Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 5

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 5

அத்தியாயம் – 5

அன்று அவர்களுக்கு கிளாஸ் சீக்கிரமே முடிந்துவிட்டதால் ரியோட்டோவும் ரென்னும் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர்..

அதனால் கல்லூரியிலேயே அவளை சந்திக்க முடியவில்லை..

தேஜுவின் அப்பா கேட்டதால் அந்த புரொபசரும் தமிழ் தெரிந்த ஜப்பானிய ஆளின் வீட்டை தேட அவருக்கு கிடைத்த தகவல் ரியோட்டோ தான் இப்போதைக்கு தனியாக இருப்பவன் தமிழும் தெரியும் ஜப்பானிய பையனும்கூட..

எல்லோருடைய ரூமும் ஃபுல்லாகி இருந்தது அதே சமயம் ரியோட்டோவின் அதே பிரிவை எடுத்து படிக்கும் ஜுனியர் அவள் என்பதால் எல்லாவகையிலும் அவளது நலன் கருதி அவர் அவளை பார்க்க செல்ல சொன்னார்..

அவரது கூற்றப்படி அவளும் சென்றாள்.. புரொபசர் கொடுத்த அட்ரஸ்ஸை மேப் மூலம் தேடிப்பிடித்தவள் அவர் சொன்ன வீட்டின் கதவின் முன் நின்று பெல்லை அழுத்த வந்து கதவை திறந்தவன் அவளை கண்டு அப்படியே நின்றுவிட்டான்..

“Excuse me..Mr.ryoto..இங்க ரூம் காலினு சார் சொன்னாங்க..எனக்கு சீனியர்னும் சொன்னாங்க அதான் பார்க்க வந்தேன்.. ரூம் பார்க்கலாங்களா?..நீங்க ரூம் ரெண்ட் எவ்ளோனு சொல்லிட்டா பிரச்சினை இருக்காது..ஏன்னா நான் எங்க அப்பா கொடுக்குற பாக்கெட் மணியையும் அண்ட் இங்க ரெஸ்டாரண்ட்ல வேலை செஞ்சும் தான் வாடகை கொடுக்கனும் அவ்ளோதான் முடியும் இப்போவே பேசிட்டா நல்லது பாருங்க..எனக்கு காலேஜ்க்கும் லேங்குவேஜ் கிளாஸ்க்கும் இந்த வீடு பக்கமா இருக்கும் அதனால நான் எக்ஸ்ட்ரா வொர்க் பண்ணியாவது பே பண்ணிடுறேன் ரூம் இல்லனு மட்டும் சொல்லிடாதீங்க சார் ப்ளீஸ்” என்று கேட்டு அவனை பேசவே விடாமல் அவளே பேசி முடித்தாள்.. கதவை திறந்த ரென் அவளது பேச்சு புரியாமல் நின்றான் என்றால் அவளது மூச்சு விடாத பேச்சில் பின்னால் நின்ற ரியோட்டோ அசந்து போனான்..

‘யாருடா இவ இந்த பேச்சு பேசுறானு தான்’ பார்த்துக்கொண்டு இருந்தான் ரியோ..

அவனுக்கு தமிழ் புரியுமே தவிர பேச்சு சரளமாக வராது அதனால் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

ரென் இப்போது தான் தமிழ் கற்பதால் அவளது பேச்சு சிறிது தான் புரிந்தது மீதம் எதுவும் புரியாமல் பார்த்தான்..

முதல் பார்வையிலேயே அவளிடம் தலைகுப்புற விழுந்துவிட்டான் ரென்..

அவளது பேச்சால் ஈர்க்கப்பட்டு விட்டான் ரியோட்டோ.. இப்படி இரு ஆண்களை தன்வசம் படுத்தியதை அறியாமல் தன் பேச்சை தொடர்ந்தாள் தேஜு..

“என்ன சார் நான் பாட்டுக்கு கேட்கிறேன் அமைதியாவே இருக்கீங்களே? ஏதாவது சொன்னாதானே இல்லனா நான் வேற ரூம் பார்ப்பேன்ல..அண்ட் இன்னொரு விஷயம் கிட்சன்ல என் சாமான் தனியா வெச்சுப்பேன் ஏன்னா எனக்கு நான்வெஜ் புடிக்காது..அதனால நான் வெஜ் ஐட்டம் சமைச்சுப்பேன்” என்று கூற ரென்னை ஓரம் தள்ளியவன் முன்னே வந்து..

“நீங்க உங்க விரும்பபடி செஞ்சுக்கலாம்.. ஆனா சண்டே நீங்க இங்க தங்க கூடாது ஒன் டே மட்டும் வேற எங்கனா ஸ்டே பண்ணிக்கோங்க..பிகாஸ் சண்டே பாய்ஸ் பார்ட்டி பண்ண வந்துடுவாங்க..அது உங்களுக்கு ஓகேனா நீங்க சொன்ன அமெளண்ட்ல நீங்க ஸ்டே பண்றது எனக்கு ஓகேதான்..” என்று ரியோட்டோ கூற..

“சண்டே நான் வெளியே போய்க்கிறேன் சார்..பட் எனக்கு நீங்க சப்ஜெக்ட் லாம் சொல்லி கொடுக்கனும் சார் அதுக்கு ஓகேவா” என்று அவள் அதிகாரமாய் கேட்க அவளது அதிகாரபேச்சில் தன்னையே மறந்தான் ரியோட்டோ..

