ஆலி-28
சைதன்யன் சிலைக்கு பேச்சு வந்தது.
“சாகட்டும் அங்கிள்… இரண்டு பேருமே.. எனக்கு ஒருத்தனை காப்பாற்றி இன்னொருத்தனை பிழைக்க வைக்கணும்.
இவன் இறந்தா அவன் என்னை மன்னிக்க மாட்டான் அங்கிள். ஒர் பார்வை பார்ப்பான் அங்கிள் உயிரை உருவிடும்.” என்று வெடித்து அழுதான்.
“சைதன்யன்…”
“வேண்டாம் அங்கிள். இவன் இதயம் அவனுக்கு வேண்டாம்.” என்று அரற்ற, அறைநிலையிலும் மேலாக தருணேஷ் உயிர் அந்தரத்தில் ஊஞ்சலாட, “இடியட்… செத்தபிறகு பீல் பண்ணினா இதயம் கிடைக்காது டா.” என்று கஷ்டப்பட்டு பேசினான்.
தருணேஷ் மீண்டும் “என்ன என் இதயத்தை அவனுக்கு பொருத்தினா அந்த இதயம் உன்னை அண்ணானு அழைக்கும். என்ன செய்ய எனக்கு உன்னை அப்படி கூப்பிடவே பிடிக்காது.” என்றான்.
அதற்கு சைதன்யனோ, “இங்க பாரு டா loser. எழுந்து வா. உன் தம்பி அங்க எப்படி இருக்கான்னு பாரு. என்னிடம் பேசலை டா. என்ன கேள்வி கேட்டான். உனக்கு தெரியுமா?
இங்க பாரு… மரியாதையா எழுந்து வந்து என்னிடம் மோது. நான் ஜெயிச்சுட்டே இருக்கேனு சொல்லற. வந்து பாரு அங்க சாகயிருக்கிற என் தம்பி ருத்ரேஷ் உன்னை தான் தேடினான். அவன் மனசுல நீ அண்ணாவா நிற்கற. அதை உடைச்சிட்டு போ.
கதவுக்கு வெளிய வருணிகானு ஒரு பொண்ணு அழுதுட்டு இருக்கா. இரத்தபந்தம் இல்லை. சொந்தமில்லை பந்தமில்லை. உன்னோட பலவருஷம் வாழலை பழகலை. பட் நீ உயிரோட வரணும்னு வேண்டறா. அவன் அண்ணாவோட பைட் பண்ணி நீ வேண்டும்னு நிற்கறா. அவ உள்ளத்தை ஜெயித்திருக்க, தப்பு டா.
அவள் மனதில் நீ டிரக் அடிட்னு சொல்லு புரியவை.
புரிஞ்சுதா… எல்லாருக்கும் உயிரோட வந்து புரியவை.” என்று உலுக்கினான்.
தருணேஷ் உடல் அதிர பேச துடித்து உதறியது. சுந்தர் சைதன்யனை வெளியே அனுப்பி மற்றொரு டாக்டரை அழைத்தார்.
ப்ரியங்கா தற்போது கண்விழித்து டாக்டரிடம், “தருணேஷ் முடிவு இதயத்தை ருத்ரேஷுக்கு வையுங்க” என்று உடைந்தழுதாள்.
சைதன்யன் அதை கேட்க பார்க்க திறனின்றி வேறுபக்கம் திரும்பி கொண்டான்.
ஒர் பக்கம் ஸ்டக்சரிலில் ருத்ரேஷ் வார்டில் அந்த உயிர் அனுமதிக்கப்பட்டது.
இமயன் சட்டையில் இரத்தக்கறை இருக்க, தன் இரு கையிலும் க்ளவுஸ் அணிந்து ஆப்ரேஷன் அறைக்கு விரைந்தான்.
இமயன் வந்து விட்டான் என அந்த தளம் பரபரப்பாக இயங்கியது.
சைதன்யன் உடைந்து அமர்ந்துவிட்டான். ப்ரியங்கா இப்பொழுதே பாதி பிணமான நிலையில் கிடந்தாள். பிள்ளைகள் இரண்டும் பேதம் பார்க்க முடியுமா. இரண்டுமே தன் வயிற்றில் பெற்றெடுத்தவளாயிற்றே. கண்ணீர் சுரந்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.
சைதன்யனுக்கு தருணேஷ் தன்னிடம் மோதும் நேரமெல்லாம் வந்து வந்து போனது.
ஒவ்வொருவரும் தங்கள் பேசயியலாது மௌனமாக கண்ணீரோடு துடித்தனர்.
வருணிகா கண்ணில் பொட்டு கண்ணீர் இல்லை. அவளுக்கு இந்த இடைப்பட்ட நாட்களில் பூத்த காதல் இத்தனை விரைவாக சென்றதில் பிரம்மையாய் கிடந்தாள்.
அதீத சோகம் அழுகையை விட பலத்த நிசப்தம் தந்து வெறித்த நிலைக்கு தள்ளிவிடும். இதற்கு மேல் என்ன வாழ்க்கை இருக்கு. நான் வாழ என்பதாக அவள் முகம் இறுகி போயிருந்தது.
பலமணி நேரம் பல யுகங்களை வலிகளை தைத்து தன்னை அழுத்துவதாக இருந்தது.
ஆப்ரேஷன் கதவு திறக்கவும் அந்த நிசப்தமான இடத்தில் அந்த சிறு சப்தமும் பெரும் ஓசையாக எழும்பியது.
டாக்டர் இதய நிபுணன் இமயன் ஆப்ரேஷன் அறையிலிருந்து வெளிவந்து தன் கையுறையை கழட்டி, முகம் பொத்தி அழ ஆரம்பித்தான்.
சைதன்யனுக்கு புரியாமல் அருகே வந்து நின்றான்.
“Your brother is completely healed. Take care for a while and see.” என்றவர் சைதன்யன் பேச வரவும் வேகமாக எழுந்து சென்றுவிட்டார்.
சைதன்யன் அப்போ தருணேஷ்? என்று அதிர்ந்து திரும்ப, தலையில் பெரிய கட்டு கட்டி தருணேஷ் நடந்து வந்தான்.
“சார் உங்களை அங்க தானே இருக்க சொன்னாங்க. என்ன பண்ணறிங்க.” என்று கத்தினாலும் நர்ஸ் தாங்கிப்பிடிக்க ஓடி வந்தாள்.
சைதன்யன் நிம்மதி என்றால் என்ன என்று அக்கணம் உணர்ந்தான். அகமேந்தி ப்ரியங்காவை உலுக்கி அங்கே காட்ட, தருணேஷை கண்டு வெடித்து அழுதார்.
வருணிகாவோ ஓடிச்சென்று அவனை இறுகப்பற்றி அணைத்துக் கொண்டாள்.
தருணேஷ் எதிர்பார்க்காத இன்பதிர்ச்சி.
“டூ யூ லவ் மீ.” என்றான்.
ஆம் என்பதாய் தலையசைத்து அணைத்துக் கொண்டாள்.
சைதன்யனுக்கு தற்போது ருத்ரேஷ் நிலை என்ன என்றறிய, நர்ஸிடம் கேட்டான்.
“ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணியாச்சு சார் ஐசியூல வைத்து இரண்டு நாள் கழித்து நார்மல் வார்டுக்கு மாற்றிடுவோம்.” என்று சொல்லி செல்ல முயன்றவளிடம் சைதன்யன் “ஹார்ட் எப்படி?” என்று தயங்கினான்.
“சார் உங்களுக்கு தெரியாதா இமயன் சார் தான் ஒரு பெண் பிரைன் டெத் ஆகிட்டவங்களை கூட்டிட்டு வந்தார். அவரே ருதேரேஷுக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணிட்டார்.” என்று கூறினாள்.
“நான் இமயனை பார்க்கணும். யார் இதயம் தானம் செய்தது? அவங்க உறவினருக்கு ஒர் நன்றியை செலுத்தணும்” என்றதும்
“சார்… இமயன் சாருக்கு தெரிந்த பெண் இறந்துட்டாங்க. அவருக்கு நெருக்கமான உறவுனு நினைக்கிறேன். சார் உடனே கிளம்பிட்டார். மற்ற விவரம் எனக்கு எதுவும் தெரியாது.” என்றதும் சைதன்யன் ருத்ரேஷ் கண்ணாடி வழியே பார்த்து நிம்மதியடைந்தான்.
அந்த நேரம் டாக்டர் சுந்தர் வரவும், “என்னாச்சு அங்கிள். நீங்க தருணேஷ் பிழைக்க வாய்ப்பில்லை சொல்லி ருத்ரேஷுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளேட் பண்ணணும் சொன்னிங்க. பட் தருணேஷ் ரெக்கவர் ஆகியிருக்கான் சந்தோஷம். இனி பிரச்சனையில்லையே. ருத்ரேஷுக்கு எப்படி சடனா ஹார்ட் கிடைத்தது. டாக்டர் இமயன் வந்து அவரோட உறவில் ஒர் பொண்ணு ஹார்ட் கொடுத்ததா நர்ஸ் சொன்னாங்க.” என்று பேசவும் கூடயிருந்தவர்களும், அதே கேள்வியில் பதிலுக்காய் காத்திருந்தனர்.
“நமக்கு மேல ஒருவன் இருக்கான் சைதன்யன். அவனுக்கு தான் எந்த உயிர் எப்ப இந்த உலகத்தில் இருந்து எடுக்கணும்னு தெரியும். நாங்க சாதரண டாக்டர்.
நீ இமயனுக்கு ஏற்கனவே உன் தம்பி நிலையை சொன்னதால அவர் தெரிந்தவரிடம் சொல்லியிருர்தார். பிரைன் டெத் ஆனவங்களை உடனே காண்டக்ட் பண்ண சொன்னார்.
பட் அன்பார்சலி இமயனுக்கு தெரிந்த பெண் இறக்கவும், உங்க வாய்ஸ் மெஸேஜ் கேட்டதும் நேரம் கடத்தாம அந்த பெண்ணோட இதயத்தை உடனே இங்க ருத்ரேஷுக்கு பொறுத்த வந்துட்டார்.
முதலில் பொறுத்த டெஸ்ட் எல்லாம் பார்த்து முடிச்சி, நேரத்தை கடத்தலை.
தருணேஷ் மருந்து போட்டுட்டு நர்ஸை கவனிக்க வைத்துட்டு டியூட் டாக்டரை பார்க்க சொல்லிட்டு போனேன். காட் கிரேஸ் இரண்டு பேரும் இப்ப பிழைச்சாச்சு.” என்று சென்று விட்டார்.
(இமயன் என் அடுத்த கதையில் வருபவன். சின்னதா இங்க இன்ட்ரோ அவ்ளோ தான். அதை வைத்து இந்த கதையில் குழப்பம் வேண்டாம். இந்த கதையை பொறுத்தவரை இமயன் தனக்கு தெரிந்த பெண் இறக்க, அவளோட இதயத்தை இங்க ருத்ரேஷுக்கு தானமாக பொருத்திவிட்டான் அவ்வளவே)
2வாரம் சென்றப்பின்…
இரண்டு வாரம் கடந்திடவும், ருத்ரேஷ் ஆஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு செல்ல கிளம்பினான்.
படியில் நடந்து வரவும் சின்னதாய் தடுக்க, சைதன்யன் ஓடிவந்து தாக்கி பிடிக்க, அவனின் கையை உதறி தள்ளினான்.
சைதன்யனுக்கு புதிதா. இங்கு ருத்ரேஷ் கண்விழித்து மருத்துவமனையில் பார்க்க வந்தவனிடம் பேசாமல் தவிர்த்தான். பிறகு நார்மல் வார்டில் வந்தபிறகும் அகமேந்தியிடம் பேசுமவன் தன்னிடம் தள்ளி செல்கின்றான்.
தருணேஷிடம் இயல்பாக கதைத்தான்.
ருத்ரேஷுக்கு இந்த பெரியவர்களின் காரண காரியம் இன்னமும் தெரியாததால் எட்டி நிறுத்தினான்.
ப்ரியங்காவுடனும் பேசாமல் தான் இருந்தான். அகமேந்தி தான் பார்த்து பார்த்து அவனுக்கு உணவை ஊட்டினாள்.
“அண்ணி தினமும் என்னை பார்க்க ஒர் அக்கா வர்றாங்களே அவங்க யாரு.” என்று கேட்டதும் அகமேந்தி சிரித்து விட்டாள்.
“ஹலோ பாவம் சின்னப் பையன் தெரியாம கேட்கறான் சொல்லலாம்ல. அதை விட்டுட்டு சிரிப்பை பாரு.” என்று தருணேஷ் தன் பேண்டேஜ் காலோடு ஹாலுக்கு வந்தான்.
ப்ரியங்கா தருணேஷ்க்கு உதவ வந்து அமர வைக்கவும், “லவ் யூ அம்மா.” என்றான்.
ப்ரியங்கா இதை கேட்காமல் இரண்டு வருடம் சென்று விட்டதே என்றாலும் மீண்டும் அழைக்க மகிழ்ந்தார்.
“அதுவா ருத்ரேஷ்… நீ புத்திசாலி ஆச்சே… கண்டுப்பிடி. சிலர் எல்லாம் ரூம்லயே உட்காந்ந்து ரூம் அதிர பாட்டு கேட்கறவங்க அந்த அக்கா வரவும் சைலண்டா மியூசிக் வைச்சிட்டு ஹாலுக்கு கஷ்டப்பட்டு வர்றாங்க அதெல்லாம் நோட் பண்ணலையா நீ.” என்று இடிக்கவும் ருத்ரேஷ் தருணேஷை பார்க்க அவனோ பேப்பரை தலைக்கீழாக வைத்து அய்யோ எமபாதகி என்னை மாட்டிவிடறா. என்று சலித்துக் கொண்டான்.
அகமேந்தி சைதன்யன் அலுவலகம் சென்றப்பின் இங்கு ருத்ரேஷிடம் பேச வந்திடுவாள்.
முன்பு மாதிரி தருணேஷ் அவன் வீட்டில் தங்கவில்லை. தன் தாயோடு தம்பி ருத்ரேஷோடு தங்க எண்ணி கூடவே வந்துவிட்டான். என்ன சில நேரம் அகமேந்தியை தர்மசங்கடமாக நோக்குவான்.
அவளோ, “என்னடா…?” என்றாலே “ஒன்றுமில்லை.” என்பான். மனதிலோ ‘உன்னிடம் எல்லாம் அந்த மாமனிதன் எப்படி தான் வாழறானோ. என்னமா மிரட்டுது நம்ம வருணி தான் சாப்ட் கேர்ள்’ என்று எண்ணும் நேரம் நங்கென்று தலையில் கொட்டி மாத்திரையை நீட்டினாள்.
‘நீ சாப்ட்னு நினைச்சேன் பாரு. பேச்சுலர் வாழ்வே சூப்பரா இருந்திருக்கும்.’ என்று நினைக்க, “ஏதாவது பேசின?” என்பாள் வருணிகா.
அப்பாவியாய் இல்லை என்பான்.
“அண்ணி முறுக்கு கொடுத்து விட்டாங்க. இந்தா ருத்ரேஷ்” என்று நீட்டவும், “தேங்க்ஸ் அக்கா.” என்றவன் கடிக்கும் பொழுது யோசனைக்கு சென்றிருந்தான்.
”நல்லாயிருக்கா?” என்று வருணிகா கேட்கவும், இம்முறை “சூப்பரா இருக்கு அண்ணி.” என்று சாப்பிடவும் வருணிகா தருணேஷை பார்க்க, தருணேஷ் சந்தோஷமாக வருணிகா மீது காதல் பார்வை வீசினான்.
சைதன்யன் கார் வரும் ஓசை கேட்டதும், ” சரிங்க அத்தை நான் கிளம்பறேன். வருணி பைமா. ருத்ரேஷ் போயிட்டு வர்றேன்” என்று தலையை கலைத்து விட்டாள்.
சைதன்யன் வந்து நிற்கவும் “வாங்க சார்.” என்று வருணிகாவும், ப்ரியங்கா வாட்டர்லெமன் ஜூஸ் எடுத்து நிட்டினார்.
“தேங்க்ஸ்” என்று பெற்று கொண்டான். தருணேஷ் டிவியில் ஒலிப்பரப்பான விளம்பரத்தில் கண் பதித்தான். சைதன்யனிடம் வம்பை வளர்க்கவோ மீண்டும் போட்டிக்கு ஒர் பார்வையை வீசவோ செய்யாது முற்றிலும் மாறியிருந்தான்.
அகமேந்தி தனது பர்ஸ் போனை எடுக்கவும், “அண்ணி இன்னிக்கு இங்க தங்குங்க. ப்ளிஸ்” என்றான்.
“நாளைக்கு மார்னிங் சீக்கிரம் வர்றேன் நாம சேர்ந்து இங்க எந்த ஸ்கூல் பெஸ்ட்னு பார்ப்போம்.” என்று சொல்லி அகலும் நேரம்.
“நாளைக்கு என் பெர்த்டே. இந்த நாள் மறுபடியும் வராதுனு நினைத்தேன். இப்ப சைதன்தன் சாரால கிடைத்திருக்கு. அதனால தங்கிட்டு கொண்டாடுவோமா?” என்றான்.
சைதன்யன் சட்டென டம்பளரை டீமேஜை மீது வைத்து, “நான் வெளியே வெயிட் பண்ணறேன் வா” கிளம்பினான்.
“தன்யன் என்ன பண்ற. அவன் தான் புரியாம பேசறான். நீயுமா?” என்றாள் அகமேந்தி.
“என்ன பண்ண சொல்லற? சாராம் சார்… போடா… உண்மை சொல்லி ஒருத்தனை கஷ்டப்படுத்தியது போதும். எனக்கு இது பழகியது தான். நான் ஏதாவது சொல்லி திரும்ப முதல்லயிருந்து ஆரம்பிக்க என்னால முடியாது. அகமேந்தி நாளையிலருந்து நான் வரமாட்டேன். நீயா வந்திடு” என்று சைதன்யன் வேகமாக காரில் கீயை போட்டு வண்டியை எடுத்தான். அகமேந்தி ருத்ரேஷ் கலங்கவும் தற்போது தேற்றவும் இயலாது. க்ரஷ் கோபமாக செல்வதே தோன்ற, அவளுமே காரில் ஏறி அமர்ந்தாள்.
தருணேஷுக்கு தான் கவலையாக போனது. தனக்கு கொடுக்கும் அன்பு சைதன்யனுக்குமே சார்ந்தது. ருத்ரேஷிடம் தான் யாரென கூறினால் சைதன்யன் மீது இருக்கும் கோபம் மாறி சுமூகமாக மாறுவான். நிச்சயம் அம்மாவோ அகமேந்தியோ வருணிகாவோ என்றும் கூறமாட்டார்கள். சைதன்யன் அப்படி அதட்டி இருப்பான்.
நானாக சொல்ல வேண்டும் வேறு வழியில்லை.
அப்படி சொன்னா ருத்ரேஷ் என்னிடமிருந்து விலகிடுவானோ? சே… அப்படி பண்ண மாட்டான். நான் சொல்லாம இருந்தா சைதன்யனிடம் பேசாம ஒதுங்கறான். நான் மறைப்பது என் சுயநலமா மாறிடும்.
சைதன்யன் உண்மையை மறைத்தான் அதுல நான் காயப்படக் கூடாதென்ற எண்ணம் இருந்தது. அதே போல நான் உண்மை மறைத்தா அதே போல அவன் காயப்படுவான். அதனால நான் உண்மையை மறைப்பதை விட கூறிடணும் என்ற ஒன்றை எண்ணிக் கொண்டான்.
இன்றே கூறினால் நாளை அவன் பிறந்தநாள் என்னாகுமோ. எதற்கும் அந்த கொண்டாட்டம் முடிந்து சொன்னால் நல்லது.
வருணிகாவும் கிளம்பவதற்கு எழுந்தாள். “அண்ணி நளைக்கு என் பெர்த் டே வந்திடுங்க.” என்று ருத்ரேஷ் கூறவும் தலையாட்டினாள்.
காரில் “நாளைக்கு உங்கப்பா வரச்சொன்னார். விஷேசம் போன முறை கால் செய்தப்ப சொன்னார் மறந்திடப்போற. நாளைக்கு அங்க போகணும்” என்றான்.
“என்ன விளையாடறியா தன்யன். நாளைக்கு அவனுக்கு பிறந்தநாள். நீ என்ன வேண்டுமென்றே பண்ணற.” என்று அகமேந்தி பொரிந்தாள்.
“என்னை நீயும் புரிஞ்சுக்க மாட்டியா… நான் அப்படி தான் பழி வாங்குவேனா? தருணேஷையே விட்டு ஒதுங்குவேனே தவிர பழி வாங்கற வேலையை பண்ணலை. இவன் ருத்ரேஷ் எப்படி… நான்…” என்று கலங்கிப்போனான்.
“சாரி க்ரஷ். அப்பறம் ஏன் இப்படி. எங்கப்பா வீட்டுக்கு.” என்று அகமேந்தி கேட்டாள்.
“நமக்கு திருமணமாகி முன்றாவது மாதம் ஆகுது. தாலி பிரித்து கோர்க்கணுமாம். உங்கப்பத்தா தான் சொன்னாங்க மறந்திட்டியா.” என்றான். ‘நீ வரவர எல்லாவற்றிலும் மறக்கிற..’ என்று முனங்கினான்.
-சுவடுபதியும்.
-பிரவீணா தங்கராஜ்.
*இமயனே இதயனே* எனது அடுத்த கதை தலைப்பு அதில் இமயன் வருவான். அந்த கதை இப்ப வராது?

Wow…. Semma twist sis…. Aanal paavam imayan avanoda uyirukku uyiranavangaloda Heart ahh erukkumo???? But semmaia erukku story waiting for next ud…
Oru nimisham pathariten ena da nadaka pothunu nalla vela rendu perum kapathotanga nalla irukanga aana yen chaithu um ruthreshum pesa matranga