Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-8

ராஜாளியின் ராட்சசி-8

அத்தியாயம்-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பாவனா ஈரயுடையுடன் ஒரு பக்கம் கோபமாக அமர்ந்திருக்க, அர்னவ் கையில் ரத்த கட்டை பிரித்து, தண்ணீர் துளியை துடைத்து, உலரவைத்து, ஏதேதோ இலை தழையை கசக்கி மீண்டும் பஞ்சு கொண்டு இறுக கட்டினான்.

இம்முறை பாவனா உதவிக்கு வரவில்லை. முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள்.

சற்று முன் அர்னவை தள்ளிவிட்டதும், அவன் இடையை பிடித்து சேர்ந்து இழுக்க, பாவனா உடலெங்கும் மின்சாரம் கடந்து அர்னவ் மீது விழுந்தாள்.
முகத்தில் உப்பு நீர் மோத, அவன் உடலோடு உரசிட, கோபம் கொண்டவளோ, அவசரப்பட்டு, “உங்களுக்கும் ஜீவன் சாருக்கும் பெருசா வித்தியாசமில்லை. அவர் என்னை என்னலாம் செய்ய நினைச்சி தொட்டாரோ அதே போல நீங்க.” என்றதும் அர்னவ் கடுப்பானான்.

அவன் மட்டும் சும்மாவா இருப்பான். “என்னை ஜீவனோட கம்பேர் பண்ணற. இதுல ஜீவன் சாரா? உன்னை… உன்னை போய் காப்பாத்தினேன் பாரு ராட்சசி.
என்னை தண்ணில தள்ள வந்தது நீ. குண்டு உரசி ரத்தம் உறைந்தவனை தண்ணில தள்ளி செப்டிக் ஆனா நீயா என்னை கூடவே இருந்து பார்த்துக்க போற. ஒரு பேலன்ஸுக்கு தண்ணில விழாம உன்னை பிடிச்சேன். எனக்கென்ன தெரியும்? நீ காற்றடிச்சாளே தொப்புனு விழுவன்னு. நான் பிடிக்கவும் என் மேல விழுந்த.
மேல விழுந்தா உடம்பு உரச தான் செய்யும். அது என் மிஸ்டேக் இல்லை. அப்படி பார்த்தா நீ தான் என்னை மயக்கற மாயக்காரி. இதே போல ஜீவனிடம் முட்டாள்தனாமா பழகியிருப்ப. அவன் தனி பிளைட்டுக்கு தண்ணியா காசு செலவு பண்ணி உன்னை உஷார் பண்ண ரூட் போட்டிருப்பான்.
இப்ப தான் புரியுது தப்பு ஜீவன் மேல இல்லை. உன் மேல.” என்று பேச பேச, பாவனாவோ உதடு துடிக்க, தங்கியிருந்த இடத்தில் வந்தமர்ந்தாள்.

உடலில் இருந்த நீரெல்லாம் வெயிலின் உஷ்ணத்தால் ஆவியாகி காற்றால் உலர்ந்தது‌. முகம் ஏற்கனவே அர்னவ் பேசியதில் வாடியிருக்க, கடல்காற்றால் சற்று முகம் கூடுதலாக ஈரப்பசையுடன் பிசுபிசுப்பாக மாறினாள்.

அர்னவோ பெரிய மீனை உப்பு காரம் மட்டும் தூவி நெருப்பில் சுட்டு முடித்து பெரிய இலையில் அவள் பக்கம் நகர்த்தினான்.

”எனக்கு எதுவும் வேண்டாம்.” என்று கோபித்துக் கொள்ள, “சத்தானதா சாப்பிட வேற ஆப்ஷன் இல்லை. நம்ம சண்டையை சாப்பிட்டபடியே போடலாம். அதுவும் இதுவும் வேற டிப்பார்ட்மெண்ட்.” என்றான்.‌

பாவனா புரியாமல் திரும்ப, மனசுல பட்டதை பட்டுனு பேசியது இதயத்தோட டிப்பார்ட்மெண்ட். சாப்பிடுவது வயிற்றோட டிப்பார்ட்மெண்ட். அதை சொன்னேன்.
நான் எல்லாம் சோறு தான் முக்கியம்னு வாழறவன் மேடம் எப்படி?” என்று கேட்க, பாவனா கொஞ்சம் கொஞ்சமாய் அர்னவை பார்த்து மீனை சுவைக்க எடுத்தாள்.

பெரிய மீன் என்பதால் அதிகம் முள் இல்லை‌. உப்பு காரம் எல்லாம் இவளிடம் மாட்டி குதிக்க சொன்ன பையில் இருந்திருக்கும் போல அதனால் சுவையும் இருந்தது.

பாவனா மீனை விழுங்கியவாறு “இப்பவே சொல்லிடறேன். என்னை அசிங்கப்படுத்தாதிங்க. எனக்கு அப்பா இல்லை. காலேஜ் படிக்கும் முன்னவே இறந்துட்டார். சொந்த வீடு இருந்ததால், அம்மா ஓரளவு வேலை பார்க்க என்னை தம்பியை படிக்க வச்சாங்க. தம்பி இன்னமும் பிளஸ் டூ தான் படிக்கான்‌.
அம்மா மட்டும் வேலைக்கு போயிருந்தாங்க. காலேஜ் முடியவும், நானும் வேலைக்கு போனேன். லைஃப் ஸ்மூத்தா தான் போச்சு. ஆனா திடீருனு அம்மாவுக்கு கேன்ஸர்.
ம்ம்ம்.. செஸ்ட் கேன்ஸர் வந்ததால் மாத்திரை மருந்துனு செலவு அதிகரிச்சிடுச்சு. இப்ப அம்மாவை வேலைக்கு போக வேண்டாம்னு, பிடிவாதமா வீட்ல இருங்கன்னு கட்டாயப்படுத்தி இருக்க வச்சிட்டேன்.

ஒரு பக்கம் மருந்து மாத்திரைனு சம்பள பணம் போச்சு. அது அப்பவும் பத்தலை. சமீபகாலத்தில் சந்திரானு என் காலேஜ் பிரெண்ட். அவளிடம் செய்யற வேலையை விட, பெட்டரா அதிக சம்பளம் கிடைக்கிற வேலை இருந்தா சொல்ல சொல்லியிருந்தேன். அப்படியே அம்மாவோட நிலைமையையும் சொன்னேன்.
அம்மாவுக்காக பணம் தேவை. என்ன வேலையென்றாலும் இரவு பகலென்றாலும் கண்விழிச்சு வேலை செய்வேன். எனக்கு பணத்தோட தேவை இருக்கு. அதனால் படம் வேண்டும்னு சொன்னேன்.

அவ எப்படி எடுத்துக்கொண்டாளே ஜீவன் சாரிடம்… பச்.. ஜீவன் சார் எல்லாம் இந்த இரண்டு மாசம் சொன்னதால் சார் வருது.
இனி என்ன மரியாதை அவனுக்கு? அந்த ஜீவன் ஆபிஸ்ல இரண்டு மாசம் வேலை பார்த்தேன். போன மாசம் எண்பதாயிரம் தேவைப்பட்டுச்சு. வாங்கினேன்.
அப்ப ஒரு பத்திரத்துல சைன் வாங்கினார். நான் முன்பணமா வாங்கியதுக்கு பத்திரம் ரெடி பண்ணியதா நினைச்சி தான், அவசரத்துக்கு பணம் தர்றாரேனு அதுல என்ன எழுதியதுன்னு கூட பார்க்காம கையெழுத்து போட்டு நீட்டினேன். அந்த நேரம் அம்மாவுக்கு மருத்துவ செலவா பணம் தேவைப்பட்டுச்சு. இக்கட்டுல கவனிக்கலை. ஜீவன் எப்படிப்பட்டவர்னு யோசிக்கலை. நான் இரவு பகல் வேலைன்னு சொன்னது, டேஷிப்ட் நைட் ஷிப்ட் கூட பார்த்து கடனை அடைக்கறேன்ற அர்த்தத்தில் தான்.‌
ஆனா அவர் ஆம்பள புத்தில? ஏடாகூடமா நினைச்சு, இங்க வந்து, என்னை அடைய நினைச்சியிருக்கார்.
என்னிடம் அபிப்ராயம் கேட்டிருந்தா, எனக்கு உன் பணமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு வந்திருப்பேன்.‌ அப்படியொன்னும் எங்க அம்மாவோட வளர்ப்புல தரம் கெட்டு போய் பணத்தை சம்பாரிச்சு அம்மாவை காப்பாத்தணும்னு அவசியமில்லை. அப்படி தான் அவங்க உயிர் பிழைச்சுதுனு தெரிந்தா அடுத்த நிமிஷம் வளர்த்த வளர்ப்புல தப்புனு இதய நோய் வந்துடும்.
  அதுக்கு பணம், மருந்து மாத்திரை இல்லாம போனா கூட பெட்டர்னு நினைப்பாங்க.
  மிஞ்சி மிஞ்சி போனா எங்க அம்மா செத்து போவாங்களா?. பிளஸ் டூ படிக்கிற என் தம்பி அடுத்து காலேஜ் கனவெல்லாம் மூட்டைக்கட்டி, ஏதாவது வேலைக்கு போவான். நான் தான் அம்மாவை காப்பாற்றவும் முடியாம, தம்பியையும் நல்லா படிக்க வைக்க முடியாம மனசுல நடைபிணமா மாறிடுவேன்.” என்று கண்ணீரை துடைத்தாள்.

“ஏய்.. ராட்சசி… எதுக்கு இப்படி செத்து போவாங்கன்னு அபசகுணமா பேசற. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. லூசு மாதிரி பேசாத. எனக்கு நீ ரொம்ப புரிய வைக்க வேண்டாம். உன் கண்ணுல காமமோ, ஆம்பளையை மயக்கி பணம் சம்பாதிக்க நினைக்கிற புத்தியோ இல்லை. என்னால கரெக்டா சொல்ல தெரியும்.
ஏதோ கஷ்டம்னு புரியுது. வார்த்தை முன்ன பின்ன வந்து விழுந்தா சாரி. இனி அப்படி பேசமாட்டேன். இட்ஸ் எ பிராமிஸ். தண்ணில தள்ளியதா குற்றம் சுமத்தமாட்டேன். இல்ரெடி நான் தண்ணில நீந்தி தான் வந்தேன். செப்டிக் ஆனா என்னால தான். உன்னால இல்லை ” என்றான் அர்னவ்.

பாவனாவோ, “சிம்பத்திக்கு சொல்லலை. நிஜமாவே அம்மாவை பார்த்துக்க போராடறேன். ஆனா என்னால முடியலைன்னா அவங்க விதியை ஒன்னும் பண்ண முடியாது.
ஆக்சுவலி இந்த ரீசனால நான் ரொம்ப வருத்தப்படறேன். இதே ஆம்பளையா இருந்தா அம்மாவை கவனிக்க கூடுதலா பணம் புரட்டியிருப்பேன். பொண்ணா பிறந்து ஒன்னுத்துக்கும் உதவாமே இருக்கேன்” என்றாள் பாவனா.

அர்னவோ “இப்ப நீ பொண்ணா பிறந்து என்ன குறை வச்ச? அதான் ட்ரீட்மெண்ட் பார்க்கறியே. முயற்சி பண்ணிட்டு இருக்கற உன்னை பாராட்டலாம். இதே பையனா இருந்தா இந்த விஷயம் அவனிடம் சொல்லாமலேயே செத்திருப்பாங்க. நீ பொண்ணு என்பதால் தான் பிரீஸ்ட் கேன்சரையே ஷேர் பண்ணிருக்கலாம். எப்பவும் பொண்ணு ஆண் என்ற பேதத்தோட பேசாத. ஆண்களை விட பெண்கள் மனதைரியமானவங்க.

பாரு… ஜீவன் மாதிரி ஒருத்தனோட கேரக்டர் தெரிந்தும், நீ போராடி, தப்பிச்சு, இப்படி மானத்துக்கு பங்கம் வராம இருக்கன்னா முக்கிய காரணம் மனதைரியம் தான்.‌
அதோட என்னை மாதிரி முரட்டு பீஸ் கூட, சமாளிச்சு நிற்கறியே. இதுக்கே உனக்கு அன்னை தெராசா விருது கொடுக்கலாம்.” என்று பேச்சை இயல்பாக்கி அவளை சமாதானம் செய்தான்.

பாவனாவோ அதைப் புரிந்துக் கொண்டு, “ம்ம்ம்.‌ அம்மாவை பார்த்துக்கற பொறுப்பு, தைரியம் இருக்கு. அதான்‌ இன்னமும் போராடறேன்.” என்றவள் அர்னவிடம், “ரொம்ப சாரி. என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம். புரியுது… ஆனா இந்த நிமிடம் உங்க நிலைமைக்கு என்னால மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும்.” என்றாள்.

   அர்னவோ பாவனாவையே வித்தியாசமாய் பார்த்தவன், “சாப்பிடு” என்றான். 

பாவனா இரண்டு மூன்று வாய் விழுங்கி, அர்னவை பார்த்து கேட்க தயங்கினாள்.

  மனதில் உனக்கு இது தேவையில்லாத வேலை.’ என்று முடிவெடுத்திட, “எதுக்கு என்னை பார்த்து பேச வந்து தயங்கி என்னவோ நீயே பேசிக்கற? வாட் ஹாப்பன்?” என்றான் அர்னவ்.

  பாவனாவோ உள்ளுக்குள் புலம்பியவள், இருவர் இருக்கும் ஐலேண்டில் வேறுவழியின்றி, “இல்லை..‌. என்னை பத்தி சென்னேன். உங்களை பத்தி கேட்கலாம்னு நினைச்சேன். ஆனா அப்பறம் தப்பு, அதெல்லாம் உங்க பெர்சனல்னு கேட்க வேண்டாம்னு விட்டேன்.
   என் பேமிலி பத்தி சொன்னேன்னா, உங்களுக்கு ஜீவன் பிரச்சனையால் என் கேரக்டரை விளக்க வேண்டிய கட்டாயம் இருக்கலாம்.
  உங்களை பத்தி நான் கேட்டு தெரிந்துக்க கேள்வி கேட்க முடியுமா?” என்றாள்.
 
  அர்னவோ, “இப்ப என்ன? என்னை பத்தி தெரியணுமா?” என்று கேட்டதும், ஆமென்று தலையாட்டி இல்லையென்று மறுத்து, தலையை சொரிந்தாள்.

”வேற ஆப்ஷனே இல்லை‌. பொழுது போகணும். என்னை பத்தி சொல்லி தானே ஆகணும்.
  என் வாழ்க்கை என்ன சுயசரிதையா என்ன? ஜஸ்ட் எ பட்டர்பிளை லைப்.” என்றவன் அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

“என் பெயர் அர்னவ். பெயர் ஏ லெட்டர்ல ஆரம்பிக்கும்னு புலம்பினியே.” என்றதும் வேகமாய் தலையாட்டினாள்.
  “அர்னவ்.
   சின்ன வயசுல பூமியை பார்த்து வளர்ந்தவன் இல்லை. வானத்தை பார்த்து தான் வளர்ந்தேன்.‌ என் அப்பா அம்மா பூர்வீகம் தென் தமிழகம் தான்‌. ஒருமுறை இலங்கையில் ஊர்சுற்றி பார்க்க அம்மாவும் நானும் ஆசைப்பட்டோம். ராமநாதபுரத்துலயிருந்து இலங்கை கொஞ்சம் பக்கம் தான். அப்பா அதனால கப்பலில் பயணிக்க ஏற்பாடு செய்தார். அப்பா அம்மா நான் மூன்று பேரும் இலங்கை போனோம்.

  அங்க நான் சின்ன பையன். இலங்கையை ஊர்சுற்றி பார்த்து ஜாலியா இருந்தோம். பட் சடனா அப்ப நடந்த கலவரத்துல, அப்பா அம்மாவிடமிருந்து தொலைஞ்சி தனியா வந்துட்டேன்.
   இப்ப மாதிரி வாய் இல்லை. அப்பா அம்மா பெயரை சொல்லி அவங்களை தேடுறது அப்ப கஷ்டமாயிருந்தது. தெரியாத ஊர், மொழியும் சிங்களம் பேசினாங்க. என் தமிழ் அவங்களுக்கு புரிந்தாலும் எனக்கு அவங்க கேட்கறது சுத்தமா விளங்கலை.
 
   அப்படியே… இலங்கை வாசியோட… அவங்க வாழ்க்கையில், ஒரு ஆறேழு நாள் இருக்கும், பூமியை பார்த்து நடக்காம, வானத்தை பார்த்து தான் நடந்தேன். எந்த நேரம் எப்ப வானத்துலயிருந்து குண்டு தாக்கி சாவோம்னு வாழ்ந்த நிகழ்வுகள் நடந்தது.
  அப்ப எல்லாம் அப்பா அம்மாவை தேடறதை விட, உயிர் பிழைச்சா போதும்னு மக்கள் ஓடவும் அந்த கூட்டத்தில் வானத்தை பார்த்து பார்த்து நடந்தேன்.

  ஏன் இந்த விமானத்தை பார்த்து மக்கள் ஓடறாங்க? அப்படியென்ன பெரிய பூதமா? இது எல்லாரையும் சாகடிச்சிடுமா? அப்பா அம்மாவை எங்க தேட?  இந்த நாட்ல என்ன தான் நடக்கு? இப்படி பல கேள்வியை சுமந்து வானத்தை பார்த்ததில், மேகத்தோட உய்உய்னு பறக்குற விமானம் மீது ஒரு காதல் பிறந்துச்சு. அந்த வயசுல க்ரஷ். விமானம் மீது க்ரஷ்” என்று ஆசையாக கூற, பாவனாவோ, ”ஏதே… வாழ்வா? சாவா?னு இலங்கை மக்கள் தவிக்கும் போது இவருக்கு குண்டு போடுற விமானங்கள் மீது காதலா?” என்று விழித்தாள். அவள் பார்வை புரிந்தவனோ, “ராட்சசி அதெல்லாம் அந்த வயசுல காரணம் காரியம் எல்லாம் ரொம்ப ஆழ்ந்து யோசிக்க தோன்றாது.
  ஒருவிதத்தில் விமானத்தை பார்த்தப்ப அந்த சிட்டுவேஷன்ல ஈர்ப்பு உண்டாச்சு.
  ஏன்… இந்த ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடம்புனு கண்டதும் காதல்ல தொபுக்கடீர்னு விழுற பெண்களுக்கு, என்னை மாதிரி சிறுவனா இருந்தப்ப, விமானத்தை பார்த்து க்ரஷ் வந்ததுனு சொன்னா நம்ப மாட்டிங்க. அப்படி தானே. இப்ப உனக்கு என்‌ அப்பா அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியணுமா? இல்லை இந்த டீட்டெயிலில் விளக்கணுமா?” என்று கேட்க, “கடவுளே… முதல்ல நீங்க மேல சொல்லுங்க. உங்க அப்பா அம்மாவுக்கு என்னாச்சு. அதான் முக்கியம்.” என்றதும் அர்னவ், மென்புன்னகை உதிர்த்து தொடர்ந்தான்.

  “வானத்தையே பார்த்து தவிச்சேனே… அப்ப மேலயிருந்து பேப்பரா விழுந்தது. அதுல…

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.‌
   

12 thoughts on “ராஜாளியின் ராட்சசி-8”

  1. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 8)

    ரெண்டு பேரும் ஜாலியா லைஃப்பை என்ஜாய் பண்றவங்க மாதிரியே நடந்துக்கிறாங்க. இதுல அப்பப்ப சின்ன சின்ன செல்ல சண்டைகள் வேற, தவிர செல்லாம ராட்சசிங்கிற அழைப்பு வேற.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!