Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 42

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 42

அத்தியாயம் – 42

அவளை அரணாக நின்று அவன் காக்க அவனையும் சேர்த்து முறைத்தவள்
“யு வில் ப்பே ஃபார் திஸ்” என்று கோவமாய் பேச
“வில் சீ” என்று திமிராய் பதிலளித்தவன்
“கெட் அவுட்” என்று கூற கோபத்தில் உச்சத்தில்
அங்கிருந்து சென்றாள் அந்த பெண். ஆனால் இதே வார்த்தைகளை தான் மேதாவை பேச வேண்டி வரும் அவளை காயப்படுத்த நேரிடும் என தெரிந்திருந்தால் இவ்வளவு கடுமையாக அவளிடம் நடந்திருக்க மாட்டானோ?

எல்லாவற்றையும் நிதானமாக கையாளும் மேதாவிற்கு தன் நிதானம் அவன்முன் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.
அதிலும் தன்னால் ஷூட் நின்று விட்டதே என்னும் கவலையில் அவளுக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது அடுத்தடுத்த அதிர்ச்சி கையில் இருந்த காயம் வலி என அனைத்தும் ஒரு சேர அவன் அவளை திட்டுவதற்காக திரும்பியவன் அவள் மயக்கமாகி சரிவதை பார்த்தவன் அவளை அப்படியே தன் கையில் தாங்கினான்.
அவன் தாங்கியதை பார்த்த அருந்ததி ஓடிவந்து அவளை தாங்கி அவளது கன்னத்தை தட்டியபடி
“மேதா..மேதா..அக்கா சீக்கிரம் வாங்க” என்று ஷன்மதியை கூப்பிட
அவளும் ஓடிவந்தாள்
அதற்குள் அவளுக்கு கைக்கு மருந்து போட்டவர் தண்ணீர் எடுத்து வந்து நீட்ட அதை வாங்கி அவளது முகத்தில் தெளித்தான் ஆரா.

அதில் லேசாக மயக்கம் தெளிந்தவள் ஷன்மதியை பார்த்து
“சா..சாரி அக்கா… எ..என்னால ஷூட்.. கஷ்ட” என்றுவிட்டு மீண்டும் மயங்கிவிட
“டேக் ஹர் ட்டூ ஹாஸ்பிடல்” என்றபடி அவளை தூக்கினான் ஆரா.

“வீ வில் டேக் கேர் ஹர் சர் நோ வொர்ரி கிவ் ஹர் சர்” என்றாள் அருந்ததி

“ஷி ஈஸ் மை பி.ஏ ஷி ஈஸ் மை ரெஸ்பான்ஸிபிலிட்டி” என்று அவளை அவன் தூக்கியபடி அவனது பாடிகார்ட்ஸ்க்கு
“கார்ட்ஸ்” என்று அழைக்க அவர்கள் ஓடிவந்து அவளை அவனிடமிருந்து வாங்கினர் அவன் பின்சீட்டில் அமர அவனிடம் குழந்தையை போல அவளை ஒப்படைத்தனர் கார்ட்ஸ் அருந்ததியை செல்லுமாறு சொன்ன ஷன்மதி பேக்கப் வேலைகளை முடித்துவிட்டு வருவதாக சொல்லி அனுப்பினாள். அதனால் ஓடிவந்த அருந்ததி முன்சீட்டில் அமர கார் வேகமாக புறப்பட்டது ஹாஸ்பிடலுக்கு.

அவன் பிடித்து இழுத்ததில் இரண்டு மூன்று முறை கையில் அழுத்தம் ஏற்பட்டதால் அவளது காயத்தில் கட்டை மீறி இரத்தம் வழிந்தது.
ஏற்கனவே அவனுக்காக கத்திகுத்து பட்டதில் அவளது உடலில் இரத்தம் அதிகம் போய் விட்டது இப்போது காயம் அதில் அவனது கோவத்தின் அழுத்தம் நேற்றெல்லாம் வயிற்றுவலி என ரொம்ப சோர்ந்து போய் இருந்தாள் காலை அவனுக்கு ஷூட் இருப்பதால் ஒரு அரைமணி நேரமே உறங்கியவள் அப்படியே எழுந்து வேலைக்கு ரெடியாகி வந்துவிட்டாள்.
வந்ததில் இருந்து அலைச்சல் இதன் நடுவே வலி அது இது என எல்லாம் சேர்ந்து பெரிய அழுத்தத்தை தர மயக்கத்தை தழுவி விட்டாள் மேதா.
அவளது மயங்கிய முகத்தை பார்த்தவனுக்கு உள்ளே ஒரு மனம் அவளுக்காக பேசியது இவளா நடிப்பாள் கொஞ்சம் யோசிடா ஆரா என்று அவனுக்கு அறிவுரை வழங்க அவளது கையின் காயம் தன்னால் தானே என்ற குற்ற உணர்வில் அவளது கையை மிக மெதுவாக வருடினான் இதை மிரர் வழியாக பார்த்த அருந்ததி
‘பரவாயில்லையே அவளை எங்கேயும் விட்டு கொடுக்காம பேசுறான். அவளுக்காக ஷூட்டிங்கே கேன்சல் பன்னிட்டான் இவனும் லவ் பன்றானோ?’ என்று எண்ணியவள் அடிக்கடி அவனது முகத்தில் வந்து போகும் பாவங்களை கவனித்தபடி வந்தவள் நிதினுக்கு தகவல் தெரிவிக்க
மருத்துவமனையில் அட்மிட் செய்து அவளுக்கு முதலுதவி செய்ய அவர்கள் இருந்த அந்த ப்ளோரையே அவன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் பாதுகாப்புக்காக ஆராஷி. அருந்ததிக்கும் அதுவே சரியென பட அமைதியாகி விட்டாள் அவள் தகவல் சொன்னதும் நிதினும் மற்றவர்களும் மீட்டிங்கைகூட கேன்சல் செய்துவிட்டு அடித்து பிடித்து ஓடிவர ஆச்சர்யமாய் பார்த்தான் ஆரா.

நேற்றைய தினம் தனக்கு மிகவும் முக்கியமான அவசியமான மீட்டிங் இருப்பதாகவும் அவனது ஷூட்டிங் பார்க்க வரமுடியவில்லை என சொல்லி வருத்தப்பட்ட அதே நிதின்தான் அந்த அவசியமான மீட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு ஓடி வந்துள்ளான் அதுவும் அவர்களிடம் வேலை செய்யும் தூரத்து சொந்தக்கார பெண்ணிற்காக அவனுக்கு அது சந்தேகமாக இருந்தாலும் இந்த நாட்டில் இப்படி தான் போல என எண்ணியபடி அமைதியாக நின்றான்.
நிதின் வந்து என்ன ஏது என விசாரிக்க அருந்ததி நடந்ததை கோபமாய் கூற உடனே தன் மொபைலை எடுத்தவன் கோவமாய் ஏதோ பேச அடுத்த இருபது நிமிட நேரத்தில் அந்த நடிகை வந்தாள் நிதினை தேடி.

ஆராஷிக்கு ஒரே ஆச்சரியம்… என்னடா நடக்குது இங்கே? இதுதான் அவனது எண்ணவோட்டமாக இருந்தது.
நிதினிடம் வந்து கைகூப்பி மன்னிப்பு கேட்ட அந்த நடிகையை யாரும் மன்னிப்பதாக இல்லை.
கூட வேலை செய்யும் சக ஊழியர்களிடம் மரியாதை இன்றி பழகும் யாராய் இருப்பினும் அவர்களின் வேலையை பறிப்பது ஶ்ரீ குரூப்ஸின் முதல் ரூல்ஸ்.
அந்த நடிகை ஶ்ரீ குரூப்ஸில்தான் வேலை செய்துகொண்டு இருக்கிறாள் அவளது முன்னேற துடிக்கும் குணம் கண்டு நிதின்தான் அவளை மாடலிங் கற்க வைத்து வேறு வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டாம் என்று தாங்களே அவளுக்கு மாடலிங் வாய்ப்பு அமைத்து கொடுக்க அதில் ஃபேமஸ் ஆனவளுக்கு திமிர் தலைக்கு ஏறிவிடவே அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறாள்.
அவள் எவ்வளவு கெஞ்சியும் நிதினின் முடிவில் மாற்றம் இல்லை என்றுவிட அவள் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றாள். அதற்குள் கார்ட் வந்து அவனிடம் புது டிரான்ஸ்லேட்டரை நீட்ட வாங்கியவன் ஆன் செய்து காதில் வைத்தான்.

உலக அதிசயத்தை பார்ப்பது போல் இதையெல்லாம் பார்த்தவனை பார்த்த நிதின் அவனிடம் வந்து அவனுக்கு நன்றி உரைக்க இது தனது கடமை என்று சொன்னவன் கிளம்ப எத்தனிக்க டாக்டர் வெளியே வந்தார். கிளம்பியவன் கால்கள் அப்படியே ஒரு நிமிடம் நின்றது டாக்டர் கூறுவதை கேட்க
மேதாவிற்கு அடிபட்டதில் இரத்தம் அதிகமாக வெளியேறி இருப்பதாகவும் அதனால் தான் உடலில் தெம்பு இல்லாமல் மயங்கியதாக பொதுவாக சொல்ல.
எல்லோரும் காயம் ரொம்ப பெரியது போல என எண்ணிக்கொண்டனர்… உடனடியாக அவளுக்கு இரத்தம் ஏற்பாடு செய்ய நிதினிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் ஆரா.
பாடிகார்ட்டாக இருந்த ஒருவர் அவனது உடையில் இரத்தம் படிந்து இருப்பதாக கூறி டிஸ்ஸியூவை நீட்ட அதை வாங்கியபடி தன் உடையை பார்த்தவனுக்கு அவளுக்காக தான் பரிந்து பேசியது அவளுக்கு ஒரு ஆபத்து எனில் அவளை தூக்கிக்கொண்டு ஓடியது என எல்லாம் நியாபகம்
வர
‘என்ன இது இவளுக்காக நான் இவ்ளோ மெனக்கெடுறேன்?’ என்றுதான் யோசித்தான்.

அவன் கிளம்புவதாகவும் அவளுக்கு உடல்நிலை சரியானதும் வேலைக்கு வரும்படியும் அதற்குள் ஷூட்டிற்கு தேவையான ஹீரோயினை பார்க்கும்படியும் சொன்னவன் நகர நிதினிடம் அவள் அவனுக்காக யோசிப்பதை சொன்னாள் அவன் டிரான்ஸ்லேட்டரை அணியவில்லை என்று எண்ணி அருந்ததி அவனுக்கு புரியாது என எண்ணி பேசியவளின் பேச்சை கேட்டவன் விருட்டென அங்கிருந்து கிளம்பினான்.
“அவளுக்கு எதுக்கு இந்த நாடகம்? இந்த ஆக்டருக்காக யோசிச்சு அவ உடம்பு சரியில்லாம கிடக்கா… இப்படியெல்லாம் நடிக்கபோய் அவளோட உடம்ப கெடுத்துக்கனும்னு அவளுக்கு என்ன அவசியம்?” என்று அருந்ததி பேசியதை நேற்றைய நினைவில் மீண்டும் தவறாக கணித்தவன் கோவமாக வெளியேறினான்.
அங்கிருந்து போகும் வழியில் அவனுக்கு அவள்மேல் கோவம் வந்தாலும் தன்னால்தான் அவளுக்கு காயம் பெரியதாகி இருக்கிறது என்று தற்காலிகமாக கோவத்தை தள்ளி வைத்தான் ஆராஷி.

வீட்டுக்கு வந்தவன் உள்ளே கூட செல்லாமல் தோட்டத்தில்
இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான் அப்போது அங்கே வந்த ஷன்மதியின் அஸிஸ்டென்ட் ஃபோட்டோஷூட்டில் எந்த எந்த ஃபோட்டோஸ் எடிட்டிங் டீம்க்கு அனுப்பவேண்டும் என அவனை கேட்க வந்தாள்.
இது அவர்களின் பழக்கம் நடிகருக்கு என்று ஒரு விருப்பம் இருக்கும் அதையும் கேட்டு கூடவே அவர்களை இன்னும் அழகாக காட்டும் புகைப்படங்களையும் சேர்த்து ஆட் ஷூட் கேலரி ரெடி செய்வர்.
ஹீரோயின் சென்றுவிட்டதால் அவளை எடுத்த பகுதியை நீக்குமாறு சொல்லிவிட்டாள் ஷன்மதி.
எல்லாம் சொன்னவள் அவனிடம் கிளிப்பிங் அடங்கிய ஃபைலின் பென்டிரைவ்வை கொடுத்தவள் சென்றுவிட அதை அப்படியே பார்த்தவன் அவளிடம்தான் சென்றது.
அவனது உள்மனம் ஏனோ அவளாக இவள் இருப்பாளோ என்றே யோசித்தது.
அதனால் அவளை தேடும் பணியை தூரிதப்படுத்தினான்
இவள்மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு வருவதை உணர்ந்தவன் இன்னொரு மனம் அவள் எதற்காகவோ நடிக்கிறாள் என்று மட்டும் கண்டுபிடித்து விட்டான் ஆனால் அவளை பற்றிய தகவல்கள் எல்லாம் ஏனோ அவனுக்கு மர்மமாகவே இருந்தது.
தலையை வலிப்பது போல் இருக்க அவனுக்கு இருக்கும் இடத்திற்கே கிரீன்டீ வந்தது.

என்னவென பார்க்க செஃப் கூறினார் நீங்க தோட்டத்தில இருந்தா கண்டிப்பாக உங்களுக்கு கிரீன் டீ கொடுக்க சொல்லி மேதா சொல்லியதாக கூறியபடி நீட்ட எதற்கு என்று சொல்லவில்லை ஆனால் கண்டிப்பாக கொடுக்கும்படி கூறி இருப்பதாக சொன்னார்.

அதை வாங்கியவன் பருகிவிட்டு குளிக்க எழுந்து உள்ளே சென்றான்.
உள்ளே சென்றவனுக்கு குளிரும் அல்லாத சூடும் அல்லாத அந்த அறையின் வெப்பநிலை மிகவும் பிடித்து இருந்தது அந்த வாசனை கேண்டிலில் இருந்து வரும் வாசம் அவனுக்கு புத்துணர்ச்சியை தந்தது மனம் ஒரு ஓரம் அவளது உடல்நிலையை பற்றிய கவலையும் வந்தாலும் நடிக்கிறேன் என்ற அவளது சொல் அவள்மேல் கோவத்தையே விதைத்தது இதற்காகவே அவளை ஏதாவது செய்து வேலையை விட்டு துரத்த வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தவனின் மொபைல் அலறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *