Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 33

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 33

அத்தியாயம்- 33

வேலையை விட்டு அனுப்பிடுவேன் என்று ஆராஷி கூறியதும் நிதின் சந்தோஷமாய் ஓகே சொல்ல அவளுக்கோ கோவம் அதை இருவர் மேலும் காட்டமுடியாமல் அமைதியாய் நின்றவள்..

“என்னோட வேலை உங்களுக்கு பிடிக்கலைனா கண்டிப்பா என்னை வேலையை விட்டு அனுப்பலாம் சார்” என்று இருவருக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் கூறியவள்.. அமைதியாக இருக்க நிதின் விடைபெற்று கிளம்பும் முன்..
“நான் சொன்னதை மனசுல வெச்சுக்க மோளே..” என்றுவிட்டு கிளம்பினான்..
அன்றைய நாள் முழுவதும் அவளது வேலையில் எதையும் குறை சொல்லும்படி அவள் நடந்துகொள்ளவே இல்லை..
அவளது டிரான்லேஷனும் அவளது கையாளும் முறையும் அவனுக்கு ஏதோ பெரிய அனுபவம் மிக்க ஆள் செய்யும் செயல் போல இருந்தது..

அன்றைய அவனது ஷூட்டிங்ல் அவனுக்கு ஜோடியாக நடிப்பவர் மறுநாள் வருவதாக கூறப்பட ஷூட்டிங் கேன்சல் செய்வதாக இருந்தது ஆனால் அவன் ரெடியாகி வந்து இருப்பதால் தனியாக அவனை ஷூட் செய்யும் சீன்களை அப்போது எடுத்துக்கொள்ளும்படி கூறினாள்..
அவளது ஐடியாவே சரியென பட எல்லோரும் அதையே செய்தனர்.. அந்த டைரக்டர் கூட அவளை பாராட்டினார்..

அவனுக்கும் அன்று டைம் வேஸ்ட் என்றே எண்ணியவனுக்கு அவளது ஆல்டர்னேட்டிவ் ஐடியா சரியென பட சீக்கிரம் ஷூட்டிங் முடியும் என்பதால் அவனும் செய்தான்..
மாலை ஷூட் முடிய ஏழு மணி ஆகிவிட ஆராஷி கிளம்பிய நேரம் அவளும் உடன் வர டைம் ஆனதால் அவளை அங்கிருந்தே கிளம்ப சொன்னான் ஆராஷி.. போய்விட்டு மறுநாள் வர சொல்லிவிட்டு அவனும் கிளம்பினான்..
அவள் ஒரு ட்டூ வீலரை எடுத்து கொண்டு கிளம்ப ஷூட் முடிந்து கிளம்பியவனும் காரில் ஏறி அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்க துவங்கினான்..
சிறிது தூரம் சென்றதும் கார் டிராப்பிக்கில் மாட்டிக்கொள்ள உறங்கலாம் என எண்ணி ஜன்னலோரம் சாய்ந்தவன் அங்கு கண்ட காட்சி ஏதோ போல் ஆகிவிட்டது..
அது சென்னையில் வசந்தகாலம் லேசான தூரல் மழை நேரம் என்பதால் லேசாக தூரல் துவங்கியது..

சாலையோரம் தங்கி இருக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தை கையில் கட்டோடும் அந்த குழந்தையை சுமந்தபடி அதனோடு பேசிக்கொண்டு இருந்தாள் மேதா.. ஆம் அவள் நேற்று காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய அதே குழந்தைதான்..
அந்த குழந்தையின் பெற்றோர் அவளுக்கு நன்றி கூறி அவளது காலில் விழப்போக அவள் தடுத்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையை அவர்களிடம் கொடுத்தவள் பேசிவிட்டு திரும்ப மீண்டும் அவளை முற்றுகை இட்டனர் அதே வாண்டுகள்..

அவர்களை பார்த்து இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றி முறைப்பதுபோல பார்த்தவள் என்ன என்பது போல புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க அந்த வாண்டுகளும் அதையே செய்ய பார்த்து கொண்டு இருந்தவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது..
இதழ்களை மூடி சிரித்தவன் சட்டென தன் பாவனையை மாற்றிக்கொண்டு மீண்டும் பார்த்தான் அவளை..
அவளும் ஏழைதானே அதனால் அவளது சொந்தங்கள் என்று நினைத்துவிட்டான்..ஆனால் ஏன் அவர்கள் இவளது காலில் விழ வந்தனர்..

அவளோ கோவமாக முகத்தை வைத்து உதட்டை சுழித்து அவர்களுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு திரும்ப போக அத்தனை வாண்டுகளும் ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டனர்..
சிரித்தவள் தானும் அவர்களை கட்டிக்கொண்டாள்..
சிறு உரையாரலுக்கு பிறகு அவள் குரல் கொடுக்க அந்த ஐஸ்கிரீம் கடைகாரர் அவர்களுக்கு ஐஸ்கிரீம் கொடுக்க அவள் பணத்தை நீட்டினாள்..
அதை வாங்கி கொண்டு அவரும் செல்ல அந்த குழந்தைகளோடு குழந்தையாய் அவளும் உண்டு முடித்து கிளம்ப ட்ராபிக்கும் கிளீயர் ஆக ஆராஷியின் வண்டியும் கிளம்பியது..
அவர்களின் வாகனத்துக்கு முன்னே சென்று கொண்டு இருந்தவள் ஆராஷி தங்குவதற்கு ஏற்பாடு செய்ய பட்டு இருக்கும் வி.ஐ.பி ஏரியாவிற்குள் அவளது ஸ்கூட்டியும் நுழைந்தது..

இவ எதுக்கு இங்கே போறா? என்று எண்ணியபடி அவன் பார்க்க அங்கிருந்த ஒரு வில்லாவினுள் நுழைந்தது அவளது ஸ்கூட்டி..அந்த வில்லாவிற்கு நேரெதிராக தான் அவனது வில்லா இருந்தது..
அதில் நுழைய இறங்கி உள்ளே சென்றவன் யோசனையாய் திரும்பி நேரெதிராக இருந்த அவளது வில்லாவை பார்த்தான்..
உள்ளே சென்றவள் வெளியே வரவே இல்லை..சரியென உள்ளே சென்றவனுக்கு எவ்வளவு குழப்பம் கவலை இருந்தாலும் அதை தீர்க்கும் அளவுக்கு அந்த வீடு வடிவமைக்க பட்டு இருந்தது.. நேரே ரூமிற்குள் சென்றவன் குளித்து முடித்து ரிப்பெஷ்ஷாகி பால்கனிக்கு வர அவனுக்கு அங்கே க்ரீன் டீ சூடாக காத்துக்கொண்டு இருந்தது.. கூடவே அவனுக்கு பிடித்த டம்ப்ளிங்க்ஸ்ஸும்(dumplings)
அதை பார்த்தவனுக்கு அவ்வளவு சந்தோஷம் தனக்கு பிடித்த உணவு எப்படி இவர்கள் மெனுவில் என்று அங்கு நின்றிருந்த பணியாளரை பார்க்க அவர்தான் கூறினார் அவனது உணவு மெனுவை வடிவமைத்தவள் மேதா என்று..

அவனுக்கு ஆச்சரியம் ஒருபுறம் என்றால் அவளது நடவடிக்கை வேறு வகையில் குழப்பியது..அந்த குழப்பத்தோடு எதிரில் பார்த்தவனுக்கு மேலும் ஆச்சரியம் என்னவென்றால் அவள் அங்கே தான் இருந்தாள் அவர்களது வீட்டின் லானில் அவளும் நிதினும் அவனது மனைவியும் என அமர்ந்து சிரித்து பேசியபடி இருந்தனர் இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிதினின் மனைவி அவளுக்கு உணவை ஊட்டிவிட்டுக்கொண்டு இருக்க அவளுக்கு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்தபடி அமர்ந்திருந்தவன் நிதின்..

‘இவ சாதாரண பொண்ணுதானே இவளுக்கு இங்க என்ன வேலை? அதும் இவ்ளோ பெரிய வி.ஐ.பி நிதின் சார் அவங்களே அவளுக்கு ஊட்டி விடுற அளவுக்கு என்ன பண்ணா இவ?’ என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே ஒரு பட்டாளம் உள்ளே நுழைய எல்லோரும் ஓடிவந்து நிதினின் மனைவியிடம் ஒரு ஒரு வாய் வாங்கி கொள்ள அவளும் அதே மகிழ்வோடு அவர்களுக்கும் ஊட்டிவிட அந்த காட்சியே அற்புதமாய் இருந்தது.. அவனுக்கு இப்படி பாசம் காட்ட யாரும் இல்லையே என்ற எண்ணம் அதிகமாக அதையே கோவமாய் மாற்றிக்கொண்டான்..

இங்கு அவன் மட்டுமே அமர்ந்து கீரீன் டீயை குடிக்க பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லை.. ஆனால் அவளோ அங்கு அவளை சுற்றி ஒரு கூட்டமே வைத்துள்ளாள்..
‘எல்லாம் அழகு படுத்துற பாடு..
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் அழகா இருந்தா யாரை வேணாலும் வளைச்சு போடலாம்ங்கிற எண்ணம்’ என்று அவள்மேல் கோவம் வந்தது அவனுக்கு..

இவளுக்கெல்லாம் எப்படி இவங்க வேலை கொடுத்தாங்க என்று எண்ணியபடி இருந்தவனுக்கு அவள் அங்கு தங்கி இருப்பது இன்னும் கோவத்தை தந்தது.. ஒரு சாதாரண பணிப்பெண் வி.ஐ.பி தங்கும் ஏரியாவில் இருப்பதா? என அவனது கோவம் அவள்மேல் திரும்பியது..
நாளைக்கே இவள காலி பண்ண வைக்கனும் என்று எண்ணியபடி டீயை அருந்தியவன் எழுந்து உடைமாற்றி ஃபுட்பால் விளையாட சென்றான்..
களைப்பாகும் வரை விளையாடியவன் துவண்டு போக அவனது வீட்டுக்கு வந்தவன் குளித்து முடித்து வர அங்கே அவர்களின் பாரம்பரியமான உணவு அவனுக்காக காத்திருந்தது..

அதை பார்த்தவனுக்கு மகிழ்ச்சிக்கு பதில் கோவமே வந்தது..
‘என்ன இதையெல்லாம் செஞ்சு என்னை மயக்க பார்க்கிறாளா?’ என்று கோவமாய் எண்ணியவன் அருகில் இருந்த பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றுவிட்டான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *