திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சென்று விட .
கண்ணனுமே அங்கு ரொம்ப நேரம் இருக்க முடியாமல் வீட்டிற்கு செல்லலாம் என்று மலரிடம் கேட்க.
மலருமே அக்கா வீட்டுக்கு போகணும் அங்க எல்லாம் போட்டது போட்ட படி அப்படியே இருக்கு என்று சொல்ல .
தேவியுமே உணர்ந்தவர். சரி மலரு இல்ல சடங்கு இன்னைக்கு நைட் வச்சுக்கலாம்னு ஐயர் நல்ல நேரம் குறிச்சு கொடுத்தார்.
அதான் சடங்கு வைக்கிறப்ப நீ இருப்பனு என்று இழுக்க .
அதுவரை சிரித்த முகமாக இருந்த தியா இப்படி ஒன்றை யோசிக்காமல் இருந்தவள்.
இப்பொழுது தேவி சடங்கு என்றவுடன் கை கால்கள் நடுங்கி கொண்டு இருக்கு.
சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்து இருந்த நந்தா தியாவின் மாற்றத்தை உணர செய்தான்.
உதயாவுமே தியாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“வேகமாக அவளது அருகில் சென்ற நந்தா அவளது கையை இருக்கி பிடிக்க”.
நந்தாவை பார்த்தவள் அமைதியாக நின்று கொண்டாள்.
ஒன்னும் பிரச்சனை இல்ல அக்கா நீங்க பாருங்க .அதுலாம் தியா சமாளிச்சுப்பா என்று நந்தாவை ஒரு நிமிடம் மலர் பார்க்க.
நந்தா கண்மூடி திறந்தான்.சரிக்கா நாங்க வரோம் என்று சொல்லிக் கொண்டு தியாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப.
தியா உன்னோட துணிமணி எல்லாம் அந்த பேக்ல இருக்கு நந்தா தம்பி ரூம்ல வச்சுட்டோம் என்று விட்டு கிளம்பி விட .
ஒரு சில நொடி தியாவிற்கு தான் ஒரு மாதிரியாகி போனது .
யாரும் இல்லாமல் அவர்கள் நால்வரும் மட்டுமே இருக்க .
“தேவியின் அருகில் சென்ற தியா பெரியம்மா இன்னைக்கு அந்த சடங்கு வைக்கணுமா? “என்று கேட்க .
“தேவி தியாவை பார்த்து சிரித்து விட்டு ஏன்டி உனக்கு அவ்வளவு பயம் .என் தம்பி மேல நம்பிக்கை இல்லையா ?”என்று கேட்க .
இல்ல பெரியம்மா அது..
“நீ அப்படி ஒன்னு யோசிச்சி இருக்க மாட்டேன்னு தெரியுது. இந்த சடங்கு சும்மா சாஸ்திர சம்பிரதாயத்துக்கு தான் .சரியா?”
உன்னோட அம்மாவுக்கும் ,அப்பாவுக்கும் கூட தெரியும். இங்க எதுவும் இப்பயே நடக்கும்னு யாரும் நினைக்கல .
அது உங்க தனிப்பட்ட விஷயம் .இது சாஸ்திரம் டா.
“என் தம்பியை நம்பி அவன் கட்டின தாலிய கழுத்துல வாங்கிட்டு நீ இப்படி கை கால் நடுங்க நிற்கிறது நல்லா இல்ல “.
என் தம்பியோட முகமே சோர்ந்து போயிடுச்சு ஒரு நிமிஷத்துல என்று விட்டு தேவி நகர்ந்து விட.
இப்பொழுது தான் தியாவின் பார்வை நந்தாவின் பக்கம் சென்றது .
இல்ல அது என்று ஏதோ சொல்லி கொண்டே தியா அவனது அருகில் வர.
உதயா அங்கு தான் நிற்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்து உதயா நழுவ எண்ணி .
தியா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு நான் நகர்ந்து விட்டான்.
“உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா ?”என்று நந்தா கேட்க .
அப்படி இல்ல சார் .இப்படி ஒன்ன நான் யோசிக்கல . இப்போ சொன்ன உடனே ஒரு மாதிரி ஆயிடுச்சு.
ஹம் என்பதோடு நந்தா எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டான் தியாவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.
அப்படியே இரவு பொழுதும் வந்து இருவருக்கும் இரவு சடங்குக்கு அனைத்தும் ரெடி பண்ணி இருக்க.
இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தியாவை நந்தா ரூமில் விட .
தியா உள்ளே செல்வதற்கு முன்பு உதயா விடம் அண்ணா இவ்வளவு நாளா நீங்க சார் கூட தான தூங்குவீங்க .
இப்போ என்று கேட்க .
நான் அம்மா கூட தூங்கிக்குவேன் ஒன்னும் பிரச்சனை இல்ல.
அது மட்டும் இல்லாம .தனி ரூம் கூட இருக்கு எங்க வேணாலும் தூங்கிப்பேன் என்று விட்டு சிரித்த முகத்துடன் ஒன்னும் இல்லை என்று அவளது கையைத் தட்டி கொடுத்துவிட்டு சென்று விட்டான் .
தியா ரூமுக்குள் வரும்போது நந்தா ஏதோ வேலையாக இருக்க.
தன் கையில் இருந்த பால் சொம்பை அருகில் வைத்தாள்.
தனக்கே கேட்காத அளவிற்கு சார் என்று இரண்டு முறை அழைக்க .
அவள் வந்தது தெரிந்தும் அமைதியாகவே நந்தா கண்டும் காணாமல் இருந்தான் .
தொண்டையை வேகமாக கனைத்து காண்பித்தாள்.
அதன் பிறகு தான் அவள் வந்தது தெரிந்தது போல் நடித்த நந்தா என்ன என்று கேட்க .
ஒன்னும் இல்லை என்றாள்.
“அப்புறம் என்ன ?” என்றான்.
இல்லை என்று ஒரு சில நொடி கையை பிசைந்து கொண்டு நிற்க.
“எனக்கு” என்று இழுத்தாள்.
“உனக்கு என்ன வேணும்” என்றான்.
அவள் அமைதியாக இருக்க. இப்பவும் சொல்லுகிறேன் உனக்கு இந்த சாரி கம்பர்ட்டபிள் இருக்குன்னா கட்டிக்கோ .
இல்லன்னா வேற டிரஸ் கூட போட்டுக்கோ என்று சொல்ல .
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்றாள் .
சரி என்று விட்டு அமைதியாகி விட .
ஒரு சில நொடி அமைதிக்கு பின் ,”சார் நான் தூங்கட்டா “என்று கேட்டாள்
அவளை நிமிர்ந்து பார்த்தவன். “ஏன் தூக்கம் வருது”என்றான் .
நாலு அஞ்சு நாளா பெருசா தூங்கல அதுவும் காலையில சீக்கிரமாவே எழுப்பிட்டாங்க என்று சொன்னாள்.
அவளை பார்த்து சிரித்து விட்டு சும்மாதான் கேட்டேன் .
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு . நீ படுத்து தூங்கு என்றான்.
“இன்னைக்கு கூடவா வேலை இருக்கு”.
“ஏன் இன்னைக்கு என்ன ?”
“வேலைக்கு என்ன இன்னைக்கு நாளைக்குனு தெரியவா செய்யும் “என்றான் நக்கலாக .
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று முனகினாள் .
பேசாம படு.ஏதாவது முனக வேண்டியது.
இனி பேச மாட்டேன் .
“நான் எங்க படுக்க “என்று கேட்டாள்.
“இது என்ன கேள்வி?”
இந்த வீட்ல தான் நீ இருக்க போற .இந்த ரூம்ல தான் இருக்க போற .
“இந்த பெட்டில் இனி உனக்கும் எனக்கும் தான் சொந்தம்” .
நீ அந்த பக்கம் படுத்துக்கோ.நான் இந்த பக்கம் படுத்துக்க போறேன் .
இல்ல அது எனக்கு .
“என் மேல நம்பிக்கை இல்லையா ? இல்ல ,உன் மேல் நம்பிக்கை இல்லையா ?”என்று சிரித்து கொண்டே கேட்க.
அவனை முறைத்து பார்த்துவிட்டு பிறகு சிரித்து விட்டு எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துக்கொண்டாள் .
நந்தாவுமே தனது வேலைகளை முடித்துக் கொண்டு படுக்க 12 மணி ஆகி இருந்தது.
விடியற்காலை ஆறு மணி அளவில் தியா எழுந்திருக்க.
எழுந்ததில் இருந்து நந்தாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் .
அரை மணி நேரம் கழித்து எழுந்த நந்தா .
“போதும் எண்ணையவே வைத்த கண் வாங்காமல் பார்த்த வரை”.
எழுந்து வெளிய போற ஐடியாவே இல்லையோ என்று கண் திறக்காமலே நந்தா கேட்க.
“நீங்க எப்போ எழுந்திரிச்சீங்க “என்று கேட்டாள் .
மேடம் என்ன பார்த்துக்கொண்டிருக்கும் போதே எழுந்துட்டேன் .
நீ முதல்ல குளிச்சிட்டு வெளியே போ என்று என்றான்.
என்னுடைய பேக்.
உன்னோட பேக் அங்க மூலையில தான் இருக்கு.
அதுல இருக்க டிரஸ் வேணும்னாலும் போட்டுக்கோ. இல்லன்னா அந்த கப்போர்ட்ல இருக்கு .
என்னோட டிரஸ் எப்படி அந்த கப்போர்ட்டில் இருக்கும்.
எப்படி என்று இருக்கு போய் திறந்து பாரு என்று விட்டு நந்தா அமைதியாக கண்ணை மூடிக்கொள்ள.
கட்டிலை விட்டு கீழே இறங்கியவள் கபோர்டு திறக்க .
தனக்கான ஒரு சில உடைகள் இருக்க நந்தாவை மனதிற்குள் மெச்சி கொண்டாள்.
அதன் பிறகு வேறு எதுவும் பேசாமல் அதிலிருந்து ஒரு சுடிதார் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு வர
அவள் வந்து அடுத்த நிமிடம் நந்தாவுமே குளியலறைக்குள் புகுந்திருந்தான்.
தியா ரூமில் இருந்து வெளியில் வர .அவளது கையில் உதயா டீ கப்பை வைத்தான் .
டீ குடிப்ப இல்ல இல்லை காபியா என்று கேட்டான்
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை இரண்டுமே குடிப்பேன் என்றாள்.
சிறிது நேரத்தில் நந்தாவும் வந்துவிட நந்தாக்கும் டீயை கொடுக்க.
“என்ன மாமா ரொம்ப டயர் டா நைட் ரொம்ப நேரம் கழிச்சு தான் தூங்கின போல”.
கண் சிவந்து வேற இருக்கு என்றான்.
தியாவிற்கு தன்னை மீறிய சிரிப்பு தோன்றியது .
நந்தா அவளது தலையில் கொட்டியவன் . “அவன் வேலை விசியமா கேட்கிறான் நீ வாய மூடு “என்றான் .
ஆமாம் டா மச்சான் கொஞ்சம் வேல இருக்கு என்றான் .
சரி மாமா என்று விட .
அக்கா இன்னும் எழுந்திருக்கவில்லையா டா .
ஆமாம் மாமா தொடர்ந்து ஒரே அலைச்சல் இல்லையா ? ஒரு வாரமா சுத்திட்டு தானே இருந்துச்சி.
நைட்லாம் கால் வலிக்கிதுனு புலம்புச்சு கால் அமுக்கி விட்டேன் .
விடியற்காலை போல தான் தூங்குச்சு.
“தண்ணி தெளிச்சு கோலம் போட்டியா ?”இல்லையா ?”என்றான்.
அதெல்லாம் ஆச்சு மாமா என்றான்.
இருவரையும் அமைதியாகவே தியா பார்த்தாள்.
நந்தா தான் என்ன அப்படியே பாத்துட்டு நிக்கிற.
இல்ல அது வந்து என்று விட்டு அமைதியாக விட.
சரி மாமா என்ன சமைக்கிறது.
ஏதாவது மீதி மிச்சம் இருக்கும் டா பாத்துக்கலாம்.
நீ அக்காவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் விடு என்றான்.
ஏதாவது வேலை இருந்தா போய் செய் என்று தியாவை பார்த்து சொல்லி விட்டு சமையல் அறைக்குள் போக .
“நான் வேணா சமைக்கட்டுமா “என்றாள்.
“எதுக்கு நீ சமைச்சு நாங்க ஒரே நாள்ல போய் சேர வா “என்று சொல்ல.
அதெல்லாம் சமைப்பேன் என்று முறைப்புடனே சொல்ல.
சும்மா சொன்னேன் .நீ அமைதியா போய் உட்காரு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேவி வெளியில் வர .
என்னடா மூணு பேரும் சேர்ந்து மாநாடு போட்டுட்டு இருக்கீங்க என்ன விட்டுட்டு என்று சிரித்த முகத்துடன் வந்தார் .
தனது தலையை கட்டிக் கொண்டே வர .உதயா பிளாஸ்க்கில் இருந்த டீயை ஊத்தி கொடுக்க .
இருடா நான் இன்னும் வாய் கூட கொப்பளிக்கல .
என்று விட்டு வாய் கொப்பளித்துக் கொண்டு வந்து வாங்கி குடித்தார்.
டேய் மாவு பிரிட்ஜ்ல இருக்கு நேத்து சாம்பார் கூட இருக்கு வேணும்னா அதை யூஸ் பண்ணிக்கலாம்.
இல்லனா தேங்காய் சட்னி மட்டும் அரைச்சுக்கலாம்.
தேங்காய் கூட இருக்கு அது மட்டும் யாராச்சு செஞ்சுருங்க .
காலையில் இட்லி ஊத்திக்கலாம் மதியம் பொறுமையா பார்த்துக்கலாம் என்று விட்டு ஓரிடத்தில் உட்கார்ந்தார்
நந்தா இன்னிக்கி நீங்க ரெண்டு பேரும் தியா வீட்டுக்கு போற மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன் .
நந்தா தனது அக்காவை அமைதியாகவே பார்த்தான் .
*எதுக்கு பெரியம்மா?” கல்யாணம் முடிஞ்சு பொண்ணையும் ,மாப்பிள்ளையும் பொண்ணு வீட்டுக்கு மறு வீட்டுக்கு கூப்பிட்டு போவாங்க டா .
பொண்ணு வீட்டுக்கு மறுநாள் போயிட்டு அங்க போய் ரெண்டு மூணு நாள் தங்கற மாதிரி இருக்கும் என்று சொல்ல.
இப்போது தியா தான் அதிர்ச்சியுடன் நந்தாவை பார்த்தாள்.
ஆனால் நந்தா அமைதியாக தான் இருந்தான். இல்ல பெரியம்மா அது சரி வராது என்று சொல்ல.
அப்போது நந்தா தியாவின் கையை பிடித்து ஒன்றும் வேண்டாம் என்று அமைதியாக இரு என்று ஒரு தலையசைப்போடு சொல்ல.
உதயா எதுவும் பேசவில்லை . அப்போது மலர் போன் செய்திருக்க .
அக்கா இன்னும் அண்ணி கிளம்பலை.அவங்க கிளம்பின பிறகு வேணும்னா தம்பியும் ,தியாவும் வீட்டுக்கு வரட்டும் .
இன்னைக்கு மறு வீடு நாங்க அழைக்க வரல .நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்ல.
சரி மலர் என்று விட்டு தேவி வைத்து விட்டார் .தேவியும் மலர் சொன்னதை சொன்னவுடன் தியாவிற்கு தான் பெருமூச்சு வந்தது .
தேங்காய் சட்னி அரைத்து இட்லி ஊத்தி நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட .
மதியத்திற்கு காய்கறி தியா தானக அறிவதாக சொல்லி அறிந்து கொடுக்க நந்தாவும் உதயாவும் மதிய சமையல் முடித்து விட்டார்கள்.
மதியம் சாப்பிட்டுவிட்டு ஓரிடத்தில் உட்கார்ந்து இருக்கும் பொழுது எதற்கு நீ அப்படி அக்கா கிட்ட உங்க வீட்டுக்கு போக வேணாம்னு சொன்ன என்று நந்தா கேட்க .
இல்ல அது நீங்க அங்க வந்து என்று இழுத்தாள் .
“உன்ன கல்யாணம் பண்ணனும் முடிவு பண்ணதுக்கு அப்புறம் நான் அங்க வந்து இருக்கணும் அப்படின்றது முடிவான விஷயம் தானே” .
அங்க அடிக்கடி வரப்போக இருக்கணும் அப்படின்றதும் நிதர்சனமான உண்மை தான்.
இல்ல, “அதுல உங்களுக்கு விருப்பமா ?”என்று கேட்டாள் .
“ஏன்?என் விருப்பத்தை கேட்டு தான் எல்லாம் முடிவு பண்ணிங்களா?”என்றான்.
தியா பாவமாகவே நந்தாவை பார்க்க .
நான் இந்த கல்யாண விஷயத்துக்குன்னு சொல்லல.
எல்லா விஷயத்துக்கும் நான் என்று விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டான்.