அத்தியாயம்-11
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாவனா அர்னவிடம் “இல்லை… எனக்கு எந்த உதவியும் வேண்டாம். பயமாயிருக்கு… ஜீவன் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம தான் உதவினார்னு நினைச்சேன். ஆனா வேலைக்கு சேர்ந்ததிலருந்து, பிளைட் ஏறியதும் என்னை தப்பா நினைச்சிருக்கார்.
இனி யாரிடமும் எந்த உதவியும் வேண்டாம்.” என்று கூறியவள், அர்னவ் புருவம் சுருக்கி, கோபமாய் கடந்து செல்ல, அவசரப்பட்டு வார்த்தை விட்ட மடத்தனத்தை எண்ணி பாவனா நொந்து போனாள்.
“அச்சோ.. சாரி சாரி.. நான் உங்களை தப்பா மீன் பண்ணலை. பயத்துல பேசிட்டேன்” என்று முன்னே முன்னே வந்து நின்றவளிடம், “உன்னை சேப்பா சென்னை கோல்ப் மைதானத்தில் விட்டுட்டு என் வேலையை பார்த்துட்டு நான் போயிடுவேன். போதுமா… இனி உன்னிடம் பேசினேன் என்றால் கேளுடி” என்று வேகமாய் நடையிட்டான்.
அவன் ‘டி’ போட்டு பேசியதில் சிலையாக நின்றவளோ, ‘பச் தப்பு தான். எதுக்கு தான் சிந்திச்சு பேசாம வார்த்தையை முன்ன வாறி இறைச்சிடறேனோ. இனி அள்ளவும் முடியாது. ஆனா நான் சொன்னதில் தப்பில்லையே. ஜீவனால் பாதிக்கப்பட்ட நான் சட்டுனு இப்படி பேசியதில் என்ன தப்பு?
எனக்கு இன்னமும் பயமிருக்கே. ஆகாயத்துலயிருந்து குதிச்சி இங்க வந்திருக்கேன்.’ என்றவளுக்குள், ‘அந்த ஆகாயத்திலிருந்து உன்னை காப்பாற்றியவனே அர்னவ் தான் என்னவோ இனி அவ்ன பாடு உன் பாடு’ என்று மனசாட்சி கூட அமைதியானது.
மாலை நெருங்க இரண்டு பெரிய தென்னை மரத்தில் தேங்காய் இளநீர் என்று கொண்டு வந்தவன், அதை உறித்து, நீரை குடிக்க தோதுவாக பாவனா முன் வைத்துவிட்டு அவனிடமிருந்த பேக்கெட் கீசெயினில், கத்தி போன்றவள்றால் தேங்காயை நிமிட்டி எடுத்து அதையும் அவள் புறம் நகர்த்தி தந்தான்.
இரவு குளிர்காய கட்டைகளை கொண்டு வந்தவன், தீ மூட்டி முடிக்க, “கசகசன்னு இருக்கு.” என்று பேச்சை ஆரம்பிக்க, “கடல்நீர்ல நனைச்சிட்டு பின்ன எப்படியிருக்கும்? உப்பு நீர் பிசுபிசுனு கசககசனு தான் இருக்கும்.” என்றான்.
தன்னை மூன்று மணி நேரமாக தவிர்த்தவன் பேசிவிட்டான் என்றதும் பாவனா நிம்மதியடைய, நேரமாகவும் இரவு நெருங்கவும், சில்லென்ற காற்றில் மனம் குளிர்ந்தது.
கப் மேகியில் நூடுல்ஸ் தயாரித்து நீட்டிவிட்டு, நூடுல்ஸை சுவைத்து இளநீர் தண்ணீரை பருகி, “குட் நைட்” என்று முடித்து கொண்டு தலைக்கு கைகளை கொண்டு சென்று நீட்டி நிமிர்ந்துவிட்டான்.
பாவனாவுக்கு நூடுல்ஸ் தொண்டையில் செல்ல மறுத்தது. மெதுவாக அர்னவையும், நூடீல்ஸையும் பார்த்து மெதுமெதுவாக விழுங்கினாள்.
கப் மேகி குட்டி கிண்ணம் அளவிற்கு தான் இருக்க, கடல் காற்றில், ஆறுவதற்குள் விழுங்கினாள்.
அர்னவ் உறங்கவும், டெண்டிற்குள் உறக்கமின்றி ஜிப்பை திறந்து அவனையே வெறித்தாள்.
‘பச்… இவரோட நல்ல மனசுக்கு நான் அதிகப்படியா தான் பேசிட்டேன்.
என்னை இக்கட்டுல இருந்து காப்பாத்தி, இங்க வந்து மாட்டிக்கிட்டாளும் கண்ணியமா இருக்கார். இப்ப என்னிடம் கோபத்துல இருக்காரா? அச்சோ காலையில் எவ்ளோ அழகா பேசினார்.
என் வாய் இருக்கே.. வாய்.’ என்று கவலையில் தோய்ந்தாள். ஒரு அரைமணி நேரத்தில் சுகமாகதென்றல் காற்றில் உறங்கிவிட்டாள்.
அர்னவ் அவள் பக்கள் எவ்விதமான அசைவு இல்லையென்றதும் மெதுவாக திரும்பி பார்த்தான்.
டெண்டின் ஜிப்பை மூடாமல் உறங்கியிருக்க, அவளது பால் முகம் நிலா வெளிச்சத்தில் அழகாக காட்சியளித்தது.
கொஞ்சம் போன்ற நிலவொளி என்றாலும், அர்னவின் விழிக்கு தரிசனம் கிடைத்தது.
முதல்முறை பாவனாவை பார்த்தப்போது இதயத்தில் தோன்றாத உணர்வெல்லாம் இப்பொழுது அர்னவ் இதயத்தை தாக்கியது.
ஏன் இவளை ரசித்தோம்? எதற்காக இவள் ஜீவனோடு சென்ற பொழுது அவளை எள்ளலாய் நினைத்தோம்? பிறகு அவள் தனியாக தங்கியதை கண்டதும் பாவனா மீது ஏற்பட்ட மரியாதை பிறந்தது.
இவளுக்காக வேலையை கூட யோசிக்காமல் ஜீவனை அடித்து துவைத்து, விமானம் மலையில் மோதவிட்டு, பேரசூட்டில் குதித்து, இதோ இப்பொழுது வரை ஒரு சேவகனா பொத்தி பொத்தி பார்த்துக் கொள்வதெல்லாம் எதனால்?
அவன் மனதோ இத்தனைக்கும் சேர்த்து ஒரே பதிலாக, ‘அவளை உனக்கு பிடித்திருக்கிறது. உன்னில் பாதியாக ஏற்கும் அளவிற்கு’ என்று ஒளிர்விடும் விதமாக தெரிவிக்க ஆடிப்போனான்.
ஆம்… அர்னவ் மனதில் தனித்துவமான இடத்தை தான் பாவனா பிடித்திருந்தாள்.
இத்தனைக்கும் அதிகமாக அவளை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அப்படியிருந்தும் பிடித்திருந்தது. இப்பொழுது அவள் பேசியதில் கோபம் குறைந்தது. ஜீவன் போன்றவனை கண்டப்பின், மற்றொரு ஆடவனை நம்புவதற்கு கடினம் தான். அதுவும் எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கே யார் உதவுவது?
நானே அவள் மீதுள்ள ஈர்ப்பால் செய்வதாக தானே எண்ணிக்கொள்ள முடியும்?
அர்னவிற்கு காதல் கல்யாணம் என்றதில் பெரிதாக இதுவரை நாட்டமில்லை. ஆனால் பாவனாவை கண்டதும் இரண்டிலும் ஆசைப்பிறந்தது. இன்று அவளது முகத்திருப்பலும் கோபத்திலும், தான் ஆசைப்பட்டது தவறோ என்று இந்நிலையில் எதையும் தீர்மானிக்க இயலாது உளங்கவே போராடினான்.
குளிரும், கடலலையின் ஒலியும், உறக்கம் வர ஏகாந்தமாக இருந்தாலும், அர்னவ் நேரம் தாழ்த்தி உறங்கினான்.
அடுத்த நாள் எழுந்துக்கொள்ள தாமதமாகியது. சூரியன் சுட்டெரிக்க, அர்னவ் எழுந்துக்கொள்ளும் பொழுது, பாவனா தனது சிகையை சிக்கின்றி கையால் சீவி க்ளிப் போட்டு அடக்கியிருந்தாள்.
கூடுதலாக ஒரு இடத்தில் நண்டை அடித்து நொறுக்கியிருப்பதை கண்டான்.
“என்ன பண்ணி வச்சியிருக்க?” என்று வந்தான்.
“நீங்க நேத்து மீன் பிடிச்சி அதை இலையில் சுருட்டி, நெருப்புல வாட்டி தந்திங்க. இன்னிக்கு என் டர்ன். காலையில் நண்டு கடலலை பக்கமிருந்ததை பார்த்தேன். அதான் ஒரு கட்டை வச்சி அதை சாகடிச்சி இங்க சேர்த்து வச்சியிருக்கேன். இப்ப இதை யூஸ் பண்ணலாம்ல?” என்று கேட்க, இறந்து குவிந்திருந்த நண்டை பார்வையிட்டான்.
ஒரு நண்டே கை அளவு பெரிதாக இருந்தது. இரண்டு மூன்றை திருப்பி பார்த்தவன், “எல்லாம் சினை வச்ச நண்டு.” என்றான்.
“அப்படின்னா?” என்றதும், “கன்சீவா இருக்கு. பேறுகாலத்துக்கு இங்க கடலலை பக்கம் வவ்திருக்கு. நீ சாகடிச்சு வச்சியிருக்க” என்றான்.
“அப்ப இந்த ஆரேஞ்சு கலர்ல இருப்பது எல்லாம் நண்டோட பேபியா” என்று கேட்க, அர்னவோ இந்த ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேசறதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை’ என்ற ரீதியில் நண்டை எல்லாம் அள்ளினான்.
ஒரு நண்டு சரியாக சாகாமல் தப்பித்திருக்க, நாலடி எடுத்து வைத்ததும் அர்னவ் கையை கவ்வியது.
“பச்” என்று கையை உதற, ஐந்து நண்டுகளும் மண்ணில் விழுந்தது.
அவனை கவ்விய நண்டு மட்டும் ஒரு கொடுக்கோடு சுத்த, அதை பிடித்து அழுத்தி, தூக்கி உடைத்தான்.
எல்லா நண்ஞையும் அப்படி அப்படியே நெருப்பில் போட்டு தனியாக சென்றான்.
லேசாக வெடிக்கும் சத்தம் கேட்டு முடிக்க, பாவனாவோ, ‘ஒரு பாத்திரம் கூட தேவையில்லை, நேத்து ஏதோ இலையை சுத்தி நெருப்புல போட்டார். இன்னிக்கு நண்டை அப்படியே போட்டுட்டு போயிட்டார்.
ம்ம்… தனியா எங்க போவார்?’ என்று யோசித்தவள், அங்கிருந்த நண்டை தான் பார்வையிட்டாள்.
அவள் பிடிக்க முயன்ற போது துள்ளியது. கொடுக்கை வைத்து இவளை மிரட்டியது. சாதாரணமாக பிடிக்க முடியாதென்று ஒரு கம்பை கொண்ஞு வந்து அடித்து சாகடித்தாள்.
நண்டின் தோள் எல்லாம் மினுமினுப்பாக, வண்ணத்துடன் இருந்தது. அவள் அம்மா வைத்து தந்து சாப்பிட்ட நண்டு எல்லாம் சின்னது. அதோடு வண்ணமெல்லாம் இல்லை. ஓடு சிறிதாக இருக்கும். இந்த நண்டின் ஓடு எல்லாம் சற்று கடினமாக உள்ளதென்று பார்த்ததும் தெரிந்தது.
அர்னவ் எரியும் நெருப்பில் கூடுதலாக நான்கு முட்டைகளை அவிக்க போட்டான்.
“இது என்ன முட்டை?” என்று கேட்க, வாயில் நுழையாத ஒரு வகை பறவையின் பெயரை கூறி அதன் முட்டை என்றான்.
“பாவம்ல… இப்ப அந்த பறவை அதோட மீட்டை இல்லாததை நினைச்சி ஃபீல் பண்ணுமே.” என்று கேட்டாள்.
“ஏய் லூசு… அதெல்லாம் ஃபீல் பண்ணாது. இங்க நிறைய பாம்பு எல்லாம் உலாத்துறப்ப, முட்டை இப்படி இழக்க நேரும். அதனால் பறவை ஃபீல் பண்ணாது. அதுங்க அடுத்த முட்டை போட தன்னை தயார்படுத்திக்கும்.
சும்மா… நொய் நொய்னு பேசாத. இரிட்டேட்டா இருக்கு.” என்றான்.
“ஏற்கனவே நான் நண்டு சினை வச்சியிருப்பது தெரியாம அதை பிடிச்சிட்டேன். இப்ப நீங்களும் முட்டையை கொண்டு வந்துட்டிங்க. நாம பாவத்துக்கு மேல பாவம் செய்யறோம்” என்றாள் சோகமாக.
“உலகத்துல உணவு முறையே சங்கிலி தொடர் தான். இந்த நிமிஷம் இந்த காட்ல சிங்கம் புலி சிறீத்தை இருந்தா, அதுங்களுக்கு நாம தான் டின்னர் பிரேக்பஸ்ட் லஞ்ச் எல்லாம். அந்த நேரம் அது நம்மளை பார்த்து பாவம் பார்க்குமா?
இந்த கடலில் தாய் மீனும், மீன் குஞ்சு எத்தனை பார்த்தோம். மேல சுத்தற கழுகும் மற்ற பறவையும், மீன் குஞ்சை கவ்வும்.
நாம மீன் குஞ்சுக்காக கவலைப்படலாம். ஆனா தாய் பறவையான அதோட குழந்தைக்கு அந்த மீனை கொண்டு போய் கொடுக்கும்.
இந்த இடத்துல நான் தாய் பறவையா இருந்துட்டு போறேன். என்னை நம்பி வந்த நீ, உணவில்லாம கஷ்டப்பட கூடாது.” என்று பொதுவாய் உரைத்தான்.
“நண்டு வெந்துயிருக்கும் மெதுவா சாப்பிடு. உறிக்க தெரியுமா?” என்று கேட்க, தலையைதலையை ஆட்டினாள்.
ஆனால் முதல் கொடுக்கை கடிக்கும் போதே அம்மாடி பல் வலிக்கு. இதென்ன இப்படி கடிக்க கஷ்டமாயிருக்கு” என்று முனங்கினாள்.
ஒரு கல்லை கொடுத்து, ஓட்டை உடைச்சிட்டு அந்த சதையை மட்டும் சாப்பிடு. ஆங்… உப்பு காரம் இல்லாம சப்புனு இருக்கும். ஆனாலும் ஹெல்தி வேஸ்ட் பண்ணாத” என்றவன் இளநீரை ஓட்டை மட்டும் போட்டு பக்கத்தில் வைத்தான்.
நல்ல வேளை தாகம் தீர்க்க இளநீர் மட்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.
கல்லை வைத்து உடைத்து அர்னவ் சொன்னது போல சாப்பிட்டாள்.
இதெல்லாம் கூட ஞொல்லி தந்தாங்களா?” என்று கேட்க, “எந்த இடத்துல எந்த காட்ல இறக்கி விட்டாலும் அந்தந்த இடத்துல இருக்கற செடி கொடி மரத்தை ஆராயணும். அதுல சாப்பிடறது மட்டும் எதுனு தெரிந்து வச்சிக்கணும். இல்லைன்னா வாழ தெரியாம சாக வேண்டியது தான்.
எந்த இடத்துலயும் வாழ தெரிஞ்சிக்கணும். அது முக்கியம் இதெல்லாம் கிளாஸ் எடுத்து கத்துக்கணும்னு அவசியமில்லை.” என்றவனை பாவனா கண்ணெடுக்காமல் பார்வையிட, அர்னவோ அவளை தான்டி பார்வையிட்டு, வேகமாய் எழுந்து ஓடினான்.
கடலில் தூரல்தில் ஒரு ரோந்து படகு வந்து சேர, அதில் சந்தோஷை கண்டு புன்னகை மலர்ந்து கையை அசைத்தான்.
சந்தோஷும், அங்க செல்லுங்கள் என்று கூற, படகு இவர்கள் பக்கம் வந்தது.
“பாவனா… சந்தோஷ் வந்துட்டான். நாம இங்கயிருந்து போகற நேரம் வந்துடுச்சு.
நான் சென்னேன்ல எப்படியும் ரோந்துல இருப்பாங்க. ” என்றான்.
பாவனாவோ அர்னவின் சந்தோஷத்தில் துளிக்கூட இல்லாதவளாக, படகை வெறித்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Wow super crab flesh super sis. Fantastic narration sis.
Avalukum arnav ah pidikuthu pola adan ava inga irunthu pokurathuku happy ah ilama iruka
Pesarattu yellampesitti eppo yenna varutham .. oru vazhiya kaapatha vanthutaanga
ராஜாளியின் ராட்சசி…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 11)
அடிப்பாவி..! இவளுக்கு நாட்டுல இருக்கிறதை விட, காட்டுல இருக்கிறதே பிடிச்சிருக்கு போல. அதுவும் அர்ணவ்வோட இருக்கிறது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு போல.
அர்ணவ் மனசுல, பாவனா மேல காதல் வந்தாச்சு, ஆனா இவளுக்கு வந்ததா..? ஏன்னா, ஏற்கனவே ஜீவன் நல்லதொரு பாடம் சொல்லி கொடுத்துட்டானே, அப்படியிருக்கும்போது காதல் வரதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Appatiyo santhosh vanrhuttan evnkala kappaththa arnav vittu piriya poromnu pavana feelings ah eruppal super story sister samma oru nallaikku comment pathivakuthu oru nallaikku comment pathivaka mattinkurhu
பாவனாக்கு இப்போ தான் லவ் feel ஆகுது போல…❤️♥️☺️
Rajali love nu nalla therinjikittan aana ava kekura kelvi ku la pathil solla kasta paduran avaluku therila atha kekura . Santhosh eppadiyo kuptu vantan boat ah aana ratchasi ku enavo poga manasu illa polaye oru vela arnav kudave irukalamnu thonutho avalukum love vanthuducha
Aaranav kum love iruku bhavana kum iruku na ra thu ippo ava boat parthu santhosham padama ipadi verichi pakkura thu la yae theriyuthu
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 bavana kum arnav kooda time spend pannanum nu aasai pola boat vandhadhum sogamayitaley😥
அருமையான பதிவு
Interesting😍
💕💕💕💕💕💕💕💕👌👌👌