💟-3
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அகமேந்தி வீட்டுக்கு வந்தப் பின்னும் தருணேஷ் நினைவில் கிடந்தாள். ‘சே அவனுக்கு யாரும் இல்லையென்று சொன்னான். இப்ப என்ன நிலையில் இருக்கானோ’ என்று யோசித்தவள் தேஜூவிடம் ஆலோசனை கேட்க திரும்ப அவளோ கிஷோருடன் பேசிக் கொண்டு இருப்பதை தான் கண்டாள்.
சட்டென யோசனை உதயமாக போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
தருணேஷ் குரல் கேட்டதும், “வீட்டுக்கு போயிட்டியா? இப்ப எப்படி இருக்கு தருணேஷ்.” என்றாள்.
“இப்ப பரவாயில்லை. அசதிக்கு மட்டும் மருந்து கொடுத்து இருக்காங்க அகி. என்ன தீடிரென கால் பண்ணி இருக்க? எனக்கு உடல்நிலை பாதிப்பு வந்தா தான் பேசுவியா” என்றான்.
“ஏய்.. அப்படி இல்லை. கூட யாருமில்லையென்று சொன்னியா. அதான் சாப்பிட்டியோ என்னவோனு கேட்டேன்.” என்று சக மனிதனிடம் இரக்க சுபாவத்தில் கேட்டதாக பாவித்தாள்.
“பீட்சா ஆர்டர் பண்ணிட்டேன் மா. வந்ததும் சாப்பிட்டுடுவேன். மாத்திரை போடணும். என்ன யாராவது இருந்தா கரிசனையாக பார்த்துப்பாங்க” என்று சோகமாய் பேசினான்.
“இங்க பாரு தருணேஷ் உனக்கு அந்த பீல் வரக்கூடாதுனு தான் கால் பண்ணினேன். உனக்கென்ன தூங்கறவரை பேசு. உனக்கும் தனிமையா இருக்கற எண்ணம் உதிக்காது.” என்று ஆலோசனையாக பதில் தந்தாள்.
“இது கூட நல்லா தான் இருக்கு. என்னவோ ரொம்ப நேரம் பேசி புரியவும் பீல் பெட்டர். சரி உன்னை பற்றி சொல்லு. உனக்கு இந்த காதல் பிடிக்காதா?” என்று கிடைக்கும் நேரத்திலும் அவனுக்கான பதிலை தேடி கேள்வி கேட்டான்.
“காதல் பிடிக்காது என்று இல்லை தருணேஷ். எனக்கு எங்கப்பாவை ரொம்ப பிடிக்கும். அவர் இத்தனை வருடம் என்னை தனித்து வளர்த்து ஆளாக்கி நிலையில் இருக்கறப்ப, நான் காதலென்று பேத்தல் செய்யலாமா? அதான். எதுவாயென்றாலும் அப்பா என்னை விட கூடுதலா சரியா பார்ப்பார் என்ற அபரிதமான நம்பிக்கை தான்.
இந்த வயதில் காதல் பெரிய விஷயமேயில்லை. பிடிச்சிருக்கா திருமணம், பிடிக்கலையா உடனே விவாகரத்து, நீ உன் வாழ்வை பாரு நான் என் வாழ்வை பார்க்கறேன். இப்படி தான் பலரின் எண்ணவோட்டம் இருக்கு.
இதுல உண்மையா என்னவானாலும் உன் கூட தான் இருப்பேன். இந்த ஜென்மம் எதுவாக நேர்ந்தாலும் உன்னோடவே போகட்டும் என்ற முடிவில் யார் முழுசா வர்றா?” என்று பேசிடவும் தருணேஷ் மனதினுள், நல்ல வேளை இவ பேசியதில் முதல் பாயிண்ட் பிரகாரம் தான் அவளோடு பேச எண்ணினேன். இப்ப அப்படி பேசினா என்னை முழுதா அவாய்ட் பண்ணிடுவா. எதுக்கோ இந்த டாபிக் ஓரம் கட்டிட்டு வேற பேசுவோம் என்று வேறு கேள்வி கேட்டான்.
“உனக்கு இந்த ஊர் பிடிச்சிருக்கா?” என்றான் தருணேஷ்.
“அட என்னத்த சொல்ல, இந்த சிட்டியில் எல்லாம் பிடிச்சிருக்கு. ஆனா அப்பா கூட இல்லையே. கேள்விக் கேட்க ஆளில்லாத இடம் ஆனா நான் சேட்டை செய்தா எங்க அப்பாவிடம் மாட்டிவிட தங்கட்டான் ஆடிற அளவுக்கு ஓடி வந்து, போட்டு கொடுக்கற எங்க வீட்டு கிழவி இல்லை. நிறைய மிஸ் பண்ணறேன். இது 20 கிட்ஸ்க்கு புரியாது. 90 கிட்ஸ் டைப் லைப். எங்க ஊரு… அப்படி. நீ உன்னை பற்றி சொல்லு.” என்று அகமேந்தி முடித்தாள்.
சட்டென கேட்டதும் தடுமாறினான் தருணேஷ். அவன் பதிலுக்கு என்ன பேசவென்பதை யோசித்து வைக்கவில்லை. அவனிடம் இருக்கும் இரகசியம் அப்படி.
“அது சொன்னேனே ரிச் அனாதை.” என்று கூறி மழுப்பினான்.
“ஏன் தருணேஷ் பிறக்கும் பொழுதே வா. உன் அப்பா அம்மா பெயரை கேட்டேன். சொந்தவூர் என்று இருக்குமே. அதுயெல்லாம்…. எப்படி படிச்ச, இந்த ஜாப் எப்படி கிடைத்தது? ரிச் அனாதைனா எப்படி பிறந்ததிலருந்து பணக்காரனா? அப்பறம் இங்க எதுக்கு மாத சம்பள வேலைக்கு வந்த?” என்று கேட்டாள்.
“அகி… மாத்திரை சாப்பிட்டேன். தூக்கமா வருது. நாம நாளைக்கு பேசலாமே” என்று முடித்துக் கொண்டான்.
“ஓ… ஓகே ஓகே. நீ தூங்கு குட் நைட்” என்றவள் ஏ ஆர் ரஹ்மானின் ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ பாடலை’ கேட்டபடி சாப்பிட்டாள்.
தந்தை வித்யாதரனிடம் பேச நேரம் பார்த்தால் இரவு தாண்டியது இனி பேசினால் அது நேரம் தாண்டியது எனலாம். ஊரில் உறங்கி இருப்பார்கள் அதனால் போன் செய்தால் உறக்கத்தில் எழுப்புவது போலாகும்.
இங்கு சைதன்யன் வசந்திடம் கத்தி கொண்டிருந்தான்.
“என்னாச்சு வசந்த் இந்நேரம் அகமேந்தி வீட்ல என் போட்டோ மாப்பிள்ளையா போய் சேர்ந்து இருக்கணும்னு சொன்னேன். ஏன் அனுப்பலை.” என்று கர்ஜினையாக கேட்டு முடித்தான்.
“சார் ஆல்ரெடி நல்ல தரகரிடம் உங்க போட்டோ தானாக அவரிடம் சேர ஏற்பாடு பண்ணிட்டேன் சார். இந்நேரம் பார்த்து இருக்கணும். ஆனா ஏன் நம்மளை காண்டெக்ட் பண்ணலை என்று தான் புரியலை. என்ன ஏதுனு பார்க்கறேன் சார்.” என்றான் வசந்த்.
“கொஞ்சம் விரைவா… அந்த தருணேஷ் பிளே பண்ணிட்டு இருக்கான் பார்த்தியா. இந்த நொடிவரை அகமேந்தி மனதில் எந்த காதலும் நுழையலை. நுழைவதற்கு முன்ன நாம அவள் பெற்றோர் மூலமா மற்றதை பேசிட்டா. நல்லா இருக்கும்.” என்று தன் அவசரத்திற்கு காரணம் சொன்னான் சைதன்யன்.
“சார் அவன் வேண்டுமென்றே ஷாக் அடிக்க அந்த லோ வோல்டேஜ்ல கை வைத்த வீடியோவை அகமேந்தி மேடத்துக்கு போட்டு காட்டலாமே. புரிந்து விலகிடுவாங்க. உங்கள் காதலுக்கும் விரைவா செவி மடுப்பார்கள்.” என்று தலையை சொரிந்த வசந்த் ஆலோசனை சொன்னான்.
“நான் அதை செய்ய முடியாதே. சொன்னாலும் நம்ப அவள் தயாராயிருக்க மாட்டா. இன்னிக்கு அவள் கண்ணில் இரக்கம் சுரந்தது. நான் அவன் வேண்டுமென்றே செய்து இருக்கான் சொன்னா. நிச்சயம் நம்ப மாட்டா. தருணேஷ் அப்படி அழகா பிளே பண்ணறான். பண்ணட்டும்… வில்லனா நான் ஒருத்தன் இருப்பது யார் கண்ணுக்கும் தெரிய வேண்டாம். நீங்க நேரம் கடத்தாம அவங்க அப்பாவிடம் தானா அமையுகின்ற வரனா, சீனை கிரியேட் பண்ணி முடிங்க. நான் அகமேந்தி அப்பாவிடம் இண்ட்ரோ ஆகிட்டா மற்றதை நானே பார்த்துப்பேன்.” என்று வசந்தை போக சொன்னான்.
வசந்த் விட்டால் போதுமென ஓட்டமெடுத்தான். மணி பதினொன்று தொட புறப்பட்டான்.
சைதன்யன் தன் போனில் இளையராஜாவின் மெட்டுக்களை இசைக்க விட்டு மிதமாக ஒலிக்கூட்டி உறங்க தயாரானான்.
அடுத்த நாள் தருணேஷ் வேலைக்கு வரவில்லை. அகமேந்தி அவன் உடல்நிலை அசதி காரணமாக விடுப்பு எடுத்திருக்கலாம் என்று விட்டு விட்டாள்.
ஆனால் அவளை தினமும் துளைக்கும் பார்வை அவள் முதுகில் ஊர்ந்தது. சுற்றி சுற்றி பார்வையை அலசி தன் கேபினில் இருந்து பார்த்தாள். அனைவருமே தம் தமது பணியை தான் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு வேளை தருணேஷ் தான் ஒளிந்து நின்று பார்க்கின்றானா என்று அவனுக்கு கால் செய்து, “எங்க இருக்க?” என்றாள்.
“வீட்ல தான் அகி. நீ என்னை மிஸ் பண்ணற தானே.” என்றான் மகிழ்ச்சியோடு.
“ஏய்.. தருணேஷ் அப்படியில்லை. இங்க என்னவோ யாரோ என்னையே பார்க்கற பீல். நீ தான் இங்க இருக்கியோனு நினைத்தேன். மற்றமடி மிஸ் பண்ண என்ன இருக்கு. நான் இங்க வேலை பார்த்துட்டு இருக்கேன்.. சரி பிரேக்கில் பேசலாம் பை” என்று சட்டென வைத்து விட்டாள்.
‘யாரோ பார்க்கற பீல்லா.” என்றவன் யோசனையில் செல்ல, அகமேந்தியோ, ‘இடியட் இடியட்… அவனே ப்ரப்போஸ் பண்ணிட்டு எப்ப அதை நான் அக்சப்ட் பண்ணுவேனு காத்திருக்கான். அவன் வராத நேரம் கால் பண்ணினா இப்படி தான் இஷ்டத்துக்கு புரிந்து மிஸ் பண்ணறியானு கேட்பான். யார் பார்த்த மாதிரி இருந்தா உனக்கு என்ன? வேலை மட்டும் பார்க்கற வழியை பாரு’ என்று மனசாட்சியிடம் இரைச்சலாக மொழிந்துவிட்டு பணியில் கவனம் செலுத்தினாள்.
தான் வந்ததே தன்னவளை பார்ப்பதாற்காக என்பதாய் சைதன்யன் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து நாற்காலியை வலம் இடம் என்று ஆடிக்கொண்டே அவளை பார்க்க, அகமேந்தி தன் செவ்விதழ் பிரித்து மெல்ல கொட்டாவி விட்டவாறு சைதன்யன் இடமாக திரும்பி பார்க்க அவனோ திடீரென அவள் திரும்புவதை கண்டு பார்வையை திசைத்திருப்ப பாடுபட்டான்.
அகமேந்தி அச்சோ கொட்டாவி விட்டதை வைத்து சரியான தூங்குமூஞ்சினு நினைத்து கொள்வாரோ என்று அந்தபக்கம் திரும்ப பயந்து போனவளாக இருக்க, சைதன்யனோ ‘அய்யோ சொப்பு வாய் திறந்து கியூட்டா என் செல்லம் கொட்டாவி விட்டது. பிறந்த குழந்தை தோற்றிடும் இவளோட கியூட் ரியாக்ஷன் பார்த்தா…. அய்யோ கொல்லறாளே…’ என்று புலம்பினான்.
அதே நேரம் சைதன்யனுக்கு ஒரு மினி ஸ்டேட்மெண்ட் பேக்ஸில் வர அதனை எடுத்து பார்த்தான். அதனை கண்டதும் சற்று முன் கிட்டிய சின்ன சந்தோஷமும் வடிந்தது.
அவனின் முகம் சினத்தை பிரதிபலித்து. வசந்தை அழைக்க, அவனோ தடுமாறி ஓடிவந்தான். குரலிலே சினத்தை அறிந்ததால்… அகமேந்தியை கண்ணாடி வழியாக பார்த்து, “என்ன சார் பிரச்சனை?” என்றான்.
“இதை பாரு…” என்று அவன் முன் தள்ள, அதில் தருணேஷ் கால் ஹிஸ்ட்ரியில் அகமேந்தி கால் பதிவு இருந்ததை கண்டு வசந்த் தான் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக பேச தவித்தான்.
அகமேந்தியை தடுப்புக்கு அப்பால் பார்த்தவாறு ‘மகராசி இவ வந்ததில இருந்து எனக்கு ஓவர் டியூட்டி. இதுக்கு முன்னவே பரவாயில்லை. வேலைக்கு மட்டும் தான் பதில் சொல்வேன். இப்ப…. நீ அந்த தருணேஷ் கூட சாட் பண்ணறதுக்கு கூட நான் இங்க பதில் சொல்லணும்.’ என்று பார்வையை சைதன்யன் மேல் பதித்தான்.
“வசந்த் உனக்கு புரியுதா இல்லையா. அவன் மேல வேற எண்ணம் உருவாக கூடாது. அகமேந்தி அதுக்குள்ள எனக்கு சொந்தமாகணும் புரிதா….?” என்றான்.
“சார்… நீங்க நேரிடையா அவங்க அப்பா பார்த்து பேசினாலோ இல்லை அகமேந்தியிடம் விருப்பம் தெரிவித்தாலோ பதில் விரைவா கிடைக்கும்.” என்று ஆலோசனை வழங்க, சைதன்யன் முறைத்து முடித்து “அது வேலைக்கு ஆகாது வசந்த்” என்றான்.
“இங்க பாருங்க வசந்த் இந்த இரண்டு மாதத்தில் ஒருமுறையும் அவங்க அப்பாவுக்கு என் போட்டோ ஏன் போய் சேரலை என்று பாருங்க. என்ன காரணம் என்று கேளுங்க? ஒருத்தரிடம் கொடுக்காம நாலைந்து வரன் அமைப்பாளரிடம் கொடுத்து முடிங்க.” என்றான்.
“ச… சரி.. சார்” என்றவன் வேர்வையில் குளித்து முடித்து இருந்தான்.
அகமேந்தி தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க, அடுத்த நாளில் தருணேஷ்-அகமேந்தி காதலிப்பதாக ஒரு வட்டம் தானாக புரளி பரப்பி விட்டது.
அகமேந்தி முதலில் அதில் மனவுளைச்சல் அடைந்தாள். அதிலும் தருணேஷ் அதற்கு மறுப்பு அளிக்காது ஜாலியாக இருக்க, அகமேந்தி தான் கவலைக் கொண்டாள்.
நாளைக்கு இப்படி ஏதாவது காதுல விழட்டும், பேசறவங்க வாயை உடைத்து அனுப்பறேன் என்றவள் மனதுக்கு தெரியுமா என்ன அவள் பதில் கொடுக்க இயலாத இடத்தில் இருந்து கேள்வி வருமென்று.
-சுவடு பதியும்.
-பினவீணா தங்கராஜ்.

Sema twist. Intresting sis.
Evan nejama yaru.. evan than kelapi vitupaan..
Very interesting thrilling ah pothu story
Yaru hero yaru villaney purilaiye…..