Skip to content
Home » ராஜாளியின் ராட்டசசி-12

ராஜாளியின் ராட்டசசி-12

அத்தியாயம்-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     சந்தோஷை கண்டதும் அர்னவ் ஓடிவந்து கட்டிக்கொண்டான்.

  “என்னடா நீ தான் என்னை கண்டுபிடிச்சி கூட்டிட்டு போவன்னு நினைச்சா, உன்னை நான் தேடி வர்ற மாதிரி நிலைமை வந்துடுச்சு” என்று சந்தோஷ் கிண்டல் செய்தவாறு ஆரதழுவினான்.‌

”பச் பாரசூட்டை சரியா இயக்காம வந்து விழுந்துட்டேன் டா.” என்றான் அர்னவ்.

  “நீ ஒழுங்கா இயக்கலையா? ஆச்சரியமா இருக்கே.? ஞேய்…இந்த பொண்ணு… இந்த பொண்ணு உன் கூட இருக்காளா?” என்றதும், அர்னவ் முகத்தில் நொடியில் தோன்றி மறைந்த சிரிப்புடன், ”ஆமா” என்றான்.

  “எப்புடிடா?” என்று சந்தோஷ் பாவனாவை பார்த்து கேட்க, “சொல்லறேன்… ஏன் இவ்ளோ லேட்?” என்றான்.‌
  கூடவே பக்கத்தில் வந்தவர்களிடம் கைக்குலுக்கி கட்டியணைத்து நன்றி நவில்ந்தான்.‌

  “அந்த கதையை ஏன் கேட்கற?” என்றவன் பாவனாவை பார்த்து, “எப்படியிருக்கம்மா?” என்றதற்கு, “நல்லாயிருக்கேன் அண்ணா. நீங்க நல்லபடியா இருக்கிங்களா?” என்றாள்.

“ஃபைன்மா.. அர்னவ் ஆக்சுவலி கண்ணை திறந்து இவங்களிடம் பிரைவெட் பிளைன் வெடிச்சிடுச்சு. என்‌‌ பிரெண்ட் இங்க தான் எங்கயாவது தீவுல இருப்பான்னு சொன்னேன். ஆனா அவங்க ஜீவனை காப்பாத்திட்டு, நீ தான் அவன்னு நினைச்சி காலதாமதம் பண்ணிட்டாங்க. அதோட பிளைன் வெடிக்கறதுக்கு ஒரு நாள் தான் இந்த பக்கம் ரோந்து வந்ததால் இன்னிக்கு வரவேண்டியதா அமைந்தது.
 
  ஜீவன் தண்ணில விழுந்து கரையேறி பஸ்ட்எயிட் செய்தாங்க.
  நான் நீ தான் அங்கயிருக்கன்னு நினைச்சேன். அவன் கண் திறந்து நேர்ல பார்த்து, உன்னை பற்றி எந்த தகவலும் இல்லை என்றதில் தான் இப்ப இங்க ரோந்துல ஓடி வந்தது.” மேலும் விலாவரியாக பேசினார்கள். பாவனா மௌனியானாள். நண்பர்களுக்குள் நிறைய பகிர்ந்துக்கொண்டார்கள்.

    படகில் பாவனா அர்னவ் ஏறியதும் சந்தோஷ் அர்னவோடு பேசியபடி வர, பாவனா கடல்நீரை கிழித்து செல்லும் படகின் நீரோட்டத்தை வேடிக்கை பார்த்து அமைதியாக வந்தாள்.

படகில் கூடவே வந்த சிலரில் டாக்டரையும் அழைத்து வந்திருந்தான் சந்தோஷ். கையில் குண்டு உரசிய காரணத்தை கூறியதால் அதற்கான மருத்துவமும் பார்க்கப்பட்டது.

அதன்பின் நடந்தவை எல்லாம் பரபரப்பாய் நிகழ்ந்தது.
  ஜீவனையும் அழைத்துக் கொண்டு சென்னையில் விட்டார்கள்.

சென்னை வந்திறங்கிய முதல் வேலையாக ஜீவனை போலீஸ் அழைத்து சென்றார்கள்.

  விமானத்தை பழுதாக்கியதாலும், துப்பாக்கி வைத்து அர்னவை கையில் சுட்டதாலும், இதற்கெல்லாம் காரணமாக பாவனாவை கற்பழிக்க முயன்றதாக குற்றங்கள் பதிவாகியாது.

  ‘நான் யார் தெரியுமா? எவ்ளோ லட்சம் டா வேண்டும். இந்த கேஸ்ல இருந்து வெளியே வர’ என்று திமிறியபடி ஜீவன் குரல் அடங்கியது‌. ஜீவனை இழுத்து சென்று கொண்டிருந்தனர்.

“எப்படியும் பணத்தை கொடுத்து வெளியே வந்துடுவான். ஆனா இரண்டு நாளாவது கஸ்டடில இருப்பான்.” என்று சந்தோஷ் நகைக்க, “பச்.. அவனை விடு, நம்ம விமானம் வெடிச்சதை சொல்லிட்டியா? வேலை…?” என்று இழுக்க, “அதென்ன முகராசியோ… இன்ஸ்யூரன்ஸ் க்ளைம் பண்ணிக்கலாம். உங்களுக்கு எதுவும் ஆகலையேனு கரிசனையா கேட்டார். கூட வந்த பொண்ணுக்கு பாதுகாப்பு இருப்பதால் ப்ரவுடா பேசினார்.
  நான் பயந்த அளவு இல்லை அர்னவ்.” என்று சந்தோஷ் ஆனந்தமாய் உரைத்தான்.

  அர்னவோ, “மச்சி.. இவளை வீட்ல விட்டுட்டு நாம நம்ம வேலையை பார்ப்போம்” என்றதும் தான் பாவனா வாய் திறந்தாள்.

  “பரவாயில்லை‌.. நான் நானாவே வீட்டுக்கு போயிடுவேன்.” என்றாள்.

  “இதுக்கா… மாலத்தீவுல இருந்து பிரைவேட் ஜெட் ஏற்பாடு செய்து சென்னை வந்திறங்கியது. முதல்ல உன்னை உன் வெட்ல விட்டுட்டு மறுவேலை பார்க்கறேன்” என்று கறார் குரலில் கூறினான்.

  பாவனாவோ, கேப் புக் செய்த காரில், “உங்களுக்கு ட்ரிட்மெண்ட் பார்க்காம என்னோட வர்றிங்களே.” என்று மறுக்க பார்த்தாள். அதெல்லாம் நான் பான்த்துப்பேன்.’ என்பது போல அர்னவ் முடித்து விட்டான்.

சந்தோஷ் அர்னவ் தான் அதிகமாக பேசியபடி வந்தார்கள். பாவனாவிற்கு அர்னவோடு பேசி கழித்த நிமிடங்கள் எல்லாம் கண்முன் வந்தது. பச் தனியா அங்கயே இருந்திருக்கலாம். அவர் என்னோடவே என் கூடவே பேசி சிரித்திருப்பார். இங்க என் பக்கமே திரும்ப மாட்டேங்கறார். நானும் ஹர்ட் பண்ணற மாதிரி பேசியதில் என்னை மொத்தமா விலகி நிற்கறார்.’ என்று மௌனமாய் வர, பிள்ளையார் கோவில் வந்து கார் நின்றது.

  “ஹலோ… நீ சொன்ன கோவில் லொகேஷனுக்கு வந்துட்டோம். உன் வீடு எங்க?” என்றான் அர்னவ்.

  “வர்ற லேப்ல இரண்டாவது வீடு” என்று வருத்தமாய் கூறினாள்.

   கார் அவள் சொன்ன இடத்நில் வந்து நிறுத்தியதும், அர்னவோ அவளிடம், “இங்கபாரு… ஆபிஸ் விஷயமா போயிட்டு வந்தாச்சு. சின்னதா பிளைட் ஆக்ஸிடெண்ட்ல உன்னோட திங்க்ஸ் மிஸ்ஸாகிடுச்சு. இதை மட்டும் சொல்லு. அப்பறம் அந்த வேலைக்கு இனி போகாத. இந்த அட்ரஸ்ல இருக்கறவரை போய் பாரு. அர்னவ் அனுப்பியதா சொல்லு. உன் டிகிரிக்கு ஒரு வேலை கண்டிப்பா கிடைக்கும். அப்பறம்… அங்க சொன்னது தான்.. உங்க அம்மா ட்ரிட்மெண்ட் பத்தி யோசிக்காத. கேன்ஸரை குணப்படுத்தற ஸ்பெஷல் மருத்துவமனை இது. அங்க உன் பெயரை சொல்லி வைக்கிறேன். இரண்டு நாள்ல போய் பாரு. இது நிச்சயம் ஜீவன் மாதிரி எதிர்பார்ப்பை வச்சி செய்யற உதவி இல்லை. ஜஸ்ட் உதவி. எப்படி எதையும் யோசிக்காம உன்னை ஜீவனிடமிருந்து முதல்ல காப்பாத்தினேனோ அதே உதவி மட்டும் தான். ஆல்தி பெஸ்ட்” என்று கூறினான். ஏனோ பாவனா கண்ணில் கண்ணீர் வந்து தொலைக்க, அர்னவோ “பை” என்று கூறிவிட்டு சந்தோஷை இழுத்து காரில் ஏறினான்.

   காரை பார்த்து பார்த்து மனமேயில்லாமல் வீட்டுக்கு சென்றாள் பாவனா.
சந்தோஷ் திரும்பி பார்த்து, “என்னடா இந்த பொண்ணு எதுக்கு அழுவுது? ஆமா நீ ஏன் விரப்பா முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க? மச்சான் என்ன நடந்தது?” என்று உலுக்க, அர்னவோ, எதுவும் பேசாமல், “கொஞ்சம் டயர்டா இருக்கு. நான் கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்துக்கறேன்.” என்று கூறிவிட்டு இமை மூடினான்.

  சந்தோஷிற்கு என்ன தான் நடந்திருக்கும்? என்று குழம்பி, அவன் வீட்டுக்கு அழைப்பை தொடுத்தான்.
  குழந்தை குட்டியுள்ளவனுக்கு வீடு தானே சொர்க்கம். அவன் வீட்டை பற்றி நினைக்கவும் நண்பனை சற்று விட்டு பிடித்தான்.

   முதலில் அர்னவிற்கு வைத்தியம் பார்க்க நேரம் போனது. சந்தோஷ் மட்டும் பிரைவேட் பிளைட் ஓனரிடம் இன்ஸ்யூரன்ஸ் க்ளைம் செய்வதில் அவர்கள் கேட்கும் விசாரணைக்கு பதில் அளித்து அவன் தரப்பை கூறி, ஒருவாறு அதற்கே நேரம் கழிந்தது.

  ஒரு வாரம் ஓடியிருக்க, அர்னவ் கூறிய மருத்துவமனையில் அன்னையை அழைத்து வந்தாள் பாவனா.

  ஏற்கனவே பாவனாவை என்ற பெயரை கூறி, அப்பெண் அன்னையை அழைத்து வந்தால் சிகிச்சை ஆரம்பிக்க கூறியும், அதற்குண்டான செலவை தன்னிடம் கூற வேண்டுமென்று பேசி முடித்திருக்க, பாவனா அன்னை காவேரிக்கு சிகிச்சை ஆரம்பமானது.

ஓரளவு கேன்ஸர் முதல் ஸ்டேஜ் என்றதால் காப்பாற்றி விடலாமென்று நம்பிக்கை அளித்தனர். இதற்கு முன்னும் அவள் பார்த்த மருத்துவமனையில் இதே போல உரைத்தாலும், மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டிருந்தது. அதனால் சிகிச்சைக்கு பணமில்லை என்றால் உயிருக்கு உத்திரவாதம் கூறவில்லை.
   இன்று பணமும் சிகிச்சையும் ஆரம்பித்து முற்றிலும் சரிசெய்திடலாமென்ற நம்பிக்கை தந்திட, அர்னவிற்கு தான் நன்றியை தெரிவிக்க நினைத்தாள்.
  ஆனால் அவனிடம் நம்பர் கூட வாங்கவில்லை என்ற மடத்தனம் புரிந்தது.
  ஆனால் அன்னையின் நலனுக்காக அவன் தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண் என்று மருத்துவமனையில் கொடுத்திருக்க, அதை வாங்கினாள்.

  அர்னவ் எண் என்றதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவள் முயன்று அழைத்தாள்.

  “சொல்லு.” என்று அர்னவ் குரல் தான். ஆனால் குரலில் உற்சாகமேயில்லை.

  “அம்மாவுக்கு ட்ரிட்மெண்ட் பார்க்க நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டேன்.” என்று கூற, “ம்ம்ம தெரியும். காலையில் டாக்டர் சொன்னார். முதல் ஸ்டேஜ் என்றதால் க்யூர் பண்ணிட சாத்தியம்னு சொல்லிட்டார். நீ பயப்பட வேண்டாம். உங்க அம்மா உன் கூட கூடுதலா ரொம்ப நாள் வாழ்வாங்க” என்றான்.

  “தேங்க்ஸ்… ஆனா நீங்க சொன்ன வேலைக்கு நான் போகலை. நான் வேறொரு கம்பெனில வேலைக்கு கேட்டிருக்கேன்” என்றாள்.
அர்னவிடம் பலத்த மௌனம்.

ஏன் எதுக்கு என்ற கேள்வி கேட்காமல், “சரி இட்ஸ் யுவர் சாய்ஸ்” என்றான்.

  “காரணம் தெரிந்துக்கலையா?” என்றாள்.
  “உன்னோட பெர்சனல் பாவனா. அதுல நான் தலையிட முடியாது. ஆங்… எனக்கு கைக்கு டிரஸிங் பண்ண டாக்டர் வர்றாங்க. ஐ கால்யூ பேக்” என்று கூறி அணைத்தான்.

‘பச் அவர் கைக்கு என்னாச்சுன்னு கூட கேட்கலை’ என்று அதற்கும் வருந்தினாள்.

  காவேரிக்கு மகளின் முகவாட்டம் அடிவயிற்றில் புளியை கரைக்க, “இந்த ஹாஸ்பிடல் செலவுக்கு என்னடி பண்ணற? ஏதாவது தப்பான வழியில் பணத்தை சேர்க்கறியா? அப்படியிருந்தது என்னை காப்பாற்ற வேண்டாம். ஒழுக்கமா வாழற வாழ்க்கை தான் வேண்டும்” என்று அதட்டி மிரட்டி பணத்தின் வருகையை கேட்டார்.

  இனியும் தனக்கு நடந்தவையை மறைக்க முடியாது, ஜீவனை பற்றியும் அர்னவ் பற்றியும் விவரித்தாள். “அர்னவ் என் உயிரையும் மானத்தையும் காப்பாற்றியதோட இல்லாம, அவரோட அம்மா இறந்ததால், உன் அம்மாவாது பிழைக்கட்டும்னு, உங்க சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்யறார் அம்மா. வேலைக்கு கூட போக அவர் அப்பாவை கான்டெக் பண்ண சொன்னார். நான் தான் மருத்துவ உதவி மட்டும் வாங்கியிருக்கேன். எல்லாத்துக்கு அவரிடம் நிற்க முடியலைம்மா. அதான் பணம் குறைவா கிடைச்சாலும் தற்போது வேற வேலைக்கு அப்ளை பண்ணிருக்கேன்.” என்று அர்னவை பற்றியும் தனக்கு ஏற்பட்ட ஆபத்தையும் அதிலிருந்து தப்பித்த கதையையும் கூறினாள்.

“அந்த சந்திரா எப்படிப்பட்ட வேலையில் உன்னை இழுத்து விட்டிருக்கா? இனி அவளிடம் நட்பு வச்சிக்காத. ஜீவனாம் ஜீவன். உன்‌ ஜீவனை பறிச்சிருப்பான். ஒருத்தன் என்ன கண்ணோட்டத்துல வேலைக்கு எடுத்தான்னு கூட உனக்கு தெரியலையா? உன்னை குறை சொல்ல முடியாது. என் ட்ரிட்மெண்ட்காக நீ கண்ணை மூடி அலைந்ததை தான் பார்த்தேனே.

சரி அவனை விடு. அப்படியே அர்னவ் தம்பியிடம் பேசனினா, என்னிடம் கொடு. நான் நன்றி சொல்லி இரண்டு வார்த்தை பேசறேன். எப்பேற்பட்ட உதவி… அவங்க அம்மா இறந்ததால் தெரிந்த பொண்ணான அம்மா இறக்க வேண்டாம்னு உதவியிருக்கார்.” என்றார்.
 
பாவனா கலங்கிய விழியோடு தலையாட்ட “முடிந்தா அந்த தம்பியை ஒரு நாள் பார்த்துட்டு வருவோம். கை வேற அடிப்பட்டதா சொன்னியே.” என்றதும் “அவரெல்லாம் நாம உடனே பார்க்கற இடத்துல இருப்பாரா தெரியலைம்மா. கேட்டுப் பார்க்கறேன்” என்றாள். ஓரளவு செல்வேந்தன் என்று கணிக்க முடிகின்றதே.

காவேரியோ “உனக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலையே?” என்று மகள் வழக்கத்திற்கு மாறாக, அமைதியாக நடமாட பெண்ணை பெற்றவளாக பயத்துடன் கேட்டார்.‌

“இல்லைம்மா… எனக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலை. என்னை பத்திரமா ஒரு தாயை போல அவர் பார்த்துக்கிட்டார்.” என்று கூற, காவேரி மகளை தொட்டு திரும்பி, “அந்த தம்பிக்கு கல்யாணமாகிடுச்சா?” என்று கேட்க, ‘இல்லை’ என்றாள்.

  காவேரிக்கு மகளது முகவாட்டத்திலும், அர்னவ் பற்றி கூறிய பொழுது மலர்ந்த வார்த்தைகளையும் கவனித்தவர், அனுபவத்தால் சில சந்தேகம் ஏற்பட, மகளிடம் கேட்க தயங்கினார்.‌

   -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “ராஜாளியின் ராட்டசசி-12”

  1. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 12)

    அவ்வளவு தான் ! ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு வயசுல பெரியவங்களுக்கு புரியாதா என்ன ? ரொம்ப சுலபமா கண்டு பிடிச்சிட்டாங்க பாரு, பொண்ணுக்கு வந்திருக்கிறது காதல் நோய்ன்னு. அங்க அர்ணவ்க்கு ஆல்ரெடி அந்த நோய் தீவிலயே வந்திடுச்சு.
    இவளுக்குத்தான் லேட்டா வந்திருக்கு. இவ தான், எல்லாத்துலயுமே லேட் பிக்கப் ஆச்சே..? அது சரி, அர்ணவ்வோட ஜாப் ரிகமண்டேசனை ஏன் ஏத்துக்கலை இந்த பாவனா..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    eppadiyo nalla padiya santhosh vanthu kutitu poitan . aana yen intha arnav ava mela kovamave irukan but ella help um panran bhavana um van sona hospital poi pathuta avanga amma ku avanga kittaum ella unmaium sollit athu than nallathu ava ammaum ipo purinjikittanga ava irukuratha pathu next ena panrnga papom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!