Skip to content

லாவா மன்னலா-21

12 / 100 SEO Score

அத்தியாயம்-21

 

ஹரிணி அப்பா வாங்கி தந்த வளையல் என்று கூறியதும், ”உங்கப்பா நீயும் நானும் பிஸிக்கலா இருக்கோமா இல்லையானு டெஸ்ட் பண்ணறார்.

காலையில எல்லா வளையலையும் போட்டுட்டு சுத்தாத. இரண்டு மூனு வளையலை உடைச்சிடு.” என்று கூறிவிட்டு திரும்பி கொள்ள, ‘முட்டாளாட்டம் பே…” என்றவளுக்குள் ஏதேதோ தோன்றி மறைந்து போர்வையை முழுதாய் போர்த்திக் கொண்டாள். அவன் கூறியது உண்மையாக இருந்தால்?!

 

அடுத்த நாள் விழித்த பொழுது, ஒருவேளை அப்பா என்னோட வாழ்க்கை எப்படியிருக்குனு கேட்க சங்கடப்பட்டு, இப்படி பார்த்து தெரிந்துக்க நினைச்சி,  நான் பொய் சொல்வதா போனா.. நிஜமாவே வளையலை அதுக்கு தான் வாங்கி தந்திருப்பாரா? ஆனா இதை நான் இல்லை வாங்கினேன்.’ என்று குழம்பினாலும் விக்ரம் கூறியது போல மூன்று வளையலை உடைத்து கீழே வைத்துவிட்டாள்.

 

எழுந்து கிச்சன் சென்று டீயை தயாரித்து தந்தைக்கும் தனக்கு தாலி கட்டியவனுக்கும் நீட்ட, கமலகண்ணன் கண்கள் மகளது கையில் பார்வை பதிந்து மீண்டது‌. இதில் வீட்டை பெருக்குகின்றெனே வளையல் துண்டு தந்தை கண் முன்னே கூட்டி தள்ளினாள்.

 

‘விக்ரமிற்கு சாப்பாடு கட்டி வைத்து அவனை அனுப்பியதும், மகள் ஆனந்தமாய் இருப்பதாக எண்ணினார்.

 

அன்றைய நாளில் ரவிபிரகாஷிடம், “தேங்க்ஸ் டா. மாப்பிள்ளை என்‌ மகளை ரொம்ப நல்லா பார்த்துக்கறார்.’ என்று மகிழ ரவிபிரகாஷோ ‘என் பையன் உன் பொண்ணு வாழ ஆரம்பிச்சா, அவனை எல்லாம் கையில பிடிக்க முடியாதுடா. அவன் இன்னமும் வாழ ஆரம்பிக்கலை.’ என்று கூற நினைத்தாளும் நண்பனின் சந்தோஷத்தை கெடுக்கவில்லை.

 

மகளோடு நிறைய பேசினார். ஹரிணி தந்தையை கடைக்கு அழைத்து சென்றாள்.

தந்தையின் மகிழ்ச்சியை கண்டு நாம தான் அப்பாவுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லைனு பயத்துட்டோமோ? என்று தெளிவடைந்து அப்பா சந்தோஷமா இருப்பதே போதும். அவர் இங்கிருந்து திருப்பூர் போறவரை, இதே ஆனந்தத்தை தந்துவிட முடிவெடுத்தாள்.

 

அதற்காக விக்ரம் முன் நடித்தாள். அவனோ இது தான் சாக்கு என்று, ‘ஹாய் பொண்டாட்டி… செமையா பொண்டாட்டி ரோல் பண்ணற. ஏங்கனு சொல்லறதென்ன, வாங்கன்னு பேசறதென்ன, அடேங்கப்பா..‌ பட்டைய கிளப்பற. பேசாம ஒரு ரூமை பக்கத்துல எடுத்து உங்கப்பா அம்மாவை பக்கத்துலயே வச்சிக்கலாம் போலயே.’ என்று கேலியும் செய்தான். அந்த பேச்சு ஹரிணிக்கு எரிச்சலை தந்தது. தந்தைக்காக மட்டும் பொறுத்து கொண்டவள் அவனிடம் சாதாரணமாக பேசுவதை கூட குறைக்க முயன்றாள்.

 

இதில் நள்ளிரவு தாண்டி  புகைப்பிடிக்க ஆரம்பிக்க, ஹரிணி வேகமாய் பால்கனி கதவை மூடி, “அப்பா இருக்கார் இப்ப போய் ஸ்மோக் பண்ணற? வயசுக்காவது மரியாதை தந்து அவர் போனப்பிறகு பிடிச்சி தொலையேன்.” என்று சத்தமின்றி கத்தினாள்.

 

“எனக்கு இருக்கற குழப்பத்துக்கு, நான் ரிலாக்ஸுக்காக சிகரேட் பிடிக்கறேன். சும்மா… உங்கப்பா இருக்கார்னு என் செய்கையை மாத்திக்க முடியாது. ஆல்ரெடி இரண்டு நாள் ஆகிடுச்சு. வேணும்னா அவரை கிளம்ப சொல்லு.” என்றான் அலட்சியமாக. அவனுக்கு மனக்குழப்பம் வாட்டியதை எவ்வகையில் தீர்க்க என்று இயலாத நிலை.

 

“உனக்கு இதை சொல்ல அசிங்கமா இல்லை. என்னோட அப்பா, என்னை பார்க்க வந்திருக்கார். மூன்று நாளாகிடுச்சு வீட்டுக்கு போக சொல்லற. உங்கப்பா வந்தாலும் இப்படி தான் பேசுவியா?” என்று அருவருப்பாய் காண, ”எங்கப்பா இங்க வந்து இருந்தா, நான் அவர் முகத்துக்கு நேரா தான் சொல்லுவேன்.” என்று முடித்தான்.

 

ஹரிணிக்கு விக்ரம் பேச்சு அருவருப்பும் எரிச்சலும் தந்துவிடுவதை கட்டுப்படுத்த இயலாமல் நின்றாள்‌.

 

லேசாக இருமி விட்டு கமலகண்ணன் உறங்க, ஹரிணியும் சப்தமின்றி அறையில் முடங்கினாள். விக்ரமால் ஹரிணிக்கு கட்டுக்கடங்கா கோபம் பெருகியது. அதெல்லாம் அவனுக்கு வருத்தமில்லை. மேலும் அவளுக்கு விளக்கமும் தேவையற்ற ஒன்று.

 

அடுத்த நாள் விக்ரம் அவனாக அலுவலகம் செல்ல, ‘டீ டிபன்’ மட்டும் அங்கிருந்தது. “லஞ்ச் இன்னும் கட்டலையா?” என்றான்.

 

ஹரிணியோ “நீங்க வெளியே சாப்பிட்டுக்கோங்க. நான் மதியம் போல சமைச்சிக்கறேன்” என்றாள்.

 

‘நேத்து அவங்க அப்பாவை போக சொன்னதுக்கு இன்னிக்கு எனக்கு சோறு கட்டித்தரலை.’ என்று புரிந்து அலட்சியமாக சென்றான்.‌

 

விக்ரம் சென்ற சிறிது நேரத்தில், “மாப்பிள்ளையிடம் அதிகமா சிகரேட் பிடிக்க வேண்டாம்னு சொல்லுடா ஹரிணி.” என்றார்.

 

தந்தைக்கு தானும் விக்ரமும் பேசியது கேட்டிருக்குமோ என்று பயந்திட, காலையில் வீட்டை பெருக்கும் பொழுது சிகரெட் துண்டை வைத்து தந்தை கவனித்திருக்கவும் வாய்ப்புண்டு என்று தேற்றிக் கொண்டாள்.

 

மதியம் போல உருண்டை குழம்பு செய்து சூடாக நெய் ஊற்றி தந்தையும் ஹரியும் சுவைத்தார்கள்.

 

நன்றாக பேசி சிரித்திருந்தவர், ஒரு மூன்று மணி அளவில் பேச்சு மூச்சின்றி சரிந்து கிடக்க, ஹரிணி பயந்தே போனாள்.

 

அவசரமாக தந்தையை பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் உதவியால் அருகேயிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

அடுத்து சரியோ தவறோ விக்ரமிற்கு கால் செய்து விவரத்தை கூறிட, அவனோ, “ஏய் என்ன நாடகமாடறியா? உங்கப்பா காலையில நல்லா தானே இருந்தார். இப்ப என்ன? நான் ஸ்மோக் பண்ணறதையும், நீயும் நானும் சந்தோஷமா வாழலையென்றதிலும் அவருக்கு டவுட் வந்து இதய நோயாளியா மாறிட்டாரா?” என்று கர்ஜிக்க, “சீ… உனக்கு போய் போன் பண்ணினேன் பாரு. போடா” என்று துண்டித்து அழுதாள்.

 

இனி என்ன செய்ய வேண்டுமென்ற பயம் அவளுக்குள் ஆட்கொள்ள, அம்மாவிற்கே அழைத்தாள்.

 

சுற்றுலா சென்ற இடத்தில் போன் எடுக்கப்படவில்லை.

 

அதற்குள் டாக்டர் வேறு சில பல டெஸ்ட் எடுக்க, மருத்துவமனையில் மாத்திரை மருந்து வாங்க ஓடினாள்.

 

“எங்கப்பாவுக்கு என்னாச்சு டாக்டர்?” என்றதற்கு “அவருக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். சீ… ரிசல்ட் எடுத்திருக்கு.. பார்ப்போம்.” என்று தலையில் இடியை இறக்கினார்கள்.‌

 

அடுத்து யாருக்கு அழைப்பதென்ற திணறல் இருக்க, மாமனாருக்கு தான் அழைக்க, முடிவெடுத்திருக்க, எதிரே விக்ரம் நின்றிருந்தான்.

 

அவனை கண்டு முகம் திருப்பி, கண்ணீரை துடைத்து நின்றாள்.

 

“ஏய்.. எதுக்கு அழுது சீன் போடற.” என்று வந்தான்.‌

 

“அய்யா சாமி… இங்க பாரு..‌. உன்கிட்ட சண்டை போட எனக்கு தெம்பில்லை. எனக்கு எங்கப்பா உசிரு முக்கியம். என்னை இப்ப தொந்தரவு பண்ணாத.” என்று கையெடுத்து கும்பிட்டாள்.‌

 

விக்ரமும் மற்றவர் பார்க்க அவளது செய்கை தன்னை தரம் குறைக்க, கீழே இறங்கி சென்றான்.

ரிசப்ஷனில் கமலகண்ணன் பேஷண்டோட மெடிக்கல் இஸ்ஸூ என்ன ஏதென்ற விவரம் கேட்டறிந்தான்.

 

அதற்குள் “கமலகண்ணன் கண் முழிச்சிட்டார் போய் பாருங்க. அதுக்கு முன்ன சில பல டெஸ்ட் எடுக்கணும். இந்த அமௌண்ட் பே பண்ணிட்டா மேற்கொண்ட டெஸ்ட் எடுக்கணும்” என்றதும் வாலெட்டை எடுத்து கார்டை நீட்டினான்.

 

“தேங்க்ஸ் சார். நீங்க பாருங்க” என்று அனுப்பவும், அதே நேரம் மேலே நர்ஸ் ஹரிணியிடம் “உங்கப்பா கண்திறந்திருக்காருங்க. போய் பாருங்க டாக்டரும் அங்க தான் இருக்காங்க” என்றதும் தந்தையிருக்கும் பக்கம் ஒடினாள்.

 

தனி வார்டிற்கு அவரை அழைத்து வந்திருக்க, ஹரிணியோ “அப்பா.” என்று அழுதிட, “பேஷண்டுக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். அது உங்கப்பாவுக்கும் தெரியுமாம். பேஷண்டோட பழைய மெடிக்கல் சம்மரி வேணும். அதை தந்துட்டா… என்ன கண்டிஷன் என்று ஒரு அனலைஸ் பார்த்துட்டு அடுத்து கிட்னி டோனரை தேடலாம்..” என்று கூறிவிட்டு டாக்டர் மற்றொரு பேஷண்டை கவனிக்க சென்றார்.

 

தந்தையை பார்த்து தேம்பி நின்றாள். அவரோ “எந்த ட்ரீட்மெண்ட்டும் பார்க்கறது வேஸ்டு ஹரிணி. உங்கம்மா தங்கச்சியை பார்த்துக்கோ. ஏதோ உன்னை நல்லபடியா கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன்.” என்றவரிடம், “பச்.. ஏற்கனவே உங்க பொண்ணு அழறா. இதுல கடைசி நொடி மாதிரி பேசாதிங்க. உங்களோட மெடிக்கல் பைல் இருக்கா? கொண்டு வந்திருக்கிங்களா?” என்று பயத்தை மறைத்து கேட்டான் விக்ரம்.

 

“எல்லாமே திருப்பூர்ல இருக்கு மாப்பிள்ளை.” என்றார்.

 

“அம்மா வேற ஊர்ல இல்லை. நம்ம வீட்ல எப்படி போய் எடுக்க? இங்க உங்களை விட்டுட்டு நான் எப்படி அங்க போறது” என்று முட்டாளாக உளறியவளை தள்ளி, “ஒரு நிமிஷம் சும்மா இருக்கியா.

 

அப்பா பேசறார். உங்க வீட்டுக்கு வந்துட்டார். வீட்டு கீ அவரிடம் இருக்காம். மெடிக்கல் பைல் மட்டும் எங்கனு சொன்னா.. அவர் அதை போட்டோ எடுத்து வாட்சப்ல அனுப்புவார்.” என்று வேலைகளை இலகுவாக மாற்றினான் விக்ரம்.

 

மெதுவான குரலில் கமலகண்ணன் மெடிக்கல் பைல் இருக்குமிடத்தை தெரிவிக்க, “பார்த்துட்டேன்டா… விக்ரமுக்கு போட்டோவா அனுப்பிடறேன். வேற ஏதாவது பைல் இருந்தா சொல்லு. நான் அதை எடுத்துக்கிட்டு சென்னை வர்றேன். தேவையில்லாம எதுவும் பேசி மருமக மனசை உடைக்காத. உனக்கு ஒன்னும் ஆகாது.” என்றார் ரவிபிரகாஷ்.

 

“வேற பைல் எதுவும் இல்லை. எனக்கு ஏதோ சரியாபடலைனு தான் கடைசியா ஹரிணியை பார்க்க கிளம்பி வந்தேன். எனக்கு ஏதாவதுன்னா நீ கொஞ்சம் பார்த்துக்கோடா.” என்றார் சோர்வாய்.

 

ஹரிணியோ வாயை பொத்தி அழவும், ரவிபிரகாஷோ “ஏன்டா அப்படி பேசற உனக்கு ஒன்னும் ஆகாது. விக்ரம் உனக்கு வாட்சப்ல போட்டோ அனுப்பியிருக்கேன். டாக்டரிடம் காட்டி அடுத்த வேலையை ஆரம்பிக்க சொல்லு. எல்லாத்தையும் கூடயிருந்து…” என்றவர் பேச்சை பாதியில் கத்தரித்தான்.

 

சரி என்று கூட கூறாமல் கத்தரித்துவிட்டு அவன் டாக்டரை காண சென்றான்.

விக்ரம் டாக்டரை சந்தித்து வாட்சப்பில் வந்த மெடிக்கல் பைலை காட்டி பேசினான்.

 

“சொன்னேன் இல்லையா… கிட்னி இரண்டும் பெயிலியர். அது அவருக்கு தெரிந்திருக்கு.

சோ… அடுத்து இரத்த சொந்தத்தில் அவங்க பொண்ணு இருக்காங்க. ஒரே பிளட் குரூப். முதல்ல அவங்களை டெஸ்ட் பண்ணறேன். ஒருவேளை அவங்க கிட்னி செட்டானா உடனே ஆப்ரேஷன் கூட பண்ணிடலாம். உயிர் பிழைச்சிடுவார். சப்போஸ்… கிட்னி பெர்பெக்டா இல்லைன்னா… வேற வழியில தான் முயற்சி செய்யணும்.” என்றுரைத்தார் மருத்துவர்.

 

“என்ன பிளட் குரூப் டாக்டர்?” என்று கேட்க, யூனிவெர்சல் டொனேர் ஓ பாஸிடிவ் சார்” என்று கூறியதும், “ஓகே.” என்று மருத்துவ உதவியால் அப்சர்வேஷனில் இருந்தார் கமலகண்ணன்.

 

விக்ரமும் ஹரிணியும் மருத்துவமனையே கதியென்று கடக்க, “அம்மாடி… ஹாஸ்பிடல் செலவு எவ்ளோ டா. அப்பாவிடம்  கொஞ்சம் பணம் இருக்கு என்னோட பர்ஸ்ல கார்ட் இருக்கும். இல்லைன்னா போன்ல கூட பணத்தை செலுத்தலாம்.” என்று கூறினார்.

 

அப்பொழுது தான் இடையில் பில் பே செய்தால் மட்டுமே அடுத்தகட்ட ட்ரீட்மெண்டில் சில டெஸ்ட் எடுக்கப்படும் என்று நர்ஸ் கூறியது நினைவு வந்தது.

 

அதேநேரம் ஒரு நர்ஸ் வந்து, “உங்களை டாக்டர் சில டெஸ்ட் எடுக்க சொன்னார். உங்களோட அப்பாவுக்கு உங்க கிட்னி மேட்ச் ஆனா ஆப்ரேஷன் பண்ணுவதில் சுலபம்னு” என்று டெஸ்ட் எடுக்க அழைத்து செல்ல, “காலையில பாதி பில் பே பண்ண சொன்னிங்க. நான் இன்னும் பே பண்ணலை. அதை கட்டிட்ட பிறகு தான் டெஸ்ட் எடுக்கணுமா?” என்று பயத்தில் கேட்டாள். ஏனெனில் அவளிடம் உள்ள பணம் நிச்சயம் போதாது என்பது அவளறிந்து விட்டாள். தந்தை பணத்தை எடுக்க வேண்டுமே.

 

“உங்க ஹஸ்பண்ட் அப்பவே பே பண்ணிட்டார்.” என்றதும் ஆச்சரியம் கொண்டாள்.

 

அடுத்த நிமிடமே ‘மாமா தான் கூடவே இருந்து உதவ சொன்னாரே. அதுக்காக விகக்ரம் உதவியிருக்கலாம்.’ என்றவள் நர்ஸ் எடுத்த டெஸ்டில் ஒத்துழைத்தாள்.

 

இரவு ரவிபிகாஷ், “அம்மாடி மருமகளே… வண்டி ஏறிட்டேன். நாளைக்கு அங்க வந்துடுவேன். நீ என்ன பண்ணற… அம்மாவிடமும் தங்கச்சியிடமும் இப்ப எதுவும் சொல்லாத. நான் வந்து பார்த்துட்டு பிறகு பேசறேன்.” என்றார்.

 

“சரிங்க மாமா.” என்றவளுக்கு முன்னே உணவு பொட்டலத்தை நீட்டினான்.

 

“எங்கப்பாவுக்கு புட்?” என்று விக்ரமை காண, அவனோ “அவருக்கு எதுவும் வாங்கலை. பேஷண்டுக்கு எந்த புட் எந்த மாதிரியான புட் கொடுக்கணும்னு அவங்களே தருவாங்களாம்.” என்றதும் தந்தையை காண ஓட, அங்கே அவர் சாப்பிட்டிருந்தார்.

 

“ஏன்பா முன்னாடியே சொல்லலை.” என்று கண்ணீரை உகுத்த, “உனக்கு தான் அப்பவே தெரியுமேமா? அதுக்கு தானே அவசரமா கல்யாணமே பண்ணினேன். அட்லீஸ்ட் குடும்பத்துல ஒரு ஆம்பள சப்போர்ட் இருக்குமே.” என்று பேசியவரிடம், விக்ரமை நம்பி எப்படிப்பா என்னை விட்டு போக பார்த்திங்க என்று ஊமை போல அழுதாள்

.

 

அன்றைய இரவு உறக்கம், மருத்துவ வாசத்தில் தான் கழிந்தன மூவருக்கும்.

 

-தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

5 thoughts on “லாவா மன்னலா-21”

  1. Omg. Will kamalakannan recover? Harini be strong to face the situation. Vikram u did some good things in very apt time. Very intresting sis.

  2. Super sis nice epi 👌😍 kidney failure ah🙄 paavam harini vikram nallavanavum erukan ketavanavum erukaan🧐🤔

  3. Evlo periya vishayatha ippadi marachitu irukaru harini oru doubt irunthuchi etho maraikirarunu intha alavu irukumnu ninaikala but eppadiyo ellaraium onum illa solli nambar vachi irukaru ipo harini kidney set aganum apo tha kapathanmudium illana enna nadakumo

  4. லாவா மன்னவா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 21)

    மகள்கள் மட்டும் அப்பாவோட உடல் நிலைக்கும், பாசத்துக்கும், கௌரவத்துக்கும் பயந்து அராஜகம் பண்ற புருசனோட ரகசியங்களை காக்க பயப்படணும், போராடணும், எங்க, வாங்கன்னு மரியாதை கொடுத்து அனுசரிச்சு வேற போகணும் போல. ஆனால், இந்த வீணாப்போன மருமகன்கள் மட்டுமஇ கொஞ்சம் கூட பயமோ, கூச்சநாச்சமோ, விவஸ்தையோ, மட்டு மரியாதையோ இல்லாமல் பகீரங்கமா புகை விடறதுல இருந்து பொண்டாட்டியை அதிகாரம் பண்ணி கையை நீட்டுற அளவுக்கு போக வேண்டியது.
    இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இருக்காதோ…? இவர் சிகரெட் பிடிக்காதேன்னு சொன்னவுடனே அப்படியே முதல்ல கேட்டுட்டு, அதை அவாய்ட் பண்ற சத்புத்திரன் பாருங்க இந்த விக்ரம். இன்னும் முதல் தப்புக்கே மன்னிப்பு கேட்டகாத யோக்கியன், மத்த தப்புக்கா வருத்தப்படப்
    போறான் ?

    சரியான அவசரத்துக்கு பிறந்தவன் மாதிரியே நடந்துக்கிறதைப் பாருங்களேன், பெத்தவருக்கும் மரியாதை தர மாட்டேங்கிறான் மத்தவங்களுக்கும தர மாட்டேங்கிறான், சரியான லார்ட் லவக்குதாஸ் தான் போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!