தேவராஜன் கமிஷனராக பதவியேற்றதும், டெல்லியில் நடந்த காவல்துறை கலந்தாசனைக் கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக சென்றிருந்தான். மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தின் இறுதி நாள் அன்று அனைவரிடமும் பேசிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான்.
அங்கிருக்கும் பாருக்கு சென்று கொஞ்சம் குடித்துவிட்டு போதை ஏறியதும் தனது அறைக்கு செல்வதற்கு லிஃப்டில் ஏறினான்.
இவன் ஏறும் பொழுது ஒரு ஜோடியும் ஏறினார்கள். அருகில் ஆள் நிற்பதை கூட உணராமல் முத்தப் பரிமாற்றம் செய்து கொண்டு இருந்தார்கள். “சை” என்று தன் தளம் வந்ததும் கதவு திறக்க, அவன் வெளியேற, அவன் கூடவே அவ்விருவரும் வெளியே வந்து, அருகில் இருந்த அறைக் கதவை வேகமாக திறந்து உள்ளே சென்றார்கள்.
தனது அறைக்கு வந்து கதவை திறக்கும் பொழுது, தேவராஜனின் காதில் எதிர் அறையில் இருந்து, ஏதோ விசித்திரமான சத்தம் கேட்டது. முதலில் அலட்சியம் செய்த தேவராஜனால், பின்னர் கேட்ட சிறுமியின் குரலால், காலம் தாமதிக்காமல் கதவை உதைத்து திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
அப்பொழுது ஒரு பெண், அரைகுறை ஆடைகளுடன் இருந்த இரு ஆண்களை போட்டு அடித்துக்கொண்டு இருந்தாள்.
அருகில் ஒரு பதினைந்து வயதிற்குள் இருக்கும் பெண் பிள்ளை அரைகுறை ஆடையுடன் பயந்து நடுங்கிக் கொண்டு சுவற்றுடன் ஒன்றி உட்கார்ந்திருந்தாள்.
திடீரென்று தங்கள் அறைக்குள் போலீஸ் உடையுடன் வந்தவனைக்கண்டு அப்பெண் திகைக்க, இரு ஆண்களும் காவல் உடையை கண்டதும் “சார் எங்களை காப்பாத்துங்க” என்று அவனின் காலை பிடித்துக் கொண்டார்கள்.
அவர்கள் ஹிந்தி மொழியில் பேசினார்கள். அதன் பிறகு உரையாடல்கள் ஹிந்தி மொழியில் இருக்க நமக்காக தமிழில்.
“யாருடா நீங்க? எதற்கு அந்த பெண் உங்களை போட்டு அடிக்கிறாள்?” என்று அந்த இளைஞர்களை பார்த்து கேட்ட தேவராஜன், அங்கிருந்த பெண்ணிடம் “நீ யார்? எதற்காக இவர்களை அடிக்கிறாய்? அந்தப் பெண் யார்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டே கட்டிலில் இருந்த போர்வையை எடுத்து அச்சிறுமிக்கு போர்த்தினான்.
அவர்களை போட்டு அடித்துக் கொண்டிருந்த பெண், “நான் ஒரு கால் கேர்ள்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “இவர்கள் இந்தப் பெண்ணை நாசம் செய்ய பார்த்தார்கள்” என்று அச்சிறுமியை காண்பித்தாள்.
“ஆமா, நீ யாரு? உன்ன இதுக்கு முன்னாடி இங்க பார்த்ததில்லையே? புதுசா வேலையில ஜாயின் பண்ணி இருக்கியா?” என்று தேவராஜனிடம் கேள்வி கேட்டாள் அந்தப் பெண்.
அவள் கேட்டதும் அவனுக்கு கோவம் வர, “ஏய்” என்று அவளை அடிக்க கையோங்கிவிட்டான்.
“சும்மா அடிக்காத வராத சார். எத்தனை பேரை பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே உனக்கு கோபம் வரணும்னா? இவனுங்க மேல தான் வரணும்!” என்று அந்த இளைஞர்களை காண்பித்தாள்.
அதன்பிறகு தான் அவர்களைப் பார்த்தான். காவி கரை படிந்த பற்களுடன் செம்பட்டை தலையுடனும் போதையில் தள்ளாடியபடி நின்று இருந்தார்கள். அவர்களிடம் விசாரிக்க அந்த சிறுமியை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக கூறினார்கள். “இடையில் இந்த சோனா வந்து எங்களை இப்படி அடிக்கிறாள்” என்று அந்த விலைமாதுவை காண்பித்தார்கள்.
“ஓ உன் பெயர் சோனா வா?” என்று கேட்ட தேவராஜன் அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டான். உடனே அங்கு வந்த இன்ஸ்பெக்டரிடம், இருவரையும் கைது செய்யும்படி சொல்ல, அவர்கள் சோனாவை பார்த்து “என்ன சோனா இது? எது என்றாலும் என்னிடம் சொல்லி இருக்கலாமே!” என்று அந்த சிறுமியை அழைத்துச் செல்ல பார்த்தான்.
அவனை தடுத்த சோனா “அந்த ரெண்டு தடிமாடுகளை மட்டும் நீ பார்த்துக்கோ. இவளை நான் பார்த்துக்கிறேன். நீ கிளம்பு” என்று அதிகாரமாக கூறினாள்.
அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் “இல்ல சோனா. பிரச்சனை ஆகும். நானே பிள்ளையை அங்கேயே ஒப்படச்சிடுவேன்” என்று சொல்ல,
“சீ உன் வேலைய பாத்துட்டு கிளம்பு. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்” என்று இன்ஸ்பெக்டரை பேசி அனுப்பி விட்டாள்.
அதன் பிறகு யாருக்கோ அவள் ஃபோன் செய்ய நான்கு ஆடவர்களுடன் ஒரு பெண்ணும் வந்தாள்.
அவர்கள் வந்ததும் அந்த சிறுமியை விசாரிக்க, சிறுமிக்கோ இவர்கள் பேசும் பாஷை புரியவில்லை. ஒவ்வொரு மொழியாக கேட்டு கடைசியில் தெலுங்கு மொழியில், “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? இவர்களிடம் எப்படி சிக்கினாய்?” என்றாள் சோனா.
அவள் தெலுங்கில் பேசியதும், சிறுமியின் முகம் பிரகாசிக்க, தெலுங்கானாவின் ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி வீட்டு வேலைக்கு வேண்டும் என்று அவர்கள் ஊரில் இருந்த சிறுமிகள் சிலரை அழைத்துக் கொண்டு வந்தார்கள் என்றும், அதில் இவளை இந்த இரு ஆண்களுடன் அனுப்பிவிட்டதையும் கூறி அழுதாள் அச்சிறுமி.
“மீண்டும் வீட்டிற்கு செல்கிறாயா?” என்றாள் சோனா.
அதற்கு அச்சிறுமியும் “அங்கு சென்றால் அவர்கள் மீண்டும் இங்கே அழைத்து விடுவார்கள். எனக்கு ஏதாவது வீட்டில் வேலை வாங்கி கொடுங்கள். நான் வீட்டு வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்” என்று அழுத சிறுமியை ஆறுதல் படுத்திய சோனா, சிறிது நேரம் யோசித்து தன்னுடன் வந்த பெண்மணியை நோக்கி “சரி காஜல், நீ இவளை நம்மிடத்திற்கு அழைத்துச் செல். பிறகு பார்ப்போம் என்று சொல்லிவிட்டு, அந்த நான்கு ஆடவர்களையும் பார்த்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் அவள் ****** அவர்கள் கையில் கிடைக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு பத்திரமாக அனுப்பி வைத்தாள்.
சோனாவின் ஆளுமை நிறைந்த நடவடிக்கையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தேவராஜன், “அனைவரும் சென்றதும் அவளிடம் இங்கு நடப்பவற்றைப் பற்றி கேட்டான்.
சோனாவும் “நீ போலீஸ் என்பதற்காக உன்னிடம் சொல்லவில்லை. ஒருவேளை உனக்குள் ஒரு நல்லவன் இருந்தால், பல பெண்களை காப்பாற்றுவாய்! என்று நினைத்து சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “என்னை சிறுவயதில் என் அப்பா தான் இந்த தொழிலில் கொண்டு வந்து விட்டான். இங்கு என்ன நடக்கும் என்று ஆ முதல் அஃகு வரை எனக்குத் தெரியும். அதனால் தான். பாவம் சின்ன பிள்ளைகளை என்னால் முடிந்த வரைக்கும் காப்பாற்றுவேன்” என்றாள்.
“உன்னால் எப்படி காப்பாற்ற முடியும்? நீயும் அவர்களில் கட்டுப்பாட்டில் தானே இருப்பாய்?” என்று சந்தேகமாக கேட்க,
“ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன். வருடம் ஓட இந்த ஆண்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு இந்த உடம்பு எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டேன். அதன்படி என் உடம்பை நான் பாதுகாத்துக் கொள்ள எனக்கு மவுசு ஏறியது.
ஊரின் பெரிய புள்ளிகளை எல்லாம் என்னைத்தான் கேட்கிறார்கள். அதனால் எனக்கு அங்கு தனி மரியாதை. என்னை பகைத்துக் கொண்டால் அவர்களது வருமானம் போய்விடும் அல்லவா?” என்று இளக்காரமாக சிரித்துவிட்டு, “என்னை போல் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் ஒன்று கூடி இனிமேல் யாரும் எங்கள் கண்முன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று முடிவு செய்தோம்.
இப்பொழுது வந்த நான்கு ஆண்களுமே ஒரு காலத்தில் இங்கு கஸ்டமராக வந்தவர்கள் தான். ஆனால் கொஞ்சம் நல்லவர்கள். துணை இருக்க எங்களைத் தேடி வரவில்லை, துணையை இழந்ததால் வந்தவர்கள். ஆகையால் அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.
இதைப் போல இங்கு வரும் சின்ன பெண்களை காப்பாற்றி, அவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் ஊருக்கே அனுப்பிவிடுவோம். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் அவர்களை இங்கே அனுப்பி இருந்தால், அவர்களுக்கு தேவையான படிப்பையும், வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலையையும், ஏற்படுத்திக் கொடுப்போம். இதை நான் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது. இதுவரை நிறைய சிறுமிகளை காப்பாற்றி உள்ளோம். சிலர் படித்து போலீஸ் ஆகவும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியுடன் இது மேலும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது” என்று விரிவாக பேசிமுடித்தாள்.
“இதை எப்படி உங்களால் செய்ய முடியும்? அவர்களின் பலம் அதிகமாயிற்றே” என்று சந்தேகமாக கேட்டான் தேவராஜன்.
“அவர்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் பலகீனமானவர்கள் தான். அவர்களிடமிருந்து நாங்கள் எங்கள் உடலாலேயே தப்பித்து விடுவோம்” என்று கூறி விட்டு, “இவ்வளவு கேள்வி கேட்கிறாய் என்றால், உனக்கும் நான் தேவையாக தான் இருக்கிறேன் என்ன சொல்ற? அப்படி தானே?” என்று அவனிடம் அலட்சியமாக கேட்டாள் சோனா.
அவனும் புன்னகையுடனே “பரவாயில்லை நன்றாகத்தான் ஆண்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாய்!” என்று கூறி அவளின் இடையைப் பற்றி தன்னுடன் நெருக்கி அணைத்து அவளின் இதழில் முத்தம் கொடுத்து தன் தேடலை தொடங்கினான்.
இத்தனை நாளும் ஏதோ ஒரு வெறியில் பெண்களை நாடியவன், இன்று அவளின் செயலில், அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசையில் அவளிடம் நெருங்கினான். தேவை முடித்து அவளை தன் மார்பின் மேல் போட்டு அணைத்தபடி படுத்து, அவளது தலை முடியை கோதிக்கொண்டு, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டான்.
அவனின் மென்மையான அணுகு முறையில் ஆச்சரியப்பட்டு போனாள் சோனா. இதுவரை அவளிடம் வந்த ஆண்கள் அனைவரும் தன் மனைவியிடம் செய்ய முடியாததை எல்லாம் தங்களைப் போல் உள்ள பெண்களிடம்தான் நிறைவேற்றிக் கொள்வார்கள். அப்படி இருக்க தன்னை மென்மையாக கையாண்டு விட்டு, இப்பொழுது திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்பவனை விசித்திரமாக பார்த்தாள் சோனா.
அலட்சியமாக சிரித்துக்கொண்டு அவனின் மேல் ஏறி படர்ந்து “இதற்காகத்தானே திருமணம் செய்ய நினைக்கிறாய்? என்றாள்.
அவளின் செயலை தன்வசம் ஆக்கிய தேவராஜன், “இதற்காக மட்டுமல்ல, உன்னை என்னுடனேயே வைத்துக் கொள்ளும் ஆசையில் தான் கேட்கிறேன்” என்று அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.
“இங்கே பாரு சார். உன்னை பார்க்க நல்லவர் போல் தெரிகிறது. உனக்கு என்னை போல் பெண் வேண்டாம். ஏதாவது நல்ல குடும்பத்தில் இருந்து நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்து நல்லா இருங்க” என்றாள் முதல் முறை மரியாதையாக.
இவ்வளவு நேரம் அவள் பேசிய பேச்சுக்கும் இப்பொழுது அவர் பேசிய பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்ட தேவராஜன், “உனக்கு என்னை பிடித்திருக்க தானே செய்கிறது. வா! நாம் இப்பொழுதே திருமணம் செய்து கொள்வோம்” என்றான் பிடிவாதமாக.
புன்னகையுடன் “ஏதோ வேகத்தில், என் மேல் இருக்கும் மோகத்தில் இப்படி கேட்கிறீர்கள். விடிந்ததும் போதை தெளிந்து பின்னரும் என் நினைப்பு இருந்தால், நானும் இங்கு இருந்தால், அப்பொழுது திருமணத்தைப் பற்றி யோசிப்போம்” என்று சொல்லி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சோனா.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
ரொம்பவே பாவம் தான் சோனா மாதிரி பெண்களோட நிலைமை.
நன்றி மா 😊😊😊😍
Than intha nilamaila irukomnu vera chinna ponunga matikama kapathi vidura nalla manasoda sila aambalainga ippadi vanthalum oru silar athula ethana nallathu pana mudiumanu pathu panranga
நன்றி மா 😊😊
ரொம்ப நல்லபெண்… தந்தையே இப்படி செய்வது நினைத்தாலே கோவம் தான் வருகிறது
நன்றி நன்றி 😊😊
Nice going
Nice epi