அத்தியாயம்-7
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாவனா இமைதிறந்து பார்வையிடும் நேரம், அர்னவ் அமைத்திருந்த டெண்டில் படுத்திருந்தாள். மெதுவாக அந்த ஜிப்பை திறந்து வெளியே எட்டிப்பார்க்க, இவள் கொண்டு வந்த குச்சி மரக்கட்டை வைத்து தீ மூட்டி, அதற்கு முன்னால் அமர்ந்து, அர்னவ் பிரட் ஜாம் என்று விழுங்கினான்.
பாவனாவின் அசைவு தெரிய, அர்னவ் திரும்பி, “இப்ப ஓகேவா” என்றான்.
தலையை ஆட்டியவள், சுற்றிலும் இருட்டு, சில்லென்ற காற்று, என்றதும், உடல் சிலிர்க்க, அவன் சாப்பிடுவதை கண்டாள்.
எங்கயிருந்து பிரெட் ஜாம் கிடைத்தது என்று முழிக்க, அவனாக பிரெட்டை எடுத்து, கத்தியால் ஜாமை எடுத்து தடவி நீட்ட, “இதெல்லாம் எங்க கிடைச்சது?” என்று கேட்டாள்.
“விமானம் வெடிக்க போகுதுன்னு தெரியவும், இரத்தம் சிந்த, என்னத்த தேடிட்டு இருந்தேன்னு நினைச்ச. எங்க விழுவோம்னு தெரியாது. எத்தனை நாள்ல நம்மளை தேடி யாராவது வருவாங்கன்னு நம்பற. அட்லீஸ்ட் இரண்டு நாளுக்காவது சாப்பிட எதுவும் வேண்டாம்?” என்று கூறவும், மெதுவாக பிரெட்டை வாங்கினாள்.
“உங்க பிரெண்ட் சந்தோஷ் அப்பறம் அந்த ஜீவன் அவங்களுக்கும் சாப்பிட ஏதாவது கொடுத்திங்களா?” என்றதும் அவளை நக்கலாய் பார்த்தான்.
“அந்த ஜீவனே உனக்கு பேரசூட் இருக்க கூடாதுன்னு ஒன்னை தூக்கிட்டு அவசரமா குதிச்சிட்டான். என்னை சுட்டவனுக்கு நான் சோறு வேற தந்து விடணுமா” என்று பிரெட்டை சாப்பிட முனைந்தான்.
”பச்.. சந்தோஷ் என்ன பண்ணறான்னு தெரியலை. என் கவலை எல்லாம் அவனை பத்தி தான். உயிர் பிழைச்சி சரியா தரையிறங்கியிருப்பான். பட் என்னால வேலையில் ஏதாவது பங்கம் வந்துடக்கூடாது. இப்ப சாப்பிடா அவன் பையில சில உணவை வச்சேன். பைலட் என்பதால் சில விஷயம் தனியா தீவுல மாட்டினா என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுன்னு அவனுக்கு தெரியும். இருந்தாலும் என் பிரெண்டை ஆப்டர் நேர்ல சந்திக்கும் போது வேலை போயிடாம இருக்கணும். ஏற்கனவே ஒருமுறை தனி விமானத்தில் ஒருத்தர் டிரக்ஸ் கடத்த, அதை போலீஸிடம் அறிவிச்சிட்டேன். பணத்தை வாறியிறைச்சு வெளியே வந்துட்டான். திரும்ப வந்தவன் எனக்கு மேலதிகாரியா இருந்தவரிடம் எனக்கும் சந்தோஷுக்கும் வேலையை காலி பண்ணினான். எனக்கு வேலை போனதுல பிரச்சனையில்லை. ஆனா என்னால சந்தோஷுக்கும் வேலை போச்சு.
ரொம்ப கஷ்டப்பட்டு, இப்ப வொர்க் பண்ணறவரிடம் என் நிலையை சொல்லி சந்தோஷுக்கு மட்டும் வேலையை கேட்டேன். காட் கிரேஸ் எனக்கும் சேர்த்து வேலை கிடைச்சது. இப்ப இந்த ஜீவன் உயிரோட இருந்து புகார் கொடுத்தா இந்த வேலையும் போயிடும். ஆனா இந்த முறை அதுக்கு காரணம் நீ தான்” என்று அவளை குற்றவாளியாக கூறினான்.
ஏன்டா கேட்டோமென்ற ரீதியில் பாவனா வாடினாள்.
“சாப்பிட்டு போய் தூங்கு” என்று அனுப்ப, பாவனாவோ, தலையாட்டி பிரெட்டை விழுங்கி அர்னவிடம் சொல்லிவிட்டு படுக்க டெண்டிற்கு சென்றாள்.
அர்னவ் நெருப்பருகே கால்நீட்டி சாய்ந்தபடி, உறங்க முயன்றான். அவன் கணிப்பின்படி எவ்வித அச்சுறுத்தும் விலங்கும் இல்லையென முடிவெடுத்தான்.
நள்ளிரவு எவ்வித பிரச்சனையுமின்றி கடந்திட, அடுத்த நாள் எழுந்த போது, டெண்ட் திறந்திருந்தது.
“எங்க போய் தொலைந்தா இவ” என்று தேடுதலில் வேலையின்றி, கடற்கரையில் கால் பதித்து கடலலையை வேடிக்கை பார்த்தாள்.
கடலா பார்த்தவாறு அமர்ந்திருந்தவளை கண்டு, “எப்ப எழுந்த” என்று வரவும், “நீங்க நல்லா தூங்கிட்டு இருந்திங்க. எழுப்ப தோணலை. கடலலை வேற ‘இங்க வா இங்க வானு வந்து வந்து சோகமா இருக்கற மாதிரி கூப்பிட, வந்துட்டேன். எவ்ளோ அழகான இடம்.” என்று கடல் மீது பார்வையை எடுக்காமல் உரைக்க, “அழகா தான் இருக்கு” என்று பேசியவனின் பேச்சில் பாவனா திரும்ப கடலை பார்த்தவன் “அழகை குத்தகைக்கு இருக்குற விஷயத்தில் நிறைய ஆபத்தும் இருக்கு” என்று ஒரு மார்க்கமாய் உரைத்திட, பாவனாவோ ”தோட்டாவையையே முழுங்கிய ஆளு, இயற்கை அழகுல என்ன குறை கண்டிங்களாம்” என்று போலியாக முறைத்து சென்றாள்.
‘தோட்டாவையை முழுங்கினேனா?’ என்று கையை கவனித்தான். கட்டி வைத்த பேண்ட்எயிட் புண்ணியத்தில் ரத்தம் உறைந்த நிலையில் இருக்க, வலி சற்று எறும்பு கடிபோல தான் அர்னவ் உணர்ந்தான்.
பாவனாவை தேடி மீண்டும் டெண்ட் இருந்த இடத்திற்கே வர, “டெண்டுக்குள்ளயிருந்து பா..பா..பாம்பு போகுது. போச்சு… அது என்னை க..க..கடிச்சிருக்கும்.” என்று சரிய, “ஏய்ய்ய்..” என்று மண்ணில் விழுபவளை தாங்கினான்.
“ஏ லூசு” என்று கன்னத்தில் மிதமாய் தட்ட, எதிர்வினையில்லை என்றதும் நன்றாக கன்னத்தை தட்டினான். கிட்டதட்ட கன்னத்தை பதம் பார்த்த அடி, திடுக்கிட்டு வலியில் இமை திறந்து “நான்.. சாகப்போறேன். என்னை பாம்பு கடிச்சிடுச்சு. என் உசுரு போகணும்னு அந்த கடவுள் எழுதிட்டான். நான் தான் அங்க தப்பிச்சு இங்க தப்பிச்சு இப்ப பாம்பு கடிச்சி சாகப்போறேன்” என்று தேம்பி அழுதாள்.
“பைத்தியமா நீ. நான் ஏதோ தனியா வந்த பொண்ணு. ஜீவனையே தனி அறையில் விட்டுட்டு நிலாவை ரசித்கறியே, பரவாயில்லை போல்டா தான் இருக்கன்னு நினைச்சேன். சரியான தொடை நடுங்கியா இருக்க. முதல்ல எந்திரி, என் ஷோல்டர் என்ன, நீ படுத்துக்க குத்தகைக்கு கொடுத்த இடமா. அதுவும் தோட்டா உரசிய கையிலயே வெயிட்டை போடுற.” என்றதும் பட்டென எழுந்தாள்.
அர்னவின் நெஞ்சில் லாவகமாக அல்லவா சாய்ந்திருந்தாள்.
“பாம்பு கடிச்சா உங்க ஊர்ல தைரியமா இருப்பாங்களா? ஹலோ நான் செத்துட்டா என்ன பண்ணுவிங்க” என்று முகமருகே வந்து கேட்க, “அது விஷத்தன்மை இல்லாத பாம்பு. அதோட உன்னை பார்த்தா பாம்பு கடிச்சதா தெரியலை.” என்று நடந்தான். இரவில் நெருப்பு மூட்டிய இடம் லேசான நெருப்பு கனல் இருந்தது. அதில் சில குச்சியை போட்டு வைத்தான்.
“எதற்கும் உடலில் எங்கயாச்சும் பற்தடம் மாதிரி இருக்கானு செக் பண்ணிக்கோ” என்று காலார நடந்தான்.
பாவனாவோ வேகமாய் பார்வையிட, பெரிய மரத்திற்கு பின்னால் ஓடினாள். அப்படியொன்றும் பாம்பு தீண்டியது போல எதுவும் தெரியாமல் போக, நிம்மதியடைந்தாள்.
அர்னவ் கடலில் கால் நனைத்து, அங்கிருந்த மீன்களை பார்வையிட, பாவனா அர்னவ் அருகே வந்ததும் தான் அவன் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கடலில் நடந்துக்கொண்டிருப்பதை கவனித்தாள். பேண்ட் கடற்கரையில் இருந்தது.
அப்படியே திரும்பி போயிடலாம் என்று நடந்தவளிடம், “மீன் ஆமை பார்க்க வர்றியா? பயப்படாம ச்நதோஷ் சுப்ரமண்யம் ஜெனிலியா மாதிரி பிஹேவ் பண்ணாம, கோல்ப் மைதானத்தில் தைரியமா உள்ள நடந்து வந்தது மாதிரி வரணும்.” என்று கூப்பிட, பாவனா ‘என்னை இவர் அப்பவே நோட் பண்ணிருக்காரா?’ என்று கண்களை உருட்டி வந்தாள். ஏனெனில் முன்பு தொழில் ரீதியாக இருந்த மாலத்தீவிலும் அர்னவ் இதுபோன்ற ஷார்ட்ஸ் அணிந்து, மேலே ஸ்லீவ் பனியன் அணிந்திருந்தது நினைவு வந்தது.
பறவை இனங்களில், வெள்ளை டெர்ன் மற்றும் ஃப்ரிகேட் பறவை உட்பட தோராயமாக 36 கடல் பறவைகள் இருக்கும். அதில். சாம்பல் ஹெரான், ப்ளோவர், காட்விட், சாண்ட்பைப்பர், குருவி, ஷ்ரைக், புறா மற்றும் புறா போன்ற பறவைகள் அடோல்களின் புதர்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்கின்றன. சாம்பல் ஹெரான் கடற்கரை ஒட்டியும், கடற்பரப்பிற்கு மேலும் பரந்து திரிந்தது.
“நான் ஒன்னும் ஜெனிலியா மாதிரி பண்ணலை. சும்மா என்னை வாராதிங்க. ஏதோ பாம்பு கடிச்சதா பயந்துட்டேன்.” என்று முட்டிவரை நீரில் வந்து சேர, சில வண்ண மீன்கள் அவளை சூழ்ந்து வட்டமிட்டது.
“என்ன தைரியம் மனித நடமாட்டம் இருந்தும் காலுக்கு கீழே வருது.” என்றாள்.
“அதிர்வு இல்லாம நீ நடந்தா மீனுக்கு எப்படி தெரியும். ஏதோ மேகத்தை குழைத்து ஒரு உருவத்தை தந்ததா நினைச்சிருக்கும்.” என்று கவிதை பாணியில் உரைத்திட, ‘அர்னவ் பெண்ணவளை ஓவராக தான் வர்ணித்து வைத்திருக்கின்றாயோ’ என்று மனசாட்சி கேலி செய்தது.
“இப்ப மீன் பிடிக்க போறிங்களா?” என்று பாவனா கேட்க,”போக்ல கப் மேகி இருக்கும். பிரட் சாக்லேட் கூட இருக்கும். இன்னிக்கு அதே கூட சரியா இருக்கலாம். ஆனா எதுக்கும் சீ புட் சாப்பிடணும். மதியம் வேட்டையாடுவோம். இப்ப ரசிப்பு மட்டும் தான்” என்றவன்,
கடல்நீருக்குள் நீந்த ஆரம்பித்தான்.
பாவனாவோ ‘என்ன இந்த மனுஷன் பேசிட்டே கடல்ல நீந்த குதிச்சிட்டார். ஹலோ பாஸ்.. பைலட் மேன்” என்று கூப்பிட, நீரில் பவளப்பாறைகள் இருக்குமிடம் வரை சென்றான்.
பெரும்பாலும் பவளப்பறைகளை மனிதர்கள் அழிப்பதாக கணக்கெடுப்பு கூறினாலும், சிலர் அழகை ரசித்து ஆராய்வது மட்டுமே உண்டு.
அதில் அர்னவ் ஒருவன்.
‘என்ன இவர் ஆளே காணோம்.’ என்று துடித்தவளோ “ஹலோ… பைலட் சார்… அய்யோ பெயர் வேற மறந்துட்டேனே. ஏதோ ஏ லெட்டராச்சு… பைலட் சார். என்னை அம்போனு கூட்டிட்டு வந்து நட்டாத்துல விட்டுட்டு எங்க போனிங்க. யோவ் எங்கய்யா.. போனா.. என்னை கூட்டிட்டு போய் சென்னையில விட்டுட்டு போ. நான் அழுதுடுவேன்.
இங்க சுத்தி மனுஷனேயில்லை. இப்ப நீங்க வரலை… நான் ஓன்னு அழுவேன். என்னை வானத்துல எல்லாம் பறந்து வந்து காப்பாத்தி இப்ப ஏன் புலம்ப வைக்கிற க்ஷ” என்று என்னென்னவோ புலம்பி தொலைத்து, கண்ணீரை துடைத்து அர்னவ் முழ்கிய இடத்தை நோக்கி நடந்தாள்.
“ஏ.. ராட்சசி.. நான் இங்க தான் இருக்கேன். தேவையில்லாம தண்ணில மூழ்கி செத்து கித்து தொலைக்காத. அப்பறம் உன்னை காப்பாத்தியதே வேஸ்டா போகும்.” என்று கத்தவும் திரும்பி பார்த்தாள்.
“எப்ப இங்க வந்திங்க? நான் கவனிக்கவேயில்லையே.” என்று வேகமாய் வந்து தொப்பொன்று கடல் அலையில் விழுந்து வாறி நடந்து வந்தாள்.
அர்னவிற்காக இப்படி யாரும் இதுவரை அவனை தேடி, அவனுக்காக யாரும் பதற்றம் கொண்டதில்லை. முதல் முறை ஒரு பெண் தன்னை தேடி புலம்பி தவித்திருக்கின்றாள். இத்தனைக்கு அவளது புலம்பல் கூப்பாடு எல்லாம் நகைச்சுவையாக இருந்தது.
பெண்கள் சுவாரசியத்திற்கு உரியவர்கள் என்று கணித்திருந்தான். அப்படிப்பட்ட பெண்களோடு தனக்கு பழகும் வாய்ப்பு எல்லாம் மிக அரிதானதென்று எண்ணியிருக்க, இறைவன் இந்த பயணத்தை விசித்திரமாக தான் பாவனாவோடு கோர்த்திருப்பது புரிய, அந்நொடி அவளை ரசித்தான்.
தன்னையே ரசிக்கும் அர்னவ் கண்டு விழுந்து வாறி வந்தவளோ, ‘என்னை பார்த்து என்ன இளிப்பு?’ என்று அர்னவை கரையிலிருந்த தண்ணியில் தள்ளி விட, அவனோ அவள் கரம் பற்றி சேர்த்து இழுத்து வைத்தான்.
இப்படி தன்னையும் சேர்த்து இழுத்திடுவானென்று எண்ணாதவளோ கையை அழுத்தமாய் பற்ற, “அம்மா.. என் கை கை.. ராட்சசி.” என்று குண்டு உரசிய கையில் வலி தாளாது கத்தினான் அர்னவ்.
ஆனால் அவள் மேலே விழும் அந்த நொடி பாவனா முகபாவனையை கண்டு உதட்டில் புன்னகை விரிய மீண்டும் வலியை மறந்தான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Rajali ku ratchasi mela love vanthuduchi
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 eva polamburadhu parthu enakey sirippu thaangala pa😂 renduperum nalla jodi dhan🥰
ராஜாளியின் ராட்சசி…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 7)
அடிப்பாவி ! நிறைய பேரை மேனா மினுக்கியாத்தான் இருப்பாங்க, ஆனா இந்த பாவனா மேனா மயக்கிங்கற மாதிரி, மயங்கி மயங்கி விழறாளே..!
எனக்கென்னவோ, இவங்க ரெண்டு பேரும் ப்ளைட் மோதி விழுந்த மாதிரி தெரியலை, ஏதோ ஹனிமூனுக்கு வந்த க்யூட் கப்பிள் மாதிரியே தோணுது போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Bhavana ne polamburathu ah kettu ah definite ah sirippu than varuthu
Wow super super wonderful nature. Beach atmosphere in island. Love starts excellent narration sis.
Interesting😍😍
அருமையான பதிவு
Nice