தியா தன் பிறந்து விட்டிருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது .
கண்ணன் வீட்டுக்கு வந்தவுடன் அன்று இரவு எதுவும் பேசாமல் காலையில் தன் மகளிடம் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாகி விட.
மறுநாள் காலையில் தியா காலேஜ் கிளம்பி கொண்டிருக்கும்போது நான் உன்னை காலேஜில் விட்டு விடுகிறேன் என்று கண்ணன் சொல்ல .
அவரை அமைதியாக பார்த்த தியா இல்ல வேணாம் என்ன கூப்பிட்டு போக உதயா அண்ணா வராதா நேத்தே சொல்லிட்டாரு .
அவரு வந்து விடுவாரு அவர் கூட தான் நான் தினமும் காலேஜ் போயிட்டு இருக்கேன்.
இருக்கட்டும் கண்ணம்மா இங்க இருக்க வரைக்கும் நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல.
இல்ல வேணாம் என்றாள்.
அதன் பிறகு அவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகி விட.
கண்ணன் தன் மகளிடம் அவ்வப்போது ஏதாவது ஒரு சில வார்த்தைகள் பேசுவார் .
ஆனால்,முன்பு போல் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் தான் இருக்கிறார்கள்.
தினமும் உதயாவுடன் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள் .
முதல் இரண்டு நாட்கள் நந்தா போன் செய்யும்போது கோபத்தில் ஃபோனை எடுக்காமல் இருந்தவள் .
மூன்றாவது நாள் தானே அவரிடம் பேச வேண்டும் என்று தோன்ற எடுத்தாள் .
தினமும் பார்க்க தான் செய்கிறாள் காலேஜில் இருந்தாலும் ,அங்கு ஸ்டுடென்ட் ப்ரொபசர் என்ற உறவு தாண்டி வேற எதுவும் இல்லாத காரணத்தினால் ,
அது மட்டும் இல்லாமல் எந்த நேரமும் வீட்டிற்கு வந்தவுடன் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தாள் அங்கு இருந்த கொஞ்ச மாதங்களில் .
இப்பொழுது அவன் இல்லாமல் இருக்கும் போது இந்த இரண்டு நாட்களும் வெறுமன இருப்பதைப் போன்று உணர்ந்தவள் .
மூன்றாவது நாள் அவன் போன் செய்தவுடன் எடுத்து விட.
நந்தா எடுத்த எடுப்பிலேயே திட்ட தான் செய்தான்.
“மேடம்க்கு அவ்ளோ திமிர் ஆயிடுச்சா போன் போட்டா கூட எடுக்க முடியாதா ?”
“உன்னாலையும் போன் பண்ண முடியாது .நான் போட்டோ கூட எடுக்க மாட்டியா “என்று கத்த தான் செய்தான்.
தனது காதை மற்றொரு கை வைத்து தேய்த்து கொண்டவள். இப்போ எதற்கு கத்திட்டு இருக்கீங்க .
“காலேஜ்ல கத்துறது பத்தலையா.இங்கையுமா ?”
” உங்க தொல்லை இல்லாமல் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா விட மாட்டீங்களா” என்று சொல்லிவிட .
நந்தாவிற்க்கு ஒரு சில நொடி ஒரு மாதிரியாகி விட்டது. அப்படியே அமைதியாகி விட்டான் .
தான் விளையாட்டுக்கு சொல்ல போய் அவர் உண்மையாகவே எடுத்துக் கொண்டார் என்றவுடன் சார் சார் என்று இரண்டு முறை அழைக்க.
ஒரு சில நொடி அமைதிக்கு பின் “சொல்லு “என்றான்.
இல்ல நான் அது என்று ஏதேதோ சொல்ல” நீ விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு புரியுது” .
இருந்தாலும் ,”நீ சொன்ன வார்த்தை “என்று விட்டு அமைதியாகி விட்டான்.
நான் வேணும்னு சொல்லல .
“சரி விடு என்ன பண்ற உங்க அப்பா கிட்ட பேசினியா” .
“உன்ன உங்க அப்பா கிட்ட யார் பேச வேணாம்னு சொன்னது. இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம் டி .”
உங்க அப்பாட்ட நான் பேச வேணாம்னு சொன்னேனா.
“ஏன் ,உங்க அப்பா கிட்ட பேசினா என்ன உனக்கு என்ன வலிக்குது *என்றான்.
“அது என்னோட விருப்பம் நான் பேசுறேன் பேசாட்டி போறேன் உங்களுக்கு என்ன வந்துச்சு”.
இப்போ எதுக்கு போன் போட்டீங்க அதை மட்டும் சொல்லுங்க என்று இவளும் இந்த பக்கம் கத்த.
“என்கிட்ட பேச உனக்கு ஒண்ணுமே இல்லையோ” என்றான் ஒரு வித ஏக்கத்துடன்.
“அதான், காலேஜ்ல தினமும் பார்க்கிறோமே அப்புறம் என்ன ?”பேசறதுக்கு இருக்கு .
“பேசிட்டே இருந்தால் தான் படிப்படினு சாகடிப்பீங்களே அப்புறம் என்ன ?”
இங்க நான் படிச்சிட்டு தான் இருக்கேன் .இங்க யார்கிட்டயும் உட்கார்ந்து பேசிட்டு இல்ல என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை .”வார்த்தைக்கு வார்த்தை பேசறுதுல.”
வேற எதுல குறைச்சலாம் என்று தியா கேட்க.
“உன்னால எனக்கு போன் பண்ணி கூட பேச முடியாதா ?”போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கிற .
உங்க அண்ணன் கிட்ட மட்டும் மணிக்கணக்கா பேசுற, அக்கா கிட்ட பேசுற என்று சொன்னான் .
அவங்க என்கிட்ட அன்பா பேசுவாங்க .நாலு வார்த்தை நல்ல விதமா பேசுவாங்க .நான் பேசுவேன் .
உங்ககிட்ட என்ன பேசுறது .”எப்ப பேசினாலும் படிக்க மாட்டியா ?படிக்காமலே உட்க்கார்ந்துட்டு இருக்க அப்படின்னு படிப்ப பத்தி மட்டும் தான் பேசுவீங்க” .
“போன் பண்ணாலும், அதே படி என்று தான் சொல்ல போறீங்க”. அதுக்கு உங்ககிட்ட பேசினா என்ன பேசலனா என்ன என்று பட்டென்று சொல்லிவிட.
நந்தாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சரி என்று விட்டு வைத்து விட்டான் .
தியாவுக்குமே அவன் உடனடியாக வைத்து விட்டது ஒரு மாதிரியாகிவுடன் திரும்ப அழைத்தாள் .
நந்தா போனை எடுக்கவில்லை .இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது .
முதலில் அவன் போன் செய்ய இவள் எடுக்காமல் இருக்க. இப்பொழுது இவள் போன் செய்ய அவன் எடுக்காமல் இருக்க செய்கிறான் .
காலேஜில் வைத்து அவரிடம் பேசினால் சண்டைக்கு வருவார் என்று அமைதியாகி விட்டாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தேவியிடம் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது “பெரியம்மா உங்க தம்பி எங்க “என்று கேட்டாள்.
“என்னடி அதிசயமா என்கிட்ட அவன பத்தி கேக்குற.”
இல்ல இது அவர் வர நேரம் இல்ல அதான் .
“வந்துட்டான் டி “இப்போ தான் வந்தான்.
இல்ல பெரியம்மா அவர் காலேஜ்ல இருந்து கிளம்பும்போது போன் பேசிட்டு இருந்தேன் .
உடனே போன் கட் ஆயிடுச்சு போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு போல அதான் என்று இழுத்தாள் .
இருவருக்கும் இடையே ஏதோ ஒன்று இருக்கிறது போல அதனால் தான் இப்படி சொல்கிறாள் என்று எண்ணினார்.
தேவி பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே நந்தா ரூமில் இருந்து வெளியில் வர.
அவனது ரூமில் இருந்து வெளியில் வந்து அக்கா டீ என்று அவன் கேட்க .
அவன் கையில் போனை திணித்துவிட்டு அவன் அமைதியாக வைத்துக் கொண்டு இருக்கு .
டேய் உனக்கு தான் போன் பேசு என்றார் .
“எனக்கு பேசிக்க தெரியும்” . டீ கொடு என்று டீ வாங்கிக் கொண்டு தேவியின் கையிலே தேவியின் போனை திணித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டான்.
தியா என்று தேவி கூப்பிட கேட்டுச்சு பெரியம்மா . சரி நான் அப்புறம் பேசுகிறேன் என்று விட்டு நீங்க பாருங்க என்று வைத்து விட்டாள்.
அப்படி என்ன கோவம் இவருக்கு என் மேல என்று எண்ணி விட்டு அமைதியாகி விட்டாள் .
தேவிக்கு சிரிப்பு தான் .தன் தம்பிக்கு இந்த அளவிற்கு கோவப்பட எல்லாம் தெரியுமா என்று தான் எண்ணினார் .
உதயா வந்த பிறகு உதயா விடமும் விஷயத்தை சொல்ல “எந்த நேரமும் சந்தோஷமாவே போயிட்டு இருந்தா வாழ்க்கை நல்லா இருக்குமா ?”
“அப்பப்போ ஊடல் ,கூடல் ரெண்டும் கலந்தது தான வாழ்க்கை” என்றான் .
*அவ்ளோ பெரிய மனுஷன் ஆகிட்டியா டா நீ “என்று அவன் தோளில் தட்டி தேவி சிரிக்க.
நீயும் ,மாமாவும் சொல்லிக் கொடுத்தது தான் அம்மா என்று தன் தாயின் நெற்றியில் முட்டி சிரித்தான்.
இருவரும் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த நந்தா தனது மச்சானே தனக்கு ஒரு பெரிய பாடம் தான் என்று எண்ணினான்.
அவன் சிறிய பயனாக இருந்தாலும் ,அவன் சொல்லியது சரிதான் என்று நினைத்தான்.
மறுநாள் காலேஜ் விட்டு வந்தவுடன் நந்தா சீக்கிரமாகவே வந்து தியாவிற்கு ஃபோன் செய்ய.
எதையோ எழுதிக் கொண்டு இருந்தாள் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு விட்டு எழுத ஆரம்பித்து இருந்தாள் .
“ஹலோ “என்று விட்டு அமைதியாக இருக்க.
அந்த பக்கம் ஒரு சில நொடி அமைதியாக இருந்தவுடன் சொல்லுங்க சார் போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க .
என்ன பண்ணிட்டு இருக்க .
நோட்ஸ் கொடுத்திருந்தாங்க நோட் பண்ணிட்டு இருக்கேன் என்றாள் .
அப்பொழுது மலர் தியாவிடம் டீ கொடுக்க வந்தவர் அவள் பேசுவதை பார்த்துவிட்டு அமைதியாக நிற்க.
தியா என்று பொறுமையாக அழைத்தான். அவன் அழைப்பை கேட்டவள் சொல்லுங்க சார் “தியானு மட்டும் சொல்லிட்டே இருக்கீங்க வேற எதுவும் பேச மாற்றீங்க “.
“இல்ல அது” என்று இழுத்தான். மலர் தன் மகளின் தலையில் தட்டியவர். அவள் போனை தன் கையில் பிடித்து தான் பேசுவது அந்த பக்கம் கேட்காத அளவுக்கு பிடித்தவர்.
“என்னடி நீ நந்தா தம்பி கூட வாழ்ந்து இருக்க இத்தனை நாள” அவரு எந்த அர்த்தத்தில் பேசுகிறார் என்பதை கூட புரிஞ்சுக்காத அளவுக்கு இருக்க.
“நான் எப்படி வாழ்ந்தேன்னு நீ ஏன் ம்மா கேட்டுடு இருக்க”.
என்ன அவர் பேசறது எனக்கு புரியாம இருக்கு என்றவுடன், “தியா அவர் பேசும்போது அவர்கிட்ட கவனத்தை வைத்து பேசு சரியா?”
அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.
நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை .நான் இது உனக்கு நிலைச்சு நிக்காதுன்னு சொல்ல வரல .
“ஆனா புரிஞ்சுகிட்டு வாழப்பழகு” .அவ்வளவுதான் சொல்லுவேன் என்று தியாவின் கையில் போனை திணித்துவிட்டு செல்ல .
நந்தா அந்த பக்கம் என்ன டி பண்ற என்று கத்தி கொண்டு இருந்தான் .
சொல்லுங்க அது என்று அமைதியாகி விட.
“மேடம்க்கு இன்னும் கோவம் போகவில்லையோ” என்றான்.
அவள் அமைதியாக இருக்க உன் கிட்ட தாண்டி பேசிட்டு இருக்கேன் என்றான்.
அவனது குரல் குழைவாக தான் இருந்தது. இதுவரை அவள் பார்த்திடாத குரலும் கூட தான்.
அன்று தன் அம்மா ,அப்பாவுடன் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்லும் போது அவன் தன்னிடம் பேசிய அதே வருத்தம் தோய்ந்த குரல் என்பதை உணர்ந்தாள் .
“உங்களுக்கு வேலை இருக்கா” என்று கேட்டாள் .”இல்லடி .ஏன் ?”
கொஞ்சம் இருங்க நான் கூப்பிடுறேன் என்று விட்டு போனை வைத்து விட்டாள் .
நந்தாவிற்க்கு தான் சப் என்று இருந்தது.
இவளுக்காகவே தான் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்திருக்க .
இவளிடம் பேசலாம் என்று எண்ணினால், இப்படி போனை வைத்து விட்டாளே என்று ஆதங்கத்தில் ரூமில் நடந்து கொண்டு புலம்பி கொண்டிருந்தான்.
அப்பொழுது “உள்ளே வந்த உதயா கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம் மாமா வா “என்றான்.
எனக்கு வேலை இருக்கு நீ போயிட்டு வா டா என்று நந்தா கோவமாகவே சொல்ல.
தன் மாமாவை பார்த்து சிரித்தவன். “தியாவை பார்க்க போலாமா வரியா ?”எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கு என்று சொல்ல.
இந்தா பிரெஷ் ஆகிட்டு வரண்டா மச்சான் என்றான்.
தன் மாமாவை பார்த்து சிரித்தவன் எதுவும் பேசாமல் ஹாலுக்கு வர .
தேவியிடமும் சொல்லிக்கொண்டு தன் மாமா வந்தவுடன் தன் மாமாவை அழைத்துக் கொண்டு இருவரும் வெவ்வேறு வண்டியில் தியாவின் வீட்டிற்கு சென்றார்கள் .
தியா தான் நந்தா விடம் பேசிவிட்டு போனை வைத்தவள் .உதயாவிற்கு ஃபோன் செய்திருந்தாள்.
அண்ணா கொஞ்சம் “அவரை கூப்பிட்டு வீட்டுக்கு வரீங்களா ?” நாம வெளியே போயிட்டு வரலாம் எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சொல்லி இருக்க.
அதை தேவி இடமும் சொல்ல .தேவியும் சரிடா அவனை கூப்பிட்டு போ.
அவனுமே ஒரு மாதிரி தான் இருக்கான் என்று சொல்ல .
சரி என்று விட்டு தான் நந்தாவை அழைக்க சென்றான் .
இருவரும் தியா வீட்டிற்கு போய் இறங்க .
கண்ணன் அப்பொழுதுதான் வேளையில் இருந்து வந்து டீ குடித்து கொண்டிருந்தார் .
இருவரையும் பார்த்தவர் எழுந்து நின்று வாங்க என்று வரவேற்க.
தியா இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு தண்ணி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க .
அம்மா எனக்கு நைட்டு சாப்பாடு வேணாம். நாங்க மூணு பேரும் வெளியே போறோம் .
வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் என்று சொல்லிக்கொண்டு தனது புத்தகத்தை ஓர் இடத்தில் எடுத்து வைத்தவள் .
உள்ள டிரஸ் மாத்த சென்று இருக்கு நந்தா தன் மச்சானை திரும்பிப் பார்த்தான் .
அவன் கண்ணை மூடி திறக்க.வேற எதுவும் பேசாத நந்தா மலரிடம் நான் கொஞ்சம் தியாவை வெளியே கூப்பிட்டு போறேன் என்றான் .
மலர் கண்ணனை பார்க்க. கண்ணன் சரி என்று கண்ணை மூடி திறந்தவுடன் மலரும் சரி தம்பி என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்
நான் போயிட்டு வந்துடறேன் என்று விட்டு வெளியில் சென்றாள் .
ஒரே பைக்ல போலாம் அண்ணா என்றாள்.
உதயா நந்தாவை பார்க்க .அவன் கண்ணை மூடி திறந்தவுடன் நந்தா வண்டி ஓட்ட .
தியா நடுவில் உட்கார்ந்து கொள்ள உதயா பின்னாடி உட்கார்ந்து கொண்டான் .
மூவரும் ஒரு ஹோட்டலை நோக்கி செல்ல.
“டேய் அக்காவுக்கு போன் செய்து நாம போகும் ஹோட்டல்க்கு வர சொல்லு “என்றான்
“தியா முந்திக்கொண்டு நான் ஏற்கனவே பெரியம்மா விடம் சொல்லிட்டேன்”.
நாம எப்பையும் போற ஹோட்டலுக்கு போகலாம் என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
கண்ணாடி வழியாக தியாவை பார்த்து சிரித்து விட்டு மனதிற்குள் அவளை எண்ணி மெச்சி கொண்டான்.