மலர் வீட்டிற்கு சென்றவுடன் புடவை அனைத்தையும் தியாவிடம் காமிக்க .
இது என்ன மா மூணு புடவை மட்டும்தான் காட்டினாங்க.
அதுவும் இல்லாம இது காட்டன் சாரி மாதிரி இருக்கு என்று கேட்க .
அது உனக்கு தான் அவங்க வீட்ல தான் எடுத்து கொடுத்தாங்க என்று மலர் அமைதியாகவே சொல்ல .
அவங்க எடுத்து கொடுத்தாலும் நீ வாங்கிட்டு வந்துருவியா அம்மா .
ஏன்?” எனக்குன்னு உங்களால எதுவும் செய்ய முடியாதா ?”என்று கண்ணனை முறைத்துக் கொண்டு கேட்க.
கண்ணன் எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்று தண்ணீர் குடிக்க சென்று விட.
மலர் தன் மகள் முறைத்தாலும் சிரித்துக்கொண்டே நலங்கு பங்ஷனுக்கு கட்டிக்க சொல்லி நந்தா தம்பி தான் எடுத்து கொடுத்தாரு .
தியா வேறு எதுவும் பேசவில்லை . சரி இது எல்லாத்துக்கும் உன்கிட்ட இருக்க நல்ல பிளவுஸ் பார்த்து அளவு கொடுத்துவிடு என்று சொல்ல.
அளவு பிளவுஸ் எடுத்து கொண்டு வந்து தியா மலர் கையில் திணிக்க.
நீயே நம்ம எப்பயும் கொடுக்கிற செட்டியார் கடையிலேயே கொடுத்துவிடு அங்கையே தச்சிக்கலாம் .
“இல்ல டி ஏதாச்சும் டிசைனிங் ஒர்க்” என்று கேட்க .
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .நம்ப எப்பையும் தர இடத்திலே கொடுத்திடு ஒன்னும் பிரச்சனை இல்ல.
இந்த மூணு புடவைக்கு மட்டுமாச்சும் டி என்று கேட்க .
அப்போதும் தியா விடம் இருந்து எந்த சத்தமும் வராத உடன் விடு மலர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு கண்ணன் வெளியில் செல்ல.
இல்ல மாமா கல்யாணத்துக்கு நாலு வேற கம்மியா தான் இருக்கு .
இந்த மூணு புடவைக்கு மட்டும் ஒர்க் குடுக்கணும் இல்ல .
அதான் பாத்துக்கலாம் விடு என்று சொல்லிட்டேன்ல விடு என்று வெளியில் சென்றவர் மலருக்கு போன் செய்திருக்க.
என்ன மாமா இப்ப தான போன என்று கேட்க.
“நீ மாப்ள வீட்ல போன் பண்ணி உன் மக சொன்னத சொல்லிவிடு “என்று விட்டு வைத்துவிட்டார்.
ஏன் அத இங்க வச்சே சொன்னா தான் என்ன என்று தன் கணவனுக்கு திட்டுதலாக ஒரு சில வசவுகளை கொடுத்தவர் .
இப்பொழுது யாருக்கு அழைப்பது என்று புரியாமல் நிற்க .
அடுத்த நொடி தியாவிற்கு உதயாவிடமிருந்து ஃபோன் வந்திருந்தது .
எடுத்தவள் இப்போ தான அண்ணா வீட்டுக்கு போய் இருப்பீங்க அசதியா இல்ல போன் பண்ணி இருக்கீங்க என்று கேட்க .
அந்த மூணு பிளவுஸ்க்கு மட்டும் அளவு பிளவுஸ் கொடு தியா .நான் நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்.
இல்ல அண்ணா இங்கே அம்மா தெரிஞ்சவங்க கடையில கொடுத்துடுவாங்க என்று சொல்ல.
உன்னை நான் கேட்க மட்டும் தான் தியா செஞ்சேன் என்று வைத்து விட்டான் .
நந்தா தான் சொல்லியிருந்தான் .வேறு எதுவும் பேசாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் உதயாவே வந்து வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.
மலர் தன் மகளை பார்த்து சிரித்துக் கொண்டார் .என்னமா என்று கேட்க .
ஒன்றும் இல்லை என்று விட்டு அமைதியாகிவிட்டார் .நாட்கள் வேகமாக செல்ல இருவருக்கும் பந்தல் கால் நடும் நாளும் நாளை என்று இருந்தது .
அன்று இரவு தியாவின் வீட்டிற்கு தியாவின் தாய் மாமாவும் ,அத்தையும் வந்து இருக்கு .
அவருடைய அத்தை உள்ளே வீட்டிற்குள் வரும்போது கூச்சலுடன் வர.
” தாய்மாமன் இருக்காரு அத்தைனு நான் ஒருத்தி இருக்கேன்” .எங்க ரெண்டு பேத்துக்கும் சொல்லாம கொள்ளாம கல்யாணத்துக்கு மட்டும் வந்து பத்திரிக்கை வைக்கிறீங்க .
அதும் ரெண்டு நாள் முன்னுக்க என்று புலம்பிக்கொண்டே வர .
“தியா யார் ?என்று புரியாமல் அமைதியாக இருக்க”.
“தாய்மாமன் மகன் குத்துக்கல்லாட்டம் இருக்க என் மருமகளுக்கு இந்த அழகு சிற்பத்துக்கு வேறு இடத்தில மாப்பிள்ளை பார்க்கிறீர்களா? “என்று தியாவை நெற்றி முறிக்க.
தியா அங்கு நின்று கொண்டிருக்கும் பையனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவுடன் “இவனுக்கு நானா ?” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள் .
அண்ணி கல்யாணத்துக்கு கூப்பிடனும் என்பதற்காக கூப்பிட்டு இருக்கோம் .
“நீங்க வந்து சத்தம் போட்டுட்டு இருக்கீங்க நல்லது நடக்க போற வீட்டில” என்று சொல்ல.
“வந்தவள வானு ஒரு வார்த்தை அக்கறையா கூப்பிட வக்கில்ல “என்று சொல்ல.
“அந்த அளவுக்கு நீங்க வச்சுக்கல”. மரியாதைக்கு கூப்பிடனும் கூப்பிட்டு இருக்கோம் .
எது டி மரியாதைக்கு கூப்பிட்டு இருக்கீங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியா?
“புள்ள வயசுக்கு வந்ததுக்கு கூப்பிடல இப்ப நிச்சயத்திற்கு கூப்பிடல தாய் மாமனா என் புருஷன் உங்க கண்ணுக்கு தெரியலையா ?”
யாருமா இது என்று தியா வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இல்லாமல் கேட்டு விட.
“பிள்ளைக்கு யாருனு தெரியாத அளவுக்கு இந்த உறவு வச்சு இருக்கீங்க டி “.
நான் தான்டா கண்ணு உன் அத்தை உன் அப்பன் கூட பிறந்தவ .இவரு உங்க அம்மா கூட பிறந்தவர் .
“உன்னோட தாய் மாமா ” என்று சொல்ல. அதுவரை அமைதியாக இருந்த தியா தனது அத்தையை முறைத்தவள் .
உங்களை முறையா கூப்பிடலைன்னு வருத்தமா அத்தை என்று அத்தையில் அழுத்தம் கொடுக்க .
மலர் தன் மகளின் கையை பிடிக்க .இங்கு கண்ணனுக்கு தான் தன்னையும் மீறிய சிரிப்பு பீறிட்டது .
என்னடா உன் கூட பொறந்தவா கத்திட்டு இருக்கேன் .கண்டுக்க கூட மாட்டேங்குற என்று விட .
கண்ணன் அப்பொழுதும் அமைதியாக இருக்க .
இவ்வளவு நாளா இல்லாத அக்கா இவரோட சொத்து பத்து புடுங்கிட்டு விட்டவங்க.
இப்போ கூட எங்க அம்மா வந்து பத்திரிக்கை வைக்க போய் இந்த பக்கம் வந்திருக்கீங்க.
தியா உங்களுக்கு எத்தனை புள்ளைங்க என்று கேட்க.
எனக்கு ரெண்டு பிள்ளைங்க ஒரு பையன் இதோ இவன் தான் .ஒரு பொம்பள புள்ள ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் பொம்பள புள்ளைக்கு கல்யாணம் முடிச்சேன் என்றார்.
உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சு தான.அப்போ உங்க மகளுக்கு எங்க அப்பா தான தாய் மாமா .
” எங்க அப்பாவ எந்த முன்னிலையில நீங்க நிக்க வச்சு உங்க பொண்ண கட்டி குடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ?”
அது என்று இழுக்க..
“இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு விவரம் தெரிஞ்சு தாய்மாமனு யாரும் வந்து நிக்கல “.
இப்பவும் சாஸ்திர சம்பிரதாயத்துக்காக தான் கூப்பிட்டு இருக்காங்க.
விருப்பம் இருந்தா இருங்க .இல்லனா கிளம்பிட்டே இருங்க .
என்னடி மலர் இப்படி புள்ளைய வளர்த்து வச்சிருக்க .
பெரியவங்களுக்கு மரியாதை தர சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லையா.
அண்ணி நான் என் புள்ளைக்கு மரியாதையெல்லாம் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்து இருக்கேன் .
அவளுக்கு யாருக்கு மரியாதை தரணுமோ அவங்களுக்கு கொடுக்க தெரியும் .
“முதல்ல நீங்க மரியாதையா நடந்துக்கோங்க .அதுக்கப்புறம் என் மகளே உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை கொடுப்பா”.
மாப்பிள்ளை வீட்டில் கூப்பிட சொல்லி கேட்டுகிட்டாங்க .அதுக்காக கூப்பிட்டேன் .
அந்த மரியாதைக்காக மட்டும் தான் .
என் மகள் வயசுக்கு வந்ததுக்கோ ,காது குத்துக்கோ, நிச்சயத்துக்கும் கூப்பிடல .
*இவ்வளவு நாள் கூப்பிடாதவ இப்போ கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிட்டு இருப்பேனா?”அப்படின்னு யோசிச்சு இருக்கணும் என்று விட்டு சென்று விட.
மலர் அமைதியாக சமையல் அறைக்கு சென்று விட.
“என்ன கொழுப்பு பத்தியால உன் தங்கச்சிக்கும் உன் தங்கச்சி புருஷனுக்கும் என்று சரோஜா தன் கணவனை பார்த்து சொல்ல”.
அவருடைய கணவன் அமைதியாகவே நின்றார்.
நாங்க இல்லாமல் நாளைக்கு செய்ய வேண்டிய நல்லதை செஞ்சிடுவியா நானும் எப்படி செய்வனு பார்க்கிறேன் என்று கருவிக்கொண்டே சாப்பிட உட்கார .
மலருமே வீட்டிற்கு வந்தவர்களை அவமதிக்கக் கூடாது என்று தலவாழை இலை போட்டு சாப்பாடு போட செய்தார்
மறுநாள் பொழுது நன்றாக விடிந்தது.
இரு வீட்டிலுமே திருமணத்திற்கு இன்று பந்த கால் நட்டு முதல் நலங்கு வைக்கும் விசேஷம் ஆரம்பமாகி இருந்தது.
தியாவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பே பரீட்சை முடிந்திருந்து லீவும் ஆரம்பித்திருந்தது .
பந்தக்கால் நடுவதற்கு தேவையான அனைத்தையும் மலர் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வைத்துக் கொண்டு இருக்க.
காலையிலேயே தியாவின் அத்தை சரோஜா ஆரம்பித்திருந்தார் அவருடைய ரகளையை
இப்ப தாய் மாமா இல்லாம எப்படி பந்த கால் நடுவீங்க .
அவர் தானே முதல் நலங்கு வச்சு துணிமணி எடுத்து போடணும் என்று சொல்ல.
தியா அமைதியாகவே நின்று கொண்டு இருந்தாள்.
அப்போது தேவியிடம் இருந்து மலருக்கு போன் வந்திருக்க.
ஒரு சில நொடி யோசித்த மலர் சொல்லுங்க கா இந்த நேரத்துல என்று கேட்க.
பந்தக்கால் நட்டாச்சா. நலங்கு வைக்க தேவையான எல்லாம் ஆரம்பிச்சாச்சா மலர் என்று கேட்க .
ரெடியாயிடுச்சு அக்கா. “அண்ணி இங்க வந்து பிரச்சனையை கிளப்பிட்டு இருக்காங்க “என்று சொல்ல.
அவங்க எதையோ பண்ணட்டும் .இன்னும் கால் மணி நேரம் பொறு நாங்க வந்துருவோம் என்று விட்டு .
அஞ்சு புடவை நந்தா அன்னைக்கு கொடுத்தான்ல அதுல மாம்பழக் கலர்ல ஒரு புடவை இருக்குமாம் .
அந்த புடவையை தியாவை இப்ப கட்ட சொல்லு என்று விட்டு வைத்துவிட.
மலருக்கு ஒரு சில நொடி ஒன்றும் புரியவில்லை என்றாலும் ,ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணியவர் .
தியாவிடம் இந்த புடவை கட்டிக்கோ என்று எடுத்து கொடுக்க.
இந்த புடவையா ஏன் மா ?என்று கேட்க. தேவி கா தான் இந்த புடவை உன்னை கட்டிக்க சொன்னாங்க .
இப்போ தான் போன் பண்ணாங்க . என்றவுடன் வேறு எதுவும் பேசாத தியா சரி என்று அந்த புடவையை கட்டிக்கொண்டு சபையில் வந்து உட்கார .
அவள் வந்து உட்கார்ந்தவுடன் திரும்பவும் சத்தம் போட சரோஜா ஆரம்பிக்க .
ஒரு காரில் இருந்து ஐந்து பேர் வந்து இறங்க தூரத்தில் யார் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சரோஜா .
அருகில் வந்தவுடன் “மலர் இங்க பாருடி இந்த ஒழுக்கம் கெட்டவ ,கேடு கெட்டவ நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்து நிக்கிறா” என்று வாய் எடுக்க.
நந்தா முறைத்த முறைப்பில் சரோஜா வாய் தானாக மூடி கொள்ள.
நந்தா யார் என்று தெரியாமல் இருக்க .
“தேவி எதற்கு இங்கே வந்திருக்கிறாள் ?”என்று புரியாமல் மலரையும் ,கண்ணனையும் சரோஜா பார்க்க.
மலரும் கண்ணனும் இருவரையும் வரவேற்க சுற்றி உள்ளவர்களும் வரவேற்க .
“யாருடா கண்ணா இது “என்று நந்தாவை கை காண்பித்து கேட்க .
“இதுதான் மாப்பிள்ளை .இவங்க எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க” .
மாப்பிள்ளையோட அக்கா .மாப்பிள்ளை யோட மச்சான் என்று சொல்ல.
தேவி நேராக சென்று தியாவை நெற்றி முறித்து அவளது தாடையில் முத்தம் வைக்க.
“ஏய் கேடுகெட்ட சிறுக்கி. நீ என் மருமக தாடையில முத்தம் வைக்கிற ” என்று சரோஜா வாய் எடுக்க.
தியா வெளியில் சபையில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதை மறந்தவளாக.
நேத்தே உங்க கிட்ட சொல்லி இருந்தேன். உங்க சத்தம் போடுற வேலை எல்லாம் உங்க வீட்டோட வச்சுக்கணும்.
உங்க தம்பியையும், தம்பி பொண்டாட்டியையும் நேந்து சத்தம் போட்டு இருந்தீங்க.
அதுக்கே நேத்து உங்க வீட்டை பார்த்து கிளம்பிட்டே இருந்திடுங்க அமைதியா இருக்க விருப்பமில்லைனானு சொன்னேன்.
இனியும் ஏதாச்சும் வாய் திறந்தீங்கன்னா என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.
எனக்கு வர போற புருஷனை பத்தியும் சரி, அவங்க அக்கா ,அவங்க மச்சான பத்தியும் சரி ஏதாவது ஒரு வார்த்தை விட்டிங்கனா என்ன செய்வேன் எனக்கே தெரியாது .
கூப்பிட்ட மரியாதைக்கு வந்தோமோ ஒரு ஓரமா நின்னமோனு அமைதியா இருக்கணும் .
சரி விடுங்க தாய்மாமா சீர்னு நீங்க என்ன வாங்கிட்டு வந்தீங்க .
நைட் ஒரு கட்டப்பை மட்டும் தானே எடுத்துட்டு வந்தீங்க.
உங்க வசதிக்கு அதுல என்ன வச்சிருக்கீங்களோ அதை எடுத்துட்டு வந்து சபையில வையுங்க நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.
“10 ரூபாய்க்கு புடவை வாங்கிட்டு வந்து இருந்தாலும் நான் கட்டிக்கிறேன்” .
முடியலன்னா என்று தன் வாயில் கையை வைத்து காண்பித்தவள் ,மூடிட்டு ஒரு மூலையில் உட்காரனும் என்று சொல்லிவிட.
சரோஜாவிற்கு தான் அசிங்கமாகி போய்விட்டது .
இந்த சின்ன பிள்ளையிடம் இத்தனை பேர் முன்பு அதுவும் இவளது முன்பா ?என்று தேவியை முறைக்க.
நந்தாவிற்க்கு தன்னை மீறி சிரிப்புதான் ஏற்பட்டது .
தாய்மாமாவா என் தம்பி இருக்கான் அவன் செய்வான் என்று தேவி சொல்ல.
யாரும் வேறு எதுவும் பேசாமல் இருக்க.
முதல் நலங்கு தாய் மாமா வைக்க வேண்டும் என்று காரணத்தினால் தாங்கள் எடுத்துக் கொண்டு வந்த கட்ட பையில் உள்ள பொருட்களை தாம்பூல தட்டுக்கு மாற்ற.
அனைத்தையும் சபையில் வைக்க .புடவையை முதலில் வைத்துக் கொடுக்க .
தியா சென்று மாற்றிக் கொண்டு வர அதன் பிறகு நந்தாவே மாலை மாற்றி அவளுக்கு சந்தன நலங்கு வைத்துவிட்டு ஒரு கை செயினை மாற்றிவிட .
சரோஜாவிற்கு இங்கு அடி வயிறு பத்திக்கொண்டு எரிந்தது.
“இவ வீட்ல சம்மந்தம் பண்ற திமிருல தான் என்ன கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருந்தீங்களா” .
“இவ எப்படி இவ்ளோ வசதியா இருக்கா “என்று தேவியை பார்க்க.
அவர் சிரிப்புடனே நலங்கு ஃபங்ஷனை பார்க்க. இவ சிரிப்பும் அப்படியே இருக்கு என்று கருவி கொண்டார் சரோஜா.
நலங்கு வைத்து முடிய. தியா சரோஜாவின் அருகில் வந்து தேவி பெரியம்மா முகத்துல இப்போ இருக்க சிரிப்பு இனி ஆய்சுக்கும் இருக்கும் .
அது எந்த ஒரு சூழ்நிலையிலும் குறையாது .அதே மாதிரி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னோ
இல்ல ,நான் அந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்ணனும் நினைச்சீங்கன்னா ?
என்ன செய்வேன் எனக்கே தெரியாது என்று அவரது கையை லேசாக முறித்து தனது நாக்கை மடக்கி ஏய் என்று எச்சரிக்கை விட்டாள் .
இது லேசா சாம்பிள் தான் .மெயின் பிக்சர் இனிமே தான் வரும் .
வந்தோமா சாப்பிட்டோமா இருந்த இடம் தெரியாம இருக்கணும் . இல்லன்னா என்று நாக்கை மடக்கி காண்பித்தவள் .
அதுக்கப்புறம் என்னுடைய இன்னொரு முகத்தை பார்ப்பீங்க என்று எச்சரித்துவிட்டு சாப்பிடலாம் பெரியம்மா வாங்க என்று கூப்பிட.
எதுவும் பேசாத தேவி தனது மகன் தம்பிவுடன் சபையில் சாப்பிடும் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப.
அக்கா என்று மலர் வந்து அருகில் நிற்க.ஒன்னும் இல்ல மலரு.நாளையிலிருந்து நலங்கு எப்பயும் போல நீங்களே வச்சுக்கோங்க .
தினமும் ஒரு புடவை கட்டிக்கோங்க சரி வறோம் நேரமாகுது என்று சொல்ல.
அக்கா தம்பிக்கு நலங்கு என்று மலர் இழுக்க. தம்பிக்கு காலையிலேயே நாலரை ஆறு பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் நட்டு நலங்கு வச்சாச்சு மலர்.
சரி நாங்க வரோம் என்று விட்டு தியாவிடம் ஒரு தலையசைப்போடு கிளம்பி விட்டார்கள்.
நாளை நந்தா ❤️ தியா திருமணம் அனைவரும் திருமணத்திற்கு வருகை தந்து இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு திருமணத்தை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.