அத்தியாயம் -35
“அம்மா இறந்து இருபது வருஷம் ஆகுது இன்னும் அந்த லவ் மாறாம விடாம இருக்கீங்களே? எப்படி அச்சா?” என்று அவள் கேட்க..
சிரித்தவர் அவளது தோளில் கைபோட்டு
“மோளே..நாம ஒருத்தர உண்மையா விரும்பினா அவங்க இருந்தாலும் இல்லைனாலும் அந்த லவ் மாறாதுடா..உனக்கு உன் லைஃப் பார்ட்னர் வரும்போது புரியும்” என்று கூற..
“ம்ம்க்கும்..இப்படி ஒரு பொண்டாட்டி தாசனுக்கு நான் எங்க போக? அதுக்குலாம் வாய்ப்பே இல்லை நானா” என்றாள் மேதா..
“கண்டிப்பா கிடைப்பாங்கடா..உன்னோட பாசம் போதும் அவன் மாற..உன்ன லவ் பன்றவன் கொடுத்து வெச்சவனா இருப்பான்டா..” என்று அவர் மகளை பெருமையாய் பார்க்க..
“போதும் நானா..நீங்க கிளம்பலாம்” என்றவள்
அவரை பார்த்து சிரிக்க..
“எந்தா மோளே? என்னை துரத்துரதுலேயே இருக்க?” என்று அவர் கேட்க..
“இந்த டோக்கியோ ல பாதி பேருக்கும் மேலே உங்கள பத்தி தெரியும்..நீங்க இங்க நின்னு நான்தான் உங்க பொண்ணுனு ஊருக்கே காட்டி கொடுக்க போறீங்களா? வேற வம்பே வேணாம் கிளம்புங்க” என்றாள் மேதா..
அப்போது அவளது அலைபேசி ஒலிக்க எடுத்தவள்..
“ஹாய் டியர்..Where are you? I’m waiting so long..When u will come?” என்று கோவம்போல பேச அதை கேட்டவர் வாங்கி ஸ்பீக்கரில் போட்டார்..
எதிர்முனையில்..
“ஐயம் நியர் பை யூ பேபி..ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ்..லவ் யூ பேபி” என்று கூற கேட்க
அவளும் கட் செய்துவிட அதைகேட்டு கொண்டு இருந்தவர் அவன்தான் தன் மகள் விரும்பும் நபர் என்று எண்ணிக்கொண்டார்..
சிறிது நேரத்தில் அழகான சாதாரணமான ஒருவன் வர
அவளது அருகில் வந்தவன்
“சாரி பேபி லேட் ஆகிடுச்சு” என்று மன்னிப்பு கேட்க..
“நீயே வெச்சுக்க உன் சாரி பூரிய.. நான் போறேன் போடா” என்று அவள் கோவமாய் பேச..
“பேபி அதான் சாரி சொல்றேன்ல” என்று அவன் கெஞ்ச.. இவர்களின் உரையாடலை கேட்டவர் இடையே புகுந்து..
“என்ன பையன் நீ.. லவ் பன்னா டைம் மேனேஜ்மெண்ட் கரெக்டா மெயின்டெயின் பண்ண மாட்டியா? இதுதான் உன் பொறுப்பா?” என்று அவனை கேள்வி கேட்க அவனோ யாரை சொல்றாங்க என்று ஆவென நின்றான்..அவளுக்கும் முதலில் அதிர்ச்சி தான் ஆனால் புரிந்ததும் சிரிப்பு வந்துவிட்டது அதை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தாள்..
“பொறுப்பா லவ் பண்ண கூட தெரியல அதுனால நீ ரிஜக்டட்..வா மா போலாம்” என்று விட்டு அவளது காதில் ரகசியமாக
“இப்படி மிரட்டினா தான் உன் பேச்சு கேட்பான்மா” என்றும் கூற அவளுக்கு மேலும் சிரிப்பு வர தலையை மட்டும் ஆட்டினாள்..அவர் அவளை அழைத்துக்கொண்டு கிளம்ப பார்க்க..
“வாட்?” என்றான் அவன்..
“என்னடா வாட்? உனக்கும் இவளுக்கும் இப்போல இருந்து பிரேக்அப்” என்று கூற..
“யோவ் யாருயா நீ? பையித்தியம் மாதிரி ஒலரிட்டு இருக்க? முதல்ல இவ யாரு நான் யாருனு தெரியுமா? ஏன்டி லூசு நீயும் அமைதியா இருக்க பேசுடி?” என்றவன் அவள் பேச வரும் முன்னே அவரை பார்த்து
“யார பார்த்து பிரேக்அப் னு சொன்ன? அதை சொல்ல நீ யாருயா முதல்ல? நானு? அதும் இவள? லவ்வு வேற?யாருடி இந்த லூசு?” என்றான் கோவமாக..
சிரித்தவள்..
“அவரா..அவருதான் உங்க அப்பாவோட ப்ரண்ட்டா இருக்கிற எங்கப்பா” என்று சிரித்தபடி கூற..
“ஓஓ.. எங்க அப்போவோட ப்ரண்டா இருக்குற உங்க அப்பாவா” என்று சாதாரணமாய் பேசியவன் அதிர்ச்சியாகி
“எதே?” என்று கேட்க..
அவளும் தலைய ஆட்ட..
“ஐய்யய்யோ அங்கிள்..ஐயம் சாரி அங்கிள்.. நீங்க யாருனு எனக்கு தெரியல அதான் அப்படி கோவமா பேசிட்டேன்..
மன்னிச்சிடுங்க அங்கிள் ப்ளீஸ்” என்று அவரிடம் கெஞ்ச..
“அப்போ இவன நீ லவ் பண்ணலையா அஷ்ஷுமா?” என்றார் அவர் சோகமாக..
“ப்பா..இவன் என் ப்ரண்ட்பா இவன போய் யாராவது லவ் பண்ணுவாங்களா? வேஸ்ட் ஃபெல்லோ” என்று அவள் சிரிக்க அவனுக்கு கோவம் வந்து அவளை அடிக்க துரத்த ஓடிவிட்டாள் தூரமாக சிறிது தூரம் அவளை துரத்தியவன் திரும்ப வந்து அவரிடமே அமர்ந்து
“ஐயம் சோ சாரி அங்கிள்.. நீங்கதான்னு தெரியாம பேசிட்டேன்.. உங்கள பார்த்தது இல்ல அதான் கன்ப்யூஸ்” என்று அவன் மன்னிப்பு வேண்ட..
“ஹே..மை..சைல்ட்..தட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ..நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டு பேசிட்டேன்” என்று அவரும் பேச இருவரும் அறிமுகமாகி இயல்பாய் பேச ஆரம்பித்தனர்..
தூரமாய் ஓடியவள் அவர்களுக்கு நேர் எதிரே அமர்ந்து லேப்டாப்பை திறந்து வைத்தபடி
“ஃபைவ் மினிட்ஸ்.. ஐ ஹாவ் இம்ஃபார்டண்ட் வொர்க் கைய்ஸ்” என்று அவர்கள் சம்மதம் பெற்று காதில் ஹெட்ஃபோனை மாட்டியபடி அமர்ந்து விட்டாள்.. அதனால் அவளுக்கு எதுவும் கேட்காது என நினைத்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்…ஆனால் மாட்டியவள் சும்மாவே அதை சொருகி இருந்தாளே தவிர வேறு எந்த செயலும் செய்யவில்லை..
இருவரது பேச்சிலும் அதிகம் மேதாவை பற்றியே பேச்சு இருந்தது..அதை கேட்காதது போலவே இருந்தாள்..
“ஏன் அங்கிள்..உங்க பிஸினஸ்ஸும் பார்த்துட்டு இந்த வேலைக்கு படிக்கவும் அவளால முடியுமா? இவ்ளோ சின்ன வயசுலேயே அவளுக்கு நிறைய பொறுப்பு தர்றீங்களே தாங்குவாளா?” என்று அவன் தன் தோழியை பற்றி கவலையாய் கேட்க..
அவனை பார்த்து புன்னகைத்தவர்..
“ரொம்ப கஷ்டப்படுறாளா?” என்று கேட்க
“ம்ம்..” என்று தலையை ஆட்டினான்
“என்ன செய்ய எனக்கு அடுத்து அவதானே இந்த பொறுப்புலாம் ஏத்துக்கனும்..இப்போ கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டதானே தம்பி..நாளைக்கு நான் இல்லனா அவளே மேனேஜ் பண்ணிக்கனும்ல..அப்போ தனியா தவிக்க கூடாதுல..நீங்க கேட்கலாம் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க? அதான் நிதின் இருக்காரேனு?” என்று அவர் கூற
அதற்கும் ஆம் என்று தலையை ஆட்டினான்..
இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்தவளுக்கோ தந்தை ஏன் இப்படி பேசுகிறார் எழுந்து சென்று சண்டையிடலாமா என்று யோசித்தவள்..
அவர் இதுவரை மனம்விட்டு எதையும் சொன்னது இல்லையே இப்போது என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என்று எண்ணியபடி அமைதியாக கவனித்தாள்..
“என்னால எதையும் சமாளிக்க முடியும்னு நானும் திமிரா இருந்தேன்.. ஆனா சொல்லாம கொல்லாம என் மஹா என்னைவிட்டுட்டு போனப்போ தான் தெரிஞ்சது எல்லாத்தையும் சமாளிக்க முடியாதுனு.. மனைவிய இழந்து அந்த சோகத்தைகூட வெளியே காட்டிக்க முடியாம சின்ன பெண் பிள்ளைகள வளர்க்க தெரியாம.. பிஸினஸ்ல சரியா கான்சன்ட்ரேட் பண்ண முடியாம..எல்லாத்துக்கும் யாரோ ஒருத்தர எதிர்பார்த்து காத்திருந்த என்னோட நிலைமை என் பசங்களுக்கும் வந்துட கூடாதுல.. எல்லாம் அப்பா பார்த்துப்பார்னு அவங்க இருந்துட கூடாதுல.. நிதின் நல்ல பையன்தான் ஆனா அவனுக்கும் குடும்பம் குழந்தைனு ஆனா அவன் இவங்களுக்காக ஓடிவர முடியாதுல அவளோட ப்ரண்ட்ஸ்ஸுக்கும் அதே நிலைம தானே..அதனாலதான் அவங்களுக்கு இப்பவே பொறுப்ப கொடுத்து பார்க்க வைக்கிறேன்.. ஏதாவது ஒரு சிக்கலான சூழ்நிலையில அவங்களே நிதானமா அந்த சூழ்நிலைய ஹாண்டில் பண்ணனும்ல அதைதான் நான் யோசிக்கிறேன்..நாளைக்கு நானே இல்லைனாலும் அவங்களே மேனேஜ் பன்ற அளவுக்கு அவங்க தயாராகனும்..
என்னைமாதிரி அவங்க நிக்க கூடாது அதான் அப்படி பன்றேன்.. இது தப்பா தம்பி?” என்று கேட்க..
லேசாக சிரித்தவன்
“இப்போதான் தெரியுது ஏன் உங்கள அவ அவ்ளோ ஸ்பெஷலா நினைக்கிறானு? நீங்க நல்ல பிஸினஸ்மேன் மட்டும் இல்ல..சூப்பரான அப்பா” என்று கூற.. சிரித்தவர் குனிந்து கம்ப்யூட்டரில் மூழ்கியது போல் இருந்த மேதாவை பாசம் பொங்க பார்த்தார்..