“ம்ம்..ஓகே” என்று அவன் தலையாட்ட அவனது சம்மதம் கிடைத்த அடுத்த நொடி

“அப்போ ஓகே சார் நான் நாளைக்கே இங்க ஸிஃப்ட் ஆகிக்கிறேன்..நீங்க உங்க கிட்சன்ல எல்லாம் எடுத்து வெச்சுடுங்க” என்றுவிட்டு சிட்டாய் பறந்தாள்..

மழை பெய்து விட்டதுபோல் ஆகிவிட்டது இருவருக்கும்..

அவளது அழகு ரென்னை ஆட்டுவித்தது என்றால் ரியோட்டோவையோ அவளது பேச்சு ஆட்டுவித்தது.. இருவரையும் தன்வசம் இழுத்தவள் விழுந்தது என்னவோ ரியோட்டோவிடம்தான்.. ஆம் அவளது புரொபசர் அவனை பற்றி சொல்லித்தான் அவளை அனுப்பி வைத்தார் மொபைலில் ஃபோட்டாவை காட்ட அவனது அமைதியான கள்ளமிள்ளாத முகம் அவளை மிகவும் ஈர்த்தது அதிலும் அவனது ரூமிற்கு வருபவர் பற்றிய அவனது கன்டிஷன் அவளை மேலும் ஈர்த்தது.. அதனாலேயே அவள் உடனே அவனை பார்க்க சென்றாள் ஆனால் கதவை திறந்தது என்னவோ ரென் தான் அதனால்தான் படபடவென பேசினால் ஆனால் ரியோட்டோ அவனை தள்ளி முன்வந்து நின்று பேசுவான் என கனவா கண்டாள் அவன் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசியது பிடித்து இருந்தது இருந்தாலும் ஞாயிறு அன்று தன்னை வெளியே போய்விட சொன்னது வருத்தம் தந்தாலும் 

அதையும் தன் பாதுகாப்பு கருதியே சொல்லி இருப்பான் என்று உணர்ந்த நொடி அவளது மனதில் மேலும் உயர்ந்து போனான்..

ஆனால் அவனை நேரே பார்த்து பேச முடியாத தயக்கமும் பயமும் அவளை ஆட்கொள்ள பட்டாச போல தனது பேச்சினை பொறிந்துவிட்டு ஓடி வந்துவிட்டாள்.. அதன்பின்தான் அவளால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது..

“என்னா கண்ணு அவனோடது? பார்க்கவே முடியல கொல்றான்..இவன்கூட எப்படி காலம் தள்ளபோறேனோ” என்று புலம்பியபடி வீடு வந்து சேர்ந்தாள்..

அடுத்த இரு தினங்களில் ரியோட்டோ ரூமுக்கு ஷிப்ட் ஆகிவிட்டாள்..

இருவரும் காலை மாலை சந்திப்பதோடு சரி அதிகம் பேசிக்கொள்வதில்லை.. இருவருக்கும் அவரவர் மனம் புரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவில்லை.. ஒரே வீட்டில் இருந்தாலும் அவளிடம் அவன் எல்லை மீறாமல் அவளது பாதுகாப்பை உறுதிபடுத்தினான்..

அவளுக்கு படிப்பில் உதவவும் ரியோ மறக்கவில்லை..

அவர்களின் பழக்கத்தால் தேஜு மேல் பொறாமை படாத பெண்களே இல்லை ரியோ மேல் கோபப்படாத ஆண்களே இல்லை.. அதில் ரென்னும் ஒருவன்.. அவளும் ரியோட்டோ போல பணக்காரரின் மகள் என தெரிந்ததும் எப்படியாவது அவளை தன்வசம்படுத்தி தான் கஷ்டப்படாமல் வாழவேண்டும் என முடிவு செய்தான்..தினமும் ரியோட்டோவுடன் செலவிடும் நேரத்தை அதிகபடுத்தினான் அவளை பார்ப்பதை அவளுக்கு உணர்த்த முயன்றான் ஆனால் அவளோ அவனை ஒரு எல்லையில் நிறுத்தினாள்.. இதனால் அவள்மேல் கொலைவெறியே வந்தது அவனுக்கு.. ரியோட்டோவிற்கோ அவள் பணக்கார பெண் என்பது தெரிய வந்தாலும் அவள் பணத்திற்கு மதிப்பு அளிக்காமல் எல்லோரிடமும் எளிமையாக பழகுவது பிடித்து இருந்தது..

அப்படியே அவர்கள் கல்லூரியில் ஒரு முடியும் தருவாயில் பாட்டு மற்றும் டான்ஸ் காம்பிடிஷன் நடக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது.. அதில் பாட்டில் தேஜுவும் டான்ஸில் ரியோட்டோவும் ரென்னும் கலந்து கொள்வதாக முடிவு செய்தனர்.. 

ரியோட்டோவின் உதவியால் அன்றைய வருடம் அவர்கள் குழுதான் வெற்றி பெற்றது.. அந்த போட்டியில் கலந்து கொண்டதன்மூலம் அவர்கள் நட்பு இன்னும் அதிகம் ஆகியது..

இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்து இருந்தனர் அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என முடிவு செய்தான் ரென்.. அப்போது ஆரம்பித்தது அவனது நட்பின் போர்வையில் நடத்திய நாடக அரங்கேற்றம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *