அத்தியாயம் – 108
“எனக்கு புரியுது ஷ்ரத்தா மேடம் உங்க கோவம் அது கோவமே இல்ல உங்களோட ஆதங்கம் எல்லாரோட லைஃப்பும் சரி செஞ்சவ இப்படி இருக்காளேனு தான் உங்களுக்கு வருத்தம் அது புரியுது ஆனா அதுக்காக கோவம்ல என்ன வேணாலும் பேசலாம்னு பேசிடாதீங்க ஏன்னா அப்படி பேசிதான் நான் என் மேதாவை பிரிஞ்சு இருக்கேன்.
வார்த்தைகளை கவனமா யூஸ் பண்ணுங்க அவமேல கோவத்தை காட்ட இது நேரம் இல்ல அவளை எப்படி சரி செய்யலாம்னு தான் நாம யோசிக்கனும் எனக்கு மேதாவும் அருந்ததியும் உடம்பு சரியானா போதும் இப்போதைக்கு வேற எதையும் பத்தி நான் யோசிக்க கூட தயாரா இல்ல. உடம்ப பார்த்துக்கோங்க அருந்ததி ஹர்ஷத் கூடவே இருந்து கவனிச்சுக்க உன்னோட புறகணிப்பு அவங்களையும் காயப்படுத்தி இருக்கு” ஆராஷி பேசிமுடிக்க அனைவரும் அமைதியாக இருக்க அங்கு ஓடிவந்த நர்ஸ் மேதா தான் சொல்வதையும் கேட்காமல் எங்கோ சென்றார் என்று கூற பதட்டமானார்கள் ஆராஷியும் மற்றவர்களும்.
“என்ன சொல்றீங்க? எதுக்கு அவ போனா பெட்ட விட்டு எதுக்கு எழுந்து வந்தா?”என்று கேட்க
நர்ஸ் அவள் அருந்ததியை பார்க்க வேண்டும் என்று வந்ததாகவும் அப்போது நீங்கள் பேசுவது கேட்டு அங்கேயே நின்றுவிட்டதாகவும் நீங்கள் பேசியது எனக்கு புரியவில்லை அதனால் நான் அமைதியாக இருந்தேன் ஆனால் அவர் அழுது கொண்டே இருந்தார் அப்படியே வெளியே போக சொன்னார் அதனால் காற்று வாங்க வெளியே கூட்டி சென்றேன் ஆனால் அவர் திடீரென எழுந்து செல்ல ஆரம்பித்தார் தான் தடுத்தும் சென்றுவிட்டார் என்று அவர் கூற அவசரமாக திரும்பியவனை தடுத்தது அந்நேரம் அங்கு வந்த மேனேஜர் குரல் வெளியே முழுவதும் மீடியா ஆட்கள் குழுமி இருப்பதாகவும் நீங்கள் கொடுத்த அனெளன்ஸ்மெண்ட் கொடுத்தும் நீங்களே பேசவேண்டும் என காத்திருக்கின்றனர்.
மேதா மேடமை பற்றியும் ரியோட்டோ சர் ஃபேமிலி பற்றியும் அறிந்தே ஆகவேண்டும் என்று காத்திருக்கின்றனர் என்று கூற அனைவரும் பதட்டமாய் கிளம்ப அவர்களை கைநீட்டி தடுத்த ஆராஷி.
இது எங்க ரெண்டு பேருக்குமானது நானே எல்லாம் பார்த்துக்கிறேன் நீங்க இங்கேயே இருங்க ப்ளீஸ்” என்று கூற
நிதினோ
“அவ எங்க போனானு தெரியாம நீங்க மட்டும் போய் எங்கனு தேடுவீங்க ஆரா? நாங்களும் வர்றோம்” என்று கூற
அவரை தடுத்த ஷ்ரத்தா
“அவரே அவளை தேடிக்கட்டும் அண்ணா நாம கூடவே போகவேண்டாம் அவங்களுக்குனு அவங்க தனியா பேசி ஒரு முடிவு பண்ணட்டும்.
அவளுக்காக தேட உறவா நாம இருக்கோம்னு அவளுக்கு தெரியும் ஆனா உயிரா ஒருத்தர் இருக்காருனு அவ எப்போதான் தெரிஞ்சுக்கறது?” என்று பேச அவளது பேச்சும் சரியென பட அனைவரும் அங்கேயே நின்றுவிட
“தேங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டான்டிங் ஆல்” என்றுவிட்டு மேனேஜரிடம் திரும்பியவன்
“இப்போதைக்கு போலீஸ்ஸ வரவெச்சு மீடியாவ கிளீயர் செய்ங்க” என்றுவிட்டு அவரது மொபைலை வாங்கியவன் “கூடிய சீக்கிரமே பப்ளிக் கான்செர்ட் நடக்கும் அதுல எல்லாம் அவங்களுக்கு சொல்லுவோம் அதுவரை எனக்காக எல்லாரும் பொறுமையா இருந்தா எனக்கு கொஞ்சம் ஆதரவா இருக்கும் நான் ஒரு ஐடல்லா உங்ககிட்ட எதிர்பார்க்கிறது இப்போதைக்கு எனக்கான ப்ரைவசி நானே வர வரைக்கும் அதை எனக்கு எல்லாரும் கொடுப்பீங்கனு நம்புறேன்” என்று ஆங்கிலத்திலேயே பேசியவன் “இந்த வீடியோவை இப்போதைக்கு எல்லா சோசியல் மீடியா அண்ட் ப்ரஸ்க்கு ரிலீஸ் பண்ணுங்க எனக்கு பேக்சைட் என்ட்ரி வழியா ஒரு காரை அரேஞ்ச் பண்ணுங்க நான் உடனே கிளம்பனும் யாருக்கும் தெரியாம” என்றுவிட்டு அவன் மேனேஜர் கையில் இருந்த லெதர் ஜாக்கெட்டை வாங்கி அணிந்தவன் மாஸ்க் அணிந்து
வேறு வழியாக வெளியேற செல்ல கார்ட்ஸ் வர யாரும் வரவேண்டாம் என்று தடுத்துவிட்டு தான் பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டு செல்ல இந்த பக்கம் மேனேஜர் சென்று மீடியாவை திசைதிருப்ப அங்கிருந்து நழுவி தனக்காக கொண்டு வரப்பட்ட காரில் ஏறப்போனவன் என்ன நினைத்தானோ டிரைவரை இறங்க சொல்லி அவரை வேண்டாம் என்றுவிட்டு தானே காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.
அவனது வீடியோ சோசியல் மீடியா முழுதும் பரவ மீடியா ஆட்களும் அவனது வீடியோவை பதிவை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
புயல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்ட ஆராவின் கார் அங்கிருந்து நேரே சென்றது அவளது தோழியோடு அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு அங்கு சென்று மாடி ஏறி ஓடி காலிங்பெல்லை அழுத்த யாருமே வரவில்லை உடனே கீழே இறங்கியவன் ஏதோ தோன்ற மீண்டும் மேலே சென்று கதவை தட்டினான் அப்போதும் திறக்கவில்லை உடனே ஹர்ஷத்துக்கு ஃபோன் செய்து மெடில்டா எங்கு என்று விசாரிக்க அவள் அவர்களது பெற்றோரை காண ஊருக்கு போய் இருப்பதாக தகவல் கிடைக்க மீண்டும் காரை கிளப்பியவன் எங்கே போன மேதா? என்று மனதிலேயே கேள்வியாய் கேட்டவனுக்கு கிடைத்த பதிலோ அவர்களது பழைய தங்கி இருந்த வீடு நினைவு வர உடனே வேகமாக செலுத்தினான் காரை
எப்படியும் அவள் அங்குதான் சென்றிருப்பாள் என்று அவனது உள்மனம் கூற நேரே வண்டியை அங்கு செலுத்தினான்.
அந்த இடத்தை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே இருக்கும்படி சொன்னவள் மேதாதான் அதனால் எதுவும் மாறவில்லை அப்படியே இருந்தது.
அங்கு சென்றவனுக்கு அதுவரை மேதா தங்கி இருந்த அறை எது என்று தெரியாததால் யோசித்தான் எப்போதும் ரியோட்டோ அவளை பற்றி பேசும்போது முதலில் சொல்வது கீழே அவளது தோழன் வீடு என்றும் மேலே அவளது வீடு அது பக்கத்து ஃபோர்ஷன் வேறு ஒருவரது என்று சொன்னது நினைவு வர மாடி ஏறியவன் முதலில் இருந்த வீட்டின் முன் நிற்க சிறு தடுமாற்றம் ஒருவேளை அவள் இங்கு வந்திடவில்லை என்றால்? அடுத்து எங்கு சென்று தேடுவது? இந்த தடுமாற்றம்தான் அவனுக்கு.
ஆனாலும் மனமோ அவள் அங்குதான் இருப்பாள் என்று அடித்துக்கூற கை நடுங்க காலிங் பெல்லை அழுத்தினான் யாரும் வரவில்லை
மனம் தளராமல் கதவை தட்ட அவன் கதவின் மேல் கைவைக்க பூட்டாததால் அது திறந்து கொண்டது.
கதவை திறந்து உள்ளே செல்ல அங்கு கால்களை குறுக்கி வைத்துக்கொண்டு ஆராஷியும் அவளது தந்தை சரத்ஶ்ரீயும் சேர்ந்து இருந்த பெரிதாக்கப்பட்டு சுவரில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படத்தின் அருகில் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தபடி அமர்ந்து இருந்தாள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.
அவளை பார்த்தவன் அப்படியே அதிர்ந்து நின்றான்.
கழுத்தில் கட்டோடு அழுது கலைத்து ஓய்ந்து போய் மூடிய விழிகள் அன்று அவன் அவளை தப்பாக பேசியபோது எப்படி ஓய்ந்து நின்றாளோ அப்படியே இப்போதும் ஆறுதலாய் தோள் சாயகூட யாருமின்றி அமர்ந்திருந்தாள்
அன்று வாய்பேச முடிந்தும் ஊமையாய் அழுது நின்றாள் இன்று வாய்பேச முடியாமல் ஊமையாய் அழுதுகொண்டு இருக்கிறாள்.
அன்று அன்னையாய் ஆறுதல் தர அவளது தோழன் இருந்தான்.
இன்று தகப்பனாய் தான் இருக்கவேண்டும் என எண்ணி கலங்கிய தன் கண்களை துடைத்தபடி கதவை தாழிட்டு விட்டு அவளை மெதுவாக நெருங்கினான்.
அவளது அருகில் அமர்ந்தவன்
“அஷ்ஷூ” என்று உயிர் உருகும் குரலில் அவளை அழைத்தான்.
எப்போதும் அவளை உயிர்ப்போடு வைத்திருக்கும் அதே குரல் எப்போதாவது அவளை உரிமையோடு அருகிலிருந்து அழைக்கமாட்டானா? என ஏங்கிய குரல் அவளுக்கு ஆறுதல் தேவைப்படும் போது அவனது குரல்தான் அவளுக்கு ஆறுதலாய் இருந்தது இப்போது அதே குரல் அவளது அருகில் கேட்க மூடிய விழிகள் மெல்ல திறந்தது.
கலங்கிய கண்ணீரின் வழியே மங்கலாய் அவன் உருவம் தெரிய கனவோ என கண்களை சிமிட்ட தேங்கி நின்ற கண்ணீர் வழிந்தோட அதன் வழியே கலங்கிய விழியோடு அவன் தான் அவனேதான் அவளது அருகில்.
அவளது வழிந்த கண்ணீரை துடைக்க அவனது கைகள் நீள அதிர்ந்து அவள் பின்னோக்கி நகர பார்க்க நீண்ட கைகள் அப்படியே நின்றது.
சுருக்கென்ற வலியோடு அவளை கலங்கி போய் பார்த்தவன்
“இன்னும் எவ்ளோநாள்டி என்னை விட்டு ஓடிட்டே இருக்கப்போற? வலிக்குதுடி அஷ்ஷூ.
எனக்குனு யாருமே இல்லனு இருந்தேன் நான் இருக்கேன்னு நீ வந்த இப்போ நீயும் என்னை விட்டு போறேன்னு ஓடுறியே என்னை பத்தி கொஞ்சம் யோசிச்சியா மேதா? நீயும் இல்லாம நான் நடைப்பிணமா நடமாடனுமாடி அதுதான் உன் ஆசையா மேதா?” என்று அவன் வலியோடு கேட்க.
அவனது வாயை பொத்தியவள் இல்லை என்பது போல தலையை ஆட்ட முயல வலியில் அவளது முகம் சுருங்க
அவளது கழுத்தை அசையவிடாமல் லேசாக பிடித்தவன்
“அசையாதே மேதா எனக்கும் வலிக்குதுடி என்னைவிட்டு போகறதுலேயே இருக்காதே மேதா எனக்கு அது மரணவலியா இருக்குடி.
உனக்கு வலியில ஆதரவு தேடகூட என்னை நீ தேடலைல நான் தொட்டா கூட உனக்கு பிடிக்கலைல அதான் என்னை விட்டு விலகிபோறல?” என்று அவன் கைகளை விலக்க போக அவனது கையை பற்றியவள் “இ..இ” இல்லை என்பது போல பேச முயல அவளது உதட்டில் கையை வைத்தவன்
“ஸ்டெரியின் பன்னாதே அஷ்ஷூ எனக்கு உன் நிலைமை புரியுது நீ பார்த்தாலே நான் புரிஞ்சுப்பேன்டி ஏன்னா என்கிட்ட எப்பவுமே பேசுறது அந்த கண்ணுதான். அந்த கண்ணு பேசுறது போதும்” என்று அவன் கூற ஆவென பார்த்தாள் அவனை.
“என்ன பார்க்குற? அப்புறம் ஏன் என்னை இந்த கண்ணை நேர்ல பார்த்தும் கண்டுபிடிக்கலனு யோசிக்கிறியா? அப்போ நான் என் கண்ணுல உன்மேல கோவத்தை வெச்சுட்டுதானே பார்த்தேன் அப்போ இந்த கண்ணு பேசுன பேச்சையெல்லாம் கவனிக்காம போய்ட்டானே”

Super