Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-17

ராஜாளியின் ராட்சசி-17

அத்தியாயம்-17

பாவனாவின் முகபாவனை ஏதோவொரு கலக்கத்தை தர, “இப்படின்னு தலையாட்டினா… என்ன அர்த்தம்? எ..என்னை பிடிக்கலையா?” என்று கேட்க, பாவனா கண்ணீரோடு ஆமென்று தலையாட்டினாள்.

   “வாட்” என்று அர்னவ் சீற்றமாய் கத்த சந்தோஷ் சட்டென திரும்பினான். நண்பன் ஆசையாக கத்தி கூச்சலிட போகின்றான் என்றதற்கு மாறாக அதிர்ச்சி காட்டி நிற்பதாக தோன்றவும் குழப்பமானான்.

அர்னவோ “ஏன்.. என்னை பிடிக்கலை? காரணம் சொல்லு” என்று மிரட்டாத குறையாய் நின்றான்.‌

“ஏன் பிடிக்கணும். அதுக்கு காரணம் சொல்லுங்க? உங்க உதவியை ஏற்றுக்கிட்டதால உங்க காதலை மறுக்க கூடாதா? இல்லை… உதவியதே என்னிடம் காதலை சொல்லறதுக்கு தானா? இப்படி வந்து நின்றுடுவிங்கன்னு தான் உங்கப்பாவிடம் வேலைக்கு சேர நீங்க சொன்ன ஆஃபரை அவாய்ட் பண்ணினேன். அப்பயும் காதல்னு வந்து நிற்கறிங்க” என்று ஏளனமாய் உரைத்தாள்.

  அர்னவிற்கு தன் எவ்விதமான கைமாறு எதிர்பார்க்காமல் செய்த உதவியை, இவள் இப்படி இவ்வெண்ணத்தில் கேட்க கொதிநிலை அடைந்தான்.

“ஏய்” என்று அதட்ட, சந்தோஷ் அருகே வந்துவிட்டான்.‌

  “என்ன ஆச்சு அர்னவ்” என்று கேட்க, “காதலிக்கறேன்னு சொன்னதுக்கு பிடிக்கலைன்னு சொன்னாடா. ஏன் பிடிக்கலைன்னு கேட்டா, உதவி செய்தா காதலிக்கணுமா? இல்லை இதுக்கு தான் உதவி செய்தியானு கேட்கறா? இவளை” என்று கழுத்து நரம்பு புடைக்க அடித்திடும் வெறி. கோவில் என்பதால் பார்வையில் பஸ்பமாக்க முயன்றான்.
  ஆனால் பாவனா திமிராக சொன்னது போலவும் இல்லை, உண்மையாக சொன்னது போலவும் தெரியவில்லை‌. சந்தோஷிற்கு. அர்னவோ பாவனா காதலை உடனே மறுத்து பேசியது, அதுவும் காரணமென்று அவள் சுட்டிக்காட்டியதில் கண்மண் தெரியாத கோபத்தில் நின்றான்.‌

   “ஏன்மா… இப்படி பேசின. அவன் உன்னை எவ்ளோ விரும்பறான்னு எனக்கு தான்‌ தெரியும்.
    நீயும் ஜீவனும் பிரைவேட் ஜெட்ல வந்தப்ப, ஜீவன் உன்னை நெருங்கும் பொழுது கவனிச்சு, உன்னை காப்பாற்ற, வேலையை கூட மறந்து வந்தான்.
  தோள்ல குண்டு உரசி போனப்பவும் வலியை தாங்கிட்டு, உன்னை தானம்மா காப்பாத்தினான். பாரசூட் ஜீவன் பிடுங்கிட்டு சில்லித்தனமா குதிச்சப்ப, உன்னையும் காப்பாத்தினான்.‌
  அதை விட முக்கியம் இரண்டு நாள் உன்னோட தனியா இருந்திருக்கான். கண்ணியமா பழகியிருக்கான். அந்த ஐலேண்ட்ல உன்னிடம் அவன் வரம்பு மீறியிருந்தா கூட உன்னை காப்பாத்த, இதோ இந்த வினாயகரே கூட வந்திருக்க முடியாது.
அன்னிக்கு நான் உங்களை பார்த்து ரோந்து போலீஸ் உதவியோட வந்து அழைச்சப்ப, அர்னவ் கூடவே இருக்கணும்னு தான் உன்‌முகம் சொல்லிச்சே தவிர, மத்தபடி அப்பாடா தப்பிச்சிட்டோம்‌, வீடு திரும்பறோம்னு உன் முகத்துல சந்தோஷம் இருந்தது போல இல்லையேம்மா.

   நாளு நாள் முன்ன போன்ல கூட அர்னவிடம்..” என்று அடுக்கும் போது, “நிறுத்து சந்தோஷ்… இவளிடம் போய் எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க. அவளுக்கு அதெல்லாம் தெரியாமலா? விடுடா… இந்த உலகத்துல பொண்ணா இல்லை. நாம போகலாம்.” என்று நண்பனை அழைத்து விறுவிறுவென சென்றான்.‌

  சந்தோஷும் நண்பன் செல்ல “அவனை மாதிரி ஒரு பிரெண்ட் என் லைப்ல பார்த்ததில்லை. அவனை கணவரா அடைய போற நீ, கொடுத்து வச்ச பொண்ணுனு நினைச்சேன். ஆனா உன் தலையில் நீயே மண் அள்ளி போட்டுட்டம்மா” என்று கூறிவிட்டு அர்னவை பின் தொடர்ந்தான்.‌

  பாவனா இடிந்து போனவளாய் அரசமரத்தினை சுற்றியிருந்த கல்லில் பிள்ளையாருக்கு தோழியாய் சிலையாக அமர்ந்தாள்.

  தாரை தாரையாக கண்ணீர் வழிய, “ஏன் கடவுளே எனக்கிந்த தண்டனை. நான் விரும்பியவர். என்னை விரும்பறதா ஆசை ஆசையா சொன்னார். ஏன் என்‌ வாயால மறுத்து பேச வச்ச இறைவா” என்று மனதோடு குமறினாள்.
 
  இங்கு அர்னவோடு வருவதற்கு முன் பாவனா உடை மாற்ற தனியறை வந்ததும், பாவனாவுக்கு ஒரு போன் கால் வந்தது.
  பெரிதாக மர்ம மனிதன் என்று அறிமுகமின்றி ஜீவன் தான் பேசினான்.‌
 
  முதலில் ஒரு நக்கலான நலன் விசாரிப்பு, அதற்குபின் ”கையில சிக்காம ஓடிட்ட. நல்ல நேர காலம் தான். உடம்பை விற்காம ஓசியிலயே உங்கம்மாவுக்கு மருத்துவ செலவை அந்த அர்னவ் தலையில் கட்டிட்ட.
  வேலையும் சிம்பிளா எல்லாரும் பார்க்குற இடத்துல சேஃப்பா இருக்க. வாழ்த்துகள்” என்று கூறினான்.

  பதிலுக்கு பாவனா பழிக்கு பழியாக பேசவில்லை. “ஹாப்பி வினாயகர் சதூர்த்தி சார். உங்களால் தான் இந்த ஆஃபர் எல்லாமே. அதனால் உங்க மேல கோபம் கூட இல்லை. அதுக்காக  கண்டபடி பேசலாம்னு நினைக்காதிங்க போலீஸிடம் கம்பி எண்ணுவிங்க.” என்றாள்.

ஜீவனோ பலமாய் சிரித்தவன், ”என்ன அர்னவ் கோவில்ல தனியா பேச கூப்பிடவும் தைரியம் எல்லாம் பலமா வருது போல… அவன் இருக்கற தைரியமா? போலீஸில் கம்பி எண்ணப்போவது நான் இல்லை. உன் அர்னவ் தான்.
   உன் ஆளு அர்னவ் உன்னிடம் லவ் எக்ஸ்போஸ் பண்ண தான் ஆசை ஆசையா வந்திருக்கான். எனக்கு இந்த விஷயம் நாலு நாள் முன்ன, அவன் வேலை செய்த இடத்துல பேசறப்பவே என் ஆட்களால் சேகரிச்சது.
  அப்ப போன் போடாம இப்ப உனக்கு போன்‌ பண்ணறேன்னா விஷயம் இதுதான். நல்லா கேட்டுக்கோ… இப்ப அர்னவ் உன்னிடம் காதலை சொல்ல போறான். நீ அப்படியே வானத்துல பறந்து சம்மதம் சொல்லிடாத. அப்படி சொன்ன… அவன் பிரைவேட் பிளைட் ஓட்ட, உரிமை பெற்று, இல்லீகலா அந்தந்த பகுதிக்கு டிரக்ஸ் சப்ளை பண்ண போறான்னு கேஸ் பைல் ஆகும். பிகாஸ்… ஆல்ரெடி அர்னவை மாட்டி விட எல்லா வேலையும் பார்த்துட்டேன்.‌
  ஆனா மாட்டிவிடமாட்டேன். மாட்டக்கூடாதுன்னா நீ அர்னவ் காதலை அக்சப்ட் பண்ணக்கூடாது.
அந்த ராஜாளிக்கு உன் மேல காதல் வந்ததும், அவனுக்கு முதலடி உன் மறுப்பா இருக்கணும். அப்படி நீ காதலிக்கலைன்னு சொல்லலை. இன்னிலருந்து ஆரம்பிச்சு எண்ணி இரண்டு வாரத்துல அர்னவை மாட்டிவிடுவேன்.
  ஏற்கனவே அவனோட பிரைவேட் பிளைட்ல டிரக்ஸ் கடத்தியதா அவனா மாட்டிவிட்ட கதை இருக்கு.

  இப்ப அதே போல டிரக் கேஸ்ல மாட்டினா கதை எப்படி போகும் தெரியுமா? ஏற்கனவே மாட்டியவன் ஜஸ்ட் இடைத்தரகர். டிரக்ஸ் கொண்டு போக உதவியதே அர்னவ் என்று சாட்சியா அவன் மாறுவான். அப்பவும் இப்பவும் அர்னவ் தான் டிரக்ஸ் சப்ளை செய்ததா போலீஸ் கைது செய்தா, உன் அர்னவ் பறக்க முடியாது. அதோட ஜெயிலில் அவன் தான் களி திண்பான்.‌
  இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னா ஜஸ்ட் அவன் பிரப்போஸ் பண்ணும் போது நீ நோ சொல்லணும். ஏன்டி… அவன் ஒரு பைலட், என்னை மாதிரி பணக்கார முதலையோட, சரிக்கு சரியா நிற்க முடியுமா? அவன் தங்கியிருப்பதே வாடகைக்கு.. ஒரு ஹோட்டல்ல தான்‌. அப்படியிருக்க… இதெல்லாம் பெரிய பிராசஸ். மருத்துவ உதவியெல்லாம் தெரிந்தவர்களோட உதவியால பண்ணறான்.” என்று குழம்பி விட்டிருக்க, பாவனாவுக்கு உடல் நடுங்கியது.

  அர்னவிடம் தனியாக  கூறிடலாமென்று தான் நினைத்து வந்தாள். ஆனால் பூ வாங்குமிடத்தில், அர்ச்சனை பூ வாங்குமிடத்தில் அவளது அர்ச்சனை கின்னத்தில், அவர்களை ‘கண்கானிப்பதாக தெரிவித்திருந்தது.

  பாவனாவுக்கு பகீரென்ற உணர்வு. இதில் காதில் உள்ள ப்ளூடுத்தில், நீ மட்டும் இப்ப காதலிப்பதாகவோ, இல்லை… என்னை பத்தியோ சொன்னா, அடுத்த நிமிஷம் சத்தம் எழுப்பாத சைலன்ஸர் துப்பாக்கியால், அர்னவை குறிப்பார்த்து சுடப்பட்டு செத்துகிடப்பான். இதுக்கு மேல உன்னிஷ்டம். அவனோட இறப்பு உன் கையில். எனக்கு தேவை அர்னவோட உயிர் இல்லை. அவன் மனசொடிந்து உன் காதல் கிடைக்காம போகணும்.” என்று விளக்க, வீட்டிலிருந்து அசட்டையாக வந்த பாவனா, கோவிலில் அர்னவ் காதலை சொன்னதும், அதை விட, ஜீவன் துப்பாக்கி என்று மிரட்டவும் நடுங்கினாள்.
  ஏற்கனவே அவளால் தான் அர்னவ் குண்டடிப்பட்டிருந்தான்.
   ஜீவனிடம் துப்பாக்கி எல்லாம் புழங்குவதை அவளறிவாள். இதில் இப்படி அச்சுறுத்தி பேசினால் எவ்வாறு கடப்பது? அதனால் அர்னவிடம் காதலை மறுப்பதாக நடித்தாள்.
  ஜீவனோ ப்ளூடூத் மூலமாக, ‘வாவ்… சூப்பர் பாவனா. இது போதும்.’ என்றவன், ‘தீபக்… அர்னவை சுட வேண்டாம்.” என்று கூறியதும் கேட்டது.
   ஆக இன்ஸ்ட்ரக்ஷன் எல்லாம் கொடுத்து இங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தான்‌ ஜீவன்.
அர்னவ் பாவனாவை திட்டிவிட்டு சென்றதும் ஜீவன் வருவானென நினைக்க, “ஓகே பாவனா… எனக்கு இது போதும். வாக்கு தந்தது போலவே அர்னவ் உயிர் இந்த நொடி காப்பாற்றப்பட்டது. ஓகே.. நான் அப்பறம் சந்திப்பேன் இந்த நம்பரை பிளாக்ல போடக்கூடாது. இந்த நம்பரை கண்காணிச்சிட்டு இருப்பேன்” என்று பேசி அணைத்தான்.

  அந்த நொடியிலிருந்து மரத்தில் பிள்ளையாருக்கு தோழி போல கல்லென சமைந்தவளை, வினோத் தான் தீண்டினான்.

  “இங்க என்ன பண்ணற அக்கா. என் பிரெண்ட்ஸ் கால் பண்ணி நீ ஏதோ அழுவறியாம் வந்து கூட்டிட்டு போன்னு சொன்னாங்க.” என்று கூறி அர்னவை தேடினான்.

  “அர்னவ் சார் எங்க?” என்று கேட்க, “அவர் போயிட்டார்.” என்றவள் கண்ணீரை மறைத்து இயல்பாக உரைத்தாள்.

  “என்னக்கா ஆச்சு. அர்னவ் சாரை விரும்பறியா?” என்று கேட்டுவிட்டு பம்மினான்.‌
  கல்லூரி அடியெடுத்ததும், மீசை முளைத்த விட்டதாக பொறுப்பான கேள்வியா? என்று பாவனா கேட்டுவிட்டாள். என்னயிருந்தாலும் அப்படி கேட்க கூடாது. கேட்டுவிட்டானே…!

”வினோத்.. நான் அழுதேன்னு அம்மாவிடம் சொல்லாத. இது காதல் விவகாரமில்லை.” என்றவள் மனதில் “அர்னவ் சார் உயிர் பத்தியது.” என மனதில், எப்படியாவது அர்னவிடம் தெரிவிக்க நினைத்தாள்.

ஜீவன் வசதிபடைத்தவன், தனி விமானத்தில், பயணம் செய்யும் அளவிற்கு வசதி. அதிலும் தனியாக துப்பாக்கி எல்லாம் வைத்திருக்கும் மனிதன். வஞ்சம் வைத்து பழித்தீர்க்க எந்த எல்லைக்கும் செல்வான். போன் கால்ஸை டிரேஸ் செய்வது எல்லாம் சுலபமே. 
  அப்படியிருக்க அர்னவிடம் போனில் எப்படி உரைப்பது? ஆனால் எப்படியாவது அர்னவிடம் தெரிவிக்க வேண்டும்.’ என்று இருக்கும் பொழுது கண்ணெதிரே காயப்படுத்தி விட்டுட்டு தனியாக புலம்பினாள்.

  என்ன செய்ய, இது போன்ற சம்பவத்தை அவள் இதற்கு முன் அனுபவித்து களைந்திடும் ஞானியாக இருந்ததில்லை. சாதாரண பெண்… அதுவும் மிடில்கிளாஸில் பயத்துடன் மானத்தை காப்பாற்ற போராடியவள்.
  
  இப்படி பலவிதமான புலம்பலிலும் அர்னவிடம் எவ்வாறு தெரிவிக்க என்று, நகம் கடித்து சிந்தித்தாள்.

தன்னையும் தங்கள் போனையும் யாரோ கண்காணிப்பதை உணர்வது உணர, ஜீவன் அறியாது தெரிவிக்க வேண்டும்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

8 thoughts on “ராஜாளியின் ராட்சசி-17”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha jeevan enna eppdi marubadiyum vandhu prechanai pandran 🙄 arnav dhan Edhuku badhiladi tharanum avanuku nalla eruku😐

  2. Jeevan Bhavana ah va kozhapi pesa vachitan aval um bayathula avan uyir ku aabathu vara koodathu nu pesita aana ava nenaikirathu pola epadi aachum indha vishayam Aarnav kita poi seranum

  3. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 17)

    அடி போடி கூறுகெட்டவளே..!
    போன் பண்ணவனுக்கு கூட சந்தோஷ் வந்தது தெரியலையா…? இல்லை, கோவிலுக்குள்ள அவனை கூட்டிட்டுப் போய் அழகா அவன் கிட்ட சொல்லியிருக்கலாம், அதுவும் இல்லைன்னா அவங்கம்மா, தம்பி போன்ல கூட எல்லா விஷயத்தையும் போட்டு உடைச்சிருக்கலாம், போன்ல பேசினாத்தானே பிரச்சினை, யார் போன்ல இருந்தாவது ஜீவன் திரும்ப மிரட்டறான்னு மெஸேஜ், வாய்ஸ் கால் இப்படி ஏதாவது அனுப்பிச்சிருக்கலாம்.
    வழின்னு யோசிச்சாலே போதும் ஆயிரம் வழி கண்ணுக்கு புலப்பட்டுடும்.
    கையாளாகாதவனுக்கு தான் வழியே கிடைக்காது, கையாள்றவனுக்கு பத்தாயிரம் வழி கிடைக்கும் தானே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!