Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 41

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 41

அத்தியாயம் – 41

அவன் சென்றதும் சுயநினைவுக்கு வந்தவள் தலையில் அடித்துக்கொண்டு அவன் பின்னே ஓடினாள். ஓடியவள் அங்கு ஜனங்களோடு நின்று விட்டாள்.

ஹீரோயின் நேராக ஆராஷியிடம் வந்து
“ஹாய் ஆரோ” என்றபடி கைநீட்ட
வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையை உதட்டில் ஒட்டியவன் கையை கூப்பி
“நமஸ்தே மேடம்” என்றான்.
அந்த ஹீரோயினுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது
‘எத்தனையோ கோடீஸ்வரன்லாம் என்னை தொட மாட்டோமா? ஒரு முறை கட்டி புடிக்க மாட்டோமானு ஏங்குறானுங்க இவன் என்னடானா இப்படி நானா போய் பேசினா என்னை அசிங்கபடுத்துறான். இவன்கூடலாம் எப்படி ரொமான்ஸ் பன்றது எல்லோர் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்திட்டல உன்னை என்கூட எவ்ளோ ரொமான்டிக்கா நடிக்க வைக்கிறேன் பாருடா’ என்று மனதில் கருவியவள் சிரித்த முகத்தோடே பேசினாள். ஆனால் அவளை பொருட்டாக கூட நினைக்காதவன் அஸிஸ்டென்ட் டைரக்டரை பார்க்க அவன் ஓடிவந்து அப்போதைய சீனை விளக்க எந்த சீன் என்று புரியாமல் நின்றான் ஆரா. அவனது கண்களோ மேதாவை தேட அவனது தேடலை புரிந்தவளாய் அவனிடம் ஓடிவந்தாள் மேதா.
அஸிஸ்டென்ட் டைரக்டர் சொன்னதை அவனுக்கு அவள் விளக்க அவளது உயரத்தை விட அவன் அதிகம் உயரம் என்பதால் அவள் கூட்டத்தின் சத்தத்தில் அவனுக்கு கேட்க வேண்டும் என எக்கி எக்கி கூற அதை பார்த்தவன் அவளது தோளில் கைவைத்து அவளை எக்க விடாமல் தடுத்து அவனே அவளது உயரத்திற்கு குனிந்து கேட்க துவங்கினான்.
இதை பார்த்த அந்த ஹீரோயின் ‘ஏன்டா நான் எப்பேர்ப்பட்ட அழகி நானா கைகொடுத்தா கண்டுக்கல ஆனா அந்த மேக்கப் கூட போடாத பொண்ணு எக்கி கஷ்டப்பட கூடாதுனு நீயா அவளுக்கு வளைஞ்சு போறியா’ என்று எண்ணியவள் பார்வை மேதாவின் மேல் படிந்தது. அவளது கோபப்பார்வையை அறியாத மேதா அவனுக்கு விளக்கம் கொடுத்து முடித்து அவனை பார்க்க அந்த பார்வை புரிந்ததா? இல்லையா? என்பது என உணர்ந்தவன்போல் புரிந்தது என்பது போல கண்சிமிட்ட அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதையும் கவனித்த அந்த ஹீரோயின்
அவனை பழிவாங்க வேண்டும் என்று மேதாமேல் கோவம் கொண்டாள்.

ஷூட் ஆரம்பித்து “லெட்ஸ் ரெடி ஷாட் ஆக்க்ஷன்” என்று மைக்கில் அருந்ததி கூற
கேமரா முன் அழகாக நடித்தான் ஆரா.
அந்த ஹீரோயினுக்கே ஷாக்.
தன்னிடம் கை நீட்ட கூட தவிர்த்த இவனா அது? என்பது போல அவள் யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
ஆராஷி அந்த ஹீரோயின் உடன் சீன் நடித்தாலும் கண்கள் மேதாவைதான் பார்த்தபடி இருந்தது.
ஏனெனில் அவளது பார்வை வேறு எங்கோ இருந்தது.
அவன் நடிகன் என்று அவளுக்கும் தெரியும் அவன் நடிக்கிறான் என்பது மூளைக்கு புரிகிறது அவன் இதற்கு முன்பும் வேறு வேறு பெண்களுடன் நடித்துள்ளான் ஆனால் அவளது இதயம் ஏற்க மறுக்கின்றதே…அவனை வேறு பெண்ணுடன் நேரடியாக அவள் பார்ப்பது இன்றுதான் அதனாலேயே அவளுக்கு அவர்களை காண முடியவில்லை அதனாலேயே முகத்தை வேறுபுறம் திருப்பி இருந்தாள் ஆனால் அவளது முக மாறுதலை நொடியில் கண்டுவிட்டவனுக்கு அவளை வெறுப்பு ஏற்ற கிடைத்தது சான்ஸ் ‘சோ நான் வேற பெண்களுடன் சேர்ந்து ரொமான்டிக்கா நடிச்சா இவளுக்கு என்மேல வெறுப்பு வரும் நம்மகிட்டயும் அப்படி நடந்துப்பானோனு ஓடிடுவா’ என தப்பு கணக்கு போட்டவன் அந்த ஹீரோயின் முகம் பாராமலே நடித்தான்.
“ஷாட் ஓகே… கட்… five minutes break for next shot” என்று ஒலி கேட்க அப்படியே அந்த ஹீரோயினை தூர நிறுத்திவிட்டு சென்றுவிட்டான். நேரே போய் தன் சேரில் அமர்ந்தவன் அவளைதான் கவனித்தான். மேதாவோ அடுத்த ஷாட் பற்றி அஸிஸ்டென்ட் டைரக்டரிடம் பேசியவள் அருந்ததி ஏதோ சொல்ல என்ன என்பது போல பார்த்தாள் அவளை.

“என்னடி நீதானே எல்லாம் ஓகே கட்னு சொன்ன இப்போ வந்து இப்படி சொல்ற? அவருக்கு கோவம் வரும்டி அதும் ரொமான்ஸ் லுக் வேற அவரு ஒத்துக்கவே மாட்டாருடி கத்தப்போறாரு” என்று மேதா அவளிடம் கோவமாய் பேச அதை சற்று தூரத்தில் இருந்து கவனித்த ஆரா அவர்கள் அருகில் வந்தான்.

“ஒருமுறை பேசுடி. நானே பேசிடுவேன் ஆனா அந்தாளு மேல இருக்குற கோவத்துல ஷூட் பாதிக்கப்பட்டுடுமோனு தான் யோசிக்கிறேன் போய் பேசு ப்ளீஸ்” என்று அவள் முடிக்கும்முன் வந்து நின்ற ஆரா என்ன என்று விசாரிக்க
பேசு என்பது போல் அருந்ததி கூற தயங்கி தயங்கி சொல்ல ஆரம்பித்தாள் மேதா.
ஷூட்டில் சில ரொமான்டிக் சீன்ஸ் சரியா வரவில்லை என்றும் அது மட்டும் கொஞ்சம் ரிடேக் எடுக்க ஒத்துக்கொள்ள முடியுமா? என்றும் கூறியதை கேட்டவன்

“இட்ஸ் ஓகே நோ ப்ராப்ளம் வில் டூ அகெய்ன்” என்று சாதாரணமாக சொல்லி தோளை குலுக்கியவன் இருவரையும் வாயை பிளக்க வைத்தான்.
பின்னே இவ்வளவு நேரமும்
ஒரே ஒரு கிஸ்ஸிங் சீனுக்கு ஊட்டியில் குதித்து ஜப்பானில் எழுந்தவன் இந்த ரொமான்டிக் சீனுக்கு ஓகே சொன்னால் வாயை பிளக்காமல் என்ன செய்ய? இருவரின் ரியாக்ஷனை பார்த்து மெல்லிய புன்னகையை வீசியவன்
“ப்ளீஸ் மேக் இட் ஃபாஸ்ட் நெக்ஸ்ட் ஷூட் ஐ நீட் ட்டூ ரெடி.. ஃபிகாஸ் இந்தியன் காஸ்டியூம்னா இட் வில் டேக் டைம்” என்றான் இருவரையும் பார்த்து.
அதில் சுயம் வந்த அருந்ததி
“ஷுயூர் சர்.. கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ்” என்றுவிட்டு அவளையும் தள்ளிக்கொண்டு சென்றாள் அருந்ததி போகும்போதே அவளது காதோரம்
“இவனை புரிஞ்சுக்கவே முடியலையேடி எப்படிடி இவன போய் லவ் பண்ண? நானா இருந்தா காதல் படம் ஹீரோ மாதிரி ஞேஞேஞேனு அடிச்சுட்டு தான் போயிட்டு இருப்பேன் போல… ஆனா ஒன்னுடி அவன் சிரிப்பாலேயே உன்ன கவுத்துட்டான் போல” என்று அவளிடம் பேசிக்கொண்டு செல்ல இருவரும் ரகசியமாக பேசுவது அவனுக்கு கேட்கவும் இல்லை புரியவும் இல்லை ஆனால் தன்னைப்பற்றி தான் பேசுகின்றனர் என்று மட்டும் புரிந்து கொண்டவன் அவர்கள் கூறிய ஷாட்டுக்கு ரெடியானான்.

கிறிஸ்தவ முறைப்படி அவன் கோட் சூட் அணிந்து இருக்க ஹீரோயின் வெள்ளை ப்ரைடல் கவுன் அணிந்து இருக்க ஹீரோயின் பின் பக்கமாக அணைத்தபடி வானத்தை நோக்கி பார்க்கும் மகிழ்ச்சியான ஜோடிபோலதான் சீன் என்று மேதா கஷ்டப்பட்டு விளக்க அவனுக்கு அவளை வெறுப்பு ஏற்றுவதே முக்கியமாக பட்டது சொன்னது போலவே அந்த சீனை நடித்தவன் முடிந்ததும் மேதாவை பார்க்க அந்த ஹீரோயினும் மேதாவை தான் பார்த்தாள். அருந்ததி ஒருமுறை செக் செய்துவிட்டு “ஷாட் பர்பெக்ட் நெக்ஸ்ட் சீன் இன் ட்டூ மினிட்ஸ்… ப்ளீஸ் டச்அப்” என்று கூற
அதற்குள் ஹீரோயின் மேதாவை அழைத்தாள் அங்கு இருக்கும் மற்ற வேலையாட்கள் அவளது அஸிஸ்டென்ட் எல்லோரையும் விட்டுவிட்டு அவள் மேதாவை “ஏய் வொயிட் சுடிதார் பொண்ணு இங்கவா” என்று அழைக்க அன்றைக்கு அங்கு வெள்ளை நிற சுடிதார் அணிந்து இருந்தது மேதா மட்டுமே அதனால் எல்லோரும் மேதாவை பார்க்க ஆராவும் யார் அது என பார்க்க மேதா வரவும் இவளை இவள் எதுக்கு கூப்பிடுறா? என்று யோசித்தபடி நின்றான் அருகிலேயே அடுத்த ஷாட் இருப்பதால் ஓய்வுக்கு போகாமல் நின்றான்.
மேதா அருகில் வந்து
“எஸ் மேம்” என்று கேட்க
“கோ அண்ட் கெட் ஆப்பிள் ஜுஸ் ஃபார் மீ அண்ட் டூ டச்அப் ட்டூ மீ” என்று கூறினாள் அந்த ஹீரோயின். இதை கேட்ட மேதா ஒன்றும் புரியாமல் நின்றாள்
“Y u till standing idiot go and get it”(எதுக்கு இன்னும் இங்கேயே நிக்கிற முட்டாள் போய் எடுத்துட்டு வா) என்று அவள் கோபமாய் பேச,
எதற்காக இவள் இப்படி செய்கிறாள் என்று புரியவில்லை ஆனாலும் தன்னால் ஷூட்டிங்ல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என எண்ணியவள்
“ஓகே மேம்.. ஐ வில் பிரிங்” என்றுவிட்டு திரும்ப அவளது கையை பிடித்து இழுத்தது ஒரு கை.
இதை கேட்ட அருந்ததிக்கும் ஷன்மதிக்கும் கோவம் வந்து அந்த ஹீரோயினை திட்ட வாயெடுக்க அதற்குள் அவளை கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் ஆராஷி.
மேதாவோ பதட்டமாய் திரும்பி பார்க்க அவளையே முறைத்தபடி நின்றான் ஆரா. எல்லோரும் அவர்களை தான் பார்த்தனர்.
பதட்டமாய் அவனை பார்த்தவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி கையை அவனது பிடியில் இருந்து விலக்க பார்த்தாள் ஆனால் முடியவில்லை
“சர்… ஆல் ஆர் வாட்ச்சிங் அஸ் ப்ளீஸ் லீவ் மை ஹாண்ட்” என்று அவள் திக்கி திணறி கூறியபடி அவனை பார்க்க திரும்பி அவளை ஒரே ஒரு முறை தான் முறைத்தான் அதோடு வாயை மூடிக்கொண்டு நின்றாள் மேதா.ள

“R u maid for her?” (நீ அவளுக்கு வேலைக்காரியா?) என்று அவன் கோவமாய் ஆங்கிலத்தில் கேட்க அவனது கோபப்பார்வையில் பயந்தவள்
“Tell me idiot?” என்று அவன் குரலை உயர்த்தி கேட்க
“நோ..நோ சர்” என்று அவள் நடுங்கியபடி கூற,
“Then y u obey her order?” (அப்புறம் எதுக்கு அவளோட அதிகாரத்துக்கு பணியுற?) என்று அவன் பல்லை கடிக்க
“ஷி…ஷி..ஷி ஈஸ் அவர் ஹீரோயின்னா சோ” என்று அவள் இழுக்க

“சோ வாட்? She hav assistant and makeup woman na then y she ordering you don’t u hav sense? She is just heroine not princess for us ok” (அதனால என்ன? அவளுக்குனு அஸிஸ்டென்ட் இருக்காங்க மேக்கப் பண்ற பொண்ணு இருக்காங்க அப்புறம் எதுக்கு அவ உனக்கு ஆர்டர் போடுறா? அறிவு இல்ல அவளுக்கு? அவ வெறும் நடிகைதான் நமக்கு ஒன்னும் இளவரசி இல்ல) என்று அவன் பேச மற்ற எல்லாரையும் மரியாதையாய் பேசும் ஆராஷி அந்த நடிகையை மட்டும் அவ இவ என்று பேசுவதை உணர்ந்த மேதா அதிர்ந்து பார்த்தாள் அவனை அவனும் அவளைதான் பார்த்தான்.
அந்த ஹீரோயின்
“ஏன் சார் உங்க அஸிஸ்டென்ட் எனக்கு வேலை செஞ்சா என்ன குறைஞ்சு போயிடுவாளா? ஆஃப்ட்ரால் ஒரு வேலைக்காரிக்காக உங்க கூட வேலை செய்யுற பெரிய ஆள கேவலமா பேசுவீங்களா?” என்று அந்த ஹீரோயின் கேட்க அவள் கேட்பது புரியாமல் அவன் மேதாவை பார்க்க
முதலில் தயங்கிய மேதா அதை டிரான்ஸ்லேட் செய்ய
“என்ன ஆஃப்டரால் வேலைக்காரியா? நீயும் நடிகைனு ஒரு வேலைதான் செய்யுற அப்போ நீயும் வேலைக்காரி தான்.
என்னோட பர்மிஷன் இல்லாம என்னோட பி.ஏவ வேலை வாங்க நீ யாரு இடியட்? அவதான் சொல்றான்னா நீயும் அவளுக்கு வேலை செய்ய போற பாரு உன்ன சொல்லனும்” என்று அவன் சொன்னதை அவன் பார்த்த பார்வையே அவளை டிரான்ஸ்லேட் செய்ய வைத்தது…
இதை கேட்டு கோபமடைந்த அந்த ஹீரோயின்
“நான் இல்லனா உங்க ஆட் ஷூட் பாப்புலரே ஆகாது தெரியும்ல? கேவலம் ஒரு வேலைக்காரிக்காக என்னை மட்டமா பேசுறீங்க?” என்று அவள் கூற அவளுக்கு கோவமாய் பதில் பேச வாயெடுத்த அருந்ததியை கையை பிடித்து அழுத்தி தடுத்தாள் ஷன்மதி.
ஆனால் மேதாவோ அவளிடம் கெஞ்ச துவங்கினாள்.
“மேடம் இல்ல மேடம் ப்ளீஸ் நா..நான் வேணும்னா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ப்ளீஸ் அப்படி எதும் செஞ்சுடாதீங்க? இது பெரிய பட்ஜெட்ல எடுக்குற ஆட் ஷூட் என்னால பிரச்சினை வேணாமே ப்ளீஸ்” என்று கெஞ்ச அவளது பாவனையை வைத்தே அவள் கெஞ்சுவது புரிந்தவன்
“நீ நடிச்சு தான் இந்த ஆட் ஷூட்
ஹிட் ஆகணும்னு அவசியம் இல்ல லெட்ஸ் பேக்கப். மிஸ் அருந்ததி ப்ளீஸ் புக் அநெதர் ஹீரோயின் கேன்சல் ஹர் அக்ரிமெண்ட் நவ் இட்செல்ஃப்.
ஷி டிடின்ட் நோ ஹவ் ட்டூ ரெஸ்பெக்ட் அதர்ஸ் அண்ட் கோ வொர்க்கர்ஸ்” என்று அருந்ததியைபார்த்து ஆங்கிலத்தில் பேச மேதா அதிர்ந்தாள் என்றாள் அனைவரும் ஒருசேர கைதட்டினர்.
“சர் ஷூட்” என்று மேதா அதிர்ந்து கூற
“என்ன சார் அவ அவ்ளோ பேசுவா நாங்க பார்த்துட்டு சும்மா இருக்கணுமா? இவருக்கு மட்டும் தான் எக்ஸ்கியூஸ் வேற யாருக்கும் இல்ல புரிஞ்சுதா? நான் அடிச்சு துரத்துறதுக்குள்ள இங்கிருந்து நீயே ஓடிடு” என்று அந்த ஹீரோயின பார்த்து கோவமாய் அருந்ததி பேச
“ஒரு வேலைக்காரிக்காக என்னை பகைச்சுக்கறீங்கள்ள இனி நீங்க எப்படி பிழைக்கறீங்கனு நானும் பார்க்கிறேன்” என்றவள் மேதாவிடம் கோவமாய் திரும்ப சட்டென அவளை தன் பின்னே இழுத்து மறைத்தான் ஆராஷி

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 41”

  1. Happpaaaaaa full episodes yaium paduchutten sisss…… Thank you so much for ur updates for me😍…. Waiting for next ud😂😜…. Nice story… Nice going…..
    Once again thanks for the updates for me… Yenna mention panni neenga pottu eruntha msg ah naa paathen🥳🥳.. Love u sis🎊🎊

    1. Seekiram next ud pottuduren sis ❤️❤️ thank you so much for ur valuable comments ❤️❤️ inga link share pannen adhan ungalukku therinjudha illayanu admin ah paada paduthi avanga post ea pottanga thank u so much and love u too sis❤️❤️🎁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *