அத்தியாயம் – 56
டிரைவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு செல்ல அங்கே அவளை அவனே தூக்கி சென்றான். மாஸ்க் கேஃப் அணிந்து இருந்ததால் யாருக்கும் அவனை சட்டென தெரியவில்லை.
கூடவே டிரைவரையும் வரச்சொல்லி கூட்டி சென்றவன் டாக்டரிடம் ஆங்கிலத்தில் என்ன பிரச்சனை என்று கூற அவர்
“ஐ திங்க ஷி ஈஸ் இன் பேனிக் அட்டாக் வில் செக்” என்றுவிட்டு அவளை சோதனை செய்தார்.
அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது ஆனால் அதை கண்டறியும் வகையில் இங்கு அவ்வளவு வசதி இல்லை அதனால் இப்போதைக்கு முதலுதவி செய்து சொல்லி அனுப்பலாம் என்று நினைத்தபடி அவளுக்கு வலி குறைய இன்ஜெக்ஷனும் உடலில் உடனடியாக தெம்பு வர டிரிப்ஸ்ஸூம் போட்டு விட்டனர்.
இதற்கு முன் அவருக்கு இதே போல் நடந்துள்ளதா? என்று விசாரிக்க அவன் தெரியாது என்று கூற டாக்டர் அவனை யார் அவளுக்கு என்ன உறவு என்று கேட்டார்.
என்ன சொல்வது என்று யோசித்தான் அதற்குள் டிரைவரோ
“அவங்க பொண்டாட்டி தாங்க இப்போதான் கல்யாணம் ஆச்சு அவங்க சென்னை இவரு அமெரிக்கா… நான் அந்த பிள்ளையோட தூரத்து சொந்தம் ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க இதுக்கு முன்ன அந்த பொண்ணு ஆசிரமம்ல வளந்து வந்தா அதனால அவளோட உடம்பு பத்தி தெரியாதுங்க இங்கே எங்க வீட்டுக்கு இதுதான் முதல்முறை வர்றாங்க அதனால எனக்கும் தெரியாதுங்க அதான் அவரு பயந்து போய் இருக்காரு அவருக்கு தெலுங்கும் தெரியாது நீங்க சொல்றத அவர்கிட்ட இங்கிலீஷ்லேயே சொல்லிடுங்க” என்று அவர் தெலுங்கில் கூற
“ஓஓ.. சரி இங்கே தேவையான அளவு வசதி இல்லை நீங்க மெட்ராஸ் போன அப்புறம் அவங்கள ஒருமுறை ஹெல்த் செக்கப் பண்ணிடுங்க. இப்போதைக்கு பயப்பட ஒன்னும் இல்ல
இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்விழித்து விடுவார் பிறகு அழைத்து செல்லலாம்” என்று கூற அப்போது தான் அவனுக்கு உயிரே வந்தது. ஆனால் டிரைவர் சொன்னது அவனுக்கு புரியாததால்
“வாட் டிட் ஹி சே? ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட்” என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க டாக்டர் அதை கூறியபடி இது தான் உண்மையா? என்று கேட்க ஆமாம் என்று அவனும் தலையை ஆட்டினான் டாக்டர் சரியென மருந்து மாத்திரையை எழுதி கொடுத்துவிட்டு செல்ல
தன் கண்முன் ஒரு பெண் படும் துயரை பார்க்க முடியாமல் தான் அவன் துடித்து போய் இருந்தான்.
ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவர் விரோதியாகவே இருந்தாலும் அவரை காக்கவேண்டும் என்பது அவனது தாய் அவனுக்கு சொன்னது. அதனால்தான் அவள்மேல் இருக்கும் அத்தனை கோபத்தையும் ஓரந்தள்ளி அவளுக்காக இவ்வளவு உதவி செய்கிறான்.
அவளது அந்த அழுத முகமும் பயந்து போன முகமும் அவன் பல வருடங்களுக்கு முன் ஜப்பானில் பார்த்த அந்த இந்தியப்பெண்ணை நியாபகம் படுத்தியது.
அவள் இவளாக இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றியது ஆனால் அடுத்த நொடியே அந்த பெண் பணக்கார வீட்டு பெண் இவள் வெறும் வேலைக்காரிதான் இவள் அவளாக முடியாது என்று அந்த எண்ணத்தை கைவிட்டான்.
டாக்டர் சென்றதும் நர்ஸ் வந்து டிரிப்ஸ் முடிய அரைமணி நேரம் ஆகும் முடியும்போது கூப்பிடுங்க என்றுவிட்டு செல்ல
ஓய்ந்து போய் அமர்ந்தான் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவளையேதான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
நர்ஸ் சென்றதும் அவன் அருகில் வந்த டிரைவர்
“சாரி சர் இங்கே வைஃப்னு சொல்லலனா நம்மமேலதான் டவுட் வரும் அதான் உங்களுக்கு வேறதெலுங்கு தெரியாது நான் அப்பானு சொன்னா அவங்க என்கிட்ட என்ன ஆச்சுனு விசாரிப்பாங்க அதான் அவங்கள அநாதைனும் உங்கள வெளிநாட்டுகாரர்னும் அவங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டீங்கனும் சொல்லிட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க” என்று அவருக்கு தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் கூற
“இட்ஸ் ஓகே தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம் பீயிங் ஹெல்ப் அண்ட் ஸ்பெஷல் தேங்கஸ் ஃபார் யுவர் டாட்டர்” என்றுகூற
அவரும் தான் காரில் இருப்பதாக கூறியபடி சென்றார்.
மீண்டும் மயக்கம் தெளிய அவளையே பார்த்தபடி இருந்தவன் அவளுக்கு மயக்கம் தெளிவதை பார்த்து டாக்டரை அழைத்தான்.
டாக்டர் வந்து அவளை சோதனை செய்ய அவன் அவளைவிட்டு நகரவே இல்லை.
டாக்டர் அவளிடம் கேள்வியை தெலுங்கில் கேட்க அவளுக்கு புரிந்தாலும் ஆராஷி அங்கேயே இருப்பதால் பதில் தர தயங்க டாக்டர் “உங்க ஹஸ்பண்ட் முன்ன பேச என்ன தயக்கம் சொல்லுங்க அப்போதான் அவராலயும் உங்களுக்கு கேர் எடுக்க முடியும் பாவம் அவர் எவ்ளோ பயந்துபோய் இருந்தார் தெரியுமா? உங்களுக்கு ஒன்னும் இல்லனு சொன்னதும்தான் அவர் அமைதியானாரே” என்று கூற அதிர்ந்து
அவனை பார்த்தவளுக்கு அவனோ கண்ணை காட்ட தயங்கியபடி அவள் ஆங்கிலத்தில் பதில் தர அவளது பதிலில் அவனுக்கு அவளுக்கு சமீபமாக அடிக்கடி வயிற்றுவலி என்பது மட்டும் புரிந்தது.
ஆனால் அது எதனால் என்று தெரியவில்லை.
அதற்கு டாக்டரும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.
“மேபி உங்களுக்கு அல்சர்ராகூட இருக்கலாம் எதுக்கும் ஊருக்கு போய் ஒரு ஹெல்த் செக்கப் செஞ்சிடுங்க.
இப்போ மென்சஸ் வேற அதனால ரொம்ப வீக் ஆகிட்டீங்க சோ ரொம்ப ஸ்டெரியின் பண்ணாம இருங்க நல்லா தூங்க ஊசி போட்டு இருக்கு அதனால இன்னைக்கு ஃபுல்லா தூங்குவீங்க சோ பி கேர்ஃபுல் நீங்க கிளம்பலாம்” என்று விட்டு ஆராஷியிடம் திரும்பி
“அவங்களுக்கு இன்னைக்கு கஞ்சி மட்டும் கொடுங்க ரொம்ப ஸ்டெர்ஸ் ஆகி இருப்பாங்க போல சோ கேர்ஃபுல் நவ் யுவர் வொய்ஃப் ஆல்ரைட் நீங்க கூட்டிட்டு போகலாம்” என்றுவிட்டு செல்ல ஃபார்மாலிட்டி முடிக்க நர்ஸ் அவனிடம் பில்லை நீட்ட அவனோ அவனது கார்ட்டை நீட்ட
“ஐ ஹாவ் கார்ட் ச” என்று அவள் சொல்ல வர அதற்குள் அவளை பார்த்து முறைத்தவன்
“ஐயம் யுவர் ஹஸ்பண்ட் ஐ ஹாவ் ரைட்ஸ் ட்டூ பே யுவர் பில்ஸ் ஓகே” என்றபடி அவனது கார்டை ஸ்வைப் செய்தான் அவளோ குனிந்த தலை நிமிரவில்லை அவனது ப்ளாக் கார்ட் என்பதால் அந்த நர்ஸ் ஆச்சர்யமாய் பார்த்தார்
அதை உணர்ந்தவன் சீக்கிரமே முடிக்கும்படி சொல்லிவிட்டு பில்லை கட்டிவிட்டு அவளை ஒரு வீல் சேர் கேட்டு அதில் அவளை அமரவைத்து அழைத்து சென்றான் அதற்குள் டிரைவர் காரை கொண்டு வர அவளை காரில் ஏற மேதா எழுந்து நிற்க அதற்குள் அவளுக்கு தலைசுற்றல் வர அவளை தாங்கியவன் அவளை மீண்டும் குழந்தைபோல தூக்கி சீட்டில் அமரவைத்தவன் அவனும் அமர்ந்து போக சொன்னான்.
அவளுக்கோ அவனை பார்க்கவே
ஒரு மாதிரியாக இருந்தது.
அதிலும் பில் செட்டில் செய்ய அவன் சொன்னதும் மாலை தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றி தனக்கு தேவையானதை செய்ததும் இல்லாமல் அன்று போல் இன்றும் அவளை பாதுகாத்து அவளது மானத்தை போகாமல் தடுத்து நிறுத்தி அவளுக்கு அரணாக நின்றானே.
என்று அவள் அவனை பார்க்க அவளுக்கு மீண்டும் மயக்கமோ என்று ஆராஷி காரை ஓரமாக நிறுத்த சொல்லி அங்கிருந்த கடையில் ஜூஸ் வாங்கவர சொன்னவன் அவளை குடிக்க சொன்னான் அவள் வேண்டாம் என்றதும் திட்டி அவளை குடிக்கவைத்தான்
“ஆர் யூ ஓகே மேதா? இன்னும் பெயின் இருக்கா?” என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க
இல்லை என்பது போல தலையாட்டியவள்
“சாரி ஃபார் பாதரிங் யூ சர். இட்ஸ் மை மிஸ்டேக் நான் கேர்ஃபுல்லா இருக்க தவறிட்டேன்.
உங்களுக்கு என்னால ரொம்ப சிரமம் பொய்யெல்லாம் சொல்ல வேண்டி ஆகிடுச்சு” என்று அவள் போதை அருந்தியவள் போல் திக்கி ஆங்கிலத்தில் பேச
“இட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ மேதா பி கேர்ஃபுல் ஆல்வேய்ஸ் வென் யூ கோ அவுட்” என்று அவன்கூற
டிரைவரும் பேசினார்
“மேடம் சார்தான் உங்களுக்கு ரொம்ப உதவினாரு உங்களுக்கு மயக்கமே தெளியல அதனால் தான் பயந்து போய் சார் ஹாஸ்பிடல் கூட்டி வந்தாரு அவங்க என்ன உறவுனு கேட்கவும் எங்களுக்கு என்ன சொல்றதுனே தெரியல இவர ஏதாவது தப்பா நினைப்பாங்களோனு பயந்து தான் மேடம் நான் இவர உங்க புருஷன்னு சொல்லிட்டேன் அவரும் ஆபத்துக்கு பாவம் இல்லனு ஓகே சொல்லிட்டாரு.” என்று அவளுடன் தமிழில் பேச அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது ஆனால் அதையெல்லாம் மறைக்க அவளது உடல் ஒத்துழைக்கவில்லை.
“உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் நான் ரொம்ப நன்றிகடன் பட்டு இருக்கேன் அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று அவள் அவருக்கு நன்றி கூற
“என்னம்மா என் பொண்ணா இருந்தா செய்ய மாட்டேனா? விடுங்கம்மா உடம்ப பார்த்துக்கோங்க சார்தான் ரொம்ப பயந்துட்டாரு” என்றுவிட்டு வண்டியை எடுத்தார்.
அதுவரை இருவரின் பேச்சையும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தவனை பார்த்த மேதா அவனுக்கு பேசியதை விவரிக்க
“ஓஓஓ… இது எந்த ஒரு மனுஷனும் செய்யுற சாதாரண ஹெல்ப் தானே இட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ லீவ் இட் ட்ரை ட்டூ கால் அருந்ததி ஷீ ஈஸ் நாட் பிக் அஸ் கால்” என்று கூற
அவள் இரண்டு நாட்கள் தூங்காமல் வேலை செய்ததாகவும் காலைதான் வேலை முடிந்ததாகவும் தான் கிளம்பி வரும்போது தான் அவள் தூங்க சென்றதாகவும் மொபைலை சைலண்ட்டில் போட்டு தூங்க போனதாகவும் ரூமில் இருக்கும் லேண்ட்லைன் நம்பரை கொடுத்ததாகவும் அந்த இடத்தில் அதையும் அவள் தொலைத்ததாகவும் சொல்ல அவனுக்கு அப்போதுதான் புரிந்தது.
ஓகே என்றுவிட்டு அவன் மொபைலை பார்க்க துவங்கி விட்டான். கார் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அவள் உறங்கிபோனாள். மீண்டும் அவள் இடித்து கொள்ள போகிறாள் என்று அவளது தலையை தன்மேல் சாய்த்துகொண்டான்.
ரெஸ்டாரண்ட்க்கு வந்ததும் டிரைவரிடம் அருந்ததியை அழைத்து வரும்படி சொன்னான்.
அவரும் சென்று கதவை தட்டி தட்டி பார்த்தார் பெல் அடித்தும் பார்த்தார் பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் கதவை திறப்போர் யாருமில்லை என்று உணர்ந்தவர் திரும்பி வந்து அவனிடம் கூற
யோசித்தவன் நிதினுக்கு ஃபோன் செய்து அவனது வில்லா ரெஸ்டாரண்ட்க்கு அவளை அழைத்து செல்வது அருந்ததி எழுந்ததும் அவள் வந்து அழைத்து செல்லட்டும் என்று கூற ஓகே கார்ட்ஸ் கிட்ட சொல்லி அவளுக்கு தேவையானதை வாங்கி வர சொல்கிறேன் என்று நிதின் கூற அவனை தடுத்தான் ஆரா.
என்ன என்று யோசனையாய் பேசினான் நிதின்.
“அவங்களோட நிலமையை யாரும் பார்த்துட கூடாதுனு அவங்க பயந்ததால தான் நான் கார்ட்ஸ்ஸ கூட போக சொல்லி அவங்கள நானே தூக்கிட்டு வரவேண்டி ஆச்சு இப்போ அவங்களுக்கு தேவையான திங்க்ஸ் கார்ட்ஸ்ஸ வாங்கிவர சொன்னா அவங்களுக்கு தெரிஞ்சுடாதா? மயக்கம் தெளிஞ்சா அவங்களலாம் ஃபேஸ் பண்ண மேதா எவ்ளோ தயங்குவாங்க” என்று கூற அவன் சொல்வதும் சரியாக பட யோசித்தவன் ரெஸ்டாரண்ட்க்கு உடனடியாக பார்சல் அனுப்புவதாக சொல்லிவிட அவனுக்கும் அதுவே சரியென பட ஓகே என்றபடி காரை எடுக்க சொன்னான்.
டிரைவரும் அவனது ரெஸ்டாரண்ட்க்கு வண்டியை விட அங்கே கார்ட்ஸ் ஓடிவர அவர்களை அங்கேயே நிற்கும்படி சொன்னவன்
ஒரு பார்சல் வரும் அதைமட்டும் வாங்கி வந்து கொடுத்துவிட்டு அவர்கள் செல்லலாம் என்று கூற.
அவர்களும் அங்கேயே நின்றுவிட்டனர்.