அத்தியாயம் – 31
ஷர்மா கேட்டதும் திரும்பி அவனை பார்த்தவள்..
“உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரியும் ஷர்மா.. நீயே இப்படி பேசலாமா? எனக்கு என் உடம்பவிட நான் கொடுத்த வாக்கு முக்கியம்..
ஒன்ஸ் நான் ப்ராமிஸ் பண்ணா அதை மாத்த மாட்டேன்னு தெரியும்ல..அதைவிட அப்பா சாகும்முன்ன என்னைதானே அவருக்கு மேனேஜராவும் டிரான்ஸ்லேட்டராவும் அப்பாயிண்ட் பண்ணார் அதை நான் காப்பாத்தனும்ல? அதுக்கு நான் போய்தான் ஆகணும்” என்றாள்..
“அது அப்பாவா ஒன்னும் செய்யல நீதானே உன்னை அப்பாயிண்ட் பண்ண சொன்ன?” என்றான் அவன்..
“எஸ்.. ஏன்னா நான் செஞ்ச சத்தியம்க்கு தான் இதை அப்பாவ செய்ய சொன்னேன்..அப்பாவும் ஒகே சொல்லிதான் என்னை அப்பாயிண்ட் பண்ணி இருக்கார்..அவரு புரிஞ்சுக்கிட்டார் நீயும் புரிஞ்சுப்பனு நினைக்குறேன்..” என்று அவள் கூற..
“சரி நீ சொல்றதையெல்லாம் ஏத்துக்குறேன் பேபி.. பட் உன் ஹெல்த் முக்கியம்ல உடம்பு கொஞ்சம் சரியாகட்டும்னு போய் வேலை செய் யார் வேணாம்னு சொன்னா?” என்றான் ஷர்மா..
“ப்ளீஸ் ஷர்மா..ஐ நீட் ட்டூ கோ..புரிஞ்சுக்கடா.. அண்ணாவால ரொம்ப சமாளிக்க முடியாது..நீ அப்பாயிண்ட் பண்ண ஆள் எல்லா வேலையும் சொதப்பல் பண்ணிட்டு இருக்காராம்.. நான் போனா தான் அண்ணாக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியும்.. இதுல என் ஹெல்த் இப்போ ஓகே தான்.. அதை நான் பார்த்துக்கறேன்..நீ என்வேலையை பார்த்தா மட்டும் போதும்டா..ப்ளீஸ்.. எனக்கு கிளம்ப ஹெல்ப் பண்ணு” என்று அழுத்தமாய் அவள் பேச இதற்குமேல் அவளை சமாளிக்க முடியாது என்று உணர்ந்தவன் அவளுக்கு பேக்கிங் செய்ய உதவி செய்தான்..
“நான் சொன்னா கேட்கிற ஆளா நீ.. என்னமோ செய்..அப்படி என்ன லவ்வோ? இப்படி உடம்ப வருத்திக்கிற அளவுக்கு” என்று கேட்க..
“அது சொன்னா புரியாது ஷர்மா.. லவ்வ விட கொடுத்த வாக்கு முக்கியம்டா.. அதை காப்பாத்ததான் நான் போயே ஆகணும்னு இருக்கேன்..” என்று அவள் கூற..
“ஆமாமா..சொன்னாங்க.. சரி அதைவிடு நானும் உன்கூட வர்றேனே ப்ளீஸ்..உனக்கு அஸிஸ்டெண்ட்டா” என்று கேட்க..
அவனை முறைத்தவள்
“ஆளு மட்டும் வளர்ந்தா போதாதுடா.. கொஞ்சமே கொஞ்சம் அறிவும் இருக்கனும்.. நானே அஸிஸ்டெண்ட்டா தான் போறேன் இதுல எனக்கு அஸிஸ்டெண்ட்டா? கேவலமா இருக்குடா.. ஒழுங்கா நான் கோடிங் பண்ண ப்ராஜெக்ட்ட முடி அங்க வந்த காலை உடைச்சுடுவேன்” என்றாள் மிரட்டலாய்..
“அட கொலைகாரி..நீயெல்லாம் ஒரே உயிர் நட்பா? என் உயிர எடுக்குற நட்பு.. ஒரு பேச்சுக்கு சொன்னா நீ காலை உடைக்க ப்ளான் போடுற..நீ கிளம்பு ஆத்தா.. நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு” என்று அவன் கூற..
“எது அருவ கரெக்ட் பண்றதா உன் சாதனை?” என்று அவள் கிண்டலடிக்க..
“ச்சே..பொண்ணாடி நீ.. அவள நான் நேர்ல பார்த்தது கூட இல்ல இதுல கரெக்ட் வேற பண்றாங்க..அதும் அந்த வாயாடிய.. போன்லேயே கிழி கிழினு கிழிக்கிறா இதுல லவ்வா? ஐயோ என் உயிர்?” என்றபடி அலறியவன்
“கிளம்பு கிளம்பு” என்று அவளுக்கு உதவியபடி அவளை உண்ணவைத்து மருந்து கொடுத்து ஆயிரம் பத்திரங்களை சொல்லி அதன் பின்னரே அவளை அனுப்பினான்..
நள்ளிரவில் கிளம்பியவள் இந்தியா வர மாலை ஆகிவிட்டது..
தான் வருவதாக கூறாமல் சர்ப்ரைஸ்ஸாக வந்ததால் அவள் யாருக்கும் சொல்லவில்லை..
அன்றைய தினம் மாலை நேரம் ஒரு ஆட் ஷூட்டிங் இருப்பதால் காலையே சென்னை வந்த ஆராஷி மாலை நெருங்கும் நேரம் ஷூட்டிங் கிளம்பினான்..
வந்திறங்கியவள்.. ஒரு கேப் புக் செய்து கொண்டு அண்ணா நகர் வந்தவள் அங்கு ஏதோ கூட்டம் நிற்க வண்டியை நிறுத்தி இறங்கினாள் அப்போது ஒரு குழந்தைக்கு லேசாக அடிப்பட்டு இருந்ததை பார்த்தவள் தான் வந்த வண்டியில் இருந்து இறங்கி கொண்டு அவரிடம் கூடுதல் பணம் தருவதாக கூறி அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கேட்க..
அவரோ..
“பணம் என்னம்மா முக்கியம்..உசிருதான் முக்கியம்.. கறையெல்லாம் கழுவினா போய்டபோகுது..ஏத்துமா குழந்தையை” என்றபடி ஏற சொல்ல.. அவருக்கு நன்றி கூறி பணத்தையும் கொடுத்தே அனுப்பி
வைத்தாள்.. அதன்பின் கூட்டம் கலைந்தது ஆனாலும் ஒரு மூன்று வாண்டுகள் அவளையே பார்த்தபடி நின்றனர்..
அதுவரை மாஸ்க் அணிந்து இருந்தவள் அதனை கழட்டி விட்டு அந்த வாண்டுகளை அவர்களை போலவே நின்று பார்த்தாள்..
ஷூட்டிங் கிளம்பியவனின் வாகனமும் அதே ரோட்டில் வர அந்நேரம் பார்த்து அவன் வந்த வண்டி ஏதோ பள்ளத்தில் மாட்டி சட்டென நின்றது..
“வாட் ஹாப்பன்ட்?” என்றான் ஆராஷி..
அதற்குள் அவனது டிரான்ஸ்லேட்டர் அவனுக்கு சூழ்நிலையை டிரைவரிடம் கேட்டு விளக்க..
சீக்கிரம் ரெடி செய்ய சொன்னவன் காரிலிருந்து இறங்க பார்க்க ..
அதே நேரம் தூரல் சிந்த ஆரம்பித்தது..
அதனால் அவனை காருக்குள்ளேயே இருக்கும்படி கூறினர் பாதுகாவலர்கள்..
அதனால் உள்ளேயே அமர்ந்தவன் அந்த இடத்தை சுற்றி பார்வையை சுழற்றினான்.. அப்போது தான் அந்த வாண்டுகளோடு மேதாவும் அவனது கண்ணில் பட்டனர்..
மாஸ்க்கை கழட்டியவள் அவர்களை பார்த்து என்னவென்று புருவத்தை ஏற்றி இறக்க அந்த வாண்டுகளும் அதேதான் செய்தனர்..
தூரல் வர அப்போதும் நகரவில்லை.. அவர்கள் தான் அவனது கண்ணில் பட்டனர்..
“யார் இவ லூசு மாதிரி மழையில நின்னுட்டு இருக்கா..அதும் பசங்ககூட பசங்கமாதிரி..உடம்பு என்னாத்துக்கு ஆகுறது” என்று அவளை திட்டியபடி பார்க்க..
அவளோ
“யாருக்குலாம் ஐஸ்க்ரீம் வேணும்?” என்று கேட்க எல்லாம் எனக்கு எனக்கு என்று கத்த அவர்களுக்கு அங்கிருந்த ஐஸ்கிரீம் ஷாப்பில் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அவளும் உண்ண ஆரம்பித்தாள்..
“லூசா இவ.. ஈவ்னிங் டைம் மழை ஆல்ரெடி.. இதுல ஐஸ்கிரீம் வேற.. அந்த பசங்களுக்கும் வேற வாங்கி தர்றாளே” என்று தனக்குள் பேசியபடி அவர்களைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்..
அந்த மழையின் தூரலில் நனைந்தபடி அவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிட அவர்கள் சாப்பிடுவது அவனுக்கும் சாப்பிட தூண்டினாலும் ஏனோ அவள்மேல் வந்த கோவத்திலும் பெண்கள்மேல் ஏற்பட்ட வெறுப்பிலும் தன்னை கோவமானவனாய் மாற்றி கொண்டான்..
தலை வலிப்பதுபோல இருக்க எப்போது தான் வண்டி ரெடியாகும் என கேட்க அதற்குள் அவனை அழைத்துசெல்ல வேறு வண்டி வந்துவிட்டது.. பாதுகாவலர்கள் குடைபிடிக்க வந்த வாகனத்தில் ஏறப்போனவன் திரும்பி அவளை பார்க்க அந்த குழந்தைகள் அனைவரும் அவளை ஐஸ்கிரீம் உதட்டோடு முத்தம் பதிக்க அதை அவளும் சந்தோஷமாக ஏற்று அவர்களுக்கு அவளும் முத்தம் கொடுத்தாள்..
யாரிடமும் சேராத ஆராஷிக்கு இது புதிதாகவும் அதே சமயம் அவள்மேல் காரணமே இல்லாமல் வந்த கோவத்தில் அருவருப்பாகவும் இருக்க வண்டியில் ஏறி சென்றுவிட்டான்.. மேதாவும் அந்த குழந்தை இப்போது நலம் என்று அறிந்தபின்பு அங்கிருந்து கிளம்பினாள்..
நேரே ஷூட்டிங் சென்றவன்.. ஏதோ கடுப்பில் ஷூட் சொதப்ப அன்று ஷூட் அடுத்தநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது..அடுத்தநாள் காலை அவனுக்காக சரத் ஶ்ரீ அப்பாயிண்ட் செய்த ஆள் வேலைக்கு வருவார் என்று கூற..கடுப்போடு கிளம்பியவன் சென்னையில் இருந்த அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான்..
ஒவ்வொரு இடமும் ஒரு ஒரு அழகுடனும் நேர்த்தியாகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததை எண்ணி வியந்தான்..
தன் நாட்டில் அட்வான்ஸ் டெக்னாலஜி மூலம் எல்லாம் அனுபவித்தவனுக்கு இங்கு எல்லாம் வேறு விதமாய் இருக்க வியந்து போனான்..
தன் தாயிடம் வரும் சந்தன மணம் அவ்வறை முழுவதும் வர தன்னை மறந்து நின்றுவிட்டவன் கண்களில் கண்ணீர் நிரம்பி போனது..
தன்னை பெற்றவர் தன்னோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நாடோடி வாழ்க்கை தனக்கு வந்திருக்காதே அவரை பிரிந்து படும் துயரம் எண்ணி கண்கள் கலங்கியது அவனுக்கு..
ஒருகணம் தன் தாயை கண்முன் நிறுத்திய அந்த மணம் எங்கிருந்து வருகிறது என பார்த்தால் ரூம் ஸ்ப்ரேக்கு பதிலாக அழகிய ஒரு சிலையின் கையில் இருந்த குடுவையில் ஊதுபத்தி போன்ற மெல்லிய குச்சி புகைய அது தான் அந்த சந்தன வாசத்தை வழங்கி கொண்டு இருந்தது..
அவனுக்கு ஸென்டட் கேன்டில்ஸ் பர்ஃப்யூம் பாடி ஸ்ப்ரே இதெல்லாம் பிடிக்காது இன்றும் அவனது தாய் கற்றுக்கொடுத்த வாசனை திரவியத்தை அவனே தயார் செய்து தான் அதை உபயோகிப்பான் வேறு எந்த வித வாசனை திரவியங்களும் அவன் எடுப்பதில்லை..
தன் ரசிகர்கள் தனக்கு பரிசளிக்கும் அத்தனை வாசனை திரவியங்களையும் அவன் மற்றவர்களுக்கு கொடுத்துவிடுவானே தவிர அவன் உபயோகிப்பதில்லை..