Skip to content
Home » 3) மோதலில் ஒரு காதல்

3) மோதலில் ஒரு காதல்

மோதலில் ஒரு காதல்❤️        

    ஒரு வாரமாக காலேஜ் வராத மகிழை எப்படி பழி வாங்குவது என வெடித்து கொண்டு வாசலையே பார்த்திருந்தான் வம்சி. கௌரியோ பிரியாவை பார்க்காமல் தக்காளி சட்னியாக வதங்கி கொண்டே வாசலை பார்திருந்தவனின் கண்கள் மின்னும் அளவு வெள்ளை நிற சுடியில் தேவதையாக வந்தவளை பார்க்க அந்த காலேஜின் அருகிலுள்ள மண்டபத்திலிருந்து ஒலித்த பாடலில்            

         ‘என்ன விலை அழகே… உன்னை விலைக்கு வாங்க வருவேன். விலை             உயிரெண்டாலும் தருவேன்  உன் அழகை கண்டு வியந்து போகிறேன்’                             மொத்தமா தன்னை தொலைத்து அவளையே ரசித்து கொண்டு இருந்தான். அதே வெள்ளை நிற  சுடியில்  பேரழகியாக வந்த  மகிழைப் பார்த்து          

                ‘பேய்கள் என்ற புரளியை உன்ன பார்த்து தான் நம்பிருக்கன் குட்டி சாத்தா பிசாசின் மருவுருவம்   நீதான்  என்றிருக்க போடீ நாயே,  போடீ பிசாசே,  போடீ காட்டு பேயே தங்க புஷ்பம் நானு  தகரடப்பா நீயு’ என ஆத்திரம் தீரும் அளவு அவளை கிழிக்கும் பொருட்டு வம்சியின் மொபைலில் ரிங்டோன் வைத்திருந்தது ஒலித்தது.  

அதை திரும்பி பார்த்த மகிழ், கப்சுப் என அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.   

       அப்போது உள்நுழைந்த புரப்பசரான ராகவன் வந்ததும்,  அனைவரும் எழுந்து வணக்கம் செய்தனர். மகிழை எப்படி பழி வாங்குவது என யோசித்து கொண்டு இருந்தவனுக்கு “கண்ணா லட்டு தின்ன ஆசையா “, என்ற ரீதியில் இனி  ஒரு மாதத்திற்கு, ஒரு வாரத்தில் மூன்று நாள் மட்டுமே காலேஜ் எனவும் , மீதி மூன்று நாட்களுக்கு இங்கு கற்று கொண்டதை ஹாஸ்பிடலில் பேஷண்டுக்கு  செய்ய வேண்டும் எனவும் கூறி முடித்தார்.    

  சூப்பர் என கத்திய மகிழ், சிறிது நேரத்தில் குழப்பமே குடி கொண்ட இடமாக இருந்தாள்.             

அவளை பார்த்து முன் நின்று கொண்டிருந்த வம்சி என்னிடம் இருந்து நீ எப்போதும் தப்பிக்க இயலாது என கூறினான்.    

   அவளின் குழப்ப நிலைக்கு காரணம் ,  ஹாஸ்பிடல் டியூட்டிக்காக அவள் இருந்த பேட்ச்சே காரணம்.  அதில்  சுமித்ரா, தற்போது உள்ள வம்சி, வம்சியின் ஒரு வார நண்பன் ராகேஷ் முதலாக இருபது பேராக பிரிக்க பட்டு இருப்பதை பார்த்தே பயந்தாள்.    

   ஆனால் பிரியா அவளது காதலை கூட கூறாத நிலையிலும் அவளை பூ போல தாங்கும் கௌரியின் பேட்ச்_ல்  ஆனந்த், லோகேஷ், மதுப்ரியா என ஒட்டு மொத்த நட்பு வட்டாரமாக  இருபது பேராக பிரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும் , மகிழும் தருவாயில் மகிழ் இல்லை என்பதால் அவளிடம் சிறிது சேட்டை செய்து சிரிக்க வைத்தாள்.          

            அதை பார்த்த வம்சி சிரிக்கிறாயா நல்லா சிரி இனிமே நீ அது எங்க விற்கும்  என கேட்கும் அளவிற்கு வறுத்தப்படப் போகிறாய் என நினைத்து மகிழ்ந்து கொண்டு இருந்தான். ஏனெனில் வம்சியும் சுமித்ராவும் இருக்கும் அதே பேட்சில் இருக்கும் மகிழை விதவிதமாக வைத்து விளையாடலாம் அல்லவா அதற்காக தான் இந்த ஆனந்த தாண்டவம்.

________________&____________________&_____         

     மறுபுறம் தன்மகனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றும் பணியில்   மூழ்கி இருந்தனர் வம்சியன் பெற்றோர்.       

   அதே சமயம் மகிழினியின் வீட்டின் முன்புறம் இருந்த ப்ளாட்டில் ஒரு ஐந்து மாடி மருத்துவமனை கட்டபோவதாகாவும்  அறிவிப்பு வந்ததை பார்த்த கிருஷ்ணன்_ தேவசேனா , நம்ம பொண்ணு படித்து முடித்த பின் இங்கையே ஜாயின்  பண்ணிக்கலாம் என எண்ணி அவர்களிடம் நட்பு நாட நினைத்தனர்.          டொயோட்டா காரிலிருந்து இறங்கிய சித்ரா,. வெளியில் நின்று ப்ளாட்டை பார்திருந்தவர்களிடம் சென்று “வணக்கம் நாங்க தான் எதிர் ப்ளாட்டை வாங்கி இருக்கோம்.        

    இங்க ஹாஸ்பிடல் கட்டப்  போறம்” என நார்மலாக பேசியவர்களை கண்டு சிலையாக நின்றனர்.  பின் வந்த கணவரை கை காட்டி இவர் ராஜமாணிக்கம் மை ஹஸ்பன்ட் என அறிமுகப்படுத்தினர்.   

           அவரும் அவர்களிடம் ஹாய் என கூறி சகஜமாக பேசுபவர்களை பார்த்து மகிழினியின் பெற்றோர் ஆனந்தமடைந்தனர். இவர்களின் நட்பு  ஒரே நாளில் ஒன்றாக உட்காந்து சாப்பிடும் அளவு ஒன்றாக மாறினார்கள்.

_________________________&___________________         

      மதிய வேலை சாப்பிட்ட   பின் அனைவரையும் கருத்தரங்கு வகுப்பிற்கு வருமாறு கூறினார் புரப்பசர் .   அதன் படி அனைவரும் அசம்பலானர்.  அங்கே அசோசியேட், அசிஸ்டன்ட், டீன், முதலாக அனைவரும் இருக்க, முதலாவதாக வந்த ப்ரபசர் ஹாஸ்பிடலில் எப்படி சேப்டியாக இருக்க வேண்டும் எவை எல்லாம் செய்ய கூடாது, எங்கு எல்லாம் செல்ல கூடாது என சொல்லி பேச்ட் ரெப்களை அழைத்தார். 

     மேடைக்கு வந்த கௌரி ,பிரியா இருவரும் சில அறிவுரை கூறி கொண்டிருக்க, அடுத்து உரையாடும் நபரான வம்சி , சுமித்ரா இருவரும் ஒரு சேர மகிழினியை பார்த்து பழி தீர்க்கும் தருணதிற்காக காத்திருக்க , மகிழினியோ அன்று அறைந்த கன்னத்தை பிடித்து கொண்டு எட்டி பார்த்த கண்ணிர் துளி அவளது மனதை பதைபதைத்தது.  

  ( வாங்க guys நம்ம  அந்த அறைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்)  கலங்கிய கண்களுடன் அன்று நடந்ததை நினைத்தால், ( frds உங்க கண்ணுக்கு ரவுண்ட் ரவுண்டா சுத்துதா , எனக்கு சுத்துது பா அப்டின்னா நம்ம பிளாஷ்பேக்குக்கு  போக போறம்).      

     அறைந்த அறையில் கீழே விழுந்த மகிழ்,  எழுந்து நின்றிருந்தவரின் காலில் விழுந்து அன்று நடந்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை  , எங்கள நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க தாத்தா என்று கூறினாள். பிரியாவும் கலங்கிய நிலையில் அவள் தோழியை பார்த்தாள்.      

    என்ன நான் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கனா  என அவளது தலை முடியை பிடித்து தூக்கியவரை, கட்டி அணைத்து தாத்தா என கொஞ்சி கொண்டிருந்தான் வம்சிகிருஷ்ணன்.          

       மகிழின் வண்டியை எடுத்து வருவதாக சொல்லி கௌரி சென்று விட்டதால் நால்வரும் செய்யும் சேட்டையை பார்த்து கொண்டிருந்த வம்சி, தாத்தாவின் வருகையை நினைத்து மகிழ்ந்த நேரம் மகிழினியை அறைந்திருந்தார் அந்த பெரியவர்.      

     நின்றிருந்த மகிழினை கண்டு பெரு மூச்சு விட்ட வம்சி, தாத்தா பாட்டிமா கூட ஊருக்கு போனதுக்கு அப்பறம் எங்களை எல்லாம் பாக்கனும்னு கூட தோணவில்லையா உங்களுக்கு , “அதும் இப்ப வந்துட்டு இந்த டகரடப்பா மூஞ்ச பார்த்துட்டு இருக்கிங்க, பேரனை பார்க்க வரவில்லையா”. என கோபத்துடன் திரும்பி நின்று கொண்ட வம்சியை கட்டி அணைத்து,          

        “உன் பாட்டியோட நிலைமைக்கு காரணமாவங்கள பழிவாங்க தான் இப்ப வந்திருக்கன்” என கூற, “சார் நீங்க தவறாக புரிந்துகிட்டிங்க”  என்று பிரியா கத்தினாள்.       

         அவளை பார்த்துக்கொண்டே “தாத்தா பாட்டிக்கு என்ன ஆச்சு?… இப்ப எங்க இருக்காங்க?” என்று கொஞ்சம் கனத்த குரலில் வம்சி கேட்க, மகிழின் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாக வடிந்தது.சொல்லுங்க தாத்தா என்ன ஆச்சு? என கத்திய கத்தலில் கல்லூரியே  ஆட்டம் கண்டது.  

       அவனிடமிருந்து விலகி, இதோ நீலி கண்ணீர்  வடிக்கிறாலே இவளும், இவளுடய தோழி பிரியாவும் தான்  உன் பாட்டி நடைபிணமாக இருக்க இவங்க தான் காரணம் என கூறி அழுதார்.   

        அவரது  கண்ணீரை துடைத்து “இவங்களால தானா? என்ன தாத்தா சொல்றிங்க. புரியும் படி சொல்லுங்க. தாத்தா என் பாட்டிக்கு என்ன ஆச்சு தாத்தா” என அழுத்தமாக கேட்டான்.    

  அவனை பார்த்து அன்று நடந்த அனைத்தையும் கூறி முடித்த தாத்தாவிடம் “தாத்தா நீங்க இவங்கள தப்பா புரிஞ்சு கிட்டிங்க”  என கூறிய கௌரியை பளார் என‌ அறைந்தான் வம்சி.‌      

‌       நாம் செய்த நல்ல காரியத்தை இவங்க இப்புடி புரிந்து கிட்டாங்களேயென மகிழினி வதங்கி வாடி போய் இருக்க, கை தட்டி கொண்டே “சபாஷ்ஷ்ஷ்ஷ்… இத இதை தான் நான் எதிர்பார்த்த”… என்று வந்தவளை பிரியாவும் மகிழும் சரமாரியாக முறைந்தனர் .     

  ஆனந்த் மற்றும் லோகேஷ் என்ன நடக்கிறது என புரியாமல் திருதிருவென முழித்தனர்.         

              இது உண்மையா என தாத்தாவை உலுக்கினான் வம்சி.  அதுலாம் உண்மையில்லை என கூறிய கௌரியை முறைத்தே அடக்கினான். ஆம் என தாத்தா சொன்ன பின் மிளகாய் பச்சியைப் போல  பொறிந்தான். மகிழிடம் வந்த  வம்சி உன் வாழ்க்கையை எப்படி சின்னாப்பின்னம் ஆக்குறனு பாரு என‌ கத்தினான்.               இவ்வாறாக அன்று நடந்தவற்றை நினைத்து மூச்சு முட்டும் அளவு அழுதவளை வெறியோடு பார்த்தான் வம்சி. வெற்றியோடு பார்த்தாள் சுமித்ரா.         

          யார் இந்த சுமித்ரா? மகிழும் பிரியாவும் அப்படி என்ன தான் பண்ணிருப்பாங்க அந்த பாட்டிக்கு?  வம்சியின் நண்பன் மகிழுக்கு ஏன் சப்போர்ட் செய்கிறான்?    இனிவரும் எபிசோட்டில் தெரிந்தது கொள்ளலாம் ப்ரண்ட்ஸ்.       

 – சண்டை மீளும்.

கௌசல்யா வேல்முருகன்.

இனிவரும் எபிசோட்டில் தெரிந்தது கொள்ளலாம் ப்ரண்ட்ஸ்.                        

4 thoughts on “3) மோதலில் ஒரு காதல்”

    1. CRVS2797

      ஆனாலும் என்ன நடந்ததுன்னு இப்பவாவது சொல்லியிருக்கலாம். இது தெரியாம மண்டையை போட்டு பிச்சிட்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *