Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-10

ராஜாளியின் ராட்சசி-10

அத்தியாயம்-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  பாவனாவுக்கு அர்னவ் கூறியதை கேட்டு லேசான வருத்தம் இதயத்தில் அழுத்திக் கொண்டிருந்தது.

   அர்னவ் தன் போனில் யாரையாவது தொடர்பு கொள்ள இயலுமா? என்று எமர்ஜென்ஸி கால் அழைத்து கூட பார்த்தான்.
  ஆனால் அவனது போனும் பாவனா போனும் சார்ஜ் இல்லாமல் உயிரிழந்து கிடந்தது.
   கையில் குண்டு உரசியதில் விமானபயணிக்கென கொடுத்திருந்த அவசரக்கால அழைக்க உதவும் எதையும் அவன் எடுக்க மறந்திருந்தான்.
   ஜீவன் மட்டும் இவ்வாறு நடக்காமல், நிதானமாக விபத்து நிகழப்போவதை அறிந்திருந்தால் பதட்டமின்றி தேவையானதையும், விமானம் மோதுவதையும், கூட விமானத்தின் கட்டுக்குள் இருக்கும் அலுவலகத்தின் தொழில் தொடர்பில் தகவல் தந்திருப்பான். அர்னவிற்கு ஜீவனோடு சண்டை மட்டும் நிகழும். முகத்தில் குத்துவிட்டு ஓரிடமாக அமர வைத்து, இருவரையும் சென்னையில் கோல்ஃப் மைதானத்தில் விட்டுவிட்டு தன் மேலதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு வேறு பணியை பார்க்க எண்ணினான்.
பாவனாவை காப்பாற்றினால் போதுமென்று நினைக்க, ஜீவன்  துப்பாக்கி எல்லாம் கொண்டு வந்து விமானத்தை தடுமாற வைத்து பழுதாக்கி, இப்படி மலையோடு மோதி இந்நிலை வந்து சேருமென்று கணிக்கவில்லை‌.

   எல்லாமே அவசர அவசரமாய் நிகழ்ந்திருக்க, அப்படியிருந்தும் யாரையாவது அணுக நினைத்து, விமானம் தரையிறங்குவதில் சிக்கலென்றும், மலையில் மோதி வெடிக்கலாம், இவ்விடத்தில் பாரசூட் உதவியால் இறங்கியிருப்போம்’ என்ற தகவலை எல்லாம் அனுப்பிவிட்டான்.

  அந்த தகவலை கூறிவிட்டு தான் பாவனாவை நேரம் கடத்தாமல் தன்னை அணைத்து குதிக்க கூறினான்.
    இந்நேரம் அவனளித்த தகவல் சென்றதா? அல்லது தொழில்நுட்ப கோளாறில், தகவல் சேரவில்லை என்றால் அடுத்து கடற்படை ரோந்து வரும்வரை காத்திருக்க வேண்டும். எப்படியும் இவ்விடத்தில் ரோந்து வராமல் இருக்காது என்பது அர்னவ் யூகம்.

  அர்னவையே பார்த்த பாவனாவிற்கு,  எல்லாவிதமான வலியையும் உள்ளுக்குள்ள வச்சிட்டு வெளியே சிரிச்சி நடமாடுவாறோ’ என்று எண்ணி, “சாரி” என்றாள்.

  அர்னவோ ‘பர்டன்’ என்று கூற, “உங்க அம்மா இறந்ததால் நீங்க பீல் பண்ணலைன்னு சொன்னதுக்கு சாரி. நீங்க அந்த வயசுல பீல் பண்ண முடியுது. பயம் வரும் ஐ அண்டர்ஸ்டாண்ட். அதான்…. சாரி கேட்கலாம்னு.” என்று ஏறிட்டாள்.

“உட்காரு… எந்தவிதமான பேச்சும் என்னை காயப்படுத்தாது. பிகாஸ்.. எல்லாத்தையும் பார்த்துயிருக்கேன். நீ செண்டிமெண்ட் கேட்டகிரி. நான் அப்படியில்லை” என்றான்.‌

பாவனாவோ அமைதியாக மாறி, “ம்ம்ம. எங்கம்மாவுக்கு கேன்ஸர்னு சொன்னேன்ல… அதுக்கு அதிக பணம் இருந்தா ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்னு தான் கண்ணை மூடி ஜீவன் நீட்டிய பார்ம்ல கையெழுத்து போட்டேன். ஆனா வீராப்பா பேசினாலும் அம்மாவை காப்பாத்த முடியாம அவங்களை இழந்திடுவேனோனு பயம் இருக்கு.
   அம்மாவோட இறப்பை தள்ளிப்போட்டுட்டு இருக்கேன். வினோத் மட்டும் படிச்சி இந்நேரம் ஏதாவது வேலைக்கு போயிருந்தா, இரண்டு பேரோட சம்பளம்னு மேனேஜ் பண்ணிருப்பேன். பட் வினோத் பிளஸ் டூ தான் படிக்கறான். அவனை அடுத்து என்ன படிக்க வைக்கிறதுன்னு கூட யோசிக்கலை.” என்றவள் அர்னவை மேலும் கீழும் பார்த்து, “நான் ஒன்னு கேட்டா சிரிக்க கூடாது” என்றாள்.

”கேளு” என்றான் அர்னவ்.

   “பைலட் ஆக என்ன படிச்சிருக்கணும். இதுல நிறைய சம்பளம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்த வேலை ரொம்ப கஷ்டமாயிருக்குமா?” என்று கேட்க அர்னவோ பச்சரிசி பல் தெரிய வயிற்றை பிடித்து சிரித்தான்.

”நான் சிரிக்க கூடாதுன்னு டிஸ்க்ளைமர் சொல்லியிருந்தேன்” என்று பாவனா முகம் தூக்கி கூறினாள்.
  
  “ஆஹ்… டிஸ்க்ளைமரா… அதுசரி…” என்று கேலியாக சிரித்து முடித்து, காலார நடந்தபடி, பைலட்டாக கிராஜிவேட் டிகிரி முடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 12த்ல மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி குரூப் எடுத்திருக்கணும். உன் தம்பி என்ன குரூப்” என்றான்.
  பாவனாவோ அவனுடன் சேர்ந்து நடந்தவள், “என் தம்பி செகண்ட் குரூப் தான்.” என்று ஆனந்தப்பட்டாள்.

“குட்… அது மட்டும் போதாது. நல்ல திடகாத்திரமான உடல் வேண்டும்” என்றதும் அர்னவின் புஜமும் திண்மதோளும் பார்வையிட்டவளுக்குள் ஒருவித அசௌகரியம் கொண்டாள்.
  ‘ஆள் நல்லா வாட்டசாட்டமா அழகா தான் இருக்கார்.’ என்று மனதில் நினைத்தாள்.
   “தெளிவான கண்பார்வை இம்பார்டெண்ட். தம்பி சோடாபுட்டியா?” என்று கேட்க, “என் தம்பி கண்ணாடிலாம் போடலை. கேரட் ஜுஸ் எல்லாம் போட்டு தந்திருக்கேன். உடம்பு தான் கொஞ்சம் மெலிந்து இருப்பான். ஜஸ்ட் டீன் ஏஜ்ல” என்று சமாளித்தாள்.

  அதோடு “சம்பளத்தை சொல்லவேயில்லையே” என்று கேட்டு விட்டு உதட்டை கடித்தாள்‌. அர்னவ் அவளது செவ்வுதட்டில் கவனம் சென்று, “ஒரு ஆணியிடம் சம்பளத்தை கேட்க கூடாது. என்னுடைய சம்பளம் நான் சொல்ல மாட்டேன். பட்… வணிக விமானிகளுக்கு பொதுவா சிறந்த சம்பள பேக்கேஜ் இருக்கு. இந்தியாவில், 250 மணிநேர விமானப் பயணத்தை முடித்தவுடன், ஒரு வணிக விமானியாக ஒரு தொழிலைத் தொடர உரிமை உண்டு. அதுல 1.5 முதல் 2 லட்சம் மாதச் சம்பளத்தைப் பெற முடியும்.

சப்போஸ் நீ இந்திய விமானப்படையின் வழியைத் தேர்வுசெய்தா, 5 முதல் 8 லட்சம் வரை கிடைக்கும்.” என்றான்.

  லட்சத்துல சம்பளமா? என்று பாவனா வாய் பிளந்தவள், “இந்த பைலட் படிப்புக்கு எப்படி படிக்கணும்?” என்று கேட்டாள்.
 
அர்னவோ, ‘என்ன பார்த்தா எப்படி தெரியுது?’ நாம இங்க மாட்டிக்கிட்டு இருக்கோம். நம்மளை காப்பாற்ற யாராவது வந்தா தான் உண்டு. நீ என்ன ஜாலியா ஹனிமூன் வந்த கப்பீள் மாதிரி பேசிட்டு வர்ற?” என்றான். அவன் பேசியதில் ஹனிமூன்’ என்ற வார்த்தையை அவள் எங்கே கவனித்தாள்.

“அச்சோ…  பைலட் நீங்க என் கூடயிருக்கிங்க. உங்களுக்கு தெரியாதா… எப்படி எஸ்கேப் ஆகறதுனு யாரைவது வருவாங்கனு தெரியாமலா மீனை பிடிச்சி திங்கறிங்க. நானும் பார்த்துட்டேன்.‌ வந்ததிலருந்து அந்த தீயை புகைச்சிட்டே இருக்கிங்க. அந்த புகை அடிக்கடி மேல வருது. சோ… நீங்க ஜாலியா ஹனிமூன் கப்பீள் மாதினி பேசினாலும், நம்ம இங்க இருப்பதை தெரிவிக்கறிங்க. என்ன யாராவது கவனிச்சு எப்ப வருவாங்களோ.. பச் எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. எப்படியும் என்னை சென்னையில் சேர்த்திடுவிங்க.

    இப்ப வினோத்தை படிக்க வைக்கிறதா இருந்தா என்ன படிக்க வைக்க? என்ன செய்யணும் அதை சொல்லுங்களேன். ப்ளிஸ் ப்ளிஸ்.” என்று கண்கள் சுருக்கி ஹனிமூன் என்ற வார்த்தையை அவளும் மறந்து, தன் மீது நம்பிக்கை வைத்து பேசியவளை ரசித்தவன், அவள் கேட்கவும், கூறத் துவங்கினான்.
பொதுவாக, இந்த சேர்க்கைக்கு, பயிற்சி நடத்தும் அந்தந்த தனியார் பிளையிங் கிளப் அல்லது DGCA பிரதிநிதியால நடத்தப்படும் தேர்வின் அடிப்படையில் நிகழ்கிறது. எனவே, பயிற்சி பெற விரும்பும் பிளையிங் கிளப்பை தொடர்பு கொண்டு, விமானியாவதற்கான பயிற்சியை தாராளமா பெறலாம்.

 விமானப்படை விமானியாக பயிற்சியைப் பெற NDA தேர்வில் தகுதி பெறலாம். உலகளவியில் இதுக்கு நிறைய சிறப்பான அகாடமி இருக்கு.
  
இந்தியாவிலும் பயிற்சி அகாடமிகள் இருக்கு. படிப்புன்னு பார்த்தா, 1.வணிக பைலட் பயிற்சி
2. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிடெக் 3. தரைப் பணியாளர்கள் மற்றும் கேபின் க்ரூ பயிற்சியில் டிப்ளமோ, 4. ஏவியேஷன் துறையில் பிஎஸ்சி இதெல்லாம் இருக்கு.” என்றதும் தலையை சொரிந்து, அச்சோ மறக்காம இருக்கணுமே என்று கவனித்தாள்.

   அர்னவோ “விமானத்தை இயக்க, பொதுவா 3 வகை பயிற்சிகள் அளிக்கப்படுது. அதுல மாணவர்கள் பைலட் உரிமம் (SPL) பயிற்சி, தனியார் பைலர் உரிமம் (PPL) பயிற்சி, வணிக பைலட் உரிமம் (CPL) பயிற்சி மூன்று இருக்கு.

பல வகையான விமானங்களை ஓட்டுவதற்கு ஆழ்ந்த பயிற்சியை மேற்கொள்ளும் உயர் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் விமானிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பல வகையான விமானங்களுக்கு பல்வேறு சிறப்புப் படிப்புகள் இருக்குன்னு சொன்னேன்ல… அதுல பயணிகள் விமானம் ஐ மீன் பேஸன்ஜர் பிளைன், சரக்கு விமானம் மற்றும் அஞ்சல் விமானம் இருக்கு.

இயக்கக் கற்றுக்கொள்வது முதல், விமானத்தின் உள் வழிமுறைகளைப் பராமரிப்பது விமானியின் பொறுப்பு. விண்ணப்பதாரர்கள் எந்த வகையான ஸ்ட்ரீம்கள் மற்றும் பாடங்களை பொறுத்து வெவ்வேறு வகையான விமானம் ஒட்டும் முறை உள்ளது.

விமான போக்குவரத்து விமானிகள் – தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து வாடிக்கையாளர்களால் வணிக விமானங்களை இயக்கும் விமானிகள் விமான போக்குவரத்து விமானிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். நான் முதல்ல அதுல தான் வேலை செய்தேன்.

தனியார் விமானிகள்(பிரைவேட் ஜெட்)- ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கக்கூடியவர்கள், எந்த நேரத்திலும் அவர் தங்கள் விரும்பும் இடத்தை சுற்றி பறக்கக் ஒரு தனியார் விமானிகளை விரும்புகிறார்கள்.மாணவர் பைலட் உரிமம் பெற்றவர்கள், இது நம்ம கேட்டகிரி.

அடுத்த நிலையாக இந்த PPL தனியார் பைலர் உரிமம்உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உரிமத்தை பெற, விண்ணப்பத்தாரர் சுமார் 60 மணி நேரம் விமானத்தில் பறந்திருக்க வேண்டும்.

விளையாட்டு விமானிகள் – ஸ்போர்ட்ஸ் பைலட்டுகள் 10,000 அடிக்கு கீழ் பறக்க வேண்டும் மற்றும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும். எல்லையை தாண்டினா உயிருக்கு ஆபத்து. இந்த குடியரசு தினம், சுதந்திர தினம் இப்படி சாகஸம் செய்வாங்க. பார்த்திருக்கியா?” என்றதும் தலையாட்டினாள்.

“ம்ம்ம.‌‌ அப்பறம் விமான பயிற்றுவிப்பாளர்கள் – அவர்கள் ஒரு பயிற்சி நிறுவனத்தின் கீழ் பணிபுரிகின்றனர். அங்கு அவர்களின் வேலை மற்ற ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கு எவ்வாறு பறக்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பாங்க. இது கிட்டதட்ட டீச்சிங் ஜாப் மாதிரி.

விமானப்படை விமானிகள் – நாட்டின் விமானப்படையின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், ஆயுதமேந்திய ஜெட் விமானங்களை ஓட்டுவதில் வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணிபுரிகின்றனர். இந்த படத்துல ரா ஏஜெண்ட் மாதிரி சிலர் இருப்பாங்களே அது போல.
 
  இதுக்கு நடுவுல, கோ பைலட், ஏர்ஹோஸ்டர் மாதிரி, விமானத்துல உன்னோட பாஸ்போர்ட் வெரிப்பிகேஷன் செய்து சீல் குத்தி விடற ஆட்கள் முதல்கொண்டு டாய்லெட் க்ளீன் பண்ணற வேலை கூட இதுல வரிசையா தகுதிக்கு தேவைப்படும் விதமா மாறும்.
  
   பைலட்டுக்கு வானமே எல்லை. பறக்க தான் விரும்புவாங்க. அது எப்படிப்பட்ட சூழல் என்றாலும்… பறக்கணும். நீ நினைக்கற மாதிரி பணத்துக்காக, தேவைக்காக இங்க யாரும் வரமுடியாது. ஒவ்வொருத்தருக்கு ஒரு கனவு இருக்கு. உன் தம்பிக்கு என்ன கனவுனு கேளு. அவனுக்கு எதுல விருப்பமோ அதை படிக்க சொல்லு. ஜீவனால் வேலை இழக்க நேரும்னு நினைச்சா, நான் எங்கப்பாவிடம் உனக்கு ஒரு நல்ல வேலையை கொடுக்க சொல்லறேன். உங்கம்மாவோட ட்ரீட்மெண்ட் செலவை நான் பார்த்துக்கறேன். இது அனுதாபத்துல இல்லை. என் அம்மாவை விவரம் தெரிவதற்கு முன்ன இழந்ததால், இப்ப உங்க அம்மாவை என்னால முடிந்தா காப்பாத்த ட்ரை பண்ணறேன். ஜஸ்ட்… என் சாட்டிஸ்பேக்ஷனுக்கு. இதை நீ அனுதாபம், பாவம், இரக்கம்னு எந்த கேட்டகிரிக்குள்ளையும் கொண்டு வந்துடாத. புரிதா” என்றதும், பாவனா திகைத்தாள்.

அவள் மனதில் ஜீவன் வேலை விட்டு தூக்குவான். அடுத்து எந்த வேலை கிடைக்குமோ? என்ற கவலை அரித்துக் கொண்டேயிருந்தது.
  அதற்கு ஏற்றார் போல அர்னவ் வேலை பற்றி கூறவும் வாயடைத்து நின்றாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “ராஜாளியின் ராட்சசி-10”

  1. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 10)

    வாவ்…! இந்த அர்ணவ் என்ன இம்புட்டு நல்லவனா இருக்கிறான் ? வேலையும் வாங்கித் தரேன்ங்கிறான்.
    அம்மாவோட ட்ரீட்மெண்ட்டுக்கான செலவையும் தானே ஏத்துக்கிறேன்ங்குறான்.
    சூப்பர் தான் போங்க.

    ஆனா, இப்ப இவளுக்குத்தான் பதிலுக்கு தான் என்ன செய்யப் போறோம்ங்கிற குழப்பம் இருக்கும் தானே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Paravala ye ava kekamale velai kodukurenu la solran . Thanks for ur information sisy i lo iruka ithula padikum pothu aasaiya Iruku aana, eng onum panna mudiyathu avana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!