெண் என்றான் அவள் வயதில் திருமணம் எத்தனையோ பெண்களுக்கு ஆகிவிட்டதே என்றார் அவள் வயதில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் இப்பொழுது நாங்கள் அவளை திருமணம் செய்து வைப்பதாக இல்லை அவள் எங்கள் வீட்டின் கடை குட்டி அவளை படிக்க வைப்பதாகத்தான் இருக்கிறோம் அவளுக்கும் என்று கனவு லட்சியம் எல்லாம் இருக்கிறது அதை நிறைவேற்றி வைத்து விட்டு தான் நாங்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று இருக்கிறோம் இப்பொழுது அவளை திருமணம் செய்து வைப்பதாக இல்லை என்றான் அவன் கையெடுத்து கும்பிட்டு எங்களை மன்னித்து விடுங்கள் நாங்கள் அவளைப் திருமணம் செய்து வைக்கக் கூடிய எண்ணத்தில் இப்போது இல்லை என்றவுடன் மதன் தான் ஒருமுறை அனைவரிடம் பேசலாம் என்று எண்ணி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு படிக்க வைக்கிறேன் அவளுடைய கனவு லட்சியத்தையும் நிறைவேற்றுகிறேன் என்றான் மதன் அவ்வாறு கேட்டவுடன் வீட்டில் உள்ள அனைவருமே கை எடுத்து கும்பிட்டவுடன் சரி அந்த பெண்ணுக்கு இப்பொழுது தானே திருமணம் செய்து வைக்கவில்லை நீங்கள் அந்த பெண்ணுக்கு எப்பொழுது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அப்போது எங்களுக்கு சொல்லிவிடுங்கள் என்றான்.அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள் வேலு ஏதோ சொல்வதற்கு வாய் எடுத்தார் ஆனால் அமைதியாக தான் இருந்தார் அப்போது எழில் தான் தப்பா எடுத்துக்காதீங்க அப்படி ஒரு நிலைமை வராது என்று நினைக்கிறேன் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் எழிலை பார்த்தார்கள் அவர்களும் சரி என்று விட்டு சென்று விட்டார்கள் அவர்கள் சென்றவுடன் மகிழ் தான் யாரை கேட்டு எழில் நீ இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்க வீட்ல பெரியவர்கள் இருக்காங்க அவங்க பேச மாட்டாங்களா உன்ன யார் பேச சொல்ற அதுவும் அவளுக்கு திருமணம் என்று வரும்பொழுது என்று அந்த பையன் கேட்கிறான் அப்பொழுது கூட நீ அவளுக்கு அப்படி ஒரு சூழ்நிலை வராது என்று சொல்கிறாய்ஏன் நாம் நிலாவுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோமா உன்னை யார் பேச சொல்கிறார்கள் வீட்டில் பெரியவர்கள் பேச மாட்டார்களா என்றான் எழில் தனது அண்ணன் மகிழை முறைத்து பார்த்து விட்டு யார் வேண்டாம் என்று சொன்னார்கள் இப்பொழுது கூட நீங்கள் போகும் அந்த பையனை கூப்பிட்டு திருமணம் செய்து வையுங்கள் இல்லை எப்பொழுதும் வேண்டுமானாலும் இவளுக்கு திருமணம் செய்து வையுங்கள் எனக்கு என்ன என்று தனது அண்ணனை முறைத்துவிட்டு எழில் வீட்டிற்குள் சென்று விட்டான் வீட்டில் உள்ள அனைவரும் போகும் எழிலையே பார்த்துக்கொண்டு நின்றார்கள் எழிலுக்கு ஏன் இவ்வளவு கோபம் மகிழ் ஏன் எழிலிடம் அவ்வாறு பேசினான் …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன்❣️தனிமையின் காதலி ❣️
Intha magizh ku ethume puriyatha taknu
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
மகிழ் ஓரு டியூப் லைட். .. எழிலுக்கு நிலா மேல் கண்ணு