Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 32

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 32

அத்தியாயம் – 32

ஆனால் அந்த சந்தன மணம் அவனுக்கு அப்படி பிடித்து போயிற்று.. இனம்புரியாத கோவமெல்லாம் ஓரம் போய் மனதும் உடலும் புத்துணர்ச்சி பெற்று இருந்தது..
இந்த வாசத்தில் வாசனை திரவியம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டு இருந்தவன் அடுத்தவேளை கவலைகளை மறந்து அப்படியே உறங்கிப்போனான்..
எப்போதும் கோபமான முகமாகவும் மற்றவர்கள் மேல் வெறுப்பான பார்வையோடும் என முகமூடி அணிந்து வலம் வருபவன் இன்று ஒரு சிறு குழந்தைபோல அழகாக உறங்கிகொண்டு இருக்கிறான் அவனை பார்த்து ரசிக்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது..

எல்லா ஆண்களும் எல்லா தருணங்களிலும் அழகாக தெரிவதில்லை.. ஒரு சிலர் கோவத்தில் அழகாய் இருப்பர் ஒருசிலர் தூக்கத்தில் அழகாய் இருப்பர் இப்படி பல்வேற தருணங்களில் பிரித்தறிய வசதியாய் அழகை வெளிப்படுத்துவர்.. ஆனால் இவனின் கோவத்திலும் அழகு.. தூக்கத்திலும் அழகு..அழுது கண்கள் சிவந்து மூக்கும் சிவந்து பார்க்கும் பார்வைகூட அழகு..
ஆனால் அதையெல்லாம் மறைத்து தன்னை ஓர் இரும்பாய் எண்ணி வாழ்ந்து வருகிறான்..
அன்னையாய் வந்தவள் அன்புக்கரம் நீட்ட மறுப்பது ஏன்?

எங்கிருந்தோ அவனை காப்பவளின் அங்க அடையாளங்கள் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதபடி அலைகிறான்..
தன் தாயன்பை தனக்கு வழங்கியவளை..தாயாய் என் துன்ப நேரத்தில் என்னை தாங்கியவளை நான் துவண்ட போதெல்லாம் என்னை தேற்றியவளை காணாமல் தேடும் பயணம் எப்போது ஓயுமோ..?
அதுவரை அவனது உள்ளக்கனல் அடங்காதே..

தூங்கி எழுந்தவனுக்கு மறுநாள் காலை அழகாகவே விடிந்தது ஒரு ஓவியத்தில்..
ஒரு அழகான பெண் மணக்கோலத்தில் அவளது அருகில் இருக்கும் ஆண்மகன் மணக்கோலத்தில்.. இருவரது அருகிலும் இரண்டு குட்டி குழந்தைகள் அவர்களது முன்னிலையில் இவர்கள் திருமணம் போல வரையப்பட்ட ஓவியம்..
அது இந்திய முறையும் ஜப்பானிய முறையும் கலந்த திருமணம்..
அதை பார்த்ததும் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது..
அதே மனநிலையில் எழுந்தவனுக்கு ஏனோ காரணமே இல்லாமல் நேற்று பார்த்த பெண் நினைவில் வந்து போனாள்..
அவளை நினைத்ததும் அவனுக்கு உடனே கோவம் வந்தது..
“Irresponsible idiot.. அவளோட ஹெல்த் மேலேயும் அவளுக்கு அக்கரை இல்ல.. சின்ன பசங்க மேலேயும் அக்கரை இல்ல.. மழையில சின்ன பசங்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்துட்டு இருக்கா..ஒருவேளை லூசா இருப்பாளோ? Irresponsible idiot” என்று மனதிற்குள் அவளை திட்டியபடி குளித்து முடித்து அவனது ஃபேவரிட் உடையான க்ரே கலர் டீஷர்ட் அதன்மேல் கருப்பும் க்ரேவும் கலந்த ஃகோட் அணிந்து கருப்பு நிற பேண்ட் அணிந்து ரெடியானவன் வெளியே வர அவனை சந்திப்பதற்காக நிதின் வந்திருந்தான்..

நேற்றே நிதின் கூறி இருந்தான் இன்று அவனுக்காக அப்பாயிண்ட் செய்த மேனேஜர் கம் டிரான்ஸ்லேட்டர் வருவதாக..
அவரை தானே அழைத்து வருவதாகவும் கூறி இருந்தான்..
அப்போதே யோசித்தான் ஆராஷி ‘சாதாரண ஒரு ஸ்டாஃப் அவன இன்ட்ரோ பண்றதுக்கு சி.இ.ஓ வே வரணுமா என்ன?’ என்று யோசித்தவன்..

ஒருவேளை நாம வி.ஐ.பி னு செய்யுறாங்க போல என்று அவனே நினைத்து கொண்டான்..
நிதின் வந்ததும் அவனுக்கு முன்னமே வந்திருந்த மேதாவை பார்த்து
“கண்டிப்பா இந்த வேலையை நீ செஞ்சே ஆகணுமா மோளே? நாம வேணா அவரையே கண்டினியூ பண்ணலாம்டா?” என்று கேட்க அதிர்ந்து சுற்றி பார்த்தவள்..

“என்னோட கடமையை நான் செய்யறேன் சார் அதுக்கு யாரும் வேணாம்னு நினைக்கிறேன்” என்று அவள் அவனை சார் என்று அழைக்க அதிலேயே அவளது உறுதியை உணர்ந்தவன்..

“ஓகே மிஸ்.மேதா.. இன்னைக்கு அவரோடான உங்க ஷெட்டியூல்ஸ்லாம் தெரிஞ்சுக்கோங்க.. நான் இவரை அனுப்பிடுறேன்” என்று மேதாவிற்காக வந்திருந்த அவர்களது அயல்நாட்டு தொடர்பாளரை இருவரும் நன்றி தெரிவித்து அனுப்பினர்.. அவரோ குழப்பமாய் மேதாவை பார்த்தபடி நின்றிருந்தார்..
பின்னே தங்களது முதலாளி சாதாரண பெண்போல் காட்டன் உடையில் எந்தவித ஒப்பனைகளும் இல்லாமல் இருந்தால் அவருக்கு வேறு எப்படி இருக்கும் அதும் அவரது வேலையை பார்க்க வந்துள்ளாள் என்பதே அவருக்கு பெரிய ஷாக்..
அவரிடம் நிதின் உண்மையை சொல்ல அவளை அதிர்ந்து பார்த்தார்.. அதன்பின் அவளது விளக்கத்தை கேட்டவர்..
அமைதியாக..
“சரி மேடம் நான் யாருக்கும் எதுவும் சொல்லமாட்டேன்..நீங்க கவலைபடாதீங்க” என்றுவிட்டு கிளம்பினார்..
அவரை அனுப்பிவிட்டு மேதா உள்ளே வருவதற்குள் உள்ளே இருந்து வெளியே வந்தான் ஆராஷி..
அவனை பார்த்தவள் அங்கேயே நின்றுவிட..
நிதினுக்கே அவனது அந்த கம்பீரம் அழகாக தெரிந்தது..
ஒருகணம் தன்னை மறந்தவன் பின்பு அவனது சிரிப்பில் தன்னிலை அடைந்தவன்
“ஹலோ..சார்.. குட் மார்னிங்” என்று கூற அப்போது தான் அவனும் “குட் மார்னிங்” சொல்லி கை குலுக்க.. அந்நேரம் வந்து நின்றாள் மேதா..
அவளை பார்த்த கணமே அவனுக்கு அவள் அன்று செய்தது நினைவு வர உடனே ஒருவித கோபம் கலந்த எரிச்சலும் வந்தது அவனுக்கு தன் அழகு முகத்தை சுலுக்கியபடி அவளை பார்க்க நிதினுக்கோ அவனது செயல்கள் கோவத்தையே வரவைத்தது தன் தங்கையை இப்படி ஏதோ புழுவை பார்ப்பது போல் பார்த்து வைக்ககறானே என..
ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் அவளை பார்த்தவன் கண் அசைத்து அவளை வரச்சொன்னவன் ஆராஷியிடம் திரும்பி

“சார் ஷி ஈஸ் யுவர் மேனேஜர் கம் டிரான்ஸ்லேட்டர் மேதஷ்வினி ஶ்ரீ..” என்று அறிமுகம் செய்ய அவளும் கைகூப்பி வணக்கம் சொல்ல அதிர்ந்தவன் கோபமாய்

“வாட் த்த ஃப” என்று நின்றுவிட்டான்..

இருவரும் ஒன்றும் புரியாமல் பார்க்க..
அவனோ ஜாப்பனீஸில் கத்த ஆரம்பித்தான்..
“எனக்குத்தான் பொண்ணுங்களையே புடிக்காதுனு தெரிஞ்சும் நீங்க எப்படி ஒரு பொண்ணை எனக்கு மேனேஜரா அப்பாயிண்ட் பண்ணலாம்..அதும் இவளை.. பார்த்தாலே எரிச்சலா வருது இவள பக்கத்தில வெச்சுட்டு நான் எப்படி ஃபீஸ்ஃபுல்லா வேலை செய்யுறது?” என்று அவன் கத்த அது புரியாமல் நிதின் மேதாவை பார்க்க அவள் அவன் முதலில் சொன்னதை மட்டும் சொன்னாள்
‘இதையா இவ்ளோ பெருசா பேசினான்’ என்பது போல அவனை பார்த்த நிதின்..
எழுந்து நின்று
“மிஸ்டர் ஆராஷி..
இது எங்க அப்பாவோட கடைசி ஆசை.. அவரு உயில்லேயே மென்ஷன் பண்ணி இருக்காரு இவங்கதான் உங்களுக்கு மேனேஜர்னு அவரோட ஆசையை நிறைவேற்ற வேண்டியது என் கடமை..எங்க அப்பாக்காக நீங்க இதை ஏத்துக்கத்தான் வேணும்” என்று கூற.. அதையும் அவள் மொழிபெயர்க்க கோவத்தில் திரும்பியவன் அவளது டிரான்லேஷனை அப்போது தான் உணர்ந்தான்..
அவனுக்கு எளிதில் புரியும்படி அவளது டிரான்லேஷன் இருந்தது.. புரொஃபஷனலாக இல்லாமல் பேச்சு வழக்கு போல இருந்தது..அதும் இல்லாமல் சரத் ஶ்ரீ சார் அவனுக்கு செய்த உதவிகளை எண்ணியவன்
அவருடைய கடைசி ஆசைக்காக அவளை மேனேஜராக ஏற்க நினைத்தவனுக்கு ஏனோ அவள் முதல் சந்திப்பு கோவத்தை கொடுத்தது போல் இப்போதும் ஒருவித கோவம் இருந்து கொண்டே தான் இருந்தது..
தன்னை அமைதி படுத்தி கொண்டவன்..
திரும்பி..
“இட்ஸ் ஓகே சார் சரத்ஶ்ரீ சார்க்காக இதை நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன்.. ஆனா எனக்கு இவங்க ஒர்க் புடிக்கலைனா இவங்கள மாத்திரணும்” என்று கூற அதை அவள் அப்படியே மொழிபெயர்ப்பு செய்ய அதை கேட்ட நிதின் சந்தோஷமாய்
“ஷியூர் சார்” என்று கூற இப்போது இவளுக்கு கோபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *