Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-109

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-109

அத்தியாயம் – 109

“நான் தான் கோவத்துல உன்னை உன் கண்ணை உன் மனசைனு எதையுமே கவனிக்காம இருந்துட்டேனே நீயாவது நான் தான் நீங்க தேடுற பொண்ணுனு சொல்லி இருக்கலாம் அதையும் நம்பி இருப்பேனா தெரியல?
அட்லீஸ்ட் உன்னை வெளிப்படுத்தி இருக்கலாம் எதையும் கவனிக்கவும் இல்லை அப்போ நான்.
உன்மேல என் மனசு தடுமாறுது என் மீராவோட இடத்தை நீ பிடிக்க பார்க்குற போலனு உன்மேல இருந்த கோவம் என் சித்தி தான் உன்னை நடிக்க அனுப்பினாங்கனு தப்பா புரிஞ்சுக்கிட்டு பையித்தியகாரன் மாதிரி உன்மேல கோவப்பட்டு கேவலமா பேசி உன் மனசை ரொம்ப காயப்படுத்திட்டேன்ல? ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல அதான் என்னை வேணானு தூக்கி எறிஞ்சுட்டு போய்ட்டியா?” என்று அவன் கேட்க கேட்க கண்ணீர் வழிய அவனையே பார்த்தவள் தன் கையை அவனிடமிருந்து பிரித்தவள் சைகையில் அவனிடம் மொபைலை கேட்க அவனது மொபைலை எடுத்து நீட்டினான் அதை வாங்கியவள் அதில் நோட்பேட்டை ஓபன் செய்து அவனுக்கு டைப் செய்து கொடுத்தாள்.
அதை வாங்கியவன் படிக்க
‘உங்கமேலே எந்த தப்பும் இல்ல என்னை மறைச்சுவெச்சு எல்லாம் செஞ்சது நான் தப்பு என்மேல தான் நான் தான் கொஞ்சம்கூட உங்களோட சைட்ல இருந்து யோசிக்காம விட்டுட்டேன்.
உங்களுக்கு நிழலா இருந்து உதவனும்னு நினைச்சேனே தவிர உபத்திரவமா மாறுவேன்னு நானே எதிர்பார்க்கல.
என் காதலை நீங்க உணர்ந்து என்னை சாதாரண ஆளா லவ் பண்ணனும்னு நினைச்சேனே தவிர உங்க காதல் மீராவா இருந்த நான்தான்னு நானே உணராம இருந்துட்டேன்.
அதனால உங்கமேல தப்பே இல்ல எதுக்கு உங்கமேலேயே பழியை போட்டுட்டு இருக்கீங்க?’என்று அவள் டைப் செய்ததை படித்தவன்

“அப்போ நீ என்ன செஞ்சுட்டு இருக்க மேதா? நீயும்தானே உன்மேல தான் எல்லா தப்பும் உன்னால தான் எனக்கு கஷ்டம்னுலாம் உன்மேல நீயே பழியை போட்டுட்டு இருக்க?” என்று அவன் கேட்க.
மீண்டும் மொபைலை வாங்கியவள்
டைப் செய்து கொடுத்தாள்.
‘இல்ல அப்படி இல்ல என்னால உங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடுக்க முடியாதுனு தான் நான் உங்கள விட்டு விலகி ஓடிட்டு இருக்கேன் என்னோட இருந்தா உங்களுக்கும் வீணா மனசு கஷ்டம்தான்’ என்று படித்தவனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது அவளை முறைத்தவன்.

“இல்ல தெரியாமதான் கேட்கிறேன் உங்க அப்பா உனக்கு அப்டி என்ன அறிவு இருக்குனு உன்னை ஃபவுண்டரா மாத்தி வெச்சுட்டு போய் இருக்காரு?” என்று அவன் கோவமாய் கேட்க அவனது கேள்வியில் அவளுக்கும் லேசாக கோபம் வர அவனை முறைத்தாள்.

முதன் முதலாக தன்னவளின் உரிமையான கோபப்பார்வையை கண்டவனுக்கு உள்ளுக்குள் ஆனந்த கூத்தாடியது அவனது உள்ளம்.
இதழை ஈரம் செய்து வந்த சிரிப்பை அடக்கியவன்.
“பார்க்காதடி எனக்கு அவ்ளோ கோவம் வருது உன்மேல.
ஏன்டி படிச்சு இருக்க இவ்ளோ பெருசா வளர்ந்து இருக்க கொஞ்சம் கூட அறிவை யூஸ் பன்னவே மாட்டியாடி?
குழந்தை பிறக்காதுனு ஏதோ ஒரு டாக்டர் சொல்லிட்டா உடனே நமக்கு குழந்தை பிறக்காதுனு ஓடிடுவியா?
ஏன் குழந்தை தான் நம்ம வாழ்க்கையா? அப்போ நம்ம லவ் இல்லையா?” என்று அவளை பார்த்து கேட்க
மீண்டும் அவனது மொபைலை வாங்கியவள்

‘காதல் வாழ்க்கைல குழந்தை பெருசா தெரியாது ஆனா கல்யாண வாழ்க்கையில குழந்தை தான் அந்த காதலை முழுமையாக்கும்’ என்று எழுதி கொடுக்க அதை படித்தவனுக்கு கோவம் ஏறிக்கொண்டே போனது இவளை என்னதான் பன்றது? என்று கொலைவெறியோடு பார்த்தவன்

“ஓஓஓ மேடம் அப்படி சொல்றீங்க? சரி நான் கேட்கிறேன் எங்க சித்தி செஞ்ச கொடுமையால நான் பாதிக்கப்பட்டு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன அப்புறம் என்னால உனக்கு எந்த சுகமும் குழந்தையும் கொடுக்க முடியாது அப்படினு ஒரு ப்ராப்ளம் வந்தா அப்போ என்னை விட்டு ஓடிடுவியா? இல்ல நான் ஓடிடட்டுமா?” என்று அவளை மடக்க அவனது தந்திரம் புரியாதவள் உடனே மொபைலை வாங்கி டைப் செய்தாள்.
‘அப்படிலாம் நடந்தா உங்கள ஓடிப்போகலாம் விடமாட்டேன் நல்ல டாக்டரா பார்த்து ட்ரீட்மெண்ட் எடுக்க வைப்பேன் அப்படியும் சரி ஆகலைனா
எனக்கு நீங்க உங்களுக்கு நான்னு தான் இருப்பேனே தவிர குழந்தை ஒன்னும் அப்படி அவசியம் இல்ல என்னை விட்டுட்டு நீங்க எங்கேயும் ஓடிப்போக விடமாட்டேன்” என்று அவள் எழுதியதை படித்தவனுக்கு சிரிப்பு வர லேசாக சிரித்துவிட்டான்.

“மேடம் மேதா மேடம் உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இப்போ மட்டும் குழந்தை இல்லாம நம்ம லவ் லைஃப் எப்படி ஃபுல்ஃபில் ஆகும்? எப்டி எப்டி எனக்கு ஒரு ப்ராப்ளம்னா மட்டும் இந்தம்மா என்னை விடாம இருப்பாளாம் அதே ப்ராப்ளம் இவளுக்குனா என்னை விட்டு ஓடிடுவாளாம் நான் வேற பொண்ண கல்யாணம் செஞ்சு சந்தோஷமா குழந்தையோட வாழனுமாம்? நல்லா இருக்குடி உன் நியாயம்?” என்று அவன் அவளை மடக்கி விட அதிலும் குழந்தை என்னும் வார்த்தையை அழுத்தமாய் கூற அப்போது தான் அவனிடம் தான் பதில் சொல்ல முடியாத அளவுக்கு சிக்கி கொண்டது புரிய தலையை குனிந்தவள் வருத்தமாய் இருக்க.
அவளை கன்னத்தை பிடித்து வலிக்காதபடி அவளது தலையை உயர்த்தியவன்.

“லவ்னா ரெண்டு பேருக்கும் லவ்தான் அஷ்ஷூ வலினா ரெண்டு பேருக்கும் வலிதான்.
நான் இல்லாம உன்னால வாழ முடியும் ஆனா நீ இல்லாம என்னால வாழவே முடியாதுடி.
நீ என் உணர்வுல நினைவுல கலந்தவ உயிர் பிரிஞ்சாலும் உணர்வுகள் சாகாது நினைவுகள் சாகவே சாகாது.
குழந்தைதான் வாழ்க்கைனு நீ நினைக்கிற என் வாழ்க்கையே நீ மட்டும் தான்னு நான் இருக்கேன் நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்ல அஷ்ஷூ.
உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா ஓகே நான் உன்னவிட்டு விலகி போய்டுறேன் ஆனா உன் நினைவோட மட்டும் தான் வாழ்வேன் வேற யாருக்கும் என் வாழ்க்கையில இடம் இல்ல.
உன்னைவிட்டு நான் போறதுனா அது இந்த உடம்ப விட்டு உயிர் போனாதான் இருக்கும் மேதா என்னை விட்டு நீ போகணும்னா போ” என்று கூறிவிட்டு அவளது கன்னத்தில் இருந்து கையை எடுக்க போக அவனது கைமேல் தன் கை வைத்தவளுக்கு கண்ணீர் வழிய அவனை பார்த்தவள் அவனது கைமேல் அழுத்தம் கொடுத்து அவனை பார்த்தாள்.
அவளது அழுத்தமே சொன்னது அவள் அவனைவிட்டு இனி போகமாட்டாள் என்பதை.

அவளது உணர்வை உணர்ந்தவனுக்கு சந்தோஷம் பொங்க அப்படியே அவளை அணைத்துக்கொண்டான்.
அப்படியே அவளது நெற்றியில் முத்தமிட அவளது கண்கள் மூடிக்கொண்டது. அதில் கண்ணில் நீர் வேகமாக வழிந்தோடியது.
அவனது ஒற்றை முத்தத்தில் அவனது உணர்வுகள் புரிய அந்த முத்தம் அவளை கரைய செய்வதை உணர்ந்தவன்.
அன்றும் இப்படித்தானே தன் முத்தத்தில் கரைந்தாள் அதை தவறாக எண்ணி அவளை என்ன என்ன பேசி விட்டோம் என்று வருந்தியவனை கண்கள் திறந்து பார்த்தவள் அவனது வருத்தமான முகத்தை பார்த்து அவளுக்கு உடனே புரிந்து விட்டது அவன் எதை நினைத்து வருந்துகிறான் என்று அவனது கையின்மேல் இருந்த தனது கையை விலக்கியவள் அவனது கன்னத்தை ஏந்தி தன்னை பார்க்க செய்து கண்களை மூடித்திறந்தவள் சற்று எக்கி அவனது நெற்றியில் முத்தம் வைத்தாள்.
தாயாய் தன்னவனை வருத்தப்படவிடாமல் தாங்குபவளின் அந்த ஒற்றை முத்தம் அவனுக்கு அவளை புரிய வைத்துவிட கண்களை மூடித்திறந்து அவன் அவளை பார்க்க அதுவரை இருந்த இடைவெளியை குறைத்தவள் அவன் நெஞ்சில் உரிமையோடு சாய்ந்து கொண்டாள்.
எங்கெங்கோ காடுமேடு தேசமெல்லாம் ஓடித்திரிந்த பறவை தன் புகலிடம் அடைந்த நிம்மதி போல அவளது மனமும் நிம்மதி அடைந்தது.
தனது பொக்கிஷம் தன் கைசேர்ந்தது போல அவளது ஒற்றை அணைப்பும் ஒற்றை முத்தமும் அவனுக்கு தன் வாழ்வில் எதையோ சாதித்த திருப்தியை தர அவளை அவனும் இறுக்கி அணைத்து கொண்டான்.

1 thought on “வேண்டும் நீ எந்தன் நிழலாய்-109”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!