Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 8

முகப்பு இல்லா பனுவல் – 8

தேவராஜனின் பின்னாடியே வந்த விசுவும் “என்னடா இப்படி பண்ற? ஏன் இவ்வளவு அவசரம்?” என்றான். 

“ஏற்கனவே காலம் ரொம்ப ஓடிருச்சு விசு. இனியும் தாமதிக்க கூடாது டா” என்று சொல்லிவிட்டு, “சரி இன்று உனக்கேதும் வேறு வேலை இருக்கிறதா?” என்றான். 

நண்பனை தயக்கமாக பார்த்துக் கொண்டு”இல்லடா. எதுவும் வேலை இல்லை” என்று தயங்கினான். 

“டேய் வேலை இருந்தால் செல்லு என்கிட்ட சொல்லு. நான் தனியா போய் கொள்கிறேன்” 

“ஒன்றும் இல்லை டா. அவளை கூட்டிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போறேன் என்று சொல்லி இருந்தேன்” என்றான். 

சரி என்று சிறிது நேரம் யோசித்த தேவராஜன் “உன் ஒய்ஃப்க்கு போன் போட்டு என்கிட்ட கொடு” என்றான். 

“டேய் எது என்றாலும் சொல்லு. நானே பேசுகிறேன்” என்றான். 

“ஏன்? நான் பேசக்கூடாதா?” என்றதும் மறு பேச்சு பேசாமல் ஃபோன் செய்து தேவராஜன் பேச விரும்புவதாக கூறுகின்றான் என்று அவன் கையில் கொடுத்தான். 

ஃபோனை வாங்கிய தேவராஜன் “நாளை தன் தந்தைக்கு திருமணம் என்பதால் இன்று கொஞ்சம் அது சம்பந்தமாக வேலைகள் இருக்கிறது. அதற்காக விசுவையும் அழைத்துச் செல்வதாக கூறினான். மேலும் நாளை திருமணத்திற்கு நீயும் அவனும் வர கண்டிப்பாக வரவேண்டும்” என்று கூறி. “இன்று உன்னை அழைத்து கொண்டு வெளியே செல்வதாக கூறியிருந்தான் அல்லவா? இன்று ஒரு நாள் பொறுத்துக் கொள்மா” என்று அவளிடம் கூற அவளோ “இதில் என்ன இருக்கிறது அண்ணா?  பரவாயில்லை. நீங்கள் வேலையை பாருங்கள்” என்று கூறி வைத்தாள். 

தேவராஜன் பற்றி தன் மனைவியிடம் ஏற்கனவே அவன் கூறி இருந்ததால். அவன் கூற்றுக்கு அவள் மறுப்பு ஏதும் கூறவில்லை. 

ஜீப் ஐ ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லும்படி சொல்லிவிட்டு, நண்பனின் காரில் ஏறி முதலில் குழந்தை நல மருத்துவர் பெயர் கூறி அங்கு செல்லும்படி பணித்தான். 

ஏற்கனவே அவன் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்ததால், நேராக மருத்துவரிடம் சென்று வாசுகியை காண்பித்தான். “கிட்டத்தட்ட இரண்டு வயது இருக்கும். இன்னும் பேசுவில்லை” என்று கூறி அவள் வளர்ந்த இடத்தைப் பற்றியும் கூறினான். 

முழுவதையும் கேட்ட மருத்துவர் குழந்தையை முழுவதும் பரிசோதித்து விட்டு, “குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வளர்ந்த இடத்தின் சூழ்நிலையால் ஒருவேளை குழந்தை இப்படி இருக்கலாம். குழந்தையுடன் பேசிக் கொண்டே இருங்கள். விரைவில் பேச்சு வந்துவிடும்” என்று கூறி சில சத்து மாத்திரைகள் கொடுத்து சத்தான உணவை கொடுங்கள் போதும் என்று கூறி அனுப்பி வைத்தார். 

இரண்டு மணி நேரம் மருத்துவமனிலேயே கழிந்ததால், நேராக குழந்தையை அழைத்துக் கொண்டு ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு வந்தார்கள். 

இருவரும் உணவு உண்ண தேவராஜன் குழந்தை இடம் பேசிக் கொண்டே உணவு ஊட்டினான். குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் நெருங்கி விட்டது. “இன்னும் ஒரு வாய் தான் கண்ணா, அண்ணன் கொடுக்கிறத சமத்தா சாப்பிட்டாதான், அண்ணா உனக்கு பொம்மை, டிரஸ் எல்லாம் வாங்கி தருவேனாம். சரியா?” என்று குழந்தையிடம் கொஞ்சி கொஞ்சி பேசும் தேவராஜன் விசுவிற்கு புதுமையாக தெரிந்தான். 

உணவு உண்டு முடித்ததும் நேராக அவர்கள் மிகப்பெரிய ஜவுளி கடைக்கு தான் வந்தார்கள். முதலில் குழந்தைக்கு தேவையான உடைகளையும் குழந்தைக்கு விளையாடுவதற்கு பொம்மைகளையும் வாங்கி குவித்தான் தேவராஜன். 

“டேய் போதும்டா” என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு அவனின் செய்கைகள் இருந்தன. அதன் பிறகு காமாட்சிக்கும் அப்பாவிற்கும் திருமணத்திற்கான உடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். 

நேராகச் சென்று காமாட்சியிடம் குழந்தையையும் உடைகளையும் கொடுத்துவிட்டு, “நாளை காலை ஒன்பது மணிக்கு நான் வருகிறேன். தயாராக இருங்கள்” என்று சொல்லி கிளம்பினான். 

அவன் கிளம்பவும் இப்பொழுது குழந்தை அவனிடம் வரவேண்டும் என்று அவனைத் தூக்கச் சொல்லி கையை நீட்டியது. அதில் மகிழ்ந்த தேவராஜன் குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு, “குழந்தைக்கு பேசுவதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று மருத்துவர்கள் சொன்னதைக் கூறி, சத்தான உணவை கொடுக்க சொல்லி இருக்கிறார். தற்சமயத்திற்கு இந்த டானிக்கை கொடுத்திருக்கிறார் என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, “அவளுடன் பேசிக்கொண்டே இருங்கள் அம்மா. நாளை காலையில் அவள் உங்களை அம்மா என்று கூப்பிட்டு விடுவாள் பாருங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றான். 

குழந்தையின் மீதும் அவனின் தந்தையின் மீதும் பாசமாக இருக்கும் தேவராஜனை வியந்து பார்த்துக்கொண்டு இருந்தார் காமாட்சி. 

மறுநாள் தேவராஜன் சொன்னது போல் காலையில் வந்து விட்டான். அவன் வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டி தயாராக இருந்தார் காமாட்சி. வாசகிக்கும் அவளின் புடவை வண்ணத்திலேயே பாவாடை சட்டை எடுத்து இருக்க, பட்டுப்பாவாடை சட்டையில் குட்டி தேவதையாக தயாராகி இருந்தாள் வாசுகி. 

வந்ததும் தங்கையை தூக்கிக் கொஞ்சிய படியே “ஹாய் குட்டிமா. எப்படி இருக்கீங்க?” என்றான்.

அவனைக் கண்டதும் குழந்தையும் குதூகலமாக அவனிடம் ஒன்றி கொண்டது. குழந்தையின் முகத்திலிருந்து சந்தோஷம் காமாட்சியின் முகத்தில் இல்லை. ஏதோ குழப்பமாக அமர்ந்திருந்தார். அவரின் அருகில் வந்த தேவராஜன் “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றான். 

“நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியலையா சார்?” என்றார் காமாட்சியும். 

“அம்மா ப்ளீஸ். சார் மோர் எல்லாம் சொல்லாதீங்க. என் பெயர் தேவராஜன். நீங்கள் தேவராஜன் என்று கூப்பிட்டாலும், சரி தேவா என்றாலும், சரி ராஜா என்றால் சரி, இல்லை வேறு ஏதாவது செல்லப் பெயர் வைத்து கூப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் சரி, அப்படியே கூப்பிடுங்கள். நீங்கள் என் அம்மா, நான் உங்கள் பையன் அவ்வளவுதான்”

“நீங்க.. நீ, சொல்வதெல்லாம் சரிதான் பா. உன்னை என்னால் மகனாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால்?..” என்று தயங்கினார். 

“என்ன ஆனால்?”

“நீயே கொஞ்சம் நினைத்துப் பாரேன். வீட்டை விட்டு வந்து பத்து நாள் கூட ஆகவில்லை. அதற்குள் மற்றொரு கல்யாணம் என்றார்” விரக்தியாக. 

“உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் நிதர்சனத்தை கொஞ்சம் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அறையில் வாயிலை பார்த்து “உள்ளே வாங்க” என்றான். 

அவன் சொன்னதும் இருவர் உள்ளே வந்தனர். காமாட்சியின் கையில் சில பேப்பர்களை கொடுத்து கையெழுத்து இடும்படி கூறினார்கள். அவர் குழப்பமாக அவர்களையும் தேவராஜனையும் பார்த்தார். 

“அம்மா நான் ஒரு நேர்மையான அரசாங்க ஊழியன். அப்படி இருக்கும் பொழுது நான் எதையும் தவறாக செய்ய மாட்டேன். சில சட்ட திட்டங்களை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வேனே தவிர, தவறாக இதுவரை நான் எதுவும் செய்ததில்லை. அப்படி நேர்மையாக இருந்ததால் தான் எனக்கு அடிக்கடி பணியில் இட மாற்றமும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது”  என்றான். 

அவர் குழப்பமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, “இது உங்களுக்கான விவாகரத்து பத்திரம்” என்றான். 

அவர் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவரின் அதிர்ந்த முகத்தை கண்டு “என்ன அதிர்ச்சி அடையுறீங்க? அப்படி என்றால் உங்களுக்கு உங்கள் கணவனுடனே வாழ வேண்டும் என்ற ஆசையா?” என்றான். 

அவன் அப்படி கேட்டது அவன் முகத்தில் அருவருப்பு தோன்றியது. “ச்சை  இனிமேல் நான் அந்த மனிதனை என் கனவில் கூட நினைக்க விரும்பவில்லை” என்றார் வெறுப்பாக. 

“பின்ன என்ன? பத்திரத்தில் கையெழுத்து போடுங்கள்” என்றான். 

“அப்படியே நான் கையெழுத்து போட்டாலும், உடனே எனக்கு விவாகரத்து கிடைக்காதல்லவா? அதற்குள் நான் மறுமணம் செய்து விட்டேன் என்றால், அவர்கள் வீட்டில் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். அதை நீ புரிந்து கொள்ள மாட்டாயா?” என்றார் ஆதங்கமாக. 

அவர் கூறிய பின்பும் புன்னகைத்தபடி அமைதியாக இருந்தான் தேவராஜன். 

அவனின் அமைதியே அவர் கையெழுத்து போடாவிட்டால், எதுவும் சொல்ல மாட்டான் என்பதை புரிந்து கொண்ட காமாட்சி, அந்த பத்திரங்களை வாங்கி மடமடவென்று எங்கு கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டு, அனைத்திலும் கையெழுத்து போட்டு முடித்தார். 

அவர் கையெழுத்து இட்டதும் அனைத்து பேப்பர்களையும் சரிபார்த்துக் கொண்டு வந்தவர்கள் கிளம்ப, “நான் சொன்னபடி, இன்றே இந்த வேலையை முடித்து விடுங்கள்” என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, வாசுகியை தூக்கிக் கொண்டு காமாட்சியின் அருகில் வந்து அமர்ந்தான்.

“அம்மா ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும், என்னை பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நம் வாழ்க்கையை நாம் வாழ முடியாது.

நம் வாழ்க்கையை நாம் தான் முடிவு பண்ண வேண்டும். உங்களை திருமணம் செய்வதற்கு முன்பேயே உங்கள் கணவன் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டு தான் இருந்திருக்கின்றான். அதற்கு சாட்சி அவர்கள் குழந்தை அது உங்களுக்கு புரிகிறதா? என்று அவன் கேட்டதும் அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது. 

அப்படிப்பட்ட ஒருவனுக்காக நீங்கள் உங்கள் வாழ்நாளை இதுவரை வீணாக்கியது போதாது என்று, இனிமேலும் வீணாக்க போகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் உங்களை கட்டாயப்படுத்துகிறேன் என்று உங்களுக்கு தோன்றலாம். இல்லை உண்மையில் கட்டாயத்தான் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அதற்கு முக்கிய காரணம் உங்களை நான் பார்த்த அந்த நொடி எனக்குள் தோன்றிய ஏக்கம். 

நீங்கள் என் அம்மாவாக இருக்கக் கூடாதா? என்று தோன்றியது. அதன் பிறகு உங்களைப் பற்றி விசாரித்ததில், என்னை உங்கள் மகனாகவே நான் பாவித்து விட்டேன். அதனால் நீங்கள் கட்டாயம் என்னை மகனாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று உறுதியாக கூறி புன்னகைத்தான். 

அவனது பேச்சைக் கேட்டதும் காமாட்சிக்குள்ளும் தாய்மை உள்ளம் பெருக்கெடுக்க, இத்தனை காலம் அவர் இதற்காகத்தானே காத்திருந்தார். அவன் கூறிய விதத்தில் அவருக்கும் புன்னகை வந்தது. 

அவர் முகத்தில் புன்னகையை கண்டதும் திருப்தி அடைந்த தேவராஜன் “இனிமேல் உங்கள் வாழ்க்கை நிச்சயம் நீங்கள் ஆசைப்பட்டபடியே அழகாக இருக்கும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன் அம்மா” என்று அவரை தோளுடன் அணைத்துக் கொண்டான். 

“அவனைப் பார்த்து நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால்” என்று மீண்டும் தயங்கினர். 

“அம்மா என்னை முழுதாக நம்புங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும். வாழ்க்கை எப்படி போகிறதோ அதன்படியே நாமும் போகலாம். எந்தவித குழப்பமும் இல்லாமல் வாருங்கள். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் எந்த தவறும் நடக்காமல் இருப்பதற்கு என்னால் முழு உத்தரவாதமும் கொடுக்க முடியும். தயவு செய்து என்னை நம்பி என்னுடன் வாருங்கள் அம்மா” என்று ஏக்கமாக கேட்டான் தேவராஜன்

அவனைப் பார்த்ததும் முழுவதும் நம்பிக்கை தோன்றியது காமாட்சிக்கு. அவன் கூறுவதும் சரிதானே! இவ்வளவு நாள் தன்மீது சிறிது கூட பாசமோ? காதலோ? அன்போ? இல்லாத குடும்பத்தில் மாடாய் உழைத்திருக்கின்றேன். 

இப்பொழுது எந்தத் தம்பி பாசமாக கூப்பிடுகிறது. அவர் சொல்வது போல் வாழ்க்கையின் ஓட்டத்திலேயே, இனிமேல் என் வாழ்க்கை பயணிக்கட்டும். எல்லாம் கடவுள் விட்ட வழி என்று கடவுளின் மீது முழு பாரத்தையும் போட்டு தேவராஜனின் பின் தொடர்ந்தார் காமாட்சி.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

6 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *