Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 49

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 49

அத்தியாயம்- 47

அவள் அழுவதை பார்த்தவன் அவளுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசினான்.

“சீ மை கேர்ள். முதல்ல நீ தைரியமா இருக்கனும் எவ்ளோ ப்ராப்ளம் வந்தாலும் அதை எதிர்த்து போராடனும்.
எங்க அம்மா சொல்லுவாங்க அடிக்கடி தனியா இருக்கனு யோசிக்காதே
எதையும் நினைச்சு ஃபீல் பண்ணாதே.
எப்பவுமே நம்மள யாரோ பார்த்துட்டு இருக்காங்கனு யோசி.
நமக்காக அவங்க விஷ் இருக்கும்னு யோசி அப்போதான் நம்மளால எதையும் தைரியமா ஃபேஸ் பண்ண முடியும்னு சொல்லுவாங்க.
Be confident kid.
I know ur child but don’t lose ur hope”
என்று கூற அவ்வளவு நேரம் அழுது கொண்டு இருந்தவள் அவனது பேச்சில் மெல்ல அழுகை கலைந்து கண்களை துடைத்தபடி அவனை பார்த்து புன்னகைத்தாள் ஆனால் மாஸ்க் போட்டு இருந்ததால் அவனுக்கு அவளது சிரிப்பு தெரியவில்லை ஆனாலும் அவளது அழுகை நின்றுவிட்டது என்று உணர்ந்தவன் அவள் அவனது காயத்தை பார்க்க அதை மறைத்தபடி
“இட்ஸ் நத்திங் பேபி. இட் வில் க்யூர் இன் ஓன் டே” என்றான் அதன்பின் அவளது விலாசம் கேட்டு அவளுடனே வந்து அவளது வீட்டில் விட்டு செல்ல திரும்ப அவனது டீஷர்ட்டின் முனையை பிடித்து இழுத்தவள் அவனை பார்க்க அவன் என்ன என்பது போல பார்த்தான்.

“ஐ வில் கிவ் யுவர் மணி. ப்ளீஸ் வெயிட் ஹியர்” என்றாள்.
அதை கேட்டு சிரித்தவன்
“தட்ஸ் நாட் ஏ பிக இஸ்ஸு பேபி கோ ஹோம்” என்றுவிட்டு அவளது தலையை வருடிவிட்டு சென்றான்.
வீட்டுக்கு தந்தை வந்ததும் அவரிடம் நடந்ததை சொன்னவள் உடனே ஊருக்கு போகவேண்டும் என அடம்பிடித்து கிளம்பினாள்.
அத்தோடு ஜப்பானுக்கு கும்பிடு போட்டவள்தான் அதன்பின் தந்தையின் வற்புறுத்தலால் தான் மீண்டும் அங்கு வந்தாள் அவனை பார்க்கவேண்டும் அவனுடன் நட்பு பாராட்ட வேண்டும் என.
அவனை மீண்டும் சந்தித்தாள்.
ஆனால் அப்போது அவன் வேறு ஒருவனாக மாறி இருந்ததால் அவள் அவனிடம் பேசாமலே இருந்துவிட்டாள்.
அவளுக்கு தெரியாத ஒன்று.
அவளது நியாபகமாக அவளது கண்கள் அவனுக்கு தாயை நியாபகம் செய்ய அவன் அவளை தேடி அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து அவள் வருவாளா என்று பார்த்தது அவளுக்கு தெரியவில்லை.

இதை யோசித்தபடி இருந்தவளுக்கு அவனது மாற்றம் அவளுக்கு வருத்தத்தை தர எப்படியாவது அவனை பழையபடி மகிழ்ச்சியாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வந்தது.
அதுவரை அந்த ஊஞ்சலிலேயே அமர்ந்து இருந்தவளை அருந்ததி அழைக்க கண்களை துடைத்தபடி எழுந்து சென்றாள்.

முதல் நாள் சென்னையில் ஷூட் அதனால் அவள் அன்று ஓய்வு எடுக்கட்டும் என்று விட்டு விட்டனர் நிதினும் ஆராஷிக்கு மேதா நடிக்க சம்மதித்து விட்டதாகவும் நாளை சென்னை ஷூட் முடிந்ததும் ஹைதராபாத் கிளம்ப வேண்டும் என்று கூற ஓகே என்று சொல்லி விட்டு வைத்தவன்

“ஹய்யா… சக்ஸஸ்” என்று குதித்தவன்
‘இந்த ஒரு சான்ஸ் போதும் அவளை ஒரேடியா தலைதெறிக்க ஓட விட்டுடுவேன் அண்ணா கொடுத்த ஐடியா நல்லாவே ஒர்க் ஆகுது’ என்று எண்ணியவன் அன்றைய தினம் மகிழ்ச்சியாக உறங்கினான்.

மறுநாள் அதிகாலை எழுந்தவன் செஃப்பிடம் க்ரீன் டீ கேட்க அப்போது தான் அவள் உள்ளே வந்தாள்.
வந்தவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
உள்ளே வந்தவள் அவனுக்கு குட்மார்னிங் வைத்துவிட்டு அவனது அன்றைய ப்ரோக்ராம் எல்லாவற்றையும் சொன்னாள்.

“உனக்கு சாரி உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா? நீங்க வரமாட்டீங்கனு நினைச்சேன்” என்று அவன் ஜாப்பனீஸில் பேச

“சரியாகிடுச்சு சார் மன்னிச்சிடுங்க நேத்து என்னால தான் உங்களுக்கு சிரமம்” என்று அவள் சாதாரணமாக பதில் கூற யோசனையாய் பார்த்தவன்

“அதுதான் உங்களால ஏற்பட்ட பிரச்சனைக்கு நீங்களே பதில் சொல்றதா நிதின் சொன்னாரே? ஐ மீன் அந்த ஆட் க்கு நீங்களே ஹீரோயினா நடிக்கிறதா சொன்னாரே ஆனா நீங்க இங்க இருக்கீங்க?” என்று அவன் கேட்க
“அது.. ம்ம்.. அங்க போய் நான் உடனே ரெடியாகிடுவேன் சார் முகம் தேவை இல்லைல அதனால சீக்கிரமே ரெடியாகிடுவேன் நான் முதல்ல உங்களோட பி.ஏ அப்புறம்தான் நடிப்பு எல்லாம் என் வேலையை நான் செய்யனும்ல” என்று அவள் பதில் கூற அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன் க்ரீன் டீ வர குடித்தவன் கிளம்பினான்.

ஷூட்டிங் ஸ்பாட் சென்றதும் அவனுக்கு தேவையானதை செய்த பின்னரே அவள் ரெடியாகி வர கிளம்பினாள்.
முதலில் ஆங்கிலேயர் முறைப்படி நடக்கும் திருமணம் கான்செப்ட் அதும் க்ளாசிக்(ப்ளாக் அண்ட் வொயிட்) கதைகளம் போல செட் என்பதால் கிறிஸ்தவ முறையில் அவனுக்கு ஃகோட் சூட்டும் அவளுக்கு அழகிய வெள்ளையும் ஃபீச் நிற ஷேட் மற்றும் லைட் கோல்டன் கலரில் பூ டிசைன் செய்யப்பட்ட ப்ரைடல் கவுன் அணிந்து அவள் தயாராக அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேக்கப் அதிகம் போடாமல் தலையை மட்டும் அலங்காரம் செய்து விட்டனர்.
அதிலேயே அவள் தேவதை போல மின்ன அருந்ததியோ அவளை பார்த்து
“நிஜமாகவே உனக்கு கல்யாணம் போல இருக்குடி உன்னை பார்க்க” என்று திருஷ்டி சுத்துவது போல செய்தாள்.
அதை கேட்டவளுக்கோ அதிர்ச்சி அப்போது தான் யோசித்தாள் இது எல்லாமே திருமண முறை ஷீட் அல்லவா? இதில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போல செய்ய வேண்டுமே? வெறும் நகையும் உடையும் காட்ட அருந்ததி ஒத்துக்கொள்ள மாட்டாளே? அவள்தான் அந்த உடைகளையும் ஆபரணங்களையும் டிசைன் செய்யும்போதே சொல்லி விட்டாளே என்னோட ஃபுல் எஃபெக்ட் இதுல இருக்கும் ஒரு நிஜமான கல்யாணம் மாதிரி ஒரு ஃபுல் ஃபீல் கொடுக்கும் எல்லாருக்கும் அப்படி எடுப்பேன்
அந்த மாதிரி தான் சீன்ஸ் வெச்சு இருக்கேன் என்று அவள் சொன்னது நியாபகம் வர அவள் அதிர்ந்து அருந்ததியை தேடி கேரவன் ஜன்னல் வழியே பார்க்க அவள் சீனை விளக்கி கொண்டு இருந்தாள் ஆங்கிலத்தில் ஆராஷியிடம்.
ஏற்கனவே ஸ்கிரிப்ட் பேப்பரை படித்தபிறகு தான் அவன் இதை ஒத்துக்கொண்டதே.
ட்ராண்ஸ்லேட்டர் அணிந்து அதையெல்லாம் கேட்டவன் அவள் கூறி முடித்ததும் நேராக அவனது பார்வை மேதாவின் கேரவன் மேல்தான் இருந்தது. அவனுக்கு உள்ளுக்குள் ஒரே சந்தோஷம் அவளை துரத்த இதுவே சரியான தருணம் என்று.
உடனே ஜன்னலை மூடிவிட்டாள்.
உள்ளுக்குள் ஒருபுறம் உதறல் எடுத்தது.
அவசரமாக சீன் ஸ்கிரிப்ட் பேப்பரை எடுத்து படித்தாள்.

கிறிஸ்தவ முறை திருமணத்தில் உதட்டில் முத்தமிடுவார்கள் திருமணம் முடிந்ததும் ஆனால் இதுவரை முத்தமிடும் காட்சியை மட்டும் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என்பது தெரிந்ததால் கன்னத்தில் முத்தமிடும் சீனை வைத்து இருந்தாள் அருந்ததி அதும் முத்தமிட வருவது போல்தான் முழுதாக முத்தமிடுவதாக வைக்கவில்லை.
ஆனால் அவனது அருகாமை அவனது தொடுகை இதை தன்னால் தாங்கமுடியுமா? என்பது தான் அவளது கேள்வியே இதையை யோசித்தபடி இருந்தவள் கேரவன் கதவு திறக்கும் சத்தத்தில் நினைவு வந்தவள் நிலவினி வந்து அவளை பார்த்து அசந்துவிட்டாள்.
“அக்கா அருகிட்ட சொல்லி சீன்ஸ் கொஞ்சம் சேன்ஞ் பண்ணலாமா ப்ளீஸ்” என்று கேட்டாள்.
அவள் கேட்டதும் தான் நினைவு வந்தவள்
“எ.. என்ன சீன் சேன்ஞ்சா நோ சான்ஸ் மேதாமா இந்த ஆட்க்கு அவ எவ்ளோ எஃபர்ட் போட்டு இருக்கானு உனக்கே தெரியும்ல
இப்போ போய் சீன் சேன்ஞ்னு சொன்னா நம்மள கொன்னுடுவாடா? வேணும்னா நீயே பேசி பாரு அவகிட்ட” என்று நிலவினி கூற

“ஷூட்டிங் ஸ்பாட்ல பேய் மாதிரி பிஹேவ் பண்ணுவாளே அப்புறம் எனக்கு நடிக்கிற மைண்ட்செட்டே போய்டும்கா”

“தெரியுதுல இதுல உன் முகம் கவர் ஆகாத அளவுக்கு தானே சீன்ஸ் வெச்சு இருக்கு. ஜஸ்ட் சீக் கிஸ் சீன்தானேடி ஆல்ரெடி உன் ஆளபத்தி தெரிஞ்சுதான் அவ லிப் கிஸ் சீன் ரீமூவ் பண்ணிட்டா இதுல இப்போ உனக்காகனு சீனை மாத்த சொன்னா அவ பேயாட்டம் இல்ல பேயாவே ஆகிடுவா அவளோட சீன்ஸ்ல சேன்ஞ்சஸ் சொன்னா அவளுக்கு பிடிக்காதுனு தெரியும்ல.
இன்னைக்கும் கேன்சல் ஆனா அந்த ஆக்டர் நடிக்கவே மாட்டாரு அண்ணாக்குதான் செம்ம லாஸ் அப்புறம் அண்ணாதான் அவரு முன்ன கைகட்டி நின்னு மன்னிப்பு கேட்க வேண்டி வரும்
இதெல்லாம் தேவையானு யோசிடி” என்று கூற யோசித்தவள்
என்ன நடந்தாலும் சமாளிக்க வேண்டியதுதான் என்று எண்ணியவள் ரெடியாக ஆராஷியும் ரெடியாகி வந்தான்.
அவள் இன்னும் வரவில்லை என்று எண்ணியவன்
“வேல்ர்ட் வைட் ஸ்டார் சாதாரண அஸிஸ்டெண்ட்க்கு இன்னும் எவ்ளோ நேரம் நான் வெயிட் பண்ணனும்?” என்று ஆங்கிலத்தில் கேட்டான் அதை கேட்ட அருந்ததி.
“எங்க மேதா யாரையும் காத்திருக்க வைக்க மாட்டா சார் அதும் அவளோட பாஸ்ஸ வெயிட் பண்ண வைப்பாளா? அங்க பாருங்க” என்று அவனுக்கு பதில் சொல்லியபடி கண்களில் திசையை சைகை செய்ய அவள் கண்கள் காட்டிய திசையில் பார்த்தவன் அசந்து தான் போனான்.
நிலவினி கொடுத்த உடையிலும் அதிகம் அடிக்காத மேக்கப்பிலும் எக்ஸ்குலூஸிவ்வான நகைகளை அணிந்த படி அவள் அழகு பதுமையாக வர அவளை பார்த்த ஆராஷிக்கு அவளோட அழகு அவ்வளவு பிடித்து போனது ஆனாலும் அடுத்த நிமிடமே அவனுக்கு நினைவு வந்தது அவள் நடிக்கிறாள் என்பது தான்.
‘இந்த அழகை வெச்சே எல்லாரையும் மயக்கி வெச்சு இருக்கா இன்னைக்கு இவளோட சாயத்தை வெளுக்க வைக்கிறேன்’ என்றபடி யோசித்தவனால் அவளது அழகை ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

ஒருவித தயக்கத்துடனே வந்தவள் தன்னை ஆவென பார்த்த ஒட்டுமொத்த செட்டின் முன் அவளுக்கு வெட்கமாக வந்து விட்டது.
அவளது அழகில் மயங்கி நின்ற அருந்ததியை இடுப்பில் ஒரு இடி இடித்து நிகழ்வுக்கு கூட்டி வந்தாள் மேதா.

“மேதா பேபி இதுவரைக்கும் நான் எடுத்த ஆட் ஷூட்லேயே இதுதான் பெஸ்ட்டா வரப்போகுது.
அவ்ளோ அழகான பொண்ணை கேப்ச்சர் பண்ணபோறேன்.
நான் மட்டும் பையனா இருந்தா உன்னை இப்படியே தூக்கிட்டு ஓடிடுவேன்” என்று கூற சிரிப்புத்தான் வந்தது மேதாவிற்கு.
“சும்மா இருடி” என்றுவிட்டு ஸ்பாட்டில் வந்து நின்றாள்.
அஸிஸ்டென்ட் சென்று ஆராவிடம் ஷாட் ரெடி என்று கூற.
ப்ரின்சஸ் போல வந்தான் ஆராஷி இருவரது ஜோடியும் எல்லோர் கவனத்தையும் ஈர்க்க அவன் அருகில் சென்று நின்ற மேதாவிற்கோ உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது எப்படியாவது டேக் வாங்காமல் நடித்துவிட வேண்டும் என்று எண்ணியவளுக்கு எதிராக அத்தனை டேக் வாங்கினான் ஆரா.
அவளது ஆபரணங்களும் அவளது அழகும் அவனுக்கு ஏதோ செய்ய உண்மையாகவே அவளது அழகில் மயங்கிதான் போனான் ஆரா.
இதுவரை அவள் தூரமாகவே நின்றிருப்பாள் ஏதேனும் பேச வேண்டும் என்றாலும் மிக அருகில் வரமாட்டாள் ஆனால் இன்று இவ்வளவு நெருக்கமாக நிற்க இருவருக்கும் ஏதோ போல் இருந்தது ஆனாலும் தான் நினைத்ததை நடத்தியே தீரவேண்டும் என்று எண்ணிய ஆரா அவளது கையை தொடுகையில் அந்த ஸ்பரிசம் அவனுக்கு என்னவோ செய்தது அவளுக்கும்தான் ஆனால் அவள் அமைதியாகவே இருந்தாள்.
அருந்ததி சொல்ல சொல்ல அதையெல்லாம் அவனிடம் மொழிப்பெயர்த்தபடி அவனுடன் சேர்ந்து நடித்தாள் மேதா.
கடைசியில் இருவரும் மோதிரம் மாற்றும் சீனில் துவங்கி கன்னத்தில் முத்தம் தரும் சீனும் கன்ட்னியூ ஆகும் என கூறியதால் இருவருக்கும் இடையே ஒரு வித மெளனம் நீடித்தது
“வெல்..ஓகே” என்று தலையாட்டியவன் அஸிஸ்டென்ட் நீட்டிய மோதிரத்தை வாங்கி பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது இருவருக்கும் உண்மையாகவே திருமணம் நடந்தால் எப்படி இருக்கும் என்றுதான் அவன் மனம் யோசித்தது.
தன் மனம் போகும் போக்கில் திகைத்தவன் தன்னை நார்மலாக மாற்றியவன் மோதிரத்தை போட அவளது விரலுக்கு கை நீட்ட அவளும் தன் இடது கரத்தை நீட்டினாள். அப்போது தான் கவனித்தான் அவளது கையில் அவள் டையல் டைப் வாட்ச் அணிந்து இருப்பதை ஆனால் அதைப்பற்றி ஏதும் கேட்காமல் முதலில் மோதிரத்தை அணிந்தவனை நிமிர்ந்து பார்த்தாள் மேதா அவள் இந்த உலகிலேயே இல்லை அவனது புன்னகை நிறைந்த முகம் அவனது ப்ரின்ஸ் உடை என ராஜாவாகவே இருந்தான் அவன்.
அவனையே பார்த்தபடி அவள் நிற்க அந்த பொஸிஷனில் அவளது கண்கள் அவ்வளவு வசீகரிக்க குனிந்து அவளது கன்னத்தில் நிஜமாகவே முத்தமிட்டு விட்டான் ஆராஷி.
அதில் அவளது கண்கள் விரிய ஆவென பார்த்தாள் அவனை முத்தமிட்டு நிமிர்ந்தவன் அப்போது தான் அவன் செயலை உணர மெல்லிய புன்னகையோடு அவளை பார்த்து
“ஸாரி ஐ ஸ்லிப்ட்” என்று விட்டு கண்ணடித்தான்.
அதை பார்த்து அவளுக்கு மேலும் அதிர்ச்சியாக
“ஓகே கட்..ஷாட் ஓகே..குட் ஷாட் சச் ஏ ரியலிஸ்டிக் சீன்..க்ரேட் ஜாப் கைய்ஸ்” என்ற அருந்ததியின் குரலில் அவனை பாராமல் திரும்பியவள் வேகமாக சென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டாள்.
அவளுக்கு உதவுவதற்காக நிலவினியும் சென்றாள் உள்ளே சென்றவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்து இருந்தது.
இதுவரை எந்த பெண்ணிடமும் முத்தம் செய்வது போல நடிக்கும் ஆராஷி இன்று தனது கன்னத்தில் நிஜமாகவே முத்தமிட்டது அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது தான் எல்லோர் முன்பும் பேசும்பொருளாகிவிடக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருப்பாள் ஆனால் இன்று அவளுக்கு அதுவே கவலையாகி போனது
உள்ளே வந்தவள் உடைகூட மாற்றாமல் அமர்ந்து இருந்ததை கவனித்த நிலவினி
“என்ன மேதா உன் ஆளு உன் அழகுல மயங்கி விழுந்துட்டார் போல?” என்று கேட்டபடி அவளது நகைகளை கழட்ட உதவ அவளும் ஒரு ஒரு நகையாக கழட்டி அதை அதற்குண்டான பெட்டியில் பத்திரபடுத்தியபடி
“அரூ சீன் சரியா எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்க மாட்டாக்கா அதுனாலதான் அவரு அப்படி பண்ணிட்டாரு போல” என்று கூறியபடி நகைகளை கழட்டியவள் கையில் இருந்த மோதிரத்தை கழட்டபோக அதை அவளுக்கு கழட்டவே மனம் வரவில்லை.. நடிப்பாக இருந்தாலும் திருமண சீன் உண்மையாகவே நடந்தது போலவே இருந்தது அவளுக்கு அதனால் அதை கழட்டாமல் லிஸ்ட்டில் அவளது பெயரை மார்க் செய்தவள் நிலவினியை பார்க்க
“ம்ம்..புரியுது மேடம் ஆனால் நீ அதை அந்த விரல்லேயே போட்டு இருந்தா உன் ஆளுக்கு டவுட் வந்துடுமே பக்கத்துவிரல்ல மாட்டிக்க என்று கூற மற்ற நகைகள் அடங்கிய பெட்டியை அவளிடம் நீட்ட அதை வாங்கிய நிலவினி செக் செய்து லிஸ்ட்டில் சைன் செய்தாள் உடைமாற்றி வந்த மேதாவிற்கு அவனை பார்ப்பதற்கே ஒருமாதிரியாக ஃபீல் ஆகியது ஆனால் அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அருந்ததியை ரீப்ளே செய்ய சொல்லி சீன்களை பார்த்துக்கொண்டு இருந்தான்.
அதில் அருந்ததி சீனை எப்படி கட் செய்வோம் என ஆங்கிலத்தில் விரிவாக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க
அந்த ஷூட்டில் அவ்வளவு அழகாக எடுத்து இருந்தாள் அருந்ததி அதிலும் இருவரது ஜோடி பொருத்தத்தை அழகாக எடுத்து காட்டி இருந்தாள் மனமார அவளை பாராட்டியவனது ராஜதோரணை மற்றவர்களை ஈர்த்தது.
அழகிய புன்னகையோடு அவனது கண்கள் பேசுவது அழகாக தெரிய கேரவனிலிருந்து இறங்கிய மேதா அவனைதான் பார்த்தாள்.
தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்தவன் நேரே பார்க்க அங்கு மேதா தான் நின்றிருந்தாள்.
அவளை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கி என்ன என்று கேட்க சட்டென திகைத்தவள் ஒன்றுமில்லை என்பது போல தலையாட்ட அவன் அருந்ததியை பாராட்டிவிட்டு அவனது அறைக்கு சென்றான் உடை மாற்ற.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *