Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 44

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 44

அத்தியாயம் – 44

நிதின் அமைதியாக அவனை பார்த்தபடி இருக்க அதையே தனக்கு சம்மதமாய் எடுத்தபடி ஆங்கிலத்தில் அவன் பேச நிதினுக்கு புரிந்தது.
ஆனால் இதை எப்படி மேதாவிடம் அவன் சொல்லுவான்.
அவளா இதற்கு சம்மதிப்பாள்.
இது தான் ஆராஷி கூறியது.

“நான் என்னோட பி.ஏக்காக கோவமா பேசினதை எல்லாரும் பார்த்து என்னமோ நானும் அவளும் லவ் பன்றோம்கிற ரேஞ்ச்க்கு நியூஸ் பரவி இருக்கு அதை எத்தனை பேர் பார்த்தாங்கனு தெரியல.
எப்படியும் ஷூட் சைட்ல நியூஸ் கம்ஃபல்சரி பரவி இருக்கும் அதனால என்கூட ஆக்ட் பண்ண ஆக்ட்ரஸ்ஸ் ஒத்துக்கிறது கஷ்டம்னு நினைக்கிறேன்.
அதும் எனக்கு அந்த ஹீரோயின் கூட கொஞ்சம் கூட ஒத்துப்போகல சோ எனக்கு கூட ஆக்ட் பண்ண அந்த ஹீரோயின் வேணாம்.

பட் மை பி.ஏ ஷி க்நோ அபெளட் மீ வித் ஆல் மை டீடெயில்ஸ் அண்ட் ஆக்டிங் ஸ்கில்ஸ் அண்ட் ஆல்சோ மை எக்ஸ்ஃபெக்டேஷன்ஸ்..
எப்படியும் இந்த வெட்டிங் ஷூட்ல ஃபுல்லா ஹீரோயின் ஃபேஸ் எக்ஸ்போஸ் ஆக போறது இல்ல ஜஸ்ட் மை ஃபேஸ் அண்ட் ஹீரோயின் குளோத்ஸ் அண்ட் ஜுவல்ஸ் அதுக்கு எதுக்கு வேற யாரோ?
பேசாம என்னோட அந்த பி.ஏவையே ஏன் நடிக்க சொல்ல கூடாது அதுக்கு பேமெண்ட்டும் அவளுக்கு கொடுத்துடலாமே” என்று அவன் நிறுத்தி நிதினை பார்க்க ஆவெற அவனைதான் பார்த்தான் நிதின்.

‘இவனுக்கு சம்பளம் கொடுக்குறதே அவதான் இவன் அவளுக்கு பேமெண்ட் பண்ண சொல்றான். இதுல நடிக்க அவ எப்படி சம்மதம் சொல்லுவா அதும் இவனுக்கு ஜோடியா? மேதா ஏன்மா என்னை இவனோட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிற’ என்று மனதில் நொந்தபடி அவனை பார்த்தான்.
ஆனால் அவனது இந்த ஐடியா அவனுக்கும் சரியெனவே பட்டது.
ஏனெனில் இது போல முகம் காட்டாமல் எடுத்த ஒரு சில புகைப்பட ஷூட்க்கு அவள் நடித்துள்ளாள் அதனால் இதை சொல்லி சம்மதிக்க வைக்கலாம்.’ என எண்ணியபடி நிதின் இருக்க தொண்யையை கணைத்து சரி செய்தவன்.

“யோசிச்சு பாருங்க மிஸ்டர்.நிதின் இதுக்கு அப்புறம் நீங்க ஒரு ஃபோட்டோ ஷூட் பண்ணி அதுல ஹீரோயின் செலெக்ட் பண்ண எவ்ளோ நாள் ஆகும் அதுக்குள்ள என்னோட கால்ஷீட் முடிஞ்சுடும் நான் இந்த ஒரு ஷூட் முடிச்சுட்டு மைண்ட் ரிலாக்ஸ் பண்ணனும்னு இங்கே வந்தேன் ஆனால் அது என்னால முடியாது போலவே நான் கொஞ்சமாச்சும் ரிலாக்ஸ் பண்ணாதான் சார் என்னால நெக்ஸ்ட் என்னானு யோசிக்க முடியும் இங்க இருந்து போனா எனக்கு எவ்ளோ கமிட்மெண்ட்ஸ் இருக்கு தெரியுமா? இன்னும் சரத்ஶ்ரீ சார் வேற இங்க கொலாப் பண்ணனும்னு ஆசை பட்டாரு அதுக்கு வேற நான் என் ஷெட்டியூல அஜ்ஜஸ்ட் பண்ணனும் அதுக்கு நான் சீக்கிரமே இங்க இருந்து கிளம்பனும் அதுக்கு நாங்க என் வேலையை சீக்கிரம் முடிச்சாதான் நான் கொஞ்சமாவது ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்ப முடியும் சோ கைண்ட்லி அண்டர்ஸ்டான்ட் மை சுச்சுவேஷன் அண்ட் மேக் தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஃபாஸ்ட்.
பிகாஸ் இன் இந்தியா மேரேஜ் நிறைய டிப்பரண்ட்டான கல்ச்சர் இருக்கு ஒவ்வொரு ஸ்டேட்டஸ்ஸா போய் வேற ஷூட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க உடனே ஹீரோயின் அரேண்ஞ் பண்ணுங்க இல்லனா நான் சொன்ன ஐடியாவ செய்யுங்க அவங்களே தான் ஆக்ட் பண்ணனும்னு இல்ல வேற யாரா இருந்தாலும் எனக்கு ஓகே அது சீக்கிரமே ஆகட்டும்” என்றுவிட்டு சென்றான் ஆராஷி.

நிதினுக்கு குழப்பமே மிச்சம் அவன் ஏதாவது உள் அர்த்தம் வைத்து சொல்கிறானா என கூட யோசித்து பார்த்து விட்டான் ஆனால் அவன் சொன்ன காரணங்கள் அனைத்தும் அவன் உள் நோக்கத்துடன் சொல்வது போல இல்லையே ஏற்கனவே இது போல் மேதா ஒரு சில விளம்பரங்களுக்கு அவளது தந்தை கேட்டு கொண்டதற்கு இணங்க நடித்துள்ளாள் ஆனால் அதில் முகம் காட்டாது அவள் மாத்திரமே தனியாக நடித்துள்ளாள் ஆனால் இது இவனோடு சேர்ந்து அல்லவா நடிக்க வேண்டும் அதற்கு அவள் எப்படி ஒத்துக்கொள்வாள்.

அமைதியாக கிளம்பிய நிதின் இதை தனது சகோதரர்களிடம் சொன்னான் அவர்களுக்கும் யோசனையாக இருந்தாலும் அவன் சொல்வதும் சரியாகவே பட்டது அதனால் மொத்தமாக சேர்ந்து அவளை சம்மதிக்க வைப்பது என முடிவெடுத்தனர்.
அன்றைய தினமே மேதா ஓரளவுக்கு உடல்நிலை தேறி இருந்தாள் அதனால் இதை பற்றி அவளிடம் பேச அனைவரும் ஒன்றாக அவள்முன் ஆஜராகினர்.

நிதினின் மனைவி தோட்டத்தில் அமர்ந்தபடி ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளுக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருக்க எல்லோரும் ஒன்றாக வர என்னவென்று பார்த்தாள் மேதா.
அவளது முடிவு என்னவாக இருக்கும் என்று பார்க்க பால்கனியில் வந்து நின்றான் ஆராஷி.
மனதில் ஒரு புறம் ‘ச்சே இவ அளவுக்கு நாமளும் கீழ இறங்கிட்டோமே’ என்று தான் எண்ணியபடி பார்த்திருந்தான்.
“சேட்டா” என்றபடி அவள் எழ முயல அவளை அமர்த்தியவன் அவளது அருகில் அமர்ந்தான் ஊஞ்சலில்.
மற்ற அனைவரும் நின்றனர்.

“எந்தா சேட்டா? எனிதிங் ராங்?” என்று அவள் கேட்க.

“ஹே..அதெல்லாம் ஒன்னுமில்லா மோளே… உனக்கு உடம்பு இப்போ ஓகேவா?” என்று கேட்க

“ஐயம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் சேட்டா… நாளைக்கு ஷூட்க்கு ஆள் கிடைச்சுட்டாங்களா சேட்டா” என்று அவள் வருத்தமாய் கேட்க இல்லை என்பது போல தலையை ஆட்டினான் நிதின்.

அதில் வருந்தியவள்
“என்னால உங்களுக்கு எவ்ளோ பிரச்சனை?” என்று அவள் வருந்த
“அங்கெனல்லாம் ஒன்னுமில்லா மோளே நடந்ததுக்கு நீயோ நானோ இல்ல அந்த ஜப்பான்காரரோ யாரும் பொறுப்பு இல்ல நீயாவது அந்த ஹீரோயின்க்கு வேலை செய்யாம இருந்து இருக்கனும் நீ எல்லாம் ஒன்னுனு நினைச்ச அந்த ஹீரோ அவங்க நாட்டுல எல்லாருக்கும் சமமா மதிப்பு கொடுக்கனும்னு அவரு கோவப்பட்டாரு அதும் அவருக்கு பி.ஏ வேற ஒருத்தர் அவளை அதிகாரம் பன்றது அவருக்கு பிடிக்காம பேசினார் அவருக்கு என்ன நம்ம ஊரை பத்தி தெரியுமா என்ன? ஏன் எல்லாம் தெரிஞ்ச அருந்ததியும் ஷன்மதியுமே கோவப்பட்டு பேசலையா? நீயா உன்னை ப்ளேம் பண்ணிக்காதே மோளே…” என்றபடி அவளது
தலையை ஆதரவாய் வருட அவனை ஆதுரமாய் பார்த்து லேசாக புன்னகைத்தாள் மேதா.

“உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா நீயே இந்த பிரச்சினையை சரி பண்ணு” என்று டக்கென்று கூறினாள் அருந்ததி.

“அரூ நீ கொறச்சு அமைதியாயிட்டு இரு ஞான் பேசிட்டு இருக்கேன்ல” என்று
நிதின் கோபப்பார்வை பார்த்து கூற அருந்ததி

“என்னையே சொல்லுங்க அவளை எதுவும் சொல்லாதீங்க?” என்று அமைதியாக பேச நிதின் முறைக்க அமைதியாகி விட்டாள். அவளை பார்த்துவிட்டு நிதினிடம் திரும்பிய மேதா

“இவ என்ன அண்ணா சொல்றா? நானே தீர்க்க முடியுமா இந்த பிரச்சனையை எப்படினு சொல்லுங்கனா நான் தீர்த்து வைக்கிறேன் யாராவது ஆக்ட்ரஸ்ஸ் கிட்ட நான் பேசனுமா? சொல்லுங்க அண்ணா நான் பேசுறேன்” என்று கூற…

“அதெல்லாம் நாங்களே எல்லா ஆக்ட்ரஸ்ஸ் கிட்ட பேசிட்டோம் மேதா ஆனா” என்று சாஹித்யன் இழுக்க

“அப்புறம் என்ன ஆகணும்னா?” என்று கேட்டாள் மேதா.

அப்போது அவளிடம் அவன் எடுத்த வீடியோவை காட்டினான் சாஹித்யன்.
அதை பார்த்து அதிர்ந்தவள் நிதினிடம் கண்கள் கலங்கியபடி
“சேட்டா இ..இது இது எங்கென வந்தது எனிக்கு அறியல்லா? இது இதுக்கு ஞான் பொறுப்பில்லா சேட்டா என்னை நம்புங்க யார் இதை பப்ளிஷ் பண்ணது?” என்று அவள் கேட்க
அவளது தோளை பற்றி அணைத்தபடி

“எங்களிக்கு எல்லாம் அறியும் மோளே பட் இதை ஓவரா பரவாம தடுத்துட்டோம் அதுக்குள்ள சினி ஃபீல்ட்ல ஒரு சிலர் பார்த்து அதை மத்தவங்களுக்கு சொல்லி யாருமே அந்த பெரிய மாடல்க்கே இந்த கதினா அவங்களுக்குனா கஷ்டம் அதும் ஆல்ரெடி புக் ஆகி இருக்குற ஆட் ஷூட் விட்டுட்டு உடனே வரவும் ஆகாதுனு சொல்லிட்டாங்கடா இப்போதைக்கு நடிக்க முடியாதுனு சொல்லிட்டாங்கடா”

“நா..நான் வேணும்னா அந்த ஹீரோயின் அவங்ககிட்ட சாரி கேட்டு பேசி பார்க்கவா? அவங்க சம்மதிச்சா ஓகேதானே அண்ணா” என்று கூற
அவளை முறைத்தவன்

“யு க்நோ வெரி வெல் அபெளட் ஶ்ரீ குரூப்ஸ் ரூல்ஸ் மேடம் சக தொழிலாளிக்கு மரியாதை கொடுக்காத யாரா இருந்தாலும் அவங்க ஶ்ரீ குரூப்ஸ்ல இருக்க முடியாது அது ஊருக்கே தெரியும் அதனால தான் இப்போதைக்கு எல்லாம் வர தயங்குறாங்க அதும் இல்லாம அந்த ஜப்பான்காரர் டைட் ஷெட்டியூல்ல இருக்காரு அவரு இங்க வந்ததே சீக்கிரம் ஷூட் முடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த கால்ஷீட்க்கு ரெடியாக அவர் ரிட்டன் கிளம்ப வேண்டி இருக்கு அதுக்குள்ள முடிக்கணும்னா” என்று நிறுத்தி அவளை பார்க்க
“முடிக்கணும்னா என்ன அண்ணா” என்று கேட்டாள் மேதா

“நீ ஏன் இந்த ஆட் நடிக்க கூடாது?” என்று நிறுத்தினான்.
அதிர்ந்து போய் பார்த்தாள் மேதா

“அண்ணா நானா?” என்று கேட்க

“ஆமா நீதான்.. ஏன்னா அந்த ஜப்பான்காரு நீதான் வேணும்னுலாம் கேட்கலை உடனே யாராவது அரேஞ்ச் பண்ணுங்கனு சொல்லிட்டாரு.
ஏன்னா அவரோட ஷெட்யூல் டைட்டா இருக்காம் அவரு சீக்கிரம் ஷூட் முடிச்சுட்டு கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுத்துட்டு போகணும்னு கேட்கிறாரு.
உடனே ஆடிஷன்க்கு அனௌன்ஸ் பண்ணியும் யாரும் அப்ளை பண்ணகூட மாட்டேங்கிறாங்க பிகாஸ் அந்த வீடியோனால அதும் இல்லாம அந்த ஹீரோயின் நம்ம ஆட்க்கு ஒத்துக்க இருந்த ரெண்டு மூணு ஹீரோயினையும் ப்ரைன் வாஷ் பண்ணி பயம் பண்ணி விட்டுட்டா அதனால நெக்ஸ்ட் ஷெட்டியூல வர்றோம்னு சொல்றாங்க எல்லாரும் ஒரே போல.

அண்ட் இப்போதைக்கு இந்த ஆட்ல ஹீரோயின் ஃபேஸ் முக்கியம் இல்ல அதனாலயும் ஒரு சிலர் ஒத்துக்கலை.
அதான் நம்ம ஃபேமிலிலேயே ஒரு ஆள நடிக்க வெச்சா நமக்கு வேலை சீக்கிரமே முடியுமேனு தான் உன்னை கேட்க வந்தோம்” என்று அருந்ததி கூறி முடிக்க.

“ச” என்று மீண்டும் ஆரம்பிக்க

“சரி அப்போ நீங்க யாருனா நடிக்க வேண்டியதுதானேனு தானே கேட்க போற?” என்றாள் அவளை புரிந்தவளாய்.
அதற்கு அவள் ஆமாம் என்பதை போல் தலையாட்ட.

“கேள்வி சரிதான் ஆனா கேட்கிற ஆள்தான் தப்பு பேபி.
அந்த ஆட் ஷூட் எல்லா வகையான வெட்டிங் குளோத்ஸ் அண்ட் ஜுவல்ஸ் அதனால அந்த அந்த ஸ்டேட்க்கு ஏத்த மாதிரி உடல்வாகு வேணும் கலர் வேணும்னு தான் அந்த ஹீரோயின செலெக்ட் பண்ணது ஆனால் அவங்க இப்படி பண்ணிட்டு போய்ட்டாங்க அண்ட் எங்கள்ள யாருக்கும் அந்த ஷேப் அண்ட் ஸ்கின் கலர் கிடையாது வரவைக்கவும் இப்போதைக்கு ஆகாது உனக்கும் ஶ்ரீ அக்காக்கும் தான் இருக்கு நவ் ஷீ ஈஸ் நாட் அவைல்லபில் அதும் இல்லாம நான் கேமரா வொர்க் அண்ட் எடிட்டிங் வொர்க் பார்க்கனும் ஷனு அக்கா வீடியோ மேக்கிங் அரேஞ்ச்மெண்ட்ஸ் செட் பண்ணனும் அதைவிட முக்கியமான விஷயம் அந்த ஜப்பான்காரு அவரை ஹாண்டல் பண்ண உன்னால மட்டும் தான் முடியும் நானெல்லாம் நடிக்க வந்தா அடிச்சுடுபுடுவேன் அதான் நீயே சரணம்னு உன்கிட்ட வந்துட்டோம்.” என்று அவள் கூறி முடிக்க அவளோ யோசனையில் ஆழ்ந்தவள் உடனே
“இல்ல நிஜமா என்னால முடியாது நீங்க வேற ஆள் தேடுங்க” என்று கூற

“என்ன மோளே யோசிக்கிறே? இதுக்கு முன்னாடி அச்சா கேட்டப்போ நீ நடிச்சு இருக்க அதும் இதுமபோலே ஆட் தானே வஸ்திரம் தானே ப்ராதானம் ஒருவேளை அப்பா கேட்டா மட்டும் தான் நடிப்பியா? சேட்டா தானே அதான் ஞான் கேட்டா நடிக்க மாட்டேங்குறியா? இந்த சின்ன பிரச்சினை கூட சரி பண்ண முடியலனா நான் சி.இ.ஓ பதவில இருக்க தகுதியே இல்லாதவன்” என்று அவன் பேச…

“சேட்டா” என்று அவனது கையை பற்றியவள்
“எனிக்கு நிங்கள் வேறே அச்சா வேறே இல்ல சேட்டா ஞான் சம்மதிக்கு” என்று கூறி முடிப்பதற்குள்
ஏற்கனவே கலங்கி இருந்த கண்ணிலிருந்து நீர் வடிந்து வந்தது…

அனைவரும் சந்தோஷமாக நிதினோ அவளது கண்ணீரை துடைத்து விட்டு அவளது தோளில் தட்டிவிட்டு எழுந்து சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *